இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, March 22, 2016

பிளஸ் 2 வேதியியலில் 6 கருணை மதிப்பெண்கள்


பிளஸ் 2 வேதியியல் தேர்வில் கடின வினாக்கள் இருந்ததாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், 6 மதிப்பெண்களை கருணை அடிப்படையில் வழங்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்ய உள்ள மாணவர்களுக்கு முக்கியப் பாடமான வேதியியல் தேர்வு கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது.

பலத்த மழை, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கற்பித்தலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால், பொதுத் தேர்வு வினாத்தாள் அனைவருக்கும் எளிதானதாக இருக்கக்கூடும் என்ற கருத்து மாணவர்கள் மத்தியில் எழுந்திருந்தது. ஆனால், மாணவர்கள், பெற்றோரின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதமாக வேதியியல் தேர்வும், கணிதத் தேர்வும் அமைந்திருந்தன. இதுதொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், வேதியியல் வினாத் தாளில் இருந்த கடின வினாக்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவியை வேதியியல் பாட ஆசிரியர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தனர். இதைத் தொடர்ந்து, பாடத் திட்டத்துக்கு வெளியே இருந்து கேட்கப்பட்டிருந்த ஒரு மதிப்பெண் வினா 17 (பி பிரிவு), அதேபோல, ஏ பிரிவில் 18, வினா எண் 70-இல் பி ஆகிய இரு வினாக்களுக்கும் மாணவர்கள் எந்த ஒரு பதிலை அளித்திருந்தாலும் அவர்களுக்கு முறையே 1, 5 மதிப்பெண்கள் வழங்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் வேதியியலில் முழு மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

தேர்வுத் துறையின் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ள தமிழ்நாடு முதுநிலை ஆசிரியர் சங்கத் தலைவர் சுரேஷ், இதேபோல தினசரி 40 விடைத்தாள் திருத்த வேண்டும் என்ற உத்தரவையும் 36 என குறைத்து தேர்வுத் துறை அறிவித்திருப்பதாகவும் தெரிவித்தார். வேதியியல் தேர்வின் விடைக் குறிப்புகள் இந்தத் திருத்தத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் என்றும், இந்த விடைத் தாள்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் மதிப்பீடு செய்யப்படும் என்றும் தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வேலைவாய்ப்பு பதிவு மூப்பை இணையதளத்தில் அறியலாம்


வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பின் நிலையை www.tn.gov.inemployment என்ற இணையதளத்தில் அறியலாம். அனைவரும் தங்களது படிப்பு குறித்த விவரங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். இதுதவிர, கூடுதல் படிப்புகளையும் பதிந்தும், முந்தைய பதிவை அவ்வப்போது புதுப்பிக்கவும் செய்கின்றனர். இந்த பதிவு மூப்பின் நிலவரத்தை இணையதளத்தில் தெரிந்துகொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு ஏப்., 22 முதல் கோடை விடுமுறை


தமிழகத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ம் தேதி முதல் மற்றும் 5ம் வகுப்பு வரை உள்ள துவக்கப் பள்ளிகளுக்கு, மே 1ம் தேதி முதல், கோடை விடுமுறை துவங்குகிறது. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. பிளஸ் 2வுக்கு, ஏப்., 1ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. 10ம் வகுப்புக்கு, ஏப்., 11; விருப்ப பாடம் எழுதுவோருக்கு, ஏப்., 13ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, ஏப்., 15ம் தேதிக்குள் தேர்வுகள் முடிகின்றன.

அதே போல், 6ம் வகுப்பு - 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்., 21; மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில், ஏப்., 30ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. எனவே, ஏப்., 22ம் தேதி முதல், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும்; மே 1ம் தேதி முதல், துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும், கோடை விடுமுறை துவங்குகிறது.

ஜூன் 1ம் தேதி, அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகம், விரைவில் வெளியிடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்

வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?


வங்கிகள், நாளை முதல், மார்ச், 31 வரை இயங்காது' என, வெளியான தகவலுக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சங்கத்தின் மாநில பொதுச் செயலர் சீனிவாசன் கூறியதாவது:மார்ச், 24 - ஹோலி பண்டிகை; 25 - புனித வெள்ளி; 26 - நான்காவது சனிக்கிழமை; 27 - ஞாயிற்றுக்கிழமை. இதனால், நான்கு நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில், ஹோலி பண்டிகைக்கு விடுமுறை இல்லை என்பதால், 24ல், இங்கு வங்கிகள் இயங்கும்.

பொதுத்துறையைச் சேர்ந்த, ஐ.டி.பி.ஐ., வங்கியை, தனியார் மயமாக்கும் மத்திய அரசின் செயலை கண்டித்து, மார்ச், 28ல், ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தம், ஐ.டி.பி.ஐ., வங்கியில் மட்டும் நடக்கும் என்பதால், மற்ற வங்கிகள், 28ல் வழக்கம் போல இயங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Monday, March 21, 2016

மத்திய அரசு பயிற்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு


மத்திய அரசின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மூலம், மாநில அரசுப் பள்ளிகளில், பயிற்சி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது. மாநில அரசு பள்ளிகளில், கல்வித்தரத்தை உயர்த்த, மத்திய அரசு புதிய முன்னோடி திட்டத்தை தயாரித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்தி, அவர்கள் மூலம், மாநில அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி தர, மத்திய அரசு திட்டமிட்டது.

இதுகுறித்து, மாநில அரசுகளின் விருப்பத்தை கோரியது. அதில், 19 மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசின் திட்டத்துக்கு விருப்பம் தெரிவித்து உள்ளன. ஆனால், தமிழக அரசு அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.இதேபோல், மத்திய அரசின், ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் மூலம், அனைத்து பி.எட்., கல்லுாரி மாணவர்களுக்கு, சிறப்பு ஆசிரியர் பயிற்சி வழங்கவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

ஏ.டி.எம்., மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!


ஏ.டி.எம்., என்ற தானியங்கி பணம் எடுக்கும் மையத்தில், மின் கட்டணம் செலுத்தும் சேவையை துவக்க, தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துஉள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில், மின் பயன்பாடு கணக்கு எடுத்ததில் இருந்து, 20 நாட்களுக்குள், கட்டணத்தை செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படும். அபராதத்துடன் கட்டணம் செலுத்தியதும், மின் இணைப்பு வழங்கப்படும். மாதந்தோறும், மின் கட்டணம் வாயிலாக, 2,500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. மின் கட்டண மையங்களில், கூட்டம் நிரம்பி வழிவதால், பலர் பணத்தை தொலைத்து விடுகின்றனர். இதையடுத்து, 'கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு', இணைய தளம், அஞ்சல் நிலையம், அரசு சேவை மையங்களில், மின் கட்டணம் செலுத்தும் வசதியை, மின் வாரியம் துவக்கியது.

அந்த வரிசையில், தற்போது, ஏ.டி.எம்., என்ற தானியங்கி பணம் எடுக்கும் மையத்தில், மின் கட்டணம் செலுத்தும் சேவையை அறிமுகம் செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏ.டி.எம்., மூலம், மின் கட்டணம் செலுத்தும் சேவையை துவக்க, அரசு வங்கிகள், தனியார் வங்கிகளுடன் பேச்சு நடத்தப்படும். சோதனை முறையில், ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம்., மையத்தில், மின் கட்டணம் செலுத்தும் வசதி துவங்கப்பட்டு உள்ளது. விரைவில், 15 வங்கிகளின் ஏ.டி.எம்.,களில், அந்த சேவை விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்

Sunday, March 20, 2016

பிளஸ் 2 தேர்வுகளில் சிந்திக்க வைக்கும் வினாக்கள்:மனப்பாடத்தை நம்பிய பள்ளிகள் தவிப்பு


பிளஸ் 2 பொதுத்தேர்வில், சிந்திக்கும் திறன் கொண்ட வினாக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், மனப்பாட முறையில் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்திருந்த தனியார் பள்ளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

தமிழகத்தில் இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதிலிருந்து, பிளஸ் 2 வகுப்பில் எடுக்கும் மதிப்பெண், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.இதனால், மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைக்க, இரண்டு ஆண்டுகளுக்கு, பிளஸ் 2 பாடத்தையே நடத்தி, மனப்பாடம் செய்ய வைத்து தேர்வெழுத வைக்கும் வழிமுறையை, பல தனியார் பள்ளிகள் பின்பற்றி வருகின்றன.சராசரியாக படிக்கும் மாணவர்களை, அவர்கள் பலவீனமாக உள்ள பகுதிகளில் தொடர்ந்து பயிற்சியெடுக்க வைத்து மதிப்பெண் பெற வைத்தன.

இதனால், 100 சதவித தேர்ச்சி, அதிக கட் ஆப், மாவட்ட அளவிலான ரேங்க் என பேனர் வைத்து, பள்ளியின் கட்டணத்தையும் பல மடங்கு அதிகரித்து வந்தன.நடப்பு கல்வியாண்டிற்கான தேர்வு, மனப்பாடம் செய்யும் வழிமுறைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை நடந்த வேதியியல், கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களில் வழக்கமான கேள்விகள் இல்லாமல் புதிய வகை வினாக்களும், சுயமாக சிந்தித்து பதில் எழுதக் கூடிய வினாக்களும் அதிகமாக இடம்பெற்றன. இதனால், மனப்பாடக் கல்வி மூலம் சென்டம் வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிக அரிதாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், மனப்பாட முறையில் தேர்வுக்கு தயாரான மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இம்மாணவர்களிடம் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராது என்பதால் தனியார் பள்ளிகளும் தவிக்கின்றன. இதை சமாளிக்க, சலுகை மதிப்பெண்கள் தர வேண்டும்; மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. இதுகுறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:

மாணவர்களுக்கு மனப்பாட முறையில் பயிற்சியளித்த பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், இந்த முறை பாதிக்கப்படலாம். இதனால் அட்மிஷன் குறைந்து, நற்பெயர் பாதிக்கப்படும் என்பதால் அதை ஈடுகட்ட, தனியார் பள்ளிகள் தவித்து வருகின்றன.இதேபோல், இனி வரும் தேர்வுகளும் இருக்கும் பட்சத்தில், தனியார் பள்ளிகள் மனப்பாட முறையில் பாடம் நடத்துவதை கைவிட வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, March 19, 2016

10ம் வகுப்பு தேர்வு புதிய அறிவிப்பு


தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. ஏப்ரல், 7ல் அறிவியல் தேர்வு நடக்க உள்ளது.இந்த நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், '10ம் வகுப்பு அறிவியல் தேர்வு எழுத வரும் மாணவர் அல்லது தனித்தேர்வர் யாராக இருந்தாலும், செய்முறை தேர்வை எழுதியிருக்க வேண்டும். இல்லையெனில், அவர்களை அனுமதிக்க வேண்டாம். 'தியரி' எனப்படும், கருத்தியல் தேர்வு மட்டும், தேர்ச்சிக்கான கணக்கில் எடுத்து கொள்ளப்படாது என, ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

4.23 லட்சம் அரசு ஊழியர் குடும்பங்களின் ஓட்டு யாருக்கு?


தமிழகத்தில், 2003 ஏப்., 1 முதல் பணியில் சேர்ந்த நான்-கு லட்-சத்து, 23 ஆயி-ரத்து, 441 அரசு ஊழியர், ஆசிரியர்கள், புதிய ஓய்-வூ-திய திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். ஊழியர்களிடம் வசூலித்த தொகை மற்றும் அர-சின் பங்கு தொகை என, 8,543 கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை.

இதனால், பணியின்போது இறந்த ஊழியர்களுக்கு பணப்பலன் கிடைக்கவில்லை; நீதிமன்றம் மூலமே சிலர் பலன் பெற்றனர். கடந்த, 2011 சட்டசபைத் தேர்தல் அறிக்-கை-யில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய ஓய்-வூ-திய திட்டம் ரத்து செய்யப்படும்,' என அ.தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆட்-சிக்கு வந்த பின், எந்த முயற்-சியும் எடுக்-கவில்-லை அதிருப்தி அடைந்த ஊழியர்கள் தொடர் வேலை-நி-றுத்த்தில் ஈடு-பட்-டனர். இதனால், 'புதிய ஓய்-வூ-திய திட்டம் குறித்து, ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கப்படும்' என, முதல்வர் அறிவித்தார்; ஆனால், அரசாணை வெளியிடவில்லை.

இதனால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதை பயன்படுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளைசந்தித்து, தி.மு.க., மாவட்டச் செயலர்கள் ஆதரவு கோரி வருகின்றனர். மக்கள் நலக் கூட்டணியினரும் ஆதரவு கேட்டுள்ளனர். 'வல்லுனர் குழு அமைக்கும் முன், தேர்தல் அறிவித்து விட்டனர். மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வல்லுனர் குழு அமைக்கப்படும்' என அ.தி.மு.க.,வினர், 'தாஜா' செய்-து வருகின்றனர். இதனால், 4.23 லட்சம் அரசு ஊழியர் குடும்பங்களின் ஓட்டு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

4.50 லட்சம் தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


தமிழகத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள, 4.50 லட்சம் ஊழியர்கள், தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், 3 லட்சம் பேர்; போலீசார், 75 ஆயிரம் பேர்; டிரைவர்கள், கிளீனர்கள், 75 ஆயிரம் பேர் என, மொத்தம், 4.50 லட்சம் பேர், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் அனைவரும் தபால் ஓட்டு போட, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் சேகரிக்கப்பட்டு உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை, பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தபால் ஓட்டு போடுவோர், தபால் ஓட்டு பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகள் கணக்கெடுப்பு


அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இதில், 6,௦௦௦க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில், மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும், அறிவியல் ஆய்வகங்கள் செயல்பட்டு வந்ததாகவும், அதற்கான நிரந்த கட்டடங்கள் இருப்பதாகவும், கடந்த 2005ம் ஆண்டுக்கு முந்தைய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2006ம் ஆண்டு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்திய பின், ௧௦ம் வகுப்பிலும் அறிவியல் செய்முறைகள் அமல்படுத்தப்பட்டது. இதனால், உயர்நிலைப்பள்ளிகளிலும் அறிவியல் ஆய்வகள் அமைக்க வேண்டியது அவசியமானது என்று, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

கடந்த, 4 ஆண்டுகளில் நுாற்றுக்கணக்கான நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளுக்கு போதிய வகுப்பு அறை கட்டடங்களே, இன்னமும் கட்டப்படாமல் இருந்து வருகிறது.இதனால், அறிவியல் ஆய்வக வசதி என்பது, பெரும்பாலான உயர்நிலைப் பள்ளிகளில், அரிதாகவே இருந்து வருகிறது. ஒரு சில உயர்நிலைப்பள்ளிகளில், காலி வகுப்பு அறைகளில் தற்காலிக ஆய்வகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளிலும், அறிவியல் ஆய்வகத்துக்கு கட்டடம் தேவைப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், அதற்கான அறிக்கையை தயாரித்து, முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

Annamalai university DDE - Examination Results - December 2015

Click below

http://www.annamalaiuniversity.ac.in/dde/get_number.php

Friday, March 18, 2016

பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு


பி.பி.எஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பி.பி.எஃப் வட்டி விகிதத்தை 8.7 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. கிஸான் விகாஸ் சேமிப்பு பத்திர வட்டி விகிதமும் 8.7 சதவீதத்திலிருந்து 7.8 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.

Thursday, March 17, 2016

உறுதிமொழி படிவம்; ஆசிரியர்கள் திணறல்


மாணவர் வாயிலாக அளிக்கப்பட்ட ஓட்டளிப்பு உறுதிமொழி படிவத்தை, பெற்றோர் பலர், கையெழுத்து போடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்; வாக்காளர் பட்டியலில் பெயரே இல்லாத நிலையில், எப்படி ஓட்டளிப்பது என்ற பெற்றோரின் கேள்வியால், ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற இலக்கோடு, தேர்தல் கமிஷன் பணியாற்றி வருகிறது. இதற்கென, பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளி குழந்தைகள் மூலம் ஓட்டளிப்பு உறுதிமொழி படிவம் வழங்கப்பட்டு, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, படிவத்தில் கையொப்பம் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி குழந்தைகளிடம், ஓட்டளிப்பு உறுதிமொழி படிவம் வழங்கி, பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி, ஆசிரியர்களிடம் தர வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டது."வாக்காளர் பட்டியலில் பெயரே இல்லாத நிலையில், எப்படி ஓட்டளிப்பது?' என கேட்டு, பெற்றோர் பலர், உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திடாமல், குழந்தைகள் வாயிலாக, பள்ளிக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதுபோன்ற பெற்றோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கூறுகையில்,

"படிவங்களை ஜெராக்ஸ் எடுப்பது, "ஸ்பைரல்' செய்வது என, 3,000 ரூபாய் வரை செலவாகிறது; ஆசிரியர்கள், தங்களது சொந்த பணத்தை செலவழிக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பாக, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்துள்ளோம். தேர்தல் கமிஷனே, ஒவ்வொரு மாணவருக்கும் தலா, மூன்று படிவம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும் என, அனைவரையும் வற்புறுத்தக்கூடாது' என்றனர்.

Tuesday, March 15, 2016

G.O 59 CPS detail&form

Click below

https://app.box.com/s/m95tw92qck7bfaus6krke30o7s9fgfe6

பி.இ. கலந்தாய்வு: ஏப்ரலில் விண்ணப்ப விநியோகம்?


சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பி.இ. கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகத்தை முன்கூட்டியே ஏப்ரலில் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் 2014-இல் மே 3-ஆம் தேதியும், 2015-இல் மே 6-ஆம் தேதியும் தொடங்கியது.

இந்த நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே 16-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 19-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. இதனால், மே 16 முதல் 19 வரை பெரும்பாலான மையங்களில் விண்ணப்ப விநியோகமும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதும் தடைப்படும்.

இதன் காரணமாக விண்ணப்ப விநியோகத்தை முன்கூட்டியே, ஏப்ரல் 25-இல் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டிருப்பதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆன்-லைனில் பதிவிறக்கம்: இதுதவிர, கடந்த ஆண்டைப் போலவே கலந்தாய்வு விண்ணப்பங்களை w‌w‌w.a‌n‌na‌u‌n‌i‌v.‌e‌d‌u‌t‌n‌ea என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கமும் செய்து கொள்ள முடியும்.

கலந்தாய்வு ஜூன் மூன்று அல்லது நான்காவது வாரத்தில் தொடங்கப்பட்டு, ஜூலை 30-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டுவிடும். ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் பி.இ. முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என்று பல்கலை. வட்டாரங்கள் தெரிவித்தன.

Sunday, March 13, 2016

Election form.2016

Click below

https://app.box.com/s/5xl76w5bgw599sgk34tnkzidqvc3f1jo

பின் தங்கிய பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு


கல்வி தரத்தில் பின்தங்கிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்க கல்வித்துறை இயக்குனரகத்தில் இருந்து, முதன்மை கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ.,) மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் யல்படுகின்றன; அரசு உதவி பெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆய்வு நடத்த வேண்டும்.உதவி மற்றும் கூடுதல் தொடக்க கல்வி அலுவலர்கள், அறிவியல்
மற்றும் நர்சரி உதவி தொடக்க கல்வி அலு
வலர்கள், எஸ்.எஸ்.ஏ., ஆசிரிய பயிற்றுனர்கள் குழு அமைத்து, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைமையில், முன்னறிவிப்பின்றி, பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து புகார் வரும் பள்ளிகள், கல்வி தரத்தில் பின்தங்கிய பள்ளிகளை தேர்வு செய்து, இத்தகைய ஆய்வை நடத்த வேண்டும்.
ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருகின்றனரா; பணி நேரம் முழுவதும் பள்ளியில் இருக்கின்றனரா; பாடங்கள் முழுமையாக நடத்தப்படுகிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றம், நூலகம் பயன்பாடு, அரசின் நலத்திட்டங்கள் வழங்கிய விவரம், கழிப்பறை வசதி மற்றும் துப்புரவு பணி, பாதுகாப்பான குடிநீர் போன்றவை ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆய்வு அறிக்கையை, தொடக்க கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்து இலட்சம் பேர் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நாளை துவக்கம்


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, தமிழகம், புதுச்சேரியில் நாளை தொடங்குகிறது. முறைகேடுகளை தடுக்க 6600 பறக்கும் படையை தேர்வுத்துறை அமைத்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை தொடங்குகிறது. இதில் 12, 053 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். மேலும், தனித் தேர்வர்களாக 48 ஆயிரத்து 564 பேர் எழுதுகின்றனர். இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாவட்டத்தில் 574 பள்ளிகள் மூலம் மொத்தம் 53  ஆயிரத்து 159 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். இவர்களுக்காக சென்னை மாவட்டத்தில் மட்டும் 209 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 298 பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரத்து 041 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக 48 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, திருச்சி, பாளையங்கோட்டை, சென்னை புழல் சிறையில் உள்ள 250 கைதிகளும் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.

தமிழ்  வழியில் படிப்போர் 6 லட்சத்து 70 ஆயிரத்து 795 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்களுடன் டிஸ்லெக்ஸ்சியா, கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளிகள் என 3420 பேருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை கண்காணிக்க 6600 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வுகள் காலை 9 மணிக்கே தொடங்கும்.