இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, February 16, 2015

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பது மார்ச் 1ல் தொடக்கம்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் எச்.எஸ்.பிரம்மா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்காக மார்ச் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் கூறினார்.
போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்குவதற்காக மட்டுமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், வாக்களிக்கும் உரிமையில் இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என விளக்கம் அளித்துள்ளார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை பெற்றவர்கள் மற்றும் போலி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதுடன், தேர்தலின் போது கள்ள ஒட்டு போடுவதையும் தடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
676 மாவட்டங்களில் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் இப்பணிகள் முடிக்கப்படும் என்று கூறிய அவர், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பணியை முடிக்க கூடுதலாக 2 மாதங்கள் அவகாசம் அளிக்கைபடும் என்றார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அவர்களை தூக்கில் போடமுடியுமா என கேள்வி எழுப்பினார். கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கும் 5 முதல் 10 % வாக்குறுதிகள் மட்டுமே நடைமுறைக்கு வருவதாக கூறிய அவர், வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளை மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தண்டிப்பதாக தெரிவித்தார். அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் பிரம்மா கூறினார்.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, மேலும் அவர்,"வாக்காளர் பட்டியலை சீர் செய்யும் பணிகளை ஆகஸ்டு 15ஆம் தேதிக்குள் செய்து முடிப்பதற்கான செயல் திட்டத்துடன் வருமாறு கமிஷன் அதிகாரிகளுக்கும், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீர் செய்வதை உறுதி செய்யும்படியும் நசீம் ஜைதி கேட்டுக்கொண்டுள்ளார்

இடைநிலை ஆசிரியர்களுக்கு 6–வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த சம்பளத்தை வழங்க ஐகோர்ட்டு உத்தரவு

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜெ.ராபட். சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–தமிழகத்தில் 1999–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே சம்பளம் தொகையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.இந்த நிலையில், மத்திய அரசு 6–வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி, மத்திய அரசு பள்ளிகளின் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ9,300, தரச்சம்பளம் ரூ.4,200 என்று நிர்ணயம் செய்துள்ளது.

இதையடுத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்த தமிழக அரசு 3 நபர் கமிஷன் அமைத்தது. இந்த 3 நபர் கமிஷன், 6–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யவேண்டும் என்று தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.ஆனால், இந்த அறிக்கையின் அடிபபடையில் சம்பளத்தை மாற்றி அமைக்காமல் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. எனவே, 3 நபர் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சஞ்சய் காந்தி, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சி.செல்வராஜ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘6–வது சம்பள கமிஷன் பரிந்துரை, அதனடிப்படையில் அமைக்கப்பட்ட 3 நபர் கமிஷன் அறிக்கை அடிப்படையில், தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்து வழங்கக் கோரி மனுதாரர் அமைப்பு கடந்த 2013–ம் ஆண்டு செப்டம்பர் 10–ந் தேதி கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார்.எனவே அவரது கோரிக்கை மனுவை தமிழக நிதித்துறை செயலர், பள்ளிக் கல்வித்துறை செயலர், தொடக்கப்பள்ளி இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Sunday, February 15, 2015

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பது மார்ச் 1ல் தொடக்கம்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் எச்.எஸ்.பிரம்மா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்காக மார்ச் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் கூறினார்.
போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்குவதற்காக மட்டுமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், வாக்களிக்கும் உரிமையில் இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என விளக்கம் அளித்துள்ளார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை பெற்றவர்கள் மற்றும் போலி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதுடன், தேர்தலின் போது கள்ள ஒட்டு போடுவதையும் தடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
676 மாவட்டங்களில் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் இப்பணிகள் முடிக்கப்படும் என்று கூறிய அவர், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பணியை முடிக்க கூடுதலாக 2 மாதங்கள் அவகாசம் அளிக்கைபடும் என்றார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அவர்களை தூக்கில் போடமுடியுமா என கேள்வி எழுப்பினார். கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கும் 5 முதல் 10 % வாக்குறுதிகள் மட்டுமே நடைமுறைக்கு வருவதாக கூறிய அவர், வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளை மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தண்டிப்பதாக தெரிவித்தார். அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் பிரம்மா கூறினார்.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, மேலும் அவர்,"வாக்காளர் பட்டியலை சீர் செய்யும் பணிகளை ஆகஸ்டு 15ஆம் தேதிக்குள் செய்து முடிப்பதற்கான செயல் திட்டத்துடன் வருமாறு கமிஷன் அதிகாரிகளுக்கும், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீர் செய்வதை உறுதி செய்யும்படியும் நசீம் ஜைதி கேட்டுக்கொண்டுள்ளார்

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பது மார்ச் 1ல் தொடக்கம்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் எச்.எஸ்.பிரம்மா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்காக மார்ச் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் கூறினார்.
போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்குவதற்காக மட்டுமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், வாக்களிக்கும் உரிமையில் இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என விளக்கம் அளித்துள்ளார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை பெற்றவர்கள் மற்றும் போலி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதுடன், தேர்தலின் போது கள்ள ஒட்டு போடுவதையும் தடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
676 மாவட்டங்களில் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் இப்பணிகள் முடிக்கப்படும் என்று கூறிய அவர், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பணியை முடிக்க கூடுதலாக 2 மாதங்கள் அவகாசம் அளிக்கைபடும் என்றார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அவர்களை தூக்கில் போடமுடியுமா என கேள்வி எழுப்பினார். கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கும் 5 முதல் 10 % வாக்குறுதிகள் மட்டுமே நடைமுறைக்கு வருவதாக கூறிய அவர், வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளை மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தண்டிப்பதாக தெரிவித்தார். அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் பிரம்மா கூறினார்.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, மேலும் அவர்,"வாக்காளர் பட்டியலை சீர் செய்யும் பணிகளை ஆகஸ்டு 15ஆம் தேதிக்குள் செய்து முடிப்பதற்கான செயல் திட்டத்துடன் வருமாறு கமிஷன் அதிகாரிகளுக்கும், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீர் செய்வதை உறுதி செய்யும்படியும் நசீம் ஜைதி கேட்டுக்கொண்டுள்ளார்

தொகுப்பூதிய ஆசிரியர் காலமுறை ஊதியம் வழங்கியது குறித்த பதிவு

நன்றி திரு ஞானகுரு

தொடக்கக் கல்வி - கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக 2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர்
01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு.

உண்மை நிலவரம்

2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா ???இவர்கள் அனைவரும் நவம்பர் 2001ல் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் D.T.Ed பதிவு செய்திருந்தவர்கள். ஜனவரி 2002ல் கரூர்மாவட்டத்தில் இவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு அரசியல்வாதிகளின் துணையுடன் பணிநியமனம் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் SC,MBC பிரிவினர். இவர்கள் அனைவருக்கும் பின்னடைவு பணியிடங்கள் இருந்தும்பணிநியமனம் மறுக்கப்பட்டது. மேலும் ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் 11.1.2002ல் நடத்தப்பட்ட பணிநியமணத்திலும் இவர்களுக்கு பணியிடங்கள் இருந்தும் சான்றிதழ்கள் மட்டும் சரிபார்க்கப்பட்டு பணிநியமனம் மறுக்கப்பட்டது. பெரம்பலூர் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் அன்றைய நாளில் பணிநியமனம் வழங்கப்பட்டது. அன்றைய தினம் பணி வழங்கப்பட்டு இருந்திருந்தால் காலமுறை ஊதியத்தில் பழைய ஓய்வூதியத்தில் நியமனம் செய்யப்பட்டிருப்பர். இதனை தொடர்ந்து 2004ல் தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்றனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை தொடர்ந்து நியமனம் பெற்ற நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க ஆணை வழங்கப்பட்டது. 2002ல் நியமனம் வழங்கப்பட்டிருந்தால் ஓய்வூதியம் கிடைத்திருக்கும்.இவர்கள் அனைவரும் கரூர் மாவட்ட பதிவுதாரர்கள். மற்ற மாவட்டங்களுக்கு மாறுதல்கள் பெற்று சென்றதால் அம்மாவட்டத்தின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

ராணுவ பள்ளியில் 8ம் வகுப்பு சேர்க்க விண்ணப்பம்

இந்திய ராணுவ பயிற்சி கல்லூரி யில் 8-ம் வகுப்பு படிக்க மாணவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இதுகுறித்து ராணுவ பொதுத் துறை செயலகம் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

இந்திய ராணுவ பயிற்சி கல் லூரியில் 2016 ஜனவரி கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு படிக்க மாணவர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் மாணவர்களின் வயது பதினொன்றரையிலிருந்து இருந்து பதிமூன்றுக்குள் (1.1.2016 நாளன்று) இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை The Commandant, RIMC Dehradun 248 003, Uttarakhand state என்ற முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

பதிவு தபால் மூலம் விண்ணப்பத்தை பெற கட்டணம் ரூ.430. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் ரூ.385. விரைவு தபால் மூலம் விண்ணப்பத்தை பெற கட்டணம் ரூ.480. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் ரூ.435. வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் தேர்வு கட்டுப்பாட்டாளர் டிஎன்பிஎஸ்சி சென்னை-3 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு வரும் ஜூன் மாதம் 1, 2-ம் தேதிகளில் நடக்கிறது. ஆங்கிலம் பாடத்தில் 125 மதிப்பெண்கள், கணிதத்தில் 200 மதிப்பெண்கள், பொது அறிவு பாடத்தில் இருந்து 75 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதுகுறித்து மேலும் தகவல்களை பெற www.rimc.gov.in என்ற இணைதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

குரூப் 4 தேர்வு முடிவு 45 நாளில் வெளியாகும்

குரூப்-4 தேர்வு முடிவு

குழந்தைகள் நல திட்ட அதிகாரிகளுக்கு தேர்வு நடந்தது. 80 சதவீதம் பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். தேர்வை பட்டதாரி பெண்கள் மட்டுமே எழுதமுடியும். இந்த தேர்வுக்கான வினா- விடை ஒரு வாரத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவு இன்னும் 45 நாட்களில் வெளியிடப்படும்.

தேர்வு செய்யப்படுபவர்கள், பணியில் சேர்ந்த பின்னர் அங்கன்வாடி பணியாளர்கள் பணியை கண்காணிப்பார்கள். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு அளிக்கும் திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறுவார்கள். ஏற்கனவே நடந்து முடிந்த குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும். குரூப்-4 தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்ததேர்வை 10 லட்சம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்னும் 45 நாட்களில் வெளியிடப்படும்.

இந்த வருடம் நடத்தப்படும் தேர்வுகள்

மேலும் இந்த வருடம் எந்த எந்த தேர்வுகள் நடைபெறும்? அந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் எப்போது கொடுக்கப்படும்? எந்த தேதியில் தேர்வுகள் நடத்தப்படும்? என்ற விவரம் ஏற்கனவே தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

சித்தமருத்துவம், ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றில் உதவி மருத்துவ அதிகாரிகள் 74 பணியிடங்களுக்கு தேர்வு மே மாதம் 31-ந்தேதி நடத்தப்படும். இதுபோன்ற பல தேர்வுகள் வர உள்ளன.

இவ்வாறு தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். பேட்டியின்போது தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட:டு அதிகாரி வெ.ஷோபனா அருகில் இருந்தார்.

குரூப் 2 தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும்

குரூப் - 2 தேர்வு முடிவுகள், இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்,'' என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி.,யின் தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

தமிழக சமூக நலத்துறையில் காலியாக உள்ள, குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் பதவிக்கான, 117 பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., நேற்று தேர்வு நடத்தியது. சென்னை, கோவை மற்றும் மதுரை என, மூன்று நகரங்களில், 15 மையங்களில், 4,009 பேர் தகுதி பெற்று தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது, பாலசுப்ரமணியன் கூறியதாவது:இந்தத் தேர்வுக்கு, மொத்தம் 4,461 பேர் விண்ணப்பித்து, 4,009 பேர் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர்களுக்கு அங்கன்வாடி பணியாளர்களை மேற்பார்வையிடுதல், கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு கால நிதியுதவித் திட்டம் பயனாளிகளை சென்றடைகிறதா என்பதை கண்காணித்தல் போன்ற பணிகள் வழங்கப்படுகிறது.குரூப் - 2 தேர்வு முடிவுகள், இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். குரூப் 4 தேர்வு முடிவுகள், இன்னும் ஒன்றரை மாத காலத்தில் வெளியிட வாய்ப்புள்ளது. சித்தா, ஆயுர்வேதம், யுனானி துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு, விரைவில் தேர்வுகள் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

CPS detail update

Click below

http://218.248.44.123/auto_cps/public/

Saturday, February 14, 2015

தேர்வு நேரத்தில் கிரிக்கெட் ஜுரம்

பொதுத்தேர்வு நாட்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை கவலை அடையச் செய்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19ல் துவங்குகிறது. தற்போது, செய்முறை தேர்வு நடந்து வருகிறது. 100 சதவீத தேர்ச்சி என்ற இலக்குடன், தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதில் ஆசிரியர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது; அடுத்த மாதம் முழுவதும், இத்தொடர் நடக்கிறது. மாணவர் மத்தியில் கிரிக்கெட் ஆர்வம், அதிகமாக உள்ளது; பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களில் பலரும், கிரிக்கெட் விளையாடுவதிலும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை "டிவி'யில் பார்ப்பதிலும் ஆர்வம் காட்டுவர். இதனால், படிப்பில் கவனம் சிதறும் என்ற அச்சம், ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கே.எஸ்.சி., அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சதாசிவத்திடம் கேட்ட போது, ""தேர்வு நேரத்தில், கிரிக்கெட் போட்டி நடப்பது, கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் எதிர்காலத்தை, பொதுத்தேர்வு தீர்மானிக்கிறது. ""தற்போது நடக்கும் கிரிக்கெட் போட்டி, மாணவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுத்தேர்வு வாழ்க்கையில் மிக முக்கியமானது; அதற்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அறிவுறுத்தி வருகிறோம்,'' என்றார்.

202 சிறப்பாசிரியர்களை நியமிக்க நடவடிக்கை

தமிழகத்தில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்பிக்க, இடை நிலை கல்வித்திட்டத்தின் கீழ், 202 சிறப்பாசிரியர் பணியிடம் பள்ளி கல்வித்துறையில், புதிதாக தோற்றுவிக்கப்படுகிறது. அரசு உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, சில குறிப்பிட்ட வகுப்புகள், சிறப்பாசிரியர் மூலம், தனியாக நடத்தப்படுகின்றன.

கடந்த ஆண்டு அக்., 17ம் தேதி, சட்டசபையில் பள்ளிகல்வி மானிய கோரிக்கையில்,' இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், 5.35 கோடி ரூபாயில், 202 சிறப்பாசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இவை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., மூலம் நிரப்பப்படும்' என, அமைச்சர் வீரமணி அறிவித்தார்.இதையடுத்து, தமிழக பள்ளிகளில், 2,178 மாற்றுத் திறனாளி மாணவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு கற்பிக்க, 202 சிறப்பாசிரியர் பணியிடங்களை கூடுதலாக உருவாக்க, பள்ளிக்கல்வி இயக்குனர் அரசுக்கு கடிதம் எழுதினார்.

அதை ஏற்று, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.இப்பணியிடங்கள், டி.ஆர்.பி.,யால், போட்டி தேர்வு வாயிலாக, நிரப்பவும், அனைவருக்கும் இடைநிலை கல்விதிட்டத்தில், மத்திய அரசின் நிதியில் இருந்து ஊதியம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடம் காலி.மாணவர்கள் பாதிப்பு

கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாட ஆசிரியர் பணியிடங்கள்,1,400 அரசு பள்ளிகளில் காலியாக உள்ளதால், பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 2,600 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஐ.டி., பிரிவு வளர்ச்சி தாக்கத்தால் அனைத்து பள்ளி மேல்நிலை வகுப்பிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு உள்ளது.

இந்த பாடப் பிரிவில் சேர, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், முறையாக பயிற்சி பெற முடியவில்லை. பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர்கள் நியமனம் சார்ந்த வழக்கு நிலுவை யில் உள்ளதால், புதிய ஆசிரியர்களை நியமிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதில், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தற்போது, 1,200 பள்ளி களில் மட்டுமே, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் ஆசிரியர்கள் உள்ளனர்.

மீதமுள்ள, 1,400 பள்ளிகளில், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லை. போதிய கல்வித்தகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்களைக் கொண்டு, சில பள்ளிகளில் வாரத்திற்கு மூன்று நாட்கள் பாடங்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. சில பள்ளிகளில், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆய்வகங்கள் பூட்டப்பட்டுள்ளன.கடந்த, 2013 அக்டோபரில், ஐகோர்ட் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், 2014ஜனவரிக்குள், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலர் பரசுராமன் கூறுகையில், ''தமிழகத்தில், 1,400 பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. '

'இதனால், மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, பள்ளிக்கல்வித்துறை உடனே தீர்வு காண வேண்டும்,'' என்றார்.