இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, September 24, 2014

ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு, தனி நீதிபதி பிறப்பித்த இடைக்காலத் தடையை உயர் நீதிமன்ற அமர்வு புதன்கிழமை நீக்கியது.

   
     தமிழகத்தில் இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் முறையில் மதிப்பெண்கள் வழங்குவதை எதிர்த்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 14 பேர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தகுதிகாண் முறைக்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த செப்.4-இல் உத்தரவிட்டார். இந்தத் தடையை நீக்கக் கோரி அரசு சார்பில் பள்ளிக் கல்வித் துறை செயலர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரிக்கப்பட்டது. அப்போது அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி, தகுதிகாண் முறை சரியானதல்ல என தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால், சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தகுதிகாண் முறை சரியானதுதான் என உத்தரவிட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு செல்லுபடியாகும் தன்மை குறித்த கேள்வி எழுவதால், தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு


2014-15 ஆம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 11 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதற்கு அடுத்து திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் 8 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

மாவட்ட வாரியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை விவரம்:

அரியலூர் -3, கோவை-2, கடலூர்-2, தருமபுரி -3, திண்டுக்கல்-2, ஈரோடு-2, காஞ்சிபுரம் - 6, கன்னியாகுமரி-1, கரூர்-2, கிருஷ்ணகிரி -4, மதுரை -3, நாகப்பட்டினம்-2, நாமக்கல்-2, பெரம்பலூர்-2, புதுக்கோட்டை -5, ராமநாதபுரம்-3, சேலம்-4, சிவகங்கை-3, தஞ்சாவூர்-2, தேனி-2, திருவண்ணாமலை-6, திருநெல்வேலி-2, திருப்பூர்-1, திருவள்ளூர்-8, திருவாரூ-1, திருச்சி-2, தூத்துக்குடி-2, வேலூர்-11, விழுப்புரம்- 8, விருதுநகர் -4.

வரவேற்பு: உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தும் அறிவிப்பை தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் வரவேற்றுள்ளது. அதேநேரத்தில், ஏற்கெனவே அறிவித்தவாறு 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்று அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திய பள்ளிகளின் பட்டியல் வெளியீடு- tnkalvi


100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 29 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
*அரியலூரில் 3,
*கோவையில் 2, 
*கடலூரில் 2, 

*தருமபுரியில் 3, 
*திண்டுக்கல்லில் 2,
*விருதுநகர் மாவட்டத்தில் முத்தூர், விஸ்வனத்தம், உள்ளுர்பட்டி, பிள்ளையார்நத்தம், 
*மதுரை மாவட்டத்தில் அய்யங்கோட்டை, எம்.சுபலப்புரம், மேலக்கோட்டை,
*சிவகங்கை மாவட்டத்தில் பெரியகரை, முசுண்டம்பட்டி, சாத்தனூர்   உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற மாவட்ட பள்ளிகள் பட்டியல் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அலுவலக பணிகளில் ஆசிரியரை ஈடுப்படுத்தக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் அவர்கள் விடுத்த பேட்டியில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள வழக்கு எண். W.P.NO.28785/2012 . உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் (ஆசிரியர்களை) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்களை பல்வேறு பணிகள் செய்ய பயன்படுத்துகிறார்கள். அதில் சம்பள பட்டியல் தயாரிக்கும் பணிகளில்  (ECS) ஈடுப்படுத்துவதால் ஆசிரியர் கற்பித்தல் பணி பாதித்து மாணவர்கள் தேர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுகிறது

. தமிழகம் முழுவதும் இதே நிலை உள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டை வட்டாரத்தில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்பட்டது. இதற்கு சென்னை உயர் நீதிமன்ரத்தின் நீதியரசர் திருமதி. உஷா பரந்தாமன் வழங்கிய தீர்ப்பில் ஆசிரியர்களை பல்வேறுபட்ட பணிகளுக்கு ஈடுப்படுத்தக்கூடாது "குறிப்பாக சம்பளம் பட்டியல் தயாரிக்கும் பணியில் (ECS) ஈடுபடுத்திடகூடாது, என்றும் அப்படி ஈடுபடுத்தினால் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது பாதிப்படையும் என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

FLASH NEWS : ஆசிரியர் பணி நியமனத்துக்கு விலகியது தடை

 
ஆசிரியர் பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை  மதுரை உயர்நீதிமன்றம் நீக்கியது .... இன்று வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது.... ஆசிரியர் பணி நியமனதிர்க்கான அணைத்து தடையினையும் விலக்கிகொள்வதாக நீதிபதி அறிவித்தார்... இதன் மூலம் ஆசிரியர் பணி நியமனம் விரைவில் நடைபெறும் ...   ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையயை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுவை விசாரித்த தனிநீதிபதி, ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத்தடை விதித்தார். தனிநீதிபதியின் உத்தரவிற்கு எதிராக, சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில், தமிழக அரசு சார்பி்ல், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி, இடைக்காலத்தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார் ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையயை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுவை விசாரித்ததனிநீதிபதி, ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத்தடை விதித்தார்.

தனிநீதிபதியின் உத்தரவிற்கு எதிராக, சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில், தமிழக அரசு சார்பி்ல், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி, இடைக்காலத்தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனால் தேர்வான ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்கான தடை விலகியது.மேலும் ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு பணிநியமனம ஆணை பற்றிய அறிவிப்பையும்,பணியில் எப்போது சேரவேண்டும் என்ற அறிவிப்பையும் அரசு விரைந்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, September 23, 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறை அமல்  

''மத்திய ஊழியர்களுக்கு, இந்த மாத இறுதிக்குள், 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறை, முழு அளவில் அமலாகும்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் ராம் சேவக் சர்மா கூறினார். டில்லியில் நேற்று அவர் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஆதார் அடிப்படையிலான, பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையானது, இந்த மாத இறுதிக்குள் முழு அளவில் செயல்பாட்டிற்கு வரும். அதனால், இனி, தங்களின் வருகைப் பதிவு விபரங்களை, attendence.gov.in என்ற இணையதளம் மூலமாக, மத்திய அரசு ஊழியர்கள் பார்க்கலாம். மையப்படுத்தப்பட்ட மேலாண்மை முறை மூலம், இந்த வருகைப்பதிவு கையாளப்படும். மத்திய அரசு ஊழியர்கள், தங்களின் அலுவலகங்களில் உள்ள, பயோமெட்ரிக் கருவியில், தங்களின் விரல் ரேகையை பதிவு செய்து, தங்களின் அலுவலக வருகையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இதன்மூலம், ஊழியர்கள் சரியான நேரத்திற்கும், ஒழுங்காகவும் பணிக்கு வருகின்றனரா என்பதை அறிந்து கொள்ளலாம்.தற்போது, பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில், 1,816 பயோ மெட்ரிக் கருவிகள் செயல் பாட்டில் உள்ளன. இவற்றின் மூலம், 43 ஆயிரம் பேர், தங்களின் வருகையை பதிவு செய்கின்றனர்.இவ்வாறு, ராம்சேவக் வர்மா கூறினார்.

மின் கட்டணத்தை 15% உயர்த்த ஆணையம் தன்னிச்சையாக முடிவு

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வருவாய்க்கும், செலவுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையாக நிகழாண்டுக்கான (2014-15) உத்தேச மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

இதன்படி, வீடுகளுக்கு, தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் முன்பைவிட 15 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், மின் பயன்பாட்டு கட்டணத்துடன் வசூலிக்கப்படும் நிரந்தர கட்டணமும் முன்பைவிட ரூ. 10 முதல் 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு குறித்து கருத்துக்கள், ஆலோசனைகளை நுகர்வோர், தொழில் நிறுவனங்களிடமிருந்து ஒழுங்குமுறை ஆணையம் வரவேற்றுள்ளது.

உத்தேச மின் கட்டண உயர்வு விவரம் (யுனிட் ஒன்றுக்கு இரண்டு மாத பயன்பாட்டுக்கான கட்டணம்):

தாழ்வழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் வீடுகள், கோயில்கள், குறு நிறுவனங்களுக்கான கட்டண உயர்வு விவரம்:

வீடுகளுக்கு யூனிட் உத்தேச உயர்வுக் கட்டணம் (தற்போதையக் கட்டணம்): 0-100 வரையில் ஒரு யூனிட்டுக்கு ரூ. 3 (ரூ.2.60); 0-200 ரூ. 3.25 (ரூ. 2.80); , 201-500 யூனிட்டுகளில் 0 முதல் 200 வரை தனியாகவும், 201 முதல் 500 வரை தனியாகவும் கணக்கிட்டு வசூலிக்கப்படும்.

0-200 ரூ. 3.50 (ரூ.3); 201-500 ரூ. 4.60 (ரூ. 4); , 501 யூனிட்டுக்கு மேல் 0-200, 201-500, 501-க்கு மேல் என்ற அடிப்படையில் தனித்தனியாக கணக்கிடப்படும். 0-200 ரூ.3.50 (ரூ.30); 201-500 ரூ. 4.60 (ரூ. 4); 501-க்கு மேல் ரூ. 6.60 (ரூ.5.75).

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்- ஒரு யூனிட் ரூ.5.75 (ரூ. 5). தனியார் கல்வி நிறுவனங்கள் ஒரு யூனிட் ரூ. 7.50 (ரூ. 6.50). கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள்-ஒரு யூனிட் ரூ. 5.75 (ரூ. 5 ).

காட்டேஜ்கள், குறு நிறுவனங்கள்: 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட் ரூ. 4 (ரூ. 3.50); 500 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட் ரூ. 4.60 (ரூ. 4). விசைத்தறி நிறுவனங்கள்- 2 மாதங்களுக்கு 0-500 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட் ரூ. 5.20 (ரூ. 4); 501-1000 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட் ரூ. 5.75 (ரூ. 5).

தொழில் நிறுவனங்கள்- ஒரு யூனிட் ரூ. 7.22 (ரூ. 5.50).

வர்த்தக ரீதியிலான மின் பயன்பாடு-2 மாதங்களுக்கு 100 யூனிட் வரை ஒரு யூனிட் ரூ. 4.95 (ரூ. 4.30); 100 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட் ரூ. 8.05 (ரூ. 7).

கட்டுமானம் போன்ற தாற்காலிக மின் இணைப்புகள்: ஒரு யூனிட் ரூ. 12.10 (ரூ. 10.50).

குடிசை வீடுகள், விவசாய பயன்பாட்டுக்கான மின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ள போதிலும், அவற்றுக்கான மின் பயன்பாட்டு கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொண்டு, மானியமாக மின் வாரியத்துக்கு அளித்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் அழுத்த பயன்பாட்டு உத்தேச உயர்வுக் கட்டணம் (தற்போதையக் கட்டணம்): தொழில் நிறுவனங்கள்: ரூ. 7.22 (ரூ. 5.50); ரயில்வே- ரூ. 7.22 (ரூ. 5.50); அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்- ரூ. 7.22 (ரூ. 4.50); தனியார் கல்வி நிறுவனங்கள் ரூ. 7.22 (ரூ. 5.50); வர்த்தக பயன்பாடு- ரூ. 8.05 (ரூ. 7); தாற்காலிக பயன்பாடு ரூ.11 (ரூ. 9).

மின் வாரியத்துக்கு ரூ. 6,854 கோடி இழப்பு

தமிழ்நாடு மின் வாரியத்துக்கு 2014-15 ஆம் ஆண்டுக்கான வருவாய் தேவை ரூ. 39,818 கோடியாகும்.

ஆனால், மின் வாரியத்தின் வருவாய் ரூ. 32,964 கோடி அளவிலேயே உள்ளது. இதனால் ரூ. 6,854 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச உயர்வுக் கட்டணம் மூலம், மின் வாரியத்துக்கு ரூ. 6,805 கோடி அளவுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

எனினும், மின் வாரியத்துக்கு நிகழாண்டில் ரூ. 49 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆய்வக உதவியாளர்கள் விரைவில் நியமனம்

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு, இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தற்போது அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்வதற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் தலைமையில், மாவட்ட கல்வி அதிகாரி, அரசு மேல்நிலைப்பள்ளி மூத்த தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ஆகியோரைக் கொண்ட குழுவை செப்.,30க்குள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் சராசரியாக 80 முதல் 100 வரை ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசு ஒப்புதலுக்குப்பின் நியமிக்கப்படுவர்' என்றார்.

C.P.S-கணக்குத்தாள்கள்-2009-10-முதல் 2012-2013 வரை தயார்-விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு

உராட்சிஒன்றிய /நிதியுதவி/நகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் C.P.S-கணக்குத்தாள்கள்-2009-10-முதல் 2012-2013 வரை மாவட்ட கருவூல அலுவலர்  அவர்களுக்கும் ,சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன
விரைவில் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பெற்று சம்மந்தப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும்-

https://app.box.com/s/eau5hhktrjiatzomy2ds

28-09-2014 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறவுள்ள ஊரக திறனாய்வுத் தேர்விற்கு மாணவர்களின் தேர்வு நுழைவுச் சீட்டினை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஊரக திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பித்த தலைமை ஆசிரியர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Monday, September 22, 2014

தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) முறையின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


    இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2010-ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்களாகப் பணி நியமனம் கோருவோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்களுக்காக முதல் தாள் தேர்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்காக இரண்டாம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைத் தகுதிகாண் மதிப்பெண் முறையில் அடிப்படையில் பணி நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. அதாவது, இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு பிளஸ் 2 (15), ஆசிரியர் பட்டயப் படிப்பு (25), ஆசிரியர் தகுதித் தேர்வு (60) ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதிகாண் மதிப்பெண் வழங்கப்பட்டது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 (10), பட்டப் படிப்பு (15), பி.எட். (15), ஆசிரியர் தகுதித் தேர்வு (60) மதிப்பெண்களுக்கு தகுதிகாண் மதிப்பெண் வழங்கப்பட்டது. மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, இந்த தகுதிகாண் மதிப்பீடுகளைக் கணக்கிடும்போது -ஸ்லாப்- முறை பின்பற்றப்பட்டது இதை மாற்றி ஒவ்வொரு மதிப்பெண் சதவீதத்துக்கும் தகுதிகாண் மதிப்பெண் முறையை கணக்கிடும் வகையில் இந்த முறையை மாற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.  அதைப் பின்பற்றி கடந்த மே மாதம், தமிழக அரசு புதிய அரசாணையும் வெளியிட்டது. இந்தப் புதிய தகுதிகாண் மதிப்பெண் முறையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் 10 ஆயிரம் பேர், இடைநிலை ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தகுதிகாண் மதிப்பெண் முறை தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவு, தமிழக அரசின் அரசாணை ஆகியவற்றை எதிர்த்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 90-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த தகுதிகாண் மதிப்பெண் முறை காரணமாக தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரினர். இந்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு: தகுதிகாண் மதிப்பெண் முறை தொடர்பாக தனி நீதிபதி பரிந்துரை செய்த முறையில் எந்தக் குறைபாட்டையும் இந்த நீதிமன்றம் கண்டறியவில்லை. மேலும், வேறு முறையையும் தமிழக அரசு பின்பற்றலாம் என தனி நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். தன்னிச்சையாகவும், நியாயமில்லாமலும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது என்பதற்கான எந்த ஆதாரங்களையும் மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

மேலும், வழக்கு விசாரணையின்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதை எதிர்த்தும் வாதிடப்பட்டது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் விதிமுறைப்படியே, தமிழக அரசு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஐந்து சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவு. இந்த உத்தரவு தன்னிச்சையாகவோ, உரிய காரணங்கள் இன்றியோ பிறப்பிக்கப்பட்டால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். இந்த வழக்குகளின் ஆவணங்களைப் பார்த்த பிறகு, அரசின் முடிவில் தலையிடுவதற்கான எந்தக் காரணங்களும் நீதிமன்றத்துக்கு இல்லை. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

காலாண்டு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் மாற்றம

:பிளஸ் 2 மற்றும் ௧௦ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை, பொதுத்தேர்வு பாணியில், வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பி, மதிப்பீடு செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து, அரசுப் பள்ளி ஆசிரியர் சிலர் கூறியதாவது:வழக்கமாக, காலாண்டுத் தேர்வு, பொதுத்தேர்வு பாணியில் நடக்கும். ஆனால், விடைத்தாள் திருத்தும் பணி, அந்தந்த பள்ளியிலேயே நடக்கும். இந்த ஆண்டு, ஒரு பள்ளியின் விடைத்தாளை, அருகில் உள்ள வேறொரு பள்ளிக்கு அனுப்பி, மதிப்பீடு செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது

.அனைத்துப் பள்ளிகளின் விடைத்தாள்களும், மாவட்டத்திற்குள் உள்ள, வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்படும். இதனால், மதிப்பீடு, சரியான முறையில் இருக்கும் என, கல்வித் துறை கருதுகிறது.இதற்கு, வெவ்வேறு பள்ளி ஆசிரியரை, தேர்வுப் பணியில் ஈடுபடுத்தி இருக்க வேண்டும். பொதுத்தேர்வில், ஒரு பள்ளியின் ஆசிரியர், அதே பள்ளியில், பணியில் இருக்க மாட்டார். வேறொரு பள்ளிக்கு அனுப்பப்படுவார். தற்போது, அதுபோல் நடக்கவில்லை.

இதனால், 'தம் பள்ளி மாணவரின் விடைத்தாளை, வேறொரு பள்ளி ஆசிரியர், கடுமையான முறையில் திருத்தி, மதிப்பெண்ணை குறைத்துவிட்டால், அதிகாரிகள் 'அர்ச்சனைக்கு' ஆளாவோம்' என, ஒரு பள்ளியின் ஆசிரியர் நினைக்கலாம். இதனால், ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு, ஆசிரியரே, விடையை கூறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.இதுபோன்ற பிரச்னைகளையும் சரி செய்தால், அனைத்துப் பணிகளும், பொதுத்தேர்வு போன்று நடக்கும். இதனால், தேர்ச்சி எந்த அளவிற்கு இருக்கும் என்பதையும், ஓரளவு அறிய முடியும். இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.இரு வகுப்பு தேர்வுகளும், ஏற்கனவே துவங்கி, பல தேர்வுகள் முடிந்து விட்டன. மீதமுள்ள சில தேர்வுகள், வரும் 26ம் தேதி வரை நடக்கிறது என்பது, குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்களுக்கான முக்கிய படிவங்கள்

TNTET - நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது - உயர்நீதிமன்றம்

TNTET - நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது - உயர்நீதிமன்றம் - TET பணிநியம தடை நீங்கியது TET வெயிட்டேஜ் தொடர்பாக தொடாரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் பணிநியமனத்திற்கு ஏற்பட்ட தடையும் விலகுகிறது.விரைவில் அனைவரும் பணியில் சேர்வதற்கான ஆணையினை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Annamalai University May 2014 results

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் தள்ளுபடி

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன் அவர்கள் பிளஸ்-2, பட்டப்படிப்பு, பி.எட், ஆசிரியர் பயிற்சி படிப்பு போன்றவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தற்போது பணி நியமனம் நடைபெறுகிறது.

இந்த வெயிட்டேஜ் முறைக்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் வெயிட்டேஜ் முறை, 5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. 45- க்கும் மேற்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டது.

நிபந்தனைகளை ஏற்று தகுதித்தேர்வு எழுதிவிட்டு தற்போது எதிர்ப்பதை ஏற்க முடியாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் மூலம் ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குகிறது

பயனுள்ள இணையதள முகவரிகள்!!!


1. ஆன்லைன் -ல் புகைப்படங்களை அழகாக வெட்டித்தரும் பயனுள்ள தளம். HTTP://WWW.CUTMYPIC.COM/
2. வீடியோ விளக்கத்தோடு அசத்தும் இணைய அகராதி.
HTTP://WWW.WORDIA.COM/
3. தமிழில் கணினி செய்திகள்
HTTP://TAMILCOMPUTERTIPS.BLOGSPOT.COM/
4. உங்கள் போடோவை ஓவியமாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்
HTTP://WWW.FOTOSKETCHER.COM/PORTABLEFOTOSKETCHER.EXE
5. அனைத்து அரிய வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம்.
http://yttm.tv/
6. ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளம்.
http://classbites.com/
7. தேடல் முடிவுகளை வகை வாரியாக பிரித்து கொடுக்கும் மிகவும் பயனுள்ள தளம்.
http://www.helioid.com
8. தொலைக்காட்சியில் இருந்து வீடியோ பயனுள்ள தளம்.
HTTP://WWW.8ON.TV
9. குழந்தைகள் விரும்பும் கார்டூன் முதல் அத்தனை டி.வி நிகழ்சிகளும் ஒரே இடத்தில் பார்க்க
HTTP://VIDEO.KIDZUI.COM
10. வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் இலவச மென்பொருள்.
HTTP://WWW.LIGHTWORKSBETA.COM
11. பிறந்தநாள் வாழ்த்து செய்திகளை கொடுக்கும் பிரத்யேகமான தளம்.
HTTP://WWW.FREEBIRTHDAYMESSAGES.COM
12. வலைப்பூவுக்கு அழகான பேக்ரவுண்ட் வடிவமைக்க.
HTTP://BGMAKER.VENTDAVAL.COM
13. வீடியோ மெயில்ஆன்லைன் மூலம் இலவசமாக அனுப்ப.
HTTP://MAILVU.COM
via http://vienarcud.blogspot.com/2011/09/blog-post_5975.html