இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, August 15, 2014

டி.இ.டி.,யில் புதிய 'வெயிட்டேஜ்' முறை : பழைய பாடத்திட்ட மாணவர்கள் பாதிப்பு

முதுகலை ஆசிரியர் தேர்வில் (டி.ஆர்.பி.,) பின்பற்றும் முறையை, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) பின்பற்றாததால், பழைய பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுத வேண்டும் என 2012ல் புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழை, ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க ஏழு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என அறிவித்தது.

அதன்படி, ஆசிரியர் தேர்வாணையம் 2012 ஜூலையில் நடத்திய டி.இ.டி., தேர்வில் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது 150 வினாக்களுக்கு ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஒதுக்கியதால் தேர்ச்சி சதவீதம் குறைந்தது. அதில் முதல் தாளில் 1,735 பேரும், 2ம் தாளில் 713 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேர்வுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து, அதே ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்வு, மூன்று மணி நேரமாக மாற்றப்பட்டது. அதில் முதல் தாளில் 10 ஆயிரத்து 397 பேரும், இரண்டாம் தாளில் 8,849 பேரும் தேர்ச்சி பெற்றனர். அனைவரும் 2012 டிசம்பரில் பணி நியமனம் செய்யப்பட்டனர். 2013 ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் அடிப்படையில் 32 ஆயிரம் பேர், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு அறிவித்த 5 சதவீத மதிப்பெண் அடிப்படையில் 44 ஆயிரம் பேர் என மொத்தம் 76 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பிளஸ் 2, டிகிரி, பி.எட்.,ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 40 மதிப்பெண்ணும், டி.இ.டி.,யில் 60 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் 100 மதிப்பெண்களுக்கு 'வெயிட்டேஜ்' முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

இதனால் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், முதுகலை ஆசிரியர் தேர்வில் இதுபோன்று மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், டி.ஆர்.பி., தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறது. 2008-09ம் கல்வியாண்டில் கல்லூரிகளில் திறனறித் தேர்விற்கு 25 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்கள் என புதிய நடைமுறை வந்தது. அதன்பிறகு டிகிரி படித்த மாணவர்கள் சாதாரணமாக 70 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெறுகின்றனர். பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெறுவதே கடினமாக இருந்தது. இதனால், 'வெயிட்டேஜ்' முறையைப் பின்பற்றுவதன் மூலம், பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைப்பது அரிதாகியுள்ளது.

2013ல் டி.இ.டி., தேர்வில் 82 மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சி என்ற நிலையில், 101 மதிப்பெண் பெற்ற, விருத்தாசலம் பகுதியில் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதிய மாணவர் ஒருவர், 'வெயிட்டேஜ்' முறையால் ஆசிரியர் பணிக்கு தேர்வாகவில்லை. அவர், கூறுகையில், ' 2013ல் நடந்த டி.இ.டி., தேர்வில், இரண்டாம் தாளில் 101 மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால் புதிய வெயிட்டேஜ் முறைபடி 65.15 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றதால் ஆசிரியர் தேர்வு பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை. புதிய வெயிட்டேஜ் முறையால் 90லிருந்து 100க்கும் மேல் மதிப்பெண்கள் எடுத்த பழைய பாடத்திட்ட மாணவர்கள் பலர் ஆசிரியர் பணிக்குத் தேர்வாகாமல் உள்ளனர்' என்றார்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி எப்போது


அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும், 14 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா? என்ற ஏக்கத்தில் உள்ளனர். இவர்களைப் போலவே, பள்ளிகளின் நிர்வாகிகளும், அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். தமிழகத்தில், கடந்த, 2011ம் ஆண்டு முதல், ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா, ஐந்து தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்பு துவங்கப்பட்டது. இத்திட்டம் படிப்படியாக, கடந்த கல்வியாண்டு முதல், உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், சில அரசு பள்ளிகளில், ஆறு, ஒன்பது, பிளஸ் 1 (உயிரியல்) வகுப்பு, ஆங்கில வழிக் கல்வியில் துவங்கப்பட்டுள்ளது

.இதற்காக, அரசு பள்ளிகளுக்கு, அரசின் சார்பில் கட்டடம், ஆசிரியருக்கு சம்பளம், பிற நலத்திட்டங்கள் போன்றவை கிடைக்கின்றன. அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழிக்கல்வி முறை மட்டுமே அமலில் உள்ளது. 'அரசு பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி துவங்கப்பட்டு வருவது போல், அரசு உதவிபெறும் பள்ளியிலும், ஆங்கிலவழிக் கல்வி துவங்க அனுமதிக்க வேண்டும். ஆங்கில வழிக்கல்வியை போதிக்கும் அரசு பள்ளிகளுக்கு வழங்கும் சலுகைகளை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும்' என, அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், 'அரசு தரப்பில், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கோ அல்லது தனியார் பள்ளிகளுக்கோ, புதியதாக எந்த சலுகையும் வழங்க முடியாது' என, அரசு தெரிவித்துள்ளதாக கூறும் கல்வியாளர்கள், அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது: தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 5,071 தொடக்கப் பள்ளிகள், 1,608 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அதில், 40,748 ஆசிரியர்கள்; 14 லட்சத்து 23 ஆயிரத்து 615 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மட்டுமல்லாது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் செயல்படுகின்றன. அரசு பள்ளியை போலவே, அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் நலத்திட்டம், ஆசிரியருக்கு சம்பளம் உள்ளிட்டவை வழங்க, கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது. ஆங்கில வழிக்கல்வி தேவை என, அவர்கள் விருப்பப்பட்டால், சுயநிதி பள்ளியாக மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.

கடந்த, 1990 - 91ம் ஆண்டுக்கு முன், அரசு உதவி பெறும் பள்ளிகளில் என்ன நடைமுறை இருந்ததோ, அதே நடைமுறை தான் பின்பற்ற வேண்டும் என, அன்றே உத்தரவிடப்பட்டது.தனியார் சார்ந்த கல்வி முறையை, அரசு ஊக்குவிக்க விரும்பவில்லை. மேலும், அரசு பள்ளிகளே தற்போது தேவையான வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

கலவை சாதத்துடன் மசாலா முட்டை : சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு

''தமிழகத்தில் உள்ள, அனைத்து சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு, பல வகை கலவை சாதத்துடன், மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படும்,'' என, சுதந்திர தின விழாவில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சென்னை, கோட்டை கொத்தளத்தில், தேசியக் கொடியேற்றி, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்பது பழமொழி. 'ஏழை சொல் தான், புனித ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும்' என்ற புதுமொழியை, தமிழகத்தில் நிலைநாட்டிக் கொண்டிருப்பது இந்த அரசு.

விளை நிலங்கள் வழியே, 'கெய்ல்' நிறுவன குழாய் பதிப்பு திட்டம்; தஞ்சையில், 'மீத்தேன் எரிவாயு' திட்டம்; மரபணு மாற்று விதை திட்டம்; சில்லரை வணிகத்தில், அன்னிய நேரடி முதலீடு போன்றவற்றை, உறுதியாக எதிர்க்கும் அரசாக உள்ளது.சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம், 9,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாய்; அவர்களின் வாரிசுகளுக்கான குடும்ப ஓய்வூதியம், 4,500 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தப்படும்.இதன் மூலம், 1,955 பேர் பயன்பெறுவர். அரசுக்கு, ஆண்டுக்கு 1.43 கோடி ரூபாய், கூடுதல் செலவாகும்.வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், முத்து ராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, ஆகியோரின் வழித் தோன்றல்கள், வ.உ.சிதம்பரனாரின் பேரனுக்கு, 2,000 ரூபாய் சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

இது, இனி, 4,500 ரூபாயாக, உயர்த்தப்படும். இதன் மூலம், 195 பேர் பயனடைவர். அரசுக்கு, ஆண்டுக்கு, 58.50 லட்சம் ரூபாய், கூடுதல் செலவு ஏற்படும்.

SSA school grant maintain grant instructions

IGNOU JUNE 2014-RESULT

Thursday, August 14, 2014

Direct Recruitment of Lecturers (Senior Scale) / Lecturers Senior Scale (Pre-Law) For Government Law Colleges-2013-2014 - Click here for Prospectus and Syllabus

‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்

கல்லூரி மற்றும் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் பணியில் (அறிவியல் பாடங்கள்) சேருவதற்கான “நெட்” தகுதித்தேர்வை மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ் ஐஆர்) ஆண்டுக்கு 2 தடவை நடத்துகிறது. இந்த ஆண்டுக் கான 2-வது நெட் தேர்வு டிசம்பர் மாதம் 21-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப் பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 23-ம்தேதி வரையும், தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 22-ம் தேதி வரையும், ஆன்லைன் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, அனுப்பு வதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 29-ம்தேதி வரையும் நீட்டிக்கப்படுவதாக சிஎஸ்ஐஆர் “நெட்” தேர்வு பிரிவு முதுநிலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நரேஷ் பால் அறிவித் துள்ளார்.

சிஎஸ்ஐஆர் நெட் தகுதித்தேர்வை முது கலை அறிவியல், கணித பட்டதாரிகள் எழுதலாம். இந் தேர்வுக்கு http://www.csirhrdg.res.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

Tuesday, August 12, 2014

ஆசிரியர்கள் போராட்டத்தை தடுக்க மாநில கல்வித்துறை அதிரடி உத்தரவு

ஆசிரியர் சங்கங்கள் சார்பில் அடிக்கடி நடக்கும் போராட்டங்களால் வெறுத்துப்போன மாநில கல்வித்துறை நிர்வாகம், போராட்டங்கள் நடத்த திடீர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள், பல்வேறு சங்கங்கள் சார்பில் இயங்கி வருகின்றனர். சமீபகாலமாக, ஆசிரியர் பணி மாறுதலில் ஆங்காங்கே பிரச்னைகள் எழுந்தது. சில இடங்களில், முறைகேடான இட மாறுதலை கண்டித்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் மாநில அளவில் நடந்தன.

இந்நிலையில் இது போன்ற சம்பவங்களை அறவே தடுக்கும் பொருட்டு, அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும், மாநில தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், முன் அனுமதி பெறாமல் ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு எத்தகைய போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபடும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "இடமாறுதலில் மறைக்கப்பட்ட பணியிடம், முறைகேடுகளை கண்டித்தும், கல்வித்துறையில் நீண்ட கால கோரிக்கைகள் நிறை வேற்றாததை கண்டித்துதான் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. குறைபாடு இல்லாவிட்டால் எதற்காக ஆர்பாட்டம் நடத்துகிறோம்,” என்றார்.

Monday, August 11, 2014

கிராம சபா கூட்டம்-15.08.2014-அனைவருக்கும் கல்வி இயக்கம், மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறை

6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூவகை சான்று பெறுவதற்கான விண்ணப்பம்.

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: பழங்குடியினப் பிரிவில் அதிக காலியிடங்கள்


பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் பழங்குடியினப் பிரிவில் 45 சதவீதத்துக்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்குத் தகுதியானவர்கள் கிடைக்காததால் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் எடுத்து 29 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். இதனிடையே அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரமாக அதிகரித்தது.

பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேருக்கான தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண்ணின் அடிப்படையில் சுமார் 11 ஆயிரம் ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆசிரியர் நியமனத்தில் பழங்குடியினப் பிரிவினருக்கு 1 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த நியமனத்தில் பின்னடைவு காலிப்பணியிடங்கள், இப்போதைய காலிப்பணியிடங்கள் என பழங்குடியினப் பிரிவினருக்காக மொத்தம் 182 காலியிடங்கள் உள்ளன. இப்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வுப் பட்டியலில் பழங்குடியினத்தவர்களுக்கான பிரிவில் 86 இடங்களுக்குத் தகுதியான தேர்வர்கள் கிடைக்காததால் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

கூடுதலாக 5 சதவீத இடஒதுக்கீடு வேண்டும்: இந்த காலிப்பணியிடங்கள் தொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் பெ.சண்முகம் கூறியது: பழங்குடியின மாணவர்கள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக சிறப்புப் பயிற்சி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதோடு, பழங்குடியினப் பிரிவில் பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால் இந்தப் பிரிவினருக்கு கூடுதலாக 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், என்றார். தாழ்த்தப்பட்டவர்கள் பிரிவில் 40 காலியிடங்கள்: இந்தத் தேர்வுப் பட்டியலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டில் 29 காலிப்பணியிடங்கள் உள்பட தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டில் 40 காலிப்பணியிடங்கள் உள்ளன.

புவியியல் பாடத்தில் 225 காலியிடங்கள்: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் புவியியல் பாடத்தில் மிக அதிகபட்சமாக 225 காலிப்பணியிடங்கள் உள்ளன. பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் இப்போதைய காலியிடங்களின் எண்ணிக்கை 890 ஆக இருந்தது. புவியியல் பாடத்தில் மிக அதிகபட்சமாக 25 சதவீத அளவுக்கு தகுதியான ஆசிரியர்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 2 தேர்வில் ஓரளவு நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள்கூட பொறியியல் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதால் புவியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களுக்குப் போதிய எண்ணிக்கையில் தகுதியானவர்கள் கிடைப்பதில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதுகலை ஆசிரியர் 140 பேர் நியமனம்

தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வு பெற்ற, 140 முதுகலை ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு, முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு நடந்தது. இதில், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களை, தமிழ் வழியில் படித்து, போட்டி தேர்வை எழுதி தேர்வு பெற்ற, 140 பேர், ஆறு மாதங்களுக்கு மேலாக, பணி நியமனமின்றி தவித்து வந்தனர். இவர்கள், நேற்று, கல்வித் துறை அதிகாரிகளை சந்தித்து, பணி நியமனம் செய்ய வலியுறுத்தினர். 'ஒரு வாரத்திற்குள், 140 பேரும், பணி நியமனம் செய்யப்படுவர்' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இந்நிலையில், 140 பேருக்கும், பணி நியமன உத்தரவுகள், அஞ்சல் மூலம் அனுப்பும் பணி, நேற்றே துவங்கியதாக, துறை வட்டாரம் தெரிவித்தது. 15ம் தேதிக்குள், அனைவருக்கும், பணி நியமன உத்தரவு கிடைத்துவிடும் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது

டி.இ.டி., சீர்மரபினர் சான்றிதழ் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள

டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற சீர்மரபினர் இடைநிலை ஆசிரியர்கள் உரிய சாதி சான்றிதழ்களை சமர்பிக்க, இன்று (ஆக.,12) கடைசி நாள், என டி.ஆர்.பி.,தெரிவித்துள்ளது. கள்ளர் சீரமைப்பு துறையில், பல ஆண்டுகளாக காலியாக உள்ள இடைநிலைஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, டி.இ.டி.தேர்வில் தாள்-1 ல் தேர்ச்சி பெற்ற மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த சீர்மரபினர் பிரிவில் உள்ள இந்து பிரமலைக்கள்ளர் வகுப்பை சேர்ந்தவர்கள், மதுரையில் உள்ள ஓ.சி.பி.எம்., பள்ளியில் உரிய சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராகி, சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்,என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று துவங்கிய சான்றிதழ் சரி பார்ப்பு பணி இன்றுடன் (ஆக., 12) முடிவடைகிறது. உரிய சாதி சான்றிதழை சமர்பிக்காதவர்கள் இப் பிரிவின் கீழ் பணிநியமனம் செய்யப்பட மாட்டார்கள், என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.--

பணி நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர் (SEC.GR.TEACHER) பெறும் சம்பளம் எவ்வளவு?


PAY BAND PB3 : 5200 - 20200+2800 + PP :750

PAY : 5200+GRADE PAY 2800 +PP 750 +DA100%+MA+HRA 

PAY  = 5200 

GRADE PAY = 2800

PP = 750

TOTAL = 8750

100% DA = 8750

HRA = 440

MA = 100

TOTAL GROSS = RS.18040

பணி நியமனம் பெறும் பட்டதாரி ஆசிரியர் பெறும் சம்பளம் எவ்வளவு?


PAY BAND PB2: 9300-34800+4600
PAY:9300+
GRADE PAY: 4600
DA 100% : 13900
HRA : 880
MA   : 100
TOTAL : 28780
(PAY :9300 +4600=13900+100%DA=27800+880+100=28780)
M.A OR M.SC முடித்துள்ள ஆசிரியர்களின் ஊதியம் விபரம்
PAY = 9300 
GRADE PAY = 4600
TOTAL = 13900
INCENTIVE 6% = 834 ROUNDUP 10RS 840 
TOTAL PAY = 14740
100%DA = 14740
HRA = 880
MA = 100
NET TOTAL = 30460

Sunday, August 10, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு நான்கு மண்டலங்களில் இன்று துவக்கம

: ஆசிரியர் தகுதித் தேர்வில் (2012-13) தேறியோரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி, 4 மண்டலங்களில் இன்று துவங்குகிறது.கடந்த 2012 ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்து, இதர அரசுப் பணி கிடைத்தும் செல்லாமல் காத்திருப்போருக்கு, இந்த முகாமில் வாய்ப்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், விழுப்புரம், கடலுார், காஞ்சிபுரம், வேலுார், திருச்சி, தஞ்சை, நாகபட்டினம், கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் நடக்கிறது.

சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆக.,13, 14 ல் நடக்கிறது. விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி கன்டோன்மென்ட் வெர்சரி ஆங்கிலோ இந்தியன் பள்ளி, மதுரை ஓ.சி.பி.எம்., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் 4 நாட்கள் இப்பணி நடக்கிறது. பிறந்த தேதி, ஜாதி, மதிப்பெண் சான்றிதழ்களில் உள்ள பிழைகளை திருத்தம் செய்யவும், தமிழ் வழி பயின்ற சான்றிதழை சமர்ப்பிக்கவும் அசல் சான்றிதழ்களுடன் இதில் பங்கேற்கலாம்.

பஸ்வசதி இல்லாத பகுதி மாணவர்களுக்கு நிதி ஒதுக்கீடு

;தமிழகத்தில் பள்ளி, பஸ் வசதி இல்லாத 813 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் 11,002 மாணவர்கள் உள்ளனர். இவர்களில், தொடக்கப்பள்ளிகளில் 8,035 பேர், நடுநிலைப்பள்ளிகளில் 2,967 பேர் வெளியூர்களுக்கு சென்று பயில்கின்றனர்.இவர்கள் ஆட்டோ, வேன், ஜீப் போன்ற வாகனங்களில் பள்ளிக்கு சென்றுவர, ஒவ்வொரு மாணவருக்கும் போக்குவரத்து நிதியாக மாதம் ரூ.300 வீதம், ஆண்டிற்கு ரூ.3,000 வழங்கப்படுகிறது. இந்த நிதியை, மாணவரின் பெற்றோரிடம் பயனீட்டு சான்று பெற்று வழங்க, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் 4,857 மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக, ரூ.1.45 கோடி ஒதுக்கப்பட்டது. மீதியுள்ள 6,145 பேருக்கு ரூ.1.84 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

12,000 ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் வெளியீடு


் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நியமனத்துக்கான முதன்மைத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. மொத்தம் 12 ஆயிரம் பேர் கொண்ட இந்தப் பட்டியல் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு மொத்தம் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ஆம் தேதி நடைபெற்றது.இந்தத் தேர்வில் 935 பேர் தேர்ச்சி பெற்றனர். அதன்பிறகு, ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) அண்மையில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து முதன்மைத் தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால், வழக்குகள் காரணமாக, பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த வழக்குகள் இப்போது முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கான 11 ஆயிரம் பேரைக் கொண்ட முதன்மை தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பட்டியல்: இதுபோல, ஆங்கிலம், கணிதம், வேதியியல், தாவரவியல், வரலாறு, நுண் உயிரியல் ஆகிய பாடங்களில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான 1,236 பேரைக் கொண்ட முதன்மைப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தமிழ், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம் நிறைவடைந்த நிலையில், நீதிமன்ற வழக்குகள் காரணமாக எஞ்சிய பாடங்களுக்கான முதன்மைத் தேர்வுப் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. விரைவில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான முதன்மை தேர்வுப் பட்டியலும் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்ததாக, இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNTET-2013 PAPER-2 தேர்ந்தோர் பட்டியல் CUT OFF


ENGLISH (2846 POST)
ST WOMAN : 54.06
ST GENERAL : 55.07
SCA WO : 62.45
SCA GE : 62.48
SC WO : 63.16
SC GE : 63.17
MBC WO : 65.18
MBC GE : 65.21

BCM WO : 62.92
BCM GE : 62.87
BC WO : 65.35
BC GE : 65.41

MATHS (987 POST)

TAMIL MEDIUM SCA WO : 60.86
SCA GE : 60.67

ENGLISH MEDIUM SCA WO : 62.42
SCA GE :62.64

TAMIL SC WO : 63.52
SC GE : 63.36
ENGLISH SC WO : 64.44
SC GE : 64.49
TAMIL MBC WO : 66.64
MBC GE : 66.91
ENGLISH MBC WO : 69.34
MBC GE :69.43
TAMIL BCM WO : 63.15
BCM GE :
ENGLISH BCM WO : 66.93
BCM GE :66.93

TAMIL BC WO : 66.36
BC GE : 66.42
ENGLISH BC WO : 70.37
BC GE : 70.40
இதற்குமேல் CUTOFF MARKS வாங்கி
LIST-ல் பெயர் வராதவர்கள்
TRB- ஐ அணுகவும்.