இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, May 02, 2017

ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளின் விபரம்


கோரிக்கைகள் விவரம்:

பள்ளிகளின் கட்டமைப்பு வசதியை நவீன முறையில் மேம்படுத்துவதன் மூலம் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தி அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க முடியும். அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடையின் நிறத்தை கவர்ச்சிகரமான வண்ணத்தில் வடிவமைக்க வேண்டும். தொகுப்பூதியம் பெறும் 16,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் பரிந்துரைகளை உடனடியாகப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலை, தொடக்கப் பள்ளிகளுக்கு அரசுப் பள்ளி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒரு துப்புரவாளர், காவலர், கணினி ஆசிரியர்களைப் பணியமர்த்த வேண்டும். குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக மாதம் ரூ.3,000 மட்டுமே பெற்று வரும் அரசுப் பள்ளி துப்புரவுப் பணியாளர்களின் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும். கல்வித் துறையில் ஊழலைத் தடுக்கும் வகையில் நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தை உடனடியாக ஏற்படுத்த நடவடிக்கை தேவை.

பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம், தேசியக் கொடி, வினாத்தாளுக்கு வசூலிக்கும் தொகை ஆகியவற்றை அரசே ஏற்க வேண்டும். நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சம ஊதியம் ஆகியவற்றைச் செயல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் விருதுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இது போன்ற ஆலோசனைக் கூட்டங்களை அடிக்கடி நடத்துவதன் மூலம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தலாம் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

8 ஆயிரம் ஆசிரியர்கள் பரிதவிப்பு


தமிழகம் முழுவதும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் 6,742 பட்டதாரி ஆசிரியர்கள், 1,590 முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு மாதம்தோறும் ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கப்படும். அதனை கருவூலங்களில் சமர்ப்பித்த பின்பே சம்பளம் வழங்கப்படும். இந்த முறையால் ஆணை மற்றும் ஊதியம் வழங்குதலில் சில சமயங்களில் காலதாமதம் ஏற்பட்டது.

இதனால் முறையாக சம்பளம் கிடைக்காமல் ஆசிரியர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரலில் ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி சம்பளம் பெறுகின்றனர்.இந்த ஆண்டுக்கான ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கப்படாததால், ஏப்ரல் மாத சம்பளம் ஆசிரியர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் 8,332 ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். உட்கட்சி பிரச்னையால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க இயலாமல் உள்ளதே இதற்கு காரணம் எனத் தெரிகிறது. உடனடியாக ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

5 மணி நேரமாக கோரிக்கை வைத்த ஆசிரியர்கள் : கலந்துரையாடலில் அதிகாரிகள் தவிப்பு


கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஐந்து மணி நேரத்திற்கு மேலாக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேசி, கோரிக்கைகளை கொட்டியதால், அதிகாரிகள் தவித்தனர். தமிழகத்தில், 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தனியாகவும், ஒன்றாக இணைந்தும் போராட்டங்கள் நடத்தினர்.

ஆனாலும், அமைச்சரையும், செயலரையும் சந்திக்க முடியாததால் அதிருப்தியடைந்தனர். ஆறு ஆண்டுகளுக்கு பின், பள்ளிக்கல்வி துறையின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, செங்கோட்டையன், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை குளிர்விக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்னை, தி.நகரில், தன் சொந்த செலவில், நேற்று கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார்.

இதில், ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த, 200 பேர் பங்கேற்றனர். சங்க நிர்வாகிகளிடம், அதிகாரிகள் தனித்தனியே, கோரிக்கை மனுக்களை வாங்கினர். அமைச்சர் வந்ததும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை பேச அனுமதித்தார். பல மூத்த நிர்வாகிகள், அரசியல்வாதிகள் போல, அமைச்சரையும், அரசையும் வாழ்த்தி பேசி, அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும், 'ஐஸ்' வைத்தனர். சங்க நிர்வாகிகள் சுருக்கமாக கோரிக்கைகளை கூற அனுமதிக்கப்பட்டனர்.

பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், இயக்குனர் இளங்கோவன், அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி பூஜா குல்கர்னி மற்றும் அதிகாரிகள், மேடையில் அமர்ந்து, கோரிக்கைகளை குறிப்பெடுத்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய நிர்வாகிகள், ஐந்து மணி நேரத்திற்கு மேலாக, நுாற்றுக்கணக்கான கோரிக்கைகளை கொட்டியதால், அதிகாரிகள் தவித்தனர். ஆசிரியர்களுக்கு, மதிய உணவாக பிரிஞ்சி, தயிர் சாதம், தக்காளி சாதம் போன்றவையும், இடைவேளையில், கேசரி, வடை, டீ மற்றும் காபியும் தரப்பட்டது. நிகழ்ச்சி முடியும் வரை, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், வெளியே அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சி நடந்த வளாகத்தில், இரும்பு கேட்டுகள் பூட்டப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

புத்தகங்களை ஆசிரியர்கள் சுமக்க வேண்டாம் : இலவசங்களை வினியோகிக்க புது திட்டம்


பள்ளிகள் திறந்ததும், பாடப் புத்தக கட்டுகளை ஆசிரியர்கள் சுமக்கும் பிரச்னை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. 'புத்தகங்களை கல்வித் துறையே வினியோகிக்கும்' என, அமைச்சர் அறிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த, ஆசிரியர் சங்க கலந்துரையாடல் கூட்டத்திற்குப் பின், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகளை, நிதி நிலைமை, சூழலுக்கு ஏற்ப தீர்க்க முயற்சிப்போம். அரசு அறிவித்துள்ள, மாணவர்களுக்கான, 14 இலவச திட்டங்களின் பொருட்களை எடுத்து வந்து, வினியோகம் செய்வதில் சிரமம் இருப்பதாக, ஆசிரியர்கள் கூறினர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், 14 வகை இலவச திட்டங்களுக்கான பொருட்களை, அரசே நேரடியாக பள்ளிகளுக்கு வழங்கும்.

மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் பள்ளி, ரத்த வகை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் அடங்கிய, 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தேசிய, சர்வதேச அளவில் தரமான பாடத்திட்டம் கொண்டு வரப்படும். புதிய கல்வி ஆண்டில் பாடப் புத்தகங்களில் மாற்றம் இல்லை. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்ததும், லேப் - டாப் வழங்கப்படும். தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் முறைகேடு நடந்திருந்தால், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

நிதி இல்லை : அமைச்சர் வருத்தம்கலந்துரையாடல் கூட்டத்தில், 'அரசு பள்ளிகளில், யோகா பயிற்சிக்கு, 13 ஆயிரம் புதிய பயிற்சியாளர்களை நியமிப்பது ஏன்; பகுதி நேர ஆசிரியர்களை பயன்படுத்தலாம்' என, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறினார். இதற்கு பதிலளித்த, அமைச்சர் செங்கோட்டையன், ''13 ஆயிரம் பேர், யோகா பயிற்சி முடித்து, இலவசமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு, யோகா கற்றுத்தர தயாராக உள்ளனர். அரசிடம் நிதி இல்லை; எனவே, கூடுதல் செலவின்றி, இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது,'' என்றார்.

Monday, May 01, 2017

எஸ்பிஐ டெபாசிட் வட்டி குறைப்பு


பாரத ‌ஸ்டேட் வங்கி பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டியை அரை ‌சத‌விகிதம் வரை‌ குறை‌த்துள்ளது.

2 முதல்‌ 3 ஆ‌ண்டு வரையிலான டெபாசிட்டுகளுக்கு வட்டி 6.75 சதவிகிதத்திலிருந்து 6.25 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. முதியோருக்கான டெபாசிட் வட்டியும் அரை சதவிகிதம் குறைக்கப்பட்டு 7.25 சதவிகிதத்தில் இருந்து 6.75 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகள் வரையான பிக்சட் டெபாசிட்களுக்கு வட்டி கால் சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 6.75 சதவிகிதமாக இருந்த வட்டி, 6.5 சதவிகிதமாக்கப்பட்டுள்ளது. 7 நாள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்குரிய வட்டியில் மாற்றமில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. ஏப்ரல் 29-ம் தேதியிலிருந்து புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் முதல் எல்.இ.டி., பல்பு அரசு அலுவலகத்தில் கட்டாயம்


அரசு அலுவலகங்களில், எல்.இ.டி., பல்பு பயன்படுத்துவதை, ஜூன் மாதம் முதல் கட்டாயமாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில், மின் தேவை அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் உள்ளது. ஆனால், தமிழகத்தில், குறைந்த எண்ணிக்கையில் தான், எல்.இ.டி., பல்புகள் பயன்பாடு உள்ளது.

மார்ச் முதல், செப்., வரை, மின் தேவை அதிகம் இருக்கிறது. இதனால், தொடர்ந்து அதிக மின் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. எல்.இ.டி., பல்பு பயன்படுத்தினால், இப்பிரச்னையின் தீவிரம் குறையும். எனவே, ஜூன் மாதம் முதல், அரசு அலுவலகங்களில், எல்.இ.டி., பல்பு கட்டாயமாக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, அரசு உயரதிகாரி மூலம், அனைத்து துறைக்கும் கடிதம் எழுதப்படும். இவ்வாறு அவர் கூறினார். முறைகேடு? மத்திய அரசு, 'எனர்ஜி எபிசியன்ட்' என்ற நிறுவனம் மூலம், குறைந்த விலையில், எல்.இ.டி., பல்புகளை விற்கிறது.

இந்நிறுவனம் இதுவரை, 23 கோடி பல்புகளை விற்றுள்ளது. தற்போது, மின் வாரிய, மின் கட்டண மையங்களுக்கு அருகில், இந்நிறுவனம், எல்.இ.டி., பல்புகளை விற்கிறது. தமிழகத்தில், எல்.இ.டி., பல்பு வாங்குவதில், முறைகேட்டை தடுக்க, அரசு, மத்திய நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும் என்ற வலியுறுத்தல் எழுந்துள்ளது.

Sunday, April 30, 2017

இன்றைய பட்டம் இதழில் வந்துள்ள எம்பள்ளி மாணவியின் கேள்வி

பி.இ. மாணவர் சேர்க்கை: இன்று முதல் ஆன்-லைன் பதிவு தொடக்கம்


இந்தக் கல்வியாண்டு (2017-18) பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (மே 1) முதல் ஆன்-லைன் மூலம் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆன்லைன் முகவரி www.annauniv.edu ஆகும். அவ்வாறு ஆன்-லைன் மூலம் பதிவு செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க ஜூன் 3 கடைசித் தேதியாகும் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு (பி.இ.) சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

2017-18 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு அறிவிப்பை பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி, பொறியியல் கலந்தாய்வு ஜூன் 27-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முதலில் விளையாட்டுப் பிரிவினர், ராணுவ வீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கும் பின்னர் பொதுப் பிரிவினருக்கும் சேர்க்கை நடைபெறும்.

முக்கியத் தேதிகள் குறித்த விவரம் ஆன்-லைன் பதிவு தொடக்கம் மே 1 ஆன்-லைன் பதிவுக்கு கடைசி நாள் மே 31 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 3 சமவாய்ப்பு எண் வெளியீடு ஜூன் 20 தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஜூன் 22 கலந்தாய்வு தொடங்கும் நாள் ஜூன் 27.

டிஇடி தேர்வில் கணக்கு, அறிவியல் கேள்விகள் கடினம் : பட்டதாரிகள் அதிர்ச்சி


டிஇடி இரண்டாம் தாள் தேர்வில் கணக்கு, அறிவியல் பகுதியில் இடம் பெற்ற பல கேள்விகள் கடினமாக இருந்ததால் பட்டதாரிகள் விடை எழுத திணறினர். ஆசிரியர் தகுதித் தேர்வில் நேற்று முன்தினம் முதல்தாள் தேர்வு நடந்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கான அந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்தது.

நேற்று தாள் 2க்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 2 ஆயிரம் பட்டதாரிகள் பங்கேற்றனர். இவர்களுக்காக 1263 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையில், மொத்தம் 31 ஆயிரத்து 235 பேர் தேர்வு எழுத 88 ேதர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் 29 ஆயிரத்து 507 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். 1728 பேர் வரவில்லை. சென்னையில் 94 சதவீத வருகை இருந்தது. தேர்வு காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. முன்னதாக 9 மணி முதல் மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாள் 150 கேள்விகள் இடம் பெற்றன. அதில் உளவியல், தமிழ், ஆங்கிலம், மற்றும் முக்கிய பாடங்களுக்கான கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

கேள்வித்தாள்கள் ஏ,பி, சி,டி என நான்கு வரிசைகளில் தயாரிக்கப்பட்டு இருந்தது. நேற்றைய தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாளில் தமிழ், ஆங்கிலம், உளவியல் பாடப் பகுதிகளில் இடம் பெற்ற கேள்விகள் எளிதாக இருந்தன. கணக்கு பாடத்தில் இடம் பெற்ற கேள்விகளில் 15 கேள்விகளுக்கான விடையை கண்டு எழுதுவது கடினமாக இருந்ததாக பட்டதாரிகள் தெரிவித்தனர். அதாவது, 3 அல்லது 5 மதிப்பெண் கேள்விகளை போல கேட்கப்பட்டுள்ளன. ஒரு கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவே 3 நிமிடங்கள் செலவிட வேண்டியிருந்ததாக பட்டதாரிகள் தெரிவித்தனர். அதேபோல இயற்பியல் பாடப் பகுதியில் இடம் பெற்ற பெரும்பாலான கேள்விகள் சிக்கலான கேள்விகளாக இருந்தன.

குறிப்பாக எளிதில் விடை காண முடியாத அளவில் இருந்தன. இதனாலும் அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்ததாகவும் பட்டதாரிகள் வருத்தம் தெரிவித்தனர். இதனால் இந்த டிஇடி தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தலைமை இன்றி தத்தளிக்கும் எஸ்.எஸ்.ஏ., திட்டம்! தட... தடக்குது தொடக்க கல்வித்தரம்


தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) 32 சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளாக காலியாக இருப்பதால், தொடக்க கல்வி மாணவர்கள் கல்வித் தரத்தை கண்காணிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பணியிட மாற்றம் அல்லது ஓய்வு பெற்ற பின் இரண்டு ஆண்டுகளாக இத்திட்ட சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

மாறாக, அந்தந்த மாவட்ட ரெகுலர் சி.இ.ஓ.,க்கள் இத்திட்டத்தையும் கூடுதலாக கவனிக்கின்றனர். தவிர, அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டம் என மூன்று பெரும் பொறுப்பையும் ரெகுலர் சி.இ.ஓ.,க்கள் கண்காணிப்பதால் கடும் பணிச்சுமையில் தவிக்கின்றனர். 'கவலை' கல்வித்தரம்: தொடக்கக் கல்வி மாணவர்களின் கல்வித்தரத்தை கண்காணிப்பது, மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பது போன்ற முக்கிய பணிகள் இத்திட்டம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது 'தலைமை' இல்லாததால் கல்வித் தரத்தை கண்காணிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் சி.ஆர்.சி., பயிற்சி கூட்டங்கள், பல கோடி ரூபாய் திட்டங்களில் நடக்கும் வகுப்பறை கட்டடப் பணிகளை ரெகுலர் சி.இ.ஓ.,க்கள் நேரடியாக களஆய்வு செய்வதில்லை. பணிகள் குறித்து அத்திட்ட அலுவலர் காட்டும் ஆவணங்களில் மட்டும் கையெழுத்திடும் பணியை மட்டுமே மேற்கொள்ள முடிகிறது. மறுக்கப்படும் சி.இ.ஓ., வாய்ப்பு: இப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணிமூப்பு பட்டியலில் இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு கனவில் காத்திருக்கும் மாவட்ட மற்றும் தொடக்க கல்வி அலுவலர், பதவி உயர்வு பெறாமலேயே 40 சதவீதம் பேர் ஓய்வு பெற்று விட்டனர். மீதமுள்ளவர்கள் பெரும்பாலும் மே யில் ஓய்வுபெற உள்ளனர்.

கல்வி அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்ட சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் அங்கீகரிக்கப்பட்டவை. அவை தொடர்ந்து காலியாக இருக்கக்கூடாது. சி.இ.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டு ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் பொறுப்புக்களையும் அவர்களிடம் ஒப்படைத்தால் வழக்கமான கல்வி பணிகளில் 'ரெகுலர்' சி.இ.ஓ.,க்கள் கூடுதல் கவனம் செலுத்த முடியும். ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் துவங்குவதற்கு முன் இப்பணியிடங்களை நிரப்ப அமைச்சர் செங்கோட்டையன், செயலர் உதயச்சந்திரன் தலையிட்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆன்லைனில்' மட்டுமே வாக்காளர் சேர்ப்பு


ஓட்டுச்சாவடிகளில் 'ஆன்லைன்' மூலம் வாக்காளர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான பயிற்சி மே 5 ல் தேர்தல் அதிகாரிகளுக்கு அளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணி நடக்கிறது. இதில் ஓட்டுச்சாவடிகளில் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்படும்.

அந்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.ஐந்து சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கின்றனர். காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தத்திற்கான விண்ணப்பங்களை 'ஆன்லைனில்' பெற தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் அதிகாரிகளுக்கு இதுகுறித்த பயிற்சி மே 5ல் அளிக்கப்படுகிறது. அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இத்திட்டம் முதற்கட்டமாக குறிப்பிட்ட ஓட்டுச்சாவடிகளில் மட்டும் செயல்படுத்தப்படும். தொடர்ந்து அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் கொண்டு வரப்படும். உடனுக்குடன் 'ஆன்லைனில்' ஏற்றும்போது விண்ணப்பதாரர் முன்னிலையிலேயே சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும். இதனால் பிழைகள் குறையும்.இவ்வாறு கூறினார்.

சி-டெட் தேர்வு இனி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே


ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் சி.டெட் தேர்வை, இனி ஆண்டுக்கு ஒருமுறை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய ஆசிரியர் நியமன தகுதிக்கான தேர்வை(சி-டெட்) சி.பி.எஸ்.இ., அமைப்பு ஆண்டுக்கு இருமுறை நடத்தி வந்தது. இந்நிலையில், ஜே.இ.இ.,மெயின் தேர்வு, நீட் தேர்வு, மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்த வேண்டியுள்ளதால், அதிக பணிச்சுமை ஏற்பட்டிருப்பதாகவும், எனவே சி-டெட் தேர்வினை இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தவும் சி.பி.எஸ்.இ., அமைப்பு முடிவு செய்துள்ளது. இதனை மத்திய மேம்பாட்டு அமைச்சகத்திடமும் சி.பி.எஸ்.இ., அமைப்பு தெரிவித்துள்ளது.

TET paper II tentative answer key

Click below

https://app.box.com/s/qt4rn1dh4o3rtdxf2j395ymv1l0e9aan

NMMS news

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


தமிழ்நாட்டில் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் தோராயமாக 2 லட்சம் பிஇ, பிடெக் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதி வெளியாகின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 1 முதல் 31 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் பதிவு நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இதுபற்றிய அறிவிக்கை நாளிதழ்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படுகிறது. இந்த அறிவிக்கை அண்ணா பல்கலைக் கழகத்தின் இணையதளத்திலும் (www.annauniv.edu) வெளியாகும்.

பிளஸ் 2 தேர்வு முடிவு வருவதற்கு இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில், அடிப்படை விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்து விட்டால் தேர்வு முடிவு வந்த பிறகு மதிப்பெண் உள்ளிட்ட எஞ்சிய விவரங்களை பதிவு செய்து விரைந்து விண்ணப்பிக்க வசதியாக இருக்கும். மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விவரங் களையும் குறிப்பிட்டு ஆன்லைன் பதிவை முழுமை செய்த பின்னர் ஆன்லைன் விண்ணப் பத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான ஆவணங் களை இணைத்து ஜுன் 3-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Saturday, April 29, 2017

தேர்வு முறையில் மாற்றம் மத்திய அரசு அறிவுரை


பொது தேர்வு முறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக் கல்வியில், ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு தேர்வு முறைகள் பின்பற்றப்படுகின்றன. சில மாநிலங்களில், பிளஸ் 1, பிளஸ் 2 என, இரண்டு வகுப்புகளுக்கும், பொது தேர்வு முறை உள்ளது.

மற்ற மாநிலங்களில், பத்தாம் வகுப்புக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல, மதிப்பெண் வழங்குதல், வினாத்தாள் தயாரித்தல், திருத்தம் போன்றவற்றில், தனித்தனி திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திலோ, வேறு திட்டம் பின்பற்றப்படுகிறது. இதனால், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், உயர் கல்வியில் சேர்ப்பதில், கல்வி நிறுவனங்களில் குழப்பம் ஏற்படுகிறது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய மனிதவள அமைச்சகம் சார்பில், மாநில கல்வி அதிகாரிகள் கூட்டம், டில்லியில் நடத்தப்பட்டது. அப்போது, தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரும்படி அறிவுறுத்தியுள்ளனர். மாணவர்களின் கற்றல், சிந்தனை திறனை வெளிக்கொண்டு வரும் வகையில், வினாத்தாள் தயாரித்தல் விஷயத்தில், கூடுதல் அக்கறை காட்டவும் வலியுறுத்தப்பட்டது. சி.பி.எஸ்.இ., போன்று, நாடு முழுவதும் ஒரே தேர்வு முறை, விடைத்தாள் திருத்த முறையை கொண்டு வருவது குறித்தும், அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது