இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, December 24, 2016

10ம் வகுப்பில் தோல்வி அடைந்த தனித் தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்


பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்த தனித் தேர்வர்கள் மீண்டும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள் 2017 மார்ச் மாதம் நடக்கும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பினால் 26ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நேரடித் தனித் தேர்வர்கள் அனைவரும் பகுதி 1ல் மொழிப்பாடத்தில் தமிழ் மொழிப்பாடத்தை மட்டுமே முதல் மொழிப்பாடமாக எழுத முடியும். மேலும் பதினான்கரை வயது பூர்த்தி அடைந்தவர்கள், பல்வேறு திட்டங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தகுதி உடையவர்கள். மேலும், எஸ்எஸ்எல்சி பழைய பாடத்திட்டத்தில் தோல்வி அடைந்தவர்கள் தோல்வி அடைந்த பாடங்களில் மட்டும் தற்போதுள்ள பாடத்திட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். ஓஎஸ்எல்சி பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தை தவிர மற்ற பாடங்களில் தோல்வி அடைந்திருந்தால் தற்போதுள்ள பாடத்திட்டத்தில் அந்த பாடங்களை எழுதலாம்.

மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பழைய பாடத்திட்டத்தில் ஓரிரு பாடங்களில்கூட தோல்வி அடைந்து இருந்தாலும் அவர்கள் புதிய பாடத்திட்டத்தில் ஒரே நேரத்தில் அனைத்து பாடங்களுக்கும் விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும். சேவை மையங்கள் மூலம் நேரடியாக விண்ணப்பிக்க முடியாத வெளி மாநில மற்றும் வெளிநாடு வாழ் தனித் தேர்வர்கள் மார்ச் 2017 பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பினால் குடும்ப உறுப்பினர் யாராவது ஒருவர் மூலம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநரை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் படித்து தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்புவோர் Migration Certificate, Evaluation Certificate பெற்று அரசுத் தேர்வு சேவை மையங்களில் கொடுத்து விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மேலும் விவரம் வேண்டுவோர் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் ெதரிந்து கொள்ளலாம்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை தேவையா?


தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்ய தேவையில்லை' என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில், கடந்த காலங்களில், சீனியாரிட்டி மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். நியமனம் செய்யப்பட்ட ஓராண்டில், அவர்களுக்கு பணி வரன்முறை செய்யப்பட வேண்டும். தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் தகுதிகாண் பருவம் முடிக்க வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட, ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்வதில் குழப்பம் இருந்தது. இதனால், 2010 -- 11ல், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணி வரன்முறை செய்யவில்லை. மேலும், அவர்களது பதவி உயர்விலும் சிக்கல் ஏற்பட்டது. இந்த குழப்பத்திற்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.'ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தனியாக பணி வரன்முறை செய்ய தேவையில்லை; இரண்டு ஆண்டுகளில் தகுதிகாண் பருவம் மட்டும் முடித்தால் போதும்' என, தெரிவித்துள்ளது.

Friday, December 23, 2016

பி.எப் ஐ தொடர்ந்து சேமிப்பு வட்டிக்கும் வேட்டு


நடப்பு நிதியாண்டுக்கான பிஎப் வட்டி, 8.8 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் தங்கள் ஓய்வு கால பலனில் கணிசமான தொகையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. பிற சிறுசேமிப்பு திட்டங்களை விட பிபிஎப் வட்டி விகிதம் கவர்ச்சிகரமாக உள்ளது. இதுவரை, விலைவாசி உயர்வையும் தாண்டி இந்த திட்டம் பலன் அளிக்கிறது. ஏற்கெனவே 8.7 சதவீதமாக இருந்த பிபிஎப் வட்டி, 8.1 சதவீதமாகவும், பின்னர் 8 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

  கடந்த காலாண்டுகளில் பண வீக்கத்தையும் தாண்டி இந்த திட்டம் 1.91 சதவீதம் முதல் 4.08 சதவீதம் வரை லாபம் தந்திருக்கிறது. இது வரும் ஜனவரி - மார்ச் காலாண்டில் மேலும் கால் சதவீதம் அல்லது, ஒரு சதவீதம் கூட குறைக்கப்படலாம் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். வங்கி எப்.டி போல அல்லாமல், பிபிஎப் லாபத்துக்கு வரிச்சலுகையும் உண்டு.
இதுபோல், வங்கி டெபாசிட்டை விட லாபமான 8 சதவீத வட்டி வழங்கப்படும் தேசிய சேமிப்பு பத்திரம் போன்ற சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட வட்டியும் குறைக்கப்படும் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பிபிஎப், கிசான் விகாஸ் பத்திரம், செல்வமகள் போன்ற சிறுசேமிப்பு திட்டங்களுக்கு நடப்பு காலாண்டுக்கான வட்டி ஏற்கெனவே 0.1% குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

10ம் வகுப்பு தேர்வு : 26 முதல் விண்ணப்பம்


தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிக்கை: வரும் மார்ச்சில் நடக்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள், டிச., 26 முதல், ஜன., 4 வரை விண்ணப்பிக்கலாம். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள, அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்களுக்கு சென்று, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க வேண்டும்.தமிழ் மொழியை மட்டுமே, முதல் மொழிப் பாடமாக தேர்வு செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, சேவை மைய முகவரி குறித்து, http:/www.dge.tn.gov என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுக்கு, டிச., 26 முதல் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் மார்ச்சில் நடக்கும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும், நேரடி தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், டிச., 26 முதல், ஜன., 1 வரை, மாவட்ட கல்வி அலுவலகங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணமாக, 25 ரூபாய் செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பம் மற்றும் கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில், அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

S.R டிஜிட்டல் மயம் செய்யும்போது கவனிக்கத்தக்கவை

1) அனைத்து SR ஐயும் மாவட்டக் கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்,..பெற்றுக்கொணடதற்கு ஒப்புகைச்சீட்டுத் தரப்படும்....இரண்டு
நாட்களில் அவை ஸ்கேன் செய்யப்பட்டு திரும்ப பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கிய பின் ஒப்படைக்கப்படும்.

2) SR DISTRICT TREASURY யில் இருக்கும் போது. அதில் ஏதேனும் திருத்தம் இருப்பதாக ஃபோன் மூலம் கூறக்கூடாது..HM நேரில் செல்ல வேண்டும்,

  3)மிகப்பழமையான/ கிழிந்து போன/ லேமினேட் செய்யப்பட்ட SR உடைய பணியாளர் ஸ்கேன் செய்யும் போது உடனிருக்க வேண்டும்

4)ஸ்கேனிங் முடிந்தவுடன் அது பற்றிய 1 பிரிண்ட் அவுட் ஒவ்வொரு பணியாளருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.அதில் தவறிருந்தால் அதை நாம் கூறியவுடன் , அத்தவறு சரி செய்யப்பட்டு அதற்குரிய வேறொரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும்

5)ஸ்கேன் பண்ணிய SRக்கு DIGITAL SR (DSR) என்று பெயர்

6)அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றுபவர் பற்றிய DSR அந்தந்த மாவட்டத்தில் மட்டுமேயிருக்கும்,.வேறு மாவட்டப பதிவில் சென்று தேடினால் இருக்காது..

7) ஒருவர் துறை மாறிதலில் சென்றாலோ/ வேறு மாவட்த்திற்கு பணிமாறுதல் பெற்றுச் சென்றாலோ அது குறித்துத் தகவல் தெரிவித்தால் அந்த மாவட்டத்திற்கு DSR அனுப்பி வைக்கப்படும்.

8) RETIREDMENT PENSION PROPOSAL அனுப்பும்போது SR BOOK ஐ அனுப்பக்கூடாது,மாறாக DSR ஐ மட்டும் அனுப்பினால் போதும்

9)ஒருவரிடம் வேறு துறையில் பணியாற்றிய SR/நிதியுதவி பெறும் பள்ளி SR / அரசுப்பள்ளிSR என ஒன்றிற்கு மேற்பட்ட SR இருந்தால் அவை அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்

  8) SR SCANE செய்யப்பட்டதற்கு அடையாளமாக கடைசியாக ஸ்கேன் செய்யப்பட்ட பக்கத்தில் மாவட்டக்கருவூல அலுவலரின் கையொப்பம் முத்திரையுடனிருக்கும்,,அதன் பிறகு மேற்கொள்ளப்படும் அனைத்துப் பதிவுகளும் முத்திரைக்குப் பின்னுள்ள பக்கங்களில் இடம் பெற வேண்டும்...

9)SR DETAILS ம் WEBROLL DETAILSம் ஒன்று போலிருக்க வேண்டும்.,இல்லையேல் WEBROLL REJECT செய்துவிடும்...

10) N.O.C,
ஆதார்எண். சாதனைகள், பெற்றுள்ள விருதுகள் பற்றிய விவரங்கள்DSR ல் இருக்கும்..

11)எதிர்காலத்தில் MANUEL SR MAINTENANCE இருக்காது்

12) DSR ல் NEXT INCREMENT ,
.HRA SLAp அனைத்துமிருக்கும்

12)SCANE முடிந்த 15 நாள் மட்டுமே அப்பதிவு மாவட்ட கருவூல அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும்..அதற்குள் நாம் பிழை திருத்தம் மேற்கொள்ளலாம்..அதன்பின் தானாகவே அதற்கடுத்த அலுவலருக்கு MOVE ஆகிவிடும்,,அதன்பின் நாம் ஏதேனும் மிழை திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் ,அவ்வுயர் அலுவலரின் அனுமதிக்குப்பின் அவரே அதைச் செய்வார்.நாம் அவரின் விசாரணைக்கு உட்பட வேண்டியிருக்கும்...

SSA கல்வித்திட்டம் RMSA வில் இணைப்பு! தமிழகத்தில் 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அனைவருக்கும் கல்வி திட்டமானது RMSA உடன் இணைக்க மத்திய அரசு முடிவு.


posted from Bloggeroid

தனியார் சிபிஎஸ் இ பள்ளி முதல்வராக தேர்வு

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தன்னிச்சையாக முதல்வர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது, தகுதித் தேர்வு எழுதிய பிறகு தேர்வுக்குழுதான் முதல்வர்களை நியமிக்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

முதல்வர்களுக்கான தகுதித் தேர்வு சிபிஎஸ்இ, மாநில அரசு மற்றும் சிபிஎஸ்இ பிரதிநிதிகள் ஆகியோருக்கு முதல்வர் தேர்வில் வீட்டோ அதிகாரம் உள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதனால் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளின் தன்னாட்சி இழக்கப்படவுள்ளது.

எனவே பள்ளி முதல்வராக விரும்பும் ஆசிரியர்கள் முதல்வர் தகுதித் தேர்வு (Principal Eligibility Test-PET) எழுதியாக வேண்டும் என்று சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளது.

ஏற்கெனவே முதல்வர்களாக இருப்பவர்களும் தேர்வு எழுதியாக வேண்டும். ஆனால் இந்த புதிய விதிமுறை அரசுப் பள்ளி முதல்வர்களுக்குப் பொருந்தாது.

புதிய விதிமுறைகளின் படி, முதல்வர் தேர்வுக்குழுவில் உள்ளவர் பள்ளிகள் நிர்வாகத்தில் அனுபவம் பெற்றவராகவோ அல்லது கல்விப்புலம் சார்ந்தவராகவோ இருப்பது அவசியம் இவர் நிர்வாகக் கமிட்டி, சிபிஎஸ்இ ஆலோசனையுடன் தேர்வுக்குக் குழுவுக்கு நியமிக்கப்படுவர். மேலும் இந்தக் குழுவில் சிபிஎஸ்இ பரிந்துரைக்கும் நபர் ஒருவரும் மாநில கல்விச் சட்டத்தின் படி மாநில அரசு நியமிக்கும் நபர் அல்லது நபர்களும் இடம்பெற்றாக வேண்டும்.

இதில் வீட்டோ அதிகாரம் என்ற தனிப்பட்ட அதிகாரம் மேற்கூறிய குழுவில் கடைசி 2 பிரிவுகளில் உள்ளவர்களுக்கே.

சுருக்கமாக சிபிஎஸ்இ அல்லது மாநில அரசு பிரதிநிதிகளால் மறுக்கப்படும் நபர் தனியார் பள்ளிகளில் கூட முதல்வராக முடியாது.

Thursday, December 22, 2016

TPF closing balance



posted from Bloggeroid

சிலேடை- கலைஞர்


posted from Bloggeroid

_DEE PROCEEDINGS- பணிமாறுதல் மூலம் புதிதாக பணியேற்றுள்ள AEEO -களுக்கு 26,27 டிசம்பர் ஆகிய இரண்டு நாட்கள் மேலாண்மை பயிற்சி -இயக்குநர் செயல்முறைகள்_*


posted from Bloggeroid

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதி


ரயில் டிக்கெட் பதிவு செய்வதற்கு புதிய வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஐஆர்சிடிசி புதிய ஆப் ஒன்றை அகிமுகப்படுத்தியது. அதன்மூலம் எளிதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதுபோன்று, ரயில் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வேயில் புதிய வசதிகளை ரயில்வேதுறை அறிவித்து வருகிறது. முன்பு, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமென்றால் ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் நின்று முன்பதிவு செய்ய வேண்டும். அதன்பின், இணையம்வழியாக முன்பதிவு செய்யும் வசதி வந்தது. பின்பு, ரயில்வே ஆப் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதற்கெல்லாம் இணைய வசதி தேவை.

இனி, ரயில் டிக்கெட் முன்பதிவுசெய்ய யாரும் இன்டெர்நெட்டை தேடியோ அல்லது ரயில் நிலையத்துக்கோ அலைய வேண்டாம். ‘139’ என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி, எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்யும்வகையில் சிறந்த சேவையை ரயில்வே துறை அறிமுகப்படுதியுள்ளது. இதற்கு வங்கிக் கணக்குடன் செல்போன் எண்ணை இணைத்திருந்தால், டிக்கெட் கட்டணம் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும். இந்த புதிய சேவையில் டிக்கெட் முன்பதிவு செய்பவர், எத்தனைபேர் பயணம் செய்ய இருக்கிறார்கள், பயணத் தேதி, எந்த வகுப்பில் பயணிக்க வேண்டும், பெயர், வயது, ரயில் எண் ஆகியவற்றை 139 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

இதையடுத்து, ரயில்வே துறையிடமிருந்து கட்டணத்துக்கான பரிமாற்ற அடையாள எண் அனுப்பிவைக்கப்படும். டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று, நமது அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் டிக்கெட் கட்டணத் தொகையும் அனுப்பி வைக்கப்படும். அதன்பின், பணப் பரிமாற்ற பாஸ்வேர்டு அனுப்பப்படும். அதை உறுதிசெய்தால், கட்டணம் வங்கிக் கணக்கிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும். இதன்மூலம், எளிதாக ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம். இணையம்மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.1௦ லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டம் இந்த புதிய சேவைக்கும் பொருந்தும் என ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு ஐஆர்சிடிசி-யில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். இணைய வசதி இல்லாமல் சாதாரண அலைபேசி வைத்திருப்பவர்களுக்கும், மின்னணு பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கும் இந்த வசதியை கொண்டுவந்துள்ளதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.

அரை சம்பள விடுப்பு கணக்கிடுதல்


posted from Bloggeroid

கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமை செயலர்



தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் நியமனம்!

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் சற்றுமுன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்து அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்வாக சீர்திருத்தம், கண்காணிப்பு ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 1981-ஆம் ஐஏஎஸ் பேட்ச் என்பது குறிப்பிடத்தக்கது.

posted from Bloggeroid

Wednesday, December 21, 2016

விதிகளை தளர்த்திய ரிசர்வ் வங்கி


விதிகளை மீண்டும் மாற்றியது ரிசர்வ் வங்கி

வங்கிக்கணக்கில் கேஒய்சி விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், ரூ.5,000க்கு மேல் செல்லாத நோட்டு டெபாசிட் செய்வதற்கு  தடையில்லை. விசாரணை எதுவும் இருக்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டு செல்லாது என  கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டை வங்கிக்கணக்கில் டெபாசிட்  செய்து மாற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இருப்பினும் கணக்கில் ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்தால் கேள்வி  இருக்காது. அதற்கு மேல் டெபாசிட் செய்பவர்கள் வருமான வரித்துறையிடம் வருவாய் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என  தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மத்திய அரசு, ஜன்தன் உட்பட அனைத்து கணக்குகளிலும் டெபாசிட் செய்யப்படும் தொகை கண்காணிக்கப்படும். செயல்படாத அல்லது  நீண்ட நாட்களாக பெரிய அளவில் பரிவர்த்தனை அல்லாத கணக்கில் டெபாசிட் உயர்ந்தால் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தனர்.  இப்படி நாளும் மாறும் விதிகளால் மக்கள் பெரும் குழப்பம் அடைந்து வருகின்றனர். பழைய நோட்டு டெபாசிட் செய்வதற்கான அவகாசம்  இந்த மாதம் 30ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ரிசர்வ் வங்கி கடந்த திங்கட்கிழமை புது அறிவிப்பு வெளியிட்டது. இதில், பழைய  ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டை வங்கியில் இனி ரூ.5,000 மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். அதற்கு மேல் டெபாசிட் செய்பவர்களிடம்  வங்கி அதிகாரிகள் 2 பேர் விசாரணை நடத்துவார்கள்.

இதில் தாமதமாக டெபாசிட் செய்வதற்கான காரணமும் கேட்கப்படும். விளக்கம் திருப்திகரமாக இருந்தால் மட்டுமே டெபாசிட் செய்ய  அனுமதிக்கப்படும் என தெரிவித்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில்கடும் எதிர்ப்பு எழுந்தது. பழைய நோட்டு செல்லாது அறிவிப்புக்கு பிறகு  வங்கிகளில் கூட்டம் குவிந்தபோது, டிசம்பர் 30ம் தேதி வரை அவகாசம் உள்ளது. எனவே அவசரம் காட்ட வேண்டாம் என பிரதமரும்,  நிதியமைச்சரும் கூறியிருந்ததை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்து நிதியமைச்சர் அருண்ஜெட்லி அளித்த விளக்கத்தில்,  மக்கள் தயக்கமின்றி ஒரே தவணையாக டெபாசிட் செய்யலாம்.

திரும்ப திரும்ப டெபாசிட் செய்யும்போது சந்தேகம் எழுகிறது என்றார். இதன்பிறகு ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட உத்தரவில், ‘‘கேஒய்சி  (உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்) விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், ரூ.5,000க்கு மேல் தாராளமாக  டெபாசிட் செய்யலாம். எந்த கேள்வியும் இருக்காது. கேஒய்சி விவரங்கள் உள்ளவர்களுக்கு முன்னர் அறிவித்த கட்டுப்பாடு பொருந்தாது’’ என  தெரிவித்துள்ளது.

அந்நிய செலாவணி விதி மீறல்: 5 வங்கிகளுக்கு அபாராதம்

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999ல் உள்ள விதி முறைகளை மீறி செயல்பட்ட 5 வங்கிகளுக்கு அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி  நேற்று உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பாங்க் ஆப் அமெரிக்கா, பாங்க் ஆப் டோக்கியோ மிட்சுபிஷி, ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து,  ஸ்டாண்டர்டு சார்டர்டு வங்கி ஆகியவற்றுக்கு தலா ரூ.10,000, டட்சு வங்கிக்கு ரூ.20,000 விதிக்கப்பட்டுள்ளது.

* ரூ.5,000க்கு மேல் டெபாசிட் செய்தால், 2 அதிகாரிகள் விசாரணைக்கு பிறகே அனுமதிக்கப்படும் என 19ம் தேதி உத்தரவு வெளியானது.
* வாடிக்கையாளரின் விளக்கம் பதிவு செய்யப்பட்டு, கணக்கு தணிக்கை செய்ய முடிவு செய்திருந்தது.
* கரீப் கல்யாண் திட்டத்துக்கு மட்டும் டெபாசிட் உச்சவரம்பு இல்லை என அறிவிக்கப்பட்டது.
* டிசம்பர் 30 வரை அவகாசம் என்ற முடிவில் திடீர் கெடுபிடி புகுந்ததால் மக்கள் கொதிப்பு
* கடும் எதிர்ப்புக்கு பிறகு, முடிவில் பின்வாங்கிய ரிசர்வ் வங்கி, கெடுபிடியை தளர்த்தியது.
* ரூபாய் நோட்டு விவகாரத்தில் 43 நாளில் 60 மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

நீட் தேர்வு

தமிழ் உட்பட 8 மொழிகளில் நீட் தேர்வு!
        2017-18-ம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வை தமிழ் உட்பட 8 மொழிகள் எழுதலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, வங்காளம், அசாமி ஆகிய 8 மொழிகளில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.

பள்ளிக்கூட பிரார்த்தனை கூட்டத்தில் போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை


போக்குவரத்து விதிகள் குறித்து பள்ளிக்கூட பிரார்த்தனை கூட்டத்தில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சுற்றறிக்கை போக்குவரத்து விதிகளை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

விழிப்புணர்வு பள்ளிக்கூட பிரார்த்தனை கூட்டத்தில் வாரம் இருமுறையாவது மாணவ–மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டும். அப்போது போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வலியுறுத்துங்கள். மேலும் இதுகுறித்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுக்க வைக்க வேண்டும். குறைந்தது 2 நிமிடங்கள் இதற்காக ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் மாணவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழியையும் அவர் கூறியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:– போக்குவரத்து விதிகள் நான் போக்குவரத்து விதிகளை மதிப்பேன். நன்றாக பழகியபிறகே வாகனம் ஓட்டுவேன். டிரைவிங் லைசென்சு பெற்றபிறகே வாகனம் ஓட்டுவேன். என் பெற்றோர் வாகனம் ஓட்டும்போது இருசக்கர வாகனமாக இருந்தால் ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவேன். பெற்றோர் கார் ஓட்டும்போது ‘சீட் பெல்ட்’ அணிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவேன்.

நான் வேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன். ஓட்டும்போது செல்போன் பயன்படுத்த மாட்டேன். வாகனம் ஓட்டும்போது எனது பெற்றோரையும் செல்போன் பயன்படுத்த விட மாட்டேன். பஸ் படிக்கட்டில் பயணிக்க மாட்டேன். அசதியாக இருக்கும்போது வாகனம் ஓட்ட மாட்டேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க 'ஸ்டூடண்ட் கனெக்ட்' சேவை


கல்லுாரி, பல்கலை மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க 'ஸ்டூடண்ட் கனெக்ட்' சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,'' என, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா தெரிவித்தார். அவர் கூறியதாவது:

இச்சேவையின் மூலம் நாட்டில் 37 பாஸ்போர்ட் அலுவலகங்களுக்குட்பட்ட கல்லுாரி, பல்கலை மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது 89 சேவை மையங்கள் மூலம் தினமும் 50 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. 'ஸ்டூடண்ட் கனெக்ட்' மூலம் கல்லுாரி, பல்கலைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

மாணவர்கள் வேலைநாட்களில் அருகிலுள்ள சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இந்த வசதியை கல்லுாரி, பல்கலை பேராசிரியர்கள், ஊழியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மாணவர்கள் தங்கியுள்ள முகவரி அல்லது பெற்றோர் நிரந்தர முகவரியில் பாஸ்போர்ட் பெறலாம். பிறப்பு சான்று, 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்று, முகவரி ஆதாரமாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உட்பட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இணைக்க வேண்டும். www.passportindia.gov.in என்ற இணையத்தில் மேலும் விவரங்களை அறியலாம். பாஸ்போர்ட் சேவை மையங்களில், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்படும்.

சமர்ப்பிக்காதவர்கள், 60 நாட்களுக்குள் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், என்றார்.