இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, June 12, 2017

புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க ஆர்வமான ஆசிரியர்களுக்கு அழைப்பு


புதிய பாடத்திட்டத்தை தயாரிப்பதில் பங்கேற்க விரும்பும் தன்னார்வ வல்லுனர்களை, பள்ளிக் கல்வித் துறை வரவேற்றுள்ளது. இது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பாடத் திட்டத்தை மாற்றவும், பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு நடத்தவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், புதிய பாடத்திட்டம் மற்றும் புத்தகங்களை வடிவமைக்க, அனுபவமிக்க கல்வியாளர்கள், பேராசிரியர்களை குழுவில் ஈடுபடுத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. எனவே, ஆர்வம் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், தங்கள் பெயர் விபரங்களை, www.tnscert.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஆர்வம் உள்ளவர்கள், இணையதளம் மூலம் இன்று முதல், ஜூன், 23, மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, June 11, 2017

அரசு பள்ளிகளுக்கு இணையதளம் கல்வி மேம்பாட்டுக்கு திட்டம்


அரசு பள்ளிகளின் செயல்பாட்டை, பொதுமக்கள் அறியும் நோக்கில், பிரத்யேக இணையதளம் உருவாக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில், பல அதிரடி மாற்றங்கள் நடக்கின்றன. மத்திய அரசு நிதியில், 'ஸ்மார்ட் கிளாஸ் ரூம்' அமைக்கவும், கல்வித் துறை முனைப்பு காட்டி வருகிறது.

அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., சார்பில், அரசு பள்ளிகளுக்கு பிரத்யேக இணைய தளம் உருவாக்கவும், உயர் கல்வி குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தவும், நிதி ஒதுக்கி, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை சாதகமாக்கி, அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக, மாவட்ட வாரியாக உள்ள, பழமை வாய்ந்த, அதிக தேர்ச்சி விகிதம் கொண்ட பள்ளிகளுக்கு, முன்னுரிமை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆர்.எம்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் ஒருவர் கூறியதாவது: மத்திய அரசின் நிதியை முழுமையாக பயன்படுத்தி, அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வாரியாக பிரத்யேக இணையதளம் உருவாக்கும் போது, கல்வி சார் செயல்பாடுகளை எளிதில் விளம்பரப்படுத்தலாம். மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் இத்திட்டம் உதவி புரியும். மேலும், நலத்திட்ட பொருட்கள் வினியோகம், பொதுத் தேர்வு பட்டியல் தயாரிக்க, மாணவர்களின் விபரங்கள் திரட்டுவதிலும் சிக்கல் இருக்காது. இதற்கான முதற்கட்ட பணிகள், விரைவில் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

💥 *12/06/2017- குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புதினம் கடைபிடித்தல்-உறுதிமொழி ஏற்றல் சார்பு -தொ.க.இணை இயக்குநரின் செயல்முறைகள்..*


*EMIS மாணவர் விபரம் பதிவு செய்வதற்கான புதிய படிவம் (4 பக்கங்களில்)*





Saturday, June 10, 2017

நிகழாண்டு முதல் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் மாற்றுச் சான்றிதழ்: அமைச்சர் வி.சரோஜா


தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும், 54,499 அங்கன்வாடி மையங்களில் 43 லட்சம் குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். நிகழாண்டு முதல் தமிழகத்தில் அங்கன்வாடியில் இருந்து 5 வயது பூர்த்தியாகி, பள்ளிகளில் முதல் வகுப்புக்கு சேர்க்கைக்குச் செல்லும் குழந்தைகளுக்கு, சமூக நலம், பள்ளிக் கல்வித்துறை இணைந்து, மாற்றுச் சான்றிதழ் வழங்கும் திட்டம் இன்னும் சில தினங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.

நிகழாண்டில் இத் திட்டம் மூலம் தமிழகத்தில் 2.50 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர். நாமக்கல் மாவட்டத்தில் 7,000 குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் அளிக்கப்படும். பிறந்தது முதல் காது-வாய் குறைபாடுள்ள குழந்தைகளை விரைவில் அடையாளம் காண 15 மாவட்டங்களில் ஏழு முன்கூட்டியே கண்டறியும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின்மூலம் இதுவரை சுமார் 5,000 குழந்தைகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். காது, வாய் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அதிநவீன காக்ளியர் ட்ரான்ஸ்பிளான்ட் கருவி பொருத்த இந்த மையங்கள் பெரிதும் பயன்படுகின்றன என்றார்.

நீட் தேர்வு தீர்ப்புக்கு பின்னரே மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு: மருத்துவ கல்வி இயக்குநர் பேட்டி


தமிழகத்தில் நீட் தேர்வு தீர்ப்புக்கு பின்னரே மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகும் என்று மருத்துவ கல்வி இயக்குனர் கூறினார். நாகர்கோவிலில் மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இந்த ஆண்டு 350 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 10 இடங்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

பொதுவாக 100 சீட்டுகளுடன் மட்டுமே மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு வந்தன. ஆனால் சமீபத்தில் புதுக்கோட்டையில் 150 மாணவர்கள் சேர்க்கை அனுமதியுடன் கூடிய மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இது போல ராமநாதபுரம், விருதுநகர், கரூர் மாவட்டங்களிலும் 150 மாணவர்கள் சேர்க்கையை அடிப்படையாக கொண்டு தொடங்கப்படும். கொள்கை அளவில் நீட் தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. இந்த தீர்ப்புக்கு பின்னரே மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்புகள் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

பி.எப்., கணக்கில் ஆதார் இணைக்கவரும் 30 வரை கால அவகாசம்


பி.எப்., சந்தாதாரர்கள், தங்களின் கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம், இம்மாதம், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான, பி.எப்., கணக்கில், கோடிக்கணக்கானோர் இணைந்துள்ளனர். டிஜிட்டல் மயமாக மாறி வரும் நிலையில், நான்கரை கோடி உறுப்பினர்களுக்கு, பி.எப்., நடைமுறையில் எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

பி.எப்., தொகை பெறுதல், ஓய்வூதியம் மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட, தற்போதுள்ள நடைமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, பி.எப்., ஓய்வூதியர்கள் மற்றும் சந்தாதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணை, பி.எப்., கணக்கில் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. முதலில், ஏப்., 30க்குள், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இதற்கான காலக்கெடு இம்மாதம், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Friday, June 09, 2017

மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் சார்பாக

மாணவர் சேர்க்கை விபரம் கோருதல் சார்பாக

அரசு ஆரம்ப பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு


சரஸ்வதி பூஜை, 'சென்டிமென்ட்' காரணமாக, அரசு பள்ளிகளில், செப்., இறுதி வரை, முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. அரசு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, கல்வித் துறை ஊக்குவித்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தால், ஒவ்வொரு ஒன்றிய அளவிலும், ஆட்டோ பிரசாரம் மூலம், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள், வகுப்பறை, கழிப்பறை, குடிநீர் உட்பட வசதிகள், ஆசிரியர்களின் திறமை, ஆங்கில வழி போதனை போன்றவற்றை, ஒலி பெருக்கி மூலம் அறிவித்து, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், முதல் வகுப்பில், செப்., இறுதி வரை மாணவர் சேர்க்கையை நடத்தவும் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

கல்வித் துறை அலுவலர்கள் கூறுகையில், 'பெரும்பாலான மக்கள், சரஸ்வதி பூஜை சமயத்தில், தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்த சமயத்தில் பள்ளிகளில் சேர்க்கப்படும் போது, மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்பர் என்பது, அவர்களின் நம்பிக்கை. எனவே, செப்., இறுதி வரை, அரசு பள்ளி ஆரம்ப வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கும்' என்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் திருத்திய சம்பளம்


நாடு முழுவதும் உள்ள, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்து, 18 மாதங்கள் முடியும் நிலையில், டி.ஏ., உள்ளிட்ட திருத்தப்பட்ட படிகளுடன் கூடிய முழு சம்பளம், ஜூலை மாதம் முதல் கிடைக்கும்.

நாடு முழுவதும் உள்ள, 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும், 51 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டது. கடும் அதிருப்தி : 'கடந்த, 2016, ஜனவரி மாதத்தில் இருந்து இது வழங்கப்படும்' என, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம், 16 சதவீதம், இதர படிகள், 63 சதவீதம் என, மொத்தம், 23.55 சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டது. பென்ஷன், 23.6 சதவீதம் உயர்த்தப்பட்டது.அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டாலும், டி.ஏ., மற்றும் எச்.ஆர்.ஏ., எனப்படும் வீட்டு வாடகைப் படி ஆகியவை குறைந்தது. இது, ஊழியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால், படிகள் தொடர்பாக ஆய்வு செய்ய, மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் லாவாசா தலைமையிலான ஒரு குழு அமைக்கப்|பட்டது. இந்தக் குழு தன் பரிந்துரையை, இந்த ஆண்டு, ஏப்ரல், 27ல் மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது.

இந்தக் குழுவின் பரிந்துரைகள் குறித்து, மத்திய கேபினட் செயலர் தலைமையிலான, அரசு செயலர்கள் அடங்கிய உயர் அதிகாரக் குழு ஆய்வு செய்து, தன் இறுதி பரிந்துரையை அளித்து உள்ளது.

49 லட்சம் ஊழியர்கள் : வரும் வாரத்தில், இது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, படிகள் உயர்வு குறித்து அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வரும், ஜூலை மாதம் முதல், திருத்தப்பட்ட படிகளுடன் கூடிய புதிய சம்பளம், நாடு முழுவதும் உள்ள, 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Thursday, June 08, 2017

ஆங்கில வழி கல்வி: 59 பள்ளிகள் பொதுத்தேர்வுக்கு தயார்!


அரசு ஆங்கில வழி கல்வித்திட்டத்தின் கீழ், வரும் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு, பிளஸ்1 பொதுத்தேர்வை, 59 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்கவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழக அரசு சார்பில், அரசுப்பள்ளிகளில் ஆங்கில கல்வித்திட்டம், கடந்த 2012-13 கல்வியாண்டில் துவங்கப்பட்டது.

ஒன்று, ஆறாம் வகுப்புகளில், தனி பிரிவாக துவங்கப்பட்டு, ஆங்கிலவழி கல்விக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. குறைந்தபட்சம் 5 முதல், 15 மாணவர்கள் சேர்ந்தால் கூட, வகுப்பு நடத்த, கல்வித்துறை உத்தரவிட்டது. இதன்படி, வரும் கல்வியாண்டில், 59 பள்ளிகள்,பொதுத்தேர்வை சந்திக்க உள்ளன.கோவை மாவட்டத்தில், 21 அரசுப்பள்ளிகளில், ஏற்கனவே ஆங்கில வழி பிரிவுகள் உள்ளன. இதுதவிர, 50 அரசு ஆங்கில வழிப்பள்ளிகள், பத்தாம் வகுப்பில், தற்போது காலடி எடுத்து வைத்துள்ளன.மேலும், 9 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், வரும் 2017- 18 கல்வியாண்டில், பிளஸ் 1 பொதுத்தேர்வை சந்திக்கின்றன. இவர்களுக்கு, மொழித்திறன் மேம்படுத்துதல், சிறப்பு பயிற்சி வகுப்பு மூலம், தேர்வுக்கு தயார்ப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசுப்பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் கையாள, பிரத்யேக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. எட்டாம் வகுப்பு வரை ஆல்பாஸ் நடைமுறை பின்பற்றப்படுவதால், மாணவர்களின் கற்றல் திறன் பரிசோதிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒன்பதாம் வகுப்பிலும், 'பெயில்' போட உத்தரவு இல்லை. இவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் கொண்டு தான், ஆங்கில வழி பள்ளிகளின் கற்பித்தல் தரம் பரிசோதிக்கப்படும்.

'கோவை மாவட்டத்தில், வரும் 2017-18 கல்வியாண்டில், 50 அரசு, மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் இருந்து, 450 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். பிளஸ் 1 பொதுத்தேர்வில், ஒன்பது அரசு ஆங்கில வழி பள்ளிகள் பங்கேற்கவுள்ளன,'' என்றார்

Wednesday, June 07, 2017

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு ‘தட்கல்’ மூலம் விண்ணப்பிக்கலாம்


ஜூன், ஜூலை மாதங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 சிறப்பு துணை பொதுத்தேர்வு எழுத அலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்துக்குரிய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் 8.6.2017 (இன்று), 9.6.2017 (நாளை) ஆகிய 2 நாட்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மார்ச்–2017 எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதியவர்கள் தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலினையும், தேர்வு எழுதாதவர்கள் தமது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டையும் (ஹால் டிக்கெட்) விண்ணப்பத்தினை பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.

சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கான கட்டணத்தை விண்ணப்பம் பதிவு செய்யும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு தட்கல் திட்டத்தில் அனுமதிக்கப்படும் தேர்வர்களுக்கு நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவை கூட்டத் தொடர்: ஜூன் 15-இல் கல்வித் துறை மானியக் கோரிக்கை


தமிழக சட்டப்பேரவையில் வரும் 14 -ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட உள்ள துறை வாரியான மானியக் கோரிக்கை நாள் விவரத்தை பேரவைத் தலைவர் தனபால் புதன்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்:

ஜூன் 14 வனம், சுற்றுச்சூழல் துறை. ஜூன் 15 பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத் துறை, உயர் கல்வித் துறை. ஜூன் 16 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை. ஜூன் 19 எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை. ஜூன் 20 நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை. ஜூன் 21 நகராட்சி நிர்வாகத் துறைகளின் விவாதம் தொடர்ச்சி. ஜூன் 22 நீதி நிர்வாகம், சிறைச் சாலைகள், சட்டத் துறை, சுற்றுலா-கலை-பண்பாடு.

ஜூன் 23 தொழில் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை. ஜூன் 24 சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை. ஜூன் 28 நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், பொதுப்பணித் துறை (கட்டடங்கள் மற்றும் பாசனம்) ஜூன் 29 கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருள்கள் துறை. ஜூலை 3 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை. ஜூலை 4 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை. ஜூலை 5 வேளாண்மைத் துறை. ஜூலை 6 காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள். ஜூலை 7 காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை விவாதம் தொடர்ச்சி. ஜூலை 10 காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை விவாதம் தொடர்ச்சி ஜூலை 11 மீன்வளம், பால்வளம், கால்நடை பராமரிப்புத் துறை. ஜூலை 12 வணிக வரிகள், முத்திரைத் தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு.

ஜூலை 13 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை. ஜூலை 14 செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் -அச்சு, தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலையத் துறை. ஜூலை 17 போக்குவரத்துத் துறை. ஜூலை 18 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை. ஜூலை 19 பொதுத் துறை, மாநிலச் சட்டப் பேரவை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்கள், ஓய்வூதியக் கால நன்மைகள்.

நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

நீட் உட்பட, மத்-திய அரசின் நுழைவு தேர்-வு-களுக்கு, தமிழக மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறிஉள்ளார்.

தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவியருக்கு இலவச புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கும் விழா, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள, ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாதிரி வினாத்-தாள் : இதில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று பேசி-யதா-வது: மாண-வர்க-ளுக்கு யோகா மற்றும் சாலை விதி-கள் குறித்த பயிற்-சி-கள் தரப்படும். 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்-றும் பிளஸ் 2 தேர்-வு-களுக்கு எப்-படி வினாத்-தாள் வர உள்ளது என்-பது குறித்து, ஆசி-ரி-யர்கள், மாண-வர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பணி-கள், இன்னும் ஒரு வாரத்தில் முடி--யும்.

பிளஸ் 1 மாண-வர்க-ளுக்கு மாதிரி வினாத்-தாள் வழங்கப்படும். 42 அறி-விப்-பு : நீட் - ஜே.இ.இ., போன்ற மத்-திய அரசின் அனைத்து நுழைவு -தேர்வுக-ளை-யும் சந்-திக்க, ஒன்-றி-யத்-துக்கு ஒரு இடம் வீதம், சனிக்கிழமையில், சிறப்பு பயிற்சி அளிக்கப்-ப-டும். கல்-வித்-துறை குறித்து, 42 அறி-விப்-பு-களை, வரும், 15ம் தேதி, பள்-ளிக் கல்வி மானி-யக் -கோ-ரிக்கையில் எதிர்-பார்க்க-லாம். இவ்வாறு அவர் பேசினார். அரசு ஊழியர் பிள்ளைகளுக்கு கட்டுப்பாடு? : 'அரசு ஊழி-யர்க-ளின் பிள்-ளை-கள், அரசு பள்-ளி-யில் சேர்க்கப்-பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்படுமா?' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன்,

''அரசு பள்-ளி-களில் மாணவர் சேர்க்கை குறித்து, விழிப்-பு-ணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்த ஆண்டு, 1 லட்-சம் மாண-வர்கள் கூடு-த-லாக சேர்ந்துள்ளனர். அரசு பள்ளி, கல்லுாரிகளில் இருந்தே, சிறந்த கல்-வியாளர்கள் தேர்வாகி உள்ளனர்; அதற்கான பட்-டி-யலை தர தயார். எனவே, எல்-லா-ரும் இதற்கு ஒத்-து-ழைப்பு தருவர்,'' என்றார். ஐகோர்ட்டில் முறையீடு : மருத்துவ படிப்புக்கான நுழைவு தகுதி தேர்வு, 'நீட்'க்கு விலக்கு அளிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நேற்று முறையிடப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' கூடியதும், மூத்த வழக்கறிஞர் விஜயன், ''கடந்த ஆண்டில் விலக்கு அளிக்கப்பட்டது போல், இந்த ஆண்டும், 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்; இது குறித்து தாக்கல் செய்யும் மனுவை, அவசரமாக விசாரிக்க வேண்டும்,'' என்றார். மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, ''உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் பதவி காலம், 30ல் முடிகிறது; எனவே, அது தொடர்பான வழக்கையும் விசாரிக்க வேண்டும்,'' என்றார். இது குறித்து, மனுக்கள் தாக்கல் செய்யும் பட்சத்தில், அதை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக, முதல் பெஞ்ச் தெரிவித்தது.

பிளஸ் 1க்கு 'அட்மிஷன் கவுன்சிலிங்' : பள்ளிக்கல்வியின் அடுத்த அதிரடி


இன்ஜி., - மருத்துவ கல்லுாரிகள் போன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மதிப்பெண் அடிப்படையில், விரும்பிய பாடப்பிரிவில் சேர, பிளஸ் 1 வகுப்புக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங் முறை கொண்டு வரப்படுகிறது. தமிழக பள்ளிக் கல்வித் துறையில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் கூட்டணி, பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது.

பொதுத் தேர்வுகளுக்கான, ரேங்கிங் முறை ஒழிப்பு; பிளஸ் 1க்கு கட்டாய தேர்வு; பள்ளி திறக்கும் நாளிலேயே பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு உள்ளிட்ட, பல மாற்றங்களை அறிவித்துள்ளது.பாடத்திட்டத்தை மாற்ற புதிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட உள்ளது. நுழைவு மற்றும் போட்டி தேர்வுகளுக்கு பள்ளிகளில், சிறப்பு பயிற்சி அறிமுகமாகிறது. இந்த வரிசையில், பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கையில், கவுன்சிலிங் முறை அமலுக்கு வர உள்ளது; விரைவில் இதற்கான அறிவிப்பு ெவளியாகும். பள்ளிக்கல்வி அதிகாரிகள், இத்திட்டம் நடைமுறையில் உள்ள கேரளா சென்று, அது பற்றிய விபரங்களை சேகரித்து வந்துள்ளனர்.

இதன்படி, வரும் கல்வி ஆண்டில் ஒற்றை சாளர கவுன்சிலிங் முறை, அறிமுகமாகிறது. 10ம் வகுப்பில் மாணவர் பெறும் மதிப்பெண் அடிப்படையில், எந்தெந்த பாடப்பிரிவில் சேர வேண்டும் என்பதற்கு விதிகள் உருவாக்கப்படும்.இன்ஜி., மற்றும் மருத்துவ கல்லுாரிகள் போன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளின், பிளஸ் 1 இடங்கள் மற்றும் பாடப்பிரிவுகள் பட்டியலிடப்படும். ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற்று, மதிப்பெண் அடிப்படையில், பாடப்பிரிவு ஒதுக்கீட்டு பட்டியல் தயாரிக்கப்படும்.

இதில், மாணவர் எந்த பள்ளியில் சேர விரும்புகிறாரோ, அந்த பள்ளியில் மதிப்பெண் அடிப்படையில் சேரலாம். தனியார் பள்ளிகள், 50 சதவீத இடங்களை, நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க வழி வகை செய்யப்படும்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.