இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, September 15, 2017

ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் கலந்தாய்வு


தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நியமனம் செய்யும் வகையில் ஆசிரியர் வாரியத்தின் சார்பில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,315 பேருக்கும், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம் மூலம் செவ்வாய்க்கிழமை (செப்.19) நடத்தப்படவுள்ளது.

முதுநிலை ஆசிரியர், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் தங்களது முகவரியில் தெரிவித்துள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மற்றும் இதர சான்றிதழ்களுடன் நேரில் சென்று கலந்து கொள்ள வேண்டும். முதுநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரையில் முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும், பின்னர் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும்.

முதல்வர் வழங்குவார்: கலந்தாய்வில் கலந்துகொண்டு பணி நியமனம் பெற்றவர்களுக்கான பணிநியமன ஆணையை வியாழக்கிழமையன்று (செப்.21) காலை 9.30 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்குவார் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதிய திட்டத்தில் தன் பங்களிப்பு தொகையை செலுத்தாதது ஏன்? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன் பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தின்படி, அரசு தன்னுடைய பங்களிப்பு தொகையை செலுத்தாதது ஏன், எத்தனை அரசு ஊழியர்களுக்கு அரசின் பங்களிப்பு தொகை செலுத்தப்படாமல் உள்ளது, எப்போது செலுத்தப்படும், இதுதொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், இந்த வழக்கில் நிதித் துறை முதன்மை செயலாளரையும் நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்துள்ளது. எனவே ஓய்வூதியம் தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாக வரும் திங்கள்கிழமை (செப்.18) தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

உயர்நீதிமன்ற உத்தரவு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

தடை விதிக்க கோரிக்கை

இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த வக்கீல் சேகரன் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் (ஜாக்டோ, ஜியோ) தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 7.9.2017 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. பொதுமக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தனது மனுவில் கூறி இருந்தார்.

இடைக்கால தடை

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அரசு ஊழியர்- ஆசிரியர்கள் கூட்டமைப்பு காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இடைக்கால தடை விதித்து, கடந்த 7-ந்தேதி உத்தரவிட்டது.

ஆனாலும் கோர்ட்டு உத்தரவை மீறி ஏராளமான அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர்.

இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகளின் கவனத்துக்கு மனுதாரர் தரப்பினர் கொண்டு சென்றனர். அரசு ஊழியர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் கேள்வி

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ஆசிரியர்-அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் 15-ந்தேதி (அதாவது நேற்று) நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

அதன்பேரில் ஜாக்டோ, ஜியோ நிர்வாகிகள் சுப்பிரமணியன், தாஸ், மோசஸ் ஆகியோர் நேற்று காலை மதுரை ஐகோர்ட்டில் ஆஜர் ஆனார் கள். இதையடுத்து, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமி நாதன் ஆகியோர் முன்பு நேற்று காலை 11 மணி அளவில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜாக்டோ, ஜியோ நிர்வாகிகளிடம் “நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், போராட்டத்தை கைவிட்டுவிட்டு வேலைக்கு திரும்பாதது ஏன்? உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாமே? நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் கேலிக்கூத்தாக்குகிறீர்களா?” என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.

அத்துடன், “எந்தவிதமான நிபந்தனையும் இன்றி உடனடியாக நீங்கள் பணிக்கு திரும்ப வேண்டும். அரசு பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாதபட்சத்தில், கோர்ட்டை அணுகியிருக்கலாமே?” என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை

அதற்கு ஜாக்டோ, ஜியோ சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் கூறியதாவது:-

கடந்த பல மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

ஆனால் அந்த கமிட்டியின் அறிக்கை இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. கடைசியாக வேலைநிறுத்தத்துக்கு முன்பு மூத்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை. காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக நோட்டீஸ் அனுப்பி, அதன்பின்னர் தான் போராட்டம் தொடங்கப்பட்டது.

இவ்வாறு வக்கீல் கூறினார்.

இதைத்தொடர்ந்து அரசு வக்கீல் வாதாடுகையில், “அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் ஒரு சில அரசு ஊழியர் சங்கங்கள் ஒத்துழைக்க மறுப்பதால் இழுபறி ஏற்படுகிறது” என்றார்.

எச்சரிக்கை

பின்னர் நீதிபதிகள், “வேலைநிறுத்த போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவை தெரிவியுங்கள்” என்று கூறி, வழக்கு விசாரணையை சற்று நேரத்துக்கு ஒத்திவைத்தனர்.

பின்னர் 15 நிமிடம் கழித்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து பொதுக்குழுவை கூட்டி தான் முடிவு செய்ய முடியும்” என்று ஜாக்டோ, ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆனால் அதை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

“இந்த நீதிமன்றம் போராட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதை நீங்கள் மதிக்கவில்லை. நீதிபதிகள் உத்தரவிட்ட பின்பும் பொதுக்குழுவை கூட்டி தான் முடிவெடுப்போம் என்பது ஏற்கத்தக்கதல்ல. இன்னும் ஒரு மணி நேரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட முடியும்” என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

மேலும், “நீங்கள் உங்கள் கோரிக்கை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடுவோம். உடனடியாக முடிவை கூறுங்கள்” என்று கூறி மீண்டும் விசாரணையை சற்று நேரத்துக்கு ஒத்திவைத்தனர்.

தற்காலிகமாக வாபஸ்

இதனையடுத்து ஜாக்டோ, ஜ

பிளஸ் 2அக்., தேர்வு 'ஹால் டிக்கெட்'

பிளஸ் 2 அக்டோபர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், 18ம் தேதி முதல், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'அக்டோபரில் நடக்க உள்ள, பிளஸ்2 துணை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், 18ம் தேதி பிற்பகல், 2 மணி முதல், www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்த விபரங்களை, தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி தெரிந்து கொள்ளலாம்' என, குறிப்பிட்டுள்ளார்

ஸ்டிரைக்' வாபஸ்: பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்


ஒன்பது நாட்கள் நடந்த தொடர் போராட்டம் முடிந்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நேற்று உடனடியாக பணியில் சேர்ந்தனர். அதனால், மீண்டும் பள்ளிகளில் வகுப்புகள் துவங்கின. பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு சார்பில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செப்., 7 முதல், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால், வகுப்புகள் முடங்கின; காலாண்டு தேர்வு பாதிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் நேற்று ஏற்பட்ட சுமூக நிலையை தொடர்ந்து, ஜாக்டோ - ஜியோ போராட்டம், வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை, நேற்று மதியமே கைவிட்டு விட்டு, பிற்பகலில் பணிக்கு சென்றனர். அதனால், பள்ளிகளில் மீண்டும் வழக்கம் போல் வகுப்புகள் துவங்கின.

ஜாக்டோ ஜியோ அறிவிப்பு தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்

ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்தப்போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது என அச் சங்க  நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சேகரன் ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் மாணவர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாடு ஆசிரியர்கள்-அரசு ஊழியர் சங்கங்கள் (ஜாக்டோ -ஜியோ) தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப் பின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தனர்.

இருப்பினும் கோர்ட்டு தடையை மீறி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோர்ட்டு உத்தரவை மதிக்காத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று மீண்டும் வக்கீல் சேகரன் மனுத்தாக்கல் செய்தார்.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள் ஐகோர்ட்டின் தடை உத்தரவு நோட்டீசை சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு சென்னை  மாநகர போலீஸ் கமிஷனர் வழங்க உத்தரவிட்டார்.

மேலும் தமிழ்நாடு ஆசிரியர்-அரசு ஊழியர் சங்கங்களின் நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தலைவர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்,  சங்கத்தலைவர், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தலைவர் ஆகியோர் 15-ந் தேதி (இன்று) ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அதன்படி சங்க நிர்வாகிகள் இன்று மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார்கள். வழக்கு 11 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள் பொதுநலன் கருதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும். வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றால் தலைமை செயலாளர் முன்னிலையில் வருகிற திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறினர்.
ஐகோர்ட் கிளையில் ஆஜரான ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். பிற்பகல் 2 மணிக்குள் அரசு ஊழியர்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்ல  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்காக வருகிற 21 ந்தேதி தலைமை செயலாளர்  நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து ஜாக்டோ ஜியோ வின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீதிபதி கேள்வி

அரசு ஊழியர்களுக்கு ஏன் ஓய்வூதியம் தரவில்லை... அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி!

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஏன் ஓய்வூதியம் தரவில்லை என்பது குறித்து பதிலளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு ஊழியர்களின் தங்களின் ஓய்வூதியத்திற்காகவே போராடுகின்றனர். இது நியாயமான கோரிக்கை தான் என்றார்.

அரசு ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது, ஆனால் போராடும் விதமே தவறானது. அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை ஏன் அரசு தரவில்லை. 2003க்குப் பிறகு அரசு ஊழியர்கள் எவ்வளவு பேர் ஓய்வுபெற்றனர் என்றுஅரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு பங்களிப்பு தொகையை ஏன் செலுத்தவில்லை என்றும் நீதிபதி கேட்டார். மேலும் இது குறித்து அரசு திங்கட்கிழமைக்குள் பதில் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Thursday, September 14, 2017

ஜாக்டோ ஜியோ 14-9-17





புதிய பாடத் திட்டப் பணிகள் நவம்பர் இறுதியில் நிறைவு பெறும்


புதிய பாடத்திட்டப் பணிகள் வரும் நவம்பர் இறுதியில் நிறைவு பெறும் என கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் மு.ஆனந்த கிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் கல்வி முறையை மேம்படுத்தும் வகையில் உயர்நிலைக்குழுவும், கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் அமைக்கப்பட்டன. இதற்கான பணிகளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பாடத்திட்டம் மற்றும் பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (செப்.14) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின்போது புதிய பாடத் திட்டம் தொடர்பாக இதுவரை என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; அவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்; மாணவர்கள் நலனுக்கான புதிய திட்டங்கள் குறித்து அந்தந்தக் குழுவினர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு நீட் தேர்வுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க வேண்டும் என்பது குறித்து சில யோசனைகளை வழங்கினார்.

இது குறித்து கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் கூறுகையில், கலைத்திட்டம், பாடத்திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் கால அட்டவணைப்படுத்தப்பட்டு ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வருகின்றனர். ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டப் பணிகள் வரும் நவம்பர் இறுதி வாரத்தில் நிறைவு பெறும். இதைத் தொடர்ந்து அடுத்த கல்வியாண்டில் 1,6,9,11 வகுப்புகளுக்கான நூல்கள் புதிதாக வெளியிடப்படும் என்றார்.

இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதி, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, முன்னாள் துணைவேந்தர்கள் இ.சுந்தரமூர்த்தி, இ.பாலகுருசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

பத்தாம் வகுப்புத் துணைத்தேர்வர்களுக்கு நாளை முதல் தேர்வுக் கூட நுழைச்சீட்டு


பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தேர்வர்கள் சனிக்கிழமை (செப்.16) முதல் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை (செப்.14) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-

தமிழகத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத அரசுத் தேர்வு சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதி திட்டத்தில் (தட்கல்) ஆன்லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் உள்பட அனைவரும் சனிக்கிழமை (செப்.16) முதல் இணையதளத்தில் தேர்வுக்கூடநுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று நநகஇ உலஅங நஉடபஉஙஆஉத/ஞஇபஞஆஉத 2017 டதஐயஅபஉ இஅசஈஐஈஅபஉ ஏஅகக பஐஇஓஉப ஈஞரசகஞஅஈ என்ற வாசகத்தினை கிளிக் செய்ய வேண்டும்.

அப்போது தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்முறைத் தேர்வு எழுத... : எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு அடங்கிய அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வுக்கான 25 மதிப்பெண்களில் தேர்ச்சிக்குரிய குறைந்தபட்ச மதிப்பெண் 15-க்கு குறைவாக தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதுடன் எழுத்துத் தேர்வுக்கு வர வேண்டும். செய்முறைத் தேர்வு எழுத வேண்டிய தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே செப்.18, 19, 20 ஆகிய மூன்று நாள்களில் அந்தத்தேர்வு நடத்தப்படும்.

எனவே, இந்தத் தேர்வர்கள் உரிய தேர்வு மைய தலைமை ஆசிரியரை மேற்கண்ட நாள்களில் அவசியம் தொடர்பு கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அதில் கூறியுள்ளார்.

புதிய தேர்வு மையம் : பள்ளிகளில் விபரம் சேகரிப்பு


தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கான மையங்கள் அமைப்பதற்காக, அதுகுறித்த விபரங்களை அனுப்பி வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 தேர்வும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுஉள்ளது. கடந்த ஆண்டு வரை, குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை உள்ள பள்ளிகள் மட்டுமே தேர்வு மையங்களாக இருந்தன.

குறைவான எண்ணிக்கை உள்ள மாணவர்கள், அருகில் உள்ள வேறு பள்ளி தேர்வு மையத்துடன் இணைக்கப்படுவது வழக்கம். 'நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுவதால், தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்' என, கல்வியமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துஇருந்தார். தற்போது ஒவ்வொரு பள்ளியிலும், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, தேர்வு மையம் உள்ளிட்ட விபரங்களை சேகரித்து அனுப்பி வைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மாணவர்களின் தேர்வு நேர அலைக்கழிப்பை குறைக்கும் வாய்ப்பு உருவாகிஉள்ளது.

கிரிமிலேயர் வருமான உச்சவரம்பு உயர்வு! இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC.) வருமான உச்ச வரம்பை ரூ 6 லட்சத்த லிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி மத்தியஅரசு உத்தரவு

Wednesday, September 13, 2017

எத்தனை ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன?: உயர்நீதிமன்றம் கேள்வி


தமிழகத்தில் நடைபெற்று வரும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் எத்தனை ஆசிரியர் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன எனக் கேள்வியெழுப்பிய உயர் நீதிமன்றம், இந்தப் போராட்டங்களைத் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க உத்தரவிட்டது. செய்யாறு சிறுவெளியநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் காளிதாஸ் மாதக்கணக்கில் பள்ளிக்கு வராமல் இருக்கிறார்.

எனவே, அவர் மீது நடவடிகை எடுக்கக் கோரியும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணிக்குத் தவறாமல் வருவதை உறுதிப்படுத்த உத்தரவிடக் கோரியும், பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் வேறு பணி செய்வதை தடுக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டு கடந்த 27-ஆம் தேதி அவருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து நீதிபதி கூறியதாவது: இது போன்ற வழக்குகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவைக் கண்காணிக்கவே பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்த நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களின் திறமையை இந்த நீதிமன்றம் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், இவரைப் போன்று பல மாதங்கள் பணிக்கு வராமல் உள்ள ஆசிரியர்களால் ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. தற்போது நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் எத்தனை ஆசிரியர் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன, எத்தனை ஆசிரியர்கள் பணியைப் புறக்கணித்துள்ளனர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர், தமிழகத்தில் மக்கள் தொகைக்கேற்ப ஆசிரியர் விகிதாச்சாரம் என்ன, ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.

ஊதியத்தின் விவரம் என்ன, அரசு கருவூலத்திலிருந்து ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க எவ்வளவு செலவிடப்படுகிறது, தமிழக பட்ஜெட்டில் அது எத்தனை விழுக்காடு, தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எத்தனை விழுக்காடு, அவர்களின் ஆண்டு சராசரி வருமானம் எவ்வளவு, தனியார் பள்ளி ஆசிரியர்களை விட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறதா, ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக பாதிப்படைந்துள்ள பள்ளிகள் எத்தனை, போராட்டத்தைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு வியாழக்கிழமை (செப் 14) பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க நிபுணர் குழு அமைப்பதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை வழக்குரைஞர் சூரிய பிரகாசம் தொடர்ந்த மற்றொரு வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அந்த வழக்கை செப்.18-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.