இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, November 14, 2014

அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு B

   தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த கோரும் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி வி.தனபாலன் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.

மனுவில், தமிழகத்தில் 1442 பெண்கள் பள்ளிகளிலும், 4278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறைகள் இல்லை. 2080 பள்ளிகளில் கழிப்பறைகள் பயனற்றதாக உள்ளன. மாணவர்கள் திறந்தவெளியைக் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் நோய்த் தொற்றுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. கல்வித்துறை இணைய தளத்தில், 4375 பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்றும் அதில் மாணவர்கள் படிக்கும் 4060 பள்ளிகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை வசதிகளை நிறைவேற்றுமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் 2012-இல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. எனவே அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கழிப்பறைகளை ஏற்படுத்திடவும் அவற்றை பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்கவும் பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இம்மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி வி.தனபாலன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கழிப்பறைகள் ஏற்படுத்தி, அவற்றை பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும் உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான தகவல்களை அவ்வப்போது இணையதளத்தில் வெளியிட வேண்டும். 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

ஆன் - லைன் வழி தேர்வு திட்டம்: ரத்து செய்ய தேர்வாணையம் முடிவு


கடந்த 8ம் தேதி, 'ஆன் - லைன்' வழியில் நடந்த குரூப் 2 முதன்மை தேர்வில், பெரும் குளறுபடி ஏற்பட்டதன் எதிரொலியாக, ஆன்-லைன் வழி தேர்வை ரத்து செய்ய, அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர், நட்ராஜ், ஆன்-லைன் வழி தேர்வை அமல்படுத்தினார். குறைந்த தேர்வர்கள் பங்கேற்கும் தேர்வில் மட்டும், புதிய திட்டத்தை அமல்படுத்தினார். இந்த வகை தேர்வு, தேர்வாணைய அலுவலகத்தில் மட்டும் நடந்து வந்தது. இதனால், எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.

கடந்த 8ம் தேதி, குரூப் 2 முதன்மைத் தேர்வு, மாநிலம் முழுவதும், 44க்கும் மேற்பட்ட மையங்களில் நடந்தது. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த தேர்வு, இரு தாள்களாக நடத்தப்பட்டது. காலையில், ஆன்-லைன் வழியிலான தேர்வும், பிற்பகலில், விரிவாக விடை அளித்தல் முறையிலான தேர்வும் நடந்தது. இதில், ஆன்-லைன் வழியிலான தேர்வில், பெரும் குளறுபடி ஏற்பட்டது. பல இடங்களில் மின்சாரம் இல்லாததாலும், சில மையங்களில், 'சர்வர்' முடங்கியதாலும், குறித்த நேரத்தில், தேர்வு துவங்கவில்லை. மறைமலை நகர் அருகே உள்ள ஒரு மையத்தில், ஒரு அறையில், 'சர்வர்' கோளாறால், தேர்வெழுத முடியாத 43 தேர்வர்கள், போராட்டம் நடத்தினர். கடைசியில், இவர்களுக்கு, மறுநாள் புதிய தேர்வு நடத்தப்பட்டது.

சென்னை செங்குன்றத்தில் அமைக்கப்பட்ட மையத்திலும், 'சர்வர்' பிரச்னை ஏற்பட்டது. இப்படி, பல மையங்களில் குளறுபடி ஏற்பட்டதன் காரணமாக, ஆன்-லைன் வழி தேர்வு, தேவைதானா என, தேர்வாணையம் ஆலோசித்து வருகிறது. மின்சார பிரச்னையையும், தொழில்நுட்ப பிரச்னையை யும், தவிர்க்க முடியாது என்பதால், ஆன்-லைன் வழி தேர்வை ரத்து செய்ய, தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, விரைவில், 'போர்டு' கூட்டத்தில் ஆலோசித்து, முடிவு எடுக்கப்பட உள்ளது. சரியாக திட்டமிடாததால் தோல்வியில் முடிந்த திட்டம்: பெரிய அளவில் நடத்தப்படும் எந்தத் திட்டத்தையும், அரசு அதிகாரிகள் திறம்படக் கையாள்வதில்லை என்ற குற்றச்சாட்டு, அடிக்கடி எழுகிறது. அரசு செயல்படுத்தும் இலவச திருமணமானாலும், நலத் திட்ட உதவிகளானாலும், எப்போதும் குழப்பமே மிஞ்சுகிறது.

தாலிக்குத் தங்கம் திட்டத்தில் கூட, பயனாளிகளுக்கு, திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகே, அரசின் தங்கத் தாலி கொடுக்கப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், அதிக அளவில் தேர்வர்கள் கலந்து கொள்வர் என்பது, அரசு அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிந்தும், போதுமான அளவு ஏற்பாடுகள் செய்திருக்கவில்லை. தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுக்கும்போதே, அவற்றில், மின் வசதி, கம்ப்யூட்டர் சர்வர் வசதிகள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டியது, தேர்வு நடத்தும் அமைப்பின் கடமை. 'ஏற்பாடுகளை துல்லியமாகச் செய்யாமல், மேம்போக்காக கடமையாற்றும் அதிகாரிகளின் போக்கே, இத்தகைய குழப்பங்களுக்குக் காரணம்' என, தேர்வர்கள் கூறுகின்றனர்.

கே.வி., பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம் என்ற உத்தரவால் சர்ச்சை: 70 ஆயிரம் மாணவர் பாதிக்கப்படுவர் என கல்வியாளர்கள் புகார்

'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது மொழிப்பாடமாக, ஜெர்மன் மொழிக்குப் பதிலாக, சமஸ்கிருதத்தை போதிக்க வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதனால், 70 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். கே.வி.எஸ்., என, அழைக்கப்படும், கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பின், ஆளுனர்கள் குழும (போர்டு ஆப் கவர்னர்ஸ்) கூட்டம், அதன் தலைவரான, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், கடந்த மாதம், 27ம் தேதி நடைபெற்றது.

அப்போது, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது மொழிப்பாடமாக, ஜெர்மனி மொழி போதிப்பதை கைவிடுவது என்றும், அதற்குப் பதிலாக, சமஸ்கிருதத்தை போதிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. வேண்டுமானால், ஜெர்மன் மொழியை, மாணவர்கள் கூடுதல் பாடமாக கற்றுக் கொள்ளலாம் என, முடிவு செய்யப்பட்டது.இந்த முடிவால், நாடு முழுவதும் உள்ள, 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், மூன்றாவது மொழிப்பாடமாக, ஜெர்மன் மொழிக்குப் பதிலாக, சமஸ்கிருத மொழி கற்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவர் என்றும், அதனால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் கூறியதாவது:

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது மொழிப்பாடமாக, ஜெர்மன் மொழியை போதிப்பதில்லை என்ற முடிவு, நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்டது. ஆனால், இந்த விஷயத்தில், ஊடகங்கள் குழப்பமான செய்திகளை வெளியிட்டு, பெற்றோர் மத்தியில் பீதியை கிளப்பி வருகின்றன.இந்த முடிவை மத்திய அரசு ஏன் எடுத்தது என்பது தொடர்பாக, அமைச்சகம் சார்பில், விரைவில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின், சமஸ்கிருத ஆசிரியர்கள், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். அதில், ஜெர்மன் மொழியை மூன்றாவது மொழிப்பாடமாக அறிமுகப்படுத்தியதற்கு, எதிர்ப்புத் தெரிவித்துஉள்ளனர்.

சமஸ்கிருத மொழியை, மூன்றாவது மொழிப்பாடமாக அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர். ஜெர்மன் மொழியை அறிமுகம் செய்தது, கல்விக் கொள்கைக்கு எதிரானது என்றும் கூறியுள்ளனர். இவ்வாறு, ஸ்மிருதி இரானி கூறினார். 114 சதவீதம் அதிகரிப்பு: *சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழிப்பாடமாக அறிமுகப்படுத்தியதற்கு, பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் ஒன்றான, பா.ம.க., எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, சமஸ்கிருதத்தை கட்டாயமாக திணிக்கும் செயல் என்றும் கூறியுள்ளது.

*உயர் கல்வி படிக்க, ஜெர்மன் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆறு ஆண்டுகளில், 114 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஜெர்மன் மொழி போதிக்கப்பட்டதும் ஒரு காரணம்.

*மத்திய அரசு தற்போது எடுத்துள்ள, புதிய முடிவால், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், இனி மாணவர்களுக்கு சமஸ்கிருதம் தான் போதிக்கப்படும். ஜெர்மன் மொழி போதிக்கப்படாது. வேண்டுமானால், மாணவர்கள் கூடுதல் பாடமாக அதை கற்றுக் கொள்ளலாம்.

*கல்வி ஆண்டின் மத்திய பகுதியில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இதுவரை ஜெர்மன் மொழி படித்த மாணவர்கள், இனி, சமஸ்கிருதத்திற்கு மாற வேண்டியது நேரிடும்.

*கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஆங்கிலம், இந்தி மற்றொரு இந்திய மொழி என்ற மும்மொழி பாடத்திட்டம் அமலில் உள்ளது.

பாலியல் கல்வி குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை பாடமாக சேர்ப்பது குறித்து 8 வாரங்களுக்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும், அவற்றை பாடமாக புத்தகத்தில் சேர்க்கவும் கோரி, வழக்கறிஞர் சித்ராதேவி என்பவர் கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளார்.

ஓராண்டு கடந்தும் அந்த மனு மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக 8 வாரத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Wednesday, November 12, 2014

8 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக திருவள்ளூர், வேலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று (13.11.2014-வியாழக்கிழமை) விடுமுறை

பள்ளிகளை நிர்வகிப்பது தொடர்பாக பள்ளி மேலாண்மை, வளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த 1.65 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகியவற்றின் சார்பில் இந்தப் பயிற்சி வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளை நிர்வகிக்க ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மை, வளர்ச்சிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், உள்ளாட்சி மன்றத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பெற்றோர்கள் என ஒவ்வொரு குழுவிலும் 22 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

பள்ளிகளின் தலைமை ஆசிரியரோடு இணைந்து பள்ளிகளை எவ்வாறு மேம்படுத்துவது, ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்வது, வகுப்பறை, கழிவறை வசதிகளை மேம்படுத்துவது, பள்ளிகளில் விழாக்களை நடத்துவது, கல்வித் தரத்தை அதிகரிக்க உள்ளூரில் உள்ள பட்டதாரிகளைக் கொண்டு சிறப்பு வகுப்புகள் எடுக்கச் செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாநில அளவில் முதல் கட்டமாக நவம்பர் 14-ஆம் தேதி மதுரையிலும், இரண்டாம் கட்டமாக சென்னையில் நவம்பர் 18-ஆம் தேதியிலும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

அதன் பிறகு, மாவட்டந்தோறும் இந்தக் குழுக்களைச் சேர்ந்த 1.65 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சியின்போது பள்ளியை நிர்வகிப்பது தொடர்பான கையேடுகளும் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் ஆண்டுகளில் பள்ளி மேலாண்மை, வளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

How to missing credit Cps power point format

Click below

https://drive.google.com/file/d/0B69z3JTclPnxdWc1am4zcm44cTA/view?usp=sharing

TRB PG Syllabus

Click below

http://trb.tn.nic.in/PG2014/07112014/msg1.htm

How to Apply CPS Number in Online


1. The first thing you have to done is to print this 3 pages seperately then fill the details with black
ink, after that the photograph of the Govt. Employer should be pasted with his/her signature also
with the pay drawing officer's attestation. These 3 Pages must be scanned within 300 kb in PDF
Format.

2. After these procedures you can visit the below
website: http://218.248.44.123/auto_cps

3. A new page will be opened, in this page you can fill the user name(treasury number) and password (Pay Drawing Officer's code number)
For Ex: Treasury no: 123
Paydrawing Officer's Code No: 123
You can type like Username: 123 Password: 123
Then you click the submit button. After that the new page will be opened and you filled the required details then you click the check button.

4. The next page can be filled with proper details then you click the proceed button.
5. Again the next page will be filled and uploaded the scanned PDF file at last you click the save
button.
6. Before you press the forward button you must confirm the filled details are correct, if any corrections you can go to the draft and pick the particular person's file then you edit any needed corrections.
7. After the clicking the forward button the details of the file forwarded to the chennai data centre. The new CPS number will be alloted with in few days after the verification the person's details.
( For getting the new CPS alloted number you can click the S1 form and download the new CPS number allotment letter).

http://218.248.44.123/auto_cps/

ednesday, 12 November 2014 Alagappa University DDE results exam held on May 2014

Click below

http://alagappauniversity.ac.in/result/DistanceEducation_reval.php

EMIS ஆன்லைனில் பதிவு செய்யும் முறை 2/2

4c, அட்ரஸ்,பின்கோடு , நேட்டிவ் டிஸ்டிரிக்ட் , சரியானதை தேர்வு செய்யவும்.

4d, போட்டோ ஆன்லைனில் பதிவிட BROWSE என்ற பட்டனை அழுத்தி உங்கள் கணினியின் உரிய இடத்தில் உள்ள அந்த மாணவனின் புகைப்படத்தை 200 X 200 RESOLUTION, 50 KB க்கு குறைவாக உள்ள படத்தை பதிவேற்றவும்.
அப்லோடு ஆகிவிட்டால் சிறிய கட்டமும் (இந்த பிழை விரைவில் சரி செய்யப்படும் ) , அப்லோடு ஆகாவிட்டால் மாணவனை வரைந்தது போல் படமும் காணப்படும். இந்த 2 படங்களை வைத்து போட்டோ அப்லோடு ஆனதை உறுதி செய்யவும்.

4d, இதில் ரெகுலர் ப்ரசன்ட் , லாங் ஆப்சன்ட் இந்த இரண்டில் ஒன்றில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும் (நாட் அப்ளிகபுள் கிளிக் செய்யவேண்டாம்)

4d, போன் நம்பர் (இருந்தால் ) இரத்தவகை (இருந்தால் அல்லது பின்னர் அப்டேட் செய்யலாம்), உயரம் , எடை இவற்றில் சரியானதை பதிவிடவும்.

4d, இது அரசு உதவி பெறும் அல்லது சுயநிதி பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் (அரசு பள்ளிகள் --------- அல்லது நாட் அப்ளிகபுள் என பதிவிடவும்).

4d, அட்மிசன் நம்பர் பள்ளி சேர்க்கை பதிவேட்டில் இருந்து பார்த்து பதிவிடவும்.

4d,4e, பேங்க் , பேங்க் அக்கவுண்ட் நம்பர் , பேங்க் ஐஎப் எஸ் சி கோடு , இவை எவற்றையும் தொடவேண்டாம்.

4e, ஆதார் அட்டை தனியாக இந்த 1,2 வகுப்பு மாணவர்களுக்கு இருக்காது (கைரேகை சரியாக இல்லாமல் இருப்பதால வழங்கப்பட்டிருக்காது) எனவே இதையும் தொடவேண்டாம்)

4e, ஸ்போர்ட்ஸ் ப்ளேயர் என்பதில் இல்லை என்றே பதிவிடவும் (ஒன்றிய அளவில் 1,2 மாணவர் செல்ல வாய்ப்பு மிக மிக குறைவு)

4e, அகடமிக் இயர் 2014 - 2015 என பதிவிடவும்.

4e, பேமிலி டீட்டெய்லில் சகோதரன் ,சகோதரி விபரம் மட்டும் பதிவிடவும்.(add row என கிளிக் செய்து, எத்தனை தேவையோ அத்தனை row மட்டும், தேவையற்ற rows டெலிட் செய்யவும்)

நிறைவாக CREATE பட்டனை கிளிக் செய்யவும். உடனே அது பதிவாகி EMPTY(காலி) FORM அடுத்த பதிவிற்கு தயாராக தோன்றும். மேற்கண்ட முறைப்படி அடுத்த மாணவன் விபரம் பதிவிடலாம்..

சில டிப்ஸ்

1, சில வேளைகளில் கிரியேட் பட்டனை கிளிக் செய்தால் கிளிக் ஆகாமல் அதே மாணவனின் விபரம் தோன்றும். அப்போது விழிப்புடன் லாக் அவுட் செய்துவிட்டு, நாம் பயன்படுத்தும் ப்ரௌசரை(எக்ஸ்புளோரர், மொசில்லா,கூகுள் கொரோம்) WEB HISTORY,COOKIES, CATCHES ஆகியவற்றை CLEAR செய்துவிட்டு மாற்று ப்ரௌசரை (எ.கா : மொசில்லா பயன்படுத்தியவர் கூகுள் குரோமை) பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.
              முக்கியமாக சைல்ட் டீடெய்லில் அந்த மாணவனின் விபரம் ஏறியிருக்கிறதா என உறுதி செய்துவிட்டு ,ஏறாவிட்டால் மட்டுமே திரும்ப பதிவிட வேண்டும்(இல்லையேல் டபுள் என்ட்ரி ஆகிவிடும்)

பெஸ்ட் ஆப் லக்!! ஆங்கிலத்தை தமிழில் மொழி பெயர்க்காமல் அப்படியே குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்(ஏனெனில் படிவம் ஆங்கிலத்தில் இருப்பதால் தான் சாரி!!!)

2, அடுத்து 404 ERROR , 503 ERROR , WEB SERVICE ERROR போன்ற ERROR  MASSAGES வந்தால் நான் முன்பு குறிப்பிட்டது போல் நாம் பயன்படுத்தும் ப்ரௌசரை(எக்ஸ்புளோரர், மொசில்லா,கூகுள் கொரோம்) WEB HISTORY,COOKIES, CATCHES ஆகியவற்றை CLEAR செய்துவிட்டு மாற்று ப்ரௌசரை (எ.கா : மொசில்லா பயன்படுத்தியவர் கூகுள் குரோமை) பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.மீண்டும் மீண்டும்

Internal Server Error
  வந்தால் லாக் அவுட் பண்ணிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து லாக் இன் செய்யவும்!!!

EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை 1/2

emis online website address   :click here www.emis.tnschools.gov.in

1, முதலில் மேலே கண்ட படத்தின்படி லாக் இன் பக்கத்திற்கு வந்து உங்கள் யூசர் நேம் பாஸ்வேர்டு எண்டர் செய்து லாக்
இன் செய்யவும்.

2, மேலே கண்ட படத்தின்படி ஸ்டூடண்ட் (சிறுவன் படம்) லோகோவை கிளிக் செய்யவும்.

3, தற்போது உங்களுக்கு மேலே உள்ள படம் தோன்றும். அதில் கிரியேட் சைல்டு டீடெய்ல்ஸ் என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.

4a, தற்போது மேலே உள்ள பக்கம் தோன்றும் (விளக்கம் தெரிவிக்க 4 ம் கலம்

( 4a,4b,4c,4d,4e) என பிரிக்கப்பட்டுள்ளது. 4a வில் தோன்றும் விபரங்களைக் கீழே காண்போம்.

            முதலில் மாணவனின் பெயரை ஆங்கிலத்தில் பதிவிடவும். இனிசியல் அடுத்து வரவேண்டும்.
எ.கா : MAHALINGAM . S

4அ1 அடுத்து மாணவனின் பெயரை தமிழில் பதிவிட யுனிகோட் எழுதியில் எழுதுவது போல் டைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்தவும். அது கீழே உள்ள படம் போல் பட்டியலிடும் அதில் சரியானதை கிளிக் செய்யவும்.

                  






4a, பிறந்த தேதி DD/MM/YYYY முறையில் பதிவிடவும்.

4a, ஆண் ,பெண் பதிவு செய்யவும்.

4a, வகுப்பு ஒன்று , இரண்டாம் வகுப்பு மட்டும் தோன்றும் அதில் சரியான வகுப்பை கிளிக் செய்யவும்.

4a, செக்சன்  இருந்தால் குறிப்பிடவும் இல்லாவிட்டால் தேவை இல்லை.
எ.கா : 1 A

4a, மீடியம் தமிழ், அல்லது ஆங்கிலம் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.

4a, குரூப் கோடு என்பது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குரியது. எனவே -------- என குறிக்கவும்.
             4b, தேசியம் : இந்தியன், மற்றவை,விரும்பவில்லை , மதம் : இந்து , கிறிஸ்துவம்,முஸ்லீம் , விரும்பவில்லை. இவற்றில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.

4b, கம்யூனிட்டி இதில் எம்,பி.சி , எஸ்.சி அதர்ஸ், எஸ்.சி அருந்ததியர், பி.சி அதர்ஸ் ,பி.சி முஸ்லீம் , விரும்பவில்லை,  இவற்றில் சரியான ஒன்றை பதிவிடவும்.

4b, கம்யூனிட்டி சர்டிபிகேட் அந்த மாணவனுக்கு தனியாக வருவாய் துறையால்  வழங்கப்பட்டிருந்தால் (பெரும்பாலும் 3 ஆம் வகுப்புக்கு மேல்தான் வழங்கப்பட்டிருக்கும்) ஆம் என குறியிடவும். இங்கு 1,2 வகுப்பு என்பதால் இல்லை என்பதே சரியாக வரும்.

4b, ஜாதி இதில் கம்யூனிட்டி எதை தேர்வு செய்தோமோ அதைப்பொறுத்து பட்டியல் டிஸ்ப்ளே ஆகும் அதில் சரியானதை பதிவிடவும்.
குறிப்பு : சில கம்யூனீட்டிக்கு சப் கேஸ்ட் பட்டியல் வராமலிருக்கும், அதை EMIS தலைமையகத்துக்கு தெரிவித்து விட்டோம் ,சரி செய்து விடுவார்கள். எ.கா : எம்.பி.சி கம்யூனிட்டி க்கு சப்கேஸ்ட் பட்டியல் விடுபட்டிருக்கும். அது விரைவில் சரி செய்யப்படும். இப்போதைக்கு சப் கேஸ்ட் பாக்ஸில் --------- என்று குறியிட்டுவிட்டு அந்த மாணவனின் படிவத்தில் (  DATA CAPTURE FORM   ) சப் கேஸ்ட் திருத்தப்படவேண்டும் என குறித்து வைக்கவும் (நினைவுக்காக).

4,b, தாய்மொழி சரியானதைத் தேர்வு செய்யவும்.

4b, தாயார் பெயர் ஆங்கிலத்தில் பதிவிடவும்.

4b, தாயார் வேலை விபரம் சரியானதை பதிவிடவும்.











4c, தாயார் மாத வருமானம் எவ்வளவோ அதைக்குறிப்பிடவும். ( வேலை விபரத்தில் ------ எனக்குறிபிட்டிருந்தால் கண்டிப்பாக மாத வருமானம் பகுதியில் 0 அல்லது -- எனப்பதியவும்)

4c, தந்தை/பாதுகாவலர் பெயர் குறிப்பிடவும்.

4c, தந்தை வேலை விபரம் , மாதவருமானம் குறிப்பிடவும் ( விளக்கம் தாயாருக்கு உள்ளதே இதற்கும் பொருந்தும்)

4c, மாற்று திறனாளி எனில் ஆம், இல்லாவிடில் இல்லை. என பதிவிடவும்.

4c, மாற்றுத் திறனாளி ஆம் எனில் புதிதாக ஒரு பாக்ஸ் தோன்றும். அதில் சரியானதை பதிவிடவும் (விளக்கம் அவனுடைய மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டையில் அறியவும்)

4c, DISADVANTAGED மாணவன் என்றால் ஆம் , இல்லையேல் இல்லை என பதிவிடவும். ஆம் எனில் ஒரு பாக்ஸ் தோன்றும் அதில்  எது சரியோ அதை பதிவிடவும் . மல்டி (பல) எனில் எ.கா : அனாதையான எய்ட்ஸ் நோய் மாணவன்) எனில் கண்ட்ரோல் கீயை அழுத்திக்கொண்டே மல்டி செலக்சன் செய்யவும்.

4c, STUDENT STATUS இதில் மூன்று  விபரம் இருக்கும் (--------- இட  தேவையில்லை ) முதலில் உள்ளது FORMAL SCHOOL , இது பெரும்பாலும் உள்ள மாணவனுக்கு உரியது. அடுத்து ENROLLED UNDER SPECIAL TRAINING , இது கட்டாய கல்வி சட்டப்படி அந்த பள்ளியில் அட்மிசன் ஆகி , HOME BASED ஆகவோ அல்லது SSA நடத்தும் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளி மாணவனுக்கு உரியது. மூன்றாவது MAINSTREAMED UNDER SPECIAL TRAINING , இது கட்டாயக்கல்வி சட்டப்படி அட்மிசன் நம்பர் அந்த பள்ளியில் இருந்து , SPECIAL TRAINING ல்  இருந்து நலம் பெற்று (இனி பயிற்சி தேவையில்லை) FORMAL SCHOOL ல் தொடர்ந்தால் மூன்றாவதை தேர்வு செய்யவும்(அரசு புள்ளி விபரத்திற்காகவே இந்த 3ம் பிரிவு)

Tuesday, November 11, 2014

பாரத சுகாதார திட்டம்: மாணவிகளுக்கான கழிப்பறை கட்ட ரூ.57 லட்சம் ஒதுக்கீடு


      பாரத சுகாதார திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 163 பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை கட்ட 57 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், பாரத சுகாதார திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், ஊரக முகமை அதிகாரிகள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் ஒவ்வொரு பள்ளிகளாக ஆய்வு செய்து, தேவையான இடங்களில் மாணவிகளுக்கு தனி கழிவறை கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை ஆய்வு செய்ய நான்கு குழுக்குள் அமைக்கப்பட்டன. இக்குழுவினர் கடந்த மாதம் முழுவதும் மாவட்டத்தில் உள்ள 1,300 பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை ஆய்வு செய்தனர். அதில் பல பள்ளிகளில் ஒரே வளாகத்தில் கட்டியுள்ள கழிப்பறையில் நடுவில் தடுப்பு சுவர் அமைத்து ஒரு பகுதியை மாணவிகளும், மறு பகுதியை மாணவர்களும் பயன்படுத்தி வந்தனர். நான்கு குழுவின் ஆய்வு முடிவில் மாவட்டத்தில் 163 பள்ளிகளில் மாணவிகளுக்கு தனியாக கழிவறை கட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 163 பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தனி கழிப்பறை கட்டுவதற்காக ஊரக முகமை நிதியிலிருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 35 ஆயிரம் ரூபாய் வீதம் 57 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனையொட்டி விரைவில் கட்டுமானப் பணி துவங்கப்பட உள்ளது. மேலும் பள்ளிக் கழிவறைகளை பராமரிக்க ஊராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள், கூடுதலாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.