இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, July 09, 2014

பொது பட்ஜெட் துளிகள்

* நிர்பயா நிதி மூலம் பெண்கள் பாதுகாப்புக்கு மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்.

* சமுதாய வானொலி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* பிராட்பேண்ட் மூலம் கிராமங்கள் இணைக்கப்படும்.

* அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரம் மின்சாரம் வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது.

* ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு ரூ.33000 கோடி ஒதுக்கீடு.

* வங்கிகளுக்கு கூடுதல் தன்னாட்சி அளித்து மேலும் பொறுப்புடமையாக்க பரிசீலனை.

* தபால் திட்டங்களில் பயன்படுத்தப்பட்டால் உள்ள நிதியை பயன்படுத்துவதை ஆராய குழு.

* நாட்டில் புதிதாக 5 ஐஐடி மற்றும் 5 ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்.

* அடுத்து 6 மாதங்களில் 9 முக்கிய விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.

* மென்பொருள் தொடர்பான சிறு தொழில் தொடங்குவோருக்கு ஊக்குவிப்பு.

* நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீட்டு வசதி செய்துத்தர 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* 12 புதிய மருத்துவக் கல்லூரிகள் இந்த நிதியாண்டில் அமைக்கப்படும்.

* மின் விநியோக திட்டங்களுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

* ஆந்திர மகாராஷ்டிரா, மேற்கும்வங்கம், உத்தரபிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

* மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் பல் மருத்துவம், காசநோய் சிகிச்சை மையங்கள் உருவாக்கப்படும்.

* படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.

* சிறு தொழில் முனைவோரின் திட்டங்களை ஊக்குவிக்க ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.

* வங்கி அல்லாத சேமிப்பாக கிசான் விகாஸ் பத்திரங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.

* தேசிய வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.8000 கோடி நிதி ஒதுக்கீடு.

* தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்துக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு.

* டெல்லியை போன்று சென்னையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.

* வங்கி அல்லாத சேமிப்பாக கிசான் விகாஸ் பத்திரங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.

*  பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு.

* சுற்றுலாவை மேம்படுத்த மின்னணு விசா முறை 9 விமான நிலையங்களில் அறிமுகம் செய்யப்படும்.

* பயணிகள் வருகை தந்ததும் விசா பெற வசதி செய்யப்படும்.

* கிராமங்களில் மின்வசதி ஏற்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு.

* வேலைவாய்ப்புக்கு உதவ பயிற்சிகள் அளிக்கும் வகையில் திறன் இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

* பாசன வசதிகளை மேம்படுத்த 1000 கோடி ஒதுக்கீடு.

* 2019ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் எல்லா வீடுகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும்.

* அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேர மின் வசதியை ஏற்படுத்துவதே இலக்கு.

* கிராமப்புற மின்வசதியை அதிகரிக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலனுக்காக ரூ.50,047 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* ரூபாய் நோட்டுகளில் பிரெய்லி எழுத்து முறை அறிமுகம் செய்யப்படும்.

* தொழிற்துறையுடன் அடிக்கடி ஆலோசனை நடத்த தனிக்குழு அமைக்கப்படும்.

* குறிப்பிட்ட சில துறைகளில் அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிக்கப்படும்.

* இந்தாண்டு இறுதிக்குள் பொருட்கள், சேவை வரிக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

* ராணுவத்துறையில் அந்நிய நேரடி முதலீடு 21 சதவிகிதத்தில் இருந்து 49 சதவிகிதமாக அதிகரிக்கப்படும்.

* 100 நவீன நகரங்களை உருவாக்க ரூ.7,060 கோடி நிதி ஒதுக்கீடு.

* வரி வருவாய் அதிகரிக்கப்பட வேண்டும்.

* வரி வசூலிப்பு நடைமுறைகள் மேம்படுத்தப்படும்.

* முதலீட்டாளர்களுக்கு சாதகமான வரிக்கொள்கைகள் உருவாக்கப்படும்.

* பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகதமாக அதிகரிக்கப்படும்.

* காப்பீட்டு்துறையிலும்  அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகிதமாக உயர்த்தப்படும்.

* பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீடு மூலம் கூடுதல் நிதி ஆதாரம் திரட்டப்படும்.

* 2018ஆம் ஆண்டுக்குள் வங்கிகளுக்கு 2.4 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்.

* வலுவான இந்தியாவை உருவாக்க விரும்புகிறோம்.

* அரசின் செலவினங்களை நிர்வகிக்க தனிக் குழு நியமிக்கப்படும்.

* பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது.

ஓபிசி சான்றிதழில் மாற்றம்

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓபிசி), இடஒதுக்கீடு சலுகையை எளிதில் பெறும் வகையில், அவர்களது சாதிச் சான்றிதழின் அமைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, சாதிச் சான்றிதழில் பெயர், சாதி, மற்றும் அதன் உள்பிரிவுகளை மட்டும் குறிப்பிட இடம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, எந்த விதிகளின்படி குறிப்பிட்ட அந்த சாதி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினராக மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை குறிப்பிட புதிதாக இடம் அளிக்கப்பட்டுள்ளது

. "இந்த விவகாரம் குறித்து, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான தேசிய ஆணையத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டு, அதையடுத்து இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான சாதிச் சான்றிதழ் மாற்றியமைக்கப்பட்டது. இடஒதுக்கீடு சலுகையை பெறுவதில் உள்ள சிரமங்களை குறிப்பிட்டு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்ததை அடுத்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்று மக்களவையில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்: அரசு விளக்கம்

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஓய்வுபெற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மட்டுமே பொருந்தும் என்று நிதித் துறை செயலாளர் க.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட பிற துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கும் இந்த மருத்துவக் காப்பீடு பொருந்துமா? என்பது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு விளக்கமளித்துள்ள நிதித் துறை செயலாளர் க.சண்முகம், உள்ளாட்சி அமைப்புகள், மாநில பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட தமிழக அரசு சார்பிலான நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தனது விளக்கக் கடிதத்தில் சண்முகம் தெரிவித்துள்ளார்.

மாநில நல்லாசிரியர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு: கல்வித்துறை

தமிழகத்தில், மாநில நல்லாசிரியர் விருது பெற, விரும்பும் ஆசிரியர்கள், ஜூலை 16க்குள் விண்ணப்பிக்குமாறு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 2013--14ம் ஆண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது பெறுவோருக்கான, சிறந்த ஆசிரியர்கள் தேர்வு கல்வித்துறை இயக்குனரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, அறிவித்துள்ளது. அதன்படி, உயர்,மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடமும், தொடக்க, நடுநிலைபள்ளிகளில் பணிபுரிவோர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடமும், மெட்ரிக்.,பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அந்தந்த மெட்ரிக்.,பள்ளி ஆய்வாளர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, பூர்த்தி செய்து, ஜூலை 16க்குள் ஒப்படைக்க வேண்டும்.தகுதி: நல்லாசிரியர் விருது பெற, தலைமை ஆசிரியர்கள் 20 ஆண்டுகளும், ஆசிரியர், சிறப்பு ஆசிரியர்கள் குறைந்தது 15 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கவேண்டும். 30.09.2013 வரை மறுநியமன காலம் இல்லாமல்,பணி புரிந்திருக்கவேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லாசிரியர் விருதுபெற விரும்பும், ஆசிரியர்களிடமிருந்து, விண்ணப்பத்தை பெற்று, கல்வித்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்குமாறு, முதன்மை கல்வி அலுவலகத்திற்கு, உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 'கவுன்சிலிங் பாக்ஸ்' : முதற்கட்டமாக 480 பள்ளிகளில் அமல்

   அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, கற்றல் குறைபாடு உள்ளிட்ட, பல்வேறு பிரச்னைகளை தீர்க்க, பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு, 'கவுன்சிலிங்' அளிக்கப்பட உள்ளது. இதற்காக, முதற்கட்டமாக, மாவட்டந்தோறும், 15 பள்ளிகள் வீதம், 480 பள்ளிகளில், 'கவுன்சிலிங் பாக்ஸ்' அமைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு, பல்வேறு மனநல பிரச்னைகள், கற்றலில் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றை தீர்க்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, நடமாடும் உளவியல் ஆலோசகர்களும், பள்ளி ஆசிரியர்களும், கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை சந்தித்து, 'கவுன்சிலிங்' நடத்த உள்ளனர்.இதற்காக, மாவட்ட வாரியாக, குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், நிபுணர் குழு மூலம், பயிற்சி அளித்து வருகிறது. மாணவர்களின் பிரச்னையை அறிவது எப்படி, அதை எப்படி தீர்ப்பது என்பது குறித்து, பல கட்டமாக, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இதையடுத்து, அடுத்த மாதம், மாவட்டத்திற்கு, 15 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் வீதம், 32 மாவட்டங்களிலும், 480 பள்ளிகளில், 'கவுன்சிலிங் பாக்ஸ்' நிறுவப்படும். இதுகுறித்து, ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கும் டாக்டர், விருத்தகிரிநாதன் கூறியதாவது

: *ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு சென்றதும், நான்கு, ஐந்து வகுப்பு களை இணைத்து, மாணவர் மத்தியில், கற்றல் குறைபாடு குறித்து, பொதுவான கருத்துகளை கூறி, அவர்கள் மத்தியில், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

*ஒரு மாதம் இடைவெளி விட்டு, மீண்டும் ஒரு முறை மாணவர்களை அழைத்து, 'கவுன்சிலிங்' குறித்து, பேச வேண்டும். அப்போது, அன்பான முறையில் அவர்களை அணுகி, 'மாணவர்கள், தங்களுக்குள்ள கற்றல் பிரச்னைகள் குறித்து, கவுன்சிலிங் பெட்டியில், எழுதிப்போடலாம். அது, மிகவும் ரகசியமானது' என, தெரிவிக்க வேண்டும

். *கண்டிப்பாக, இரு மாணவர்களாவது, தங்கள் பிரச்னையை எழுதிப்போடுவர். அந்த மாணவர்களை அழைத்துப்பேசி, பள்ளி முடிந்தபின், முறையாக பயிற்சி அளிக்க வேண்டும். இரு மாணவர்களின் பிரச்னைகளை சரிசெய்துவிட்டால், மற்ற மாணவர்களும், சகஜமாக, தங்களின் பிரச்னைகளை வெளிப்படுத்த முன்வருவர். இவ்வாறு, விருத்தகிரிநாதன் கூறினார். -

-SSA - 2014-15 TENTATIVE UPPER PRIMARY TRG LIST

SSA - 2014-15 TENTATIVE PRIMARY TRG LIST

GPF Account Statements for the Year 2013-2014

Tuesday, July 08, 2014

பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்விக் கூடத்தின் எம்.எட். நுழைவுத்தேர்வு தேதி ஜூலை 27-ஆம் தேதிக்கு மாற்றம

பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்விக் கூடத்தின் எம்.எட். படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூலை 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறுவதாக இருந்தது. அதேநாளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வும் நடைபெற உள்ளது. எனவே, நுழைவுத்தேர்வை வேறு தேதியில் வைக்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்களிடம் வேண்டுகோள் வந்தது.

அதையேற்று, நுழைவுத்தேர்வு தேதி 20- ஆம் தேதிக்குப் பதிலாக 27-ஆம் தேதி நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, பாரதியார் பல்கலைக்கழகத்தின் http://www.b-u.ac.in/இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இரண்டாண்டு படிப்பாகிறது பி.எட்.,ஓராண்டு படிப்பு முடிவதால் மவுச

கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.,) அடுத்த ஆண்டு முதல், இரண்டாண்டு படிப்பாக மாற்றப்படுவது உறுதியாகி உள்ளதால், நடப்பாண்டு, பி.எட்., படிப்பிற்கு கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் படிப்புகளில் ஒன்றான, பி.எட்., பட்டப்படிப்பு, ஓராண்டு படிப்பாக இருந்து வருகிறது. மத்திய அரசால், பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் திறன், கல்வியால் பெற்ற அவர்களின் அறிவுத்திறன் ஆகியவை, நுண்ணிய ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில், தமிழக மாணவர்களின் அறிவுத்திறன் மிக குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.எனவே, கல்வி கற்பித்துத் தரும் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதற்காக, பி.எட்., படிப்பை, அடுத்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டு படிப்பாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்கான, சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த கல்வியாண்டு முதல், இது நடைமுறைப் படுத்தப்படுவது உறுதியாகி உள்ளது.இதனால், இந்த கல்வியாண்டு மட்டும் தான், ஓராண்டு கொண்ட பி.எட்., படிப்பு நடைமுறையில் இருக்கும். படிப்பு செலவினங்கள், கால விரயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பி.எட்., படிப்பிற்கு, இந்த கல்வியாண்டில், கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக, வெறிச்சோடிய பல கல்வியியல் கல்லுாரிகளிலும், தற்போது மாணவ, மாணவியரின் கூட்டம் அலை மோதுகிறது.-

Monday, July 07, 2014

இம்மாதம் இறுதியில் வண்ண அடையாள அட்டை வினியோகம்

தமிழகத்தில், வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி, இம்மாதம் இறுதியில் துவங்குகிறது.இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன் குமார் கூறியதாவது:தமிழகத்தில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், மாநிலம் முழுவதும், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இம்முகாமில், ஒரே நாளில் 10 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர்.

அதன்பின் தேர்தல் வரை, 2 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.இப்பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய, வாக்காளர் அடையாள அட்டை, தேர்தலுக்கு பின் வழங்க முடிவு செய்யப்பட்டது.தற்போது, அவர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டு, 'டெண்டர்' கோரப்பட்டது.டெண்டர் இறுதி செய்யும் பணி முடிந்து, அடையாள அட்டை அச்சிடும் பணி துவங்கி உள்ளது. இப்புதிய அட்டைகள், வாக்காளர்களுக்கு இம்மாதம் இறுதியில் வழங்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வி - 2013-14ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான நல்லாசிரியர் விருது பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய கருத்துருக்களை கோருதல் சார்பு

Sunday, July 06, 2014

டி.இ.இ.ஓ.,க்கள் உத்தரவு திடீர் நிறுத்தி வைப்பு கண்ணீரில் 'கவுன்சிலிங்' ஆசிரியர்கள்

தொடக்கக்கல்வி துறை கவுன்சிலிங்கில், மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர்கள் (டி.இ.இ.ஓ.,க்கள்)அளித்த 'மனமொத்து' பணிமாறுதல் (மியூட்சுவல் டிரான்ஸ்பர்) உத்தரவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பணிமாறுதல் பெற்றும் ஆசிரியர்கள் விருப்ப பள்ளிகளில் சேர முடியாமல் தவிக்கின்றனர். தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு ஜூன் 17 முதல் ஜூலை 2 வரை பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நடந்தது

. இதில், நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான பணிமாறுதல் கவுன்சிலிங் ஜூன் 30 முதல் ஜூலை2வரை நடந்தது.இதில்,ஒவ்வொரு மாவட்டத்திலும் மனமொத்து பணிமாற தயாராக இருந்தவர்களுக்கு, அந்தந்த டி.இ.இ.ஓ.,க்களே உத்தரவுகளை வழங்கினர். இதுவரை நடந்த கவுன்சிலிங்கில், இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. ஆனால், இந்தாண்டு அவர்களால் வழங்கப்பட்ட உத்தரவுகளை நிறுத்தி வைக்க, இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,ஜூலை 2ல் மாறுதல் உத்தரவு பெற்ற நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள்,விருப்ப பள்ளிகளில் பணியில் சேரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது

. ஏற்கனவே, பணியாற்றிய பள்ளியில் இருந்தும் பணிவிடுவிப்பு உத்தரவு பெற்றுவிட்டதால் அந்த பள்ளிகளுக்கும் அவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது:ஜூலை 2ல் 'கவுன்சிலிங்' பங்கேற்று, மனமொத்த பணிமாற்றத்திற்கான உத்தரவு பெற்றேன்.ஜூலை4ல் நான் ஏற்கெனவே பணியாற்றிய பள்ளியில் பணிவிடுப்பு உத்தரவு பெற்றேன்.ஆனால், கவுன்சிலிங்கில் எனக்கு ஒதுக்கப்பட்ட பள்ளியில் சேர சென்றால், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் அனுமதிக்க மறுக்கின்றனர். "இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கொஞ்சம் 'வெயிட்' பண்ண சொல்லியுள்ளனர்," என்கின்றனர். அதிகாரிகள் 'எதற்காக' இப்படி சொல்லியுள்ளார்கள் என தெரியவில்லை, என்றனர்.

மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில்,"இதுவரை டி.இ.இ. ஓ.,க்களே இப்பணியிட மாற்றத்திற்கான உத்தரவுகள் வழங்கினர்.இனிமேல் 'மனமொத்த மாறுதலும்' இயக்குனர் கட்டுப்பாட்டிற் குள் சென்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்றார்.

பள்ளிகளில் மின் சாதனங்கள் இயக்க மாணவர்களுக்கு தடை

:பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை:பள்ளிகளில், நீர்தேக்க தொட்டிகள், திறந்தவெளி கிணறுகள் இருந்தால், அவற்றை மூடவேண்டும். மின் இணைப்பு, சுவிட்ச் பாக்ஸ் சரியாக இருப்பதை உறுதி செய்யவேண்டும். பள்ளிகளில், மாணவர்களை கொண்டு, மின் சாதனங்களை இயக்கக் கூடாது. சேதமான பள்ளி கட்டடம், சுவர்கள், ஆய்வு கூடங்கள், கம்ப்யூட்டர் அறைகளில், துண்டித்த நிலையில் உள்ள மின் ஒயர்களை அப்புறப்படுத்த வேண்டும

். பள்ளி கட்டட மேல் மாடிக்குச் செல்லும் பாதைகளை மூடவேண்டும். ரோட்டோர பள்ளிகள் முன், வேகத்தடை அமைத்து, தினமும் ஆசிரியரை நியமித்து, மாணவர்களை ரோட்டை கடக்க செய்ய வேண்டும். கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களுக்கு மாணவர்களை அனுமதிக்க கூடாது.பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் இருந்தால், அவற்றை அகற்ற வேண்டும். முதலுதவி பெட்டி அவசியம் இருத்தல் வேண்டும்.

Saturday, July 05, 2014

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்: Thanks to-Teachers Friend Devarajan


* தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period
தள்ளிப்போகும்.

* பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை
ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும்.

* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2
வருடங்களுக்குள்)மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான 
EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன்
சேர்த்துக்கொள்ளப்படும். (உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.
எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)

* வருடத்திற்கு 17 நாட்கள் EL. அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப்
பெறலாம் .

* மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும்
பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம்.

* 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.

* வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21.

* எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற
கணக்கில் கழிக்கப்படுகிறது.

* மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும் ML எடுத்த தாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும். CL, RL, தவிர வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.

* ஒரு நாள் மட்டும் EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.

* அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL
(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம். மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.
அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.

*மாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற நிகழ்வுகளின் போது பழைய இடத்திற்கும் புதிய இடத்திற்குமிடையே குறைந்தது 8
கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் EL
கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். இதற்கு 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட
வேண்டும். (குறைந்தது 5 நாட்கள். 160 கி.மீக்கு மேற்படின்
அட்டவணைப்படி நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்)

*ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்ய
வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கணக்கீட்டிற்கு வசதியாக
இருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண் செய்வது சிறந்தது. எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும்
அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15 நாட்கள் ஒப்படைப்பெனில்
ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்க வேண்டும்.

* ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ,
அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ, ECS ஆகும்
தேதியோ அடுத்தமுறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட
வேண்டியதில்லை.

* EL ஒப்படைப்பு நாளின் போது குறைந்த அளவு அகவிலைப்படியும்
பின்னர் முன்தேதியிட்டு DA உயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில்
அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன்
சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து சுதந்தரித்துக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன்தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக்
காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத்
தகுதியுண்டு.

* பணிநிறைவு / இறப்பின் போது இருப்பிலுள்ள EL நாட்களுக்குரிய (அதிகபட்சம்240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில்
கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.

* அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.

180 நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்கு வீட்டுவாடகைப்படி கிடைக்காது

விரைவில் புதிய சி.இ.ஓ., பட்டியல்

கல்விதுறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், விரைவில் புதிய முதன்ைம கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்), அவர்களுக்கு இணையான நிலையில் உள்ள கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், கடந்த மே 31, மற்றும் ஜூன் 30 ல் பணி ஓய்வு பெற்றனர்.

தற்போது 12 க்கும் மேற்பட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது.இந்த பணியிடங்களை நிரப்ப, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பட்டியல், பணியிட மாற்றம் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் சி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பட்டியல் வெளியிடப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

TNTET-2013:ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆங்கிலப்பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் Caste wise விபரம்.RTI -NEWS


2013 TNTET 90  and Above English= 5220

2013 TNTET  90  and Above Caste wise List
BC-2445
MBC-1744
SC-796
ST -10

2013 TNTET 82 TO 89 in English= 5386

BC-2476
MBC-1615
SC-1015
ST -26
Thanks to-Mr.Eswaran