இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, August 10, 2016

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மாற்ற அரசு திட்டம்


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான, கருத்து கேட்பு கூட்டம், டில்லியில் நடக்கவுள்ளது. உலகில் மாறி வரும் தொழில்நுட்பம், கல்வியின் தேவை, மாணவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். இதன்படி, சி.பி.எஸ்.இ., அமைப்பு, தங்கள் பள்ளி களுக்கான பாடத்திட்டத்தை மாற்றி, தரம் உயர்த்த முடிவு செய்துள்ளது.

இதற்கான கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பெற்றோர்களின் கருத்து கேட்பு உயர்மட்ட ஆலோசனை கூட்டம், டில்லியில் வரும், 23, 24ம் தேதிகளில் நடக்கிறது. இதில், பாடத்திட்டம், தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வருதல், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பாடத்திட்டம் ஏற்படுத்துதல் போன்ற, அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன

Policy note higher education department

Click below

https://app.box.com/s/xoa5ppedgzey3svmymrfnt3hsvsckyhv

Tuesday, August 09, 2016

TN budjet


தொலைதூர-மலைப் பகுதியில் குடியிருப்புகளில் வாழும் குழந்தைகள் இடர்பாடுகள் ஏதுமில்லாமல் பள்ளிக்குச் செல்வது அவசியமாகும். அவர்களது இடைநிற்றலைத் தவிர்க்க போக்குவரத்து வசதி, வழிக் காவலர் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் நிகழ் கல்வியாண்டிலும் செயல்படுத்தப்படும்.

பள்ளிகளில் இருந்து இடைநின்ற குழந்தைகளும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளும் கல்வி பயில சிறப்புப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

நூல்கள் மின்மயம்: தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள சுமார் ஆயிரம் நூல்கள் தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து மின்மயமாக்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

93 பகுதிநேர நூலகங்களானது ஊர்ப்புற நூலகங்களாகத் தரம் உயர்த்தப்படும். இதற்கென நூலகர் பணியிடங்கள் உருவாக்கப்படும். 32 மாவட்டங்களில் உள்ள மைய நூலகங்களில் சூரியஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் அளிக்கப்படும்.

இலவச சிறப்புப் பயிற்சி மையம்:

சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி-பயிற்சி நிறுவனத்தில் ஆங்கில வழியில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு தொடங்கப்படும். இதனால், ஆண்டுதோறும் 50 மாணவர்கள் பயனடைவர்.

பார்வையற்றவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியானது மூன்று மாவட்ட ஆசிரியர் கல்வி-பயிற்சி நிறுவனங்களில் அனைத்து தேர்வர்களுக்கும் அளிக்கப்படும்.

பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு:

அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிகழ் கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பெற அனைத்து அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகளில் போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படும்.

3-ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பாடப் புத்தகங்களுடன் இலக்கணப் பயிற்சித் தாள்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

# யோகா என்பது மனம், உடல், ஆன்மாவை ஒருநிலைப்படுத்துவதற்கான பயிற்சியாகும்.

பள்ளி மாணவர்களின் விளையாட்டு செயல்பாடுகளின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாகவும் யோகப் பயிற்சி உள்ளது. எனவே, மதிய உணவு இடைவேளைக்கு முன்னர் இந்தப் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு: பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான கட்டடம், சுத்தமான குடிநீர், தூய்மையான கழிப்பறை, பாதுகாப்பான மின் இணைப்புகள், இருக்கை, போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகள் வகுத்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு சுயநிதி-அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகளின் பெற்றோர் உள்ளடக்கிய 5 உறுப்பினர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் வாரம் ஒருமுறை பள்ளி வேலை நாளொன்றில் பள்ளியைப் பார்வையிட்டு அனைத்து வசதிகளும் கிடைக்கிறதா என்பதை ஆய்வு செய்வர்.

அவர்கள் ஆய்வு செய்த விவரங்களைப் பள்ளி பதிவேட்டில் பதிவு செய்வர். குழுவினரால் குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகளை பள்ளி நிர்வாகம் நிறைவு செய்துள்ளதா என்பதை மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர் ஆய்வின்போது உறுதி செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

# தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்ட உயர் கல்வி புத்தகங்கள், டிஜிட்டல் முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.சமநிலை கல்வி

# சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் ஆங்கில வழியில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு அறிமுகம் செய்யப்படும். அடிப்படை கல்வி பெற்றுள்ள நபர்களுக்கு சமநிலைக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, மூன்றாம் வகுப்பு நிலையில் கல்வி கற்பிக்கப்படும். இத்திட்டம் விழுப்புரம், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்படும்.சிறப்பு பயிற்சி மையம்

போட்டி தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக, 32 மாவட்ட மைய நூலகங்களுக்கும் நடப்பு ஆண்டு முதல் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி பாடப் புத்தகங்கள், இரண்டிரண்டு தொகுப்புகள் வழங்கப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்விற்காக மூன்று மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் அனைத்து தேர்வர்களுக்குமான சிறப்பு பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும். அனைத்து பள்ளிகளிலும் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படும்.

கல்வி உதவித்தொகை காலக்கெடு நீட்டிப்பு


சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்வி நிலையங்களில், முதல் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

நடப்பாண்டு, தமிழகத்தில், 1.13 லட்சம் பேருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. விரும்பும் மாணவ, மாணவியர், www.scholarships.gov.in என்ற இணையதளத்தில், தாங்கள் படிக்கும் கல்வி நிலையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, ஜூலை, 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

5,451 இடங்களுக்கு குரூப் - 4 தேர்வு


'குரூப் - 4 பதவிகளில், 5,451 காலியிடங்களுக்கு, நவ., 6ல், எழுத்துத்தேர்வு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், நில அளவை மற்றும் நில ஆவண துறை கள ஆய்வாளர், வரைவாளர், மூன்றாம் நிலை சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர் என, மொத்தம், 5,451 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். தகுதியானவர்கள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், செப்., 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை, செப்., 11ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. எழுத்துத்தேர்வு, நவ., 6ல் நடக்கும்.

தேசிய திறனறி தேர்வு தேதி அறிவிப்பு


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய திறனறித் தேர்வு, இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. மாநில அளவில் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோர், இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதி பெறுகின்றனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் போது, மாதம், 1,250 ரூபாயும், பட்டப்படிப்பு படிக்கும் போது மாதம், 2,000 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும்.தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில் இத்தேர்வு, நவ., 6ல் நடக்கும். இதற்கான விண்ணப்ப அறிவிப்பை, தமிழக அரசின் தேர்வுத்துறை வெளியிடும் என, என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்துள்ளது.

ஹெட்மெட் போடலையா; ரூ.2 ஆயிரம் அபராதம்


மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இதன்படி ஹெட்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினால், ரூ.2 ஆயிரம் அபராதம் உட்பட, சாலை விதி மீறலுக்கான அபராதம் பலமடங்கு உயர்த்தப்படுகிறது. மசோதா குறித்து படிப்பதற்கு போதிய அவகாசம் அளிக்காமல், அவசரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறிய எதிர்ப்பையும் மீறி, மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேறியது.

குடிபோதையில் வாகனம் ஓட்டினால், 10,000 ரூபாய் அபராதம்; சாலை விபத்தில் உயிரிழந்தால், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு; அதிக வேகமாக வாகனத்தை ஓட்டினால், 4,000 ரூபாய் அபராதம்; ஹெட்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினால், 2,000 ரூபாய் அபராதம் உட்பட, சாலை விதி மீறலுக்கான அபராதம் பலமடங்கு உயர்த்தப்படுகிறது.

புதிய ஓய்வூதியம்; மத்திய அரசு விளக்கம்


'கடந்த ஆண்டு இறுதி வரை ஓய்வு பெற்ற, அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும், இந்த மாதத்திலேயே புதிய ஓய்வூதியம் மற்றும் 'அரியர்ஸ்' அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் படி, கடந்த ஆண்டு இறுதி வரை ஓய்வு பெற்றவர்களுக்கு, இந்த மாதம் புதிய ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி முதலான நிலுவைத் தொகை, அரியர்ஸாக வழங்கப்படும். இதுவரை வாங்கிய ஓய்வூதியத்தைவிட, 2.57 மடங்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும். அனைத்து ஓய்வூதிய அலுவலகங்களும், வங்கிகளும், இந்த மாத இறுதிக்குள், புதிய ஓய்வூதியம் மற்றும் அரியர்ஸ் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, ஜனவரி, 1ம் தேதிக்குப் பின், ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

G.O.No.231 Dt: August 09, 2016 PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.07.2016 to 30.09.2016 – Orders – Issued.

Click below

https://app.box.com/s/8dpw63m5rsn7sdpbx6io5in4e74n83bd

Monday, August 08, 2016

TNPSC Group 4 notification

பி.எட் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின்கீழ் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் ஆயிரத்து 777 சீட் உள்ளன. இதில் சேர்வதற்கான விண்ணப்ப விற்பனை ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கியது. தேர்ந்தெடுக்கப்பட்ட 13 கல்லூரிகளில் பி.எட் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகிறது. விண்ணப்பங்களை பெற ஆகஸ்ட் 9ம் தேதி(இன்று) கடைசி நாளாகும். பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10ம் தேதி (நாளை) மாலைக்குள் செயலாளர், பி.எட் மாணவர் சேர்க்கை 2016-17, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சென்னை-5 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் அமலாகாது


'சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில கல்வி வாரிய படிப்புகளுக்கு, ஒரே மாதிரியான பாட முறைகளை அறிமுகம் செய்யும் திட்டம் அரசிடம் இல்லை' என, லோக்சபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது. லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணைஅமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியைச் சேர்ந்தவருமான உபேந்திரா குஷ்வாஹா பதிலளித்தார். அவர் கூறியதாவது:

பல்வேறு மாநிலங் களின் கலாசாரம், மொழி உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து, ஒரே மாதிரியான பாடங்கள் தயாரிக்க வாய்ப்பில்லை. எனவே, சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில கல்வி வாரிய படிப்புகளுக்கு, ஒரே மாதிரியான பாட முறைகளை அறிமுகம் செய்யும் திட்டம் அரசிடம் இல்லை. இருப்பினும், பொதுவான அடிப்படை பண்புகள், சுதந்திர போராட்ட இயக்கம், தேசிய ஒற்றுமையை சாராம்சமாக உடைய விஷயங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, தேசிய கட்டமைப்பில் பாடங்கள் தயாரிக்க, தேசிய கல்விக் கொள்கை திட்டமிட்டு உள்ளது.

இதற்கு, சில மாநிலங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. பள்ளி மாணவர்கள் எடுத்துச் செல்லும் புத்தகப்பையின் எடையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

BRC level maths kit box training for primary and science experiment training for upper primary

இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் மாறுதல் கலந்தாய்வில் மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள். இயக்குநர் உத்தரவு.

Sunday, August 07, 2016

அரசு பள்ளிகளுக்கு உளவியல்ஆலோசகர்கள்


அரசு பள்ளிகளில் மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பது உளவியல் ஆலோசகர்களை, அரசு நியமித்துள்ளது.மது அருந்துதல், மாணவியரை கிண்டல் செய்தல், பஸ்களில் கோஷ்டி மோதலில் ஈடுபடுதல் போன்ற, அரசு பள்ளி மாணவர்களின் தவறான பழக்கங்கள், சமீபகாலமாக அதிகரித்துள்ளன.இதை தவிர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பதுஉளவியல் ஆலோசகர்களை, பள்ளிக்கல்வித் துறை நியமித்துள்ளது. மாவட்ட கல்விஅதிகாரிகள், தங்கள்கட்டுப்பாட்டில் உள்ளபள்ளிகளில், இந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

நல்லாசிரியர் விருது விண்ணப்பிக்க ஆசிரியர்கள் தயக்கம்


நல்லாசிரியர் விருது வழங்குவதில் விதிமீறல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை அடுத்து நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒவ்வொரு ஆண்டும் 500 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவர்களுக்கு ரொக்கத் தொகை, பாராட்டு சான்று வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது செப்டம்பர் மாதம் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து, நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுள்ளவர்கள் ஜூலை மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வழங்கியதில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் விதியை மீறி கல்வி அலுவலர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளதாக கலை ஆசிரியர் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி முதல்வர் தனிப் பிரிவுக்கு புகார் கொடுத்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக அக்டோபர் மாதம் மேற்கண்ட இரண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிக் கல்வி இயக்குநர், அரசு செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கு கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் உரிய பதில் வழங்காமல் மவுனம் காத்துவருவதால் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கலை ஆசிரியர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் மீது வீசாரணை நடக்கிறது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு 22 ஆசிரியர்கள் மட்டுமே நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 3 பேருக்கு மேல் விண்ணப்பிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் நீலகிரி மாவட்ட ஆசிரியர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே நாளை மறுநாளுக்குள் நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், பள்ளி தவிர வீட்டில் தனி வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள், பள்ளியில் பிற பணியில் வெளியே செல்லும் ஆசிரியர்கள் பெயர்களை பரிந்துரை செய்யக்கூடாது, விதிமுறைகளை மீறும் தேர்வுக்குழு உறுப்பினர் மீது நடவடிக்கை பாயும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு போட்டுள்ளது. இதனால், பல ஆசிரியர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாமா, வேண்டாமா என்று தயக்கம் காட்டி வருகின்றனர்

தமிழக அரசு அதிரடி உத்தரவு பணியாற்றும் கிராமங்களில் விஏஓ தங்குவது கட்டாயம்


கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் கிராமத்தில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் முதன்மைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான (பொ) அதுல்ய மிஸ்ரா கலெக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

கிராம நிர்வாக அலுவலர்கள் (விஏஓக்கள்) திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை, தங்களுக்கென உள்ள அரசு அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும். முழுநேர அரசு ஊழியர்கள் என்பதால் வருகைப்பதிவேடு மற்றும் முகாம் பதிவேடு ஆகியவற்றை பராமரிக்க வேண்டும். வருவாய் ஆய்வாளர்கள் இப்பதிவேடுகளை வாரம் ஒருமுறை தணிக்கை செய்து, தாசில்தார் பார்வைக்கு அனுப்ப வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள், கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமத்திற்கோ, களப்பணிக்கோ அல்லது பிற அலுவல் நிமித்தமாக அலுவலகத்தை விட்டுச் செல்லும்போது, அலுவலுக்கான காரணம் மற்றும் உத்தேசமாக திரும்பும்நேரம் ஆகியவற்றை, பொதுமக்கள் காணும்வகையில் அறிவிப்புப் பலகையில் குறிப்பிட வேண்டும்.

மேலும், பொதுமக்கள் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில், தங்களது கைப்பேசி எண்ணை குறிப்பிட்டிருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள், நியமிக்கப்பட்டுள்ள கிராமத்தில் கட்டாயம் தங்கி பணியாற்றவேண்டும். உயர் அலுவலர்கள் கோரும் தகவல், அறிக்கைகளை நேரில் சென்று அளிப்பதை, இயன்றவரை காலவிரயத்தை கருத்தில்கொண்டு தவிர்க்க வேண்டும். அவற்றை அனுப்ப மின்னஞ்சலை பயன்படுத்தலாம். மேற்கண்ட நெறிமுறைகள் தவறாது கடைபிடிக்கப்படுறதா என்பது பற்றி மண்டல துணை தாசில்தார், தாசில்தார், ஆர்டிஓ ஆகியோர், கிராமங்களில் முகாம் செல்லும் நேரங்களில் கண்காணிக்க வேண்டும்.

இதில் எவ்வித விதிமீறல்களுக்கும் இடம் தரக்கூடாது. இந்த நெறிமுறைகளை பின்பற்றாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Saturday, August 06, 2016

தமிழ் எழுத்துக்களுக்கு இணையாக 'சைகை' முறை கண்டுபிடிப்பு : எளிதாக கற்பிக்க ஏற்பாடு


தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை எளிய முறையில் உச்சரிக்கவும், பிழையின்றி எழுதுவதற்கும் 30 வகையான புதிய 'சைகை' முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான 'சிடி'க்கள் தொகுப்பை மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) தயாரித்துள்ளது. தமிழில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் 'மயங்கொலிகள்' எனப்படும் 'ல, ள, ழ, ர, ற, ந, ண, ன' ஆகிய எட்டு எழுத்துக்கள் அதிகம் பயன்படுகின்றன.

ஆனால் பேச்சு வழக்கில் இந்த எழுத்துக்களின் தன்மை குறைந்து உச்சரிப்பு மருவி விடுகிறது. இதன் காரணமாக தமிழ் எழுத்துக்களை உரிய ஓசை, ஏற்ற இறக்கத்துடன் உச்சரிக்க, எழுத மாணவர்கள் சிரமப்படுகின்றனர். சைகை முறை: இதை தவிர்க்கவும், தமிழ் எழுத்துக்களை உரிய வடிவில் எழுதுவதற்கும், 30 நாட்களில் சரியான உச்சரிப்புடன் பேசவும், பிழையின்றி எழுதும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களால் அனைத்து உயிரெழுத்து மற்றும் மெய் எழுத்துக்களுக்கு உரிய 'சைகை' முறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இப்பணியில் எஸ்.சி.இ.ஆர்.டி., யின் மொழிப்புல (லாங்குவேஜ் செல்) ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 1 - 5 வகுப்பு வரை உள்ள தமிழ் பாடநுாலின் அனைத்து பாடங்களையும் 'தாயெனப்படுவது தமிழ்' என்ற தலைப் பில் சி.டி., தொகுப்பை ஆக.,2ல் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இவ்வாரத்தில் பள்ளிகளுக்கு 'சிடி'க்கள் வழங்கப்பட உள்ளன. தொழில்நுட்ப இயக்குனர் அமலம் ஜெரோம் கூறியதாவது:

எஸ்.சி.இ.ஆர்.டி., உதவியுடன் காது கேளாத, வாய் பேசாத மாணவர்களுக்கு கற்பித்தல், பரத நாட்டியத்தின் முத்திரைகள், உளவியல் மற்றும் உடல் மொழி ரீதியிலான 'சைகைகளை' அடிப்படையாக கொண்டு சரியான உச்சரிப்புடன் எழுத்துக்களை எளிதில் புரிய வைத்து பிழையின்றி எழுதுவதற்கு 'சைகைகளை' உருவாக்கி உள்ளோம். எழுத்துக்களை மிக துல்லியமாக புரிந்துகொள்ள பின்னணி காட்சிகள், நவீன தொழில் நுட்ப உத்திகளுடன் 'சிடி' க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, என்றார்.

நான்கு பரிமாண முறையில் அறிவியல் பாட படங்கள்


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், அறிவியல் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நான்கு பரிமாண முறையில் படங்களை காட்டும், 'மொபைல் போன் ஆப்' வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் பாடங்களை எளிதில் புரிய வைக்கும் வகையில், பல புதிய முயற்சிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

இந்த வரிசையில், நான்கு பரிமாணங்களில் படங்களை காட்டும், மொபைல் போன் ஆப் மற்றும் காணொலி காட்சி குறுந்தகடுகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஆப், ஆண்ட்ராய்ட் போனில், tnschools live என்ற பெயரில், கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, பயன் படுத்தலாம். இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் கூறியதாவது:

இந்த மொபைல் போன், 'அப்ளிகேஷனை' கேமரா மொபைல் போனில் பயன்படுத்தும் போது, அந்த கேமரா மூலம் புத்தகத்தில் உள்ள அறிவியல் பாட படங்கள் நான்கு பரிமாணமாக தெரியும். 10ம் வகுப்பில் அறிவியல், பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில், 141 படங்கள் இந்த தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம், 13 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.

இது தொடர்பான, காணொலி காட்சி குறுந்தகடுகள், 6,000 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிப்பது குறித்து, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.