Tuesday, May 13, 2014
Saturday, May 10, 2014
113 அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வில் தமிழ் நாடு முழுவதும் 113 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு கள் வெள்ளியன்று வெளி யானது. தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் தேர்ச்சி விகி தம் 90.6 சதவீதம் ஆகும்.இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.6 சதவீதம் அதிகம். 3,882 மாணவ மாணவிகள்
கணக்கில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இயற்பிய லில் 2,710 பேரும், வேதியலில் 1,693 பேரும் 200க்கு 200 எடுத்துள்ளனர்.இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 5 சதவீதம் அதிகரித்து உள் ளது. கடந்த ஆண்டு 79 சத வீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 84.1 சத வீதமாக உயர்ந்து உள்ளது.தமிழ்நாடு முழுவதும் 2,403 அரசு மேல் நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 113 அரசு பள்ளிகள் 100 சத விதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இது பற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக் குனர் ராமேஸ்வரமுருகன் கூறும்போது, இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதி காரிகள் அடிக்கடி ஆய்வு செய்து அரசு பள்ளிகளை யும் மாணவ மாணவிகளை யும் ஊக்குவித்தனர். படிப்பில் பின்தங்கிய மாணவ- மாணவி களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. இதுதான் தேர்ச்சி விகிதம் அதி கரிப்புக்கு காரணம் என்றார்.
மே 21 முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் விநியோகம
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் மே 21-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மார்ச் 3 முதல் மார்ச் 25-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. மொத்தம் 2,242 தேர்வு மையங்களில் 8.79 லட்சம் மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர். பள்ளிகளின் மூலமாக 8.26 லட்சம் பேரும், தனித் தேர்வர்களாக 53 ஆயிரம் பேரும் தேர்வுகளை எழுதினர்.
தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) வெளியானது. 90.60 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
பள்ளிகள் மூலம் தேர்வு தேர்வு எழுதிய 8.20 லட்சம் மாணவ, மாணவிகளுக்கும் மே 21-ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி ஏற்கெனவே தொடங்கியுள்ளது.
பி.இ. படிப்பில் சேர விண்ணப்பிக்க...பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்க மே 20-ஆம் தேதி கடைசி தேதியாகும். எனவே, பி.இ. விண்ணப்பத்துடன் இணையதளம் மூலம் பெறப்படும் மதிப்பெண் பட்டியலை இணைத்தால் போதுமானது. மாணவர்கள் கலந்தாய்வுக்கு வரும்போது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழைக் கொண்டு வர வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்தார்.
Friday, May 09, 2014
+2 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் மாதத்தில் சிறப்பு துணைத் தேர்வு
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு ஜூன் மாத இறுதியில் சிறப்பு துணைத் தேர்வு நடைபெறும். மே மாதம் 12 முதல் மே 16 வரை சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். பள்ளிகளிலும், தனித் தேர்வு மையங்களிலும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.மறுகூட்டலுக்கு இன்று முதல் மே 14-ம் தேதி வரை பள்ளிகள் மூலமாக மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் கோரியவர்கள் மட்டுமே மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியும்.
+2 தேர்வு முடிவுகள் மாவட்ட அளவில்
பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில், தமிழகத்திலேயே ஈரோடு (வருவாய் மாவட்டம்) முதலிடத்தை பெற்றுள்ளது. திருவண்ணாமலை கடைசி இடத்தை வகிக்கிறது.
நாமக்கல் இரண்டாம் இடத்தையும், விருதுநகர் மூன்றாம் இடத்தையும், பெரம்பலூர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. வருவாய் மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதங்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்...
வருவாய் மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதம்:
1. ஈரோடு - 97.05%
2. நாமக்கல் - 96.59%
3. விருதுநகர் - 96.12%
4. பெரம்பலூர் - 96.03%
5. தூத்துக்குடி - 95.72%
6. கன்னியாகுமரி - 95.14%
7. கோயமத்தூர் - 94.89%
8. திருநல்வேலி - 94.37%
9. திருச்சி- 94.36%
10. திருப்பூர்- 94.12%
11. சிவகங்கை- 94.06%
12. தருமபுரி- 93.24%
13. ராமநாதபுரம்- 93.06%
14. கரூர்- 92.97%
15. தேனி- 92.73%
16. மதுரை- 92.34%
17. சென்னை- 91.9%
18. சேலம்- 91.53%
19. திண்டுக்கல்- 90.91%
20. தஞ்சாவூர்- 89.78%
21. புதுக்கோட்டை- 89.77%
22. புதுச்சேரி- 89.61%
23. கிருஷ்ணகிரி- 89.37%
24. திருவள்ளூர்- 88.23%
25. காஞ்சிபுரம்- 87.96%
26. நாகப்பட்டினம்- 87.95%
27. ஊட்டி- 86.15%
28. விழுப்புரம்- 85.18%
29. வேலூர்- 85.17%
30. கடலூர்- 84.18%
31. திருவள்ளூர்- 83.7%
32. அரியலூர்- 79.55%
33. திருவண்ணாமலை- 74.4%
Thursday, May 08, 2014
தமிழகத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விவரங்கள் அறிவிப்பு
3-ஆண்டு சட்டபடிப்பிற்க்கு மே-26 முதல் ஆகஸ்ட் 8-தேதி வரை விண்ணப்பங்களை விண்ணபிக்கலாம் என்று அம்பேத்கார் சட்டபல்கலைகழக துணைவேந்தர் வணங்காமுடி அறித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது; தரவரிசைப்பட்டியல் ஆகஸ்ட் 3-தேதி வெளியிடப்படும். 3-ம் ஆண்டிற்க்கான சட்டப்படிப்பிற்க்கான கலந்தாய்வு செப்டம்பர் 2-வது வாரத்தில் நடக்கும். 5-ம் ஆண்டிற்க்கான சட்டப்படிப்பிற்க்கு மே-12 முதல் ஜூன்-13 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கார் சட்டபல்கலைகழக துணைவேந்தர் வணங்காமுடி கூறினார்.
இனி ஏடிஎம் வேண்டாம், ப்ரீபெய்டு ஸ்மார்ட் கார்ட் போதும் – ரிசர்வ் பேங்க் அறிவிப்பு
தற்போதைய நிலையில் ஏடிஎம் கார்டு முதல் ரேஷன் கார்டு வரை எந்த கார்டிலும் தில்லுமுல்லு இல்லாமல் இருப்பதில்லை. ஏடிஎம் கார்டின் மூலம் அதன் பின் நம்பர் தெரிந்தால் போதும், கார்டை போட்டு யார் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். இதில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதால் முற்றிலும் பயோமெட்ரிக் முறையிலான புதிய "ப்ரீபெய்டு கார்டு" என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது ரிசர்வ் வங்கி.
இதில் நமது கைரேகை இருக்கும் என்பதால் இந்தக் கார்டை உரியவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இதனால் முறைகேடுகள், மோசடிகள் நடக்க வாய்ப்பு இல்லை என்பதால் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது ரிசர்வ் வங்கி.
பயோமெட்ரிக் முறை:
இந்த கார்டைப் பயன்படுத்துவோர், தங்களது ரேகையை சம்பந்தப்பட்ட மெஷினில் வைத்தால்தான் பணம் கிடைக்கும். எனவே உரியவர் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும்.
கைரேகை கஷ்டம்:
ஆனால் கைரேகை பதிவுக்கு குறைந்தபட்சம் 20 வினாடி எடுப்பதாலும் நாடு முழுக்க எல்லா இடங்களிலும் கைரேகை பதிவுடன் கூடிய மெஷின்களை வைப்பது சாத்தியமில்லை என்பதாலும் வங்கிகள் தயங்கி வருகின்றன.
பணம் எடுக்க வழி:
தற்போது ப்ரீபெய்டு இ - வேலட் கார்டு மூலம் ஆன்லைன் ஷாப்பிங், இ-டிக்கட் எடுப்பது, கட்டணங்கள் வரிகளை செலுத்துவது போன்றவற்றுக்கு வசதியை சில தனியார் நிறுவனங்கள் செய்து தருகின்றன. இந்த கார்டுகள் மூலம் பணம் எடுக்கவும் வழி செய்ய வேண்டும் என்று இவை கோரி வந்தன.
ஸ்மார்ட் கார்டு வசதி:
ஆனால் ரிசர்வ் வங்கி இதற்கு மறுத்து வந்தது. இந்த நிலையில் பயோமெட்ரிக் முறையில் பணம் எடுக்க பயன்படும் வகையில் ஸ்மார்ட் கார்டு வசதியைஅறிமுகம் செய்ய இந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளது.
கார்டு மட்டும் போதும்:
அதாவது, ஸ்மார்ட் கார்டிலேயே கைரேகை பதிவு செய்யப்பட்டிருப்பதால் வேறு வகையில் கைரேகை பதிவு தேவை இல்லை. கார்டு மட்டுமே போதும். பதிவு பெற்ற கைரேகையை தங்களிடம் இருக்கும் மெஷினில் ஒப்பிட்டு கடைகளே பணம் அளிக்க முடியும்.
தில்லுமுல்லு குறையும்:
இந்த முறையில் தில்லுமுல்லு வெகுவாக குறைந்து விடும். அப்படி ஒரு நிலை வந்தால் எதிர்காலத்தில் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டுகள் எல்லாம்கைரேகை பதிவில்லாமல் பயன்படாத நிலை ஏற்படும்.
வர்த்தகத்துக்கான லைசன்ஸ் :
தற்போது ப்ரீபெய்டு மற்றும் இ -வேலட் கார்டுகளை வெளியிட்டு ஏர்டெல் மணி உட்பட சில நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. இவற்றுக்கு இந்த புதிய ஸ்மார்ட் கார்டு வெளியிடும் வர்த்தகத்துக்கான லைசன்ஸ் தரப்படலாம்.
கைரேகை மூலம் பணம்:
இந்த ஸ்மார்ட் கார்டு அமலுக்கு வந்தால் ஏடிஎம் மையத்துக்கு போக வேண்டாம். லைசன்ஸ் உள்ள கடைகளில் கூட ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பணம் பெற முடியும்.
Wednesday, May 07, 2014
தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலம் அறிந்துகொள்ளலாம
் மாணவர்கள் தங்களது பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூல்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். எஸ்.எம்.எஸ். மூலம் அறிந்துகொள்ளலாம்: பி.எஸ்.என்.எல். சந்தாதாரர்கள் 53576 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இந்த எண்ணுக்கு தேர்வு முடிவுகளை முன்கூட்டியே அறியும் வகையில் பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் எஸ்.எம்.எஸ். ஒன்றுக்கு ரூ.3 கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படும
். அதோடு, 09282232585 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு
மத்திய அரசின், 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படி, குழந்தைகள் கல்விச் செலவை திருப்பிக் கொடுக்கும் ஆண்டு உச்ச வரம்பு, இது வரை, 12 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இனிமேல், 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்று திறனாளி பெண் ஊழியரின், குழந்தை பராமரிப்பு, மாதச் செலவுத்தொகை, 1,000 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அது போல், ஊழியர்களின், மாற்றுத் திறனாளி குழந்தையின் கல்விச் செலவுத் தொகையை திருப்பி கொடுப்பதற்கான ஆண்டு உச்சவரம்பு தொகை, 24 ஆயிரம் ரூபாயிலிருந்து, 36 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, 100 சதவீதமாக உயர்த்தப் பட்டது குறிப்பிடத்தக்கது. லோக்சபா தேர்தல், இறுதிகட்டத்தை நெருங்க, இன்னும், நான்கு நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசின், பணியாளர் நலத்துறை மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, தேர்தல் நடத்தை விதிமுறை களுக்கு எதிரானது என, எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன.
Tuesday, May 06, 2014
வெயிட்டேஜ்' மதிப்பெண் குளறுபடி: அரசுக் கல்லூரி பட்டதாரிகள் பாதிப்பு
ஆசிரியர் பணி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், அரசு கல்லூரியில் பயின்ற பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுப்பள்ளி ஆசிரியர் பணி தேர்வுக்கு, ஏற்கனவே கடைப்பிடித்து வந்த, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடும் முறையை சென்னை ஐகோர்ட் சமீபத்தில் ரத்து செய்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, நேற்று துவங்கியது
. 10ம் வகுப்பு, பிளஸ் 2, இளங்கலை, பி.எட்., சான்றுகள் அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் இளங்கலை முடித்தவர்களின் சான்றிதழ்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., வாழ்க்கைக்கல்வி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றிக்கான மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்து கொள்வதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அந்த பாடங்களுக்கு 90 முதல் 100 சதவீதம் வரை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை சேர்த்து கணக்கிடுவதால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அதிகரிக்கிறது. ஆனால், அரசு மற்றும் உதவிபெறும் பல்கலை, கல்லூரிகளில் இளங்கலை முடித்தவர்களின் சான்றிதழ்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., குறித்த விபரங்கள் இல்லை. இதனால், அரசுக் கல்லூரியில் பயின்றவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளது. அரசுக் கல்லூரி பட்டதாரிகள் கூறுகையில், 'என்.சி.சி., என்.எஸ்.எஸ்., வாழ்க்கை கல்வி மதிப்பெண்களை சேர்த்து கணக்கிடுவதால், எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளத
ு. எனவே, இந்த முறையை ரத்து செய்ய வேண்டும்' என்றனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'டி.ஆர்.பி., உத்தரவுப்படி தான், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுகிறோம்' என்றார்.
டி.இ.டி., - 2ம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு: 22 ஆயிரம் பேரிடம் நடத்தப்படுகிறது
ஆசிரியர் தகுதி தேர்வு, இரண்டாம் தாளில், கூடுதலாக தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் தேர்வர்களுக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத மதிப்பெண் சலுகையை, தமிழக அரசு வழங்கியதால், இரண்டாம் தாளில், கூடுதலாக தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும், 28 மையங்களில், வரும் 12ம் தேதி வரை, இப்பணி நடக்கிறது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிட, புதிய முறையை பின்பற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. எனவே, தேர்வுக்கான மதிப்பெண் குறித்து, தமிழக அரசு புதிய முடிவு எடுக்காததால், தேர்வர்களின் சான்றிதழ்களை மட்டும் சரிபார்க்குமாறு, அலுவலர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்.பி.,) உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசு, ஆசிரியர் தேர்வு முறைக்கு, புதிய மதிப்பெண் முறையை அறிவித்தபின், 15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் வெளியாகும்
ஆகஸ்ட் 24ல் ஐ.ஏ.எஸ்., முதல் நிலை தேர்வு
இந்த ஆண்டிற்கான, சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு, ஆகஸ்ட் 24ல், நடைபெறும்' என, யூ.பி.எஸ்.சி., அமைப்பு அறிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., போன்ற உயர்பதவிகளுக்காக, தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்வதற்காக, ஆண்டுதோறும் நடத்தப்படும், சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு, ஆகஸ்ட் 24ல், நடைபெற உள்ளது. முக்கிய தேர்வான, மெயின் தேர்வு, டிசம்பர் 14ல் நடைபெறலாம் என, இந்த தேர்வுகளை நடத்தும், மத்திய பணியாளர் தேர்வாணையமான, யூ.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. முதல் நிலை தேர்வு, முக்கிய தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என, மூன்று கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்பட்டு, தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
Monday, May 05, 2014
வீட்டுக் கடன் வட்டி கணக்கிடுவது எப்படி?
வீட்டுக் கடன் மீதான முதல் தவணை பிடித்தம் என்பது அவருக்கு கடன் தொகை வழங்கிய மாதம் முதல் பதினெட்டாவது மாதம் அல்லது அவர் புது வீட்டில் குடியேறும் முதல் மாதம் தொடங்கும். இவற்றுள் எந்த மாதம் முன்பு வருமோ அந்த மாதம் தொடங்கும். வட்டி கணக்கீடு என்பது அவர் முதல் தவணை பெற்ற நாளில் தொடங்கும். அதிக பட்ச கடன் தவணை பதினைந்து ஆண்டு. அதிகபட்ச வட்டித் தவணை ஐந்தாண்டு.
அதாவது 180 + 60 தவணைகள். பணிக் காலம் குறைவாக உள்ளோரும் குறுகிய காலத்தில் கடனைச் செலுத்தி வட்டியைக் குறைத்துக்கொள்ள விரும்புவோரும் தவணைக் காலத்தைச் சுருக்கிக் கொள்ளலாம். ஒரு பணியாளர் பத்து லட்சம் ரூபாய் கடன் பெறுவதாக வைத்துக் கொள்வோம். இவருக்கு முதல் தவணையாக ரூபாய் ஐந்து லட்சம் ஜனவரி 2014-ல் வழங்கப்படுகிறது. இரண்டாவது தவணை அக்டோபர் 2014-ல் வழங்கப்படுவதாகவும் கொள்வோம். கடன் பிடித்தம் ஜூலையில் தொடங்கும். மாதத் தவணை ரூபாய் 10 ஆயிரம். கடன் தொகை, தவணை எண் மற்றும் வட்டி வீதம் ஆகியவை மாறும்போது தக்க மாற்றங்களுடன் மேற்கண்ட முறையில் வட்டியைக் கணக்கிடலாம். அதிகபட்சமாக அறுபது தவணைகளில் வட்டி பிடித்தம் செய்யப்படும். பணிக்காலம் குறைவாக உள்ளவர்களுக்கு வட்டியை அவர்களது பணிக்கொடையில் (Death cum Retirement Gratuity) பிடித்தவும் செய்யவும் கூடும். வட்டியைச் செலுத்திய பின் வீட்டுப் பத்திரம் முதலானவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். கடன் தொகைப் பிடித்தம் முடியும்வரை, கடன் மற்றும் வட்டித் தொகைக்குக் காப்புறுதி செய்து பிரீமியத் தொகை செலுத்தி வர வேண்டும். -
கட்டுரையாளர், ஓய்வுபெற்ற அரசு அதிகா
பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பம்
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கு திங்கள்கிழமை (மே 5) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 23 மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி முதல்வருக்குச் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு படிப்புகளில் சேரலாம். பத்தாம் வகுப்புக்குப் பிறகு 2 ஆண்டு ஐடிஐ படிப்பு முடித்த மாணவர்களும் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.
இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம். நேரிலும், அஞ்சல் மூலமாகவும், இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். நேரில் விண்ணப்பம் பெற விரும்புவோர் ரூ.150 செலுத்தியும், அஞ்சல் மூலம் பெற விரும்புவோர் ரூ.150லிக்கான கேட்பு வரைவோலை எடுத்து, சுய விலாசமிட்ட அஞ்சல் உறையில், ரூ.15லிக்கான அஞ்சல் வில்லையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் www.tndte.com என்ற இணையதளத்திலிருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். தமிழகம் முழுவதும் 32 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 4 அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளும், சிறப்புப் பயிலகங்களும் உள்ளன.
Sunday, May 04, 2014
Saturday, May 03, 2014
அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர் கணக்கெடுப்பு
அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 1.9.2013ல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின்படி உபரி இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் மேற்கொள்ளுதல் தொடர்பாக கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ‘உபரி ஆசிரியர்கள் உபரி பணியிடங்கள் தொடர்பான விபரங்களை வரும் 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.