இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, August 20, 2015

பத்தாம் வகுப்பு வரை ஆல் பாஸ் திட்டம்- புதிய நிபந்தனை

10ம் வகுப்பு வரை நிபந்தனைகளுடன் 'ஆல் பாஸ்' திட்டம் - மத்திய அரசு முடிவு
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, மாணவர்களை, 'ஆல் பாஸ்' செய்யும் திட்டத்தை, பல நிபந்தனைகளுடன், 10ம் வகுப்பு வரை நீட்டிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 14 வயது வரையிலான மாணவர்களை, எந்த வகுப்பிலும், 'பெயில்' ஆக்கி விடாமல், அவர்களை, 'பாஸ்' செய்து, அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இந்த அடிப்படையில், தற்போது பெரும்பாலான மாநிலங்களில், கட்டாய கல்வி உரிமை சட்டம் பின்பற்றப்படுகிறது.

ஆனால், இந்த திட்டத்தின்படி, 'அனைவருக்கும் கட்டாய பள்ளிக்கல்வி வேண்டும் என்ற நோக்கம் சரியாக நிறைவேறவில்லை' என, புகார் எழுந்தது. அதனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், மத்திய கல்வி ஆலோசனை வாரியம் சார்பில், துணை குழு அமைக்கப்பட்டு, பல மாநிலங்களில் ஆய்வு நடந்தது.

ஆலோசனை கூட்டம்

             இந்த ஆய்வு முடிவுகளை, அரியானா மாநில கல்வி அமைச்சர் கீதா புக்கல், மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளார். இதிலுள்ள அம்சங்களை, அமல்படுத்துவது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், டில்லியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன்படி, கட்டாய கல்வி உரிமை சட்ட அடிப்படையிலான, 'ஆல் பாஸ்' திட்டத்தை, 10ம் வகுப்பு வரை நிபந்தனைகளுடன் அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அந்த நிபந்தனைகள் விவரம்:

* கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, தற்போது எட்டாம் வகுப்பு வரை அமலில் உள்ள, 'ஆல் பாஸ்' திட்டம், பல நிபந்தனைகளுடன், 10ம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட உள்ளது.

* ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும். தேர்வில், சி.சி.இ., எனப்படும் தொடர் மதிப்பீட்டு முறையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

* தேர்வில், மூன்று, ஐந்து மற்றும் எட்டு என, மூன்று தரவரிசை வழங்கப்படும். இதில், ஐந்துக்கு பின் தர வரிசையில் இடம் பெறும் மாணவர்கள், 'பாஸ்' செய்யப்பட மாட்டார்கள். அவர்களை தேர்ச்சி பெற வைக்க, வகுப்பாசிரியர் சிறப்பு பயிற்சி தர வேண்டும். அனைத்து வகுப்பு மாணவர்களும், குறைந்தது, 80 முதல் 85 சதவீதம் வரை, பள்ளிக்கு, 'ஆப்சென்ட்' ஆகாமல் வர வேண்டியது கட்டாயம்.

ஆய்வு

* குறைந்தபட்ச தரம் கூட பெறாத மாணவர்களின், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி குறித்த ஆய்வு நடத்த வேண்டும்.

* முடிந்த அளவுக்கு மாணவர்கள் வகுப்புகளில் தேங்காமல், 10ம் வகுப்பு வரை இடைநிற்றல் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.

* இந்த திட்டத்தின் ஒரு கட்டமாக, மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் முறையை மாற்றி, புரிந்து படித்தல், தனித்திறன்களை வளர்த்தல், செய்முறைப் பயிற்சிகள் அளிக்கும் வகையில், தொடர் மதிப்பீட்டு முறை கட்டாயமாகும்.

இவ்வாறு நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ஒவ்வொரு மாநிலமும் விரிவான கருத்துக்களை தெரிவிக்கும்படியும் மத்திய அரசு கூறியுள்ளது.

Wednesday, August 19, 2015

students aadhaar details

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க சிறப்பு முகாம்.
தொடக்கக்கல்வி துறை ஏற்பாடு

ஆதார் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இதுவரை ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்காத மாணவர்களிடமிருந்து தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒப்புகை சீட்டு நகல் சேகரித்து தயாராக வைத்திருக்குமாறு தலைமை ஆசிரியருக்கு இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

   சேகரிக்கப்பட்ட ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கை விபரத்தை 21ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்

தேசிய திறனறித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்க நடத்தப்படும் தேசிய திறனறித் தேர்வுக்கு வியாழக்கிழமை (ஆக.20) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2015-16-ஆம் கல்வியாண்டுக்கான மாநில அளவிலான தேசிய திறனறி முதல் கட்டத் தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து ஆகஸ்ட் 31 வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31-க்குள் அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர்களிடம் ரூ.50 கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தனித்தேர்வு அவகாசம் நீட்டிப்பு

தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள அறிவிப்பு: 'அடுத்த மாதம் நடக்க உள்ள, தனித்தேர்வர்களுக்கான பிளஸ் 2 தேர்வு எழுத விரும்புவோர் ஆகஸ்ட், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான அவகாசம் வரும், 22ம் தேதி மாலை, வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது

பள்ளி மாணவர்களுக்கு போட்டி வெல்வோருக்கு ஜப்பான் வாய்ப்பு

எரிசக்தி சேமிப்பு கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெல்லும் பள்ளி மாணவர்கள் ஜப்பான் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.பெட்ரோலியம் சேமிப்பு ஆராய்ச்சி கழகம் சார்பில் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.

போட்டிகளை சம்பந்தப்பட்ட பள்ளியே நடத்தி முதலிடம் பிடிக்கும் மாணவர் பட்டியலை புதுடில்லியில் உள்ள பெட்ரோலியம் சேமிப்பு ஆராய்ச்சி மையத்திற்கு competitions2015@pcra.org என்ற 'இ மெயில்' முகவரிக்கு அனுப்ப வேண்டும். போட்டிகளை செப்., 30 க்குள் முடிக்க வேண்டும். கட்டுரை போட்டியை தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 23 மொழிகளில் நடத்தலாம். இரண்டு போட்டி களிலும் தேசிய அளவில் பரிசுகள் வழங்கப்படும். கட்டுரை போட்டியை பொறுத்தவரை ஒவ்வொரு மொழிக்கும் தலா 3 பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசாக 'லேப்டாப்,' ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவர். இரண்டாவது பரிசாக 'டேப்,' ரூ.20 ஆயிரம் ரொக்கம், 3 வது பரிசாக 'டேப்,' ரூ.15 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும். ஓவிய போட்டியில் 10 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். விபரங்களுக்கு www.pcra.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்கள் நியமனம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்களை நியமித்தது தெரியவந்துள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை 3 ஆசிரியர் பணியிடங்கள், 9 முதல் 10 ம் வகுப்பு 5 ஆசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும். அதன்பின் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சென்ற ஆண்டு செப்., 26 ல் பணி நியமனம் வழங்கப்பட்டன.

இதில் ஒரே காலியிடத்திற்கு பல பேரை நியமித்துள்ளனர். பணியில் சேர்ந்த அனைவருக்கும் முறையாக ஊதியம் வழங்கப்பட்டதால், முறைகேடு பணிநியமனம் குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த ஆண்டு உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 240 உபரி ஆசிரியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 130 ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சென்ற ஆண்டு நியமிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் பணிநிரவல் செய்வதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணதாஸ் கூறியதாவது: ஒரு பணியிடத்திற்கு பல ஆசிரியர்களை தெரிந்தே நியமித்துவிட்டு, தற்போது பணி நிரவல் செய்கின்றனர். பணி நிரவல் நடக்கும் நாளில் முதன்மை கல்வி அலுவலகங்களை முற்றுகையிட உள்ளோம். பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளனர், என்றார்.

பள்ளி மாணவர்கள் புத்தக சுமை: தமிழக பாணியை பின்பற்ற முடிவு

தமிழகத்தில், பள்ளி மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க, தமிழக அரசு மேற்கொள்ளும் முறையை, அனைத்து மாநிலங்களும் பின்பற்ற, மத்திய அரசு விரைவில் அறிவுறுத்த உள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், கல்வி தொடர்பான மத்திய ஆலோசனை குழு கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. அனைத்து மாநில கல்வி அமைச்சர்களும் பங்கேற்ற அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளாவன:

கடந்த, 2010 முதல், தமிழக பள்ளி மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க பல நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. சமச்சீர் கல்வி, முப்பருவ கல்வித் திட்டத்தின் படி, பாட புத்தகங்களை மூன்றாக பிரித்தல் என, புத்தகப் பை எடை கூடாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. அதுபோல, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும், புத்தக சுமையை குறைக்க பல நவீன முறைகள் பின்பற்றப்படுகின்றன.

அவற்றை இணைத்து, தேசிய அளவில் விரைவில் புதிய கொள்கை பின்பற்றப்படும். இவ்வாறு, அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டன. மேலும், 8ம் வகுப்பு வரை, மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என்ற சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; மீண்டும், 10ம் வகுப்புக்கு வாரியத் தேர்வு நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மாநில அரசுகள் முன்வைத்தன. அதை, எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேட்டுக் கொண்டார். எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என்ற சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; மீண்டும், 10ம் வகுப்புக்கு வாரியத் தேர்வு நடத்த வேண்டும்

தொடக்கக் கல்வி - ஆதார் அட்டை இல்லாத மாணவர்களின் TIN எண் அல்லது அவரது குடும்பத்தினருக்கு அல்லது குடும்ப உறுப்பினர் எவருக்கேனும் வழங்கப்பட்டுள்ள TIN எண் சார்ந்த விவரங்களை மாணவர்களிடமிருந்து பெற்று பள்ளிவாரியாக தொகுப்பறிக்கை அனுப்புதல் சார்பு

Tuesday, August 18, 2015

இழுபறியில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம்

மாவட்ட கல்வி அலுவலர் காலி பணியிடத்தை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றோர் ஓய்வூதிய பணப்பலன் இன்றி ஓய்வு பெறும் நிலை நீடிக்கிறது. மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிக்., பள்ளி ஆய்வாளர் பணியிடம் 75 சதவீத பதவி உயர்வு மூலமும், 25 சதவீத நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுகிறது. தமிழகம் முழுவதும் 124 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளன.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாவட்டம் தோறும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களுக்கான முன்னுரிமை பட்டியல் கோரப்பட்டது. அப்போது 40 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்தது. அதற்கு பிந்தைய நாட்களில் ஓய்வு பெற்று பலர் சென்று விட்டதால், தற்போது 70-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பொறுப்பு பணியாக மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பொறுப்பு என நியமிக்கப்பட்டவர்களில் பலர் ஓய்வு பெற்று சென்று விட்டனர்.

இதனால், பொறுப்புக்கு பிந்தைய பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்கள் ஓய்வு பெற்று வருவதால், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்துக்குரிய ஓய்வூதிய பலன்களை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தலைமை ஆசிரியர் ஒருவர் கூறும்போது: மாவட்ட கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கு ஏற்ப ஆறு மாதங்களுக்கு முன்பு முன்னுரிமை பட்டியல் கோரப்பட்டிருந்தது. அதை தொடர்ந்த காலங்களில் பட்டியல் கோரப்படவில்லை. ஏற்கனவே பட்டியலில் பெயர் இருந்தவர்களுக்கு பணியிடம் ஒதுக்காததால் அவர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர்.

மாவட்ட கல்வி அலுவலராக நியமிக்கப்படுபவர்கள் வேறு மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் பெற்று செல்ல வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதனால், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் இப்பணியிடத்துக்கு வருவதில்லை. இதை தவிர்க்க ஆசிரியர்களுக்கு நடத்துவது போல் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் நேரடி கலந்தாய்வை நடத்த வேண்டும். அப்போது அவர் சார்ந்த மாவட்டத்தில் பணியாற்றுவதோடு, விரைந்து செயலாற்றவும் வாய்ப்பு உள்ளது, என்றார்

அரசு ஊழியர் குழந்தைகளைஅரசு பள்ளியில் சேர்க்க் வேண்டும்-அலகாபாத் உயர்நீதிமன்றம்

அரசு ஊழியர்கள், தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று அலாகாபாத் நீதிமன்றம் கூறி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதை உறுதிப்படுத்துமாறு, அரசு தலைமைச் செயலரிடம் அலாகாபாத் உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டு உள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி சுதிர் அகர்வால், ''தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் அரசு ஊழியர்கள் சேர்த்தால், அவர்கள் தனியார் பள்ளிகளில் செலுத்தும் அதே அளவு பணத்தை அரசுக் கருவூலத்துக்கும் செலுத்துமாறு உத்தரவிடலாம். அத்துடன், அவர்களுக்கு வழங்கப்படும் மற்ற சலுகைகளையும் ரத்து செய்யலாம்.

அரசுப் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளை அவர்கள் சேர்க்கும் பட்சத்தில், அந்தப் பள்ளிகள் நன்றாக இயங்குவதை உறுதிப்படுத்த முடியும். அதனால், இதுதொடர்பான நடவடிக்கைகளை அரசு அடுத்த 6 மாதங்களுக்குள் எடுக்க வேண்டும் என்று மாநில தலைமைச் செயலரை இந்த நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது" என்று கூறி உள்ளார்.

தீரர் சத்தியமூர்த்தி பிறந்த தின சிறப்பு பகிர்வு


தீரர் சத்திமூர்த்தியின் பிறந்த தின சிறப்பு பகிர்வு!
புதுக்கோட்டையில் உள்ள திருமயத்தில் 1887ம் ஆண்டு ஆகஸ்டு 19ம் தேதி பிறந்தவர். அவருக்கு எட்டு சகோதரர்கள். சத்தியமூர்த்தியின் இளம் வயதிலேயே அவரது தந்தை காலமானார். தன்னுடைய தாய் மற்றும் சகோதரர்களை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இவருக்கு அதிகமானது.

1906ம் ஆண்டு ‘சென்னை கிறித்துவ கல்லூரியில்’ வரலாற்றுத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்ற அவர், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரான ஸ்ரீ.எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்காரின் கீழ் சட்டப் பயிற்சி மேற்கொண்டார்.தனது கல்லூரி நாட்களிலேயே கல்லூரி தேர்தல்களில் கலந்துகொண்டு வெற்றிபெற்றது அவருக்கு மக்களாட்சி முறையில் ஆழ்ந்த பிடிப்பையும் அரசியலில் ஈடுபடவும் வழிவகுத்தது.

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்டு தமிழக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக சேர்ந்தார். கட்சியில் நன்மதிப்பையும் பெயரையும் பெற்றவர், பிறகு காங்கிரசின் பிரதிநிதியாக மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்த்திருத்தம் மற்றும் ரவுலட் சட்டத்திற்கு எதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதாட இங்கிலாந்து அனுப்பப்பட்டார்.

பின்னர் 1923ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராகவும் ஆனார். சி.ஆர்.தாஸ் மற்றும் மோதிலால் நேரு போன்றவர்கள் தொடங்கிய ‘சுயராஜ்ஜியக் கட்சி’யில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்திய பாராளுமன்ற ஜனநாயகம் அமைவதற்கு உறுதுணையாக இருந்தார். 1937ம் ஆண்டு நடைபெற்ற சென்னை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்று சென்னை மாகாண கவுன்சிலரானார்.

1939ம் ஆண்டு சென்னை மாநகராட்சி தலைவராக பணியாற்றியபொழுது, சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க பிரிட்டிஷ் அரசுடன் போராடி பூண்டி நீர்த்தேக்கத்திற்கான ஒப்புதல் பெற்று பணிகள் உடனே தொடரவும் தீவிரம் காட்டினார்.

பின்னர், சுதேசி இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு செயல்பட்ட அவர், 1940ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 1942ம் ஆண்டு நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டார்.சத்திய மூர்த்தி, 1954 முதல் 1963 வரை தமிழ் நாட்டின் தலைசிறந்த முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு ஒரு சிறந்த அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்தவர். திறம்பட செயல்பட்ட காமராஜரின் ஆட்சிக்காலம் தமிழக அரசியலில் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது.

தான் கைபிடித்து அழைத்துக் கட்சியில் சேர்த்த காமராசரைத் தலைவராக்கி அழகுபார்த்தது மட்டுமல்ல, அவரது தலைமையின்கீழ் செயலாளராகப் பணியாற்றிய பெருந்தன்மை இன்றைய அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கும் முன்னுதாரணமாகும்! அவர் சென்னை நகர மேயராக இருந்தபோதுதான் இன்றைய பூண்டி நீர்த்தேக்கத்தை, ஆங்கில அரசுடன் வாதாடி அமைத்தார். ஆனால், அந்தப் பணிகள் நிறைவடைவதற்குள் அவர் காலமானதால்,பின்னர் காமராசர் அந்த நீர்த்தேக்கத்திற்கு“சத்தியமூர்த்தி நீர்த் தேக்கம்“ என்றே பெயரிட்டார்.

நாட்டுக்காகப் பாடுபட்டதோடு, பாரதி பாட்டுக்காகவும் அவர் போராடினார். பர்மா அரசு, நமது பாரதி பாடல்களைத் தடைசெய்ததோடு, பாடல் நூல்களைப பறிமுதல் செய்யவும் ஆணையிட்டதைக் காரணம் காட்டி அன்றைய நம் “சென்னை ராஜதானி“ பாரதி பாடல்களைத் தடைசெய்து, பறிமுதலும் செய்ய சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்தது. அதை எதிர்த்து முழங்கிய தீரர் சத்தியமூர்த்தி, “நீங்கள் தாராளமாக எங்கள் பாரதியின் பாடல்களைத் தடைசெய்து கொள்ளலாம், பாரதியின் பாடல் நூல்களையும் பறிமுதல் செய்து எரிக்கவும் செய்யலாம்... எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை“ என்று தன் பேச்சைத் தொடங்கினார்.

எல்லாரும் அதிர்ந்து போனார்கள்... தொடர்ந்து பேசிய அவர், “ஆனால் அது வெட்டி வேலை. ஏனெனில், பாரதி பாடல்கள் அனைத்தும் எங்கள் தேசபக்தி மிக்க தமிழர்களுக்கு மனப்பாடம்! நாங்கள் ஊர்ஊராகப் பாரதியைப் பாடிக்கொண்டு ஊர்வலம் போவோம்.. மனப்பாட சக்தியைப் பறிமுதல் செய்யும் புதிய எந்திரம் எதையும் நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதால், உங்களால் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது. அதனால் நீங்கள் பாடல்களைத் தாராளமாகத் தடைசெய்து கொள்ளவோ எரிக்கவோ கூட ஆணையிடலாம்...ஆனால் அது வீணான வேலை என்பதை கனம் சர்க்கார் புரிந்து கொண்டால் நல்லது” என்று முழங்கினார். பின்னர் பாரதி பாடல்களைத் தடைசெய்யும் முயற்சியை அன்றைய சென்னை மாநில அரசு கைவிட்டது என்பதைச் சொல்லவும் வேண்டியதில்லை.

1936 ஆம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்தெடுக்கப்பட்ட சத்தியமூர்த்தி, காமராஜரை பொது செயலாளராகவும் நியமித்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற போது காமராஜர், முதலில் சத்தியமூர்த்தி வீட்டுக்கு சென்று, சுதந்திரக்கொடியை ஏற்றி, தன்னுடைய குருவின் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்தினார்.

Aadaar special camp for students

வாக்காளர் முன் பட்டியலில் திருத்தம்

வாக்காளர் முன்னிலையிலேயே, அவரது பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்ற பணிகளை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக, 400 'டேப்லெட்'கள் வாங்கப்பட உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விரும்புவோர், அதற்குரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தாலுகா அலுவலகம் அல்லது மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

அதிகாரிகள், அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, கள ஆய்வு மேற்கொண்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்படுகிறது.பெரும்பாலான இடங்களில், விண்ணப்பம் அளித்தும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என, தேர்தல் கமிஷனுக்கு புகார் வருகிறது. ஆன் - லைனில் பதிவு செய்தாலும், நேரடி ஆய்வு மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, வாக்காளரின் வீட்டிற்கு நேரடியாக சென்று, அவர் முன்னிலையில், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத் தம் செய்தல், முகவரி மாற்றுதல், புகைப்படம் மாற்றுதல் போன்ற பணிகளை, 'டேப்லெட்' சாதனத்தின் உதவியுடன் மேற்கொள்ள, தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.முதற்கட்டமாக, சோதனை அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில், இந்த திட்டம் சோதித்து பார்க்கப்பட்டது. -

Monday, August 17, 2015

தட்டிக்கேட்ட ஆசிரியரை முகத்தில் குத்திய அதிகாரி

முறைகேட்டை தட்டிக் கேட்டததால் ஆத்திரமடைந்த கல்வித்துறை அலுவலர், ஆசிரியரை தாக்கினார். சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க வளாகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கலாந்தாய்வு நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், காளையார்கோவில், மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காலி பணியிடங்கள் மறைக்கப்படுவது குறித்து கல்வித்துறை அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினர். இயக்குநர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின்படியே கலந்தாய்வு நடப்பதாக அலுவலர்கள் பதிலளித்தனர்.

இதனால் ஆசிரியர்களுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முறைகேட்டை தட்டிக் கேட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி சக்திவேலை, கல்வித்துறை அலுவலக எழுத்தர் கலைமணி திடீரென தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை, ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். தொடக்கக்கல்வி அலுவலர் அப்துல் ரஹீமிடம், எழுத்தர் கலைமணி குறித்து புகார் மனு அளித்தனர். ஆனால், அதை அவர் வாங்க மறுத்தார். இதனால் ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் சிவகங்கை டவுன் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இடமாறுதல் கலந்தாய்விற்கான காலியிடங்கள் அடிப்படையில், பதவி உயர்விற்கான கலந்தாய்வை நடத்துவோம் என அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘கலந்தாய்வு வெறும் கண்துடைப்பாக நடக்கிறது. காலியிடங்களுக்கு ஏற்கனவே லஞ்சம் வாங்கிக் கொண்டு, பணியிடங்களை மறைக்கின்றனர். இந்த கலந்தாய்வை ரத்து செய்து, முறையாக நடத்த வேண்டும்,’’ என்றனர்.