இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, May 08, 2017

J.D&CEO மாற்றம்

14 இணை இயக்குநர்,25 முதன்மை கல்வி அலுவலர் மாற்றம்

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 14 இணை இயக்குநர்கள், 25 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அதே நிலையில் உள்ள அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 4 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இடைக்காலமாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் பிறப்பித்துள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்ட இணை இயக்குநர்கள் விவரம் (ஏற்கெனவே வகித்த பதவி அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது):
1. என்.லதா- இணை இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், சென்னை. (இணை இயக்குநர், மேல்நிலைக் கல்வி, பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை).
2. சி.உஷாராணி- இணை இயக்குநர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், மாநிலத் திட்ட இயக்ககம்).
3. வை.பாலமுருகன்- இணை இயக்குநர் 1, மாநிலத் திட்ட இயக்ககம், அனைவருக்கும் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், மாநிலக் கல்வி ஆராய்ச்சி-பயிற்சி நிறுவனம், சென்னை).
4. எஸ்.சேதுவர்மா- இணை இயக்குநர் (மேல்நிலை), அரசுத் தேர்வு இயக்ககம், சென்னை (இணை இயக்குநர், பணியாளர் தொகுதி, பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை)
5. எஸ்.உமா- இணை இயக்குநர், மேல்நிலைக்கல்வி, பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், மேல்நிலை, அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை)
6. கே.சசிகலா- இணை இயக்குநர், உதவி பெறுபவை, தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், நிர்வாகம், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை).
7. சி.செல்வராஜ்- இணை இயக்குநர், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், சென்னை. (கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை).
8. எஸ்.சுகன்யா- இணை இயக்குநர், தொழிற்கல்வி, பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், உதவி பெறுபவை, தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை).
9. எஸ்.நாகராஜமுருகன்- இணை இயக்குநர், நிர்வாகம், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை).
10. கே.ஸ்ரீதேவி- இணை இயக்குநர்- 2, மாநிலத் திட்ட இயக்ககம், அனைவருக்கும் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம், சென்னை).
11. ஆர்.பாஸ்கர சேதுபதி- இணை இயக்குநர், பணியாளர் தொகுதி, பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், தொழிற்கல்வி,பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை).
12. கே.செல்வகுமார்- இணை இயக்குநர், நாட்டு நலப்பணித் திட்டம், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், சென்னை).
13. பி.பொன்னையா- இணை இயக்குநர்- 3, மாநிலத் திட்ட இயக்ககம், அனைவருக்கும் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், நாட்டு நலப்பணித் திட்டம், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை).
14. நா.ஆனந்தி- இணை இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை. (இணை இயக்குநர், அனைவருக்கும் கல்வித் திட்டம், சென்னை).
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (பழைய பணியிடம் அடைப்புக்குறிக்குள் அளிக்கப்பட்டுள்ளது):
1. ஆர்.சுவாமிநாதன்- முதன்மைக் கல்வி அலுவலர், திருவாரூர் (திருநெல்வேலி).
2. எம்.இராமகிருஷ்ணன்- முதன்மைக் கல்வி அலுவலர், திருச்சி (தூத்துக்குடி).
3. ச.செந்தில்வேல்முருகன்- முதன்மைக் கல்வி அலுவலர், புதுக்கோட்டை (சிவகங்கை).
4. அ.புகழேந்தி- முதன்மைக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி, (விருதுநகர்).
5. எம்.வாசு- துணை இயக்குநர் (மாற்றுத்திறனாளிகள்), பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை (தேனி).
6. ஜே.ஆஞ்சலோ இருதயசாமி- முதன்மைக் கல்வி அலுவலர், விழுப்புரம் (மதுரை).
7. எம்.கே.சி.சுபாஷினி- முதன்மைக் கல்வி அலுவலர், தஞ்சாவூர் (திண்டுக்கல்).
8. து.கணேஷ்மூர்த்தி- முதன்மைக் கல்விஅலுவலர், கோவை (நீலகிரி).
9. நா.அருள்முருகன்- துணை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், சென்னை (கோவை).
10. ஆர்.முருகன்- முதன்மைக் கல்வி அலுவலர், கடலூர் (திருப்பூர்).
11. பெ.அய்யண்ணன்- முதன்மைக் கல்வி அலுவலர், கரூர் (ஈரோடு).
12. ச.கோபிதாஸ்- முதன்மைக் கல்வி அலுவலர், திண்டுக்கல் (நாமக்கல்).
13. கே.பி.மகேஸ்வரி- முதன்மைக் கல்வி அலுவலர், சிவகங்கை (தருமபுரி).
14. எஸ்.சாந்தி- முதன்மைக் கல்வி அலுவலர், திருப்பூர் (புதுக்கோட்டை).
15. தி.அருள்மொழிதேவி- முதன்மைக் கல்வி அலுவலர், பெரம்பலூர் (கரூர்).
16. என்.மாரிமுத்து- முதன்மைக் கல்வி அலுவலர், மதுரை (அரியலூர்).
17. க.முனுசாமி- துணை இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை (பெரம்பலூர்).
18. மு.இராமசாமி- முதன்மைக் கல்வி அலுவலர், தருமபுரி (திருச்சி).
19. ஆர்.திருவளர்ச்செல்வி- முதன்மைக் கல்வி அலுவலர், காஞ்சிபுரம், (தஞ்சாவூர்).
20. ச. மார்ஸ்- முதன்மைக் கல்வி அலுவலர், சென்னை (விழுப்புரம்).
21. ர.பாலமுரளி- முதன்மைக் கல்வி அலுவலர், ஈரோடு (கடலூர்).
22. ப.உஷா-முதன்மைக் கல்வி அலுவலர், நாமக்கல் (காஞ்சிபுரம்).
23. ஆ.அனிதா- முதன்மைக் கல்வி அலுவலர், தூத்துக்குடி (சென்னை).
24. ஏ.வசந்தி- முதன்மைக் கல்வி அலுவலர், தேனி (துணை இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம்).
25. கே.கணேசன்- துணை இயக்குநர், தொடக்க கல்வி இயக்ககம், சென்னை (பெற்றோர் ஆசிரியர் கழகச் செயலர், சென்னை).
இடைக்காலமாக பதவி உயர்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர்கள் (ஏற்கெனவே இருந்த பதவி அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது):
1. பா.பிரியதர்ஷினி- செயலாளர், பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை (மாவட்ட கல்வி அலுவலர், திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்).
2. கே.ஒளி- முதன்மைக் கல்வி அலுவலர், அரியலூர் (மாவட்ட வயது வந்தோர் கல்வி அலுவலர், விழுப்புரம்).
3. கே.பிச்சையப்பன்- முதன்மைக் கல்வி அலுவலர், நீலகிரி (மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர், கடலூர்).
4. டி.மனோகரன்- முதன்மைக் கல்வி அலுவலர், விருதுநகர் (மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்).

Transfer incharge J.D s



Sunday, May 07, 2017

பிளஸ் 2 தேர்வு முடிவு 'ரேங்கிங்' முறை மாற்றம்


பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், மாநில, மாவட்ட, 'ரேங்கிங்' முறையில், மாற்றம் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெறும், முதல் மூன்று மாணவர்கள், மாநில மற்றும் மாவட்ட வாரியாக, தர வரிசை பட்டியலில் இடம் பெறுவர். அவர்களுக்கு, அரசு சார்பில், பரிசு, சான்றிதழ், ஊக்கத் தொகை வழங்கப்படும்; தனியார் அமைப்புகளும், பாராட்டி பரிசு வழங்கும்.

தற்போது, தனியார் பள்ளி, அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் சேர்த்து, ஒரே பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில், பெரும்பாலும், தனியார் பள்ளி மாணவர்களே முன்னிலை பெறுகின்றனர். அரசு மற்றும் தமிழ் வழி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், பொதுத் தேர்வு, 'ரே ங்கிங்' முறையை மாற்ற, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இந்த ஆண்டு, பொதுத் தேர்வு முடிவை வெளியிடும் போது, 'ரேங்கிங்' முறையில், மாற்றம் கொண்டு வர, அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதாவது, ஆங்கில வழியில் படிக்கும், தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்களை, தனியாக தர வரிசைப்படுத்தவும், தமிழ் வழியிலும், அரசு பள்ளியிலும் படித்த மாணவர்களை, மாநில, 'ரேங்கிங்'கில் கொண்டு வரவும் திட்டமிட்டு உள்ளனர். தேர்வு முடிவு, மே, 12ல் வெளியாகும் போது, இது குறித்த அறிவிப்பு வெளியாகும். 'ரேங்கிங்' முறை மாற்றத்தால், அரசு பள்ளியில் படித்து, அதிக மதிப்பெண் எடுக்கும், பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் பரிசு, பதக்கங்களை பெற முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயிற்சிக்கு வர மறுக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்'


பள்ளிகளில் ஒழுங்காக பாடம் நடத்தாத, பயிற்சிக்கும் வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டங்கள் மூலம், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. ஆண்டுதோறும், வார விடுமுறை நாட்களில், இந்த பயிற்சி அளிக்கப்படும்.

இதன்படி, கணிதம், அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, இலவச உணவு, இருப்பிடத்துடன், குறிப்பிட்ட மாவட்டங்களில், ஐந்து நாள் பயிற்சி இன்று துவங்குகிறது. மாவட்ட வாரியாக, 55 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த பயிற்சியில், தானாக முன்வந்து பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோடை வெயில், தண்ணீர் தட்டுப்பாடு, பெண்களால் அலைய முடியாது என, பல காரணங்களை கூறி, 'பயிற்சிக்கு வர மாட்டோம்' என, பல ஆசிரியர்கள் அடம் பிடித்துள்ளனர். பயிற்சி திட்டத்தை கைவிடும்படி, ஆசிரியர்கள் சங்கங்கள் மூலம், அதிகாரிகளுக்கு நெருக்கடியும் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: அரசு பள்ளிகள் இருந்தால், ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கும். தரமான கல்வியை வழங்கினால் தான், அரசு பள்ளிகளும் இருக்கும். அதற்கு, ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி கள் அவசியம். அந்த பயிற்சியை, உணவு, இருப்பிடம், போக்குவரத்து செலவுடன், அரசே தருகிறது. தனியார் பள்ளிகளில், குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள், விடுப்பு நாட்களிலும், பள்ளிகளில் பணியாற்றுகின்றனர். தங்கள் சொந்த பணத்தில், வெளியே உள்ள மையங்களில் சிறப்பு பயிற்சி பெற்று, தரமான பாடம் நடத்துகின்றனர். ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்கள், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இடமாறுதல் போன்றவற்றில் மட்டுமே அக்கறையாக உள்ளனர்.

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள், 'பயிற்சிக்கும் வரமாட்டேன்; பாடம் நடத்தவும் மாட்டேன்' என, அடம் பிடிக்கக்கூடாது. அரசுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பள்ளிகளில் நவீன கழிப்பறை

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நவீன கழிப்பறைகள்

அரசுப் பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் கட்டித்தர உத்தரவிட்டுள்ளேன் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
வரும் ஜூன் முதல்வாரத்தில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்படுகின்றன.

அதையொட்டி, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் மதுரையில் நடந்தது. இந்த பயிற்சி வகுப்ப்புக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசும்போது, தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசுப் பள்ளிகளையும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்துவேன் எனக் கூறினார்.

மேலும், கிராமப்புற பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நவீன கழிப்பறைகளைக் கட்டித் தர ஏற்பாடு செய்வேன் என செங்கோட்டையன் கூறினார்.
தமிழக அரசுப்பள்ளிகளில்நவீன அக்ழிப்பறைகளைக் கட்டினாலும் அவற்றுக்கு நீர் வசதி செய்து தரப்படாத கரணத்தால் பெரும்பாலான் அபள்ளிகளில் கழிப்பறைகள மூடியே கிடக்கின்றன.
மேலும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய சில பள்ளிகள் மாணவர்களையே பயன்படுத்துகின்றன என்பது துய்ரம் நிறைந்த நடைமுறை.முழுமையான சுகாதரத்தை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நாளை முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது - மருத்துவ கல்வி சேர்க்கை செயலாளர் அறிவிப்பு.

#நாளை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது - பொது பிரிவினருக்கான கலந்தாய்வு மே 9-11ம் தேதிகளில் நடைபெறுகிறது.

மே 11-ம் தேதி மாலை எம்டிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு

மொத்தம் 762 இடங்களை நிரப்புவதற்கு, 1000 பேருக்கு கலந்தாய்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Saturday, May 06, 2017

இன்று நீட் தேர்வு

தமிழகம் உள்பட நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு 104 நகரங்களில் இன்று நடக்கிறது. அதற்காக, 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் நீட் ேதர்வுக்கு விலக்கு கோரி சட்டசபையில் பிப்ரவரி 1ம் ேததி மசோதா தாக்கல் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்காக 11 லட்சத்து 35,104 மாணவர்கள்  இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நாமக்கல், திருநெல்வேலி, வேலூரில் இந்த தேர்வு நடக்கிறது. நாடு முழுவதும் 104 நகரங்களில் 1,500க்கும் அதிகமான மையங்களில் தேர்வு நடக்கிறது.  தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, அசாமி, ஒரியா ஆகிய 10 மொழிகளில் இந்த தேர்வை மாணவர்கள் எழுதலாம். இந்த தேர்வு முடிவுகளை ஜூன் 8ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தேர்வு முடிந்த சில நாட்களில் மாணவர்களின் ஓஎம்ஆர் சீட், விடைத் தொகுப்பு (ஆன்சர் கீ) வெளியிடப்படும். இந்த தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மத்திய அரசு 15 சதவீத இடங்களுக்கும், மாநில அரசுகளின் மருத்துவ கல்வி இயக்ககங்கள் 85 சதவீத இடங்களுக்கும் கவுன்சலிங் நடத்தி மாணவர் சேர்க்கை நடத்துவார்கள்.

எது முக்கியம்: நீட் தேர்வின்போது பின்பற்ற வேண்டியது குறித்து, சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: மாணவர்கள் காலை 9.30 மணிக்கு பின் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை 9.45 மணிக்கு தேர்வு புத்தகம் வழங்கப்படும்.  காலை 9.55 மணிக்கு சீலிடப்பட்ட தேர்வு புத்தகத்தை மாணவர்கள் திறக்கலாம். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடக்கும். விடைத்தாளை கருப்பு அல்லது நீல நிற பால்பாயின்ட் பேனா பயன்படுத்தி மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும்.

ஹால்டிக்கெட்டில் தவறான புகைப்படம், ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்து பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் மாணவர்கள் தங்களின் ஆதார் அட்டை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை உடன் எடுத்து வர வேண்டும்.

கட்டுப்பாடுகள்
மாணவர்கள் அரைக்கை சட்டை, முழுக் கால் சட்டை (பேன்ட்) அணிந்து வர வேண்டும்.  மாணவிகள் சுடிதார் அணிந்து வர வேண்டும். காதணிகள், மூக்குத்தி, நகைகள் அணிந்து வரக்கூடாது. பெல்ட், ஷூ, வாட்ச் அணிந்து வரக்கூடாது. செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும். உரிய சோதனைக்கு பின்னரே எல்லோரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

720 மதிப்பெண்
மத்திய அரசு பாடத்திட்டத்தின்கீழ்  இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து 180  கேள்விகள் கேட்கப்படும். 720 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு  நடத்தப்படுகிறது. தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.

சென்னை மையங்கள்
சென்னையில் கேந்திர வித்யாலயா பள்ளிகள்,   அண்ணா நகர் எஸ்பிஓஏ பள்ளி, சென்னை பப்ளிக் ஸ்கூல், சின்மயா வித்யாலயா,   சேத்துபட்டு மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி ஸ்கூல் உள்பட 50க்கும்  அதிகமான மையங்களில் தேர்வு நடக்கிறது.

கட்டாயம் எடுத்துசெல்ல வேண்டியபொருட்கள்
1  ஹால்டிக்கெட்
2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
3  தபால் அட்டை அளவிலான புகைப்படம்
4  கருப்பு அல்லது நீல நிற பால் பாயின்ட் பேனா

பிரிட்டன் பாட திட்டத்துக்கு நிகராக தமிழக பள்ளிக்கல்வி 'சிலபஸ்'


பிரிட்டன் பள்ளிகளுக்கு நிகரான பாடத்திட்டம், தமிழகத்தில் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக, துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் இடம் பெறும் குழு அமைக்கப்படுகிறது. தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 2012ல், பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, 2006ல் அமலுக்கு வந்தது. பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, 15 ஆண்டுகளாகியும், தமிழக அரசு அதை மாற்றவில்லை. அதனால், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவு தேர்வுகளில், சி.பி.எஸ்.இ., மாணவர்களுடன் போட்டி போட முடியாமல், தமிழக மாணவர்கள் தவிக்கின்றனர்.

இந்நிலையில், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், துறையை முழுமையாக சீரமைக்க, செயலர் உதயசந்திரனுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனால், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கத்தினர், உயர் கல்வி துறையினரின் ஆலோசனைகளை பெற்று, உதயசந்திரன் பல சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். முக்கியமாக, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்புக்கும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 2வுக்கும், புதிய பாடத்திட்டம் வரவுள்ளது. இதற்காக, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், ஐ.சி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி சான்றிதழ் படிப்பு, லண்டன், 'கேம்பிரிட்ஜ்' பாடத்திட்டம் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நம் நாட்டில், பள்ளிக்கல்வியில், தரமான பாடத்திட்டம் உடைய, மஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு, தமிழக பள்ளிக்கல்வி அதிகாரிகள் சென்று ஆய்வு செய்துள்ளனர். அங்குள்ள பாடத்திட்டங்களும், தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தேசிய கல்வியியல் வரைவு அறிக்கை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பாடத்திட்டம் ஆகியவற்றுடன், பிரிட்டனின் பள்ளிப்படிப்பு பாடத்திட்டத்தையும் இணைத்து, ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதற்காக, பல்கலைகளின் தற்போதைய மற்றும் முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், ஆங்கில புலமை பெற்ற பேராசிரியைகள், ஐ.ஐ.டி., ஆசிரியர்கள் ஆகியோர் இடம் பெறும் குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக்குழு, மூன்று மாதங்களுக்குள் பாடத்திட்டத்தை இறுதி செய்து வழங்கும். அதன்பின், சர்வதேச தரத்தில் பாட புத்தகங்களை வடிவமைக்க, பள்ளிக்கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் கூட்டு பிரார்த்தனை


அனைத்து பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டு முதல், தினமும் கூட்டு பிரார்த்தனை நடத்த, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில், தினமும் காலையில், பிரார்த்தனை கூட்டம் நடப்பது வழக்கம். 2011 முதல், இந்த முறை கைவிடப்பட்டது. பின், வாரம் ஒரு நாள் மட்டும் கூட்டு பிரார்த்தனை நடந்தது.

பல பள்ளிகளில், வகுப்பு பிரார்த்தனையே நடத்தப்படவில்லை. தனியார் பள்ளிகளில், தினமும் வகுப்பறையிலும், மைதானத்திலும் பிரார்த்தனை நடத்துகின்றனர். அதனால், மீண்டும் அரசு பள்ளிகளிலும், தினசரி பிரார்த்தனை நடத்த, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். வரும் கல்வி ஆண்டு முதல், இதை அமல்படுத்த வேண்டும் என, பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை செயலர் அறிவுறுத்தி உள்ளார்.

3-5-17 ல் நடைபெற்ற மாறுதல் கலந்தாய்வு கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்


Friday, May 05, 2017

'நீட்' தேர்வு விலக்குக் கோரி ஆர்ப்பாட்டம்


'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி சென்னையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் பேசியது: நீட் தேர்வை மாநில உரிமைக்கான வேட்டு என்றுதான் கருதுகிறோம்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி மாதம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் இரு மசோதாக்களை அதிமுக அரசு கொண்டு வந்தபோது அதை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தன. இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டு 100 நாள்கள் கடந்து விட்டன. ஆனால் மத்திய அரசு அது பற்றிக் கவலைப்படாமல் உள்ளது. மாநில உரிமை தொடர்பான பிரச்னை: இதனால்தான் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இது மாநில உரிமை தொடர்பான பிரச்னை. நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்படுகிறது.

இது சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழகத்தில் 98 சதவீதம் பேர் மாநிலத் திட்டத்தின் கீழும் 2 சதவீதம் பேர் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழும் படிப்பவர்கள். இரண்டுமே வேறு வேறு பாடத் திட்டங்கள். 98 சதவீதம் பேரை மாறச் சொல்வது வன்முறை. தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தமிழக மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எனவே தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்ட மசோதாக்களுக்கு மத்திய அரசு குடியரசுத் தலைவர் ஒப்புதலை உடனடியாகப் பெற்றுத் தர வேண்டும். 'நீட்' தேர்வை துரத்தும் வரை தமிழகத்தில் இந்தப் போராட்டம் தொடரும் என்றார்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, நீட் தேர்விலிருந்து விலக்கக்கூடிய சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்தால் ஏழைக் குழந்தைகளும் எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு ஏற்படும். இல்லாவிட்டால் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து தமிழகத்தில் மருத்துவக் கல்வியின் நிலை கேள்விக்குறியதாகி விடும் என்றார்.

மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், நடிகை ரோகிணி, கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் ந.மணி, நிதிக்காப்பாளர் ச.மோசஸ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

பதவி உயர்வில் எஸ்.சி., - எஸ்.டி.,க்கு இட ஒதுக்கீடு தொடர அரசு முடிவு


அரசு பணிகளில், பதவி உயர்வில், எஸ்.சி., -- எஸ்.டி., பிரிவினருக்கு, இட ஒதுக்கீட்டை தொடர்ந்து செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு பணிகளில், பதவி உயர்வில் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. பதவி உயர்வில், இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, பல உத்தரவுகளை, பல்வேறு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்தது.

இதனால், இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்குவது பற்றி, ஆலோசிக்கப்பட்டது. அப்போது, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடர்ந்து வழங்கப்பட வேண்டுமா என்பது பற்றி ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க, மத்திய பணியாளர் நல அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் இது பற்றி ஆய்வு செய்து, பிரதமர் மோடியிடம், சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சமூகத்தில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், இன்னும் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றிலும், மற்றவர்களை விட பின்தங்கியே உள்ளனர். அதனால், சம வாய்ப்பு கிடைக்கவும், சமூக வளர்ச்சி ஏற்படவும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, பதவி உயர்வில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு, தொடர வேண்டும்.மேலும், பல துறைகளில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான ஒதுக்கீடு, முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. அதை சரி செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.