வரும் கல்வியாண்டில் (2014-15) பிளஸ் 2 மாணவர்களுக்குத் தேவையான 94 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் மே மாதம் இந்தப் புத்தகங்கள் அனைத்தும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. அதேபோல், பிளஸ் 1 வகுப்புக்கான புத்தகங்கள் அச்சடிக்கும் பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
1 முதல் 9 ஆம் வகுப்பு வரை முதல் பருவத்துக்காக 5 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சடிக்கும் பணிகளும் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் புத்தகங்கள் அனைத்தும் வரும் மே மாதத்துக்குள் அச்சிடப்பட்டு, பள்ளி தொடங்குவதற்கு முன்னதாகவே அந்தந்த பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அச்சிடும் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளதாகத் தெரிகிறது.