பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவ, மாணவி யர், 'பெல்ட், வாட்ச்' அணிந்து வர தடை விதிக் கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, 'மொபைல் போன், ஷூ' ஆகியவற்றுடன், தேர்வு அறைக்கு செல்வதற் கான தடையும் அமலில் உள்ளது.
மறுதேர்வு எழுதும் நோக்கில், விடைகளை தாமே அடித்தால், தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 2ல் துவங்கு கிறது. இதில், 6,737 பள்ளிகளைச் சேர்ந்த, 9.30 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இவர்களில், 4.18 லட்சம் மாணவர்கள்; 4.81 லட்சம் மாணவியர் மற்றும் ஒரு திருநங்கையும் அடங்குவர்.
மேலும், தமிழ் வழியில் படிப்போரில், 5.69 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். இந் நிலையில், தேர்வு எழுதுவோருக்கு கடும் ,
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அவைவருமாறு: தேர்வு மையவளாகத்திற்குள், மொபைல் போன் எடுத்துவரக் கூடாது. எடுத்து வந்தால்அதை தங்கள் உடைமைகளுடன், வளாக அறையில் தான் வைக்க வேண்டும். அதற்கு, கல்வித்துறை பொறுப்பேற்காது
* தேர்வறைக்குள் வரும் போது, காலணிகளை, வளாகத்திலேயே கழற்றி விட்டு வர வேண்டும். தேர்வறைக்குள் காலணி, உடைக்கான இடுப்பு பெல்ட் அணிய அனுமதி இல்லை. இதனால், மாணவ, மாணவியர் தொள தொள என, பெரிய சைஸ் உடைகளை, பெல்ட் மூலம் இறுக்கி அணிந்து வருவதை, தவிர்ப்பது நல்லது
* தேர்வு அறையில் கடிகாரம் கண்டிப்பாக இருக்கும். அவை இயங்கும் வகையில், புதிய பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கும். அதிலுள்ள நேரத்தின் படியே, தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படும்.
எனவே, தேர்வறைக்குள் மாணவர்கள், வாட்ச் அணிய தேவையில்லை. எந்த கூடுதல் வசதியும் இல்லாத, சாதாரண வாட்ச் மட்டும் கட்டலாம். 'ஸ்மார்ட் வாட்ச், ப்ளூ டூத் வாட்ச்' போன்றவை அனுமதிக்கப்படாது
* தேர்வு அறைக்குள், மாணவர்கள் ஒருவருக் கொரு வர் பேசிக் கொள்ளவோ, விவாதிக்கவோ அனுமதி கிடையாது* தேர்வு முடியும் நேரத்தில், தாங்கள் எதிர் பார்த்தமதிப்பெண் கிடைக்காது என தெரிந்து, மறு தேர்வு எழுதுவதற்காக,இந்த தேர்வில் தோல்வி அடையும் வகையில், விடைத்தாள் களில் எழுதிய விடைகளை, தாங்களே அடிக்க கூடாது. மீறினால், சம்பந்தப்பட்ட தேர்வர்கள், அடுத்து வரும் இரண்டு பருவத்திற்கான தேர்வுகளை எழுத முடியாது
* தேர்வறையில் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுடன், தேர்வர்கள் வாக்கு வாதங் களில் ஈடுபடக் கூடாது. * 'ஹால் டிக்கெட்' இல்லாதவர்கள், எக்காரணத்தை கொண்டும், தேர்வு எழுத அனுமதிக்கபட மாட்டர்.இவ்வாறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.