5 மற்றும் 8 வகுப்புகளுக்கு விரைவில் பொதுத் தேர்வு முறை கொண்டுவரப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பேசிய அவர், அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், அதில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை கொண்டு வரலாம் என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த முடிவுக்கு, 24 மாநிலங்கள் தங்களது ஒப்புதலை அளித்துள்ளதாக குறிப்பிட்ட ஜவதேகர், இந்த பொதுத் தேர்வில் தோல்வியடையும் மாணாக்கர்கள், அதே ஆண்டு மே மாதம் மீண்டும் மறுதேர்வு எழுதலாம் எனவும் குறிப்பிட்டார்.
அதிலும் மாணாக்கர்கள் வெற்றியடைய முடியாத பட்சத்தில், தோல்வியடைந்தவர்களாக கருதப்படுவர் என்றும் அவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அமைச்சர் ஜவதேகர் கூறினார்.