இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, May 15, 2017

பிளஸ் 1ல் பொதுத்தேர்வு கட்டாயம் : அண்ணா பல்கலை அரசுக்கு பரிந்துரை


உயர் கல்வியின் தரத்தை முன்னேற்ற, பிளஸ் 1 வகுப்பில், பொதுத் தேர்வை கட்டாயமாக்க வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறைக்கு, அண்ணா பல்கலை பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில், 2006ல் அமலுக்கு வந்த, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை, 2011ல், கட்டாயம் மாற்றியிருக்க வேண்டும்; தமிழக அரசு மாற்றவில்லை. அதேநேரம், பொதுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெறும், தனியார் பள்ளி மாணவர்கள், பள்ளிகளின் விபரங்களை வெளியிடுவதில், தேர்வுத்துறை அதிக அக்கறை காட்டியது. எனவே, பதக்கம், பரிசு பெற விரும்பி, பெரும்பாலான தனியார் பள்ளிகள், பிளஸ் 1லும், பிளஸ் 2 பாடத்தை நடத்தின. இரண்டு ஆண்டுகளாக அதே பாடத்தை நடத்தியதால், பிளஸ் 2 தேர்வில், அப்பள்ளிகளின் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றனர்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் படித்த பள்ளிகளில் சேர, கடும் போட்டி ஏற்பட்டு, நன்கொடை கட்டணம், பல மடங்கு உயர்ந்து விட்டது. இப்படி அதிக மதிப் பெண் பெற்று, இன்ஜி., மருத்துவம், அறிவியல் போன்ற உயர் கல்வியில் சேர்ந்த மாணவர்கள், முதல், 'செமஸ்டர்' தேர்விலேயே, பல பாடங்களில் தோல்வியுற்றனர். அதில், பிளஸ் 2வில்,200க்கு,200 'கட் ஆப்' எடுத்தவர்களும் அதிகம் இருந்தனர்.அதனால் அதிர்ச்சி அடைந்த, அண்ணா பல்கலை பேராசிரியர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்தில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மாதிரி தேர்வு வைத்தனர். அதில், பிளஸ் 1 அடிப்படை பாடங்களுக்கே, பதில் அளிக்க முடியாமல் மாணவர்கள் திணறினர். விசாரணையில், பெரும்பாலான மாணவர்கள், தங்கள் பள்ளிகளில், பிளஸ் 1 பாடம் நடத்தப்படவில்லை என, வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த மோசமான நிலை குறித்து, அண்ணா பல்கலை பேராசிரியர்கள், பல்கலையின் கல்வி கவுன்சில் மற்றும் துறை ரீதியிலான பேராசிரியர்கள் இணைந்து, ஆலோசனை நடத்தி உள்ளனர்.

இதன் முடிவில், உயர் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்றால், பிளஸ் 1 வகுப்பில் கட்டாயம் பொதுத் தேர்வு வைத்து, மாணவர்களின் தேர்ச்சியை முடிவு செய்ய வேண்டும் என, தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை, அண்ணா பல்கலை, பள்ளிக் கல்வித் துறைக்கு, பரிந்துரையாக அனுப்பி உள்ளது. இதையடுத்து, பிளஸ் 1ல் பொதுத் தேர்வை கட்டாயம் ஆக்கும் முன்னேற்பாடுகளை, பள்ளிக் கல்வித் துறை துவக்கி உள்ளது.

பரிந்துரைகள் என்ன? :

● மாணவர்களிடம், பேராசிரியர்கள் நடத்திய விசாரணையில், பெரும்பாலான மாணவர்கள், தங்களுக்கு, பிளஸ் 1 பாடம் நடத்தாமல், நேரடியாக, பிளஸ் 2 பாடம் நடத்தப்பட்டதாக கூறினர். அவர்களுக்கு கணிதத்தில், அடிப்படை பாடம் தெரியாததால், இன்ஜி.,யில் மிகவும் கஷ்டப்படுகின்றனர்

● உயர் கல்வியில், குறிப்பாக, இன்ஜி., படிக்க, பிளஸ் 1 பாடங்களை கட்டாயம் படித்திருக்க வேண்டும். கணிதத் தேர்வில், பிளஸ் 1 பாடங்களை வைத்தே, உயர் கல்வியின் பாடங்களே அமைந்துள்ளன

● அண்ணா பல்கலையின் பிரிவு கல்லுாரிகளில், பிளஸ் 2வில், 'டாப் ரேங்க்' வரும் மாணவர்கள் சேர்கின்றனர். ஆனால் அவர்களே, இன்ஜி., முதல் பருவத் தேர்வில் தேர்ச்சி பெறுவதில்லை

● இந்த நிலையை மாற்ற, பள்ளிக் கல்வியில், பிளஸ் 1 வகுப்புக்கு கட்டாயமாக, பொதுத் தேர்வு வைக்க வேண்டும். பிளஸ் 1 மதிப்பெண்களையும், உயர் கல்வியில் சேர்வதற்கான, 'கட் ஆப்' மதிப்பெண்ணாக வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

38 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி/ தொடக்ககல்வி அதிகாரிகளாக பதிவி உயர்வு

Click below

https://app.box.com/s/md2rpyntfjcewre5xu46ikxriznm465s

மாவட்டக் கல்வி அலுவலர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

*நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்ந்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆறு வாரத்திற்கு கலந்தாய்வு நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது-JUDGEMENT COPY


Sunday, May 14, 2017

இன்றைய தி இந்து இப்படிக்கு இவர்கள் பகுதியில் என் பதிவு(15-5-17)

மாணவர் மாற்று சான்றிதழ் 'டிஜிட்டல்' மயமாகிறது


பிளஸ் 2 தேர்வில், 'ரேங்கிங்' முறை ரத்து நடவடிக்கையை தொடர்ந்து, அடுத்த அதிரடியாக, அனைத்து பள்ளிகளிலும், இனி மாற்று சான்றிதழை, 'டிஜிட்டல்' ஆவணமாக மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், பள்ளிகளில் மாணவர்களின் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் என அனைத்தும், டிஜிட்டல் மயமாக உள்ளது.

மாணவர்கள், ஒரு பள்ளியிலிருந்து மாற்றலாகி சென்றால், அவர்கள் சேரும் பள்ளிக்கே, ஆன்லைனில் மாற்று சான்றிதழை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், சான்றிதழின் உண்மைத்தன்மையை, பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், மணிக்கணக்கில், சான்றிதழ்களை தேட வேண்டியதும் இல்லை.

சான்றிதழ்கள் காணாமல் போகும் பிரச்னைக்கும், முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த விபரங்களும், அந்த பள்ளிகளில், டிஜிட்டல் மயமாகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முன்னுரிமை படலடியல் வெளியீடு.

Saturday, May 13, 2017

அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம் பிளஸ் 2 தேர்வில் கிரேடு முறை இல்லை


மேல்நிலை பொதுத் தேர்வில் எவ்வித கிரேடு முறையும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்ச் 2017ல் நடைபெற்ற மேல்நிலைத் தேர்வின் முடிவுகள் கடந்த 12ம்தேதி அன்று அரசு தேர்வுத் துறையால் வெளியிடப்பட்டது.

அன்றைய தினம் தேர்வு முடிவுகள் தொடர்பான பள்ளி விபரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கை ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. அதில், மாணவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களை 9 பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் இடம்பெற்ற மாணவர் மற்றும் மாணவியர் எண்ணிக்கை குறித்தான புள்ளி விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏ முதல் ஐ வரை என குறிப்பிடப்பட்டுள்ள இப்புள்ளி விபரத்தை பல ஊடகங்கள் அரசு தேர்வுத் துறையால் கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ளது.

மாணவரின் மொத்த மதிப்பெண்களை புள்ளி விபர பகுப்பாய்விற்காக வகைப்படுத்தும் போது மதிப்பெண்களுக்கு அருகில் வரிசை எண்களை 1, 2, 3... எனக் குறிப்பிட்டால் குழப்பங்கள் ஏற்படும் என்ற காரணத்தால் ஆங்கில அகர வரிசையில் ஏ முதல் ஐ வரை என குறிப்பிட்டுள்ளதே தவிர இக்குறியீடுகள் கிரேடு முறையினை குறிப்பிடுபவை அல்ல.

மாணாக்கருக்கு வழங்கப்பட உள்ள மதிப்பெண் சான்றிதழ்களில், கடந்த ஆண்டுகளை போலவே இவ்வாண்டும் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே பதிந்து வழங்கப்படும். எவ்வித கிரேடும் மதிப்பெண் சான்றிதழ்களில் இடம்பெறாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ காப்பீடு திட்டத்துடன் ஆதாரை இணைக்க புதிய 'ஆப்'


மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன், ஆதாரை இணைக்க, புதிய, 'ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் சுகாதாரத் துறையில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுகிறது. இதில், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, 'ஸ்டெம்செல்' மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட 1,016 வகை நோய்கள் மற்றும் பாதிப்புகளுக்கு நிவாரணம் பெற, அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது, 216 வகையான, சமீபத்திய மருத்துவ அறுவை சிகிச்சை மற்றும் பாதிப்புக்கான நிவாரணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன், ஆதார் விபரங்களை இணைக்கும் பணிகள், கிராமங்கள் தோறும் நடக்கின்றன. இதற்காக, திட்ட அலுவலர் நியமிக்கப்பட்டு, பணிகள் நடக்கின்றன. இருந்தாலும், 40 சதவீத இணைப்பு பணிகளே, தற்போது வரை நடந்துள்ளன. எனவே, இணைப்புப் பணிகளை எளிமையாக்கும் விதத்தில், பயனீட்டாளர்கள், தாங்களே மருத்துவ காப்பீட்டு விபரங்களுடன், ஆதார் விபரங்களை இணைத்துக் கொள்ளலாம் என, அரசு அறிவித்தது.

இதற்கு வசதியாக புதிய, 'ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திட்ட அலுவலர்கள் கூறியதாவது: பயனீட்டாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளோம். பயனீட்டாளர்கள், www.cmchistn.com என்ற இணையதளத்திற்கு சென்று, cmchis online என்ற இணைப்பை, 'க்ளிக்' செய்தால், 'ஆப்'ஐ பதிவிறக்கம் செய்யலாம். அதில், மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டையில் உள்ள, 22 இலக்க எண்ணை பதிவு செய்து, ஆதார் விபரங்களுடன், மருத்துவ காப்பீட்டு விபரங்களை தாங்களாகவே இணைத்து கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்

பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் நாளை முதல் கிடைக்கும்


பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், நாளை வெளியாகிறது. www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், நாளை முதல், மாணவர்களே பதிவிறக்கம் செய்யலாம்.

வரும், 17 முதல், மாணவர்களுக்கு, பள்ளியிலும்; தனித் தேர்வர்களுக்கு, தேர்வு மையத்திலும், தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும். இந்த ஆண்டு, மதிப்பெண் சான்றிதழில் ஆங்கிலத்துடன், தமிழிலும் மாணவர் பெயர் இடம் பெறும். தேர்வை சரியாக எழுதியும், மதிப்பெண் முழுமையாக கிடைக்கவில்லை என, சந்தேகம் ஏற்பட்டால், மாணவர்கள் மறுகூட்டலுக்கும், மறுமதிப்பீடுக்கும் விண்ணப்பிக்கலாம்.

மறுகூட்டல் மட்டும் என்றால், மறுகூட்டலுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீடும் தேவை என்றால், விடைத்தாள் நகலை முதலில் பெற வேண்டும்; அதை ஆய்வு செய்த பின், மறுகூட்டலா, மறுமதிப்பீடா என்பதை முடிவு செய்யலாம். இதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று முன்தினம் துவங்கியது; நாளை முடிகிறது. மாணவர்கள், பள்ளியிலும், தனித்தேர்வர்கள், தேர்வு மையத்திலும், அதற்குரிய கட்டணம் செலுத்தி, விண்ணப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

👆பள்ளிக்கல்வி - அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் சார்ந்த இடங்களில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டினை தடை செய்ய அரசு உத்தரவு

Friday, May 12, 2017

அரசு பள்ளிகளில் சிபிஎஸ்சி க்கு இணையான பாடத்திட்டம்


பிளஸ்–2 பொதுத்தேர்வில் ரேங்க் அடிப்படையில் இல்லாமல் கிரேடு முறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறோம். அதன் முன்னோட்டமாகதான் இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முறையாக பிளஸ்–2 தேர்வு முடிவு 8 லட்சத்து 72 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு செல்போன் மூலம் வழங்கப்பட்டு உள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமையும். ரேங்க் முறை இருந்தபோது பெரும்பாலான கல்லூரிகள் அதை பயன்படுத்தி மாணவர்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலித்தன.

ஒரு மதிப்பெண் குறைந்து இருந்தாலும் அந்த மாணவனுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும். அத்துடன் அவனுடைய வீட்டில் அது குறித்து கேட்கும் போது மனஅழுத்தம் ஏற்பட்டு விடும். இதை மனதில் வைத்துதான் இந்த கிரேடு முறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை அனைவரும் வரவேற்று உள்ளனர்.

புதிய பாடத்திட்டம்

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டு, அது ஜனாதிபதி கையில் கிடைப்பதற்கு சில நாட்கள் ஆகி விடும். உடனடியாக அதை செய்ய முடியாது.

நீட் தேர்வுக்கு நமது மாநிலத்தை சேர்ந்த மாணவ–மாணவிகள் தகுதியாகுவதற்கு ஏற்றவாறு புதிய பாடத்திட்டத்தை கொண்டு வர கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்களிடம் கருத்து கேட்கப்பட்டு உள்ளது. அந்த கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, வரும் கல்வி மானிய கோரிக்கையின்போது சட்டசபை மூலம் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.

மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு நிகராக புதிய பாடத் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இந்த பாடத்திட்டத்தின் மூலம் அனைத்து மாணவர்களும் நீட் தேர்வுக்கு தயாராக வாய்ப்பாக இருக்கும்.

கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வர அரசு தயார்'


கல்வித்துறையில், யார், எந்த கருத்துக்களை கூறினாலும், அதையேற்று, மாற்றங்களை கொண்டு வர, தமிழக அரசு தயாராக உள்ளது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:

தமிழக அரசு, கல்வித்துறையில், பல திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக, செயல்படுத்தி வருகிறது. அதனால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பிளஸ் 2வில், சென்ற ஆண்டை விட, 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில், ஒட்டு மொத்த மாணவர்கள் தேர்ச்சி, 92.1 சதவீதம் என்பது, தமிழக வரலாற்றில் முதன்முறை. தமிழக சட்டசபை, விரைவில் கூட உள்ளது. அப்போது, ஸ்டாலின் அவரது கருத்துக்களை கூறலாம்.

கல்வித்துறையில், யார் எந்த கருத்துக்களை கூறினாலும், அதையேற்று, பல்வேறு மாற்றங்களை கொண்டு வர, அரசு தயாராக உள்ளது. கல்வித்துறை மானிய கோரிக்கையில், பல்வேறு திட்டங்களை அறிவிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அ.வெண்ணிலா அவர்களின் பதிவு



கவிஞர் அ.வெண்ணிலா

அரசுப் பள்ளியில் சேர்த்து குழந்தைகளின் எதிர்காலத்தை வீணாக்குகிறோம் என்று அனுதாபப்பட்ட நண்பர்களுக்கு, எங்கள் பிள்ளைகள் நல்ல பதிலையே கொடுத்திருக்கிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்திருக்கிறார்கள் எங்களுடைய இரட்டையர் செல்லங்கள்...(முதல் இடம், இரண்டாம் இடம் அறிவிக்கக்கூடாது என்றாலும், முதல் இடமும் இரண்டாம் இடமும் இருக்கத்தானே செய்கிறது...🙂🙂

மு.வெ.நிலாபாரதி 1169
மு.வெ.அன்புபாரதி 1165

Thursday, May 11, 2017

கிரேடு முறை அறிமுகம்



மாவட்ட வாரியாக- பாட வாரியாக முன்னிலை பெற்றவர்கள்


தேர்ச்சி-கிரேடு முறையில்

மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம்



01. கன்னியாகுமரி - 95.75
02. திருநெல்வேலி - 96.08
03. தூத்துக்குடி- 96.44
04. ராமநாதபுரம்- 96.77
05.சிவகங்கை-96.18
06. விருதுநகர்-97.85
07. தேனி 95.93
08 மதுரை- 93.61
09.திண்டுக்கல் -92.80
10. ஊட்டி-92.06
11. திருப்பூர்-96.05
12. கோவை-95.83
13. ஈரோடு-96.69
14. சேலம் -92.89
15. நாமக்கல்-96.40
16.கிருஷ்ணகிரி- 88.02
17. தர்மபுரி-92.23
18. புதுக்கோட்டை-92.16
19. கரூர்-94.96
20 அரியலூர்- 88.48
21. பெரம்பலூர்-93.54
22. திருச்சி-95.50
23. நாகை- 88.08
24. திருவாரூர்- 88.77
25. தஞ்சாவூர்- 92.47
26.விழுப்புரம்-86.36
27. கடலூர்-84.86
28. திருவண்ணாமலை-91.84
29. வேலூர்-84.99
30. காஞ்சிபுரம்-88.85
31. திருவள்ளூர்- 87.57
32. சென்னை-92.99

DTED exam time table



தொடக்க கல்வி பட்டயத் தேர்வு (டி.டி.எட்)க்கான அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டது. அதன்படி, ஜூன் 28ம் தேதி இரண்டாம் ஆண்டு தேர்வும், 29ம் தேதி முதலாண்டு தேர்வும் தொடங்குகின்றன. தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடக்கிறது.

எஸ்.பி.ஐ., 'மொபைல் பேங்கிங்' சேவை கட்டணம் உயர்கிறது ?


பாரத ஸ்டேட் வங்கியின், 'மொபைல் பேங்கிங்' சேவையான, எஸ்.பி.ஐ., - 'பட்டி'யில் பணம் சேமித்து வைத்திருந்தால், அதை ஏ.டி.எம்.,க ளில் எடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு, 25 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.

எஸ்.பி.ஐ., என்ற பாரத ஸ்டேட் வங்கி, ஏப்ரல் முதல், வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால், வாடிக்கை யாளர்களுக்கு, அபராதம் விதித்து வருகிறது. அதன்படி, மாநகர பகுதிகளில், 5,000 ரூபாய்; நகரம், 2,000 மற்றும் கிராமம், 1,000 ரூபாய் இருப்பு வைத்திருக்க வேண்டும்; அது குறைந் தால், குறைந்தபட்சம், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. திருத்தம் இந்நிலையில், நேற்று மற்றொரு அறிவிப்பாக, அதன், மொபைல் போன் வழி வங்கி பரிவர்த்தனை யான, எஸ்.பி.ஐ., - 'பட்டி'யின், பயன்பாட் டில் சில திருத்தங்களை செய்துள்ளது.

இதில், 'பிரீபெய்டு கார்டு' போல் முன்கூட்டியே, வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மாற்றி, சேமித்து வைத்துக் கொள்ளலாம். பின், அதில் உள்ள தொகையால், பொருட்கள் வாங்கவோ அல்லது வேறு நபரின் கணக்குக்கு பணம் அனுப்பவோ முடியும். இந்நிலையில், அந்த சேவையில், ஜூன் முதல் மாற்றங்கள் செய்யப் போவதாக, எஸ்.பி.ஐ., - வங்கியியல் பிரிவு மேலாண் இயக்குனர், ரஜனீஷ் குமார் தெரிவித்துள்ளார். பரிவர்த்தனை கட்டணம் அதன்படி, எஸ்.பி.ஐ., - 'பட்டி'யில் பணம் இருந்தால், அதை, ஏ.டி.எம்., மையங்களில் எடுத்துக் கொள்ள லாம். அவ்வாறு, பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும், 25 ரூபாய் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும்.

இதுதவிர, வங்கியால் நியமிக்கப் பட உள்ள வர்த்தக விரிவாக்க அலுவலர் களிடம் பணம் கொடுத்து, அதை அவர்கள், எஸ்.பி.ஐ., - 'பட்டி'யின் கணக்கில் வரவு வைக்கும் நடைமுறை யும் அறிமுகமாகிறது. அவர்கள் மூலமாக, 1,000 ரூபாய் வரவு வைத்தால், அதற்கு, 2 ரூபாய் முதல், 8 ரூபாய் வரை, சேவை கட்டணம் மற்றும் சேவை வரி விதிக்கப்படும். மேலும், அந்த அலுவலர்கள் மூலமாக, 'பட்டி' யில் இருந்து, 2,000 ரூபாய் வரை, ரொக்கமாக பெற விரும்பினால், அந்த தொகைக்கு, 2.5 சதவீதம் பரிவர்த்தனை கட்டணமும், கூடுத லாக சேவை வரியும் உண்டு. குறைந்தபட்சம், 6 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.

அதிர்ச்சி: இந்த அறிவிப்பு, 'டிஜிட்டல்' பரிவர்த்த னை க்கு மாறிய ஏராளமான வாடிக்கையாளர் களுக்குஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடை யில், ஏ.டி.எம்., மையங்களில் இருந்து, பணம் எடுக்கும் ஒவ்வொரு முறை யும், 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என, எஸ்.பி.ஐ., அறிவித்ததாக, நேற்று காலை செய்தி வெளி யானது. அதனால், கேரளா உள்ளிட்ட சில மாநிலங் களில், எஸ்.பி.ஐ.,க்கு எதிராக ஆர்ப் பாட்டங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து, அந்த செய்தி தவறானது என, எஸ்.பி.ஐ., வங்கி மறுப்பு தெரிவித்தது.

1 லட்சம் பேர் ஓட்டம்! பாரத ஸ்டேட் வங்கி, ஏப்ரல், 1ல், சேமிப்பு கணக் கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பற்றி அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, தமிழ கத்தில் மட்டும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், இந்த வங்கியில் வைத்தி ருந்த கணக்குகளை முடித்துக் கொண்டனர்.

பான்' கார்டுடன் 'ஆதார்' இணைப்புக்கு புதிய வசதி


வருமான வரித்துறை வழங்கும், 'பான்' கார்டுடன், 'ஆதார்' எண்ணை இணைக்க, புதிய மற்றும் எளிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிதி மசோதாவில் கொண்டு வரப்பட்ட திருத்தத் தின்படி, வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாய மாக்கப்பட்டு உள்ளது.

மேலும்,ஜூலை, 1 முதல், பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆதார் எண்ணை குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதுவரை, வருமான வரித்துறை வழங்கும் பான் கார்டு விபரங்களுடன், 1.18 கோடி பேர், தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். வரு மானவரி கணக்கு தாக்கல் செய்யும் நட வடிக்கை துவங்கியுள்ளதால், மீதமுள்ளவர்களும் தங்கள் விபரங்களை தாக்கல் செய்வதற்காக, புதிய, எளிமையான வசதியை, வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து, வருமான வரித் துறை வெளியிட்டு உள்ள செய்தி: வருமான வரித்துறையின் இணையதளத்தில், தங்கள்பான் கார்டு, ஆதார் எண், ஆதாரில் குறிப் பிடப்பிட்டுள்ள பெயர் ஆகியவற்றை பதிவு செய் தால் போதும். உடனடியாக, பான் கார்டுடன், ஆதார் விபரங்கள் இணைக்கப்பட்டுவிடும். ஆதார் விபரங்களில் சிறு தவறுகள் இருந்தால், ஒரு முறை மட்டும் பதிவு செய்யும் ரகசிய குறியீட்டு எண் அனுப்பப் படும். அதை பதிவு செய்தால், இணைக்கப்பட்டு விடும்.

பான் கார்டு, ஆதார் ஆகிய இரண்டிலுமே, ஒரே பாலினம் மற்றும் பிறந்த தேதி குறிப்பிடப்பட்டி ருக்கிறதா என்பதை மட்டும் சரி பார்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை கைவிடல்


ப்ளஸ் 2 முடிவுகளில் அறிவிப்பில் புதுமை

+2 பொதுத்தேர்வில் முதல் 3 இடத்தை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்படாது; மதிப்பெண்கள் மட்டுமே வெளியாகும் -

+2 பொதுத்தேர்வில் முதல் 3 இடத்தை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்படாது; மதிப்பெண்கள் மட்டுமே வெளியாகும்

#பாடவாரியாக முதல் மதிப்பெண் பெறுபவர்கள் பெயர்கள் வெளியிடப்படாது; மதிப்பெண் மட்டும் வெளியிடப்படும்

அமைச்சர் செங்கோட்டையன்

Wednesday, May 10, 2017

750pp ஊதிய முரண்பாடு கட்டுரை

Click below

https://app.box.com/s/oqulke84jpsmylou13kc0fnn8h0d2ox9

டி.டிஎட் தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம்


தொடக்க கல்வி பட்டயத் தேர்வு என்னும் டி.டிஎட் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் 12ம் தேதி முதல் இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தொடக்க கல்வி பட்டயத் தேர்வு (டி.டிஎட்) தேர்வு வரும் ஜூன் மாதம் நடக்க உள்ளது. இந்த தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

மேலும், அதை பூர்த்தி செய்து ஏற்கனவே தேர்வு எழுதிய மதிப்பெண் பட்டியல் நகலை கண்டிப்பாக இணைத்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கணினி போட்டோ கருவிகள் மூலம் போட்டோ எடுத்து விண்ணப்பங்களை அதே இடத்தில் பதிவேற்றம் செய்து தேர்வுக் கட்டணத்தையும் அதே இடத்தில் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, மதிப்பெண் சான்று (முதல் ஆண்டு) ரூ.100, இரண்டாம் ஆண்டுக்கு ரூ.100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும்.