இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, June 19, 2015

B.ed படிப்பு இரண்டு ஆண்டாகிறது

இந்த ஆண்டு முதல் பி.எட் படிப்புக்காலம் 2ஆண்டுகள் ஆகிறது

*பி.எட் படிப்புக்காலம் ஓராண்டாக இருந்தபோது கற்பித்தல் பயிற்சி 40நாட்களாக இருந்தது

*இனி 20வாரங்களாக இருக்கும்.முதல் ஆண்டு 6வாரம்,இரண்டாம் ஆண்டு 14வாரம் கற்பித்தல் பயிற்சி இருக்கும்

*இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்

பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் பதிவெண் பெறாதோருக்கு சலுகை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து பதிவெண் பெறாதோர் தங்களுக்குரிய பதிவெண்ணைப் பெற ஆகஸ்ட் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நிதித் துறை செயலாளர் க.சண்முகம், அனைத்துத் துறை செயலாளர்கள், துறைகள், சட்டப் பேரவைச் செயலகம், கருவூலம்- கணக்குத் துறை உள்பட பல்வேறு துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் கடந்த 2003, ஏப்ரல் 1 முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இணைவோருக்கு கருவூலத் துறை மூலம் பதிவெண் வழங்கப்படும். இந்த நிலையில், இதில் இணையாதவர்களுக்கும், திட்டத்தில் இணைந்து பதிவெண் பெறாதோருக்கும், வரும் ஆகஸ்ட் மாதம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளவர்களுக்கு இந்த அறிவுறுத்தல் பொருந்தாது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ளோர், அவர்களுக்கு பதிவெண் வழங்கப்படுவது குறித்த அறிக்கைகளை கருவூலம்- கணக்குத் துறை இயக்குநர், மாநில தரவு மைய ஆணையர் ஆகியோர் மாதத்துக்கு இரண்டு முறை அளிக்க வேண்டும் என்று நிதித் துறை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்துவோம்

பொதுத்தேர்வுகளில், முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் மீதும், கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளோம்,'' என, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.

கோவையில் நடந்த தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில், தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: பொதுத்தேர்வுகளை, எவ்வித பிரச்னையும் இன்றி நடத்த, பல வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இதையும் மீறி சில இடங்களில், தொழில்நுட்ப உதவி மூலம், முறைகேடுகள் நடந்து விடுகின்றன. இனி வரும் காலங்களில், பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் மீதும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Thursday, June 18, 2015

குரூப் 2 தேர்வு 6 லட்சத்து 20ஆயிரம்.பேர் எழுதுகிறார்கள்

குரூப்-2 முதல் நிலை தேர்வு ஜூலை 26-ந்தேதி நடைபெறுகிறது. அந்த தேர்வை 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். குரூப்-2 தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஜூலை 26-ந்தேதி காலை நேர்முகத்தேர்வுக்கு உட்பட்ட குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு 1,241 காலிப்பணிடங்களுக்காக நடத்தவுள்ளது. இத்தேர்வுக்கென 6 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான ஷ்ஷ்ஷ்.௴ஸீஜீ௳நீ.ரீஷீஸ்.வீஸீ -இல் வெளியிடப்பட்டுள்ளது. சரிபார்க்கலாம் தொகுதி-2-க்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து தங்களது விண்ணப்பம் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தினை சரிபார்த்துக்கொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தி, அதன் விவரம் மேற்படி இணையதளத்தில் இல்லாவிடில், அந்த விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச் சீட்டின் (செலான்) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான நீஷீஸீ௴ணீநீ௴௴ஸீஜீ௳நீ@ரீனீணீவீறீ.நீஷீனீ க்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

விண்ணப்பதாரரின் பெயர்: தொகுதி-2-க்கான விண்ணப்பப்பதிவு எண் விண்ணப்ப அல்லது தேர்வுக் கட்டணம் (ரூபாய்) செலுத்திய இடம்: அஞ்சலகம் அல்லது இந்தியன் வங்கி, அல்லது வங்கிக்கிளை அல்லது அஞ்சலக முகவரி ஹால் டிக்கெட் மேற்படி இணையதளத்தில் உள்ள விவரங்கள் விண்ணப்பம் பெறப்பட்டதற்கான ஒரு ஒப்புகை மட்டுமேயாகும். விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்துள்ளார்.

24ம் தேதி வங்கிகள் வேலை நிறுத்தம்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கீழ் இயங்கி வரும் 5 வங்கிகளின் மூலதனத்தை மத்திய அரசு பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் வரும் 24ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் பிகேனர் ஜெய்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் வங்கிகள் இயங்கி வருகின்றன.

இதில் 40 ஆயிரம் அதிகாரிகளும், 25 ஆயிரம் ஊழியர்களும் பணிபுரிகின்றனர். இந்த வங்கிகளின் மூலதனம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வசம் உள்ளதால், இதனை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கும் முயற்சிகளில் அதன் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இந்த 5 வங்கிகளின் மூலதனத்தை மத்திய அரசு பெற்று, 5 வங்கிகளையும் சுயமாக இயங்க செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதில் 25 பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் இருந்து சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க இணை செயலாளர் விஜயகுமார் கூறியதாவது: ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் பிகேனர் ஜெய்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் வங்கிகள் தற்போது லாபகரமாக இயங்கி வருகின்றன. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வர்த்தகத்தை பெருக்கும் நோக்கில், இந்த 5 வங்கிகளையும் அதனுடன் இணைக்க முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது. மேலும் இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இது தொடர்பாக டில்லியில் தலைமை தொழிலாளர் நல ஆணையருடன் 3 முறை நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்நிலையில், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ம் தேதி ஒருநாள் மட்டும் அடையாள வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்வது என முடிவு செய்துள்ளோம் என்றார்.

ப்ளஸ் 1 வகுப்புகளுக்கு ப்ரிட்ஜ்.கோர்ஸ்

பிளஸ் 1 வகுப்புகளுக்கு வரும், 30ம் தேதி வரை, 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற முன் தயாரிப்பு பயிற்சி நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. பிளஸ் 1 வகுப்புகள், 15ம் தேதி துவங்கின. புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாத நிலையில், அனைத்து பள்ளிகளிலும், வரும், 30ம் தேதி வரை, பிரிட்ஜ் கோர்ஸ் நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்

.பத்தாம் வகுப்பில் படித்த பாடங்களை மாணவர்கள், மேல்நிலையில், பிரித்து தனித்தனியாக படிக்க வேண்டும்.இதற்கு தயாராகும் வகையில், இடைநிலைக் கல்விக்கும், மேல்நிலைக் கல்விக்கும் உள்ள பாடத்திட்ட வித்தியாசங்கள் மற்றும் பழைய பாடத்திட்ட திருப்புதல் அடங்கிய, பிரிட்ஜ் கோர்ஸ் வகுப்புகள் நடத்த அறிவுறுத் தப்பட்டுள்ளனர்.'பிரிட்ஜ் கோர்ஸ் முடிவதற்குள், பிளஸ் 1 வகுப்புகளுக்கான அனைத்து மொழிப்பாடம் மற்றும் பாடப் புத்தகங்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும்' என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்

Wednesday, June 17, 2015

இன் ஜினியரிங் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பஸ்களில் சலுகை

தமிழகத்தில் உள்ள 538 இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 658 இடங்களுக்கு, 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தற்போது நடந்து முடிந்துள்ளது. வரும் 19ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். 28ம் தேதி கலந்தாய்வு தொடங்கும்.

கவுன்சலிங் கடிதத்துடன் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். உரிய தகுதியிருந்தும் கடிதம் கிடைக்காதவர்கள் கலந்தாய்வு தொடங்குவதற்கு 2 மணிநேரம் முன்பு பல்கலைக்கழகத்திற்கு வந்தால் அவர்களுக்கு உரிய அழைப்பு கடிதம் வழங்கப்படும். இன்ஜினியரிங் மாணவர்களுக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடக்கிறது. இதனால், தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டும். இதற்காக மாணவர்கள், தங்களின் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்காக வந்திருக்கும் அழைப்பு கடிதத்தை (ஒரிஜினல்) அரசு பேருந்து நடத்துனரிடம் காட்ட வேண்டும். அப்படி காட்டும் பட்சத்தில் நடத்துனர் மாணவருக்கும் அவருடன் வரும் ஒருவருக்கும் பயண கட்டணத்தில் பாதி சலுகை அளிப்பார். அதாவது, இருவரும் பயண கட்டணத்தின் பாதியை கட்டணமாக செலுத்த வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கலந்தாய்விற்காக வரும் மாணவர்களில், எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் ரூ.1000மும், மற்ற பிரிவினர் ரூ.5 ஆயிரமும் கட்டணமாக கட்டி அதற்காக ரசீதை பெற்று கொள்ள வேண்டும்.

இதனை கலந்தாயிவின் போது இணைக்க வேண்டும். இந்த கட்டணம், மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்த பின்னர் கல்வி கட்டணம் கட்டும் போது சமன் செய்து கொள்ளப்படும். இன்ஜினியிரிங் மாணவர்கள் சேர்க்கையினை முன்னிட்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து கல்லூரிகளின் நிலை, சீட்டுகளின் இருக்கையை தெரிந்து கொள்ளும் வகையில் பிரமாண்ட டிவிக்கள் பொருத்தப்பட்ட டிஸ்பிளே ஹால் அமைக்கப்படும். மேலும், மாணவர்களுக்கு தேவையான கேன்டீன் வசதி, கழிப்பிட வசதி, பாதுகாப்பிற்காக போலீஸ் பூத், தீயணைப்பு வண்டி, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கலந்தாய்வு ஒரு நாளைக்கு 8 பிரிவுகளாக நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் சுமார் 500 முதல் 700 மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு பிரிவிற்கு கலந்தாய்வு முடிந்தவுடன் கல்லூரிகளில் சீட் இருப்பு, நிரம்பிய இடங்கள், துறைவாரியாக, கல்லூரி வாரியாகவும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும். அதேபோல, கவுன்சலிங் நடைபெறம் அறை முழுவதும் ரகசிய கேமிராக்கள் மூலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும். கவுன்சலிங் அரங்கில் செல்போன் பேச அனுமதி கிடையாது. இதேபோல, அண்ணா பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சாதாரண உடையில் போலீசார் இருப்பார்கள். இவர்கள் பல்கலைக்கழகத்தை தீவிரமாக கண்காணித்தபடி இருப்பார்கள். பல்கலைக்கழக நுழைவு வாயில் பகுதியிலோ அல்லது பல்கலைக்கழகத்தின் உள்ளேயே யாரும் குறிப்பிட்ட கல்லூரியில் சேர வேண்டும் என்று பிரசாரத்தில் ஈடுபட கூடாது. அதபோல, தனியார் கல்லூரிகள் தொடர்பான துண்டு பிரசுரங்களும் இந்த பகுதிகளில் வழங்க கூடாது.

இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் போலீசாரால் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். பிற மாநிலத்தவருக்கு இட ஒதுக்கீடு கிடையாது பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் படித்திருந்தாலும், அவர்களுக்கு இன வாரியான இட ஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது. அவர்கள், எந்த ஜாதியாக இருந்தாலும், அவர்கள் “ஓசி” (ஓப்பன் காம்பட்டிஷன்) என்ற பிரிவின் அடிப்படையிலேயே எடுத்து கொள்ளப்படுவார்கள். அதன் அடிப்படையிலேேய அவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படும். அதேபோல, விண்ணப்பத்துடன் ஜாதி சான்றிதழ் இணைக்காதவர்களும் ஓசி பிரிவில் சேர்க்கப்படுவார்கள். இந்த மாணவர்கள் கலந்தாய்வின் 2 நாட்களுக்கு முன்னர் தங்கள் ஜாதி சான்றிதளை ஒப்படைத்து உரிய சலுகைகளை பெறலாம்.

அனைத்தும் பார்கோட் மயம் பொறியியல் கலந்தாய்வு இந்தமுறை அனைத்திலும் பார்கோடை பயன்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பார்கோடை ஸ்கேன் செய்ததுமே அவர்களுக்கான அனைத்து தகவல்களும் கணிணியில் பதிவாகிவிடும்.

இதனால், ஒவ்வொரு முறையும் புதிதாக என்ட்ரி செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 2 மணி நேரம் முன்பே வரவேண்டும் பொறியியல் கலந்தாய்விற்கு தகுதி பெறும் மாணவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படும். அந்த கடிதத்தில், அவர்களுக்கு என்ன தேதியில், எந்த நேரத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். குறிப்பிட்ட அந்த நாளில், குறிப்பிட்ட நேரத்தில் இருந்து 2 மணிநேரம் முன்னதாக பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் வரவேண்டும்.

அதிக கட்டண விவகாரம் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதியசட்டம்

தமிழகம் அதிக கட்டண விவகாரம் தனியார் பள்ளிகளை கட தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், பாமகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஏழை மாணவர்கள் நலனுக்காக தமிழக அரசு சமச்சீர் கல்வி முறையையும், மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் முறையையும் கொண்டு வந்தது. அது வந்த பிறகும் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த சட்டம் எதுவும் இதுவரை இல்லை. ஏற்கனவே உள்ள பழைய சட்டம், மெட்ராஸ் பல்கலைக்கழகம் பள்ளிக்காக ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்டது. எனவே, தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு பல முறை கடிதம் எழுதியும் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் பள்ளிகளில் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால் பெற்றோர், மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மாணவர்கள் சேர்ககையின்போது பள்ளிகள் தன்னிச்சையாக செயல்படுகிறது. எனவே தனியார் பள்ளிகளை அரசு கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை வகுத்து சட்டம் இயக்கவேண்டும் இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு, ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி கவுல், நீதிபதி புஷ்பாசத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக் கல்வித்துறை இணை செயலாளர் அழகேசன் சார்பாக அரசு சிறப்பு வக்கீல் கிருஷ்ணகுமார் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் உள்ளிட்ட பள்ளிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த புதிய சட்டங்கள் கொண்டு வர உயர்நிலை குழு அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய சட்டம், சமச்சீர் கல்விச் சட்டம், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் ஆகியவைகளை உள்ளடங்கியதாக இருக்கும். எனவே, இந்த உயர் நீதிமன்றம் கால நிர்ணயம் செய்யும்பட்சத்தில், அந்த காலத்துக்குள் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரும். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும். இவ்வாறு அவர் பதில் மனுவில் கூறியிருந்தார். பின்னர் இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வக்கீல்கள் வி.செல்வராஜ், கே.பாலு ஆகியோர் ஆஜராகி, உயர் நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் அரசு அதை அமல்படுத்தவில்லை. எனவே கால கெடு நிர்ணயிக்கவேண்டும் என்றனர்.

உடனே தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி, தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வர எவ்வளவு கால கெடு தேவை என்று அரசிடம் கேட்டு பதில் அளிக்கிறேன் என்றார். இதை கேட்ட நீதிபதிகள் நாளைய தினம், கால கெடுவை அரசு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்

தமிழக அரசுத்துறையில் பணியாற்றுவோர் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்

தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படை விவரங்களுடன் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்று கருவூலத் துறை அறிவுறுத்தியது. தமிழக அரசு ஊழியர்களில் பலருக்கும் ஆதார் எண் இல்லாத காரணத்தால், கருவூலத் துறையின் இந்த அறிவிப்பு அவர்களை பதற்றம் அடையச் செய்துள்ளது.

இதனால், இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமோ என்றும் ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் அடிப்படைத் தகவல்களைச் சேகரித்து அவர்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முழுமையான அளவில் முடிக்கப்படவில்லை. இதனால், எந்தத் துறையிலும் ஆதார் எண்ணை இதுவரை கட்டாயமாக்கவில்லை. கருவூலத் துறையின் திடீர் உத்தரவு: எந்தப் பணிகளுக்கும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசின் கருவூலத் துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் அரசு ஊழியர்களை அச்சமடையச் செய்துள்ளது.

இதுகுறித்து கருவூலத் துறை வெளியிட்ட கடித விவரம்: தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களின் ஊதியப் பட்டியல்கள் இணையதளத்தில் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன. அதில், பணியாளர்கள் அனைவரின் அடிப்படை விவரங்களும் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. இப்போது இந்த அடிப்படை விவரங்களுடன் ஆதார் எண் விபரத்தையும் பதிவேற்றம் செய்யுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, இணையதளத்தில் ஊதியப் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அனைத்து அரசு அலுவலகங்களும் தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் அடிப்படை விபரங்களில் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தப் பணியை ஜூன் மாத ஊதியப் பட்டியல் சமர்ப்பிக்கும்போது முழுமையாக முடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

சம்பளம் கிடைக்குமா? அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி சம்பளப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, 19-ஆம் தேதிக்குள் கருவூலத் துறையிடம் வழங்கப்பட்டு விடும். இந்த நிலையில், பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் இல்லாத காரணத்தால் அதை இந்த மாதத்துக்குள்ளே (ஜூன்) முடிக்க முடியுமா என்று அரசு ஊழியர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதனால், ஜூன் 30-ஆம் தேதி சம்பளம் கிடைக்குமா என்று தெரியவில்லை எனவும், ஆதார் எண்ணை சமர்ப்பிக்க போதிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நெட் தேர்வு முடிவு இணையத்தில் வெளியீடு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில், கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' தகுதித் தேர்வு முடிவுகள் நீண்ட தாமதத்துக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது. cbseresults.nic.in என்ற இணையதளத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டன.

பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பதவிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பர் மாதங்களில் தேசிய அளவிலான தகுதித் தேர்வு "நெட்' நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை யுஜிசி நடத்தி வந்தது. கடந்த 2014 டிசம்பர் மாதம் முதல் இந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பை சி.பி.எஸ்.இ. வசம் யுஜிசி ஒப்படைத்தது. அதன்படி, டிசம்பர் மாதத் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்தியது. இந்த நிலையில் அடுத்த "நெட்' தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு தேதியும் நெருங்கிய நிலையில், டிசம்பர் மாதத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது.

யுஜிசி, சி.பி.எஸ்.இ. இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடே தேர்வு முடிவுகள் வெளியிடாததற்கு காரணம் என கூறப்பட்டது. இப்போது பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது. ஜூன் 5 அல்லது 6-ஆம் தேதிகளில் நிச்சயம் முடிவுகள் வெளியிடப்பட்டு விடும் என யுஜிசி துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் தெரிவித்திருந்தார். ஆனால், அப்போதும் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு (ஜூன் 15) தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. தேர்வு பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வர்கள் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வர்கள் எடுத்துள்ள மதிப்பெண், கட்-ஆஃப் மதிப்பெண் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இதில் வெளியிடப்பட்டுள்ளன.