இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, July 17, 2017

நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி சதவீதம் மாற்றம்


பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வில், தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண் சதவீதம் மாற்றப்பட்டுள்ளது.முதுநிலை பட்டம் முடித்தவர்கள், கல்லுாரி மற்றும் பல்கலைகளில், பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' என்ற தேசிய தகுதி தேர்வு அல்லது மாநில அரசின், 'செட்' என்ற மாநில தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 'செட்' தேர்ச்சி பெற்றால், எந்த மாநிலம் தேர்வு நடத்தியதோ, அந்த மாநிலத்தில் மட்டுமே, பணியில் சேர முடியும். இதில், ஆங்கிலம் மட்டுமின்றி, அந்த மாநில மொழியிலும், தேர்வு எழுதலாம்.

தேசிய தேர்வில், ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டுமே எழுத முடியும். ஆனால், தேர்ச்சி பெறுவோர், நாடு முழுவதும் உள்ள பல்கலைகளில் பணியில் சேரலாம்.'நெட்' தேர்வை, மத்திய அரசின் பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இந்த ஆண்டு முதல், 'நெட்' தேர்வு, ஆண்டுக்கு இரு முறை என்பது ரத்து செய்யப்பட்டு, ஒரு முறையாக, நவம்பரில் மட்டும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வில், மூன்று பாடங்களில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெறுவதுடன், தேர்வு எழுதியவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற, முதல், 15 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.

இந்த நடைமுறையை மாற்ற, கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, இந்த ஆண்டு முதல், மூன்று பாடங்களிலும் ஒட்டு மொத்தமாக தேர்ச்சி பெறுவோரில், முதல் ஆறு சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

2017-18 வேலைநாட்கள்

2017-18 தாழ்த்தப்பட்ட மாணவியர் பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை சார்ந்த செயல்முறைகள்


Sunday, July 16, 2017

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட் 25ம் தேதி வெளியீடு


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வை 6.30 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் நடந்த தேர்வை சுமார் 40,000 பேர் எழுதினர். இது குறித்து சங்கர் ஐ.ஏ.எஸ். அகடாமி நிறுவன தலைவர் சங்கர் கூறியதாவது:

சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வு ரிசல்ட் வருகிற 25ம் தேதி வெளியாக உள்ளது. இல்லாத பட்சத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். அக்டோபரில் மெயின் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிகளில் தொடரும் கள ஆய்வு: பிளஸ் 1 வகுப்புக்கு விரைவில் மாதிரி வினாத்தாள்


பிளஸ் 1 வகுப்புக்கு புதிய வினாத்தாள் வடிவமைப்பதற்காக பள்ளி மாணவர்களிடம் கள ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்தப் பணி அடுத்த சில நாள்களுக்குள் முடிக்கப்பட்டு வினாத்தாள் தொடர்பான அரசாணை வெளியிடப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிளஸ் 1 வகுப்புக்கு நிகழ் கல்வியாண்டு (2017}18) முதல் மொத்தம் 600 மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு 10}ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ்}2 என மூன்று பொதுத் தேர்வுகளை மாணவர்கள் சந்திக்க உள்ளனர்.

இதைத் தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் மாதிரி வினாத்தாள் தயாரிக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. ஆசிரியர்கள் வலியுறுத்தல்: இந்தநிலையில் பிளஸ் 1 அரசு பொதுத் தேர்வுக்கான புதிய மாதிரி வினாத் தாள்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இது குறித்து தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் கூறியது:

பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த மே மாத இறுதியில் அறிவிக்கப்பட்டது. புதிய வினாத்தாளில் எத்தனை ஒரு மதிப்பெண், 3 மதிப்பெண், 8 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும், அவை எந்தெந்த பாடங்களிலிருந்து கேட்கப்படும் என்பதை அறிய மாதிரி வினாத்தாள், ப்ளு பிரிண்ட் ஆகியவை உதவிகரமாக இருக்கும். பருவத் தேர்வுகளுக்கும், பாடங்களை முடிப்பதற்கும் ஆசிரியர்களுக்கு குறைந்த காலமே இருப்பதால் ப்ளு பிரிண்டுடன் கூடிய வினாத்தாளை வெளியிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பள்ளிகளில் கள ஆய்வு: இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் க.அறிவொளி கூறுகையில், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளியல், வணிகவியல் உள்ளிட்ட 23 முக்கிய பாடங்களுக்கும், தொழிற்கல்வி சார்ந்த 11 பாடங்களுக்கும் மாதிரி வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. தற்போது 20 பாடங்களுக்கான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பல்வேறு பள்ளிகளில் மாணவர்களிடம் வினாத்தாள் அளிக்கப்பட்டு அவர்களைத் தேர்வு தேர்வு எழுதச் செய்து அதன் பின்னர் கருத்துக் கேட்கப்படும். இந்தக் கள ஆய்வு கடந்த சில நாள்களாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. முழு மதிப்பெண் சற்று கடினம்: இதைத் தொடர்ந்து புதிய வினாத்தாளின் தன்மை குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் கூறும் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு வினாத்தாள்கள் முழுமையாக வடிவம் பெறும்.

தேசிய அளவிலான போட்டித்தேர்வுகளை தமிழக மாணவர்கள் திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் எளிதில் 100 மதிப்பெண் பெற முடியாத அளவுக்கு வினாத்தாள் சற்று கடினமாக இருக்கும். பிளஸ் 1 புதிய வினாத்தாள் குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் எந்தக் குழப்பமும் அடைய வேண்டாம். ஒரு வாரத்துக்குள் இந்தப் பணி முடிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும். மேலும் மாதிரி " வினாத்தாள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். இதைப் பார்த்து கேள்விகள் எந்த முறையில் கேட்கப்படும் என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்" என்றார்.

பி.எட்., கவுன்சிலிங் இன்று துவக்கம்


தமிழகத்தில், 21 கல்லுாரிகளுக்கான, பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று(ஜூலை 17) துவங்குகிறது. தமிழக அரசின், 14 அரசு கல்லுாரிகள், ஏழு அரசு உதவி பெறும் கல்லுாரிகள் என, 21 கல்வியியல் கல்லுாரிகளில், 1,753 இடங்களில், பி.எட்., படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கு, தமிழக அரசு சார்பில், லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரியால், ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நடத்தப்படுகிறது.

இந்த கவுன்சிலிங், இன்று துவங்குகிறது. முதல் நாளான இன்று, மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பழங்குடியினருக்கு, இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. மற்ற பிரிவினருக்கு, நாளை முதல் கவுன்சிலிங் நடக்கும். விண்ணப்பம் பெற்ற, 6,281 பேரில், 5,833 பேர் விண்ணப்பம் அனுப்பினர்.

அவர்களில், சரியான, 'கட் ஆப்' மதிப்பெண் பெற்ற, 2,996 பேர், முதற்கட்ட கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு,1,000 ரூபாய்; மற்றவர்களுக்கு, 2,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை, 'செயலர், தமிழ்நாடு, பி.எட்., மாணவர் சேர்க்கை, 2017 - 18' என்ற பெயரில், 'டிடி' என்ற, வங்கி வரைவோலையாக தர வேண்டும்.கவுன்சிலிங், 22ம் தேதி வரை நடக்கிறது.

பி.இ., - பி.டெக்., படித்தவர்களுக்கு, வரும், 19ம் தேதி இடங்கள் ஒதுக்கப்படும். அவர்களுக்கு, 10 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. கூடுதல் விபரங்களை, www.ladywillingdoniase.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

periodical test







அரசாணை 335ன் படி பள்ளி வழிபாட்டுக்கூட்டம்

Saturday, July 15, 2017

ப்ளஸ் 2 சான்றிதழை மின் ஆவணக் காப்பகம் மூலம் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு


கடந்த மார்ச் மாதம் மேல்நிலை தேர்வெழுதிய மாணவர்களுக்கு கடந்த 10-ந்தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை மத்திய அரசின் மின் ஆவணக் காப்பகத்தின் (டிஜிட்டல் லாக்கர்) மூலம், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தரவுக் களஞ்சியத்திலிருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை மின் ஆவணக் காப்பகம் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால் மாணவர்கள் மின் ஆவணக் காப்பகத்தின் www.di-g-i-l-o-c-k-er.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணைப் பயன்படுத்தி தங்களுக்கான மின் ஆவணக் காப்பகக்கணக்கினைத் தொடங்க வேண்டும். மாணவர்கள் ஆதார் எண்ணுடன் அவர்களது செல்போன் எண் இணைக்கப்படாதபட்சத்தில் அருகாமையிலுள்ள அரசு இ-சேவை மையத்தை அணுகி ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்து மின் ஆவணக் காப்பகக் கணக்கினைத் தொடங்கலாம்.

மாணவர்களின் மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை மின் ஆவணக் காப்பகக் கணக்கு மூலமாகப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். மேலும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு மின்னணுச் சான்றிதழை இணையதள வழியாகவும் சமர்ப்பிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இம்மின்னணுச் சான்றிதழ், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தரவுக் களஞ்சியத்திலிருந்து மின்னணு முறையில் நேரடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளப்படுவதால், மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த தகவலை அரசு தேர்வு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

960 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் காமராஜர் விருது அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


ஆண்டுதோறும் தமிழ்வழிக் கல்வியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளை ஒரு மாவட்டத்திற்கு 30 பேர் வீதம் 32 மாவட்டங்களுக்கும் 960 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 15 மாணவர்களுக்கு காமராஜர் விருதும், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். இதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் பிளஸ்-2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறும் 15 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு காமராஜர் விருதும், ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9, 10, 11, 12-ம் வகுப்புகளை கணினி மயமாக்குவதற்காக ரூ.324 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ-மாணவிகளுக்காக ரூ.1 கோடியே 32 லட்சம் செலவில் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாணவ-மாணவிகளுக்கான பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அறிவிப்புகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.

Thursday, July 13, 2017

826 அரசு பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர்!


தமிழகத்தில், 826 அரசு பள்ளிகளில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதால், அவற்றில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு தொடக்க பள்ளிகளில், சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.

சில மாவட்டங்களில், மாணவர், ஆசிரியர் விகிதம் குறைவாகவும், சில மாவட்டங்களில், அதிகமாகவும் உள்ளது. இந்த பிரச்னையால், தொடக்கப் பள்ளிகளின் கல்வித் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், தமிழக பள்ளிகள் செயல்பாட்டை, மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது. இதில், பல்வேறு குறைகள் கண்டறியப்பட்டுள்ளன. முக்கியமாக, தமிழகத்தில், 817 தொடக்க பள்ளிகளிலும், ஒன்பது நடுநிலை பள்ளிகளிலும், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுவது தெரிய வந்துள்ளது.

இந்த ஒரு ஆசிரியரும், விடுப்பு எடுத்தாலோ அல்லது கல்வித்துறையின் வேறு பணிகளுக்கு சென்றாலோ, பாடம் நடத்த ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு, மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், 'ஓர் ஆசிரியர் பள்ளியே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ஆனால், தமிழகத்தில் மட்டும், ஓர் ஆசிரியர் பள்ளிகள் இயங்குகின்றன. அங்கு, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை, பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு மாற்றி, கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் : அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை, அரசு ஊழியர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடும்,'' என, மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது: ஏழாவது சம்பளக் கமிஷனை அமைக்க வேண்டும். இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, ஜாக்டோ ஜியோ சார்பில் ஜூலை 18 ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆக., 5 ம் தேதி சென்னையில் பேரணி நடக்கிறது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிகளவில் பங்கேற்பர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை 2003 ல் அமல்படுத்தியது முதல் 4.44 லட்சம் ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பிடித்தம் செய்த தொகை மற்றும் அரசு பங்களிப்பு 14 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது என தெரியவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது எனில் மத்திய அரசின் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினராக வேண்டும்.

ஆனால் இதுவரை மாநில அரசு அதில் இணையவில்லை. ஏற்கனவே இத்திட்டம் சாத்தியப் படாது என கைவிடப்பட்டது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்பட்ட ஆயிரம் ஊழியர்கள் இறந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை, அரசு ஊழியர்கள் போராட்டம் தொடரும், என்றார்.

இணையதளத்தில் பிளஸ் 2 சான்றிதழ்!


பிளஸ் 2அசல் சான்றிதழை, மத்திய அரசின் இணையதளத்தில், 'டிஜிட்டல்' முறையில் பதிவிறக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, ஜூலை, 10 முதல், பள்ளிகளில், அசல் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அதேபோல, மத்திய அரசின் மின் ஆவண காப்பகத்தின், www.digilocker.gov.in என்ற இணையதளத்தில் சான்றிதழை, இன்று முதல் பதிவிறக்கலாம்.மாணவர்கள், 'ஆதார்' எண்ணுடன் இணைந்த மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, இணையதளத்தில் கணக்கு துவங்க வேண்டும். ஆதார் எண்ணில் மொபைல் போன் இணைக்கப்படாமல் இருந்தால், இ - சேவை மையத்தில் இணைத்து கொள்ளவும். கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

JRC news from tirupur deeo

பொறியியல் கலந்தாய்வு அறிவிப்பு-2017

ஜூலை 23-ல் பொதுப் பிரிவுக்கான பொறியியல் கலந்தாய்வு..! அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு

கார்த்திக்.சி கே.ஜெரோம்

பொறியியல் படிப்புக்கான பொதுப் பிரிவுக்குரிய கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதி தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'நீட் தேர்வு முடிவு காலதாமதமானதால் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை விரைவில் நடத்த முடியாமல் போனது. இதுவரையில் ஒரு லட்சத்து 41,077 மாணவ, மாணவிகள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். பழைய கலந்தாய்வு முறையை நடத்தும் பட்சத்தில் 35 நாள்கள் தேவைப்படும்.

ஜூலை 17, 18-ம் தேதிகளில் தொழில் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. 19-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். 19 மற்றும் 20-ம் தேதிகளில் விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும். 21-ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். 23-ம் தேதி பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறும். அடுத்து வரவுள்ள கல்வியாண்டு முதல் இணைய வழி கலந்தாய்வு நடைபெறும். அதனால் மாணவர்களுக்குரிய நேர விரயம் மற்றும் அலைச்சல் குறையும்' என்றார்

chess competition

காலை வழிபாட்டுக்கூட்டம் தொடர்பான இயக்குநர் செயல்முறைகள்

Wednesday, July 12, 2017

TPF / GPF ACCOUNT SLIP 2016-17

Click below

http://www.agae.tn.nic.in/onlinegpf/

வைரமுத்து



வைரமுத்து பிறந்ததின பகிர்வு
*மணி

#நிறம் ஒரு ஒப்பீடுதான்,ஆப்பிரிக்காவில இருந்தால் நான் தான் அங்கு சிவப்பு
#வைரமுத்து

#உசுரை விட்டு போறது மட்டும் சாவு இல்லை,
ஊரை விட்டு போறதும் சாவு தான்
#வைரமுத்து

#பணத்தால் சந்தோஷத்தை வாடகைக்கு வாங்கலாம்,
விலைக்கு வாங்க முடியாது
-வைரமுத்து

#இங்கே மண் ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறது,
மனிதர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்
#வைரமுத்து

#கட்டிலுக்கு தூக்க மாத்திரையும், ஊக்க மாத்திரையும் தேவைப்படாதவரை உடல் நலமுடன் இருப்பதாக அர்த்தம்
-வைரமுத்து

#சிறகிருந்தால் போதும்,
சிறியதுதான் வானம்.!
-வைரமுத்து

#வாரக்கடைசியில் காட்டிக்கொடுக்கும் சாயமடித்த மீசைப்போல,
மூடிமூடி வைத்தாலும்
முட்டி முட்டி எட்டிப்பார்க்கும் துக்கம்
-வைரமுத்து

#காதலில் மட்டும்தான் தொடங்குவது கஷ்டம்; தொடர்வது கஷ்டம்; முடிப்பது கஷ்டம்; முடிந்தாலும் கஷ்டம்.
-வைரமுத்து

#பிணங்களை எரிப்பதற்காக மேல் நாட்டில் மின்சார அடுப்பு தயாரிக்கிறார்கள்.இந்தியாவில் மகன்களை தயாரிக்கிறார்கள்
-வைரமுத்து

தோழமையுடன் மணிகண்டபிரபு

புதிய பாடத்திட்ட குழு 17ல் முதல் கூட்டம்


புதிய பாடத்திட்ட கமிட்டியின் முதல் கூட்டம், வரும், 17ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள், 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளன. அதேபோல், ஒன்றாம் வகுப்பு முதல், 10 வகுப்பு வரையிலான பாடங்களும், ஆறு ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. எனவே, புதிய பாடத்திட்டத்தை உருவாக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அந்த பொறுப்பு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளியிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாடத் திட்டத்துக்கான உயர்மட்ட ஆலோசனை குழு உருவாக்கப்பட்டு உள்ளது. இதில், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், முன்னாள் துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம், 17ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. இதில், தமிழக பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும்; எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும்; என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

பிளஸ் 2 பொது தேர்வு; புதிய விதிகள் தயார் மாதிரி தேர்வு நடத்த முடிவு


பிளஸ்1 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் முறை இறுதி செய்யப்பட்டு உள்ளது. அரசாணை வெளியிடும் முன், மாதிரி தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சீர்திருத்த நடவடிக்கைகளில், முக்கிய அம்சமாக, தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 பாடத்துக்கும், பொதுத் தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

வல்லுனர் கமிட்டி மேலும்,தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, பிளஸ்1 பொது தேர்வு, பாடத்துக்கு, 200 மதிப்பெண்களுக்கு பதில், 100 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டு உள்ளது.தேர்வு நேரமும், இரண்டரை மணி நேரமாக மாற்றப்பட்டு உள்ளது. இதே முறை, அடுத்த ஆண்டு, பிளஸ் 2 மாணவர் களுக்கும் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், புதிய தேர்வு முறையில், வினாத் தாள் முறை மற்றும் தேர்வு விதிகளை உருவாக்க, தமிழக அரசின் சார்பில் வல்லுனர் கமிட்டி அமைக் கப்பட்டது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளியை ஒருங் கிணைப்பாளராகவும், தேர்வுத் துறை முன்னாள் இயக்குனர் தேவராஜனை, தலைவரா கவும் நியமித்து, கமிட்டி அமைக்கப்பட்டது.

புதிய வினாத்தாள் இந்த கமிட்டி, பல்வேறு பாடத்திட்ட வினாத்தாள் வகைகள், ஆந்திரா, கேரளா, மஹாராஷ்டிரா பொதுத் தேர்வு முறை, சி.பி.எஸ்.இ.,பாடத்திட்ட வினாத்தாள் ஆகியவற்றை ஆய்வு செய்து, புதிய விதிகளை வகுத்துள்ளது. இந்த அறிக்கையை, தமிழக பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரனிடம், வல்லுனர் கமிட்டி தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, புதிய விதிகள் மற்றும் வினாத்தாள் முறைக்கு, தமிழக பள்ளிக்கல்விதுறை சார்பில், விரைவில் அரசாணை வெளியிடப்படஉள்ளது.

அதற்கு முன், புதிய வினாத்தாள் முறையின் படி, மாதிரி வினாத்தாள் வடிவ மைத்து, தற்போது, பிளஸ் ௧ முடித்து, பிளஸ் 2 படிக்கும் சில மாணவர்களுக்கு, மாதிரி தேர்வு நடத்தப் பட உள்ளது. புதிய முறையில் மாணவர் கள் தேர்வு எழுதும் நேரம், அவர்களின் சிந்திக்கும் திறன், ஒவ் வொரு கேள்விக்கும் விடை எழுத தேவைப் படும் நேரம் ஆகியவற்றை, செய்முறை ஆய்வு மூலம் முடிவு செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.