இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, August 05, 2016

Deployment instructions

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது  மாறுதல் கலந்தாய்வில் பணி நிரவலின் போது பொறுப்பாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய விதிகள்.
===============================================
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது  மாறுதல் கலந்தாய்வில் இயக்குநர் அறிவுறுத்தலின்படி  பணி நிரவல் கட்டாயமாக செய்ய உள்ளார்கள்.அதில்

1)மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவல் கிடையாது.
2)பணி நிரவலில்  பணி நிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம் இருப்பின் ஒன்றியத்திற்குள் பணி நிரவல் செய்வார்கள்.
3)பணி நிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம் இல்லை எனில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்வார்கள்.
4)ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்யும் நிலை ஏற்பட்டால் அந்த ஒன்றியத்தில் மிகவும் இளையவர் எவரோ (block level service junior) அவரையே பணி நிரவலில் அதே மாவட்டத்தில் பிற ஒன்றியத்திற்கு நிரவல் செய்ய வேண்டும்.
5)ஒன்றியத்திற்குள் பணி நிரவல் எனும்போது எந்த பள்ளியில் பணி நிரவல் ஏற்படுகிறதோ அந்த பள்ளியில் பணி ஏற்றதில் யார் இளையவரோ ( station junior ) அவரே பணி நிரவல் செய்யப்பட வேண்டும்.பணி நிரவல் செய்யப்பட வேண்டியவர் மாற்று திறனாளி எனில் அவரை விட்டுவிட்டு அந்த பள்ளியில் அவருக்குமுன் பணியில் சேர்ந்தவரை பணி நிரவல் செய்ய வேண்டும்.
6)பணி நிரவல் 30.09.2015 அன்று உள்ள மாணவர்கள் பதிவின் அடிப்படையில் செய்யப்பட உள்ளது.இதில் சிறு விதி தளர்வும் உள்ளது. உதாரணமாக ஒரு பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணியில் இருந்து 30.09.2015ல் மாணவர்கள் பதிவு 55 எனில் ஒரு ஆசிரியர் பணியிடத்தினை நிரவல் செய்வார்கள்.அதே பள்ளியில் 01.08.2016ல் 61 மாணவர்கள் பதிவு உள்ளது எனில் விதி தளர்வு தந்து பணியிடத்தினை நிரவல் செய்யக்கூடாது.அது போலவே ஒரு பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணியில் இருந்து 30.09.2015ல் 61 மாணவர்கள் பதிவு இருந்து 01.08.2016ல் 55 மாணவர்கள் பதிவு உள்ளது என்றாலும் பணி நிரவல் செய்யக்கூடாது

2016 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதலில் நீதிமன்ற வழக்குகள் சார்பான இயக்குநரின் செயல்முறைகள்

*2016 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதலின் போது ஆய்வுமேற்கொள்ள உள்ள இணை மற்றும் துணை இயக்குநர்களின் பட்டியல்*

Thursday, August 04, 2016

பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்த EDUSAT அறிவுரை

டெட்' தேர்வு காலக்கெடு நீட்டிக்கப்படுமா?


மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான என்.சி.டி.இ., உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, ஆசிரியர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், 'என்.சி.டி.இ.,யின் உத்தரவு சரி' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, கட்டாய கல்விச் சட்டத்தின் படி, '2011க்கு பின், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும், 2016 நவம்பருக்குள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். இல்லையென்றால், அவர்கள் ஆசிரியராக பணியாற்ற முடியாது' என தெரிவிக்கப்பட்டது. இதில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.

அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் பெரும்பாலானோர், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், தமிழக அரசின் காலக்கெடு முடிய இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளது. ஆனால், நான்கு ஆண்டுகளாக டெட் தேர்வையே தமிழக அரசு நடத்தவில்லை. அதனால், டெட் தேர்ச்சி பெறாதவர்களுக்கான அவகாசத்தை, தமிழக அரசு நீட்டிக்குமா அல்லது தேர்வை அறிவிக்குமா என, ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தலைமை ஆசிரியர்கள் 86 பேருக்கு பதவி உயர்வு


அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், 86 பேருக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் முதல் நாளில், 257 உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் மாறுதல் பெற்றனர்.

இரண்டாம் நாளான நேற்று, தலைமை ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக இடமாற்றம் அளிக்கும் கலந்தாய்வு நடந்தது. இதற்கு, 168 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 86 பேருக்கு மட்டும் விருப்பமான இடங்கள் கிடைத்தன. மீதமுள்ள, 82 பேர் தலைமை ஆசிரியர்களாகவே பணியை தொடர விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்கு இன்னும், மூன்று ஆண்டுகளுக்கு பதவி உயர்வுக்கு வாய்ப்பில்லை. ஆனால், உதவி தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு இணையான ஊதியம், சலுகை பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈராசிரியர் பள்ளி ஆசிரியர் பணி விடுவிப்பு

Wednesday, August 03, 2016

ஜி.எஸ்.டி என்றால் என்ன


நாடு சுதந்திரமடைந்தபிறகு வரி விதிப்பில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:

* இது ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு விதிக்கப் படும் மறைமுக வரி விதிப்பாகும். இது நாடு முழுவதற்கும் ஒரே அளவாக இருக்கும். பல முன்னேறிய நாடுகள் இத்தகைய வரி விதிப்பு முறையைத்தான் பின்பற்றுகின்றன. உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகிய அனைத்துக்கும் ஒரே முனை வரி விதிப்பைக் கொண்ட ஒருங்கிணைந்த வரி விதிப்பாகும்.

* மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி, சேவை வரி, உற் பத்தி மற்றும் சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, சிறப்பு கூடுதல் சுங்க வரி, செஸ், சர்சார்ஜ் உள்ளிட்ட அனைத்து வரி விதிப்புகளும் நீக்கப்பட்டு ஒரு முனை வரியாக விதிக்கப் படும்.

* மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (வாட்) மத்திய வரி, வாங்கும்போது வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி, விளம்பரங்கள் மீதான வரி, லாட்டரி, பந்தயம், சூதாட்டம், மாநில அரசு விதிக்கும் பிற வரி விதிப்புகளுக்கு மாற்றாக இது அமையும்.

* அதிக வரிச் சுமையைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். பொதுவாக மத்திய, மாநில அரசுகள் பொருள் உற்பத்தி மதிப்பை அடிப்படை யாகக் கொண்டு வரி விதிப்ப தில்லை. இருப்பினும் பல்வேறு நிலைகளில் வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத் தியை (ஜிடிபி) மறைமுகமாக பாதிக்கிறது. வரி ஏய்ப்பு, குறைந்த வரி ஆகியவற்றை தவிர்ப்பதோடு தொழில் புரிவதை எளிதாக்கும்.

* 2011-ம் ஆண்டு வடிவமைக் கப்பட்ட ஜிஎஸ்டி மசோதா வரை வில் கச்சா எண்ணெய், பெட் ரோல், டீசல், எரிவாயு, விமான எரிபொருள் மற்றும் மதுபானங் கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை.

* ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஜிஎஸ்டி சமரச தீர்வு ஆணையம் ஏற்படுத்தப்படும். மாநிலங்களுக்கு இப்புதிய வரி விதிப்பு முறையால் ஏற்படும் வரி வருவாய் இழப்பு குறித்து இது ஆராயும். ஆனால் 2014-ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் ஆணையத்துக்கு இத்தகைய அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது.

* 2014-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் மதுபான வகைகள் ஜிஎஸ்டி பட்டியலில் இடம்பெறவில்லை.

* மாநிலங்கள் சில முக்கிய பொருள்கள் மீது வரி விதிப்பைக் குறைக்கலாம் என 2011-ல் அளிக் கப்பட்ட விதி 2014-ல் மேற்கொள் ளப்பட்ட திருத்தத்தில் முற்றிலு மாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பிரிவில் எந்த உணவுப் பொருளும் இடம்பெற முடியாது.

* அதேபோல பஞ்சாயத்து மற்றும் முனிசிபாலிட்டிகளில் பொருள் நுழைவு வரி விதிக்கலாம் என்ற விதிமுறையும் 2014 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.

ஜிஎஸ்டி-க்கு தயார் ஆகாத நிறுவனங்கள்:

இந்தியாவின் முக்கிய வரி சீர்த்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜிஎஸ்டி) மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றுவதில் அரசியல் ரீதியாக பல்வேறு குழப்பங்கள் நிலவிவந்த நிலையில் தற்போது பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போது ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப் படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகமாகியுள்ளன. ஆனால் ஜிஎஸ்டி சட்டத்திற்கு ஏற்ப இன்னும் தயார்படுத்திக் கொள்ளாமல் பல நிறுவனங்கள் உள்ளன. மேலும் பல நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி சட்ட மசோதா குறித்த சந்தேகங்கள் நிறைய எழுந்துள்ளன. | விரிவாக வாசிக்க > ஜிஎஸ்டி-க்கு தயார் ஆகாத நிறுவனங்கள் |

சாஃப்ட்வேர் தயார்...

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) முறையைச் செயல்படுத்துவதற்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதி மற்றும் அதற்குரிய சாஃப்ட்வேர் தயாராக உள்ளது. இதை முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் உருவாக்கியுள்ளது. | விரிவாக வாசிக்க > ஜிஎஸ்டி அமல்படுத்த சாஃப்ட்வேர் தயார்: இன்போசிஸ் உருவாக்கியுள்ளது |

மாநிலங்களவையில் நிறைவேறியது..

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது. எனினும், இந்த மசோதாவுக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததுடன் வாக்கெடுப்பை புறக் கணித்தது.

SCERT released 4D app for 10th&12th students


Tamilnadu govt. SCERT released a 4D app for 10th and 12th science and mathd subjects .you can download and use it free. Open the app and scan the diagrams in books you will get 3D animated pictures followed by explanatory videos
To download click the link

https://play.google.com/store/apps/details?id=com.DBProductions.TNSchoolsLiveonline

தமிழக அரசு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தை 4D augment reality வடிவில் ஆண்ட்ராய்ட் ஆப் வெளியிட்டுள்ளது .அதை பதிவிறக்கம் செய்து பாடப்புத்தகங்களில் படங்களை ஸ்கேன் செய்ய முப்பரிமான வடிவில் படங்கள் தெரிவதுடன் அதற்கான விளக்கத்தையும் காணலாம்.
பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க

https://play.google.com/store/apps/details?id=com.DBProductions.TNSchoolsLiveonline

ஏ.இ.இ.ஓ.,சீனியாரிட்டி பட்டியல் : 33 தலைமை ஆசிரியர்கள் நீக்கம்


உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதலுக்காக தயாரிக்கப்பட்ட நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் சீனியாரிட்டி பட்டியலில் இருந்து 33 பேரை கல்வித்துறை நீக்கியது. உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் கவுன்சிலிங் நேற்று துவங்கியது.

இன்று நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுவதற்கான கவுன்சிலிங் நடக்கிறது. இதற்கான நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அடங்கிய சீனியாரிட்டி பட்டியலை தொடக்கக் கல்வி இயக்குனரகம் ஜூலை 1 ல் வெளியிட்டது. இதில் 31.5.09 க்குள் துறைத் தேர்வில் தேர்ச்சி அடைந்த 257 பேர் இடம் பெற்றனர். இந்த பட்டியலில் தகுதியான சிலரது பெயர்கள் விடப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மீண்டும் அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மூலம் புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதில் 33 பேரை நீக்கி தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த காலங்களில் கவுன்சிலிங்கில் பங்கேற்காதோர், ஏற்கனவே பணிமாறுதல் விரும்பாமல் கடிதம் கொடுத்தோர் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பதில் பிரச்னை இல்லை,' என்றார்.

257 உ.தொ.க அலுவலர் பணியிட மாறுதல்


தமிழகத்தில் 257 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இணையதளத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 408 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். இவர்களில் 257 தொடக்கக் கல்வி அலுவலர்கள் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாறுதல் ஆணைகளைப் பெற்றனர்.

Tuesday, August 02, 2016

ஜி.எஸ்.டி


பொருள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) என்றால் என்ன?
பொருள் மற்றும் சேவைகளின் உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றின் மீது தேசிய அளவில் விதிக்கப்படும் வரிக்கு பெயரே ஜி.எஸ்.டி.
   
ஜிஎஸ்டி வரி விதிப்பின் நோக்கம் என்ன?
மாநிலங்களுக்கு தக்கபடி மாறும் பல்வேறு வரி விதிப்புகளை அகற்றி, நாடு முழுக்க ஒரே மாதிரியான வரி விதிப்பு நடைமுறையை கொண்டுவருவதே ஜிஎஸ்டி.
   
ஜிஎஸ்டி எப்படி செயல்படுத்தப்படும்?
ஜிஎஸ்டி என்பதை நுகர்வு அல்லது பயன்பாட்டு வரி என்றும் புரிந்து கொள்ளலாம். எனவே, ஒரு சேவை அல்லது பொருள், நுகர்வோரால் பயன்படுத்தப்படும்வரை இந்த வரியின் கரங்கள் நீளும்.
   
ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால், மத்திய அரசுக்கு எவ்வாறு உதவும்?
வரி விதிப்பு என்பது வெளிப்படையானதாக மாறிவிடும், எளிதானதாக இருக்கும். எனவே எந்த பொருளுக்கு வரி விலக்கு உள்ளது, எதற்கு வரி விலக்கு இல்லை என்பது போன்ற தகவல்கள் எளிதாக அனைவருக்கும் புரியும். வரி வசூலுக்கு உதவும். இதனால் அரசின் வருமானம் அதிகரிக்கும்.
   
ஜிஎஸ்டியால், நிறுவனங்களுக்கு என்ன பயன்?
வரி விலக்கு லாபங்களை பார்த்து அந்த பகுதிகளில் தொழில் தொடங்காமல், தங்கள் தொழிலுக்கு ஏற்ற இடங்களில் நிறுவனங்களை தொடங்க முடியும். நிறுவனங்கள் இடையே ஆரோக்கிய போட்டி அதிகரிக்கும்.
   
ஜிஎஸ்டி வரி விதிப்பு விகிதம் எத்தனை சதவீதமாக இருக்கும்?
நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் தலைமையிலான கமிட்டி அரசுக்கு வழங்கிய பரிந்துரைப்படி பார்ப்பதானால், வரி விதிப்பு 17 முதல் 18 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளது.
   
விலைவாசி, வளர்ச்சியில் ஜிஎஸ்டி எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்?
ஜிஎஸ்டி அமல் காரணமாக பண வீக்கம் அதிகரிக்கும். இதனால் விலைவாசி உயர்ந்தாலும் கூட இது தற்காலிகமானதாகவே இருக்கும். பொது நிதி நிறுவனம், நாட்டின் வளர்ச்சி போன்றவற்றுக்கு ஆரோக்கியம் தரும்.
   
எந்தெந்த துறைகள், லாபமும், இழப்பையும் சந்திக்கும்?
பண்டகத்துடன் இணைந்த நுகர்வு, சரக்கு போக்குவரத்து, கட்டுமான பொருட்கள் ஆகிய துறைகளுக்கு இது லாபத்தை தரும். எண்ணை, காஸ் போன்ற துறைகளில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். பிற துறைகளில் பெரிய வித்தியாசம் இருக்காது.

ஆகஸ்ட் – 6 &9 ஹீரோசிமா – நாகசாகி நினைவு தினப் போட்டிகள் 2016

Click below

http://www.tnsf.co.in/2016/07/26/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-6-9-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A/

Teachers Transfer counseling start s today

தொடக்க பள்ளிகளில், மூன்று லட்சம் ஆசிரியர் பணியிடங்களுக்கான, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், இன்று துவங்குகிறது. முதல் நாளான இன்று, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு இடமாறுதல் வழங்கப்படுகிறது. நாளை, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக இடமாறுதல் வழங்கப்படுகிறது.

இதையடுத்து, 6ம் தேதி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல், பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு நடக்க உள்ளது. இதில் தான், ஒவ்வொரு ஆண்டும் உள்ளடி வேலைகள் அதிகமாகி, ஆங்காங்கே முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இதேபோல, இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கிலும், தில்லுமுல்லு வேலைகள் நடப்பதாக, கடந்த ஆண்டுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

'இந்த ஆண்டு, காலி இடங்களை மறைத்து, அதில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மறைமுகமாக இடமாறுதல் வழங்கக் கூடாது' என, ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

பத்தாம் வகுப்பு தேர்வுத்தாள் திருத்தும் முறையில் மாற்றம்


ஒவ்வொரு ஆண்டும், 10 லட்சம் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில், 80 சதவீதத்துக்கும் மேலானவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். மாநில, மாவட்ட அளவிலும், அதிக மதிப்பெண் பெற்று, முதல் மூன்று, 'ரேங்க்'களை பெறுகின்றனர்.

ஆனால், இதுபோன்று ரேங்க் பெறும் மாணவ, மாணவியர் உட்பட, அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பலர், பிளஸ் 1 பாடங்களை படிப்பதில் திணறுவது தெரியவந்து உள்ளது. குறிப்பாக, கணிதம் மற்றும் உயிரியலில், மாணவர்களின் கற்கும் திறன் மிகவும் மந்தமாக உள்ளதாக, பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 சேரும் மாணவர்களில் பலர், அடிப்படை கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். வெறும் மனப்பாடமாக படித்து விட்டு வருவதால், பிளஸ் 1ல் திணறுகின்றனர்.

இதற்கு, 10ம் வகுப்பு தேர்வில் விடைத்தாள் திருத்தும் முறை தான் முக்கிய காரணம். தேர்ச்சி விகிதத்தை அதிகமாக காட்ட, அதிகாரிகள் உத்தரவிடுவதால், ஆசிரியர்கள், தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, மதிப்பெண்களை வாரி வழங்குகின்றனர். மேலும், விடைத்தாளுக்கு மறுமதிப்பீடும் இல்லை என்பதால், ஆசிரியர்கள் எந்த தடையும் இல்லாமல், திருத்தும் சூழல் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, தேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, '10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் முறையில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த வகையான மாற்றம் என்பதை, ஆசிரியர்கள், வல்லுனர்கள் கொண்ட குழு முடிவு செய்யும்' என்றனர்.

English grammer materials

Click below

https://app.box.com/s/wuwawv39o6dv38qq3amogt9b9aqwny8r

Monday, August 01, 2016

பி.எட் விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது


2016-2017-ம் ஆண்டு பி.எட். படிப்புக்கான விண்ணப்பம் விற்பனை நேற்று முதல் தொடங்கி உள்ளது. 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை விண்ணப்பம் வழங்கப்படும்.

பி.எட். விண்ணப்பங்கள்

ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்புபவர்கள் பி.எட். படிப்பு படிக்க வேண்டும். இந்தப்படிப்புக்கான விண்ணப்பம், விற்பனை சென்னை திருவல்லிக்கேணி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 13 கல்வியியல் கல்லூரிகளில் நேற்று முதல் தொடங்கியது.

சென்னையில் உள்ள கல்லூரியில் மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களுடன் வந்து ஆர்வமுடன் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

13 கல்லூரிகளில் விண்ணப்பம்

தமிழகத்தில் 2016-2017-ம் ஆண்டுக்கான பி.எட். படிப்புக்கான விண்ணப்பம் இன்று (நேற்று) விற்பனை தொடங்கி உள்ளது. 9-ந்தேதி வரை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, சைதாப்பேட்டை கல்வியியல் மேம் பாட்டு நிறுவனம், திருவல்லிக்கேணி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி, ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி, கோயம்புத்தூர் அரசு கல்வியியல் கல்லூரி, வேலூர் காந்திநகர் அரசு கல்வியியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம் லட்சுமி கல்வியியல் கல்லூரி, சேலம் பேர்லாண்ட்ஸ் ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி, மதுரை தியாகராசர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆத்தூர், என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி ஆகிய 13 கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 7 அரசு கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகள் உட்பட 21 கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.எட். மாணவர்கள் சேர்க்கை இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு விரைவில் நடக்க உள்ளது.

தபால் மூலம் விற்பனை இல்லை

விண்ணப்பத்தின் விலை ரூ.500. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள், சுயசான்றொப்பமிட்ட நகலுடன் ரூ.250 செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பணமாகவோ அல்லது செயலாளர், தமிழ்நாடு பி.எட் சேர்க்கை, சென்னை-600 005 என்ற பெயரில் சென்னையில் பணமாக்கும் வகையில் வரை வோலை (டிமாண்ட் டிராப்டு) நேரில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் நேரில் மட்டுமே வழங்கப்படும். மாறாக தபால் மூலம் விண்ணப்பம் விற்பனை செய்யப்படவில்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 10-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் செயலாளர், தமிழ்நாடு பி.எட். மாண வர் சேர்க்கை- 2016-2017, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5 என்ற முகவரிக்கு வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. பி.எட். சேர்க்கைக்கான வழிகாட்டி நெறிமுறைகள் www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்

*ஆசிரியப் பேரினம் கட்டாயம் வாசிப்புக்கு உட்படுத்த வேண்டுகிறேன்* *"தேசிய கல்விக்கொள்கை 2016 முன்வரைவு சில உள்ளீடுகள்"* ஆவணத்திலிருந்து கொள்கை முன்மொழிவுகள். தமிழாக்கம் : *பி. இரத்தினசபாபதி*

Click below

https://app.box.com/s/3lcuxad7o78cslelb5rrr62xy6tmgeax

தொடக்கக் கல்வி - பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை அவர்களின் பிறந்த நாளை "கல்வி வளர்ச்சி நாளாக" கொண்டாட ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு சிறந்த பள்ளிகளை தேர்வுக் குழுவின் மூலம் தேர்ந்தெடுத்து அறிவிக்க அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்கி இயக்குனர் உத்தரவு

Click below

https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21bzBRRng2NTlDVFE/view?usp=sharing

தொடக்கக் கல்வி - 2016-17 பொது மாறுதல் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாறுதல் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

Click below

https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21SllPZVpiMnBVY1k/view?usp=sharing