இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, November 07, 2015

மாணவர்களுக்கு உதவும்'மொபைல் ஆப்' வெளியீடு


பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான, 'டிஜிட்டல் இந்தியா'வை, நனவாக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பயன்படும், 'மொபைல் ஆப்'களை நேற்று அறிமுகப்படுத்தியது. டில்லி, விஞ்ஞான் பவனில் நேற்று, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான, 'சாரன்ஷ்' மென்பொருளை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டது;

இது, குழந்தைகளின் கல்வி அறிவு மேம்பாட்டை, பாடவாரியாக, தேசிய, மாநில, மாவட்ட அளவில் பிற குழந்தைகளுடன் ஒப்பீடு செய்ய, பெற்றோருக்கு உதவி செய்யும். தவிர, மாணவர்கள், இணையதளத்தில் இருந்து பாடங்களை பெற உதவும், எண்ணற்ற, 'மொபைல்' செயலிகள், இணையதளம் சார்ந்த இயங்கு தளங்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஸ்மிருதி இரானி பேசியதாவது: பள்ளிக் கல்வியில் வெளிப்படைத் தன்மையையும், புதிதாக கற்கும் வாய்ப்புகளையும், குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தருவதில், மனிதவள மேம்பாட்டுத் துறை ஆர்வமாக உள்ளது. மாணவர்களின் தேர்வுச் சுமைகளை குறைக்க, மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, புதிய திட்டங்கள் தீட்டி வருகிறோம்.

வரும் ஆண்டில், இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும். மாநில அரசு களின் உதவியால், அனைத்து பள்ளிகளிலும், மாணவியருக்கு கழிப்பறை அமைத்து தரும் திட்டம், நனவாகி வருகிறது. இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.

புதிய கல்விக்கொள்கை வரைவும் விளக்கமும்.திரு செ.நடேசன்

Click below

http://suzhalvilakku.blogspot.in/2015/11/blog-post.html?spref=fb&m=1

Friday, November 06, 2015

வாக்காளர் பட்டியலில் பெயரைச் சரிபார்க்க வாய்ப்பு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்


வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும், தகவல்களைத் திருத்தவும் வாய்ப்பு அளிக்கப்படுவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:

வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 15-ல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 2 கோடியே 82 லட்சத்து 49ஆயிரத்து 651 ஆண்கள், 2 கோடியே 84 லட்சத்து 28 ஆயிரத்து 472 பெண்கள், 3 ஆயிரத்து 719 திருநங்கைகள் என 5 கோடியே 66 லட்சத்து 81 ஆயிரத்து 842 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. அதன் தகவல்களை இணையதளம். செல்லிடப்பேசி குறுஞ்செய்தி, தானியங்கி குரல் கேட்பு(ஐ.வி.ஆர்.எஸ்.) மூலம் உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதி செய்து தரப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறுவது ஆகியவற்றுக்காக 22 லட்சத்து 81 ஆயிரத்து 392 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

வரும் ஜனவரி 1- ஆம் தேதியன்று நிலவரப்படி 18 வயது பூர்த்தி ஆனவர்களும், ஏற்கெனவே தகுதி பெற்றிருந்தும் இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் படிவம் 6 மூலமாக பெயர் சேர்ப்புக்கு விண்ணப்பித்தனர். EASY போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ததால், மொத்தமுள்ள 22.81 லட்சம் விண்ணப்பதாரர்களில் 7 லட்சம் பேர் தங்கள் விண்ணப்பங்களில் செல்லிடப்பேசி எண்களை அளித்திருந்தனர்.

அந்த 7 லட்சம் பேருக்கும் அவர்களின் விண்ணப்பம் குறித்த தகவல்கள், செல்லிடப் பேசி குறுஞ்செய்தி மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் 4 கட்டங்களாக பரிசீலிக்கப்படும். ஒவ்வொரு கட்டத்துக்கும் விண்ணப்பம் வரும்போது. சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தரப்படும். அந்த வகையில் டேட்டா பதிவு, சரிபார்த்தலுக்காக வாக்குச்சாவடி அலுவலருக்கு விண்ணப்பத்தை அளித்தல், சரிபார்த்தல் பணி நிறைவு, விண்ணப்பத்தின் மீது தேர்தல் நடத்தும் அதிகாரி இறுதி உத்தரவு பிறப்பித்தல் ஆகிய 4 கட்டங்களும் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும். விண்ணப்பம் கொடுக்கும்போது செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி கொடுக்காமல் இருப்பவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்காத பழைய வாக்காளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். அவர்களும் EASY செல்லிடப்பேசி செயலி, இணையதளம், ஐ.வி.ஆர்.எஸ் 044-66498949, குறுஞ்செய்தி வழியாக அனுப்புவோர் எஸ்.எம்.எஸ்., (ஆர்.எம்.என். -ஸ்பேஸ்- வாக்காளர் அடையாள அட்டை எண்- ஆகிய தகவலை 1950 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

நாளை முதல் நடவடிக்கை: வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை மக்களே முன்வந்து கொடுப்பதற்கான வழிமுறைகளைச் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெயர் சேர்ப்புக்கான 6-ஆம் எண் விண்ணப்பங்களை கொடுத்தவர்களின் விவரங்கள் அடங்கிய சுருக்கப் பட்டியல் 9-ஆம் எண் படிவத்திலும், பெயரை நீக்க 7-ஆம் எண் விண்ணப்பங்களை கொடுத்தவர்களின் சுருக்கப் பட்டியல் 10-ஆம் எண் விண்ணப்பத்திலும், விவரங்களைத் திருத்துவதற்கான 8-ஆம் எண் விண்ணப்பங்களைக் கொடுத்தவர்களின் சுருக்கப் பட்டியல் அனைத்தும் 11-ம் எண் விண்ணப்பத்திலும், வாக்காளர் பட்டியல் பதிவை இடமாற்றுவதற்கான 8ஏ எண் விண்ணப்பங்களை கொடுத்தவர்களின் சுருக்கப் பட்டியல் விவரங்கள் அனைத்தும் 11ஏ எண் விண்ணப்பத்திலும் இடம்பெற்றிருக்கும். மேலும், http: 104.211.228.47ApptrackingEmatixGrid.aspx. என்ற இணையதள இணைப்பிலும் காணலாம். ஏதாவது திருத்தங்கள் செய்ய நேர்ந்தால், தகுந்த ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரியை அணுகலாம் என்று தனது அறிவிப்பில் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

டிஸ்லெக்சியா' மாணவர்கள்: ஆசிரியர்களுக்கு பயிற்சி


கற்றல் குறைபாடுள்ள, 'டிஸ்லெக்சியா' மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்புப் பயிற்சி அளிக்கிறது.தமிழகத்தில், தமிழ் வழியில் படிக்கும், 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில், 10 முதல், 15 சதவீதம் பேருக்கு, 'டிஸ்லெக்சியா' என்ற கற்றல் குறைபாடு உள்ளது.

இந்த மாணவர்கள் அறிவிலும், உடல் நலனிலும் மற்ற மாணவர்களை விட, நல்ல முறையில் இருந்தாலும், பாடங்களை புரிந்து படித்தல், மனப்பாடம் செய்தல் போன்றவற்றில் திணறுகின்றனர். அவர்களுக்கு, சரியான முறையில் பாடம் கற்பித்தால், எந்த குறைபாடும் இன்றி, மற்ற மாணவர்களை விட, ஒரு படி மேலே படிக்க முடியும். எனவே, இத்தகைய மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் விதம் குறித்து, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சென்னை 'டிஸ்லெக்சியா' சங்கம் சார்பில், இன்று சிறப்புப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, தி.நகர்., வாணி மகாலில் இந்த பயிற்சி வகுப்பு நடக்கிறது. சென்னை, ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்கள், சிறப்புக் கல்வியாளர் ஹரிணி மோகன் ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர்.-

ரயில் டிக்கெட் ரத்து கட்டணம் இரண்டு மடங்காக உயர்வு


ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணம், 12ம் தேதி முதல், இரு மடங்காக உயருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றபின், ரயில்வே துறையில், வருவாயை பெருக்கும் முயற்சியில், ரயில்வே அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை, ரத்து செய்வதற்கான காலக்கெடு மற்றும் கட்டணத்தை மாற்றி அமைக்க, ரயில்வே அமைச்சர், சுரேஷ் பிரபு முடிவு செய்தார்.

இதன்படி, புதிய விதிமுறைகளை, ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.

* ரயில் புறப்படுவதற்கு, 48 மணி நேரத்துக்கு முன், டிக்கெட்டை ரத்து செய்தால், ஒவ்வொரு பயணிக்கும், குறைந்தபட்சம், 60 ரூபாய் முதல் அதிகபட்சம், 240 ரூபாய் வரை டிக்கெட்டின் கட்டண தொகைக்கு ஏற்ப பிடித்தம் செய்யப்படும்

* ரயில் புறப்படுவதற்கு முன், 48 முதல் 12 மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், கட்டண தொகையில், 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்

* ரயில் புறப்படுவதற்கு முன், 12 முதல் 4 மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், 50 சதவீத கட்டணம் திரும்பப் பெறலாம்

* ரயில் புறப்படுவதற்கு முன், நான்கு மணி நேரத்திற்குள் ரத்து செய்யும்போது, கட்டணத் தொகை திரும்ப கிடைக்காது

* ஆர்.ஏ.சி., மற்றும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படும ்போது, அதற்காக வசூலிக்கப்படும் கட்டணம், ௩௦ ரூபாய், இனி, இரு மடங்காக பிடித்தம் செய்யப்படும். ரயில் புறப்பட்ட பின், 30 நிமிடம் வரை டிக்கெட்டை ரத்து செய்யலாம். இதற்கு முன், இரண்டு மணி நேரமாக இருந்தது.இந்த விதிமுறைகள், 12ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

Aadaar students enrollment form

Click below

https://app.box.com/s/139zgxwzgwys5zvx7z6ga950tsk5y2dl

Cleanliness drive nov 1-15th

Click below

https://app.box.com/s/eo1dk7sp8haulvd0cjm7d0355kxyp2zq

Thursday, November 05, 2015

புதிய கல்விக் கொள்கையை அனைவரும் எதிர்க்க வேண்டும்: பேராசிரியர் ராமானுஜம்


மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்விக் கொள்கையை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று, கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியரும், கல்வியாளருமான ஆர்.ராமானுஜம் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை ஆகிய அமைப்புகளின் சார்பில் "உயர் கல்வி எதிர்கொண்டுள்ள சவால்கள்' என்ற தலைப்பில் சென்னையில் தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் புதிய கல்விக் கொள்கை குறித்து கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியரும், விஞ்ஞானியுமான ஆர்.ராமானுஜம் பேசியது: புதிய கல்விக் கொள்கைக்கான விவாதப் பொருள்களிலிருந்து அந்தக் கொள்கை எப்படியிருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். இந்தக் கொள்கை கல்வி தொடர்பான பிரச்னைகளை முழுக்க, முழுக்க நிர்வாக ரீதியான பிரச்னையாகவே பார்க்கிறது.

கல்வியின் ஆன்மாவை இது தொடவில்லை. இந்த விவாதப் பொருள்களில் ஆசிரியர்கள் மிகவும் தரக்குறைவானவர்களாகப் பார்க்கப்படுவதை அறிந்துகொள்ளலாம். அதிக எண்ணிக்கையிலான மக்கள் உயர் கல்வி பெறுவதில்லை, உயர் கல்வி நிறுவனங்களுக்குள் அவர்களால் இன்னமும் வர முடியவில்லை என்பதுதான் நமது மிகப்பெரிய பிரச்னை. ஆனால், இந்தியாவில் உருவாக்குவோம் என்கிற திட்டத்துக்காக பள்ளிப் படிப்பு முடித்த மாணவர்களிலிருந்து தொழிலாளர்களை உருவாக்குவதாகவே இந்தப் புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. சமூகத்தில் உள்ள பிரிவுகளையும், வேறுபாடுகளையும் நியாயப்படுத்தும் பல்வேறு அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் உள்ளன. சமூக அவலங்களைப் போக்கும் கருவியாக கல்வியை இந்தப் புதிய கொள்கை பார்க்கவேயில்லை. மிக முக்கியமாக கலாசார ஒருமுகத்தன்மையையும் இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது. தொழில் நிறுவனங்களின் நலன்கள், மதவாதக் கொள்கைகள் ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்து புதிய கல்விக் கொள்கையாக தரப்பட உள்ளது.

எல்லோருக்கும் வேலை தரப்போகிறோம் என்கிற புதிய கொள்கையை எதிர்ப்பது சுலபமல்ல. ஆனால், கல்வி பற்றிய அக்கறை கொண்ட அனைவரும் எதிர்க்க வேண்டியதுதான் இந்தப் புதிய கொள்கை. உயர் கல்வியில் அடிப்படையான மாற்றங்கள் தேவை. ஆனால், இந்த மாற்றங்கள் தேவையில்லை என்றார் அவர். சந்தைப் பொருளாக மாற்றக் கூடாது: அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் பேராசிரியர் அனில் சத்கோபால்:

உலக வர்த்தக அமைப்பின் -காட்ஸ்- ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் உயர் கல்வியை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா திறந்துவிட உள்ளது. நைரோபியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் இதற்கான விருப்பத்தை இந்தியா திரும்பப் பெறவில்லை என்றால், அதை எப்போதும் திரும்பப் பெற முடியாது. கல்வி என்ற நிலையில் இருந்து சந்தையில் விற்கப்படும் பொருளாக அது மாற்றப்பட உள்ளது. மாணவர்கள் நுகர்வோர்களாகவே பார்க்கப்படுவர். உயர் கல்வியை பணம் கொடுத்து மட்டுமே கற்க முடியும் என்ற நிலை உருவாகும். எனவே, இதை அனைவரும் எதிர்க்க வேண்டும். இப்போதைய உயர் கல்வி முறையில் நிச்சயம் மாற்றம் தேவை. ஆனால், அதை சந்தைக்குத் திறந்துவிடுவது தீர்வாகாது என்றார் அவர். மனோன்மணீயம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி: மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக குழு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் ஒரேயொரு கல்வியாளரைத் தவிர மீதமுள்ள அனைவரும் அதிகாரிகள்தான்.

உலக வர்த்தக அமைப்பின் -காட்ஸ்- ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவதன் மூலம் உயர்கல்வி முழுக்க, முழுக்க சந்தைப் பொருளாக மாறும். இந்த ஒப்பந்தம் உயர் கல்வியை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிடுகிறது. இதற்கான விருப்பத்தை இந்தியா திரும்பப் பெறவில்லையென்றால் நமது தலையெழுத்தை மாற்ற முடியாது. இப்போது நமது கல்விக்கும், ஜனநாயகத்துக்கும் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களுடனை இணைந்து மிகப்பெரிய போர்க்குரல் எழுப்பினால் மட்டுமே மீட்சி உண்டு என்றார் அவர். புதிய கல்விக் கொள்கை குறித்த புத்தகத்தை கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் வெளியிட, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயலாளர் ஜி.முனுசாமி பெற்றுக்கொண்டார். பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, லயோலா கல்வியியல் கல்லூரியின் செயலாளர் டோமினிக் ராய்ஸ், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொருளாளர் கே.செந்தமிழ்ச்செல்வன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் தலைவர் பி.ரத்னசபாபதி, பேராசிரியர் மணி, பேராசிரியர் எஸ்.மோகனா உள்ளிட்டோர் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

Wednesday, November 04, 2015

15 ஆயிரம் ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்க அரசாணை வெளியீடு


தமிழகம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான தொடர் நீட்டிப்பு ஆணை புதன்கிழமை வெளியிடப்பட்டது. அரசு ஆணை எண் 110, 120, 175, 193, 212 ஆகியவற்றின் கீழ் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் ஊதியம் பெறுகின்றனர். ஆனால், இந்த ஆசிரியர்களுக்கான ஊதிய தொடர் நீட்டிப்பு ஆணை இதுவரை வழங்கப்படவில்லை என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் புகார் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான தொடர் நீட்டிப்பு ஆணை புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வேலைவாய்ப்பு பதிவு மூப்பு: கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பணியிடங்களுக்கான கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் அவ்வப்போது நிரப்பப்படும் பணியிடங்களுக்கான பதிவு மூப்பு கட்-ஆஃப் தேதி விவரங்கள் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

எட்டாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படித்துவிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யலாம். அவர்கள் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்த தேதியின் அடிப்படையில் பதிவு மூப்பு வழங்கப்படும். இதில் 2015 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, நடத்துநர், தட்டச்சர், வாட்ச்மேன், உதவியாளர் உள்ளிட்டப் பணியிடங்கள் வாரியாக பதிவு மூப்பு கட்-ஆஃப் தேதி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் 4.94 லட்சம் பேரும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 60 லட்சம் பேரும் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்.

புதிய பென்ஷன் சேமிப்பு: ரூ.ஒரு லட்சம் கோடி: தமிழகம் 'மிஸ்சிங்'


மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் நிர்வகிக்கும் புதிய பென்ஷன் திட்டத்தின் சேமிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில் தமிழக அரசு ஊழியர்களிடம் பிடித்த தொகை மட்டும் செலுத்தப்படவில்லை.அரசு ஊழியர்கள், பொது நிறுவன தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. தொடர்ந்து மேற்குவங்காளம், திரிபுரா மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநில அரசுகளும் செயல்படுத்தின. தமிழகத்தில் 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.

அதன்பின் மத்திய, மாநில அரசுகள் ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்து, மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்தி வருகின்றன. 2015 செப்., 26 வரை 15.69 லட்சம் மத்திய அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட ரூ.41,771 கோடி ஆணையத்தில் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் 27.69 லட்சம் ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை ரூ.47,231 கோடி செலுத்தப்பட்டது. 4,15,820 பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களிடம் பிடிக்கப்பட்ட ரூ.7,106 கோடி செலுத்தப்பட்டது.மொத்தம் 93.27 லட்சம் ஊழியர்களிடம் ரூ.98,653 கோடி ஆணையத்தில் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 4.03 ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை இதுவரை ஆணையத்தில் செலுத்தப்படவில்லை. தற்போது தமிழகத்தில் பிடித்த தொகைக்கான ஒப்புகை சீட்டு மட்டும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த ஒப்புகை சீட்டால் எந்த பயனும் இல்லை என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.தகவல் உரிமை சட்டத்தில் இத்தகவல்களை பெற்ற திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: புதிய பென்ஷன் திட்டத்தில் 3 விதமான திட்டங்கள் உள்ளன. இதில் எந்த திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை. ஆணையத்தில் பணம் செலுத்திய மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டுமாவது (இறப்பு அல்லது ஓய்வு பெறும்போது) பணப்பலன் கிடைக்கிறது.

தமிழக அரசு ஆணையத்தில் பணம் செலுத்தாததால் பணப்பலன் வழங்க முடியாமல் தவிக்கிறது. சிலர் மட்டுமே நீதிமன்றம் சென்று பணப்பலன் பெற்றுள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை, என்றார்

லேப் - டாப்' பதுக்கல் பள்ளிகளுக்கு உத்தரவு


தமிழக அரசின் இலவச திட்டத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள்; பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, 'லேப் - டாப்' வழங்கப்படுகிறது. கடந்த, 2013 - 14 கல்வி ஆண்டில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வழங்கியது போக, மீதி உள்ளவற்றை திருப்பி அனுப்புமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மீதியிருக்கும் லேப் - டாப் பற்றிய கணக்கு, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இன்னும் வரவில்லை. இந்நிலையில், மீதியுள்ள லேப் - டாப்களை, உடனடியாக அனுப்புமாறு, அனைத்து பள்ளிகளுக்கும் அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழ்நாடு மின்னணு கழகமான, 'எல்காட்' நிறுவனத்துக்கு, நாங்ள் கணக்கு கொடுக்க வேண்டும். எனவே, ஓராண்டாக பதுக்கி வைத்த, லேப் - டாப்களை உடனடியாக அனுப்ப உத்தரவிட்டுள்ளோம். அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.-

பி.எட்., படிப்பில் புதிய மாற்றம் தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம்


பி.எட்., படிப்பில், புதிய பாடத்திட்டம் அமலாகியுள்ள நிலையில், சி.சி.இ., எனப்படும், தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவுப்படி, நாடு முழுவதும் பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை அறிமுகமாகிஉள்ளது.இந்த முறைப்படி, பி.எட்., படிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கும் தேர்வுக்கான மதிப்பெண் மட்டுமின்றி, சி.சி.இ., முறையில், 30 மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படுகிறது. மாணவர்களின் கற்றல் திறன், வகுப்புகளில் ஆர்வமாக பங்கேற்றல், செய்முறைப் பயிற்சியில் ஈடுபாடு, கற்றல் பயிற்சிக்கான திட்ட வரைவு தயாரித்தலில் ஆர்வம் மற்றும் புதுமை என, மாணவர்களின் செயல்திறன்கள் அடிப்படையில்,சி.சி.இ., மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது

.யோகா உள்ளிட்ட உடல்நலம் குறித்த பாடங்களுக்கும் தனியாக மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. பி.எட்., மாணவர்கள், முதலாம் ஆண்டில், 20; இரண்டாம் ஆண்டில், 80 என, மொத்தம், 100 நாட்கள், பள்ளிகளுக்கு சென்று பாடம் நடத்தும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர் போல், 'பவர் பாயின்ட் பிரசன்டேஷன்' மூலம், கருத்தரங்கம் நடத்தி, பயிற்சித் திறமையை வெளிப்படுத்த வேண்டும். இதுபோன்று புதிய முறைகளுடன் படித்து, நல்ல கல்வித் தரத்துடன் பி.எட்., முடிக்க உள்ள பட்டதாரிகள், இனிமேல் நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்று, எளிதாக தேர்ச்சி அடைய வாய்ப்புள்ளதாகவும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்படும் என்றும் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

மாநிலப் பள்ளிகளில், 8ம் வகுப்பு வரையிலும்; மத்திய இடைநிலைக் கல்வி வாரிய, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு வரையிலும், கடந்த 2010ம் ஆண்டு முதல், சி.சி.இ., முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், ஆசிரியர் படிப்புக்கும், சி.சி.இ., மதிப்பெண் திட்டம் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.-

Tuesday, November 03, 2015

ஜாதி, வருமான சான்றிதழ் பள்ளிகளில் மையங்கள்


பள்ளி மாணவர் களுக்கு, ஜாதி, வருமான மற்றும் இருப்பிட சான்றிதழ் வழங்க, தாலுகாவுக்கு, நான்கு பள்ளிகளில் ஒருங்கிணைந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டன. முகாமைத் தவறவிடும் மாணவர்கள், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோரிடம் கையொப்பம் பெற்று, சான்றிதழ் வாங்கி வந்தனர். தற்போது, தாலுகாவுக்கு, நான்கு பள்ளிகளில், ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கும் மையங்கள் அமைக்கப்படுகின்றன. இனி, தாலுகா அலுவலகங்களுக்கோ, இ-சேவை மையங்களுக்கோ மாணவர்கள் அலைய வேண்டியதில்லை; சம்பந்தப்பட்ட மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து, சான்றிதழ் பெறலாம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.