இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, October 03, 2017

வாக்காளர் பட்டியல் வெளியீடு


தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

2018–ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதியை தகுதி நாளாக கொண்டு சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பெரும்பாலும் பள்ளிக்கட்டிடங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகள்) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதோடு, இறந்த, இடம்பெயர்ந்த வாக்காளர் பெயர்களை நீக்குவதற்கும் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

நேற்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் தற்போது 5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்து 2 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 கோடியே 94 லட்சத்து 84 ஆயிரத்து 492 ஆண்களும், 3 கோடியே 98 ஆயிரத்து 268 பெண்களும், 5 ஆயிரத்து 242 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்கும். மொத்த மக்கள் தொகையில் 75.07 சதவீதம் பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
வருகிற 7 மற்றும் 21–ந்தேதிகளில் கிராமசபை, உள்ளாட்சி மன்றம் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க கூட்டங்களில், வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பாகம், பிரிவு ஆகியன படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும். வருகிற 8 மற்றும் 22 ஆகிய ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றுதல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அங்கே கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம்.

வருகிற ஜனவரி 1–ந்தேதி 18 வயது நிறைவடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். முதன்முறையாக விண்ணப்பிப்போரைத்தவிர (அதாவது 18–25 வயதில் உள்ள மனுதாரர்கள்), ஏனைய மனுதாரர்கள் அனைவரும் அவர்களுடைய முந்தைய முகவரியையும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணையும் படிவத்தில் குறிப்பிடவேண்டும்.
இருப்பிட மாற்றம் செய்யாமலிருந்தாலும் கூட, தற்போதைய முகவரியில் வசித்துவரும் காலஅளவையும், முன்னர் பெயர் சேர்க்கப்பட விண்ணப்பிக்க இயலவில்லை எனவும் அல்லது தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது எனவும் குறிப்பிடவேண்டும். பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்து, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்திருந்தால், வட்டாட்சியர், மண்டல அலுவலகத்தில் படிவம் 1–ல் எப்போதும் விண்ணப்பிக்கலாம்.

வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ நேரில் அளிக்கப்பட வேண்டும் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம்.
விண்ணப்பதாரரின் புகைப்படம், ஏனைய பிற விவரங்களுடன் விசாவின் செயல்திறன் பற்றிய மேற்குறிப்பு அடங்கிய பாஸ்போர்ட்டின் தொடர்புடைய பக்கங்களின் ஒளி நகலையும் சேர்த்து அளிக்க வேண்டும். தபாலில் அனுப்பப்படும்போது பாஸ்போர்ட்டின் ஒளிநகல்கள் சுய சான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜாக்டோ -ஜியோ சார்பில் அக்.8ல் விளக்க கூட்டம்


ஜாக்டோ -ஜியோ உயர்மட்ட குழு முடிவின்படி அக்.8ல் மாவட்ட தலைநகரங்களில் போராட்ட விளக்க கூட்டம் நடத்தப்படுகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான 'ஜாக்டோ- ஜியோ' சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.7 ம்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

மாநிலம் முழுவதும் பல லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர். அரசு நிர்வாகம் ஸ்தம்பித்தது.இதற்கிடையே நீதிமன்றம் தலையிட்டதால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு அனைவரும் வேலைக்கு திரும்பினர். தமிழக அரசின் தலைமை செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி சில உறுதிமொழிகளை வழங்கினார். தொடர்ந்து ஜாக்டோ - ஜியோ கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஏழாவது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்தும், இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

நீதிமன்ற உத்தரவின்படி அக்.13ம் தேதி ஊதிய மாற்றம் குறித்து அறிவிக்க வேண்டும் என, ஜாக்டோ -ஜியோ உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்.8ல் விளக்க கூட்டம்இந்நிலையில் ஜாக்டோ -ஜியோ வேலை நிறுத்தமும், நீதிமன்ற நடவடிக்கைகளும் என்ற தலைப்பில் அனைத்து மாவட்டங்களிலும் அக்.8ம் தேதி விளக்க கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 32 மாவட்டங்களிலும் யார், யார் பங்கேற்பது என்ற பட்டியலை வெளியிட்டுள்ளனர். ஒரு அரசு ஊழியர், இரண்டு ஆசிரியர்கள் வீதம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் கூட்டத்திற்கு தலைமை வகித்து நடத்த உள்ளனர். இதில், வேலைநிறுத்தம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்

கோவை முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

விரைவில் ஆதார் எண்ணுடன் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு! - செங்கோட்டையன் தகவல்


தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு ப்ளஸ் டூ பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. அதற்கான முன்வரைவு வரும் நவம்பர் 15-க் தேதி வெளியிடப்பட உள்ளது. முன்வரைவுக்கு வைக்கப்படும் பாடத்திட்டங்கள் குறித்து 15 நாள்கள் பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்கப்படும். இந்தக் கருத்துகளின் அடிப்படையில் அடுத்தாண்டு பாடத்திட்டம் திருத்தப்படும்.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாக அனைத்துப் போட்டித் தேர்வுகளை எதிர்க்கொள்ளும் வகையில் இந்தப் பாடத்திட்டங்கள் இருக்கும். மேலும், அடுத்த மாத இறுதிக்குள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அதில் மாணவர்களின் ஆதார் எண், ரத்த வகை குறிப்பிடப்படும். பள்ளி மாணவர்கள், டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க பள்ளியின் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Monday, October 02, 2017

ஆசிரியர் நியமனம்-தகுதிகாண் மதிப்பெண் குறித்து ஆய்வு செய்ய குழு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்குப் பயன்படுத்தப்படும் தகுதிகாண் மதிப்பெண் முறை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பள்ளிக் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது:- அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் தகுதிகாண் முறையில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யக் குழு நியமிக்கப்படவுள்ளது.

இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும். மாணவர்களின் மேம்பாட்டுக்கான புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

புதிய ஓய்வூதிய திட்டம் நிறைவேறும்போது கட்சிகளின் நிலைப்பாடு. கானலாகும் ஓய்வூதியம் புத்தகத்தில்




TNPTF மாநில பொதுக்குழு முடிவுகள்


Sunday, October 01, 2017

டெங்கு விழிப்புணர்வு

மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

1. பள்ளியின் வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பராமரிக்கப்படவேண்டும். அவ்வாறு தண்ணீர் தேங்கியிருப்பின் உடனடியாக தேங்கிய நீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. குடிநீர்பானை மற்றும் தண்ணீர் தொட்டிகள் மூடி வைக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம் கொசுக்களின் பெருக்கம் தடுக்கப்படுமென்பதை அறிவுறுத்தல் வேண்டும்.

3. பள்ளி வளாகம் மற்றும் வீடுகளில் கொசுக்கள் முட்டையிட ஏதுவாக உள்ள தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள், பூந்தொட்டிகள், தட்டுகள், தண்ணீர் தொட்டிகள், பழைய கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள், வடிகால்கள், பள்ளி கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள பொருட்கள் போன்ற தண்ணீர் தேங்கும் இடங்களை தொடர்ச்சியாக கண்காணித்து, தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்குதல்.

4. பருவகால மாற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து (குறிப்பாக டெங்கு, சிக்குன் குனியா) அறிவுரைகளை பின்பற்றி பாதுகாத்து கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல். மேலும், காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தவேண்டும். எந்த சூழ் நிலையிலும் சுயமாக மருத்துவம் செய்து கொள்வதை தவிர்த்தல் நன்று.

5. மருத்துவரின் உதவியுடன் டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் குறித்த அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வினை மாணவர்களிடையே ஏற்படுத்துதல் வேண்டும்.

6.அவ்வப்போது மாணவர்கள் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். குறிப்பாக உணவு உண்பதற்கு முன்பும், பின்பும் கைகளை கழுவுதல் அவசியம். மாணவர்கள் காய்ச்சி வடிகட்டிய பாதுகாப்பான குடிநீரை அருந்த வேண்டுமென அறிவுறுத்த வேண்டும். பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்ட உணவுகளை மட்டுமே உட்கொள்ள அறிவுரை வழங்குதல் வேண்டும்.

7. பள்ளிகளில் நடைபெறும் காலை வணக்க கூட்டத்தின் போது மாணவ, மாணவியர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்படவேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Saturday, September 30, 2017

அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த புதிய ஓய்வூதிய தொகை விபரங்களை இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்


புதிய ஓய்வூதிய திட்டத்திற்காக அரசு ஊழியர்களுக்கு சேர வேண்டிய தொகை 18,016 கோடி பொதுக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. இணையத்தில் இதுகுறித்து தெரிந்து கொள்ளலாம் என்று நிதித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2003 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

இதன்படி அரசு ஊழியர்கள் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில் (சிபிஎஸ்) சேர்க்கப்பட்டனர். இதற்காக ஒவ்வொரு பணியாளர்களிடம் இருந்து அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு சமமான தொகையை அரசு தன்பங்காக செலுத்துகிறது. இருப்பினும் ஓய்வு பெற்றோர், பணி நீக்கம் செய்யப்பட்டோர், கட்டாய ஓய்வு பெற்றோர், இறந்த ஊழியர்கள் பலருக்கும் இத்தொகை வழங்கப்படவில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்டும் உரிய பதில் கிடைக்காத நிலையே இருந்து வந்தது.

இதனால் இத்திட்டத்தின்மீது ஊழியர்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டது. இத்தொகை இலவச பேன், மிக்சி, கிரைண்டர் வழங்குவதற்காக செலவிடப்பட்டு விட்டது. ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்திடம் இத்தொகை செலுத்தப்படவே இல்லை. மாதம் 10 சதவீத சம்பளத்தை இழந்து வந்ததுடன், தங்களிடம் பிடித்தம் செய்த பணம் என்ன ஆயிற்று என்று தெரியாமல் ஊழியர்களிடையே பெரும் குழப்பமும் நிலவி வந்தது. இந்நிலையில் நிதித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கருவூல கணக்குத்துறை, அரசு தகவல் தொகுப்பு விபர மையத்தின் உதவியுடன் இக்கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மார்ச் மாத நிலவரப்படி சுமார் 4 லட்சத்து 62 ஆயிரத்து 327 அரசு, உள்ளாட்சி, கல்வி நிறுவன பணியாளர்களின் பங்களிப்புத்தொகை, அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் வட்டி உட்பட மொத்தம் 18,016 கோடி பொதுக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. கணக்குத்தாள் அரசு இணையத்தில் ஒவ்வொரு பணியாளரும் இதுகுறித்து தெரிந்து கொள்ளலாம். ஓய்வு பெற்ற, இறந்த ஊழியர்கள் 3,288 பேருக்கு வழங்க வேண்டிய தொகை 125.24 கோடி வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டம்: ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்


தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலர் செ.பாலச்சந்தர் கூறினார். திருவண்ணாமலையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.மோசஸ் தலைமை வகித்தார். திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் ஜி.ரமேஷ், மாவட்டச் செயலர் என்.சீனுவாசன், மாவட்டப் பொருளாளர் ஏ.அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொருளாளர் ச.ஜீவானந்தம் வரவேற்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில பொதுச் செயலர் செ.பாலச்சந்தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைக் கொண்ட ஜாக்டோ - ஜியோ சார்பில் நடந்த போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும் பங்கேற்றது. எங்களின் முக்கியக் கோரிக்கை புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான். இதுகுறித்து தமிழக அரசு அமைத்துள்ள வல்லுநர் குழுவின் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. கோரிக்கை நிறைவேறாவிட்டால், ஜாக்டோ - ஜியோவுடன் இணைந்து மீண்டும் போராட்டம் நடத்தப்படும். புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார். கூட்டத்தில், சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.ஜோதிபாபு உள்பட 500-க்கும் மேற்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விரைவில் வெளியாகிறது பாடத்திட்ட வரைவு அறிக்கை


தமிழக அரசின், புதிய பாடத்திட்டத்தின் வரைவு அறிக்கை, இம்மாதம் இரண்டாவது வாரத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில், பிளஸ் ௧, பிளஸ் ௨ பாடத்திட்டம், 12 ஆண்டுகளாக மாற்றப்படாததால், தமிழக மாணவர்கள், தேசிய அளவில், போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை.

எனவே, பாடத் திட்டத்தை மாற்ற, தமிழக அரசுக்கு, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையேற்ற தமிழக அரசு, ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான, பாடத் திட்டத்தை மாற்ற, பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், வல்லுனர்கள் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களிடம் பாடத்திட்டம்குறித்து, கருத்துக்கள்பெற்றுள்ளது.தற்போது, பாடத்திட்டத்துக்கு முந்தைய, கலைத்திட்ட வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. ௬௦ பக்கங்களில் உருவான, அந்த அறிக்கையை இறுதி செய்யும் பணிகள் நடக்கின்றன.

இந்த அறிக்கைப்படி, பாடத்திட்ட வரைவு அறிக்கையும் தயாராகிறது. காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின், பாடத்திட்ட வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இம்மாதம் இரண்டாவது வாரத்தில், பொதுமக்கள் பார்வைக்கு, அறிக்கை வெளியாகலாம்.

நுகரும் திறனை இழப்பது மறதி நோய்க்கான அறிகுறி: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்


நுகரும் திறனை இழப்பது 'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறி என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய இந்த நீண்டகால ஆய்வில் சுமார் 3,000 பேர் கலந்துகொண்டனர்.

புதினா, மீன், ஆரஞ்சு, ரோஜா, பதனிடப்பட்ட தோல் ஆகியவற்றின் மணங்களை உணர முடியாதவர்களுக்கு, அவற்றின் மணங்களை உணர முடிந்தவர்களைவிட, அடுத்த ஐந்து ஆண்டுகளில் டிமென்ஷியா நோய் வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று அந்த ஆய்வின் இறுதியில் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மணங்களை நுகரும் உணர்வை இழப்பது என்பது எங்கோ தவறு நிகழ்கிறது என்பதற்கான வலிமையான அறிகுறி என்று அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயந்த் பின்ட்டூ கூறினார். பிரிட்டனில் உள்ள அல்சைமர் சொசைட்டியின் தலைவர் மருத்துவர் ஜேம்ஸ் பிக்கெட், ஆரம்பகட்டத்தில் டிமென்ஷியா மனிதர்களின் நுகரும் திறனை பாதிக்கிறது என்பதற்கு இந்த ஆய்வு கூடுதல் ஆதாரமாக இருந்தாலும், இந்த ஆய்வுகள் இன்னும் துல்லியமானவையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

இந்த ஆய்வின் முடிவுகள் ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் ஜீரியாட்ரிக்ஸ் சொசைட்டி என்னும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

Friday, September 29, 2017

ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க ரூ.60 கோடி ஒதுக்கீடு


அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் அவர் பேசியதாவது: கல்வித் துறையில் இணை இயக்குனர் நிலை அதிகாரிகள், நிபுணர்கள், சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு ஆய்வு செய்து, மாணவர்களிடம் உள்ள திறமையை தட்டி எழுப்பும் முயற்சி நடக்கிறது.

வரும் ஆண்டில், பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக வெளியாகும். அடுத்த மாதம், 1.28 கோடி மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும். வரும் ஆண்டில், 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க, ஒவ்வொரு பள்ளிக்கும் தலா, இரண்டு லட்சம் ரூபாய் என, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., - பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மையம் அமைக்க, 437 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில், 'வை பை' இணைப்பு வழங்கப்படும். விரைவில், 2,372 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் விரும்பும் பகுதியில் பணியாணை வழங்கப்பட உள்ளது, என்றார்.

போலி சான்றிதழை கண்டுபிடிக்கலாம்ஆன்லைனில் தேர்வுத்துறை வசதி


ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க, அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும், ௪௫ ஆயிரம் பள்ளிகளில், ௩.௫௦ லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ௧௦ ஆண்டுகளுக்கு முன், பலர் போலி சான்றிதழ்களை கொடுத்து, பணியில் சேர்ந்ததை, பள்ளிக் கல்வித் துறை, ஓராண்டுக்கு முன் கண்டுபிடித்தது.

இதையடுத்து, பணியில் உள்ளோர், புதிதாக சேரும் ஆசிரியர்கள், ஊழியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணி துவங்கியது.மாவட்ட அலுவலகங்களில் இருந்து, சான்றிதழ் நகல்கள், சென்னையில் உள்ள தேர்வுத்துறைக்கு அனுப்பப்படும். தேர்வுத்துறை அதிகாரிகள், அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்குவர். இந்த நடைமுறையால், லட்சக்கணக்கான ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதில் இழுபறி நிலை உள்ளது.

கால தாமதத்தை தவிர்க்கும் வகையில், சான்றிதழ்களின் விபரங்கள், ஆன்லைனில் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதற்கான பயன்பாட்டாளர் அடையாள எண் மற்றும் ரகசிய குறியீடு எண், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்த குறியீட்டை பயன்படுத்தி, மாவட்ட அதிகாரிகள் அலுவலகத்திலேயே, சான்றிதழ்களை சரிபார்த்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவுறுத்தி உள்ளார். இந்த புதிய முறையால், மாவட்ட வாரியாக, போலி சான்றிதழ் காட்டி பணிக்கு வந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது

Thursday, September 28, 2017

பங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு


பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு, வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டன.

இது தொடர்பாக நடந்த நீதிமன்ற விசாரணையில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், பணியாற்றி ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு, ஓய்வூதிய பலன் வழங்கப்படவில்லை என, குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, 2003 ஏப்., 1க்கு பின், பணியில் சேர்ந்து, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மரணம் அடைந்தவர்கள் குறித்த விபரம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் விபரங்களை, அறிக்கையாக அனுப்பி வைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.