இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, July 09, 2016

NHIS 2016 - பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள இணைப்பில் புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click below

http://tnnhis2016.com/TNEMPLOYEE/EmpECard.aspx

காமராஜர் பிறந்ததினம் மற்றும் சிறந்த பள்ளி தேர்ந்தெடுப்பதற்கான அரசாணை


தமிழகத்தில் அரசு துவக்கப் பள்ளி மனப்பாடப் பாடல்களை மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில், ஆடியோ- வீடியோ வடிவிலான பாடல்களின் இசை தொகுப்பை, மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) தயாரித்துள்ளது. இத்தொகுப்பு சி.டி.,க்களை முதல்வர் ஜெயலலிதா அடுத்த மாதம் வெளியிட ஏற்பாடு செய்யப்படுகிறது.
தொடக்கக் கல்வியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாட புத்தகங்களில் 40 மனப்பாடப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதை மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில் 'தாயெனப்படுவது தமிழ்' என்ற தலைப்பில் ஆடியோ- வீடியோ வடிவில் இசை தொகுப்பாக தயாரிக்க, எஸ்.இ.ஆர்.டி., நடவடிக்கை எடுத்தது. இதற்காக அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆர்வமுள்ள இசை மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆறு மாதங்களாக இசை தொகுப்பு தயாரிக்கப்பட்டது.


Friday, July 08, 2016

காமராஜர் பிறந்தநாள் விழா

இசை தொகுப்பில் பள்ளி மனப்பாடப் பாடல்கள் : எஸ்.சி.இ.ஆர்.டி., தயாரிப்பு


தமிழகத்தில் அரசு துவக்கப் பள்ளி மனப்பாடப் பாடல்களை மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில், ஆடியோ- வீடியோ வடிவிலான பாடல்களின் இசை தொகுப்பை, மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) தயாரித்துள்ளது. இத்தொகுப்பு சி.டி.,க்களை முதல்வர் ஜெயலலிதா அடுத்த மாதம் வெளியிட ஏற்பாடு செய்யப்படுகிறது.
தொடக்கக் கல்வியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாட புத்தகங்களில் 40 மனப்பாடப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதை மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில் 'தாயெனப்படுவது தமிழ்' என்ற தலைப்பில் ஆடியோ- வீடியோ வடிவில் இசை தொகுப்பாக தயாரிக்க, எஸ்.இ.ஆர்.டி., நடவடிக்கை எடுத்தது. இதற்காக அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆர்வமுள்ள இசை மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆறு மாதங்களாக இசை தொகுப்பு தயாரிக்கப்பட்டது.
இதில் மனப் பாடப் பாடல்களில் வரும் பொருள், வரிகள், அமைவிடம் கலாசார பின்னணியுடன் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. பாடல்களுக்கு ஏற்ப நடனமாடும் மாணவ, மாணவியர் அனைவரும் அரசு பள்ளிகளில் படிப்பவர்கள். அவர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. மாணவர்கள் மனதில் பாடல் எளிதில் பதியும் வகையில் இசை, காட்சி அமைப்பு, படப் பிடிப்பு இடங்கள் என நுாறு சதவீதம் திரைப்படப் பாடல் பின்னணி யில் படமாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இசை தொகுப்பின் படப்பதிவு இயக்குனர் அமலன் ஜெரோம் கூறியதாவது: எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் முயற்சியில் இத்தொகுப்பு தயாரிக்கப்பட்டு உள்ளது. Read More



NEW health insurance web

Thursday, July 07, 2016

NHIS G.O

வாக்காளர்கள் விபரம் சரிபார்க்கும் பணி துவக்கம்


தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, மே மாதம் துவக்கப்பட்டது. அதன்படி, 'தகுதியுள்ள அனைவரையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்;
தவறுகளை களைய வேண்டும்; ஒரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தால் நீக்க வேண்டும்; இடம் மாறி சென்றவர், இறந்தவர் பெயரை நீக்க வேண்டும்; புகைப்படம் தெளிவானதாக இருக்க வேண்டும்; பெயர், குடும்ப விபரம், முகவரி சரியாக இருக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒரே பெயரில் உள்ள வாக்காளர்கள், தனியே பிரிக்கப்படுகின்றனர்.
இதுவரை, 70 லட்சம் வாக்காளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தந்தை பெயர், புகைப்படம் ஆகியவை ஒப்பிடப்படுகிறது. அப்போது, ஒரே நபரின் பெயர், பல இடங்களில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் விபரம் தனியே பட்டியலிடப்படுகிறது. அதேபோல், முகவரி மாறி சென்றவர்கள், இறந்தவர்கள் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இப்பட்டியல்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம், வரும், 15ம் தேதி ஒப்படைக்கப்படும்.
அவர்கள் வீடு வீடாகச் சென்று, அப்பட்டியலில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்துவர். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், பெயர் இருப்பது உறுதியானால், வாக்காளர் விரும்பும் இடம் தவிர, மற்ற இடங்களில் பெயரை நீக்குவர்.

NHIS--Press release

Wednesday, July 06, 2016

தமிழக அரசு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் நீட்டிப்பு


அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை நான்கு ஆண்டு காலத்திற்கு செயல்படுத்திட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2012-ம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டு காலத்திற்கு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் அரசுப் பணியாளர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 30.6.2016-ல் முடிவடைந்தது. எனவே, 1.7.2016 முதல் நான்கு ஆண்டுகளுக்கு அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை சில கூடுதல் பயன்களுடன் செயல்படுத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், திறந்த ஒப்பந்தப் புள்ளி முறையைப் பின்பற்றி, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, ஒப்பந்தப் புள்ளியை ஏற்கும் குழு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தை தெரிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் 1.7.2016 முதல் 30.6.2020 வரையிலான காலத்திற்கு அரசுப் பணியாளர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அரசுப் பணியாளர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள காப்பீட்டுத் திட்டத்தை விட இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் சில கூடுதல் பயன்களுக்கு வகை செய்துள்ளது. இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு அரசுப் பணியாளர் குடும்பத்திற்கு அனுமதிக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் தொகை 4 லட்சம் ரூபாய் என தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், புற்று நோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படும் நிதியுதவியானது 7.50 லட்ச ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியரை முழுவதும் சார்ந்துள்ள, குறைந்தபட்சம் 40 சதவீத குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகள், எவ்வித வயது வரம்புமின்றி இத்திட்டத்தில் பயன் பெற வகை செய்யப்பட்டுள்ளது.
விபத்து காரணமாக இத்திட்டத்தின் கீழ் ஒப்புதலளிக்கப்பட்ட சிகிச்சைகளை அவசர சிகிச்சையாக அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் மேற்கொண்டிருப்பின், பணியாளர் பயன்பெறவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அரசு துறை, உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசு பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றின் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் நான்கு ஆண்டுகளுக்கு மருத்துவக் காப்பீட்டுப் பலன்களைப் பெற முடியும்.
இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு அரசு பணியாளர்கள் சந்தாத் தொகையாக மாதம் 180/- ரூபாய் செலுத்த வேண்டும். அரசு தனது பங்காக மொத்தம் 17 கோடியே 90 லட்சம் ரூபாயை ஆண்டு தோறும் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கும். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 10.22 லட்சம் அரசுப் பணியாளர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பயன் பெறுவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வி இணை இயக்குநர் திரு.அ. கருப்பசாமி அவர்கள் மெட்ரிக் பள்ளி இயக்குநராகவும், திரு.முத்து பழனிச்சாமி அவர்கள் முறை சாரா பள்ளி இயக்குநராகவும் பதவி உயர்வு

பள்ளி மாணவர்களுக்கு சுய மருத்துவம் செய்ய தடை


பள்ளிக்கு வரும் மாணவர்கள், காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆசிரியர்கள் மருத்துவம் அளிக்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

கோடைக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பருவ நிலை மாற்றத்தால், கொசு உற்பத்தியும், நோய்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில், திடீர் மழை மற்றும் அதனால் தேங்கும் நீரால், டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

இதற்கு முன்னெச்சரிக்கையாக, தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனரகம், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

 பள்ளி வளாகத்தில், நீர் தேங்காமல் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்

 குடிநீர் பானைகள், குடங்கள், பாத்திரங்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளை கண்டிப்பாக மூடி வைக்க வேண்டும்; வகுப்பறை மற்றும் கழிப்பறைகளை சுற்றி, தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

 பள்ளி மாணவர்களிடம் கடுமையான காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களை உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் அல்லது அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்

 எந்த சூழ்நிலையிலும், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மருத்துவம் செய்யக் கூடாது. அவர்களும் சுயமருத்துவம் செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும்

 டெங்கு, சிக்குன் குனியா நோய் அறிகுறிகள் மற்றும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களை கண்காணிக்க புது 'சாப்ட்வேர்'


தமிழக அரசு பள்ளிகளின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி விவரங்களை, பள்ளிக்கல்வித்துறை மாவட்ட வாரியாக கணக்கு எடுத்துள்ளது. இந்த விவரங்கள், பள்ளிக்கல்வி துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டு, 'சாப்ட்வேர்' மூலம், கணினியில் பதிவு செய்யப்படுகின்றன.

இந்த, 'சாப்ட்வேர்' மூலம், அனைத்து கல்வி மாவட்டங்களின் தேர்ச்சி விவரங்களும் புள்ளி விவரத்துடன் பதிவு செய்யப்படுகின்றன. பள்ளி வாரியாக, ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது.

இதன் பின், எந்த பள்ளியில், எந்த பாடத்தில் தேர்ச்சி விகிதம் கடுமையாக குறைந்துள்ளது; ஒரு மாணவனின் தேர்ச்சி குறைய எந்த பாடம் காரணம்; அதற்கான ஆசிரியர் யார் என்ற விவரங்கள்,

கணினியில் சேகரிக்கப்படுகின்றன.

இந்த பட்டியலின் படி, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியரின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு, அவரின் பணிகள், வகுப்பு நடத்தும் முறை, கற்பித்தல் ஈடுபாடு ஆகியவையும் ஆய்வு செய்யப்படும். அந்த ஆசிரியர் சரியாக பணி செய்யாவிட்டால், அவருக்கு, 'நோட்டீஸ்' கொடுத்து விளக்கம் கேட்கவும்; ஆர்வமான ஆசிரியராக இருந்தால் அவருக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம், விரிவுரையாளர்கள் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கவும், பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதற்கான பணிகள், 50 சதவீதத்தை தாண்டியுள்ளன. மேலும், தற்போது முதலே ஆசிரியர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 05, 2016

பொதுத்தேர்வில் 2வது முறை மறுமதிப்பீடு கோர முடியாது : ஐகோர்ட் கிளை உத்தரவு


அரசு பொதுத்தேர்வில் இரண்டாம் முறையாக மறு மதிப்பீடு கோர முடியாது எனக்கூறி மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த பொன்ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், என் மகன் செல்வேந்திரன் நாமக்கல் தனியார் பள்ளியில் படித்தான்.

2015-16 பிளஸ் 2 தேர்வில் 1140 மதிப்பெண் பெற்றான். உயிரியல் பாடத்தில் 195 மதிப்பெண் பெற்றான். இந்த பாடத்தில் மறுமதிப்பீடு கோரினோம். இதனால், அந்த பாடத்தில் ஒரு மதிப்பெண் கூடுதலாக கிடைத்தது. சில கேள்விகளுக்கு முறையான மதிப்பெண் வழங்கவில்லை. இதனால் என் மகனால் எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடியவில்லை. எனவே, மீண்டும் இரண்டாவது முறையாக மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடவேண்டும், என கூறியிருந்தார். மனுவை நீதிபதி எம்.வேணுகோபால் விசாரித்தார்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், அரசு வக்கீல் சண்முகநாதன் ஆகியோர் ஆஜராகி, ‘மாணவன் துல்லியமாக விடையளிக்கவில்லை. கூடுதல் விளக்கம் தேவைப்படுகிறது. ஏற்கனவே மறுமதிப்பீடு செய்து ஒரு மதிப்பெண் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக மறு மதிப்பீடு கோர முடியாது’ என்றார். இதையடுத்து நீதிபதி, பள்ளி கல்வி விதிப்படி மறுமதிப்பீடு செய்த பின் ஏற்படும் முடிவு இறுதியானது.

இரண்டாம் முறையாக மறுமதிப்பீடு கோர முடியாது. கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் என்பதற்கான காரணமும் போதுமானதாக இல்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என உத்தரவிட்டார்.

'கவுன்சிலிங்' கவலையில் ஆசிரியர்கள்


தமிழகத்தில் இக்கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' அறிவிப்பு அறிகுறி இல்லாததால், இந்தாண்டும் 'காலம் கடந்து 'கவுன்சிலிங்' நடத்தப்படுமோ' என ஆசிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கல்வித் துறையில் ஆசிரியர்கள் நலன் கருதி, 2001 முதல் 'ஒளிவு மறைவற்ற மாறுதல் கலந்தாய்வு' நடத்தப்படுகிறது. துவக்கத்தில் பல குளறுபடிகள், அரசியல் தலையீடு, ஒரே இடத்தில் இருவர் நியமனம், காலியிடங்கள் மறைப்பு, மறைக்கப்பட்ட இடங்களுக்கு 'பேரம்' என கல்வித் துறையில் 'கலகலப்பு' இருந்தாலும், இயக்குனராக கண்ணப்பன் பொறுப்பேற்ற பின், கடந்தாண்டு பெரிய அளவிலான புகார்கள் இன்றி கவுன்சிலிங் நடந்து முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் பொது 'கவுன்சிலிங்' அதைத் தொடர்ந்து பதவி உயர்வு 'கவுன்சிலிங்' முடிந்த பின் தான் ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டில் நிம்மதியே இருக்கும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசியில் விருப்பமுள்ள ஆசிரியர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு, ஜூன் முதல் வாரத்தில் 'கவுன்சிலிங்' நடத்தப்படும்.
அப்போது தான் கற்பித்தல் பணியிலும் தொய்வு ஏற்படாது. ஆனால் தற்போது, ஜூலை முதல் வாரம் கடந்தும் இதுவரை 'கவுன்சிலிங்'கிற்கான விண்ணப்பங்களே வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலுடன் பெரும் குழப்பத்திலும் உள்ளனர். சொதப்பல்: தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாநில தலைவர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது:முதல்வர் ஜெயலலிதாவால் 2001ம் ஆண்டில், ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு முறை, தமிழக கல்வித்துறையில் அமல்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் காலதாமத பிரச்னை ஏற்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சல் அடைகின்றனர். பல பள்ளிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர் பணி யிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்கள் கல்வி பாதிக்கிறது. அதிகாரிகள் முன் கூட்டியே திட்டமிட்டு உரிய நேரத்தில் 'கவுன்சிலிங்' நடத்த முன்வர வேண்டும். இந்தாண்டு விரைவில் அறிவிக்க வேண்டும் என்றார்.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 8ம் தேதி ஆர்ப்பாட்டம் செய்ய அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் சந்திரன் கூறுகையில், "கவுன்சிலிங் நடக்காததால், ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பாடம் இருந்தும் தரம் உயர்த்தப்பட்ட மற்றும் புதிய பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லை. விரைவில் கவுன்சிலிங் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்

School calendar 2016-17

Monday, July 04, 2016

'ஆதார்' எண் இல்லையா : காஸ் மானியம் கிடைக்காது


ஆதார் எண் சமர்ப்பித்தவர்களுக்கு மட்டுமே இந்த மாதத்தில் இருந்து காஸ் சிலிண்டர் மானியம் வழங்கப்படும்' என, எண்ணைய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டம் (பாஹல்) 2015 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் மானியத் தொகை வரவு வைக்கப்படுகிறது.மானியம் பெற 'ஆதார்' எண்ணை, காஸ் ஏஜன்சிகளிடம் வழங்க வேண்டும். ஆனால் 20 சதவீத வாடிக்கையாளர்கள் 'ஆதார்' எண் வழங்கவில்லை.

இந்நிலையில், 'ஆதார் எண் சமர்ப்பித்தவர்களுக்கு மட்டுமே ஜூலை 1- முதல் காஸ் மானியம் வரவு வைக்கப்படும்' என எண்ணைய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.'செப்.,30 க்குள் 'ஆதார்' எண்ணை சமர்ப்பித்தால், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நிலுவை மானியத்தை பெற்று கொள்ளலாம். அக்.,௧க்கு பின் 'ஆதார்' எண் ஒப்படைத்தால், அதற்கு பிறகு வாங்கும் சிலிண்டருக்கு உரிய மானியம் மட்டுமே வழங்கப்படும். நிலுவை மானியம் வழங்கப்படாது' என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாறுதல் கலந்தாய்வு எப்-போ-து? : ஆசிரியர்கள் போராட முடிவு-DINAMALAR


ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தாததை கண்டித்து, வரும், ௮ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, கூட்டணியின் நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த ஆண்டுகளில், மே மாதத்தில், ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு இடமாறுதல் வழங்கப்பட்டது. பள்ளி திறந்த முதல் நாளிலேயே, ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர். கற்பித்தல் பணி பாதிக்கப்படவில்லை.

ஆனால், கடந்த ஆண்டு, பள்ளி திறந்த பின்னே, கலந்தாய்வு நடந்தது; கற்பித்தல் பணியும் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டும், பள்ளி திறந்து ஒரு மாதமாகியும் கலந்தாய்வு நடத்துவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. இதை கண்டித்து, ௮ம் தேதி, உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Sunday, July 03, 2016

கல்விக் கொள்கை வரைவறிக்கை: தேசியக் குழந்தைகள் கொள்கைக்கு பாதகம்


மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தேசியக் கல்விக் கொள்கை வரைவறிக்கையில் உள்ள சில அம்சங்கள், தேசியக் குழந்தைகள் கொள்கையைக் கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

புதிய பரிந்துரைகள் அடங்கிய வரைவு கல்விக் கொள்கையின் ஒரு பகுதியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் தனது இணையதளத்தில் வெளியிட்டது. பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துகளை அறிவதற்காக இந்த வரைவு கொள்கையின் ஒரு பகுதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான கருத்துகள், யோசனைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்ப ஜூலை 31 கடைசித் தேதியாகும்.

இந்த வரைவு கல்விக் கொள்கையில் இடம் பெற்றிருக்கும் சில முக்கிய அம்சங்கள், தேசியக் குழந்தைகள் கொள்கையைக் கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளதாகத் தற்போது புகார் எழுந்துள்ளது. குழந்தைகளின் அடிப்படை உரிமைகள்: 18 வயதுக்கு உள்பட்ட அனைவரும் குழந்தைகள் என்று, குழந்தைகள் தொடர்பான தேசியக் கொள்கையின் செயல் திட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தேசியச் சொத்தான குழந்தைகளுக்கு வாழும் உரிமை, வளர்ச்சி, கல்வி, பாதுகாப்பு, சமூகப் பங்கேற்பு ஆகியவற்றுக்கு முழு உரிமை உண்டு. மதம், இனம், மொழி, பாலினம், பிறப்பிடம், வகுப்பு, மொழி, சமூகம், பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் சம உரிமை வழங்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் குழந்தைகள் கல்வி, கற்றலுக்கான சூழல், உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறைக்கு மறைமுக அனுமதியா?: 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு அடிப்படை உரிமையான கல்வி உயர்நிலை வரை, தரத்துடன் வழங்கப்பட வேண்டும். குழந்தைத் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த, கடத்தப்பட்ட, தெருவோரக் குழந்தைகள் என அனைத்து வகைக் குழந்தைகளும் பாதுகாக்கப்பட்டு, உரிய கல்வி வழங்கப்பட வேண்டும் என்று, குழந்தைகளுக்கான தேசியக் கல்வி கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள கல்வி வரைவுக் கொள்கையில், இடைநிற்றல் மாணவர்கள், வேலை செய்யும் குழந்தைகள் முழுநேரப் பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் திறந்தநிலைப் பள்ளி மூலம் படித்துப் பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், குழந்தைத் தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற குழந்தைகள் தொடர்பான கொள்கையைக் கவனத்தில் கொள்ளாமல், அதை ஊக்குவிக்கும் விதத்தில் தேசிய வரைவு கல்விக் கொள்கை அமைந்துள்ளதாகக் கல்வியாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:

இந்தப் புதிய வரைவறிக்கையின் முன்முனைவின்படி, கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், என்ன தீர்வு எனத் தெளிவாக இல்லை. அத்துடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய, புலம் பெயர்ந்த குழந்தைகளுக்கு மாற்றுப் பள்ளித் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறுவது, அனைவருக்கும் சமமான கல்வி என்பதிலிருந்து மாறுபடுவதுபோல் உள்ளது. மேலும் கணிதம், அறிவியல், ஆங்கிலப் பாடங்களுக்குப் பொதுவான பாடத் திட்டம் அமைக்கப்படும் என்பது மாநிலங்களின் உரிமையைப் பறிப்பது போல உள்ளது. மறுக்கப்படும் உயர் கல்வி வாய்ப்பு: மாணவர்கள் தங்களது உயர் கல்வியை பத்தாம் வகுப்பிலேயே முடிவு செய்ய வேண்டும் என்பது போலவும், தேர்ச்சியை உறுதி செய்யவும், பகுதி-ஏ, பகுதி-பி எனப் பிரித்து முக்கியப் பாடங்கள் ஒரு பிரிவிலும், தொழில் கல்வி மற்ற பிரிவிலும் என இரு பிரிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை தொழில் கல்வியைத் தேர்ந்தெடுக்கும் மாணவர், பின்னாளில் அறிவியலில் பட்டம் பெற எண்ணினால் அதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.விருப்பமான கல்வி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது, அடிப்படைக் கல்வி உரிமைக்கு ஊறு விளைவிப்பது போல உள்ளது என்றார் அவர். இதுவிஷயத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துகளையும் அறிந்து, உரிய முடிவுகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் மையக் கருத்தாக உள்ளது.

Saturday, July 02, 2016

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகள்: 4 மாதங்களுக்குள் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. ஆகிய வகுப்புகள் தொடங்குவது குறித்து, 4 மாதங்களில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசின் ஆரம்பப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் இல்லாததால், தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் நிலையுள்ளது.

2009-ஆம் ஆண்டு இலவச, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படியும், 2006-ஆம் ஆண்டு சமச்சீர் கல்வி தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட முத்துக்குமரன் குழுவானது வழங்கிய பரிந்துரையின்படியும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடங்க வேண்டும் என்றுவிருத்தாசலத்தில் உள்ள மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர், "அங்கன்வாடி மையங்களில், 5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளைச் சேர்ப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கலாம்' என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:-

இது அரசின் கொள்கை சார்ந்த முடிவாகும். இருப்பினும், மனுதரார் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு 4 மாதத்துக்குள் பரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்க வேண்டும். அப்போது, முத்துக்குமரன் குழுவின் பரித்துரைகளை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றனர்.

இடமாறுதல் கவுன்சிலிங்கில் புதிய விதிகள் அமல்?


தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதலில், புதிய விதிமுறைகளை கொண்டு வரவும், இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஆகஸ்ட் மாதம் நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும், மே மாதம் இடமாறுதலுக்கான விருப்ப கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், சில ஆண்டுகளாக, ஜூன், ஜூலையில் தான் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் எப்போது நடக்கும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து புதிய முடிவுகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டுள்ளது.

சொந்த ஊர் : தற்போது பள்ளிக்கல்வி செயலகத்தில், புதிய விதிகளை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. வழக்கமான விதிகளில், பல மாற்றங்களை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பல ஆசிரியர்கள், தங்கள் சொந்த

ஊர் கொண்ட மாவட்டத்தில் ஆண்டுக்கணக்கில் முகாமிட்டு, 'ஓபி' அடிக்கும் நிலையை மாற்றலாமா என ஆலோசிக்கப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு ஆசிரியரும், ஒரு குறிப்பிட்ட மண்டலத்தில், குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என, கட்டுப்பாடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலந்தாய்வு : அதேபோல், பொதுத் தேர்வு தேர்ச்சி மற்றும் கற்றல் அடைவு தேர்வுகளில், பின் தங்கிய மாவட்டங்களான விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை, கடலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரியில்,ஆசிரியர்கள் பணியிடம் காலி ஏற்படாதவாறு, முழுவதும் நிரப்பும் வகையில் கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிகிறது. மாணவர் எண்ணிக்கையை விட அதிக அளவில் ஆசிரியர்கள் கொண்ட, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, விருதுநகர்

உள்ளிட்ட மாவட்ட ஆசிரியர்களுக்கு, வட மாவட்டங்களில் பணிமாற்றம் வழங்குவது குறித்தும் விதிகளில், குறிப்பிட்ட அம்சங்கள் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. மேலும், ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு முன் எந்த விதமான, மறைமுக இடமாறுதலும் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கி முடியும் போது, கவுன்சிலிங்கை துவங்கலாம் என்றும் பள்ளிக்கல்வி செயலக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

தொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் 05.07.2016 அன்று சென்னையில் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

Friday, July 01, 2016

ஆசிரியர்களுக்கு திறனறி தேர்வு கட்டாயம்


பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திறனறி தேர்வு கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. 'இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், ஊதிய உயர்வு கிடையாது' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு பல கிடுக்கிப்பிடி நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

 பள்ளிகளில் ஆசிரியர்களின் திறமையின்மையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் திறன் குறைவாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும், தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய, தனியாக ஆசிரியர் தேர்வு ஆணையம் அமைக்கப்படும்

 அனைத்து ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களும் இனி, மத்திய அரசின் தர அங்கீகாரம் பெற வேண்டியது கட்டாயம்

 தேசிய அளவில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை

உருவாக்கப்படும்

 ஆசிரியர்களுக்கான விருதை இனி, பள்ளிகளில் உள்ள பெற்றோர், மாணவர் மன்றங்களே முடிவு செய்யும்

 ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவர்களின் தகுதி மற்றும் திறனை சோதிக்கும், திறனறி தேர்வு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்; இதில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும்.

இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.



3 பாடத்துக்கு ஒரே 'சிலபஸ்' : ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வித பாடத்திட்டங்களை பின்பற்றுகின்றன. இதில் மதிப்பீட்டு முறையிலும் வித்தியாசம் ஏற்பட்டு, பல புகார்கள் எழுகின்றன. எனவே, தேசிய அளவில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, ஒரே தேர்வு நடத்தலாமா என, ஆலோசிக்கப்படுகிறது.

கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்கள் ஒவ்வொரு விதமாக படிப்பதால், அவற்றுக்கு தேசிய அளவில், ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும். சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்கள், மாநிலங்களின் விருப்பத்தில் அமையும். கணினி வழி கல்வி, 6ம் வகுப்பு முதல் கட்டாயம் ஆக்கப்படும்.

ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களில் பொது மாறுதலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12.07.2015 க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

VAO exam results (28-2-16)