இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, February 28, 2017

பிளஸ்–2 தேர்வு நாளை தொடங்குகிறது 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்


நாளை பிளஸ்–2 தேர்வு தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு நாளை தொடங்குகிறது. மார்ச் மாதம் 31–ந்தேதி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது.

பிளஸ்–2 தேர்வை 6,737 பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 17 ஆயிரத்து 952 மாணவர்களும், 4 லட்சத்து 80 ஆயிரத்து 810 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும், தனித்தேர்வர்களாக 31 ஆயிரத்து 843 பேரும், சிறைக்கைதிகள் 88 பேரும் எழுதுகிறார்கள். மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரத்து 606 பேர் எழுதுகின்றனர். இவர்களில் 5 லட்சத்து 69 ஆயிரத்து 304 பேர் தமிழ் மொழியில் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ்–2 தேர்வுக்காக 2,427 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை இந்த தேர்வுக்கு டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பார்வையற்றவர்கள், காதுகேளாதோர், வாய் பேசாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், கூடுதலாக 1 மணி நேரம்) அளிக்கப்படுகிறது. தேர்வை சிறப்பாக நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையை சேர்ந்த இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று தேர்வுக்காண பணிகளை செய்து வருகிறார்கள்.

2 வருடம் சிறை

தேர்வு மைய வளாகம் செல்போன்கள் தடை செய்யப்பட்ட பகுதியாகும். தேர்வு எழுதும் மாணவர்கள் யாரும் செல்போனை கொண்டு வரக்கூடாது. இதைமீறி மாணவர்களோ, ஆசிரியர்களோ செல்போன் அல்லது இதர தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்பதாக கண்டறிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தேர்வின்போது துண்டு தாள் வைத்திருத்தல், பார்த்து எழுதுதல், ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக 2 வருடம் சிறை தண்டனை வழங்கப்படும்.

பள்ளி அங்கீகாரம் ரத்து ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, அல்லது அவர்களை ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயற்சி செய்தால் அந்த தேர்வு மையத்தை ரத்து செய்து பள்ளியின் அங்கீகாரத்தை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அல்லது மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி ரத்து செய்வார். சென்னை மாவட்டத்தில் மட்டும் 56 ஆயிரத்து 125 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வை எழுதுகிறார்கள். இந்த ஆண்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு போதுமான காலஅவகாசம் அளித்தே இந்த தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது

பிளஸ் 2 தேர்வுக்கு குறைதீர் எண் அறிவிப்பு


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் பிரச்னைகளை சரி செய்ய, குறைதீர் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகள் நடக்கும் நாளில், தேர்வர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், தங்களின் புகார் மற்றும் கருத்துக்களை, தேர்வுத் துறைக்கு தெரிவிக்கலாம். இதற்காக, கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில், தினமும் காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, 80125 94114, 80125 94115, 80125 94122, 80125 94124 ஆகிய எண்களில், கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் : மீண்டும் தள்ளிவைப்பு?


பள்ளி பொதுத் தேர்வுகளை காரணம் காட்டி, உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மே, 14க்கு முன், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க, மாநில தேர்தல் கமிஷனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தேர்தல் ஏற்பாடுகளில், மாநில தேர்தல் கமிஷன் இதுவரை கவனம் செலுத்தவில்லை. இதற்கிடையே, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 12; 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 19ல் வெளியிடப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதை காரணம் காட்டி, உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போடலாமா என, மாநில தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.

இலவச 'லேப் - டாப்' இந்த ஆண்டில் இல்லை


பள்ளி மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இலவச, 'லேப் - டாப்' கிடைக்காது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளில் பயின்ற, 40 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இதுவரை இலவச, லேப் - டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக, 4,331 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு துவங்கிய, இந்த முன்னோடி திட்டத்தை, பல மாநிலங் கள் பின்பற்ற துவங்கியுள்ளன.

மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும், இலவச லேப் -- டாப் திட்டத்தைத் தொடரப் போவதாக, அ.தி.மு.க., அரசு தெரிவித்தது; சட்டசபையிலும் அறிவிக்கப்பட்டது. கோடை விடுமுறை : ஆனால், தகவல் தொழில்நுட்பத் துறை செயலருக்கு, மற்ற துறைகளின் பொறுப்பு தரப்பட்டதால், லேப் - டாப் வழங்கும் பணியில், அவர் தீவிரம் காட்டவில்லை. பள்ளி தேர்வுகள் முடிவதற்குள், லேப் - டாப் தந்துவிட்டால், அது, கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க உதவியாக இருக்கும் என, மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அது சாத்தியம் இல்லை என, தற்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது:

இரு வாரங்களுக்கு முன் தான், லேப் - டாப் கொள்முதலுக்கான, 'டெண்டர்' விண்ணப்பங்களை பெறும் தேதி நிறைவடைந்தது. அதை, தற்போது பரிசீலிக்க துவங்கியிருக்கிறோம். இதில், அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. அதனால், தேர்வு துவங்கு வதற்குள், டெண்டரை இறுதி செய்வதற்கு வாய்ப்பு இல்லை. அவகாசம் : அதை இறுதி செய்தாலும், கொள்முதல் செய்ய, அவகாசம் தேவை. பின், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்; அதற்கும் கால அவகாசம் வேண்டும். அதனால், இந்த ஆண்டில் லேப் - டாப் வழங்குவது சிரமம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Monday, February 27, 2017

மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயில்வோருக்கு தமிழ் பாடத் தேர்வில் இருந்து விலக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு


மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வின்போது தமிழ் பாடத் தேர்வை எழுதுவதில் இருந்து விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை தமிழக அரசு 2006-ஆம் ஆண்டு ஜூன் 12-இல் கொண்டு வந்ததால், அனைத்து வகையான பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டது.

தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட பிற மொழிகளிலும் பயிலும் மாணவர்களும் பொதுத் தேர்வுகளின்போது, தமிழ் பாடத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டிய சூழல் உருவாகியது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 2015-16ஆம் கல்வியாண்டில் பிற மொழி மாணவர்கள் தமிழ் பாடத் தேர்வு எழுத விலக்களித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டிலும் விலக்கு அளிக்கக் கோரி, மொழி சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:- மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்வில் மொழிப்பாட பிரிவில், தமிழுக்குப் பதிலாக பிற மொழியில் தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து மாணவர்களையும், கடந்த ஆண்டை போன்று நிகழாண்டும் அவரவர் தாய்மொழி பாடத் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும். கடந்தாண்டு பிறப்பித்த உத்தரவுகளை பள்ளிக்கல்வித் துறை பின்பற்ற வேண்டும் என்றனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபியில் இருந்து சென்னை செல்லும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், திங்கள்கிழமை அவர் மேலும் கூறியதாவது:

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறோம். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறை நீடிப்பதால், பாதிப்பு இருப்பதாகத் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அச்சிட்ட 'டெட்' தேர்வு விண்ணப்பங்கள் சிறிய மாறுதலுடன் பயன்படுத்த முடிவு


ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்'டுக்காக, அச்சிட்ட விண்ணப்பங்களில், கூடுதலாக சில வரிகளை சேர்த்து பயன்படுத்த, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. அதனால், டி.ஆர்.பி., தலைவராக இருந்த விபு நய்யர், 'டெட்' தேர்வுக்கான விண்ணப்பங்களை அச்சிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். இந்த நேரத்தில், தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனமான, 'டான்சிக்கு' அவர் திடீரென மாற்றப்பட்டார்.

இந்நிலையில், அச்சிடப்பட்ட, 'டெட்' தேர்வு விண்ணப்பங்களில், சில பகுதிகள் விடுபட்டிருந்ததை, கல்வித் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனால், 15 லட்சம் விண்ணப்பங்கள் வீணாக குப்பைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதுபற்றி, பிப்., ௨௬ல், நமது நாளிதழில் செய்தி வெளியானது. உடன் விசாரணை நடத்த, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டார்.

'ஏற்கனவே அச்சிட்ட விண்ணப்பங்களில், கூடுதலாக சில வரிகளை சேர்த்தால், பிரச்னைக்கு தீர்வு காணலாம்' என, அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். இதையடுத்து, ஏற்கனவே அச்சிட்ட விண்ணப்பங்களுடன், கூடுதலாக சில வரிகளை அச்சிட்டு இணைக்க, கல்வித் துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்

CPS திரும்ப பெற அரசாணை




Sunday, February 26, 2017

15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மார்ச் 14ம் தேதி வரை மீசல்ஸ் - ரூபெல்லா தடுப்பூசி


மீசல்ஸ்-ரூபெல்லா தடுப்பூசி மார்ச் 14ம் தேதி வரை போடப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மீசல்ஸ்-ரூபெல்லா தடுப்பூசி 9 மாதம் முடிந்த மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கடந்த பிப்ரவரி 6ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை போடப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்தது. இந்நிலையில், இந்த தடுப்பூசி போடும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது: மீசல்ஸ் -ரூபெல்லா தடுப்பூசி இதுவரை 77 லட்சம் குழந்தைகளுக்கு போடப்பட்டுள்ளது. பெற்றோர் தங்களது முன்னிலையில் மீசல்ஸ்- ரூபெல்லா தடுப்பூசி போட வேண்டும். வேலைக்கு செல்வதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தடுப்பூசி போட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, வரும் மார்ச் 1 ம்தேதி முதல் 14ம் தேதி வரை 2 வாரத்திற்கு அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மட்டுமின்றி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படும்.

இது தொடர்பான விளம்பரங்கள் ரேடியோ உள்ளிட்டவற்றின் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்க உள்ளோம். 12,500 தடுப்பூசி போடும் ஊழியர்கள், 416 நடமாடும் மருத்துவமனைகள், 770 பள்ளி மருத்துவ குழுக்கள் உட்பட 65 ஆயிரம் பேர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், 2 வாரம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை இன்றி பணியாற்றுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு : சாக்லேட் எடுத்து வர அனுமதி


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கான, பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவர்கள் தேர்வறைக்குள் சாக்லேட் எடுத்துச் செல்லலாம். சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு, மார்ச், 9ல், பொதுத் தேர்வு துவங்குகிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்வு அறையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், சாக்லேட் எடுத்துச் செல்ல மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிப்பு: பள்ளி மாணவர்களில் பலர், முதல் நிலை சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில், குளுக்கோஸ் அடங்கிய உணவு உட்கொள்ள வேண்டும். இதை கருத்தில் கொண்டு, சி.பி.எஸ்.இ., தேர்வில், சர்க்கரை நோய் மாத்திரை, கேண்டி என்ற இனிப்பு மிட்டாய், வாழைப் பழம், ஆப்பிள், ஆரஞ்ச் போன்ற பழங்கள், 'சாண்ட் விச்' போன்ற உணவு மற்றும் அரை லிட்டர் குடிநீரை, தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.

இதை கொண்டு வர விரும்பும் மாணவர்கள், தங்களுக்கான தேவை குறித்து, டாக்டரிடம் பரிந்துரை கடிதமும், பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதி கடிதமும் பெற்று வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டெட்' தேர்வில் ஆரம்பமே குளறுபடி : டி.ஆர்.பி., மீது தேர்வர்கள் அதிருப்தி


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், விண்ணப்ப அச்சடிப்பு பிரச்னையால், ஆரம்பமே குளறுபடியாகி உள்ளது. அதனால், மீண்டும் புதிய அறிவிக்கை வெளியிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 'டெட்' தேர்வுக்கான அறிவிக்கையை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யானது, பிப்., 24ல் வெளியிட்டது. அதில், 'விண்ணப்ப விற்பனை, மார்ச், 6ல் துவங்கும்; பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மார்ச், 23க்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற தேர்வுகளில், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, குறைந்த பட்சம், ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படும். ஆனால், இந்த தேர்வுக்கு, 17 நாட்களே அவகாசம் தரப்பட்டுள்ளதால், பட்டதாரிகளும், தனியார் பள்ளி ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, 'டெட்' தேர்வு எழுத விரும்பும் பட்டதாரிகள் கூறியதாவது: 'சிடெட்' என்ற மத்திய அரசின், 'டெட்' தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. அதேபோன்ற, மாநில அரசின், 'டெட்' தேர்வை, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதில், சி.பி.எஸ்.இ., போல விதிகளைப் பின்பற்றவில்லை.அறிவிக்கை வெளியாவதற்கு, ஒரு மாதத்திற்கு முன்னரே, முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சரும், ஒரு வாரத்திற்கு முன், புதிய பள்ளிக்கல்வி துறை அமைச்சரும், தேர்வு தேதியை அறிவித்தனர்.

டி.ஆர்.பி., தாமதமாக வெளியிட்ட அறிவிக்கையில், விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும் என, தெரிவிக்கவில்லை. விண்ணப்பங்களை தவறாக அச்சிட்டதால், மீண்டும் விண்ணப்பங்கள் அச்சடிப்பதாக கூறப்படுகிறது. டி.ஆர்.பி., செய்த தவறால், விண்ணப்பம் வழங்கும் தேதி, மார்ச், 6 வரை தாமதமாகியுள்ளது. இந்த தவறுக்கு, அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்; அவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான அவகாசம், 17 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தலையிட்டு, விண்ணப்பிக்கும் அவகாசத்தை, ஒரு மாதமாக நீட்டிக்க வேண்டும். இல்லாவிட்டால், டி.ஆர்.பி., மீது வழக்கு தொடரும் நிலை ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

Saturday, February 25, 2017

போலியோ தேதி மாற்றம்

போலியோ சொட்டு மருந்து இந்த ஆண்டு முதல் தவணையாக ஜனவரி 17ம் தேதி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி இயக்கத்தின் மூலமாக இரட்டை தடுப்பூசி மருந்து  9 மாதம் முடிந்த 15 வயதுக்குட்பட்ட 1.7 கோடி குழந்தைகளுக்கு பிப்ரவரி 6ம் தேதி முதல் 28ம் தேதி வரை போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதியும், பிப்ரவரி 21ம் தேதியும் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்களின் தேதியை மாற்றி சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

அதன்படி முதல் தவணை போலியோ சொட்டு மருந்து மார்ச் 5ம் தேதியும், 2வது தவணை ஏப்ரல் 2ம் தேதியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி பல மாவட்டங்களில் நிறைவு பெறாத காரணத்தால், இந்த தடுப்பூசி போடும் பணி மார்ச் 14 வரை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது.   இதனால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 2ம் ேததி முதல் தவணையாகவும், 30ம் தேதி 2வது தவணையாகவும் வழங்கப்படும்’ என்றார்.

தேர்வு கட்டுப்பாடு


பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவ, மாணவி யர், 'பெல்ட், வாட்ச்' அணிந்து வர தடை விதிக் கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, 'மொபைல் போன், ஷூ' ஆகியவற்றுடன், தேர்வு அறைக்கு செல்வதற் கான தடையும் அமலில் உள்ளது.

மறுதேர்வு எழுதும் நோக்கில், விடைகளை தாமே அடித்தால், தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 2ல் துவங்கு கிறது. இதில், 6,737 பள்ளிகளைச் சேர்ந்த, 9.30 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இவர்களில், 4.18 லட்சம் மாணவர்கள்; 4.81 லட்சம் மாணவியர் மற்றும் ஒரு திருநங்கையும் அடங்குவர்.

மேலும், தமிழ் வழியில் படிப்போரில், 5.69 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். இந் நிலையில், தேர்வு எழுதுவோருக்கு கடும் ,
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அவைவருமாறு: தேர்வு மையவளாகத்திற்குள், மொபைல் போன் எடுத்துவரக் கூடாது. எடுத்து வந்தால்அதை தங்கள் உடைமைகளுடன், வளாக அறையில் தான் வைக்க வேண்டும். அதற்கு, கல்வித்துறை பொறுப்பேற்காது

* தேர்வறைக்குள் வரும் போது, காலணிகளை, வளாகத்திலேயே கழற்றி விட்டு வர வேண்டும். தேர்வறைக்குள் காலணி, உடைக்கான இடுப்பு பெல்ட் அணிய அனுமதி இல்லை. இதனால், மாணவ, மாணவியர் தொள தொள என, பெரிய சைஸ் உடைகளை, பெல்ட் மூலம் இறுக்கி அணிந்து வருவதை, தவிர்ப்பது நல்லது

* தேர்வு அறையில் கடிகாரம் கண்டிப்பாக இருக்கும். அவை இயங்கும் வகையில், புதிய பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கும். அதிலுள்ள நேரத்தின் படியே, தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படும்.

எனவே, தேர்வறைக்குள் மாணவர்கள், வாட்ச் அணிய தேவையில்லை. எந்த கூடுதல் வசதியும் இல்லாத, சாதாரண வாட்ச் மட்டும் கட்டலாம். 'ஸ்மார்ட் வாட்ச், ப்ளூ டூத் வாட்ச்' போன்றவை அனுமதிக்கப்படாது

* தேர்வு அறைக்குள், மாணவர்கள் ஒருவருக் கொரு வர் பேசிக் கொள்ளவோ, விவாதிக்கவோ அனுமதி கிடையாது* தேர்வு முடியும் நேரத்தில், தாங்கள் எதிர் பார்த்தமதிப்பெண் கிடைக்காது என தெரிந்து, மறு தேர்வு எழுதுவதற்காக,இந்த தேர்வில் தோல்வி அடையும் வகையில், விடைத்தாள் களில் எழுதிய விடைகளை, தாங்களே அடிக்க கூடாது. மீறினால், சம்பந்தப்பட்ட தேர்வர்கள், அடுத்து வரும் இரண்டு பருவத்திற்கான தேர்வுகளை எழுத முடியாது

* தேர்வறையில் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுடன், தேர்வர்கள் வாக்கு வாதங் களில் ஈடுபடக் கூடாது. * 'ஹால் டிக்கெட்' இல்லாதவர்கள், எக்காரணத்தை கொண்டும், தேர்வு எழுத அனுமதிக்கபட மாட்டர்.இவ்வாறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

Friday, February 24, 2017

திருப்பூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக பூலுவபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தேர்வு பெற்று சார் ஆட்சியர் அவர்கள் தலைமையாசிரியருக்கு பரிசு வழங்கிய போது..

பள்ளி வாகனங்களில், சிசிடிவி கேமரா, ஜி.பி.எஸ். மற்றும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என, மத்திய பள்ளிக் கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.


பள்ளி வாகனங்களில், சிசிடிவி கேமரா, ஜி.பி.எஸ். மற்றும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என, மத்திய பள்ளிக் கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சி.பி.எஸ்.இ. பிறப்பித்துள்ள உத்தரவில் அனைத்து பள்ளி வாகனங்களிலும், பாதுகாப்பான வகையில் ஜன்னல்கள் அமைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில், 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு அதிகமாக செல்லாத வகையில் வேகக் கட்டுப்பாடு கருவி கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று வாகனங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், வாகனம் எங்கு செல்கிறது என்பதை அறியும் வகையில், அதில், ஜி.பி.எஸ். கருவி இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் குழந்தைகளை வாகனத்தில் சரியாக ஏற்றி, இறக்க, ஒரு பெண் உதவியாளர் பணியமர்த்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ள பள்ளி கல்வி வாரியம், வாகன ஓட்டுனரின் நன்னடத்தை குறித்து விரிவாக விசாரித்த பின்னரே அவரை பணியமர்த்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி வாகங்களில் இவை அனைத்தும் சரியாக உள்ளதா என, பள்ளி நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ள அந்த அமைப்பு, இதில் ஏதேனும் ஒரு விஷயத்தில் குறை ஏற்பட்டால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இடைநிலை ஆசிரியர் ஊதியம் TNPTF கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6 முதல் விண்ணப்ப விநியோகம்


வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6 -ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. நாடு முழுவதும் ஆசிரியர் பணியிடங்கள் தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே, பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு ஏப்ரல் 29 -ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு ஏப்ரல் 30-ஆம் தேதியும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை அறிவித்தார். இதையடுத்து வரும் மார்ச் 6 -ஆம் தேதி முதல் மார்ச் 22-ஆம் தேதி தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கபடவுள்ளன.

ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50. விண்ணப்பங்கள் மார்ச் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். இந்த விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம், தேர்வு செய்யப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விநியோகிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பெறலாம்.

டெட்' தேர்வு விண்ணப்பம் மார்ச் 6 முதல் வினியோகம்


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, மார்ச், 6 முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்' என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.டி.ஆர்.பி., வெளியிட்டுள்ள அறிவிக்கை: டெட் தேர்வுக்கான விண்ணப்பங்கள், மார்ச், 6 முதல் 22 வரை வினியோகம் செய்யப்படும். மார்ச், 23 மாலை, 5:00 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

ஏப்., 29 மற்றும் 30ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும். விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ள, மாவட்ட மையங்களின் முகவரி, விரைவில் அறிவிக்கப்படும். பி.எட்., - டி.டெட்., முடித்தவர்கள் இந்த தேர்வை எழுத தகுதி பெற்றவர்கள். டெட் குறித்த கூடுதல் தகவல்களை, http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.