இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, January 11, 2016

அரையாண்டு தேர்வில் புதிய வினாத்தாள் அறிமுகம்


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு, நேற்று துவங்கியது. பொதுத் தேர்வுக்கு முன்னோட்டமாக, தேர்வு துறையின் புதிய வினாத்தாள் அறிமுகமாகி உள்ளது.'கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில், நடப்பாண்டு பொதுத் தேர்வு வினாத்தாளில் மாற்றம் கொண்டு வரப்படும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

அதனால், அனைத்து மாணவர்களும் புத்தகம் முழுவதையும் படித்தால் மட்டுமே, 'சென்டம்' பெறலாம் என்ற நிலை உள்ளது. அதற்கு முன்னோட்டமாக, அரையாண்டு தேர்விற்கு தேர்வுத்துறை உருவாக்கியுள்ள வினாத்தாளை பார்த்துக் கொள்ளலாம் என, தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று துவங்கிய அரையாண்டு தேர்வில், புதிய முறை வினாத்தாள் அறிமுகமானது. பாடங்களின் பின்பக்க கேள்விகள், முந்தைய ஆண்டு பொதுத்தேர்வு கேள்விகள் தவிர, பாட அம்சங்களில் இருந்தும் புதிய கேள்விகள் இடம்பெற்றிருந்தன.

இந்த கேள்விகளுக்கு, வகுப்பில் முதல் தர மாணவர்கள் மட்டுமே பதில் எழுத முடிந்தது; பிற மாணவர்கள் திணறினர். இனி வரும் பொதுத்தேர்வில், இதுபோன்ற வினாத்தாள் முறையே அறிமுகமாக உள்ளது. எத்தனை கேள்விகள்பிளஸ் 2 தமிழ் முதல் தாள் வினாத்தாளில், நான்கு மதிப்பெண்ணில், ஒரு கேள்வி; ஒரு மதிப்பெண்ணில், ஒன்பது கேள்விகள் என, 13 மதிப்பெண்களுக்கு, மொத்தம், 10 கேள்விகள், புத்தகத்தின் உட்பகுதியிலிருந்து கேட்கப்பட்டிருந்தன.

இதேபோல், 10ம் வகுப்பு தமிழ் முதல் தாளில், நான்கு மதிப்பெண்ணில், இரண்டு கேள்விகள்; இரண்டு மதிப்பெண்ணில் ஆறு; ஒரு மதிப்பெண்ணில் நான்கு; எட்டு மதிப்பெண்ணில் ஒன்று என, மொத்தம், 32 மதிப்பெண்களுக்கு, 13 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

Sunday, January 10, 2016

திருச்சி ஜேக்டோ கூட்ட முடிவுகள் 10-1-16


திருச்சி ஜாக்டோ கூட்ட முடிவுகள்.  10.01.2016 அன்று திருச்சியில் ஜாக்டோ அமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில்   எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் .

1.திட்டமிட்டபடி மாநிலம் முழுவதும் ஜனவரி-30.31, மற்றும் பிப்ரவரி-1 ஆகிய தேதிகளில் ஜாக்டோவின் 15 அம்சக்கொரிக்கையை வலியுறுத்தி மாவட்டத்தலைநகரில் மறியல் போராட்டம் நடத்துவது

2 மாவட்டத்தலைநகரில் ஜனவரி-23 அல்லது 24 ஆகிய நாட்களில் ஆயத்தக்கூட்டங்களை மாவட்ட ஜாக்டோ அமைப்பு நடத்துவது என்றும் அதில் மாவட்ட ,வட்டார,வட்ட அளவிலான ஜாக்டோ இணைப்புசங்க பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு மறியல் போராட்டம் வெற்றிபெறவும் ஆயத்தப்பணிகள் ,ஆசிரியர் சந்திப்பு இயக்கம் ஆகியன குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஜாக்டோ  உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பர்.மற்ரும் மாநில அமைப்பின் வழிகாட்டுதல்படி அமையப்பெற்ற துண்டறிக்கைகள் அச்சிட்டு வழங்கப்படும்

3.பள்ளிகள் தோறும் சென்று  மறியல் போராட்டத்தில் திரளான ஆசிரியர்களை பங்கேற்கும் வகையில் ஆசிரியர் சந்திப்பு இயக்கம்  ஜனவரி-26,27,28 ஆகிய தேதிகளில் நடத்தப்படவேண்டும்.

4.அப்போது மறியல் போராட்டத்தில் பங்கேற்க ஏதுவாக ஜாக்டோ அமைப்பின் பெயரில் ஒப்புதல் படிவம் பெறப்படல் வேண்டும்   
                                                 5 ஜனவரி  30 அன்று நடத்தப்படும் முதல் மறியல் நாளில் மிகப்பெரும்பான்மையான ஆசிரியர்களை பங்கேற்க செய்ய வேண்டும . 
                                                6. ஜனவரி -30 அன்று நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு தலைமைப் பொறுப்பை  ஜாக்டோ அமைப்பில் உள்ள அனைத்து சங்கங்களின் மாவட்ட ,வட்ட,வட்டார அளவிலான தலைவர்கள்  ஏற்பார்கள. 

                      7. அடுத்த நாளான ஜனவரி -31 அன்று நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு தலைமைப்பொறுப்பை  ஜாக்டோ அமைப்பில் உள்ள அனைத்து சங்கங்களின் மாவட்ட ,வட்ட,வட்டார அளவிலான பொருளாளர்கள்  ஏற்பார்கள                       

8. இறுதி நாளான பிப்ரவரி-1 அன்று நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு தலைமைப்பொறுப்பை  ஜாக்டோ அமைப்பில் உள்ள அனைத்து சங்கங்களின் மாவட்ட ,வட்ட,வட்டார அளவிலான செயலாளர்கள்  ஏற்பார்கள். மறியல் விளக்க உரை மூன்று நாட்களும் மாநில ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ,மற்றும் மாவட்ட ஜாக்டோ அமைப்பின் உறுப்பினர்கள் பங்கேற்பர்.           ஆசிரியர்கள் அனைவரும் மறியல் போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் திட்டமிட்டு பணியாற்றவேண்டும் என ஜாக்டோ மாவட்ட,வட்டார பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழக அரசுக்கு ரூ.100 கோடி இழப்புபள்ளிகளின் கட்டுமான பணியை தொடங்க மத்திய அரசு நிதி கொடுக்க மறுப்பு


அரசு உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வக கூடம், கழிப்பிடம், குடிநீர் தேக்க தொட்டி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட கட்டுமான பணிகளை ெதாடங்காமல் பொதுப்பணித்துறை இழுத்தடித்து வந்ததால், மத்திய அரசின் ரூ.100 கோடி நிதியை பெற முடியாமல் போன தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அனைவருக்கும் மேல்நிலைக்கல்வி கிடைப்பதை எளிதாக்கவும், கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதியுதவியின் மூலம் ரூ.295.54 கோடி செலவில், 344 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்ட கடந்த 2011ல் முடிவு செய்யப்பட்டது.

இதில், 1,335 வகுப்பறைகள், 184 ஆய்வக கூடம், 603 கழிப்பறைகள், 99 குடிநீர் தேக்க தொட்டி, பள்ளிகளை சுற்றி 50 ஆயிரத்து 110 மீட்டர் சுற்றுப்புற சுவர் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ள தீர்மானித்தது. பொதுவாக, மத்திய அரசு நிதியை பெறுவதற்கு முன்னர் மாநில அரசு தனது சொந்த நிதியின் மூலம் அதற்கான பணிகளை முடித்து விட்டு நிதியை பெற்றுக்கொள்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில், இந்த திட்டத்திற்கு அரசு தரப்பில் கடந்த 2012ல் தான் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.இதைதொடர்ந்து உடனடியாக இப்பணிக்கு டெண்டர் விட்டு கட்டுமான பணிகளை 30 நாட்களுக்குள் பொதுப்பணித்துறை தொடங்கி இருக்க வேண்டும்.

ஆனால், தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்த நிலையிலும், திட்ட அறிக்கை தயாரிப்பதிலும் தாமதம் காட்டியதன் விளைவாக 7 மாதங்களுக்கு பிறகே பொதுப்பணித்துறை டெண்டர் விட்டு கட்டுமான பணிகளை தொடங்கியது. இந்நிலையில், கடந்தாண்டு 126 பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்களுக்கான பணிகள் முடிக்கப்பட்டன. இதை தொடர்ந்து மத்திய அரசு தேசிய இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.195 கோடியை தமிழக அரசுக்கு வழங்கியது.

தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் 6 பள்ளிகள், கடலூர் 13, பெரம்பலூர் 7, நாமக்கல் 6, சேலம் 9, தர்மபுரி 20, விருதுநகர் 15, புதுக்கோட்டை 17, திண்டுக்கல் 10, கரூர் 9 உட்பட 118 பள்ளிகளின் மேம்பாட்டு பணிகளுக்கு பொதுப்பணித்துறை தரப்பில் கடந்தாண்டு டெண்டர் விடப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

தற்போது இத்திட்டப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் நிதியை பெற தவறியதால் அந்த நிதியாண்டு முடிந்தது எனக்கூறி மத்திய அரசு ரூ.100 கோடி நிதியை தர மறுத்து விட்டது. இதனால், தற்போது பள்ளிகளின் மேம்பாட்டு பணிகளுக்காக தமிழக அரசு தனது சொந்த நிதியின் மூலம் பணிகளை மேற்கொண்டு வருவதால் அரசுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஜன. 19 வரை சாலை பாதுகாப்பு வாரம் பொங்கல் விடுமுறையால் நீட்டிப்பு


பொங்கல் விடுமுறையால் ஜன.,10 முதல் ஜன.,17 வரை நடக்கவிருந்த சாலை பாதுகாப்பு வாரத்தை, ஜன.,19 வரை கடை பிடிக்க வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து துறை சார்பில் ஆண்டுதோறும் ஜன.,1 முதல் 7 வரை சாலை பாதுகாப்பு வாரம் கடை பிடிக்கப்பட்டது. இந்தாண்டு நேற்று முதல் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கால நீட்டிப்புதமிழகத்தில் ஜன.,15, 16, 17ல் பொங்கல் விடுமுறை உள்ளதால் சாலை பாதுகாப்பு வாரத்தை ஜன.,19 வரை கடை பிடிக்க வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல் நாளான நேற்று மாவட்ட தலைநகர்களில் சாலை பாதுகாப்பு கண்காட்சி திறக்கப்பட்டு, ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. 2ம் நாளான இன்று சுங்க சாவடிகளில் சாலை பாதுகாப்பு சம்பந்தமான சிறப்பு இரவு வாகன தணிக்கை, வாகனங்களின் பின்புறத்தில் சிவப்பு 'ரிப்ளெக்டர்' ஸ்டிக்கர் ஒட்டுதல் என,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. போட்டிகள்ஜன.,12ல் பள்ளி மாணவர்களிடையே சிறந்த சாலை பாதுகாப்பு வசனம் எழுதும் போட்டி போன்றவை நடத்தி பரிசு வழங்குதல், ஜன.,13ல் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஊர்வலம், ஜன.,14ல் அதிவேகம் போன்ற விதி மீறல்கள் குறித்த சோதனை செய்யப்படுகிறது.

ஜன.,18ல் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் டிரைவர்களுக்கு மருத்துவ முகாம், முதலுதவி பயிற்சி முகாம், ஜன.,19ல் சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய உறுதி மொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வருமானவரி தாக்கல் விசாரணை இணையம் மூலமாக திட்டம்

வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் மின்னஞ்சல் மூலமாக மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.

வரும் 2016 - 2017 நிதியாண்டு முதல் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக வருமான வரித் துறை அறிவித்துள்ளது. வருமான வரி தாரர்கள் மின்னஞ்சலில் பதில்களை அளிப்பது மூலம் அவர்களுக்கு தேவையற்ற சிரமங்கள் குறையும் என வருமான வரித் துறை தெரிவித்தள்ளது.

மேலும் வருமான வரித் துறையில் நடக்கும் ஊழல்களை கட்டுப்படுத்துவதற்கும் இது உதவும் என அத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான சோதனை முயற்சி சென்னை உள்ளிட்ட 5 மாநகரங்களில் ஏற்கனவே வெற்றிகரமாக நடந்து வருவதாகவும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இணையதள வழியில் தாக்கல் செய்யப்பட்ட 50 லட்சம் வருமான வரி கணக்குகள் இதுவரை மின்னணு முறையில் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும் அத்துறை தெரிவித்துள்ளது.

Saturday, January 09, 2016

உங்களுக்கு என்ன பயிற்சி வேண்டும்?ஆசிரியர்களுக்கு தனித்தனியே கேள்வி


உங்களுக்கு என்ன பயிற்சி வேண்டும்?' என, ஒவ்வொரு ஆசிரியரிடமும், தனித்தனியே விவரம் கேட்கப்படுவதால், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்வரை, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஒரு சில நாள் பாடம் சார்ந்து, பயிற்சி வழங்கப்பட்டு வந்தன. இவை சமீப காலமாக அதிகரித்து, அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை என, தனித்தனியே ஆண்டுக்கு, 20 நாள் வரை பயிற்சி வழங்கப்படுகிறது.

இதனால், ஆர்வத்துடன் கலந்து கொண்ட நிலை மாறி, பயிற்சி என்றாலே, பதறியடித்து ஓடும் நிலை உள்ளது. இந்நிலையில், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், அனைத்து ஆசிரியர்களிடமும், 'என்ன பயிற்சி வேண்டும்?' என, விவரம் கேட்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:வழக்கமாக என்ன பயிற்சி வழங்க வேண்டும் என்பதை கல்வித்துறை அலுவலர்களே முடிவு செய்து, பயிற்சிக்கு அழைப்பது வழக்கம். இந்த முறை, அனைத்து ஆசிரியர்களிடமும் என்ன பயிற்சி தேவை என, கேட்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தேவையை கொண்டுள்ளனர் என்பதால், பல்வேறு விதங்களில் படிவங்களை நிரப்பி வருகின்றனர். எப்போது வழங்கப்படுவது? என்ன விதமான பயிற்சி? என எதுவும் குறிப்பிடாமல், படிவங்கள் வழங்கப்பட்டதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் விஜயகுமார் கூறியதாவது:

அடுத்த, 2016- - 17ம் கல்வியாண்டில், ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் பயிற்சி, ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களின் தேவைகளும் கேட்கப்பட்டுள்ளன. இதில், அதிகப்படியான தேவை உள்ள பயிற்சிகள், மத்திய அரசின் நிதியுதவியுடன் அடுத்த கல்வியாண்டில் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்

பணியாளர்கள் குறித்த விவரம் இல்லை


ஓய்வு பெற்ற, இறந்த ஆசிரியர்களின் விவரம், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இல்லை என, தகவல் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் எரியோடையை சேர்ந்த பிரடெரிக் ஏங்கல்ஸ் என்பவர், பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் தகவல் உரிமைச் சட்டத்தில் மனு அளித்தார்.

அதில் 2003 ஏப்., 1க்கு பின் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் இறந்தோரின் விவரம், அவர்களிடம் பிடித்த ஓய்வூதிய தொகை உள்ளிட்ட கேள்விகளை கேட்டிருந்தார். இதற்கு இயக்குனரக பொதுதகவல் அலுவலரான துணை இயக்குனர் (மின் ஆளுமை) பதில் அளித்துள்ளார். அதில் மனுதாரர் கோரப்பட்ட தகவல்கள் தங்கள் அலுவலகத்தில் பராமரிக்கப்படவில்லை. இதனால் பதில் அளிக்க முடியாது என, தெரிவித்துள்ளார்.

பள்ளி கல்வி இயக்குனர் தான், ஆசிரியர்களுக்கு துறை அலுவலராக உள்ளார். அந்த துறை அலுவலகத்திலேயே பணிபுரிவோரின் விவரம் இல்லை என, கூறியிருப்பது ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது:

கருவூல கணக்குத்துறை இயக்குனரகத்திற்கு தகவல் தருவதற்காக, 2003 ஏப்.,1க்கு பின் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் இறந்த ஆசிரியர்கள், பணியாளர்களின் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, 2015 மார்ச் 12ல் பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆனால் அதே அலுவலகத்தில் தகவல் இல்லை என, கூறப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தகவல் கேட்டு, மேல்முறையீடு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Friday, January 08, 2016

வாக்காளர் அடையாள அட்டையுடன் செல்பி எடுத்து அனுப்புங்கள்: தலைமைத் தேர்தல் அதிகாரி வேண்டுகோள்


உங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் செல்பி எடுத்து அனுப் புங்கள். சிறந்த புகைப் படத்துக்கு விருது உண்டு என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். கண்ணியமான தேர்தல் பிரசார தொடக்க விழா சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி யில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சகாயம் பேசியதாவது: தங்களுடைய தலைவர் ஊழ லற்றவராக, நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று எண்ணு வது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை.

நம் தேசம், சமூகம் முன்னேற வேண்டும். அதற்கு தொடக்கமாக நாம் பொறுப் பாளராக இருக்க வேண்டும். நேர்மையான, பொறுப்பான சமூகமாக இந்த தமிழ்ச் சமூகம் மாறுவதற்கு கண்ணியமான தேர்தல் நடக்க வேண்டும். இந்த தேசத்தை நேசிப்பதன் அடையாளமாக தமிழக மக்கள் இந்த முறை கண்ணியமான தேர்தலை நடத்திக் காட்டுவார்கள். அதற்கு மாணவர்கள், இளைஞர்சக்தி நிச்சய மாக உறுதுணையாக இருக்கும் இவ்வாறு சகாயம் பேசினார். இவ்விழாவில், தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பேசும்போது,

“உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக் கிறதா என்று 1950 அல்லது 9444123456 ஆகிய எண்களுக்கு உங் கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை எஸ்எம்எஸ் அனுப்பி, உறுதி செய்துகொள்ளுங்கள். நேர்மையான, நியாயமான தேர்தல் நடக்க ஒத்துழையுங்கள். உங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் செல்பி எடுத்து அனுப்புங்கள். சிறந்த புகைப் படத்துக்கு விருது உண்டு” என்றார்.

பாடத்திட்டம் திடீர் மாற்றம்: மாணவர்கள் அதிர்ச்சி


உயர் படிப்புக்கான உதவித்தொகை தரும், தேசிய வருவாய் வழி தேர்விற்கு, 15 நாட்களே உள்ள நிலையில், திடீரென பாடத்திட்டம் மாற்றப்பட்டதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்பர்.

வெற்றி பெறும் மாணவர்களுக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மாதந்தோறும், 500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.நடப்பு கல்வியாண்டில் இத்தேர்வு, ஜன., 23ல், தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது; மூன்று லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.தேர்வுக்கு இன்னும், 15 நாட்களே உள்ள நிலையில், அரசு தேர்வுத்துறையின் புதிய அறிவிப்பால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேசிய வருவாய் வழி தேர்வுக்கு, எட்டாம் வகுப்பு பாடங்கள் முழுமையும் பாடத்திட்டமாக வைக்கப்பட்டு, அதிலிருந்து தான் வினாக்கள் கேட்கப்படும்.

இம்முறையும் அதே பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். ஆனால், திடீரென தற்போது அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பியுள்ள அவசர சுற்றறிக்கையில், 'எட்டாம் வகுப்பில், முதல் இரண்டு பருவ பாடங்களையும், ஏழாம் வகுப்பில் அனைத்து பருவ பாடங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே வினாத்தாள் அமையும். இதை, திருத்திய அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

தேர்வு துறையின் அறிவிப்பு, வேடிக்கையாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. இரண்டு வாரங்களே மீதமுள்ள நிலையில், திடீரென, 'ஏழாம் வகுப்பின் ஓராண்டு பாடத்தையும் படியுங்கள்' என, மாணவர்களை எப்படி நிர்பந்தப்படுத்த முடியும். இந்த அறிவிப்பு, விதிகளை மீறுவதாக உள்ளது.எந்த ஒரு தேர்வுக்கும், விண்ணப்பிக்கும் முன் அறிவிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிக்கை தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். விண்ணப்பித்த பின் அறிவிக்கையை மாற்ற, சட்டத்தில் இடமில்லை.- ஆசிரியர்கள்

இளம் வயது மாணவர்களுக்கு தண்டனை கொடுப்பது போல், இந்த அறிவிப்பு உள்ளது. ஏற்கனவே, அரையாண்டு தேர்வையும் வைத்துக் கொண்டு, உதவித்தொகைக்கான தேர்வையும் அறிவித்ததால், இரண்டு தேர்வுக்கும் தயாராக முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.இதில் திடீரென, 'கடந்த ஆண்டு பாடங்களை படியுங்கள்' என்பது என்ன நியாயம்; மாணவர்கள் ஓராண்டில் படிக்க வேண்டியதை இரண்டு வாரங்களில் படிக்க முடியுமா?- பெற்றோர்

10ம் வகுப்பு செய்முறை தேர்வு


அரசு தேர்வுத்துறை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வை அறிவித்துஉள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பு வெளி யிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது. ஏற்கனவே, மழை, வெள்ளத்தால் தள்ளி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு, ஜன., 11ல் துவங்கும் நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பு வராமல் மாணவர்கள் தவித்தனர்.செய்முறை தேர்வு தேதி தெரிந்தால் தான், 'ரிவிஷன்' தேர்வுகளை திட்டமிட முடியும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பை, அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. அதில், 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு, ஜன., 22 முதல் பிப்., 3க்குள் நடத்தி முடித்து, மதிப்பெண் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளிகளில், ஜன., 11 முதல், 27க்குள், இரண்டாம் பருவ தேர்வை நடத்தி முடிக்க, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பதவி உயர்வு பட்டியல்

அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களின் மேற்படிப்பு, பணி அனுபவம் அடிப்படையில், தலைமை ஆசிரியர்களாகவும், நிலை வாரியாகவும், பதவி உயர்வு வழங்கப்படுகிறது.அதன்படி, தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்க, தொடக்க கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ஜன., 1ம் தேதி நிலவரப்படி, ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து, பிப்., 2க்குள் அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது

Thursday, January 07, 2016

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புடன் 4 வருட பி.எட். படிப்பு; அடுத்த கல்வி ஆண்டு முதல் அறிமுகம்


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு ‘12 பி’ அந்தஸ்து கிடைத்து இருக்கிறது. இந்த சிறப்பு அந்தஸ்து கிடைத்ததற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அந்தஸ்து இதுவரை 4 திறந்தநிலை பல்கலைக்கழகங்களுக்கு கிடைத்து உள்ளது. 5-வதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பெற்றிருக்கிறது. 4 மண்டல மையம் இந்த அந்தஸ்து பெற்றதனால் ‘நேக்’ என்ற தேதிய தர அங்கீகாரம் (என்ஏஏசி) பெறலாம். அதற்காக விண்ணப்பித்து இருக்கிறோம். சென்னை, கோவை, மதுரை, தர்மபுரி ஆகிய 4 இடங்களில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு மண்டல அளவில் மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசு ரூ.65 லட்சத்து 15 ஆயிரம் ஒதுக்கி உள்ளது.

மதுரையில் மண்டல மையம் அமைப்பதற்கான நிலத்தை கலெக்டர் வழங்கியுள்ளார். இதுபோல மற்ற இடங்களில் நிலம் கையகப்படுத்திய பின்னர் கட்டிடம் கட்டப்படும். சமுதாயக்கல்லூரிகள் அனைத்து மாவட்டங்களிலும் திறக்க இருக்கிறோம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தற்போது பி.எட். தபால்வழியில் நடத்தி வருகிறோம். அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளோம். பி.ஏ. பி.எட்., பி.எஸ்சி. பி.எட். ஆகிய இரு படிப்புகள் ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பாக அடுத்த கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இளங்கலை பட்டத்துடன், பி.எட். படிப்பும் சேர்ந்து படிக்கக்கூடிய இதற்கு மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும். ஆய்வுக்குழு இந்த படிப்புக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் விண்ணப்பித்துள்ளோம். விரைவில் ஆய்வுக்கு வர உள்ளனர். மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கக்கூடிய ரெகுலர் பி.எட். படிப்பு, ரெகுலர் எம்.எட். படிப்பும் அடுத்த கல்வி ஆண்டில் கொண்டு வரப்படும். தபால் வழியில் பட்டயப்பிரிவில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் பி.எட். படிக்கும் வகையில் அறிமுகப்படுத்த உள்ளோம். தபால் வழியில் எம்.எட். படிப்பு கொண்டுவர உள்ளோம். இவ்வாறு பேராசிரியர் சந்திரகாந்தா ஜெயபாலன் தெரிவித்தார்.