இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, September 11, 2014

அரசுப் பள்ளிகளின் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 49 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளத

ு.

இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை புதன்கிழமை பிறப்பித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர் அளவிலான மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் என 120-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. இதில் 60-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்தப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு தேர்வுப் பட்டியலில் இருந்த தலைமையாசிரியர்களுக்கு ஆகஸ்ட் இறுதியில் மாவட்டக் கல்வி அலுவலர் பயிற்சியும் வழங்கப்பட்டது.

ஆனால், தலைமையாசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்குவதில் காலதாமதம் ஆவதாகப் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், பதவி உயர்வுக்கான தேர்வுப் பட்டியலில் இருந்த உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 49 பேருக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

பதவி உயர்வு பெற்ற காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை

1. கே.பாஸ்கர் ராவ்    அரசு உயர்நிலைப் பள்ளி, முருக்கம்பட்டி, திருவள்ளூர் மாவட்டம்    மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், சென்னை.

2. எம்.ஜி. கந்தசாமி    (அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, அத்திமாஞ்சேரிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம்)    மாவட்டக் கல்வி அலுவலர், தென் சென்னை.

3. ஆர்.சுரேஷாதேவி    அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஏகனாம்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம்    உதவி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை.

4. தி.மலர்விழி    அரசு மேல்நிலைப் பள்ளி, சோமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம்    மாவட்டக் கல்வி அலுவலர், திருவள்ளூர்.

5. பி.ராஜகோபால்    அரசு உயர்நிலைப் பள்ளி, மாகாண்யம், காஞ்சிபுரம் மாவட்டம்    மாவட்டக் கல்வி அலுவலர், வடசென்னை.

6. பி.ஆர்.விஜயலட்சுமி    அரசு உயர்நிலைப் பள்ளி, ஏமப்பூர், விழுப்புரம் மாவட்டம்    மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், காஞ்சிபுரம்.

7. க.நாகராஜ்    மாகாண மகளிர் மேல்நிலைப் பள்ளி, எழும்பூர்     மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை (கிழக்கு).

8. இ.அருள்பிரகாசம்    அரசு உயர்நிலைப் பள்ளி, சி.அரசூர் அஞ்சல், கடலூர் மாவட்டம்    மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை.

Bharathidasan University, M.ed selection list

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக்.15 முதல் விண்ணப்பிக்கலாம்!


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக்டோபர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் ஜனவரி 1ஆம் தேதி 18 வயது பூர்த்தி அடைபவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இதற்காக அக்டோபர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதும் ஜனவரி 5ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

புதிதாக விண்ணப்பிக்கும் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கப்படும். கடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதிதாக சேர்க்கப்பட்ட 12 லட்சம் வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வந்தது. அந்த பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. இந்த மாத இறுதியில் இவர்களுக்கு வண்ண அட்டைகள் வழங்கப்படும். வண்ண அடையாள அட்டை வழங்கும் பணிக்காக சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி என 5 மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க ஏற்கனவே 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்களின் பெயர் இடம் பெற மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். ஒரு வாக்காளருக்கு 2 இடங்களில் பெயர் இருந்தால் அதை கண்டுபிடித்து நீக்குவதற்காக புதிய சாப்ட்வேர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நபருக்கு ஒரு இடத்தில் தான் பெயர் இருக்கும். தேர்தல் அதிகாரிகளுக்கு 2வது கட்ட பயிற்சி வகுப்பு அடுத்த வாரம் தொடங்கும். இவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று தங்களுக்கு கீழ் உள்ள மற்ற அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பார்கள்” என்று கூறினார்.

Wednesday, September 10, 2014

ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை புதிய முறையில் வினாத்தாள்கள்


ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய முறையில் வினாத்தாள்களை வடிவமைப்பது தொடர்பாக, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் சார்பில், பயிலரங்கம் சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. முதல் கட்டமாக, தமிழ் மொழியில் திறனைச் சோதிக்கும் வகையிலான புதுமையான கேள்விகளைக் கேட்பது தொடர்பாக, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த விரிவுரையாளர்கள் மூலம், ஆசிரியர் பயிற்சிப் பட்டயப் படிப்பில் சேரும் மாணவர்கள், புத்தாக்கப் பயிற்சிக்கு வரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோருக்கு புதிய முறையில் வினாத்தாள்களை வடிவமைப்பது தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் பாட ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். மைசூரில் உள்ள இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் எல்.ராமமூர்த்தி, தமிழ் மொழியில் புதுமையான கேள்விகளை வடிவமைப்பது தொடர்பாக விரிவுரையாளர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

இந்தப் பயிற்சி தொடர்பாக அவர் கூறியது: தமிழ் மொழி வினாத்தாள்களில் இலக்கியம் சார்ந்த கருத்துகளைச் சோதிக்கும் கேள்விகளே அதிகம் இடம்பெறுகின்றன. மாறாக, பேசுதல், எழுதுதல் ஆகிய மொழித்திறன்களைச் சோதிக்கும் வகையிலான கேள்விகள் வினாத்தாளில் இடம்பெற வேண்டும். அந்த மொழியறிவுத் திறனை மாணவர்களிடம் எப்படி வளர்க்கலாம் என்பது குறித்தும், இந்தத் திறன் தொடர்பான சரியான கேள்விகளை வடிவமைப்பது தொடர்பாகவும் விரிவுரையாளர்களுக்கு பயிற்சி அளிக்ககப்பட்டது என்றார் ராமமூர்த்தி. இப்போது, தமிழ் மொழி வினாத்தாளில் மாற்றம் செய்வதற்கான மூன்று நாள் பயிலரங்கம் நடத்தப்படுகிறது. விரைவில் பிற பாடங்களுக்கும் அந்தந்தத் துறை நிபுணர்களைக் கொண்டு வினாத்தாள் வடிவமைப்பை மாற்றுவதற்கான பயிலரங்குகள் நடத்தப்படும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வியில் பின்தங்கிய 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்


அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், கல்வியில் பின்தங்கிய 35 ஆயிரம் பேருக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அக்டோபர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை இந்தச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி வழங்க வேண்டும்.

இதன் காரணமாக, அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்புக்கு வரும் மாணவர்களில் பலர் அடிப்படை மொழியறிவு, கணித அறிவு கூட இல்லாமல் உள்ளனர். கல்வியில் பின்தங்கியுள்ள 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியது: இந்தச் சிறப்பு வகுப்புகளில் மாணவர்களுக்கு அடிப்படைக் கணிதம், தமிழ், ஆங்கில மொழித் திறன்கள், புரிந்து கொள்ளும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவது தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்படும். இதன்மூலம், மாணவர்கள் அனைவரும் அடிப்படைக் கற்றல் திறன்களைப் பெறுவதோடு, 10-ஆம் வகுப்பிலும் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி அதிகரிக்க உதவியாக இருக்கும்.

காலாண்டுத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, அந்தத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறும் 35 ஆயிரம் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும். இந்தச் சிறப்பு வகுப்புகள் தொடங்கப்படும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் இறுதி செய்யப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

எஸ்.எஸ்.ஏ., மானியம் செலவிடுவதில்' மாணவர்கள் கண்காணிக்கலாம்!


தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஒதுக்கப்படும் பள்ளி பராமரிப்பு மானியத்தை செலவிடுவதற்கு ஒப்புதல் வழங்கும் குழுவில், ஆசிரியர்கள், மாணவர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கற்றல், கற்பித்தல் தேவை அடிப்படையில் ஆண்டுதோறும் எஸ்.எஸ்.ஏ., திட்டம் சார்பில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் வழங்கப்படுகின்றன. பள்ளி மானியமாக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை ரூ.5 ஆயிரம், 6 முதல் 8 ம் வகுப்பு வரை ரூ. 7 ஆயிரம் வழங்கப்படும்.

பராமரிப்பு மானியம் என்பது பயன்பாட்டில் உள்ள வகுப்பறை எண்ணிக்கை அடிப்படையில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை ஒதுக்கப்படும். பராமரிப்பு மானியம் அரசு பள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்படும். கடந்தாண்டு வரை இம்மானியத்தை செலவிட, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கிராமக் கல்விக் குழு ஒப்புதல் போதுமானதாக இருந்தது. ஆனால், இந்தாண்டு முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர், மாணவர், அங்கன்வாடி பணியாளர் கொண்ட குழு ஏற்படுத்தி, இதன் ஒப்புதல் பெற்ற பின் தான், கிராமக் கல்விக் குழுவில் வைத்து அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இத்திட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியத்தை செலவிடுவதில் சில மாவட்டங்களில் வெளிப்படை தன்மை இல்லை என்ற சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூட்டத்தில், தலைமையாசிரியருடன், அந்த பள்ளி ஆசிரியர், மாணவர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களையும் குழுவில் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தாண்டு முதல் இக்குழுவும் ஒப்புதல் அளித்தால்தான் மானியத்தை செலவிட முடியும். நிதியை தவறாக பயன்படுத்த முடியாது, என்றார்.

Tuesday, September 09, 2014

அடுத்த மாதம் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தும் பணி தொடக்கம் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தகவல

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்காக மாவட்ட அதிகாரிகளுக்கு சென்னையில் நாளை (11–ந் தேதி) பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். வண்ண அடையாள அட்டைகள் இதுகுறித்து நிருபர்களுக்கு, பிரவீன்குமார் அளித்த பேட்டி வருமாறு:–

தமிழகத்தில் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 12 லட்சம் பேருக்கான வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. இந்தமாத இறுதியில் இவர்களுக்கு வண்ண அட்டைகள் வழங்கப்படும். வண்ண அடையாள அட்டை வழங்கும் பணிக்காக சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி என ஐந்து மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் முடிந்தபிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக சுமார் 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

திருத்தும் பணி தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத்திருத்தும் பணி, அடுத்தமாதம் அக்டோபரில் தொடங்குகின்றன. இந்த காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்துவது, முகவரி மாற்றம் போன்ற பல திருத்தங்களை செய்துகொள்ளலாம். வரும் ஜனவரி 1–ந் தேதியோடு 18 வயது பூர்த்தி அடைபவர்களும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாளை பயிற்சி வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடங்குவதற்கு முன்பு அந்தந்த மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி நாளை (11–ந் தேதி) சென்னையில் நடக்கிறது.

அதில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா இரண்டு அதிகாரிகள் பங்கேற்பார்கள். இந்தப் பயிற்சி எனது தலைமையில் நடத்தப்படும். பயிற்சியை பெற்றபிறகு அந்த அதிகாரிகள், தங்களுக்கு கீழ் உள்ள மற்ற அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து 16, 17, 20 ஆகிய தேதிகளில் பயிற்சி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

வங்கி எஸ்.எம்.எஸ்.,களுக்கு கட்டணம் : அக்., 1ம் தேதி முதல் அமல் dinamalar

வங்கிக் கணக்கு குறித்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ்.,க்கு அக்., 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும்' என வங்கிகள் அறிவித்துள்ளன. வங்கிகள் இந்த அறிவிப்பை, வாடிக்கையாளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவித்து உள்ளன. இதுநாள் வரை இலவச சேவையாக இந்த வசதி இருந்தது. தற்போது, கூடுதல் சேவை என்ற அடிப்படையில், ஒரு எஸ்.எம்.எஸ்.,க்கு சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு, 50 காசு வசூலிக்கப்படும். நடப்பு கணக்கு வைத்திருப்போரிடம், மூன்று மாதங்களுக்கு, 20 ரூபாய் வசூலிக்கப்படும் என, தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன.

பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு விதமான கட்டணத்தை நிர்ணயித்துள்ளன. எஸ்.எம்.எஸ்., என்ற அடிப்படையில் கணக்கிடாமல், எஸ்.எம்.எஸ்., சேவைக்கு, ஆண்டுக்கு, 100 ரூபாய் வசூலிக்கப்படும் என, கனரா வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. எஸ்.எம்.எஸ்., சேவை கட்டாயம் இல்லை. கூடுதல் சேவையாக இச் சேவையைப் பெற விரும்புவோர், பெற்றுக் கொள்ளலாம் என, வங்கி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து, கனரா வங்கி அதிகாரியும், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொது செயலருமான சீனிவாசன் கூறியதாவது:

வங்கிக் கணக்குகள் அனைத்தும் கணினி மயப்படுத்தப்பட்டு விட்டன. வாடிக்கையாளர் ஒருவர், வங்கிக்கு வராமலேயே, தன் கணக்கை, நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் இயக்கலாம். இதனால், அவரது கணக்கு குறித்த விவரங்களை, உடனுக்குடன் அவருக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம், வங்கிக்கு ஏற்படுகிறது. கணக்கில் பணம் செலுத்துதல், எடுத்தல் ஆகியவை குறித்து வாடிக்கையாளருக்கு தெரிவிக்கும், எஸ்.எம்.எஸ்., சேவை கூடுதல் சேவையாக உள்ளது. எஸ்.எம்.எஸ்., அனுப்ப, பொதுத்துறை அல்லது தனியார் தொலைத் தொடர்பு சேவையை அணுக வேண்டும். இதற்கு வங்கி, கட்டணம் செலுத்துகிறது. இதன்மூலம், வங்கிக்கு நஷ்டம் ஏற்படக் கூடாது என்பதற்காக, மிகக் குறைந்த கட்டணத்தில், எஸ்.எம்.எஸ்., சேவையை அளிக்கிறோம். இதன் மூலம், வாடிக்கையாளருக்கு கூடுதல் வசதி கிடைக்கிறது. இச்சேவை தேவையில்லை என நினைக்கும் வாடிக்கையாளர்கள் ரத்து செய்து கொள்ளலாம். தொலைத் தொடர்பு சந்தையில், சாதாரணமாக ஒரு எஸ்.எம்.எஸ்., அனுப்ப என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அதைவிட மிகக் குறைந்த கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. இச்சேவை மூலம், மூன்றாம் நபர் வங்கிக் கணக்கை இயக்குவது தடுக்கப்படும். மீறி இயக்கினால் அவர்களை பிடிக்கவும் எஸ்.எம்.எஸ்., சேவை பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

12,347 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை தயார் : அதிகாரிகள் தகவல்


அரசு பள்ளிகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 12,347 ஆசிரியர்களுக்கும்பணி நியமன ஆணை தயார் நிலையில் உள்ளது.வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தொடக்கக் கல்வித்துறைக்கு 1,816 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித்துறைக்கு 10,531 ஆசிரியர்களும் என மொத்தம் 12,347 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த வாரம் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. பணிநியமன உத்தரவு வழங்கப்பட இருந்த நிலையில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் பணி நியமன ஆணை வழங்க இடைக்கால தடை விதித்தது. இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணி நியமன உத்தரவை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவை அவர்கள் கலந்தாய்வுசென்றுவந்த மாவட்டத்தில் கல்வி அதிகாரிகள் மூலம் வழங்க தொடக்கக் கல்வித்துறையிலும், பள்ளிக் கல்வித்துறையிலும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பணி நியமன ஆணை ஆன்லைனிலேயே தயாராக இருப்பதால், நீதிமன்ற உத்தரவு வந்தும் ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக உத்தரவை விரைந்து வழங்கிட முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஐந்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம

்1. திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர், நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

. 2. நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திருமதி.இராசாத்தி, பெற்றோர் ஆசிரியர் கழக துணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3. துணை இயக்குனராக பணிபுரிந்த திரு.சுப்பிரமணி, திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

4. தஞ்சாவூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர், அரியலூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

5. அரியலூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர், தஞ்சாவூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

TNTET : தகுதி தேர்வுக்கு பிறகு மீண்டும் ஒரு தேர்வை நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது


   திருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தகுதி தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இந்த தகுதி தேர்வு முடிந்த பிறகு மத்திய அரசின் தேசிய கல்வி கவுன்சில் விதிமுறைப்படி மீண்டும் ஒரு தேர்வு நடத்த வேண்டும். ஆனால் தகுதி தேர்வு மதிப்பெண்ணை வைத்து அரசு புதிய ஆசிரியர்களை நியமிக்கிறது. இது தவறானது.

நான் கணித பாடத்தில் தகுதி தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்றுள் ளேன். இதில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்துவிடுவார்கள். இது தவிர சான்றிதழ் சரிபார்த்து உடனே பணி வழங் குவது தவறானது. எனவே தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பட்டபடிப்பு மதிப் பெண்ணை வைத்து அல்லது தனி தேர்வு வைத்து அதன் பிறகு ஆசிரியர்களை நியமிக்க வேண் டும். இவ் வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.

Monday, September 08, 2014

மதிப்பெண் சான்று உண்மையா? : ஆன்-லைனில் அறிய வாய்ப்பு

மதிப்பெண் சான்றுகளின் உண்மை தன்மை அறிய, அரசு தேர்வுகள் இயக்ககம், 'ஆன்-லைன்' முறையை, விரைவில் கொண்டு வருகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை, அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்குகிறது. பணியில் சேரும்போது, இந்த சான்றிதழ்கள் முக்கிய ஆவணம். இதன் உண்மை தன்மையை அறிய, அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு, மீண்டும் அனுப்பி உறுதி செய்யப்படுகிறது.

இது போல், அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு, ஆயிரக்கணக்கான சான்றுகள் வருவதால், அவற்றை சரி பார்ப்பதில், பெரும் தாமதம் ஏற்படுகிறது. இதை தீர்க்க, ஆன்-லைன் மூலம், கல்வி சான்றுகளின் உண்மை தன்மை அறியும் வகையில், புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கல்வியாண்டுகள் வாரியாக, சான்றிதழ்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மதிப்பெண் சான்றிதழில் உள்ள மாணவர் பெயர், பிறந்த தேதி, கோடு எண் மற்றும் தேர்வு பதிவு எண்களை குறிப்பிட்டு விண்ணப்பித்தால், பதிலை, ஆன்-லைனில் உடனே உறுதி செய்து விடும் வகையில், திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.

GROUP II preliminary exam results

Sunday, September 07, 2014

3ம் ஊக்க ஊதியம் for M.Phil.

உயர்படிப்பு படித்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஊக்க ஊதியம் தராத கல்வி அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 2வாரத்தில் ஊக்க ஊதியம் வழங்க கல்வி அதிகாரிக்கு கெடு விதித்துள்ளது. வேதாரண்யத்தை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் டி.ராமசாமி. இவர் சார்பாக வக்கீல் காசிநாத பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறியிருப்பதாவது: மனுதாரர் ராமசாமி வேதாரண்யம் நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் 2010ம் ஆண்டு பிஏ பிட் முடித்தார். இதற்காக அவருக்கு முதல் ஊக்க ஊதிய உயர்வு தரப்பட்டது. அதன்பிறகு எம்ஏ முடித்ததற்காக இரண்டாம் ஊக்க ஊதியம் தரப்பட்டது.

2009ல் எம்பில் பட்டம் படித்து முடித்தார். இதற்கு 3ம் ஊக்க ஊதிய உயர்வு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து 3ம் ஊக்க ஊதியம் தர உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரிகள் அமல்ப டுத்தவில்லை. எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வழக்கில் கூறியிருந்தார்.இந்த வழக்கை நீதிபதி சுப்பையா விசாரித்தார். அப்போது மனுதாரர் சார்பாக வக்கீல் காசிநாதபாரதி ஆஜராகி, ஏற்கனவே அதிகம் படித்த ஆசிரியர்களுக்கு 3ம், 4ம் ஊக்க ஊதியம் தரப்பட்டது.

இதற்கு உயர் நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை கூறியது. எனவே மனுதாரருக்கு 3ம் ஊக்க ஊதியம் தர வேண்டும் என்றார்.இதை நீதிபதி சுப்பையா விசாரித்து, 2 வாரத்தில் தலைமை ஆசிரியருக்கு ஊக்க ஊதியம் தரவேண்டும் என்று உத்தரவிட்டார். இதை கல்வித்துறை செயலாளர் அமல்படுத்தி நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.