இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, November 10, 2016

பிற பணிக்கு (On Duty) செல்லும் தலைமை ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள்


பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில் சிலர், பள்ளி வேலை நாட்களில், பிற பணி என்ற பெயரில், வெளியூர் செல்வதும், சொந்த பணிகளை கவனிப்பதாகவும், அரசின் கவனத்திற்கு புகார் சென்றது. இதனால், அலுவலக பணிகளுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதை தவிர்க்க, பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும்.
பிற பணி விவரங்களை, பள்ளியில் பராமரிக்கப்படும் நடமாடும் பதிவேட்டில் பதிய வேண்டும். இதே விவரங்களை, சி.இ.ஓ., அலுவலக நடமாடும் பதிவேட்டிலும் இடம் பெற செய்ய வேண்டும்.

சி.இ.ஓ.,க்கள் தங்களது மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின், பிற பணிகளை அறிந்து, தேவைப்படும் பட்சத்தில், உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்திற்காக மட்டுமே, தலைமை ஆசிரியர்களை, சி.இ.ஓ.,க்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் வரவழைக்க வேண்டும்.

சி.இ.ஓ., - டி.இ.ஓ., அலுவலகங்களில் தபால் கொடுத்தல் போன்ற சாதாரண பணிகளுக்கு, பள்ளி அலுவலக ஊழியர் அல்லது பணி சுமையில்லாத பிற ஆசிரியர்களை பயன்படுத்தலாம். இந்த விதிமுறைகள் அடங்கிய உத்தரவு கடிதம், பள்ளிக்கல்வித் துறை மூலம், சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வாவ்... இனி ஆன்ட்ராய்ட் ஆப், 3D மூலம் பாடம் படிக்கலாம்..!-சக்கரராஜன்


"இளமையில் கல்வி, பசுமரத்தாணி" என்று கூறுவார்கள். அதற்கு ஏற்றார் போல்தான் குழந்தைகளை சிறு வயதிலேயே பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள். ஆனால், அவ்வாறு செய்தல், குழந்தைகளுக்கு ஒரு நல்ல அனுபவமாக அமைகிறதா என்பது கேள்விக் குறிதான். மாணவர்கள், கல்வியை சுகமாக பார்ப்பதை விட, சுமையாக பார்ப்பதுதான் அதிகம் என்பது சோகமான உண்மை.

இதனை தவிர்க்க ஒரு "இன்டராக்டிவ்" கல்வி முறையை அமைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் பரிந்துரை. அதன் முதல்படியாக 3D படங்களைக் கொண்ட ஒரு ஆண்ட்ராய்ட் ஆப்பை பள்ளி கல்வித் துறையின் தகவல் மற்றும் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ளது.
என்ன செய்யும் இந்த ஆப்?
பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகம். அந்த வருட தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் தான் வாழ்வில் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல முடியும் என்ற கட்டாயம்.

என்னதான் முழு புத்தகத்தையும் மனப்பாடம் செய்து அப்படியே தேர்வில் எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும், படிக்கும் பாடங்களை புரிந்து படிப்பதால் வரும் சுவையான அனுபவம் தனி சுகம்தான். இதனை ஊக்குவிக்கதான் இந்த ஆப் வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித் துறை கூறியுள்ளது.
தகவல் அடையாள தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆப், கேமராவை பயன்படுத்தி புத்தகத்தை ஸ்கேன் செய்து கொள்ளும். புத்தகத்தில் என்ன தகவல் இருக்கின்றதோ அதன் 3D அல்லது 2D படம் உடனே ஆப்பில் காண்பிக்கப்படும்.

தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் இந்த ஆப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
"கிட்டத்தட்ட 141 பாடங்களை நாங்கள் இந்த ஆப்பில் காண்பிக்க வழி வகுத்துள்ளோம். இந்த ஆப்பை எந்த ஆண்ட்ராய்ட் போனிலும் பயன்படுத்தலாம். எங்கள் வசம் உள்ள அனைத்து தொழில்நுட்பத்தையும் வைத்து, தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மையம் இந்த ஆப்பை வடிவமைத்துள்ளது. தகவல் அடையாள தொழில்நுட்பம் முதன் முறையாக இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. அது தமிழ் புத்தகங்களில் பயன்படுத்தப்படுவது மிகவும் பெருமையாக உள்ளது.
முழுக் கவனம் செலுத்துவதற்காக ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கின்றோம். 1600 ஆசிரியர்களுக்கு ஆப்பில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 240 ஆசிரியர்கள் சேர்ந்துதான் பாடங்களில் எது தேவையானப் பிரிவு என்று முடிவு செய்து கொடுத்தார்கள்.", என்றார் பள்ளி கல்வத் துறையின் செயலாளர் சபீதா.

"அனைத்து மாணவர்களிடமும் ஆன்ட்ராய்ட் போன் இருக்க வாய்ப்பு குறைவு என்பதால் பள்ளிகளில் இருக்கும் கணினிகளில் பயன்படுத்தும் வகையில் சி.டிகளை அளிக்கப்போகிறோம்.", என்றார் தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மைய துணை பேராசிரியர் அசிர் சூலியஸ்.
எப்படி பயன் படுத்துவது?
ஆன்ட்ராய்ட் ப்லே ஸ்டோரில் "TN SCHOOLS LIVE" என்ற ஆப்பை டவ்ன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
அப்பை ஓபன் செய்ததும் பத்தாம் வகுப்பா பன்னிரெண்டாம் வகுப்பா என்று செலக்ட் செய்து விட்டு, புத்தகத்திற்கு நேராக கேமராவை காண்பிக்க வேண்டும்.
அந்த ஆப் புத்தகத்தில் இருக்கும் தகவலை அடையாளம் கண்டு, அதற்கேற்ற 3D புகைப்படங்களை காண்பிக்கும்.
கூடிய விரைவில் இந்த ஆப் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் மொத்த பாடத்திட்டத்தையும் கவர் செய்யும்

புதிய ஐநூறு ரூபாய்


posted from Bloggeroid

*SSA - குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல்-கூடுதல் அறிவுரைகள் வழங்கி மாநில திட்ட இயக்குநர் உத்தரவு*



posted from Bloggeroid

அகவிலைப்படி உயர்வு: ஓரிரு நாள்களில் அறிவிப்பு


அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் வரை உயர்வு கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகவுள்ளது.

மத்திய அரசு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய பிறகு அகவிலைப்படியை குறைந்த சதவீத அளவுக்கு அறிவித்தது. தமிழகத்தில் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படாத காரணத்தால் அகவிலைப்படி உயர்வு அதிகளவில் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், ரூ.1,000 முதல் ரூ.6 ஆயிரம் வரை அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு கூடுதலாகக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது

அடுத்த ஆண்டும் பழைய 'சிலபஸ்' பிளஸ் 2 மாணவர்கள் ஏமாற்றம்


'நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில், பிளஸ் 2வுக்கு, அடுத்த ஆண்டும் புதிய பாடத்திட்டம் இல்லை' என, அமைச்சர் அறிவித்துள்ளதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிளஸ் 2 முடித்தவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

இத்தேர்வு, இந்த ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லுாரி இடங்களுக்கும் வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும், 'நீட்' தேர்வில், தமிழக மாணவர்கள் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அமலில் உள்ள, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டம், நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் சேர்வதற்கான, ஜே.இ.இ., தேர்வை சந்திக்கும் வகையிலும் இல்லை என, கல்வியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில், 2006ல், அறிமுகமான, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், 10 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளதால், பெற்றோரும், மாணவர்களும் கவலையில் உள்ளனர். வரும் கல்வியாண்டிலாவது, புதிய பாடத்திட்டம் அமலாகும் என, எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், 'அடுத்த கல்வி ஆண்டிலும், பழைய பாடத்திட்டமே செயல்பாட்டில் இருக்கும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஒப்புதலுக்காக, புதிய பாடத்திட்டம் காத்திருப்பதாக அவர் கூறியுள்ளதால், மாணவர்கள், பெற்றோர் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆசிரியர் தகுதி தேர்வில் 'வெயிட்டேஜ்' முறை மாறுமா


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு சிக்கல் தீர்ந்து விட்ட நிலையில், 'வெயிட்டேஜ்' முறையை மாற்ற வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த, 2012ல் அறிமுகமான, 'டெட்' தேர்வில், 90 மதிப்பெண் எடுத்தால், ஆசிரியர் பணிக்கு தகுதி என, அறிவிக்கப்பட்டது.

அதாவது, 'டெட்' தேர்வு மதிப்பெண், 60 சதவீதமாகவும், 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்ட படிப்புகளின் மதிப்பெண்கள், 40 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்ணாகவும் மாற்றப்பட்டு, தேர்ச்சி நிர்ணயிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, பல ஆயிரம் பேர் பணியில் நியமிக்கப்பட்டனர். இதன்பின், 2013ல் நடத்தப்பட்ட இரண்டாவது தேர்வில், இந்த விதியில் மாற்றம் வந்தது.

முன்னேறிய வகுப்பினர் தவிர மற்றவர்கள், மொத்தம், 150 மதிப்பெண்ணில், 85 மதிப்பெண் எடுத்தால் போதும் என்றும், இட ஒதுக்கீடு விதிப்படி, ஐந்து மதிப்பெண் தளர்வும் அளிக்கப்பட்டது. அதனால், 'டெட்' தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்தும், இட ஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணால், பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் சிலர், மதிப்பெண் தளர்வுக்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை, இரு தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், 'மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த, ஆசிரியர் தகுதி தேர்வு விரைவில் நடத்தப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின், வெயிட்டேஜ் முறை தொடர்ந்தால், 10 ஆண்டுகளுக்கு முன், பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்தோருக்கு வேலை வாய்ப்பு சிக்கலாகும். 10 ஆண்டுகளுக்கு முன் படித்தோருக்கு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், தாராளமான மதிப்பெண் முறை கிடையாது. தற்போதுள்ளது போல், 'ப்ளூ பிரிண்ட்' முறையோ, புத்தகத்தில் பாடத்தின் பின்பக்க கேள்விகள் மட்டுமே இடம் பெறும் என்ற முறையோ கிடையாது. அதனால், 10ம் வகுப்பில், 400 மதிப்பெண்களும், பிளஸ் 2வில், 1,000 மதிப்பெண்கள் எடுப்பதும் குதிரைக்கொம்பாக இருந்தது.

சமீப காலமாக, பொதுத்தேர்வுகளில் தாராளமாக மதிப்பெண் வழங்கப்படுகிறது. எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் போது, 10 ஆண்டுகளுக்கு முன் படித்தோருக்கு மிக குறைந்த மதிப்பெண்ணே கிடைக்கும் என்பதால், அவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.

SLAS TEST.tentative date


posted from Bloggeroid

ஒரு வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளிவரும்.முதல்வர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்: அமைச்சர் தகவல்


உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு அளிப்பது மற்றும் ‘வெயிட்டேஜ்’ முறையில் தேர்வு என்பது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை குறித்த வழக்கை விசாரித்த உச்ச்சநீதிமன்றம் அரசாணை செல்லும் என்று சமீபத்தில் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும். மேலும் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயாராக இருக்கிறது. முதலமைச்சர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். கல்வித் தரத்தைப்பொறுத்த அளவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கல்வித்திட்டம் நன்றாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2012)

Click below

https://www.mediafire.com/download/bbzygbgn18zdcjg

புதிய 2000 ரூபாய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 14 தகவல்கள்

புதிய 2000 ரூபாயை பற்றி பொதுமக்கள் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டிய 14 தகவல்கள் கீழே..

1) புதிய 2000 ரூபாய் நோட்டு 166 X 66 மி.மீ அளவில் உள்ளது. இது பழைய 1000 ரூபாய் நோட்டை விடச் சற்று சிறிய அளவில் இருக்கிறது. பழைய 1000 ரூபாய் நோட்டு 177 X 73 மி.மீ அளவில் இருந்தது.

2) இப்போது வெளியிடப்பட்டுள்ள 2,000 ரூபாய் நோட்டு கத்திரிப்பூ நிறத்தில் உள்ளது.

பாதுகாப்பில்லாமல் பயணமாகும் புது ரூபாய் நோட்டுகள்!
2000 நோட்டின் முன் பகுதி...

2) புதிய 2,000 நோட்டின் முன்புறம் மகாத்மா காந்தி உருவம், அசோகத் தூண் சின்னம்,  கோடுகள் மற்றும் அடையாள குறிகள் இடம்பெற்றுள்ளன. இது பழைய 500,1000 ரூபாய் நோட்டிலும் இடம்பெற்றிருந்தது.

3) கண்பார்வையற்றோர்க்கு வசதியாக நோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் ஏழு கோடுகளும், வலதுபுறத்தில் கிடைமட்ட செவ்வகமாக ரூபாய் 2000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

4) மகாத்மா காந்தியின் புகைப்படம் நோட்டின் வலதுபுறத்தில் இருந்து மையப்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

5)  பணத்தின் மதிப்பான இரண்டாயிரத்தின்  நியூமரிக்கல் எண் நோட்டின் வலது கீழ் பகுதியில் அமைந்துள்ளது.  இடது பக்கத்தில் தேவநாகிரி மொழியிலும் இடம்பெற்றுள்ளது.

6) ரூபாய் நோட்டில் அச்சடிக்கப்படும்  பாதுகாப்பு இழை பச்சை கலரில் இருந்து நீலக்கலருக்கு மாறியுள்ளது.

7) இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உறுதி மொழியுடன் அவரது  கையொப்பம் வலதுபக்கம் இடம்பெற்றுள்ளது. பழைய நோட்டுகளில் கிழ்பகுதிகளில் இது இருக்கும். புதிய நோட்டில் செங்குத்தாக இது இடம் பெற்றுள்ளது.

8) ரூபாய் நோட்டின் எண் வலது கீழ் பகுதியில் உள்ளது. எண்கள் சிறிதிலிருந்து பெரிதாக அதிகரிக்கிறது.

Advertisement

9) மையப்பகுதியில் உள்ள காந்தி புகைப்படத்தின் அருகில் மிகச் சிறிய எழுத்துக்களில் "RBI" மற்றும் "2000" ஆகிய எழுத்துகள் உள்ளன.

10) மகாத்மா காந்தி புகைப்படம் மற்றும் பணத்தின் மதிப்பான ரூபாய் 2000க்கான வாட்டர் மார்க்கும் அச்சிடப்பட்டுள்ளது.

2000 நோட்டின் பின்பகுதி..

11) நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு இடது பக்கம் இருக்கிறது..

12) 'தூய்மை இந்தியா'  திட்டத்தின் குறியீடு மற்றும் பிரசார வாக்கியம் உள்ளது.

13) இரண்டாயிரம் ரூபாய் என்ற சொல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் நோட்டின் நடுவே அச்சடிக்கப்பட்டுள்ளது.

14)  மங்கள்யான் செயற்கைக் கோளை பெருமைப்படுத்தும் வகையில் அதன் புகைப்படம் புதிய 2000 ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ளது.

- ஆ.நந்தகுமார், சாய்ராம்( மாணவப் பத்திரிக்கையாளர்)

Wednesday, November 09, 2016

ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வு முறை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள இரு அரசாணைகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பை ரத்து செய்துள்ளது.

இரு அரசாணைகள்: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி) தகுதிகாண் (வெயிட்டேஜ்) முறையை 2013-ஆம் ஆண்டில் தமிழக அரசு கொண்டு வந்தது. இது தொடர்பாக 2014, பிப்ரவரி 6-ஆம் தேதியிட்ட அரசாணை 25-இல் "தேர்வெழுதும் அனைத்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்கும் ஐந்து சதவீத மதிப்பெண் விலக்கு அளிக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2014, மே 30-ஆம் தேதியிட்ட அரசாணை 71-இல் தேர்வெழுதிய ஆசிரியர்களின் பணி நியமனத்தின்போது தகுதிகாண் (வெயிட்டேஜ்) முறை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் "தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டிய மதிப்பெண் சலுகையை அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும்' என்று சில ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் 2014 செப்டம்பர் 22-இல் தீர்ப்பளித்தது. இதே விவகாரத்தில் மற்றொரு ஆசிரியர் பிரிவினர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர். அதில், ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர் எனக் கூறி தமிழக அரசின் அரசாணைகளை ரத்து செய்து 2014, செப்டம்பர் 25-இல் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து "ஒரே விவகாரத்தில் இரு நீதிமன்றங்கள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்ததால் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்' என்று கூறி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தீர்ப்பு: இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து புதன்கிழமை அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு: ஆசிரியர் தகுதித் தேர்வு முறை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட இரு அரசாணைகள், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வழிமுறைகளின்படி வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. அத்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பயனாளர்களுக்கு மதிப்பெண் சலுகை அளித்துள்ளது. எனவேதான் தமிழக அரசின் அரசாணைகளை உறுதிப்படுத்தி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வழிமுறைகளின் அம்சங்களை கவனத்தில் கொள்ளாமல் தமிழக அரசின் நடவடிக்கையை தன்னிச்சையானதாகக் கருதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. எனவே மதுரைக் கிளை அளித்த தீர்ப்பை ரத்து செய்கிறோம். இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக தேர்வில் வெற்றி பெறாதவர்கள் தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் நடத்தப்படும்: அமைச்சர் தகவல்


ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்தெரிவித்தார். இதுகுறித்து திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவு உள்ளிட்ட பல்வேறு மக்களுக்காக ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதமாக மத்திய அரசு விதித்திருந்த தகுதி மதிப்பெண்ணை 55ஆக குறைத்தார். அதில், 80 ஆயிரம் பேருக்கு மேல் வெற்றிபெற்றும் அதற்கான பயன் கிடைக்காமல் இருந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 55 சதவீத மதிப்பெண் என்ற முடிவுக்கு, தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் நற்சான்று அளித்திருக்கிறது. இதற்கான உரிமை மாநில அரசுக்கு இருக்கிறது என்ற முடிவை ஒரு வருட சட்டப் போராட்டத்துக்கு பிறகு உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.

நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும். பள்ளிக் கல்வித் துறையை பொருத்தவரை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியுமோ அவ்வளவு பேருக்கும் உருவாக்கித் தரப்படும் என்றார்.

மாணவர்களிடம் பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை


மாணவர்களிடம் பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். பள்ளி கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:– முதலுதவி பெட்டிகள்

* தங்கள் எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் மூலம் அறிவுரை வழங்க வேண்டும்.

*ஒவ்வொரு பள்ளியிலும் முதலுதவி பெட்டி மற்றும் தேவையான மருந்து பொருட்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

*ஆசிரியர்கள் மற்றும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தீயணைப்பு துறை அலுவலர்கள் மூலமாக தீயணைப்பு தொடர்பான பயிற்சி மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பான உரிய வல்லுனர்களைக் கொண்டு பேரிடர் மேலாண்மை பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும். பேரிடர் மேலாண்மை

*பேரிடர் மேலாண்மை சார்பாக பள்ளி அளவில் தலைமையாசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் கொண்ட ஒரு குழுவினை ஏற்படுத்த வேண்டும். இக்குழு கூட்டம் நடைபெறும் போது அருகாமையில் உள்ள தீயணைப்புத்துறை அலுவலர் மற்றும் பேரிடர் மேலாண்மையில் பயிற்சி பெற்ற வல்லுனர்களையும் கூட்டத்திற்கு கலந்து கொள்ள அழைக்கப்பட வேண்டும்.

* அவசர தேவைக்கான மாவட்ட பேரிடர் மேலாண்மை அமைப்பு, தீயணைப்புத்துறை, காவல் துறை, சுகாதாரத்துறை மற்றும் 108 அவசர ஊர்தி தொலைபேசி எண்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களின் பெயர் ஆகியவை அறிவிப்புப் பலகை மற்றும் முக்கியமான இடங்களில் தெரிவிக்கப்பட வேண்டும்.

*மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை தொடர்பான மாதிரி பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பேரிடர் சார்பாக ஒலிக்கப்படும் நீண்ட மணி ஒலி எவை என்பதை மாணவர்கள் அறிய செய்ய வேண்டும். தீயணைப்பு பயிற்சி

* ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14 –ந்தேதி அன்று மாணவர்களிடையே தீயணைப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தீயணைப்பு பாதுகாப்பு நாள், தீயணைப்புத் துறையின் வாயிலாக பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும்.

*இறை வணக்கக் கூட்டத்தின் போது பேரிடர் மேலாண்மை சார்பாக உரிய அறிவுரைகளை மாணவர்களுக்கு தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் மூலமாக அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும். போட்டிகள் மேலும் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு தொடர்பாக 6 முதல் 12–ம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாநில அளவில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி 23, 24 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த

ஆசிரியர் தகுதி தேர்வுக்குரிய நீதிமன்ற தீர்ப்பு

Click below

https://drive.google.com/file/d/0B_YeNwgt8TH5UEFyUVFuOTZaazQ/view?usp=drivesdk