இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, July 11, 2014

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை

 | 2011, 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை | 2011, 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் தங்களின் பதிவுமூப்பை தக்க வைத்துக் கொள்ளவும், அதன்மூலம் வேலை வாய்ப்பை பெறவும் உதவும் வகையில் முதல்வர் உத்தரவின் படி, 2014-15-ம் ஆண்டில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப் படுகிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ப.மோகன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் சலுகை வழங்கப் படுகிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ப.மோகன் வெள்ளிக்கிழமை அறிவித்தார். ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசிய ஊரகத் தொழில்துறை அமைச்சர் ப.மோகன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: 2011, 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் தங்களின் பதிவுமூப்பை தக்க வைத்துக் கொள்ளவும், அதன்மூலம் வேலை வாய்ப்பை பெறவும் உதவும் வகையில் முதல்வர் உத்தரவின் படி, 2014-15-ம் ஆண்டில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். இதனால் சுமார் 1 லட்சம் பதிவுதாரர்கள் பயன்பெறுவார்கள். அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு பதிவு புதுப்பித்தலுக்கான தற்போதுள்ள கால வரம்பு 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்படும். வேகமாக வளர்ந்து வரும் கட்டுமானத் தொழில்களில் பல புதிய கட்டுமான தொழிலினங்கள் உருவாகியுள்ளன. புதிய வகை கட்டுமானத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களையும் உறுப்பினர்களாக பதிவு செய்ய வழிவகை செய்து அவர்களுக்கு பணப்பயன் கிடைக்கும் பொருட்டு 2014-15-ம் ஆண்டில் 1994-ம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (கட்டுமானத் தொழிலாளர்கள்) நலத்திட்டத்தில் தற்போது அட்டவணையில் உள்ள 38 வகை தொழில் இனங்களுடன் மேலும் 15 கட்டுமானத் தொழில் இனங்கள் சேர்க்கப்படும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும்.

12 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் வேலைவாய்ப்பு அதிகமுள்ள வெல்டர், எலக்ட்ரீசியன், வயர்மேன், ஏ.சி.மெக்கானிக் போன்ற தொழிற்பிரிவுகள் தொடங்கப்படும். காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்காக புதிதாக பொருத்துநர் தொழிற்பிரிவு நாகர்கோவில், உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொடங்கப்படும். தொழிற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியில் மாணவர் சேர்க்கைக்கான வயது வரம்பு 40-ல் இருந்து 50 ஆக உயர்த்தப்படும். அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மகளிர் சேர்க்கைக்கான வயது உச்சவரம்பு நீக்கப்படும். ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களுடன் அத்திப்பட்டு, பெருங்குடி (மதுரை), திருநெல்வேலி புறநகர், துலுக்கர்குளம் புறநகர், கொண்டாநகரம், நாங்குநேரி புறநகர், மோரூர் ஆகிய புதிய பகுதிகள் இணைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ப.மோகன் அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழக கல்வுதுறையில் நடந்த முறைகேடு கலந்தாய்வு குறித்து விசாரணை-தினமலர்

:'தமிழக கல்வித் துறையில் நடந்து முடிந்த 'கவுன்சிலிங்' காலியிடங்கள் மறைப்பு, அரசியல் குறுக்கீடு போன்றவற்றால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்,' என்ற தகவலால், மாவட்டம் தோறும் உளவுத் துறை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு ஜூன் 17 முதல் ஜூலை 2 வரையும், ஜூன் 16 முதல் 30 வரை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்தாண்டு 'ஆன்லைன்' மூலம் 'கவுன்சிலிங்' நடந்தது.இதில் பல பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

குறிப்பாக, 'முதல் நாளில் மாவட்டத்திற்குள் நடந்த 'கவுன்சிலிங்'கில் காண்பிக்கப்பட்ட காலியிடங்கள், மறுநாள் மாவட்டங்களுக்கு இடையே நடந்த மாறுதலில் காண்பிக்கப்படவில்லை' என்றும், உயர்நிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதல் நாளில் 'சர்பிளஸ்' மாறுதலில் காட்டப்பட்ட கூடுதல் பணியிடங்கள், மறுநாளில் மாவட்டங்களுக்கு இடையே நடந்த மாறுதலில் காண்பிக்கப்படவில்லை. இதனால், பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் புறக்கணிப்பு மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இரவில் நடந்த கவுன்சிலிங்: 'கடந்தாண்டு, காலை 10 மணிக்கு 'கவுன்சிலிங்' துவங்கியது. ஆனால், இந்தாண்டு பெரும்பாலும் மதியம் 1 மணிக்கு மேல் தான் அனைத்து நாட்களிலும் துவங்கியது. குறிப்பாக, இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான பணிமாறுதல் மாலை துவங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடந்தது. அதேபோல், மாவட்டங்களுக்கு இடையேயான பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் மாறுதலும் இரவு முழுவதும் நடந்தன.

இதுகுறித்து விசாரித்தாலே பல விஷயங்கள் வெளியே வரும்,' என்று ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். டி.இ.ஓ.,க்கள் மாற்றம் விவகாரம்: இதுதவிர, கல்வித் துறையை 'கலங்கடித்த' பல விஷயங்கள் குறித்தும் உளவுத்துறை போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். குறிப்பாக, மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் 'லிஸ்ட்' பணி மூப்பு அடிப்படையில் வெளிப்படையான அறிவிப்பு வெளியாகும். ஆனால் இந்தாண்டு, பதவி உயர்வோ, பணியிட மாற்றமோ ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் தனித்தனியான உத்தரவுகள் வழங்கப்பட்டு 'ரகசியம்' காக்கப்பட்டது.

மேலும், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தொலைதுார மாவட்டங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் மாற்றப்பட்டு, பின் ஒருசில வாரங்களில் மீண்டும் அவர்கள் ஏன் மாற்றப்பட்டனர் என்றும், அவர்களின் பெயர் விவரங்களும் தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்தாண்டு நடந்த ஆசிரியர் 'கவுன்சிலிங்'கில் அதிக எண்ணிக்கையில் காலி பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆசிரியர்கள் அதிருப்தி குறித்து சங்கங்கள் சார்பில் அரசு கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் அரசியல் குறுக்கீடு மற்றும் பேரம் ஏதும் நடந்ததா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது," என்றார்.

காத்திருக்கு 60 உத்தரவுகள்!பள்ளிக் கல்வியில் கண்காணிப்பாளர், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர், உதவியாளர் உட்பட நுாற்றுக்கணக்கான அமைச்சுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது, கண்காணிப்பாளர் மாறுதல் மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வுக்கான 60 பேருக்கான உத்தரவுகள் தயாரிக்கப்பட்டு, இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரிக்கு அனுப்பி வைத்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. ஆனால், ஏதோ காரணத்திற்காக அந்த 60 பேரின் உத்தரவுகளும் காத்திருக்கின்றன, என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

INTEREST – Rate of interest on Loans and Advances sanctioned by the State Government – Interest rates for the year 2014-2015 – Orders – Issued.

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதி


சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.கே.கவுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ராஜேஷ்குமார் அகர்வால் கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பை தற்காலிகமாக நீதிபதி எஸ்.கே.அக்னி கோத்ரி கவனித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
56 வயதாகும் நீதிபதி எஸ்.கே.கவுல் டெல்லியைச் சேர்ந்தவர். 1982 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி வழக்கறிஞரானார். டெல்லி உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் அவர் வழக்கறிஞராக பணிபுரிந்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு எஸ்.கே.கவுல் பஞ்சாப்–அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

Thursday, July 10, 2014

பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு நாளை (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன்

ாளை முடிவு தெரியும் கடந்த மார்ச் மாதம் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் எழுதி உடனே கல்லூரியில் சேர்வதற்கு வசதியாக அரசு பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி இந்த வருடம் பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. சிறப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) மதிப்பெண் சான்றிதழ்களை நாளை (சனிக்கிழமை) முற்பகல் 11 மணி முதல் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப் படமாட்டாது.

புதிய நடைமுறைகளினால், கடந்த ஆண்டை விட 20 நாட்கள் முன்னதாகவே இந்த ஆண்டு தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுகிறது. விடைத்தாள் நகல் பெற விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு 14–ந்தேதி முதல் 16–ந்தேதி வரை நேரில் சென்று உரிய கட்டணத்துடன் ஆன்–லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50–ஐ பணமாகச் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விடைத்தாள் நகல் பெற கட்டண விவரம் வருமாறு:– பகுதி – 1 மொழி – ரூ.550, பகுதி – 2 மொழி (ஆங்கிலம்) – ரூ.550 ஏனையப் பாடங்கள் – ரூ.275–(ஒவ்வொன்றிற்கும்) மறுகூட்டல் கட்டணம் வருமாறு:– பகுதி – 1 மொழி, பகுதி –2 மொழி (ஆங்கிலம்) – ரூ. 305–மற்றும் உயிரியல் (ஒவ்வொன்றிற்கும்) ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) ரூ.205 விண்ணப்பித்தபின் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வுத் துறையால் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் விடைத்தாள்களின் நகல்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். மறுகூட்டல் முடிவுகள் பற்றி அறிய இயலும். இந்த தகவலை அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

2014ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் - கல்வி தொடர்பான நிதி ஒதுக்கீடுகள-tnkalvi


நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜுலை 10ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில், மதிய உணவு திட்டத்திற்காக, ரூ.13,215 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் பல்வேறான பிரிவுகளில், கல்விக்கென்று நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அவை,

* மதிய உணவுத் திட்டத்திற்கு, ரூ.13,215 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.4,727 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* எய்ம்ஸ் போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்த ரூ.1,650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* சர்வ சிக்சா அபியான்(SSA) திட்டத்திற்கு ரூ.27,250 கோடி ஒதுக்கீடு

* நாளந்தா பல்கலைக்கழகம் சிறப்பான முறையில் மறுநிர்மாணம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், அதற்கான குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை.

கல்வித்துறை தொடர்பான இதர அறிவிப்புகள்

* ஆந்திரா, மேற்கு வங்கம், குஜராத் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிதாக 4 எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்படும். அதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* உயர்கல்விக்கான வங்கிக் கடன் பெறும் நடைமுறைகளை எளிதாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* ரூ.30 கோடியில் பள்ளி மதிப்பாய்வு திட்டம் தொடங்கப்படும்.

* அசாம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில், வேளாண் மற்றும் விவசாய தொழில்நுட்பத்திற்கான 2 புதிய கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும்.

* அசாம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், 2 ஆராய்ச்சி மையங்கள் தொடங்கப்படும்

* பெங்களூர் மற்றும் ஹரியானாவின் பரிதாபாத்தில், 2 புதிய பயோடெக்னாலஜி கொத்துக்கள்(clusters) தொடங்கப்படும்.

* பள்ளிப் பாடத்திட்டமானது பாலின முக்கியத்துவம் குறித்த ஒரு தனி அத்தியாயத்தை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்ற செயல்திட்டம்.

* சுங்கம் மற்றும் கலால் துறை தொடர்பாக, ஆந்திர மாநிலத்தில், ஒரு தேசிய கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்படும்.

* வேலைவாய்ப்பு பதிவு மையங்கள், கேரியர் மையங்களாக மாற்றப்பட்டு, தகவல் மற்றும் ஆலோசனை உதவிகள் வழங்கப்படுவதற்கான திட்டம்.

* பொதுத்துறை மற்றும் தனியார் ஒத்துழைப்பின் மூலம், நானோடெக்னாலஜி துறைக்கான 5 தொழில்நுட்ப ஆராய்ச்சி மையங்கள் வலுப்படுத்தப்படும்.

GROUP 1 HALL TICKET RELEASED

வருமானவரி விலக்கு 2.5லட்சமாகவும், சேமிப்பிற்கான வரிவிலக்கு ஒரு லட்சத்தில் இருந்து 1.50 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தியும் அறிவிப்பு தனிநபர் வருமானவரி விலக்கு பெறும் தொகையில் 50 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தனிநபர் வருமானவரி விலக்கு தொகை 2.50 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் மூத்த குடிமக்களுக்கான வரி விலக்கு தொகை 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  சேமிப்பிற்கான வரிவிலக்கு ஒரு லட்சத்தில் இருந்து 1.50 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Wednesday, July 09, 2014

பொது பட்ஜெட் துளிகள்

* நிர்பயா நிதி மூலம் பெண்கள் பாதுகாப்புக்கு மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்.

* சமுதாய வானொலி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* பிராட்பேண்ட் மூலம் கிராமங்கள் இணைக்கப்படும்.

* அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரம் மின்சாரம் வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது.

* ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு ரூ.33000 கோடி ஒதுக்கீடு.

* வங்கிகளுக்கு கூடுதல் தன்னாட்சி அளித்து மேலும் பொறுப்புடமையாக்க பரிசீலனை.

* தபால் திட்டங்களில் பயன்படுத்தப்பட்டால் உள்ள நிதியை பயன்படுத்துவதை ஆராய குழு.

* நாட்டில் புதிதாக 5 ஐஐடி மற்றும் 5 ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்.

* அடுத்து 6 மாதங்களில் 9 முக்கிய விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.

* மென்பொருள் தொடர்பான சிறு தொழில் தொடங்குவோருக்கு ஊக்குவிப்பு.

* நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீட்டு வசதி செய்துத்தர 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* 12 புதிய மருத்துவக் கல்லூரிகள் இந்த நிதியாண்டில் அமைக்கப்படும்.

* மின் விநியோக திட்டங்களுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

* ஆந்திர மகாராஷ்டிரா, மேற்கும்வங்கம், உத்தரபிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

* மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் பல் மருத்துவம், காசநோய் சிகிச்சை மையங்கள் உருவாக்கப்படும்.

* படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.

* சிறு தொழில் முனைவோரின் திட்டங்களை ஊக்குவிக்க ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.

* வங்கி அல்லாத சேமிப்பாக கிசான் விகாஸ் பத்திரங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.

* தேசிய வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.8000 கோடி நிதி ஒதுக்கீடு.

* தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்துக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு.

* டெல்லியை போன்று சென்னையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.

* வங்கி அல்லாத சேமிப்பாக கிசான் விகாஸ் பத்திரங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.

*  பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு.

* சுற்றுலாவை மேம்படுத்த மின்னணு விசா முறை 9 விமான நிலையங்களில் அறிமுகம் செய்யப்படும்.

* பயணிகள் வருகை தந்ததும் விசா பெற வசதி செய்யப்படும்.

* கிராமங்களில் மின்வசதி ஏற்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு.

* வேலைவாய்ப்புக்கு உதவ பயிற்சிகள் அளிக்கும் வகையில் திறன் இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

* பாசன வசதிகளை மேம்படுத்த 1000 கோடி ஒதுக்கீடு.

* 2019ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் எல்லா வீடுகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும்.

* அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேர மின் வசதியை ஏற்படுத்துவதே இலக்கு.

* கிராமப்புற மின்வசதியை அதிகரிக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலனுக்காக ரூ.50,047 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* ரூபாய் நோட்டுகளில் பிரெய்லி எழுத்து முறை அறிமுகம் செய்யப்படும்.

* தொழிற்துறையுடன் அடிக்கடி ஆலோசனை நடத்த தனிக்குழு அமைக்கப்படும்.

* குறிப்பிட்ட சில துறைகளில் அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிக்கப்படும்.

* இந்தாண்டு இறுதிக்குள் பொருட்கள், சேவை வரிக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

* ராணுவத்துறையில் அந்நிய நேரடி முதலீடு 21 சதவிகிதத்தில் இருந்து 49 சதவிகிதமாக அதிகரிக்கப்படும்.

* 100 நவீன நகரங்களை உருவாக்க ரூ.7,060 கோடி நிதி ஒதுக்கீடு.

* வரி வருவாய் அதிகரிக்கப்பட வேண்டும்.

* வரி வசூலிப்பு நடைமுறைகள் மேம்படுத்தப்படும்.

* முதலீட்டாளர்களுக்கு சாதகமான வரிக்கொள்கைகள் உருவாக்கப்படும்.

* பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகதமாக அதிகரிக்கப்படும்.

* காப்பீட்டு்துறையிலும்  அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகிதமாக உயர்த்தப்படும்.

* பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீடு மூலம் கூடுதல் நிதி ஆதாரம் திரட்டப்படும்.

* 2018ஆம் ஆண்டுக்குள் வங்கிகளுக்கு 2.4 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்.

* வலுவான இந்தியாவை உருவாக்க விரும்புகிறோம்.

* அரசின் செலவினங்களை நிர்வகிக்க தனிக் குழு நியமிக்கப்படும்.

* பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது.

ஓபிசி சான்றிதழில் மாற்றம்

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓபிசி), இடஒதுக்கீடு சலுகையை எளிதில் பெறும் வகையில், அவர்களது சாதிச் சான்றிதழின் அமைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, சாதிச் சான்றிதழில் பெயர், சாதி, மற்றும் அதன் உள்பிரிவுகளை மட்டும் குறிப்பிட இடம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, எந்த விதிகளின்படி குறிப்பிட்ட அந்த சாதி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினராக மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை குறிப்பிட புதிதாக இடம் அளிக்கப்பட்டுள்ளது

. "இந்த விவகாரம் குறித்து, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான தேசிய ஆணையத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டு, அதையடுத்து இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான சாதிச் சான்றிதழ் மாற்றியமைக்கப்பட்டது. இடஒதுக்கீடு சலுகையை பெறுவதில் உள்ள சிரமங்களை குறிப்பிட்டு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்ததை அடுத்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்று மக்களவையில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்: அரசு விளக்கம்

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஓய்வுபெற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மட்டுமே பொருந்தும் என்று நிதித் துறை செயலாளர் க.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட பிற துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கும் இந்த மருத்துவக் காப்பீடு பொருந்துமா? என்பது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு விளக்கமளித்துள்ள நிதித் துறை செயலாளர் க.சண்முகம், உள்ளாட்சி அமைப்புகள், மாநில பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட தமிழக அரசு சார்பிலான நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தனது விளக்கக் கடிதத்தில் சண்முகம் தெரிவித்துள்ளார்.

மாநில நல்லாசிரியர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு: கல்வித்துறை

தமிழகத்தில், மாநில நல்லாசிரியர் விருது பெற, விரும்பும் ஆசிரியர்கள், ஜூலை 16க்குள் விண்ணப்பிக்குமாறு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 2013--14ம் ஆண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது பெறுவோருக்கான, சிறந்த ஆசிரியர்கள் தேர்வு கல்வித்துறை இயக்குனரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, அறிவித்துள்ளது. அதன்படி, உயர்,மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடமும், தொடக்க, நடுநிலைபள்ளிகளில் பணிபுரிவோர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடமும், மெட்ரிக்.,பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அந்தந்த மெட்ரிக்.,பள்ளி ஆய்வாளர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, பூர்த்தி செய்து, ஜூலை 16க்குள் ஒப்படைக்க வேண்டும்.தகுதி: நல்லாசிரியர் விருது பெற, தலைமை ஆசிரியர்கள் 20 ஆண்டுகளும், ஆசிரியர், சிறப்பு ஆசிரியர்கள் குறைந்தது 15 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கவேண்டும். 30.09.2013 வரை மறுநியமன காலம் இல்லாமல்,பணி புரிந்திருக்கவேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லாசிரியர் விருதுபெற விரும்பும், ஆசிரியர்களிடமிருந்து, விண்ணப்பத்தை பெற்று, கல்வித்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்குமாறு, முதன்மை கல்வி அலுவலகத்திற்கு, உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 'கவுன்சிலிங் பாக்ஸ்' : முதற்கட்டமாக 480 பள்ளிகளில் அமல்

   அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, கற்றல் குறைபாடு உள்ளிட்ட, பல்வேறு பிரச்னைகளை தீர்க்க, பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு, 'கவுன்சிலிங்' அளிக்கப்பட உள்ளது. இதற்காக, முதற்கட்டமாக, மாவட்டந்தோறும், 15 பள்ளிகள் வீதம், 480 பள்ளிகளில், 'கவுன்சிலிங் பாக்ஸ்' அமைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு, பல்வேறு மனநல பிரச்னைகள், கற்றலில் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றை தீர்க்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, நடமாடும் உளவியல் ஆலோசகர்களும், பள்ளி ஆசிரியர்களும், கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை சந்தித்து, 'கவுன்சிலிங்' நடத்த உள்ளனர்.இதற்காக, மாவட்ட வாரியாக, குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், நிபுணர் குழு மூலம், பயிற்சி அளித்து வருகிறது. மாணவர்களின் பிரச்னையை அறிவது எப்படி, அதை எப்படி தீர்ப்பது என்பது குறித்து, பல கட்டமாக, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இதையடுத்து, அடுத்த மாதம், மாவட்டத்திற்கு, 15 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் வீதம், 32 மாவட்டங்களிலும், 480 பள்ளிகளில், 'கவுன்சிலிங் பாக்ஸ்' நிறுவப்படும். இதுகுறித்து, ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கும் டாக்டர், விருத்தகிரிநாதன் கூறியதாவது

: *ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு சென்றதும், நான்கு, ஐந்து வகுப்பு களை இணைத்து, மாணவர் மத்தியில், கற்றல் குறைபாடு குறித்து, பொதுவான கருத்துகளை கூறி, அவர்கள் மத்தியில், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

*ஒரு மாதம் இடைவெளி விட்டு, மீண்டும் ஒரு முறை மாணவர்களை அழைத்து, 'கவுன்சிலிங்' குறித்து, பேச வேண்டும். அப்போது, அன்பான முறையில் அவர்களை அணுகி, 'மாணவர்கள், தங்களுக்குள்ள கற்றல் பிரச்னைகள் குறித்து, கவுன்சிலிங் பெட்டியில், எழுதிப்போடலாம். அது, மிகவும் ரகசியமானது' என, தெரிவிக்க வேண்டும

். *கண்டிப்பாக, இரு மாணவர்களாவது, தங்கள் பிரச்னையை எழுதிப்போடுவர். அந்த மாணவர்களை அழைத்துப்பேசி, பள்ளி முடிந்தபின், முறையாக பயிற்சி அளிக்க வேண்டும். இரு மாணவர்களின் பிரச்னைகளை சரிசெய்துவிட்டால், மற்ற மாணவர்களும், சகஜமாக, தங்களின் பிரச்னைகளை வெளிப்படுத்த முன்வருவர். இவ்வாறு, விருத்தகிரிநாதன் கூறினார். -

-SSA - 2014-15 TENTATIVE UPPER PRIMARY TRG LIST

SSA - 2014-15 TENTATIVE PRIMARY TRG LIST

GPF Account Statements for the Year 2013-2014

Tuesday, July 08, 2014

பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்விக் கூடத்தின் எம்.எட். நுழைவுத்தேர்வு தேதி ஜூலை 27-ஆம் தேதிக்கு மாற்றம

பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்விக் கூடத்தின் எம்.எட். படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூலை 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறுவதாக இருந்தது. அதேநாளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வும் நடைபெற உள்ளது. எனவே, நுழைவுத்தேர்வை வேறு தேதியில் வைக்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்களிடம் வேண்டுகோள் வந்தது.

அதையேற்று, நுழைவுத்தேர்வு தேதி 20- ஆம் தேதிக்குப் பதிலாக 27-ஆம் தேதி நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, பாரதியார் பல்கலைக்கழகத்தின் http://www.b-u.ac.in/இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.