இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, March 05, 2014

அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அரசாணை மூலம் தமிழக அரசு உறுத

   தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் பி.சிவசங்கரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:– அரசு துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், பல்கலைக்கழகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும், 3 மாதங்களுக்குள் காலிப்பணியிடங்களைக் கண்டறிந்து, அதில் அந்த சதவீதத்தின்படி அவர்களுக்கு பணிநியமனம் வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் உத்தரவிட்டுள்ளன. அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், வேலைவாய்ப்பு அலுவலகம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றிடம் இருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களின் எண்ணிக்கை பெறப்பட்டன.

அதன்படி அவர்களுக்கான ஆயிரத்து 928 பணியிடங்கள் மற்றும் பின்னடைவுப் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் சிறப்பு போட்டித்தேர்வு மூலம் மாற்றுத்திறனாளிகள் நிரப்பப்படுவார்கள். அரசுக்கான அனைத்து பணியிடங்களிலும் இனி 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும். உயர்கல்வி துறையில் கண்டறியப்பட்டுள்ள 91 பின்னடைவு பணியிடங்களை அந்தந்த பல்கலைக்கழகங்கள் நிரப்ப வேண்டும். சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையில் உள்ள 259 பின்னடைவு பணியிடங்களை (அங்கன்வாடிகளில்) நிரப்ப, மாவட்ட கலெக்டர்கள் விளம்பரம் செய்வதற்கு அரசாணை பிறப்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

என்.டி.எஸ்.இ., தேர்வு "ரிசல்ட்' வெளியீடு

  தேசிய திறனாய்வு தேர்வு (என்.டி.எஸ்.இ.,) முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. அனைத்து வகை பள்ளிகளிலும், 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற, கடந்த நவம்பரில், தேசிய திறனாய்வு தேர்வை, தேர்வுத் துறை நடத்தியது. இதில், 97 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதன் முடிவை, www.tndge.in என்ற இணையதளத்தில், தேர்வுத் துறை, நேற்று வெளியிட்டது. மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படும், 240 பேருக்கு, பிளஸ் 1 முதல், பி.எச்டி., வரை, ஆண்டுதோறும், குறிப்பிட்ட தொகையை, கல்வி உதவித்தொகையாக, மத்திய அரசு வழங்கும்.

12 லட்சம் பேர் பங்கேற்ற குரூப் - 4 தேர்வு முடிவு வெளியீடு : 24ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்


    குரூப் - 4 தேர்வு முடிவை, அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), நேற்று மாலை வெளியிட்டது. 24ம் தேதி முதல், தேர்வாணைய அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன், நேற்று மாலை, நிருபர்களிடம் கூறியதாவது: 12.22 லட்சம் பேர் கடந்த ஆண்டு, ஆகஸ்ட், 25ல், குரூப் - 4 தேர்வு நடந்தது. இதில், 12.22 லட்சம் பேர் பங்கேற்றனர். முதலில், 5,566 காலி பணியிடங்களை, அரசு வழங்கி இருந்தது. பின், கூடுதலாக சில இடங்களை ஒப்படைத்தது. இதனால், 5,855 இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. தேர்வு முடிவு, இன்று மாலை (நேற்று), www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சிக்குரிய குறைந்தபட்ச மதிப்பெண், 90 மற்றும் அதற்கு அதிகமாக மதிப்பெண் பெற்ற, 11.55 லட்சம் தேர்வர்களின் மதிப்பெண், தர வரிசை அடிப்படையில், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

ஒட்டுமொத்த, "ரேங்க்' இட ஒதுக்கீடு வாரியான, "ரேங்க்' மற்றும் சிறப்பு பிரிவினருக்கான, "ரேங்க்' என, மூன்று பிரிவுகளில், "ரேங்க்' பட்டியலை வெளியிட்டு உள்ளோம். தேர்வர்கள், பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை, இணையத்தில் பதிவு செய்தால், மதிப்பெண், "ரேங்க்' விவரங்களை தெரிந்து கொள்ளலாம். தேர்வெழுதிய, 12.22 லட்சம் பேருக்கும், மதிப்பெண் வெளியிடப்பட்டு உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு :

ஆனால், 90 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கியவர்களுக்கு மட்டும், தர வரிசை எண் (ரேங்க்) வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு, மதிப்பெண் மட்டும் கிடைக்கும். வரும், 24 முதல், தேர்வாணைய அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அதற்கு, தினமும், 300 பேர் அழைக்கப்படுவர். அழைப்பு கடிதமும், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தபால் மூலமும் அனுப்பப்படும். முதல் நாள் சான்றிதழ் சரிபார்ப்பு, இரண்டாவது நாள், கலந்தாய்வு நடத்தி, தேர்வு பெற்றதற்கான உத்தரவு வழங்கப்படும். மே மாதம் நடக்க உள்ள, குரூப் - 2 தேர்வுக்கு, 6 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவ்வாறு, நவநீதகிருஷ்ணன் கூறினார். தேர்வாணைய செயலர், விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா, ஆகியோர் உடனிருந்தனர்.

TNPSC.GROUP IV RESULTS

டின்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று மாலை டி.என்.பி,.எஸ்.சி இணையதளத்தில் வெளிபிடப்படும் என்று அதன் தலைவர் நவநீத கிருஷ்ணன் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டார்.  அதன்படி இன்று டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இட ஒதுக்கீடு தரவரிசைப்படி முடிவுகள் வெளியிடப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி 2500க்கும் மேற்பட்ட குரூப் 4 காலியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.குறிப்பிடத்தக்கது.

Tuesday, March 04, 2014

ஓ.பி.சி.,யினருக்கு, 50 சதவீத மதிப்பெண் போதும்: யு.ஜி.சி., அறிவிப்பு விரைவில

   கல்லூரி பேராசிரியர் பணிகளுக்கான, "நெட்' தேர்வில் பங்கேற்க, ஓ.பி.சி., பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்ணை, 5 சதவீதம் குறைக்க, பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) முடிவெடுத்துள்ளது. அடுத்த தேர்வுகளில், இந்த மதிப்பெண் குறைப்பு அமலாகலாம் என, கூறப்படுகிறது. முதுகலை பட்டம் - எம்.பில்., முடித்தவர்கள், கல்லூரி பேராசிரியர் பணியில் சேர, யு.ஜி.சி.,யின், "நெட்' தேர்வில் வெற்றி பெறவேண்டும். இத்தேர்வில் பங்கேற்க, முதுகலை பட்டப்படிப்பில், ஓ,பி.சி., பிரிவினர், 55 சதவீதமும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், 50 சதவீதம் மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். ஆண்டுக்கு, இரண்டு முறை நடத்தப்படும், "நெட்' தேர்வில், இந்த மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும். இந்நிலையில், ஓ.பி.சி., பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்ணை, 5 சதவீதம் குறைக்க, யு.ஜி.சி., முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த யு.ஜி.சி., கூட்டத்தில், இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, மே மாதம் நடக்கும், "நெட்' தேர்வில், இந்த தகுதி மதிப்பெண் குறைப்பு அமல்படுத்தப்படலாம் என தெரிகிறது. மதிப்பெண் குறைப்பு மூலம், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு இணையாக, ஓ.பி.சி., பிரிவினர், தேர்வில் அதிகளவில் பங்கேற்பர் என, தெரிகிறது.

TET தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பில் நாளொன்றுக்கு 1500 சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை மூலம் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 12 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

ஒரு மையத்துக்கு 300 பேர் வீதம் நாளொன்றுக்கு 1,500 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் (90) மதிப்பெண் எடுத்து 29 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தத் தேர்வில் கூடுதலாக 46 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற நிலையில், கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஏற்பாடுகள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வுப் பணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பொதுத்தேர்வு நடைபெறாத 5 பள்ளிகள் சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேர்வுப் பணிகளில் ஈடுபடாத ஆசிரியர்களைக் கொண்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டியுள்ளதால், 30 நாள்களுக்கும் மேல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பில் 200 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம், சுய விவர குறிப்புப் படிவம் மற்றும் அடையாள சான்றிதழ் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சரிபார்ப்பு மையங்கள் தொடர்பான விவரங்களும் இதில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் இவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பூர்த்திசெய்யப்பட்ட இந்தப் படிவங்களோடு, அசல் சான்றிதழ்கள், அவற்றின் 2 நகல்களோடு சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களுக்கு வர வேண்டும்.

சான்றிதழ் நகல்களில் அரசிதழில் பதிவு பெற்ற ஏதேனும் ஒரு அதிகாரியிடம் "கெசடட் ஆபீசர்' சான்றொப்பம் பெற வேண்டும்.

இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்காக தனியாக அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படாது என அவர்கள் தெரிவித்தனர்.

 

சரிபார்ப்பு மண்டல மையங்கள்

 

ஒவ்வொரு மண்டலத்திலும் இடம்பெறும் மாவட்டங்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் மையங்களின் விவரம்:

1. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை - எம்.ஆர்.ஆர். எம்.ஏ.வி.எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அண்ணா பஸ் நிலையம் மற்றும் ஆட்சியர் அலுவலகம் எதிரில், மதுரை -20. தொலைபேசி எண்: 0452-2531754

2. திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி - ஏ.டி.எம்.ஆர்.சி.எம். வாசவி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 11, பேர்ட்ஸ் சாலை, கன்டோன்மென்ட் பகுதி, திருச்சி -01. தொலைபேசி எண்: 0431-2416648

3. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி - சாரதா பாலமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராஜாஜி சாலை, சேலம் -7. தொலைபேசி எண்: 0427-2412160

4. திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் - ஸ்ரீ மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம் பஸ் நிலையம் அருகில், கும்பகோணம்-01. தொலைபேசி எண்: 0435-2431566

5. சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் - ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 319, ஜி.எஸ்.டி. சாலை, குரோம்பேட்டை, சென்னை - 44. தொலைபேசி எண்: 044-22417714

இக்னோ Re valuation format

1.1.2014 முன்னுரிமை பட்டியல் தயாரிக்க அனைத்து மாவட்ட தொ.கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனர் உத்தரவு

4.2.14 டிட்டோஜாக் முடிவுகள், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும்


Monday, March 03, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் பணி நியமனம் வழங்கக் கோரி சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு தேர்வர்கள் கோரிக்கை மனுவுடன் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கூறியது: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி நியமனங்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்படுவதில்லை. எனவே, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திலும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையைப் பின்பற்றக்கூடாது. ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பாணையில் 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்தால்தான் தேர்ச்சி என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்ச்சி மதிப்பெண் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 55 சதவீதமாக (82 மதிப்பெண்) குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், ஒவ்வொரு தரத்தில் மதிப்பெண்கள் வழங்கப்படுவதால், தகுதித் தேர்வில் எங்களை விட குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் கூட, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் ஆசிரியராக பணி நியமனம் பெற வாய்ப்புள்ளது. எனவே, மதிப்பெண் தளர்வை அடுத்துவரும் தேர்வுகளில்தான் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தத் தேர்வில் நடைமுறைப்படுத்தக்கூடாது. அவ்வாறு நடைமுறைப்படுத்தினால், முதலில் 60 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அடுத்ததாக மதிப்பெண் சலுகையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

IGNOU B.ed Grade Card Stutus dec 2013

ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு :

அச்சிட்ட ஆண்டு குறிப்பிடப்படாத அல்லது 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான அவகாசத்தை, ரிசர்வ் வங்கி 2015 ஜனவரி 1ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

IGNOU Term End Results - December 2013

Sunday, March 02, 2014

ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வெங்கடாசலம் அவர்கள் தலைமையில் அமைக்கப்படும் மூன்று நபர் குழு விசாரணை செய்ய உள்ள துறைகள் மற்றும் பணியிடங்கள் விபரம

1. AGRICULTURE DEPARTMENT

.2. AGRICULTURAL ENGINEERING DEPARTMENT

3. ANIMAL HUSBANDRY DEPARTMEN

4 .FISHERIES DEPARTMENT.

5. HIGHWAYS DEPARTMEN

6. RURAL DEVELOPMENT DEPARTMENT

7. INDUSTRIES AND COMMERCE DEPARTMEN

8. INSPECTOR OF FACTORIES DEPARTMENT

9. STATE HEALTH TRANSPORT DEPARTMENT

10 MOTOR VEHICLE MAINTENANCE DEPARTMENT

11. SERICULTURE DEPARTMENT

12. PUBLIC WORKS DEPARTMEN

13. STATE TRANSPORT AUTHORIT

14. DIRECTORATE OF DIFFERENTLY ABLED REHABLITATION DEPARTMENT

15. TOWN PANCHAYA

16. ELECTRICAL INSPECTORAT

17.I CHENNAI CORPORATION

18. REVENUE DEPARTMENT

19. POLICE DEPARTMEN

20. FOREST DEPARTMEN

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் 6ம் தேதி மீண்டும் ஸ்டிரைக்


    மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 6ம் தேதி ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் 1 லட்சம் பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.ஏற்கனவே கடந்த 26, 27 தேதிகளில் போராட்டம் நடந்த நிலையில் மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக அன்று பள்ளிகளை மூடக்கூடாது என்றும், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை தொடக்க கல்வி இயக்குநர் பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரின் உத்தரவு:தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) மார்ச் 6ம் தேதி அன்று நடத்த உள்ள அடையாள வேலைநிறுத்தத்தின் காரணமாக எந்த பள்ளிகளும் மூடப்படக்கூடாது.   மாற்று பணியில் மற்ற பள்ளிகளில் இருந்தும், வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளாத ஆசிரியர்களை கொண்டும் எழுத்து பூர்வமாக ஆணை அளித்து ஆசிரியர்களை பணியமர்த்தி வகுப்புகளை நடத்த வேண்டும்.வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்பவர்கள் பட்டியலை சேகரித்து போராடுவோர் எண்ணிக்கை விபரங்களை 6ம் தேதி காலை 10 மணிக்கு தொலைபேசியில் இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்தை நிறுத்தம் செய்ய உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

6ம் தேதி விடுப்பு விண்ணப்பம் பெறப்பட்டால் அதனை ரத்து செய்து ஆணை வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை இருக்காது

பொதுத் தேர்வுகள் துவங்கி உள்ளதால், இரண்டு மாதங்களுக்கு, மின் தடை இருக்காது என, மின் வாரியம் அறிவித்து உள்ளது. இன்று, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. அதை தொடர்ந்து, 10ம் வகுப்பு தேர்வு உட்பட மற்ற வகுப்புகளின் தேர்வுகள், அடுத்த இரண்டு மாதங்களுக்கு நடக்கவுள்ளன. மாணவர்களின் படிப்பிற்கு இடையூறு ஏற்படா வண்ணம், மார்ச், ஏப்ரல் மாதங்களில், தமிழகம் முழுவதும் மின்தடை இருக்காது என, தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது

Saturday, March 01, 2014

DEPARTMENTAL EXAM ONLINE APPLY -MAY 2014 TNPSC துறை தேர்வுகள் மே 2014 ஆறிவிக்கை வெளியீடு I விண்ணபிக்க கடைசி தேதி : 31.03.2014 I தேர்வு நடைபெறும் தேதி : 24.05.2014 முதல் 31.05.2014

66 மையங்களில் விடைத்தாள் திருத்தம்: மே முதல் வாரத்தில் "ரிசல்ட்' : தேர்வு துறை இயக்குனர் தகவல்

""பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, 66 மையங்களில் நடக்கும். மே, முதல் வாரத்தில், தேர்வு முடிவு வெளியாகும்'' என, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறினார். தேர்வு தொடர்பாக, அவர் வெளியிட்ட, முக்கிய புள்ளி விவரங்கள்: தமிழ் வழியில், தேர்வை எழுதும், 5,45,771 மாணவர்களுக்கு, தேர்வு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. விடைத்தாள் முதல் பக்கம், புதிய முறையில் வடிவமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும். இதில், மாணவர் புகைப்படம், பதிவு எண், தேர்வுப் பாடம், தேதி உள்ளிட்ட, அனைத்து விவரங்களும் இருக்கும். மாணவர், வெறும், கையெழுத்து மட்டும் போட்டால் போதும். வினாத்தாள் கட்டு ஒரு அறையில், 20 மாணவர் வீதம், தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

   ஒவ்வொரு அறையிலும், இரு மாணவரிடம், கையெழுத்து பெற்றபின், அவர்கள் முன்னிலையில், வினாத்தாள் கட்டு பிரிக்கப்படும். வினாத்தாளை, படித்துப் பார்க்க, 10 நிமிடமும், விடைத்தாள் முதல் பக்கத்தில் உள்ள விவரங்களை சரிபார்க்க, 5 நிமிடமும் வழங்கப்படும். எனவே, விடை எழுதுவதற்கான நேரம், 10:15க்கு துவங்கி, பகல், 1:15க்கு முடிவடையும். ரத்து செய்யப்படும் தேர்வு மையங்களில், ஒழுங்கீன செயல்கள் நடந்தால், அதற்கு, பள்ளி நிர்வாகம் உடந்தையாக இருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் தேர்வு மையம், ரத்து செய்யப்படும். தமிழ் வழியுடன், ஆங்கில வழியிலும், கேள்விகள் இடம் பெற்றிருக்கும். விடைத்தாள் கட்டுகளை, அஞ்சல் துறை மூலம், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பாமல், கார்கள் மூலமாக, பாதுகாப்பாக எடுத்துச் செல்ல, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தடையற்ற மின்சாரம் தேர்வு மையங்களில், தடையற்ற மின்சாரம் வழங்க, மின்சார வாரியம் மூலம், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனினும், ஜெனரேட்டர் வசதியை செய்து கொள்ளவும், பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. "பிட்' வைத்திருத்தல், "பிட்'டை பார்த்து எழுதுதல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம், முறைகேடாக நடந்து கொள்ளுதல், தேர்வுத்தாளை மாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் செய்தல் போன்ற செயல்பாடுகள், கடுமையான குற்றங்களாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு, குற்றத்தின் அடிப்படையில், உரிய தண்டனை வழங்கப்படும்.

கடந்த தேர்வில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, 397 மாணவர்கள், தண்டனை பெற்றுள்ளனர். எனவே, மாணவர்கள், ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு, எதிர்காலத்தை, பாழாக்கிக்கொள்ளக் கூடாது. விடைத்தாள் திருத்தும் பணி, 66 மையங்ளில் நடக்கும். தேர்வு முடிவுகள், மே, முதல் வாரத்தில் வெளியிடப்படும்.இவ்வாறு, இயக்குனர் தெரிவித்தார்.

Friday, February 28, 2014

தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு ஜுன் மாதம் 01.01.2014 முன்னுரிமைப் பட்டியலின்படி தான் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத

  
2013-14ம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பதவி உயர்வு கலந்தாய்வு நீதிமன்ற வழக்குகளால் தடைப்பட்டது. அண்மையில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பதவி உயர்வு மற்றும் பணி நியமனத்திற்கு இரட்டைப்பட்டம் செல்லாது என தீர்ப்பளித்து எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது, ஆனால் தொடக்கக் கல்வி துறையில் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த வார இறுதியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளதால் தற்பொழுது பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இயலாது எனவும் ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஒப்படைத்த 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் திரும்ப பெற வாய்ப்பில்லை எனவும், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்த பணியிடங்கள் போக மீதம் உள்ள 253 பணியிடங்களுக்கு 2014 முன்னுரிமைப் படியலின்படி ஜுன் மாதம் கலந்தாய்வு நடத்த உள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் திரு. தியாகராஜன் அவர்களிடம் கேட்டபொழுது பள்ளிக்கல்வித்துறையில் நடத்தியது போல் தொடக்கக் கல்வித்துறையிலும் பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இதுகுறித்து உடனடியாக தொடக்கக் கல்வி இயக்குனரிடம் பேசி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், இறுதி முடிவு விரைவில் தெரியவரும் தெரிவித்தார்.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது அதிகாரிகள் திடீர் பாசமழை

      லோக்சபா தேர்தல் நெருங்குவதால், பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணி, ஆர்ப்பாட்டம் என, தீவிரம் காட்டி வருகின்றனர். மத்திய இடைநிலை ஆசிரியருக்கு இணையாக, தமிழக இடைநிலை ஆசிரியருக்கு சம்பளம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோருவது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆறு ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, வரும், 6ம் தேதி, ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துஉள்ளன. உடற்கல்வி ஆசிரியர்கள், முதல்வரின், ஸ்ரீரங்கம் தொகுதி யில், போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதேபோல், வேறு சில சங்கத்தினரும், போராட்ட களத்தில் குதித்துள்ளனர். ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் தீவிரம் அடைந்தால், தமிழக அரசின் கோபத்திற்கு, தாங்கள் ஆளாக நேரிடும் என்பதால், போராட்டத்தை அடக்குவதற்கான வேலைகளில், கல்வித்துறை அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

இதற்காக, சங்க நிர்வாகிகள் மீது, பாசமழை பொழிந்து வருகின்றனர். பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், நேற்று, அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கும், திடீர் அழைப்பு விடுத்து, அவர்களிடம் நலம் விசாரித்து, பின், அவர்கள் கோரிக்கை குறித்து, பிற்பகல், 2:30 மணி வரை, பேச்சு நடத்தினார். பட்டதாரி ஆசிரியர் சங்கம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தலைமை ஆசிரியர் சங்கம் என, பல சங்கங்களின் நிர்வாகிகள், தனித்தனியே, இயக்குனரை சந்தித்தனர். அப்போது, "உங்க கோரிக்கை எதுவா இருந்தாலும் சொல்லுங்க; அரசின் கவனத்துக்கு கொண்டு போய், உடனே, தீர்த்து வைச்சுடலாம்' என, ஆரம்பித்து, கோரிக்கை தொடர்பாக, துறை பணியாளர்களை உடனு குடன் அழைத்து, சங்க நிர்வாகிகள் முன், சீரியசாக விவாதித்தார்.

இதனால், கோரிக்கைகள் ஏற்கப்பட்டது போன்ற திருப்தியுடன், அலுவலகத்தில் இருந்து, நிர்வாகிகள், நடையை கட்டினர். சில மூத்த நிர்வாகிகளோ, "தேர்தல் நெருங்குவதால், முதல்வரை திருப்திபடுத்த, அதிகாரிகள் நடத்தும், அரசியல் ஸ்டண்ட்' எனக்கூறி, நமுட்டு சிரிப்பு சிரித்தனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!


 பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது

Thursday, February 27, 2014

Tetojac Forms

CEO OFFICE PHONE NUMBERS


1. CHENNAI 0442432735

2. COIMBATORE 04222391849

3.CUDDALORE 04142 286038

4.DHARMAPURI 04342 260085,261872

5. DINDIGUL 0451 2426947

6. ERODE 0424 2256499,9442205805

7. KANCHEEPURAM 044 27222128

8. KANYAKUMARI 04652 227275

9. KARUR 04324 241805

10. KRISHNAGIRI 04343 239249

11. MADURAI 0452 2530651

12. NAGAPATTINAM 04365 243354

13. NAMAKKAL 04286 232094

14. PERAMBALUR 04328 224020

15. PUDUKOTTAI 04322 222180

16. RAMNAD 04567 220666

17. SALEM 0427 2450254

18. SIVAGANGAI 04575 240408

19. TANJORE 04362 237096

20. NILGIRIS 0423 2443845

21. THENI 04546 250315

22. THIRUVANNAMALAI 04175 224379

23. TIRUVARUR 04366 225903

24. TRICHY 0431 2708900

25. TIRUNELVELI 0462 2500702

26. TUTICORIN 0461 2326281

27. VELLORE 0416 22526690

28. VILLUPURAM 04146 220402

29. VIRUDHANAGAR 04562 252702

FB : ALLA BAKASH