இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, July 08, 2015

ஆதார் எண்ணுக்காக மாத ஊதியம் நிறுத்தப்படாது.அதிகாரி விளக்கம்

ஆதார் எண்ணை சமர்ப்பிக்காவிட்டால் மாத ஊதியம் நிறுத்தப்படும் என்ற உத்தரவு எதையும் அரசு பிறப்பிக்கவில்லை என்று சென்னை தலைமைச் செயலக உயரதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனாலும், படிப்படியாக ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் ஆதார் எண், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் தங்களது அடிப்படை சம்பள கணக்கு விவரங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கருவூலம்-கணக்குத் துறை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த ஜூலை மாதத்துக்குள் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்காவிட்டால் மாத இறுதியில் ஊதியம் வழங்கப்படாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் 7 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். அவர்களில், 80 சதவீதம் பேருக்கு (சுமார் 6.8 கோடி பேர்) ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1.2 கோடி பேருக்கு வழங்கப்படவில்லை.

அவர்களில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களும் அடங்குவர். இந்த நிலையில், ஆதார் எண்ணுக்காக மாத ஊதியம் நிறுத்தப்படுவதாக வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தலைமைச் செயலக உயரதிகாரிகள் அளித்த விளக்கம்: ஆதார் எண்ணுக்காக மாத ஊதியம் நிறுத்தப்படாது. தலைமைச் செயலகத்திலுள்ள பல உயரதிகாரிகளுக்கே ஆதார் எண் இன்னும் கிடைக்கவில்லை. அப்படியிருக்கையில், ஆதார் எண்ணுக்காக மாத ஊதியம் நிறுத்தப்படுவதாக வெளியிடப்படும் அறிவிப்புகளைக் கண்டு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அதேசமயம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களிடம் இருந்து ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றைச் சேகரிக்க வேண்டுமென கருவூலம்-கணக்குத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் ஏழு லட்சம் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களில் 55 சதவீதம் பேரிடம் ஆதார் எண், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே, ஆதார் எண் கிடைக்கப்பெற்றவுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக அவற்றை கருவூலத் துறைக்கு தெரிவிக்கலாம் என்று தலைமைச் செயலக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Tuesday, July 07, 2015

வேலைவாய்ப்பு பதிவு 15ல் பள்ளிகளில் துவக்கம்

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், அவர்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கான பதிவை, வரும், 15 முதல் மேற்கொள்ளலாம்.
மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளில், தங்களின் பத்தாம் வகுப்பு கல்வி தகுதியை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அட்டை எண், ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு, மொபைல் போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை, மாணவ, மாணவியர் எடுத்து வர வேண்டும். பத்தாம் வகுப்பு கல்வி தகுதியை பதிவு செய்த எண் தெரியவில்லை எனில், வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி, தெரிந்து கொள்ளலாம்.வரும், 15 முதல், 29 வரை, வேலைவாய்ப்பு பதிவுப்பணி, அந்தந்த பள்ளிகளில் நடைபெறும். மதிப்பெண் சான்று வழங்கும் தேதியே, பதிவுமூப்பு தேதியாக பதியப்படும். மேலும்,www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், வேலைவாய்ப்பக பதிவை மேற்கொள்ளலாம்.

பொதுத்தேர்வில் ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு 10ம் தேதி பரிசு

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மாநில, 'ரேங்க்' பெற்ற மாணவ, மாணவியருக்கு, வரும், 10ம் தேதி ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. கடந்த, 2014-15ல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், 750 பேர் மாநில ரேங்க் பெற்றனர். பிளஸ் 2வில், முதலிடம் பிடித்த, 21 பேருக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடந்த வாரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

மீதமுள்ள மாணவ, மாணவியருக்கு, 10ம் தேதி ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. இதில், பள்ளிக் கல்வி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், வனம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன், நகராட்சி நிர்வாகம் போன்ற துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்று, தங்கள் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், மாநில ரேங்க் பெற்றவர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க உள்ளனர்.-

3மாதங்களில் குரூப்2 தேர்வு நடத்த திட்டம்

போலீஸ் டி.எஸ்.பி., மற்றும் உதவி கலெக்டர் உள்ளிட்ட பதவிகளில், 70 காலியிடங்களுக்கான குரூப் - 2 தேர்வு, இன்னும், இரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்வை, மூன்று மாதங்களுக்குள் நடத்தாமல், படிப்பதற்கு கூடுதல் அவகாசம் தர, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வணிகவரி உதவி கமிஷனர்:தமிழக அரசு துறைகளில், போலீஸ் டி.எஸ்.பி., உதவி கலெக்டர், வணிகவரி உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளுக்கு, 70 காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதன் போட்டித் தேர்வு அறிவிப்பை, இன்னும், இரு தினங்களில் வெளியிட, டி.என்.பி.எஸ்.சி., திட்டமிட்டுள்ளது.

அக்., 18ம் தேதி அல்லது அதே மாதத்தில், வேறு தினங்களில் தேர்வை நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பட்டதாரிகள் சிலர் கூறியதாவது:வழக்கமாக அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து, குறைந்த பட்சம், ஆறு மாத கால இடைவெளியில், தேர்வுகள் நடக்கும். இந்த இடைவெளியில் தான், தேர்வர்கள் சிறப்பு பயிற்சி பெற்று, தங்களை தயார் செய்து கொள்வார்கள். ஆறு மாத காலம்:ஆனால், மூன்று மாதங்களுக்குள் தேர்வை நடத்த டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளதால், தேர்வர்கள் தயாராக போதிய கால அவகாசம் இல்லை.

அக்.,18ம் தேதி மத்திய பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி.,யும் போட்டித் தேர்வு நடத்த உள்ளதால், குழப்பம் ஏற்படும்.எனவே, டி.என்.பி.எஸ்.சி.,க்காக தயார் செய்வோருக்கு அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து குறைந்தது, ஆறு மாத கால அவகாசத்துடன் தேர்வை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்

11.07.2015 PRIMARY CRC-SABL-ENGLISH POWERPOINT...

Click below

https://drive.google.com/file/d/0ByAIJo2ODgwFRkZPRzY4bm53WVU/view?usp=sharing

கோவை மாவட்ட SSA Co ordinator procedings

பி.எப் தொகை திரும்பப்பெறும் அளவை 75%ஆக குறைக்கத்திட்டம்

பி.எப் தொகையின் திரும்பப்பெறும் அளவை 75%ஆக குறைக்கத் திட்டம்!
மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் பிராவிடென்ட் பண்ட் தொகைக்கான திரும்பப் பெறும் அளவை 75 சதவீதமாகக் குறைக்க, ஊழியர் சேமலாப நிதி அமைப்பு (EPFO) திட்டமிட்டு வருதிறது. தற்போது இதன் அளவு 100 சவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பி.எஃ பணத்தை மக்கள் சரியான காரணத்திற்காகப் பயன்படுத்த தவறுவதால் திரும்பப் பெறும் அளவை 75 சதவீதமாகக் குறைத்து மீதமுள்ள தொகையைப் பணியாளரின் ஒய்விற்குப் பின் பென்ஷன் முறையில் அளிக்க முடிவு செய்துள்ளது EPFO அமைப்பு.

100% திரும்பப் பெறுதல்
தற்போது உள்ள முறையின் படி ஊழியர்களுக்கு வேலை பறிபோனால் இரண்டு மாதத்திற்குப் பிறகு முழுத் தொகையும் பெற்றுக்கொள்ளலாம் திருமணச் செலவுகள் போன்ற காரணங்களுக்காகப் பி.எஃ பணத்தில் 100% எடுத்துக்கொள்ளலாம்.

75% மட்டுமே
ஆனால் ஊழியர் சேமலாப நிதி அமைப்பின் ஆய்வுகளின் படி ஊழியர்கள் மேற்கொண்ட காரணங்களுக்காகப் பணத்தைச் செலவு செய்யாமல் பிறவற்றிக்குச் செலவு செய்வதாகத் தெரிகிறது. இதனைத் தடுக்கவே இத்தகை முடிவுகளுக்கு மத்திய அரசிடம் இவ்வமைப்பு பரிந்துரை செய்துள்ளது. காலப்போக்கில் இதன் அளவு 50 சதவீதம் வரையும் குறைய வாய்ப்புள்ளதாகக் கருத்து நிலவுகிறது.

1.30 கோடி
ஒவ்வொரு வருடமும் EPFO அமைப்பு சுமார் 1.30 கோடி ரூபாய் அளவிலான தொகையை ஊழியர்களுக்குத் திரும்ப அளிக்கிறது (Withdrwal). இதல் 65 லட்சம் ரூபாய் 100 சதவீதம் முழுமையாகத் திரும்பப் பெறுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து EPFO அமைப்பின் தலைவர் கேகே ஜலன் கூறுகையில், ஊழியர்கள் பி.எப் கணக்கை ஒரு சேமிப்பு கணக்காக மட்டுமே நினைக்கின்றனர். இதனைக் களைந்து 25 சதவீத பி.எப் தொகை அவர்களின் ஒய்வுதிய காலத்தில் பயன்படும் வகையில் அமைக்கவே இப்புதிய மாற்றத்தைச் செயல்படுத்தத் திட்டமிடுகிறோம் என அவர் தெரிவித்தார்.

அறிவிப்பு
பிராவிடென்ட் பண்ட் தொகைக்கான திரும்பப் பெறும் அளவை 75 சதவீதமாகக் குறைக்கும் பரிந்துரையை மத்திய அரசிடம் உள்ளது, கூடிய விரைவில் இதற்கான முடிவுகள் வெளியாகும் எனத் தெரிகிறது.

Monday, July 06, 2015

ஆங்கில உச்சரிப்பு பயிற்சிக்கு முழுக்கு

அரசு தொடக்கப் பள்ளிகளில், டி.வி.டி., பிளேயர் பழுது, 'சிடி' காணாமல் போனது மற்றும் போதிய பயிற்சியின்மையால், ஆங்கில உச்சரிப்புப் பயிற்சிக்கு, ஆசிரியர்கள் முழுக்கு போட்டுள்ளனர். இதனால், ஆங்கில வழி வகுப்புகளிலும் தமிழிலேயே பாடம் நடத்தப்படுகிறது. அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கவும், ஆங்கில மொழி உச்சரிப்பு வீடியோவுடன் கூடிய, 'சிடி'க்கள் மூலம், பாடம் கற்பிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதற்காக, தொடக்கப் பள்ளிகளுக்கு, இரண்டு, 'சிடி'க்கள் வழங்கப்பட்டன. இவற்றை வழங்கி, ஓர் ஆண்டைத் தாண்டிவிட்ட நிலையில், ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி வகுப்பு பெரும்பாலான பள்ளிகளில் துவங்கப்படவில்லை. இதுகுறித்து, தொடக்கப் பள்ளி இயக்குனரகம் பிறப்பித்த உத்தரவின்படி, பள்ளிகள் தோறும் ஆய்வு நடத்தியதில், பல இடங்களில், 'சிடி'க்கள் சரியாக, 'பிளே' ஆகாததால், பயிற்சியைச் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை எனத் தெரிந்தது. ஆங்கில மொழி உச்சரிப்பு சரியாகத் தெரிந்த ஆசிரியர்களுக்கும் பற்றாக்குறை உள்ளதால், இந்தத் திட்டம் கிணற்றில் போட்ட கல்லாகி விட்டது. இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையில், இந்தப் பயிற்சி வகுப்பு எடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களில் பலர் அடிப்படை ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்கள் என்பதால், சிறப்புப் பயிற்சி இல்லாமல், அவர்களால், இந்தப் பாடங்களை எடுக்க முடியவில்லை. அடுத்த கட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கையை, கல்வித் துறை மேற்கொண்டால் தான், இந்தக் கல்வி ஆண்டில் இருந்தாவது, மாணவர்களுக்குச் சரியாகப் பயிற்சி அளிக்க முடியும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு நிறைவு

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் (சனிக் கிழமை) முடிவடைந்தது. 4 நாட்கள் நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 1,510 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் (தொடக்கக்கல்வி பட்டயப் படிப்பு) சேர 3,500-க் கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு 2,760 பேருக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது.

பயிற்சி பள்ளியை தேர்வு செய்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 1-ம் தேதி தொடங்கியது. மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு சனிக்கிழமை முடிவடைந்தது. கலந்தாய்வின் நிறைவில் மொத்தம் 1,510 மாணவ-மாணவிகளுக்கு ஒதுக் கீட்டு ஆணை வழங்கப்பட்டதாக ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

Sunday, July 05, 2015

நல்லாசிரியர் தேர்வு அரசு புது முடிவு

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், 15 ஆண்டுகளாக எந்த பிரச்னையுமின்றி பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விருதுக்கு, ஆக., 10ம் தேதிக்குள், பட்டியல் அனுப்பும்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.

இதற்காக, மாவட்ட வாரியாக தேர்வுக் கமிட்டி அமைக்கவும், நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், அரசியல்வாதிகள் சிபாரிசு பெற்றவர்களாக இருக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:கடந்த காலங்களில், நல்லாசிரியர் விருதுக்கு, பட்டியலில் இடம் பிடிக்க, பலவிதமாக, 'கவனிக்க' வேண்டியிருந்தது. ஜாதி, மதம், அரசியல் செல்வாக்கு, கல்வித் துறையில் உள்ள தொடர்பு அடிப்படையில், தேர்வுப் பட்டியல் இருந்தது.

இந்த ஆண்டு ஊழல் இல்லாத, 100 சதவீதம் தகுதியான, ஆசிரியர்கள் பட்டியலைத் தயாரிக்க முடிவு செய்துள்ளோம். எனவே, அரசியல்வாதிகளின் சிபாரிசு தடுக்கப்பட்டு, சரியான நபர்களுக்கு விருது வழங்கப்படும்.இதுகுறித்து, மாவட்டத் தேர்வுக் கமிட்டியினர், எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளனர். இதையும் மீறி, பட்டியல் தயாரிப்பில் ஊழல் நடந்தால், மாவட்டக் கல்வி அதிகாரிகள் தலைமையிலான தேர்வுக் கமிட்டி மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களுக்கு பாடம் நடத்தும் விதம், பள்ளி தேர்ச்சி விகிதம், ஒழுங்கு நடவடிக்கையின்மை, யோகா, நாட்டு நலப்பணித் திட்டம் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் அர்ப்பணிப்பு உள்ளவர்களையே, நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Saturday, July 04, 2015

பி.எட்,எம்.எட் கல்லூரிகளுக்கு புதிய நடைமுறை

பி.எட்., கல்லுாரிகளில், இரண்டு ஆண்டுக்கான நடைமுறை வந்தால், பேராசிரியர் எண்ணிக்கையை, 16 ஆக அதிகரிக்க வேண்டும் என, கல்லுாரி முதல்வர்களுக்கு, கல்வியியல் பல்கலை அறிவுறுத்தியுள்ளது. தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், பி.எட்., - எம்.எட்., மற்றும் பி.பி.எட்., படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பை, ஓர் ஆண்டிலிருந்து, இரண்டு ஆண்டாக மாற்ற வேண்டும்; புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, தேசிய கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு தமிழக அரசும் அனுமதி கடிதம் அளித்துள்ளது. ஆனால், இதுகுறித்து நீதிமன்றத்திலுள்ள வழக்கின் தீர்ப்பின் படி, இறுதி முடிவு எடுக்கப்படும் என்று, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.இந்நிலையில், புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால், என்னென்ன வசதிகள் வேண்டும் என, தமிழகத்திலுள்ள அனைத்து பி.எட்., கல்லுாரி முதல்வர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, வடமாவட்ட கல்வியியல் கல்லுாரி முதல்வர்கள் கூட்டம், சென்னையில் நடந்தது. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், வேலுார், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் கல்லுாரி முதல்வர்கள் பங்கேற்றனர்

.முதல்வர்களின் சந்தேகங்களுக்கு, கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் அளித்த பதில்: புதிய விதிமுறைகள் வந்தால், புதிய, இரண்டாண்டு பாடத்திட்டம் அமலாகும். ஒவ்வொரு கல்லுாரியிலும், முதல் ஆண்டு மாணவர்களுக்கு, எட்டு ஆசிரியர்களும்; அடுத்த ஆண்டில் அவர்கள், இரண்டாம் ஆண்டுக்கு மாறும்போது, அதற்கு, எட்டு ஆசிரியர்களும் தேவை.

எனவே, அடுத்த ஆண்டு முதல், ஒரே நேரத்தில், இரண்டு ஆண்டுகளின் மாணவர்களுக்கு பாடம் எடுக்க, குறைந்த பட்சம், 16 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். கூடுதல் ஆசிரியர் நியமனத்தை, அடுத்த ஆண்டுக்குள் முடிக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல், இரு மடங்காகும் மாணவர்களுக்கு, கல்லுாரியில் கூடுதல் வகுப்பறைகள், விடுதி, ஆய்வக வசதிகள் இருக்க வேண்டும். இதற்கு, ஒவ்வொரு கல்லுாரியிலும், 26,800 சதுர அடி பரப்பளவாக, வகுப்பறை கட்டடத்தை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அறிவுறுத்தினார்.

கூடுதல் சி.இ.ஒ பணியிடங்களை கலைக்க முடிவு

தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 10க்கும் மேற்பட்டவை காலியாக இருந்தும், அவை நிரப்பப்படாமல் இருப்பதால், அப்பணியிடங்களை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் பரவியுள்ளது.கல்வி அலுவலகங்கள்தமிழகத்தில் உள்ள பள்ளிகளை மேலாண்மை செய்யும் வகையில், கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட அளவில், கல்வி அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கல்வி மாவட்ட அளவில், உயர்நிலை கல்வி வரை, கண்காணிக்க, மாவட்டக்கல்வி அலுவலரும், வருவாய் மாவட்ட அளவில், அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொறுப்பாக, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணிஇடங்களும் உள்ளனர்.மத்திய அரசின் திட்டமான அனைவருக்கும் கல்வி இயக்க பணிகளையும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரே கவனித்து வந்தனர். இதனால், வேலைப்பளு அதிகரித்துள்ளதாக கோரிக்கை எழுந்த நிலையில், கூடுதல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.மாநிலத்தில் மேலும் 32 முதன்மைக்கல்வி அலுவலர், பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

இதனால், 64 பணியிடங்களாக அதிகரித்தது. இதில், ஓய்வு பெறுவோர் மற்றும் பதவி உயர்வு பெறுவோரின் பணியிடங்களை, அடுத்தடுத்த பதவி உயர்வு மூலம், நிரப்பப்பட்டு வந்தது.ஆனால், சமீப காலமாக, அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், நிதி ஒதுக்கீடு, ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது. இதனால், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்களை, 'கலைக்க' முடிவு செய்துள்ளதாக, அலுவலர்களிடையே தகவல் பரவியுள்ளது.இதற்கேற்ப, நடப்பு கல்வியாண்டில், 10க்கும் மேற்பட்ட அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடமே பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக கல்வியாண்டு துவக்கத்தில் வழங்கப்படும் பதவி உயர்வு, இப்போது வரை வழங்கப்படவில்லை.இந்த நிலையை அடுத்த ஆண்டு வரை, கடைபிடிக்கும் பட்சத்தில், கூடுதல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்களை முற்றிலும் கலைக்கும் வகையில், எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால், நடப்பு கல்வியாண்டில், சி.இ.ஓ., பதவி உயர்வு கிடைக்கும் என, எதிர்பார்த்து காத்திருந்த, மாவட்டக்கல்வி அலுவலர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துஉள்ளனர்.

இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், திட்ட நிதி ஒதுக்கீடும், வேலைப்பளுவும் வெகுவாக குறைந்துள்ளது. மேலும், ஒரு மாவட்டத்தில், இரு சி.இ.ஓ.,க்கள் இருப்பதால், 'ஈகோ' காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால், இனி கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்களை நிரப்பப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வாய்ப்பில்லை:பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெறும் முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல் விடும் போது, கூடுதல் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிடும். 64 ஆக உள்ள, சி.இ.ஓ., பணியிடங்களை, 32 ஆக குறைக்க முடிவு செய்யும் பட்சத்தில், அடுத்த ஆண்டு வரை, சி.இ.ஓ., பதவி உயர்வுக்கு வாய்ப்பில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நல்லாசிரியர் விருது பெற யோகா அவசியம்

'அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, ஆசிரியர்களின் யோகா பயிற்சி மதிப்பெண்ணும் கணக்கிடப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் உட்பட தகுதியான ஆசிரியர்கள், ஆகஸ்ட், 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கடந்த, 2014 - 15க்கான நல்லாசிரியர் விருதுக்கு, ஆசிரியர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி, அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களும், தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும், ஆகஸ்ட், 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, இடைநிலை கல்வி இணை இயக்குனர் கார்மேகம் அறிவித்துள்ளார். நல்லாசிரியராக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்:

* 15 ஆண்டுகள் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும்.
* கடந்த ஆண்டு செப்டம்பர், 30ம் தேதிக்கு முன் ஓய்வு பெற்றவராக இருக்கக்கூடாது.
* பள்ளிக்கு காலந் தவறாமல் வந்திருக்க வேண்டும்.
* தொடர்ந்து, மூன்று ஆண்டுகள் தன் வகுப்பு அல்லது பாடத்தில், 'சென்டம்' அல்லது அதிக தேர்ச்சி அளித்திருக்க வேண்டும்.
* தலைமை ஆசிரியராக இருந்தால், தன் பதவிக்காலத்தில் தேர்ச்சி அதிகரித்திருக்க வேண்டும்.
* என்.சி.சி.,யான தேசிய மாணவர் படை, என்.எஸ்.எஸ்., என்ற நாட்டு நலப்பணித்திட்டம், 'சாரண, சாரணியர் இயக்கம் போன்றவற்றிலும், யோகா பயிற்சி அளிப்பதிலும் பங்கெடுத்திருந்தால், அதற்கு தனி மதிப்பெண் வழங்கப்படும்.

வருமான கட்டவில்லை என ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களிடம் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டும், வருமான வரித் துறையில் இருந்து, 'நோட்டீஸ்' வந்ததால், ஆசிரியர்கள் பீதி அடைந்து உள்ளனர். கல்வித் துறையின் நிர்வாக பிரச்னையால், இந்தக் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், மாத ஊதியத்தில், வருமான வரித் தொகையான டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்படுகிறது. மாதம் தோறும் இந்தத் தொகையைக் கல்வித் துறையின் நிதிப் பிரிவினர், வருமான வரித் துறை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

நிதி ஆண்டின் இறுதியில், ஆசிரியர்களுக்கு வருமான வரி விவரங்கள் அடங்கிய படிவம், வருமான வரித் துறையால் வழங்கப்படும். வருமானம் மற்றும் செலவு தொடர்பான, 'ரிட்டர்ன்' அறிக்கையை, ஆசிரியர்கள் தனித்தனியே தாக்கல் செய்வர். ஆனால், சில ஆண்டுகளாக, அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்தும், அந்த தொகையை, வருமான வரித் துறையில் செலுத்தவில்லை. அதனால், வருமான வரித் துறையில் இருந்து அவர்களுக்கு 'நோட்டீஸ்' வந்துள்ளது. இதனால், ஆசிரியர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். ஆசிரியர்களிடம் மாதச் சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது.

ஆனால், நாங்கள் வரி கட்டவில்லை என்பது போல், நோட்டீஸ் வருகிறது. இதனால், வங்கிகளில் கடனும் பெற முடியவில்லை ஆசிரியர்கள் இந்தப் பிரச்னை குறித்து, நிதித் தணிக்கை செய்து வருகிறோம். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தில் உள்ள பிரச்னையால், குழப்பம் ஏற்பட்டு உள்ளது. விரைவில் சரி செய்யப்பட்டு விடும். இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கடிதம் கொடுக்க உள்ளோம் கல்வி துறையினர்