இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, April 18, 2018

பிளஸ் 1 சேர்க்கை : கல்வித்துறை அதிரடி


பிளஸ் 1ல், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், கிராமப்புறங்களில், 15 பேர்; நகர்ப்புறங்களில், 30க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளில், ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதத்தை பராமரிப்பது குறித்து, அவரது உத்தரவு:ஒவ்வொரு பள்ளியிலும், பிளஸ் 1 வகுப்பில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நகர்ப்புற பள்ளிகளில், ஒரு பாடப்பிரிவில், குறைந்த பட்சம், 30 பேர்; கிராமப்புறங்களில், 15 பேர் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையை விட, குறைவாக இருக்கும் பாடப்பிரிவுகளை நடத்த முடியாது.

குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கையை பராமரிக்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், அதிக மாணவர்களை சேர்க்க, தலைமை ஆசிரியர்கள், முயற்சி எடுக்க வேண்டும்.ஆக., 1 நிலவரப்படி, இந்த எண்ணிக்கை இல்லாவிட்டால், குறைந்த மாணவர்கள் உள்ள பாடப்பிரிவு கலைக்கப்பட்டு, அருகில் உள்ள பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க வேண்டும்.இவ்வாறு, இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆணை

https://drive.google.com/file/d/1a8RZa_mygpJ8s29g6-nZ7xtKFskQ_Rdz/view?usp=drivesdk

குழு

தமிழக அரசு ஊதிய முரண்பாடுகளை களைய, ஐஏஎஸ் அதிகாரி எம்.ஏ.சித்திக் தலைமையில் ஒருநபர் குழு - தமிழக அரசு

பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு







Tuesday, April 17, 2018

வரும் கல்வியாண்டுக்கான புத்தகங்களை இணையதளம் மூலம் பெறலாம்


வரும் கல்வியாண்டுக்கான (2018-19) பாடநூல்களை இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:-

தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான பாடநூல்களை பள்ளிகள் மொத்தமாக, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன. நிகழாண்டு புதிய பாடத்திட்டத்தின்படி அச்சிடப்படவுள்ள 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்குத் தேவையான நூல்கள் ஜூன் மாதத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர 2,3,4,5,7,8,10, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்கள், சென்னை நுங்கம்பாக்கம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோன்று, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்திலும் பாடநூல் விற்பனை தொடங்கியுள்ளது. மேலும் வெளி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், பெற்றோர் வசதிக்காக www.textbookcorp.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பணம் செலுத்தி பாட புத்தகங்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்த அடுத்த மூன்று நாள்களுக்குள் பாடநூல்கள் நேரடியாக வீடுகளுக்கே கூரியர் சேவை மூலம் அனுப்பி வைக்கப்படும்.

பாடநூல்கள் விலை விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்தில் ஏற்கெனவே பதிவு செய்த பள்ளிகள், பாடநூல்களை மொத்தமாகப் பெறுவதற்கு இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

பணி விடுவிப்பு சான்று

https://drive.google.com/file/d/1z_8jZog735CGcIV0yZGokztD8PNU4SWS/view?usp=drivesdk

பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க இயக்குநர் செயல்முறைகள்-2018




2017-18 மாறுதல் பெற்றவர்கள் பணி மாறுதல் செய்ய செயல்முறைகள்

தந்தை தாய்விபத்தில் இறந்தால் உதவித்தொகை பெறும் விண்ணப்பம்

https://drive.google.com/file/d/1rov-w0IW8NRKhKPX-uQkellXCesM_G1f/view?usp=drivesdk

Monday, April 16, 2018

GPF வட்டி விகிதம் ஏப்ரல் 18 முதல் ஜூன்18 வரை. 7.6% அரசு அறிவிப்பு

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு முன்பு ஓய்வு பெற்றோருக்கான நிலுவைத் தொகைகள்: 2 தவணைகளாக வழங்க தமிழக அரசு உத்தரவு


7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை இரண்டு தவணைகளாக வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை இரண்டு கட்டங்களாக பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்கள் அளிக்கப்படும். அதாவது, பணிக் காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைகள், பணிக் கொடைகள், விடுப்புகளை பணமாக மாற்றிக் கொள்ளுதல் போன்றவை ஓய்வு பெற்ற உடனேயே வழங்கப்படும். இந் நிலையில், கடந்த 2016 ஜனவரி 1-ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வுக் கால பணப் பயன்கள் இரண்டு தவணைகளாக அளிக்கப்படும்.

முதல் தவணையானது, 2017-18-ஆம் நிதியாண்டிலும், இரண்டாவது தவணைத் தொகையானது 2018-19-ஆம் நிதியாண்டிலும் அளிக்கப்படும். ஏற்கெனவே முதல் தவணை அளிக்கப்பட்டிருந்தால், இரண்டாவது தவணையை இந்த மாதத்தில் இருந்தே (ஏப்ரல்) ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு வழங்க கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதல் தவணையைப் பெறாத ஓய்வூதியதாரர்கள் இரண்டு தவணைகளையும் சேர்த்து மொத்தத் தொகையாக பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தனது உத்தரவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஏழாவது ஊதியக் குழு: தமிழகத்தில் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அதற்கு முந்தைய தேதி வரையில் ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதிய பணப் பயன்களை இரண்டு தவணைகளாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியப் பணப்பயன்களும், தொகையும் மிகையளவு மாறுபடும். எனவே, அக்டோபர் 1-ஆம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெறுவோருக்கு பணப் பயன்களை இரண்டு தவணைகளாக விரைந்து அளித்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தரமான தரத்தில் வருவதால் புதிய பாடப்புத்தகம் விலை ஏறுகிறது


தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டில் புதிய பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்த தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 15 ஆண்டுகளாக பாட திட்டங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. இந்நிலையில் நீட் உள்பட பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கும் பணி டிசம்பரில் முடிந்தது. இந்த புதிய பாடத்திட்டத்துடன் கூடிய புத்தகங்களை வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9, 11ம் வகுப்புகளுக்கு மட்டும் தயாரிக்கும் பணி நடக்கிறது. தரமான தாள், பக்கத்துக்கு பக்கம் வண்ணம் மற்றும் படங்களுடன் பாடங்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தயாராகி வருகிறது.மேலும் புத்தக அட்டை விரைவில் கிழியாத வகையில் லேமினேஷன் செய்யப்பட்டு அச்சிடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டுகளில் உள்ள புத்தகங்களை அச்சிட்ட செலவை விட இந்த ஆண்டுக்கான புத்தகங்கள் அச்சிடும் செலவு அதிகரித்துள்ளதால் விலையையும் அதிகரிக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது.

அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.  ஆனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் புதிய விலை ஏற்றத்தை தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 1, 6, 9, 11 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் செட் விலை 350 முதல் 700 வரை கிடைக்கிறது. புதிய பாடப்புத்தகங்கள் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை விலை ஏற்றப்படுவதால் ₹850 முதல் ₹900 வரை விலை கொடுக்க வேண்டி வரும். இது தவிர மற்ற வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் 2019-2020ம் கல்வி ஆண்டில் கிடைக்கும்.

கோடை விடுமுறைக்கு பின் புதிய பாடத்திட்ட பயிற்சி


கோடை விடுமுறைக்கு பிறகே, ஆசிரியர்களுக்கு, புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு பின், அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது.

பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டில், 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.புதிய பாடத்திட்டப்படி, எப்படி பாடம் நடத்துவது, அதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன என்பது போன்ற பயிற்சிகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட உள்ளன.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.பள்ளி துவங்குவதற்கு முன், கோடை விடுமுறையில் பயிற்சி தரலாம் என, முடிவு செய்யப்பட்டுஇருந்தது. ஆனால், 'கோடை விடுமுறையை ரத்து செய்யக் கூடாது' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, கோடை விடுமுறைக்கு பின், புதிய பாடத்திட்டம் குறித்த பயிற்சி அளிக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து உள்ளது

பிளஸ் 1 தேர்வு நிறைவு: மே 30ல் 'ரிசல்ட்' வெளியீடு


பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்றுடன் முடிந்தது. தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியாகின்றன. தமிழகத்தில், பிளஸ் 1 பொது தேர்வு, மார்ச், 7ல் துவங்கியது. இந்தாண்டு முதன்முதலாக, பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால், மாணவர்கள் மத்தியில், தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அத்துடன், இந்த ஆண்டு தேர்வில், பெரும்பாலான பாடங்களில், வினாத்தாள்கள் கடினமாகவே இருந்தன. குறிப்பாக, தமிழ் இரண்டாம் தாள், இயற்பியல் தேர்வுகள் தவிர, அனைத்து பாடங்களிலும், மாணவர்கள் முழுவதுமாக விடை எழுத தடுமாறினர். கணிதம், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களில், 'நீட்' மற்றும், ஜே.இ.இ., தேர்வுகளுக்கு கேட்கப்படுவது போன்ற, வினாக்கள் அமைந்துஇருந்தன.

இந்த பாடங்களில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை, மிக சொற்பமாகவே இருக்கும் என, ஆசிரியர்கள் தெரிவித்துஉள்ளனர். இந்நிலையில், பிளஸ் 1 தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. முக்கிய பாடப் பிரிவு மாணவர்களுக்கு, ஏப்., 9ல், தேர்வுகள் முடிந்தன. மற்ற தொழிற்கல்வி மாணவர்களுக்கு, நேற்று தேர்வுகள் முடிந்தன. தேர்வின் முடிவுகள், மே, 30ல் வெளியாகின்றன.

Sunday, April 15, 2018

தேர்வு முடிவு

சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுடன் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு அடுத்த மாதத்தில் வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார்.

சிறப்பு ஆசிரியர் தேர்வு

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் போன்ற சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 35 ஆயிரம் பேர் எழுதினார்கள். இதன் முடிவு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

சென்னை, விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நேரில் சந்தித்து மனு கொடுப்பதற்காக நேற்று காலை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்துக்கு வந்தனர். அவருடைய வீட்டிற்கு செல்வதற்காக வெள்ளாளபாளையம் பிரிவில் நின்றிருந்தனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அவர்களை ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு செல்லும்படியும் அங்கு வந்து நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைவரும் அந்த திருமண மண்டபத்துக்கு சென்றனர். காலை 7 மணி அளவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மண்டபத்திற்கு சென்று அவர்களை சந்தித்து பேசினார்.

அப்போது தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் அமைச்சரிடம் மனுவாக கொடுத்தனர். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுடன் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அடுத்த மாதம்

அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களிடம் கூறும்போது, “அடுத்த மாதத்தில் சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. நேர்மையான முறையில் தகுதி உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும். இதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை” என்றார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

Friday, April 13, 2018

இனி பள்ளி மாற தேவையில்லை : பிளஸ்2 வரை ஒரே பள்ளியில் படிக்கலாம்


பிளஸ் 2 வரை இனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள் துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் ஒரே விதமான கல்வித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் ஆகியவற்றை இணைத்து, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமாக (சமந்த்ரா சிக்சா அபியான்) மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போதுள்ள தொடக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பதில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை கொண்ட ஒரே பள்ளியாக துவக்கப்பட உள்ளது. இந்த பள்ளிகளில், எந்த வகுப்பிலும் மாணவர்களை சேர்க்க முடியும்.இதற்காக, தமிழகத்தில் 413 ஊராட்சி ஒன்றியங்களில் மிகவும் பின் தங்கிய 75 ஒன்றியங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு புதிய பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான சாத்தியக்கூறுகள், பள்ளிகள் தேவைப்படும் இடம் குறித்த விவரங்களை ஆய்வு செய்து, மே 5க்குள் விரிவான அறிக்கை தர, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் எப்போது?


தமிழகம் முழுவதும், ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், கல்வி ஆண்டு துவக்கத்தில், பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். 2017க்கு முன் வரை, ஜூலை மற்றும் ஆகஸ்டில், இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது.

2017 முதல், கோடை விடுமுறையின் போதே, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான, பொது இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் இரண்டாவது வாரம் வரை, விடைத்தாள் திருத்த பணிகள் நடக்க உள்ளதால், மூன்றாவது வாரத்தில், கவுன்சிலிங்கை நடத்தலாமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

மேலும், ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.இந்த பயிற்சியும் பாதிக்கப்படாமல், ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்துவது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்த முறை, அனைத்து தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி என, அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும், 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே, கவுன்சிலிங்கை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோடை விடுமுறை வரும் 21ல் துவக்கம்


கோடை விடுமுறை, வரும், ௨௧ல் துவங்குகிறது. மீண்டும் ஜூன்,1ல் பள்ளிகள் திறக்கப்படும்,'' என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை, துவக்கிவைத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

தமிழகத்தில், 60 கோடி ரூபாய் செலவில், 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பு துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்பது முதல், பிளஸ் 2 வகுப்பு மாணவர் வரை, அனைத்து கல்வியும் பயிலும் வகையில், 463 கோடி ரூபாய் செலவில், இன்டர்நெட் வசதி செய்யப்படுகிறது.

வரும்,21 முதல் பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. எந்த பள்ளியாக இருந்தாலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பயிற்சியளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.மே, 2ல் பள்ளிகளில் சேர்க்கை துவங்குகிறது. கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படும். புதிய பாடத்திட்டம் மே, 1க்குள் தயாராகிவிடும்.இவ்வாறு அவர் கூறினார்

Thursday, April 12, 2018

பொறியியல் படிப்பில் சேர மே முதல் வாரத்தில் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு


அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் 534 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ. அல்லது பி.டெக். படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. சிறுபான்மை அல்லாத கல்லூரிகளாக இருந்தால் அந்தகல்லூரியில் சேர இருக்கும் இடங்களில் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கொடுத்து விடவேண்டும். இந்த இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என்று அழைக்கப்படும். மீதம் உள்ள 35 சதவீத இடங்களுக்கு கல்லூரிகளே மாணவர்களை சேர்த்துக்கொள்ளாலாம். இந்த இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும்.

சிறுபான்மை கல்லூரிகளாக இருந்தால் 50 சதவீத இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களாக கொடுக்கவேண்டும். மீதம் உள்ள 50 சதவீத இடங்களில் மாணவர்களை கல்லூரிகளே சேர்த்துக்கொள்ளலாம். இவை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்.

ஆன்லைன் மூலம் கலந்தாய்வு

கடந்த பல வருடங்களாக அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை அண்ணாபல் கலைக்கழகத்தில் நடத்தியது. மாணவர்கள் வெகு தூரம் வரவேண்டி உள்ளது என்று கருதி இந்த ஆண்டு (2018-2019) ஆன்லைன் மூலம் கலந்தாய்வை அண்ணா பல் கலைக்கழகம் நடத்த உள்ளது.

ஆன்லைன் மூலம் இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.ணீஸீஸீஸீ௵ஸீவீஸ்.மீபீ௵ ) விண்ணப்பத்தை பதிவுசெய்யலாம். ஆன்லைனில் எங்கிருந்தாலும் பதிவு செய்யலாம். பதிவு செய்யும் போது ‘யூசர் ஐ.டி.’ மற்றும் ‘பாஸ்வேர்டு’ கேட்கும்.

மேலும் அண்ணா பல்கலைக்கழகம் 42 மையங்களை அமைத்துள்ளது. அந்த மையங்களில் ஆன்லைன் இலவசம். மாணவர்கள் பிளஸ்-2 மதிப்பெண் இல்லாமல் விண்ணப்பத்தை அதே இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.

பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுத்துறை தரும் மதிப்பெண் சி.டி.யைக்கொண்டு மாணவ-மாணவிகளின் விண்ணப்பத்தில் தாங்களே பதிந்து கொள்வோம்.

சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மட்டும் மதிப்பெண்களை பதிவு செய்து அனுப்ப வேண்டும்.

சான்றிதழ் சரிபார்த்தல்

சான்றிதழ் சரிபார்த்தல் கடந்த ஆண்டு வரை கலந்தாய்வு அன்று நடைபெற்றது.

இந்த வருடம் முதல் 42 மையங்களிலும் கலந்தாய்வுக்கு முன்பாகவே சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும். அப்போது கலந்தாய்வு குறித்த வீடியோ 3 முறை காண்பிக்கப்படும்.

பின்னர் ‘ரேங்க்’ பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வின் போது முதலில் ரேங்க் பட்டியலில் உள்ளபடிதான் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் அழைக்கப்படுவார்கள்.

மாணவர்கள் தங்கள் விருப்பத்தை பல கலந்தாய்வின்போது பதிவு செய்யலாம். அவர்களுக்கு 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும். அதன்பிறகு அண்ணாபல்கலைக்கழகம் அவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கும். ஒதுக்கிய கல்லூரி பிடித்திருக்கிறது என்றால் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் விருப்பம் தெரிவிக்கவேண்டும். இல்லை என்றால் 2-வது சுற்றுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகள்

விளையாட்டு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் நடக்கும். அவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரபோராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கும், தொழில் கல்வி மாணவர்களுக்கும் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் நடக்கும். அவர்களுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு கிடையாது.

பொறியியல் கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது.

இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

மே முதல் வாரம்

அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில் பொறியியல் படிப்பில் சேர ஆன்லைனில் அண்ணாபல்கலைக்கழக இணையதளத்தில் மே முதல் வாரம் முதல் விண்ணப்பிக்கலாம் என்றார்.

M.phil permission letter


https://drive.google.com/file/d/12WP8VQzTl01mrcIrlTW5tApcfr_2ouXj/view?usp=drivesdk

தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 % அகவிலைப்படி உயர்வு! அரசாணை வெளியீடு