இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, May 14, 2015

தொடக்ககல்வி பட்டயத்தேர்வு.அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் செய்யலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (மே 15) முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் இரண்டாமாண்டு தேர்வுகள் வரும் 18-ஆம் தேதி தொடங்கி ஜூன் 3-ஆம் தேதி வரையும், முதலாமாண்டு தேர்வுகள் வரும் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 4-ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை எழுதவுள்ள தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருக்கும் தனித் தேர்வர்கள் அனைவரும் ww.tndge.in என்ற இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிந்து வெள்ளிக்கிழமை (மே 15) முதல் மே 22-ஆம் தேதி வரை தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 சான்றிதழ் பிழை திருத்த தலைமையாசிரியர்க்கு அதிகாரம்

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் வழங்கும் போது, அதில் எழுத்துப் பிழை இருந்தால், தலைமையாசிரியரே திருத்தம் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதேநேரம், 'மதிப்பெண் சான்றில், மதிப்பெண் விவரத்தில், 'கை' வைக்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டு உள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் மாணவர் பெயர், பள்ளி, முகவரி, மதிப்பெண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றில், எழுத்துப்பிழை, அச்சுப்பிழை வருவதால், இந்த ஆண்டு கல்வித் துறை மாற்றுத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

பள்ளிகளில் தலைமையாசிரியர், மாணவரின் தற்காலிக மதிப்பெண் பட்டியலை, ஆன் - லைனில், 'பிரின்ட் அவுட்' எடுத்து, சான்றொப்பம் இட்டு, தற்காலிகமாக நேற்று முதல் வழங்கி வருகின்றனர்.தற்காலிக மதிப்பெண் சான்றிதழில், எழுத்துப்பிழை, அச்சுப் பிழை இருந்தால், அந்தந்த தலைமையாசிரியரே, திருத்தம் செய்து கொள்ளலாம் என, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், மார்க் விவரங்களில் திருத்தம் செய்ய, தலைமை ஆசிரியருக்கு அதிகாரமில்லை.

இதனால், அசல் மதிப்பெண் சான்று வரும் வரை, மாணவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை. தற்காலிக சான்றிதழை வைத்தே, உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம். திருத்தம் செய்யப்பட்ட விவரத்தை, தேர்வுத் துறைக்கு அனுப்பி, அங்கிருந்து திருத்திய மதிப்பெண் பட்டியல் வந்தபின், அசல் மதிப்பெண் சான்று வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

மறுமதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால் அதுவே இறுதியானது

'பிளஸ் 2 தேர்வில், மறு மதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால், அதுவே இறுதியானது' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வில், இயற்பியலில் கடந்த ஆண்டை விட, 95 சதவீதம் குறைவானோர், 'சென்டம்' எடுத்தனர். வேதியியல், விலங்கியல், உயிரியல், கணினி அறிவியல், வணிகவியல், கணித பதிவியல் பாடங்களிலும், 'சென்டம்' எடுத்தோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது.இந்நிலையில், ஏராளமான மாணவர்கள் மறு கூட்டல், விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.

தேர்வுத் துறை வெளியிட்டுள்ள நிபந்தனைகள்: *மறு கூட்டல் செய்யக்கோரும் தேர்வரின் விடைத்தாளில், பக்க வாரியாகவும், வினா வாரியாகவும் வழங்கப்பட்ட மதிப்பெண் மறுகூட்டல் செய்யப்படும்.

*மதிப்பீடு செய்யாமல் விடுபட்ட விடைகள் மற்றும் முழு மதிப்பீடு செய்யாத விடைகளை பரிசீலித்து மதிப்பெண் வழங்கப்படும்.

*டைக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட மதிப்பெண்ணை விட கூடுதலாக வழங்க முடியாது.

*மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டில் மாற்றம் இருந்தால், புதிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

.*மறு கூட்டலுக்கு மட்டும் விண்ணப்பிப்பவருக்கு நகல் வழங்கப்படாது.

*விடைத்தாள் நகல் பெற்றவர்களுக்கு மட்டுமே மறு மதிப்பீடு செய்யப்படும்

.*தேர்வர்களின் விடைத்தாள்களில், சம்பந்தப்பட்ட பாடத்திற்கான பாட வல்லுனர் மூவர் குழு மூலம் மறு மதிப்பீடு செய்யப்படும்.

*மறு மதிப்பீட்டில் மதிப்பெண் உயர்வோ, குறைவோ ஏற்படலாம். குறைந்தால், முந்தைய அதிக மதிப்பெண் கிடைக்காது; மறு மதிப்பீடு மதிப்பெண்ணே இறுதியானது. எனவே, பாட வல்லுனர்களிடம் நன்றாக ஆய்வு செய்து, மதிப்பெண் உயரும் என்று தெளிவாகத் தெரிந்து, மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.

சிவில் சர்வீஸ் 2011 ல் முதல்நிலை தேர்வு எழுதியவர்களுக்கு சலுகை

கடந்த, 2011ம் ஆண்டில், சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு எழுதியவர்களுக்கு, இந்த ஆண்டு கூடுதலாக, ஒரு வாய்ப்பு வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக, மத்திய பணியாளர் நலத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., நடத்திய, சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூலையில், ஏராளமான மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வின் இரண்டாம் தாளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சிவில் சர்வீசஸ் இரண்டாம் தாளில், ஆங்கில மொழிப்பிரிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கான மதிப்பெண், தகுதி மதிப்பெண்ணில் சேர்க்கப்படாது. இந்த மாற்றம், 2014ம் ஆண்டின், சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் இருந்து அமலுக்கு வரும் என, தெரிவிக்கப்பட்டது. அத்துடன், 2011ம் ஆண்டில், சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் ஒரு முறை தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றும், மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், பார்லிமென்டில் அறிவித்தார்.

கடந்த, 2011ம் ஆண்டில், சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு எழுத, 4.72 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 2.43 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். அவர்களுக்கு, இந்த ஆண்டு மீண்டும் ஒரு முறை தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வில், 2011ம் ஆண்டில் தான் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கு முன், முதல்நிலை தேர்வு முதல் தாளில், பொது அறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. இரண்டாள் தாள், விருப்ப பாடத்திற்குரியதாக இருந்தது. கடந்த ஆண்டு, யு.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிக்கையின் படி, பொதுப்பிரிவு மாணவர்கள், சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வை ஆறு முறை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, பணியாளர் நலத்துறை உயர் அதிகாரி கூறினார்.

+2 Re exam guidelines

Click below

https://drive.google.com/file/d/0BwpC-9IEQAb7RlplRkl3MFVnVDg/view?usp=sharing

Wednesday, May 13, 2015

UPSC தேர்வுகளில் இந்த ஆண்டு மாற்றமில்லை

யுபிஎஸ்சி தேர்வுகளில் மாற்றம் இல்லை: மத்திய அரசு
யுபிஎஸ்சி தேர்வுகளில் இந்த ஆண்டு மாற்றம் இருக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பு நேற்று அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதே நேரம் யுபிஎஸ்சி தேர்வு முறை குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும், அக்குழு யுபிஎஸ்சி தேர்வு முறை, தேர்வு எழுதுவோரின் தகுதி, அதற்கான பாடதிட்டம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கை அளிக்கும் வரை இதே தேர்வு முறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக தேர்வு வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இல்லாமல் பிராந்திய மொழிகளிலும் அமைய வேண்டுமென கோரி நாடு முழுவதும் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 2 மதிப்பெண் சான்று இன்று முதல்

பிளஸ் 2 மாணவர்கள் வியாழக்கிழமை (மே 14) முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்தப் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். உயர் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்காக இந்த ஆண்டு முதல் முறையாக தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும்.

பள்ளி தலைமை ஆசிரியர்களால் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இந்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். இணையதளத்தில் இருந்து நேரடி பதிவிறக்கம்: அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் பிறந்த தேதி, பதிவு எண் ஆகியவற்றைப் பதிவு செய்து மாணவர்களே நேரடியாக தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம்.

தவறு தவிர்க்க ஒரே மதிப்பெண் டி.சி

சில தவறு, குளறுபடி தவிர்த்து பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ஒரே மதிப்பெண் பட்டியல் வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 2014-15ம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் ஆன் -லைனில் 'ரிசல்ட்' பார்த்து மதிப்பெண்களை தெரிந்து கொண்டனர்.

முன்கூட்டியே கல்லூரிகளில் அட்மிஷன் துவங்க ஏதுவாக தற்காலிக மதிப்பெண், டி.சி.,வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மதிப்பெண் பட்டியல் அடங்கிய சான்றிதழை (புரோவிஷனல்) ஆன்-லைனில் 'பிரின்ட் அவுட்' எடுத்து, தலைமை ஆசிரியர்கள் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். மதிப்பெண் சான்றுடன் பள்ளி டி.சி.,யும் வழங்க வேண்டும். டி.சி.,யில் 'ஒரிஜினல்' மதிப்பெண் பட்டியல் சான்றை சரி பார்க்க வேண்டும் என்ற வாசகம் கட்டாயம் இடம் பெறச் செய்ய வேண்டும் என, அறி வுறுத்தப்பட்டுள்ளது.

இன்று (மே14)முதல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 தற்காலிக சான்று, டி.சி.,களை வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. உத்தரவு தகவல் தலைமை ஆசிரியர்களுக்கு மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவர் கூறுகையில், " தற்காலிகமாக வழங்கும் மதிப்பெண், டி.சி.,யை பயன்படுத்தி கல்லூரியில் சேரலாம்.6 மாதம் வரை பயன்படுத்தலாம். அதற்குள் ஒரிஜினல் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். மேலும், மதிப்பெண்ணில் தவறு, குளறுபடி இருந்தால் சரி செய்து, ஒரே சான்றாக வழங்குவதற்கு இப்புதிய முறை உதவும்,” என்றார்.

மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.பிரதான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 6,7,8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Click below

https://app.box.com/s/rrk9mfb6djm5zzx7ve3biq06c1guza22

Tuesday, May 12, 2015

TNOU b.ed admission

TNOU ‌பி.எ‌ட். படி‌‌ப்புக‌ளி‌‌ல் சே‌ர்வத‌ற்கான ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்க‌ள் ஜூ‌ன் 9ஆ‌ம் தே‌தி முத‌ல் வழ‌ங்க‌ப்படு‌ம்
            த‌மி‌ழ்நாடு ‌திற‌ந்த‌நிலை ப‌ல்ககலை‌க்கழக‌த்‌தி‌ல் (TNOU) ‌பி.எ‌ட். படி‌‌ப்புக‌ளி‌‌ல் சே‌ர்வத‌ற்கான ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்க‌ள் ஜூ‌ன் 9ஆ‌ம் தே‌தி முத‌ல் வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
                த‌மி‌ழ்நாடு ‌திற‌ந்த‌நிலை ப‌ல்ககலை‌க்கழக‌த்‌தி‌ல் (TNOU) ‌பி.எ‌ட். படி‌‌ப்புக‌ளி‌‌ல் சே‌ர்வத‌ற்கான ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்க‌ள் ஜூ‌ன் 9ஆ‌ம் தே‌தி முத‌ல் வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதுதொட‌ர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக‌ம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2015 ஆம் ஆண்டுக்கான பி.எட். படிப்பிற்கு விண்ணப்பங்கள் ஜூன் 9 ஆம் தேதி (திங்கள்கிழமை) ந‌ண்பக‌‌ல் 12 மணி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ் வழி படிப்பிற்கு 500 இடங்கள், ஆங்கில வழி படிப்பிற்கு 500 இடங்கள் என மொத்தம் 1,000 இடங்கள் உள்ளன.
விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 14ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள், பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு மையங்களான, அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரி சென்னை, எஸ்.டி. இந்து கல்லூரி நாகர்கோவில், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி வேலூர், மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி விழுப்புரம் ஆகியவற்றில் விநியோகம் செய்யப்படுகின்றன.
மேலும், மண்டல மையங்களான, எஸ்.என்.ஆர். கல்லூரி கோவை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம் மதுரை, வருவான் வடிவேலன் பி.எட். கல்லூரி தருமபுரி, ஷிவானி பொறியியல் கல்லூரி திருச்சி, புனித கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரி சென்னை, டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரி கோவை, இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி தஞ்சாவூர், கிரசன்ட் கல்வியியல் கல்லூரி திருவண்ணாமலை, கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரி மசக்காளிபட்டி, ராசிபுரம் கல்வியியல் கல்லூரி ராசிபுரம், கபி கல்வியியல் கல்லூரி மதுரை, பவானி கல்வியியல் கல்லூரி கடலூர் ஆகிய கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக ரூ.500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், பல்கலைக்கழகத்தின் இணையதளமான www.tnou.ac.in இல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ரூ.500 க்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். தபால் மூலம் விண்ணப்பத்தை பெற, ரூ.550 க்கான வரைவோலையை "தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை 15' என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து, "பதிவாளர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், 577, அண்ணா சாலை, சென்னை 600015' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் முதல் தொடங்கும். பின்னர் பி.எட். வகுப்புகள் 2015 ஜனவரியில் தொடங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044 24306657 மற்றும் 044 24306658 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது எ‌ன்று அ‌ந்த கு‌றி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

குழந்தைகளுக்கான இணையதளங்கள்

குழந்தைகளுக்கான பயனுள்ள இணைய தளங்கள்-பகுதி 2

கணிதத் திறனை அதிகரிக்க
குழந்தைகளின் கணிதத் திறமையை வளர்க்கும் சில தளங்களை சென்ற பகுதியில் பார்த்தோம். அதேபோன்ற மற்றொரு இணையதளம் ஒன்றும் உள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கணிதத்தை விளையாட்டாகச் சொல்லிக் கொடுக்கும் வகையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.கணித விளையாட்டுக்கள், சொல் கணக்குகள், விடுகதைகள், நிகழ்படம் எனப்பல தலைப்புகளில் கணக்குகள் இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. விளையாட்டாக கணிதம் கற்க உதவும் தளம். இத்தளத்தின் முகவரி:
http://www.mathplayground.com/
ஆங்கிலம் கற்க
ஒவ்வொரு பாடத்திற்கும் புதிர் போட்டி நடத்தி, உங்கள் ஆங்கில அறிவின் நிலை என்ன என்று எளிதாக தெரிந்து கொள்ள உதவும் தளம். பாடத்தை கெட்டிங் ஸ்டார்ட் என்ற பொத்தானை கிளிக் செய்து தொடங்கவும். தோன்றும் திரையில் எப்படி குழந்தைகள் எளிதாக ஆங்கிலம் கற்கலாம் என்ற வழிமுறையை காட்டப்படும்.
இத்தளம் சொல்லிக் கொடுப்பதை எப்படி எளிதாக புரிந்து கொள்ளலாம் என்பதை பற்றியும் விளக்கம் கொடுக்கப்படும். இத்தளத்தைப் பயன்படுத்த பதிவு செய்து கொள்ளவேண்டும். பதிவு இலவசம்தான். 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் ஆங்கிலம் கற்றுத் தரப்படுகிறது.ஒவ்வொரு பாடமும் நாம் கற்ற பின் உடனடியாக அதன் அருகில் இருக்கும் டேக் எ குயூஸ் என்பதைக் கிளிக் செய்து நாம் கற்றுக் கொண்டதை சோதித்துப் பார்க்கலாம். இத்தளம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.தளத்தின் முகவரி
http://www.readingbear.org/
தமிழ் இணையதளங்கள்
குழந்தைகளுக்கு பயனளிக்கும் இணையதளங்கள் பலவும் ஆங்கில மொழியிலேயே உள்ளன. தமிழில் மிகக் குறைவான இணையதளங்களே உள்ளன.
கிட்ஸ்ஜோன் தமிழ்
இந்தத் தளம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இயங்குகிறது. இம்மூன்று மொழிகளையும் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் வகையில் எளிமையான பட விளக்கங்களுடன் முழுக்க முழுக்க இளம் பருவக் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்கும்படியாகவே இணையதளத்தை சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.குழந்தைகள் கவரும் வகையில் வண்ணக் கலவைகளில் இத்தளம் மிளிர்கிறது. இம்மூன்று மொழிகளும் தனித்தனி இணையதளங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. மொழியைக் கற்க, குழந்தைப் பாடல்கள், கதைகள், விளையாட்டுகள், மழலைகளுக்கான பாடத்திட்டம், கற்ற பாடங்களை எழுதிப்பார்க்க வொர்க்சீட்கள் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம் எனப் பல்வேறு வசதிகள் இத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன.தமிழ் தளத்திற்கான முகவரி:
http://kidsone.in/tamil/
குழந்தைகள் நூலகம்
இதுவும் தமிழைப் பயிற்றுவிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தளம்தான். இத்தளத்தில் எழுத்துக்கள், எண்கள், கோட்டோவியத்திற்கு வண்ணம் தீட்டுதல், காட்சி அட்டை எனப்படும் வண்ணங்களை பிரித்தரிய உதவும் படங்கள், மழலைப் பாடல்கள், அச்சிட்டு பயிற்சி செய்வதற்கான பக்கங்கள் எனப் பல பாடத் திட்டங்களைக் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்ப நிலைத் தமிழ்ப் படிக்க இத்தளம் உதவுகிறது. இத்தளத்தின் முகவரி:
http://kids.noolagam.com/
மழலைகள்
இத்தளத்தில் தமிழ் இலக்கியம், விடுகதைகள், பழமொழிகள், புதிர்கள், தமிழ் சான்றோர்கள் பற்றிய குறிப்புகள், இயற்பியல், கணிதம், பொது அறிவு ஆகிய பகுதிகள் இதில் உள்ளன.இந்த இணையதளம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமானது என்று கூறப்படுகிறது. ஆனால், தளம் இன்னும் முழுமை பெறாமல் பல இணைப்புகள் வேலை செய்யாமல் இருக்கிறது. பக்க வடிவமைப்பும் சிறப்பாக இல்லை. மேற்கூறப்பட்ட சில பகுதிகள் மட்டும் பயன்படுத்த உகந்ததாக உள்ளது.இத்தளத்திற்கான முகவரி:
http://www.mazhalaigal.com

மாத இறுதியில் சிபிஎஸ்சி தேர்வு முடிவு

சி.பி.எஸ்.சியின் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்வுகள் நடைபெற்றது. பத்தாம் வகுப்பில் மொத்தம் 13 லட்சத்து 73 ஆயிரத்து 853 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
இதில் 8 லட்சத்து 17 ஆயிரத்து 941 பேர் மாணவர்கள், 5 லட்சத்து 55 ஆயிரத்து 912 பேர் மாணவிகள். இது கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 3.37 சதவீதம் அதிகரிப்பாகும்.
அதே போன்று பிளஸ் 2 தேர்வை 10 லட்சத்து 40 ஆயிரத்து 368 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 6 லட்சத்து 7 ஆயிரத்து 383 மாணவர்களும் 4 லட்சத்து 32 ஆயிரத்து 985 மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்கள் தங்களுது பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து முடிவுகளை மதிப்பெண்களுடன் இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை www. cbseresults.nic.in என்ற இணையத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

நான் கு மாநிலத்திற்கு புதிய ஆளுநர்கள்

ஜார்க்கண்ட், திரிபுரா, அருணாச்சல பிரதேசம், மேகாலயா ஆகிய 4 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த சண்முகநாதன் மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக ஒடிசாவை சேர்ந்த பாஜ தலைவர் திராபடி முர்மு (56) நியமிக்கப்பட்டார்.

ஏற்கனவே அங்கு ஆளுநராக இருந்த சயீத் அகமது மணிப்பூர் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2011ம் ஆண்டு ஆளுநராக நியமிக்கப்பட்ட சயீத் அகமதுவின் பதவிக்காலம் அடுத்தாண்டு செப்டம்பரில் முடிகிறது. இதே போல, காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட அருணாச்சல பிரதே ஆளுநரான நிர்பாய் சர்மா, மிசோரமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 2018ல் முடிகிறது. இவருக்கு பதிலாக ஜே.பி.ரக்கோவா அருணாச்சல பிரததேசத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதி கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த திரிபுரா மாநிலத்துக்கு பாஜ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ததாகடா ராய் நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா மாநில ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் தலைவர் வி.சண்முகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பி.இ இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம் இன்று துவங்குகிறது. தமிழகம் முழுவதும் 34 மையங்களில் (அரசுப் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள்) இன்று முதல் ஜூன் 9 வரை வழங்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை வழங்கப்படும். ஜூன் 9 மாலைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். டிப்ளமோ மாணவர்களை பொறுத்த வரை, கடந்த ஆண்டுகளில் கடைசி இரண்டு பருவத் தேர்வு அடிப்படையில், 'கட் ஆப்' மதிப்பெண் கணக்கிட்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இந்த ஆண்டு, ஆறு பருவ தேர்வு முடிவு அடிப்படையில் 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்பட்டு அழைக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம் ரூ.300; ஆதிதிராவிடர்களுக்கு இலவசம். முதற்கட்டமாக 35 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 'செயலர், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை, அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, காரைக்குடி' என்ற முகவரிக்கு தபால் அல்லது நேரில் அனுப்பலாம். ''பி.எஸ்சி., யில் கணிதம் மற்றும் கணிதத்தை துணைப் பாடமாக எடுத்தவர்கள் மட்டுமே இரண்டாம் ஆண்டில் சேர்க்கப்பட்டு வந்தனர். இந்த ஆண்டு பிளஸ் 2வில் கணித பாடம் எடுத்து, பி.எஸ்சி., தாவரவியல், விலங்கியல் படித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்'' என இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலாளர் மாலா தெரிவித்தார்.