Monday, July 21, 2014
பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு: தேர்வுக்கூட நுழைவு சீட்டு இணையதளத்தில் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. தகவல
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வருகிற 27–ந் தேதி, ஒருங்கிணைந்த பொறியாளர் பணியில் அடங்கிய பல்வேறு உதவிப் பொறியாளர் பதவிகளில் உள்ள 98 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்துகிறது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net வெளியிடப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டு மேற்படி இணையதளத்தில் இல்லாவிடில், அவ்விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின்(செல்லான்) நகலுடன், பெயர், பதிவு எண், கட்டணம் செலுத்திய அஞ்சலகம் அல்லது வங்கியின் முகவரி ஆகியவற்றை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com–க்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் 1,395 இளநிலை உதவியாளர்களுக்கு 25, 26-இல் பணி நியமனக் கலந்தாய்வு
பள்ளிக் கல்வித் துறையில் 1,395 இளநிலை உதவியாளர்களுக்கு ஜூலை 25, 26 தேதிகளில் ஆன்-லைன் மூலம் பணி நியமனக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2013-14 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு பள்ளிக் கல்வித் துறைக்கு 1,395 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.
பணி நாடுநர்கள் தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலக கலந்தாய்வு மையத்தில் பங்கேற்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. சொந்த மாவட்டஙகளில் போதிய காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களுக்கும், வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கும் ஜூலை 26-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி கல்வி அலுவலர் அலுவலகங்களில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்கும் பணி நாடுநர்கள் கலந்தாய்வு மையத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே வர வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட துறை ஒதுக்கீட்டு ஆணை, கல்விச் சான்றுகள், ஜாதி சான்று, இதர ஆவணங்களைத் தவறாமல் கொண்டு வர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பில் பி.லிட்., படித்தவர்களுக்கு சிக்கல்
ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன், பி.லிட்., படிப்பில் சேர்ந்து படித்தவர்களை, சான்றிதழ் சரிபார்ப்பில், 'தகுதியில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் கல்வி டிப்ளமோவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பி.எட்., படிப்பும், தகுதியாக நியமிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்துவிட்டு, இரு ஆண்டுகள் ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிக்கும் மாணவ, மாணவியர், மூன்று ஆண்டு படிப்பான பி.லிட்., முடித்தால், பட்டதாரி ஆசிரியர்களாகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது
. ஆசிரியர் கல்வி டிப்ளமோவை, மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் வழங்கி வருகிறது. இதில், சில ஆண்டுகளுக்கு முன், ஏராளமான தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டது. அதனால், ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதுவதில், தாமதம் ஏற்பட்டது. உதாரணமாக, 2007--08 கல்வியாண்டில், இரண்டாமாண்டு தேர்வெழுதும் மாணவர்களுக்கு, 2008ம் ஆண்டு மே மாதத்துக்குள் தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகளை தருவது வழக்கம். ஆனால், ஆசிரியர் கல்வி டிப்ளமோ படித்தவர்களுக்கு, பல்வேறு குளறுபடிகளால், கல்வியாண்டுக்கான தேர்வு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட்டது. இதனால், டிசம்பர் அல்லது ஜனவரியில், தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி பெற்ற பின், ஒரு கல்வியாண்டை வீணாக்கக்கூடாது என்ற எண்ணத்தில், ஏராளமானோர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பி.லிட்., படிப்பில் சேர்ந்தனர்.
படித்து முடித்து, தற்போது ஆசிரியர் தகுதித்தேர்விலும், வெற்றி பெற்று, தங்களுக்கு அரசு வேலை கிடைத்துவிடும் என நம்பிக்கையில், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு, அதிர்ச்சியே, பதிலாக கிடைத்துள்ளது. செப்டம்பர் மாதத்தில், ஆசிரியர் கல்வி டிப்ளமோவை முடித்துவிட்டு, அதே கல்வியாண்டில், பி.லிட்., சேர்ந்திருப்பதால், அந்த பட்டம் செல்லாது என, ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்துள்ளது. அதனால், ஏராளமானோர், அதிர்ச்சியில், என்ன செய்வதென தெரியாமல், திகைத்து நிற்கின்றனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது:கடந்த, 2007--08ம் கல்வியாண்டில், ஆசிரியர் கல்வி டிப்ளமோ சேர்ந்து, 2008--09ம் கல்வியாண்டில், படிப்பை முடித்தோம். ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வுகள் தாமதமாக நடத்தப்பட்டதால், செப்டம்பரில் தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்கப்பட்டது. படித்த படிப்புக்கான காலம், 2008--09வுடன் முடிவடைந்துவிட்டதால், 2009--10க்கான கல்வியாண்டில், பி.லிட்., சேர்த்துக்கொண்டனர். அப்போது, பல்கலைக்கழகம், தேர்வுத்துறை உள்ளிட்டவை எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. தற்போது, இத்தனை ஆண்டு காத்திருப்பில், அரசு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டால், தகுதியில்லை என திருப்பி அனுப்புகின்றனர். இதற்கு, தேர்வர் எப்படி பொறுப்பாக முடியும் என தெரியவில்லை.
அரசு நிறுவனமான ஆசிரியர் தேர்வுத்துறை, தாமதமாக தேர்வு நடத்தியமைக்கு, எங்கள் வாழ்க்கை பலியாகிறது.கடந்த ஆண்டில், இதேபோன்று படித்தவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், பணி வழங்கியுள்ள நிலையில், நடப்பாண்டில் எங்களுக்கு மட்டும் பணிவாய்ப்பு மறுக்கப்படுவது, எந்த வகையில் நியாயம் என்றே தெரியவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Sunday, July 20, 2014
EXPECTED CUT OFF TNTET 2013 PAPER 2 ALL SUBJECT WISE
PHYSICS
GT-69.3
BC-64.5
MBC-63.2
SC-59.5
SCA-58.4
ST-56.2
BCM-62.7
CHEMISTRY
GT-70.3
BC-65.7
MBC-64.4
SC-59.5
SCA-59.1
ST-55.7
BCM-63.7
BOTANY
GT-63.2
BC-57.2
MBC-55.7
SC-53.1
SCA-52.7
ST-ALL
BCM-59.4
ZOOLOGY
GT-64
BC-60.6
MBC-59.6
SC-56.3
SCA-55.9
ST-58.2
BCM-62.3
GEOGRAPHY
GT-ALL
BC-ALL
MBC-ALL
SC-ALL
SCA-ALL
ST-ALL
BCM-ALL
TAMIL-
GT-72.5
BC-71.1
MBC-70.2
SC-68.6
SCA-68.1
ST-65.1
BCM-69.8
MATHS
GT-74.5
BC-71.9
MBC-70.8
SC-65.5
SCA-65.2
ST-66.0
BCM-69.5
ENGLISH
GT-68.8
BC-66.6
MBC-66.2
SC-63.7
SCA-63.1
ST-ALL
BCM-65
HISTORY
GT-65.0
BC-62.8
MBC-62.5
SC-60.2
SCA-59.2
ST-56.3
BCM-62.4
ஆங்கில வழி கல்வி: பள்ளிகள் விபரம் சேகரிப்பு
:ஆங்கில வழி கல்வி போதிக்கும் பள்ளிகள் விபரத்தை, வரும் ஜூலை 22 க்குள் தெரிவிக்கும்படி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மெட்ரிக்., பள்ளிகளின் மோகத்தால், அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கையை சரி செய்ய, கடந்த 2012--13 ம் கல்வியாண்டில், அரசு தொடக்க பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால், இதற்கென, தனி ஆசிரியர்களோ, வகுப்பறைகளோ ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில், தமிழ் வழிக்கல்வி படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களும், ஆங்கில வழி கல்விக்கு மாற்றப்பட்டனர். பல தொடக்க பள்ளிகளில் தமிழ் வழி கல்விக்கு மாணவர் சேர்க்கை பெயரளவில் மட்டுமே உள்ளது.இந்நிலையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆங்கில வழி கல்வி உள்ள பள்ளிகளின் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விபரத்தை, சேகரித்து வரும் ஜூலை 22 க்குள், மாநில தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு, அனுப்ப, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு: 70,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மாவட்ட துணை ஆட்சியர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 79 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர். சென்னை, மாவட்டத் தலைநகரங்கள் உள்பட மாநிலம் முழுவதும் இதற்காக 557 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட துணை ஆட்சியர் பணியிடங்கள் 3, காவல்துறை துணை கண்காணிப்பாளர் பணியிடங்கள் 33, வணிக வரித்துறை உதவி ஆணையர் பணியிடங்கள் 33, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடங்கள் 10 என மொத்தம் 79 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்றது. இதற்கான முதல்நிலைத் தேர்வில் பங்கேற்க மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மட்டும் இந்தத் தேர்வில் பங்கேற்றதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், அரசு அதிகாரிகள் தேர்வு மைய கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு "வெயிட்டேஜ்' மதிப்பெண்: திருத்தம் செய்ய இன்று முதல் சிறப்பு மையங்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்கான சிறப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல் செயல்பட உள்ளன. பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேருக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 15-ஆம் தேதி வெளியிட்டது. இந்த மதிப்பெண் விவரங்களில் திருத்தம் தேவைப்படுவோர் மாவட்ட வாரியாக குறிப்பிடப்பட்டுள்ள மையங்களில் அந்தந்த நாள்களில் உரிய ஆவணங்களுடன் செல்லலாம். பெயர் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் கோருபவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழையும், ஜாதி விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர் வருவாய் அலுவலரிடமிருந்து பெற்றோர் பெயரில் பெறப்பட்ட நிரந்தர ஜாதிச் சான்றிதழையும், "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர் அந்தந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும
். திருத்தம் தேவைப்படாதவர்கள் இந்த மையங்களுக்கு வர வேண்டாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை பங்கேற்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பாக இந்த மையங்களிலேயே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தத் திருத்தங்கள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் சுமார் 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களின் விவரம்
: 1. விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் - ஜூலை 21, 22 - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம். 2. சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை - ஜூலை 23, 24 - அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.
Saturday, July 19, 2014
அரசுப் பள்ளிகளுக்கு அதிக உதவிகளைச் செய்து ஊக்குவித்தால் மட்டுமே அரசு கல்வி நிலையங்களைக் காப்பாற்ற முடியும் என்று திமுக தலைவர் கருணாநிதி
மாணவர்கள் வராததால் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதாக செய்திகள் வருகின்றன. 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள அரசு, அரசு உதவி பெறும் 31 ஆயிரம் பள்ளிகளில் 42 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு 2 லட்சம் ஆசிரியர்களுடன் 60 லட்சம் மாணவர்கள் படித்து வந்தனர். இந்தக் காலகட்டத்தில்தான் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது. வருங்காலத்தில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து ஒட்டுமொத்த பள்ளிக் கல்வியே தனியார் வசம் போய்விடும் என்ற நிலை இருப்பதாகக் கூறுகிறார்கள்.
அரசின் கொள்கைகளும் நடைமுறைச் சிக்கல்களும்தான் இற்குக் காரணம் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அரசு தரும் ஊக்கத்தைக் குறைத்து, அரசுப் பள்ளிகளுக்கு மேலும் அதிக உதவிகளைச் செய்தால் மட்டுமே அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற முடியும். வயது வரம்பு கூடாது: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கும், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கும் வயது வரம்பு 57 ஆக இருக்கும்போது, பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு மட்டும் திடீரென வயது வரம்பு 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பட்டதாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் 57 வயது வரை பணியில் சேரலாம். ஆனால், பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு மட்டும் வயது உச்ச வரம்பு குறைக்கப்பட்டுள்ளது ஏன் எனக் கேட்பது நியாயம்தான் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு நிரந்தர பொதுக் கணக்கு எண்
வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) சந்தாதாரர்களுக்கு நிரந்தர பொதுக் கணக்கு எண் வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதாக சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.பிரசாத் தெரிவித்தார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், பி.எப். சந்தாதாரர்களுக்கு பொது கணக்கு எண்(மய்ண்ஸ்ங்ழ்ள்ஹப் அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற் சன்ம்க்ஷங்ழ்) வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான சாப்ட்வேர் புரோகிராம் தலைமை அலுவலகத்திலிருந்து, அனைத்து மண்டல மற்றும் துணை அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதன்பிறகு ஒவ்வொரு தொழிலாளிக்கும் தனித்துவம் வாய்ந்த பொது கணக்கு எண் பிரத்யேகமாக வழங்கப்படும். ஒரு தொழிலாளர் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறும்போது புதிதாக பி.எப். எண் வழங்கப்படமாட்டாது. இந்தப் பொது கணக்கு எண் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தால் ஒரு முறை உருவாக்கப்படும். பொது கணக்கு எண் பெறுவதற்கு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ரசீது, ஆதார் அடையாள அட்டை, நிரந்தர கணக்கு எண்(பான் கார்டு), வங்கி கணக்கு எண், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தங்கள் நிறுவனத்தில் அளிக்க வேண்டும்.
நிறுவனங்கள் அந்த விவரங்களை வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் இணைய தளத்தில் பதிவு செய்வதன் மூலம் பொது கணக்கு எண் உருவாக்கப்படும் என ஆணையர் எஸ்.டி.பிரசாத் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் கல்வி தரத்தில் தமிழகம் சாதனை: பெரிய மாநிலங்கள் வரிசையில் முதல் இடம் A
தேசிய அளவில், கல்வி முன்னேற்றக் குறியீட்டில், தமிழகம், மூன்றாவது இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளது. முதல் இரு இடங்களை, முறையே, லட்சத் தீவுகள் மற்றும் புதுச்சேரி பிடித்துள்ளன. யூனியன் பிரதேசங்களைத் தவிர்த்து, பெரிய மாநிலங்கள் என பார்த்தால், தமிழகம் தான், 'நெம்பர் - 1' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த விவரங்கள், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கொள்கை விளக்க புத்தகத்தில் வெளியிடப்பட்டு உள்ளன
.தேசிய கல்வி திட்டமிடல் மேலாண்மை பல்கலைக்கழகம் (நியூபா), 2012 - 13ம் ஆண்டுக்கான புள்ளி விவரங்களின்படி, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின், கல்வி முன்னேற்றக் குறியீட்டு தரத்தை, பட்டியலாக வெளியிட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் கல்வித்தரம் குறித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், சராசரி குறியீடு மற்றும் தரம் (ரேங்க்) அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேசிய அளவில், தமிழகம், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக, அந்த அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, கொள்கை விளக்க புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல் இடத்தை, லட்சத்தீவுகளும், இரண்டாவது இடத்தை, புதுச்சேரியும் பிடித்துள்ளன. தேசிய அளவில், மூன்றாவது இடத்தை, தமிழகம் பிடித்திருந்தாலும், யூனியன் பிரதேசங்களைத் தவிர்த்து, பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களுக்குள், தமிழகம், முதலிடத்தைப் பிடித்துள்ளது. இவ்வாறு, புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குஜராத் 'ரேங்க்' என்ன? அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாகக் கூறப்படும் குஜராத்திற்கு, 18வது இடம் தான் கிடைத்துள்ளது. 'டாப்' 10 மாநிலங்கள்
1. லட்சத்தீவுகள்
2. புதுச்சேரி
3. தமிழகம்
4. சிக்கிம்
5. கர்நாடகா
6. பஞ்சாப்
7. டாமன் மற்றும் டையூ
8. மகாராஷ்டிரா
9. மணிப்பூர்
10. மிசோரம் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாகக் கூறப்படும் கேரளா, 14வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு, 23வது இடம் கிடைத்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., தேர்வு தள்ளிப்போக வாய்ப்பில்லை
ஆகஸ்டில் நடக்கவுள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) சிவில் சர்வீஸ் தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உட்பட மத்திய அரசின் நிர்வாகத்தில் உயர்ந்த பதவிகளுக்கான தேர்வுகள் ஆக.,24ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு முறையில் 2011ல் முதல்நிலை தேர்வில், நுழைவுத் தேர்வை நீக்கி விட்டு, நுண்ணறிவுத் திறன் தேர்வும் (ஆப்டிடியூட்), 2013ல் வேறு சில மாறுதலையும் யு.பி.எஸ்.சி., அறிமுகப்படுத்தியது.
அதன்பின் ஒரு முறை தேர்வு நடந்தது. தற்போது இத்தேர்வு முறை கடினமாக உள்ளது, கிராம மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனக்கூறி, மாணவர்கள் ஜூலை 14ல் போராட்டம் நடத்தினர்; இது லோக்சபாவிலும் எதிரொலித்தது. இதையடுத்து, தேர்வு முறை குறித்து ஆய்வு செய்ய, யு.பி.எஸ்.சி., மற்றும் பணியாளர் நலத்துறையை மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் கேட்டுக் கொண்டார். அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அரவிந்த் சர்மா என்பவர் தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டி ஆய்வை துவக்கியுள்ளது. 'தேர்வு முறையில் மாற்றம் தேவையா, அதுவரை தேர்வை தள்ளி வைக்கலாமா?' என்பது குறித்து ஆய்வு செய்து இக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும். அறிக்கை சமர்ப்பிப்பது தாமதமானால் தேர்வு முடிவு தள்ளிப் போகலாம். இப்போதைய நிலையில் தேர்வு தள்ளிப் போக வாய்ப்பு இல்லை.
வெளிமாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பு: ஆய்வு செய்து அங்கீகரிக்க தமிழக அரசு உத்தரவு
'தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்புகளை முடித்திருந்தால், அம்மாநில பாடத்திட்டங்கள், தமிழக பாடத்திட்டத்திற்கு இணையாக இருக்கிறதா என ஆய்வு செய்த பின், பிற மாநில சான்றிதழ்களை அங்கீகரிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கண்ட, மூன்று மாநில எல்லையோர தமிழக மாவட்டங்களில் வசிக்கும் மாணவர்கள், அண்டை மாநிலங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கின்றனர். பின், வேலை வாய்ப்பிற்காக, தமிழக அரசு நடத்தும் தேர்வுகளை எழுதுகின்றனர்.
இதற்காக, 'பிற மாநில பாடத்திட்டம், தமிழக பாடத்திட்டத்திற்கு இணையானவை' என, அம்மாநிலங்களில் தரப்பட்ட சான்றிதழுக்கு, தமிழக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி துறையிடம், ஒப்புதல் பெற வேண்டும். இதன்படி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி துறையும், ஒப்புதல் வழங்கி வந்தது. இந்நிலையில், கடந்த, 2008 - 09ல், தமிழகத்தில், ஆசிரியர் பயிற்சிக்கு, புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக, புதிய பாட திட்டத்திற்கு நிகராக, அண்டை மாநில பாடத்திட்டங்கள் இருக்காது என நினைத்து, வெளி மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்த தமிழக மாணவர்களுக்கு, ஒப்புதல் அங்கீகாரம் வழங்குவதை, தற்காலிகமாக, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி இயக்குனரகம் நிறுத்தி வைத்தது.
மாணவர்கள் கோரிக்கை: இந்நிலையில், அண்டை மாநிலங்களில், ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்த ஏராளமான மாணவர்கள், தமிழக ஆசிரியர் பயிற்சி கல்வி துறைக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, அண்டை மாநில பாட திட்டங்கள், தமிழக பாட திட்டங்களுக்கு நிகராக இருக்கிறதா என, இயக்குனரகம், ஆய்வு செய்தது. இதில், தமிழக பாட திட்டங்களுக்கு இணையாக, அண்டை மாநில பாடத்திட்டங்கள் இருப்பது, உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அண்டை மாநிலங்களில், ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்த மாணவர்களுக்கு, ஒப்புதல் அளிக்கலாம் என, தமிழக அரசுக்கு, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சித்துறை இயக்குனர் பரிந்துரை செய்தார்.
புதிய அரசாணை: இதை ஏற்று, அண்டை மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்த மாணவர்களின் சான்றிதழ்களை, ஆய்வுக்குப் பின், துறை இயக்குனர், ஒப்புதல் அளிக்கலாம் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, புதிய அரசாணையையும், தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, விரைவில், தமிழக அரசின் அங்கீகாரம் அளிக்கப்படும் என, துறை வட்டாரம் தெரிவித்தது.