இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, January 10, 2014

2,342 வி.ஏ.ஓ., பணிக்கு ஜூன் 15ல் தேர்வு

    கடந்த ஆண்டு ஜனவரி, 31ல் தான், தேர்வு அட்டவணை வெளியானது; 2012ல், பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த ஆண்டு, மிகவும் முன்னதாக, ஜனவரி, 10ம் தேதியே வெளியிட்டு உள்ளோம்.இந்த ஆண்டு, 23 வகையான தேர்வுகள் நடக்க உள்ளது. இதில், குரூப் 2 பிரிவில், 1,181 இடங்கள்; கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணிக்கு, 2,342 இடங்கள்; ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கு, 98 இடங்கள் நிரப்பபட உள்ளன.கடந்த ஆகஸ்ட்டில் நடந்த, குரூப் 4 தேர்வின் முடிவு, இம்மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி, முதல் வாரத்திலோ வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

   அறிவிக்கப்பட்டதில், 3,700 காலி பணியிடங்கள் மட்டும் இடம் பெற்று உள்ளன. குரூப் 1, குரூப் 4 உட்பட, எட்டு வகையான தேர்வுகளுக்கு, காலி பணியிடங்கள் விவரம் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து, தேர்வாணைய செயலர் விஜயகுமார் கூறுகையில், ''அரசிடம் இருந்து பெற்ற காலி பணியிடங்களை தெரிவித்து உள்ளோம். மற்ற தேர்வுகளுக்கான பணியிடங்கள், அரசிடம் இருந்து வந்ததும், அறிவிக்கப்படும்,'' என, தெரிவித்தார்.அதிகமான தேர்வர் பங்கேற்கும், வி.ஏ.ஓ., தேர்வு அறிவிப்பு, மார்ச், இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வு, ஜூன், 15ல் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 1,181 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வு, மே, 18ல் நடக்கிறது.தேர்வு அட்டவணை, www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

TNPSC 2014-15 Annual planner

தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) 2013 - தேர்வர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் - கால நீட்டிப்ப

   தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) 2013 சம்பந்தமான தேர்வர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதிக்குப் பதிலாக   11 .01.2014 முதல் 20.01.2014 வரை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய கால நீட்டிப்பு செய்யப்படுவதாக அரசுகள் தேர்வுகள் துறை அறிவிப்பு.

Thursday, January 09, 2014

தேர்வுத்துறை எச்சரிக்கை கேள்வித்தாள் வெளியானால் தலைமை ஆசிரியர்கள் பொறுப்பு

   தேர்வு நடக்கும் நாளில் ஒவ்வொரு பாடத் தேர்வின் போதும் அன்றைய தேர்வுக்குரிய கேள்வித்தாளை காலை 7 மணி முதல் 8 மணிக்குள் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்து சென்று சப்ளை செய்ய தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கேள்வித்தாள் காப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன. கேள்வித்தாள் காப்பு மையத்தில்  இருந்து வேன் அல்லது காரில் கேள்வித்தாள் எடுத்து செல்லப்பட்டு தேர்வு மையங்களில் ஒப்படைக்கப்படும். காலை 8 மணிக்குள் கேள்வித்தாள் வந்து சேரும். கடந்த ஆண்டுகளில் தேர்வு மையத்தில் இருந்து யாராவது ஒருவர் கேள்வித்தாள் காப்பு  மையங்களுக்கு சென்று கேள்வித்தாளை வாங்கி வர வேண்டிய நிலை இருந்தது.

     அதனால் பல சிரமங்கள் ஏற்பட்டன. அதனால் இந்த ஆண்டு காப்பு மையங்களில் இருந்தே அதிகாரிகள் கேள்வித்தாளை தேர்வு மையங்களுக்கு சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு மையங்களுக்கு வரும் கேள்வித்தாள் கட்டுகளை அந்த பள்ளியில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படும் தலைமை ஆசிரியர்கள் தான் பிரிக்க வேண்டும். அந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு அறைகளில் எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவரே கேள்வித்தாளை பிரித்து கொடுக்க வேண்டும். இதில் ஏதாவது தவறு நேர்ந்தால் கண்காணிப்பாளராக நியமிக்கப்படும் தலைமை ஆசிரியர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

காப்பு மையங்களில் இருந்து கேள்வித்தாள் மையங்களுக்கே நேரடியாக சப்ளை செய்யும் முறை இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் கால விரயம் குறைகிறது. தேர்வு  முடிந்த பிறகு தேர்வு அறை மேற்பார்வையாளர்களே விடைத்தாள்களை பெற்று அதை ஒரு கவரில்  போட்டு சீல் வைக்க வேண்டும் என்றும் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

பள்ளி செல்வதற்கு பஸ் வசதி இல்லாத 6 ஆயிரம் மாணவர்கள்

பஸ் வசதி இல்லாமல் தவிக்கும் 6 ஆயிரம் மாணவர்களுக்கு மாதம் ரூ.300 உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. புவி தகவல் முறைமை ஆய்வின் மூலம் தமிழகத்தில் 2013-14ம் கல்வியாண்டில் ஒரு கி.மீ, மூன்று கி.மீ தொலைவில் தொடக்க மற்றும் உயர் தொடக்க பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் அரசு பஸ் வசதி இல்லாத குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. கோவை, தர்மபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர், நீலகிரி, பெரம்பலூர், திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 11 மாவட்டங் களை சேர்ந்த பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் உள்ள 6,145 மாணவர்களுக்கு பள்ளி வந்து செல்ல போக்குவரத்து வசதி இல்லாத நிலை உள்ளது.

    இதில் மலையோர பகுதிகள் மட்டுமின்றி இதர பகுதிகளிலும் குடியிருப்புகள் இருக்கின்ற பகுதியில் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு பள்ளி வசதியோ, அரசு பஸ் வசதியோ இல்லாத நிலை உள்ளது. இங்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கம் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. அந்த வகையில் ஒரு குழந்தைக்கு ஒரு கல்வியாண் டுக்கு ரூ.3000 என்ற அடிப்படையில் 6,145 குழந்தை களுக்கு ரூ.1 கோடி 84 லட்சத்து 350 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதம் ரூ.300 வீதம் ஒரு குழந்தைக்கு வழங்கப்படும்.

    ஒவ்வொரு மாதமும் பள்ளி வந்து செல்ல போக்குவரத்து வசதி பெற்ற குழந்தையின் பெற்றோரிடம் இருந்து பயனீட்டு சான்று பெற்று சம்பந்தப்பட்ட கிராம கல்விக்குழு அல்லது பள்ளி மேலாண்மை குழு மூலம் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு காசோலையாக வாகன பயண கட்டணத்தை வழங்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவ, மாணவியரின் 75 சதவீத வருகை இதில் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், ஒரு மாதத்திற்கு ஒரு குழந்தைக்கு ரூ.300க்கு மிகாமல் செலவிடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாதமும் இந்த வசதி பெறும் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு கூட்டம் நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் வாகனத்தை தேர்வு செய்தல், சமுதாய பங்கேற்பு, இந்த வசதி எவ்வாறு அவர்களது குழந்தையை பள்ளி செல்ல ஊக்குவிக்கிறது என்பது போன்றவற்றை தெளிவுபடுத்த வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அரசு ரூ.277 கோடி ஒதுக்கீடு 4340 பள்ளிகளில் கம்ப்யூட்டர் லேப்

    பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு சட்டப் பேரவையில் அறிவித்தது. அதை 2 பிரிவுகளாக பிரித்து செயல்படுத்தவும் அரசு திட்ட மிட்டது. முதல் பிரிவில் 1329 தொடக்க பள்ளிகளில் தனியார் கம்ப்யூட்டர்கள் அமைப்பதற்கும், கம்ப்யூட்டர் மற்றும் கருவிகள் பொருத்தவும் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 95,470 மாணவர்கள் பயன்பெறுவார்கள். முதற்கட்டமாக இந்த பிரிவின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்த உள்ளனர். 2வது பிரிவில் பள்ளிகளில் தவகல் தொழில்நுட்ப திட்டம்(ஐசிடி) செயல்படுத்தப்பட உள்ளது. அதில் மத்திய அரசின் பங்காக 75 சதவீதமும், மாநில அரசின் பங்காக 25 சதவீதமும் செலவிடப்பட உள்ளது.

இந்த தகவல் தொடர்பு திட்டம் 4,340 அரசு உயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும். அதாவது ‘உருவாக்கி, உரிமையாக்கி, இயக்கி மாற்றுதல்’ என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்படும். பள்ளிகளில் கம்ப்யூட்டர் லேப்கள் அமைக்க தனியாருக்கு டெண் டர் விடப்படுகிறது. அவர்களே   அந்த லேப்களில் தலா ஒரு ஆசிரியரை நியமித்துக் கொள்வார்கள். 5 ஆண்டு களுக்கு   அந்த  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்திய பிறகு, அரசிடம் ஒப்படைத்துவிட்டு செல்வார்கள். இதற்கான டெண்டரை அரசு கடந்த வாரம் வெளியிட்டது.

ஒரு லேப் அமைக்க குறைந்தபட்ச தொகையாக ரூ.19 லட்சத்து 90 ஆயிரம் நிர்ணயம் செய்துள்ள னர். இதைத்தொடர்ந்து பல கம்ப்யூட்டர் நிறுவன ங்கள் டெண்டர் எடுக்க போட்டி போடுகின்றன.

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான திருத்தப்பட்ட தேர்ச்சிப் பட்டியல் பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும்

   முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் முக்கிய விடைகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் முதல் தாளுக்கான விடைகளில் திருத்தம் ஏதுமில்லை எனத் தெரிகிறது. இரண்டாம் தாளுக்கான சில முக்கிய விடைகளை திருத்தி வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருத்தப்பட்ட விடைகளின் அடிப்படையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, புதிய தேர்ச்சிப் பட்டியல் ஜனவரி மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ச்சி பெற்ற அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முதல் தாளை 2 லட்சத்து 60 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளை 4 லட்சம் பேரும் எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டன.

முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும், இரண்டாம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இதனால், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவது தாமதமானது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும், 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பட்டியல்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள பாடங்களைத் தவிர்த்து மீதமுள்ள பாடங்களுக்கான திருத்தப்பட்ட புதிய தேர்வுப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.

மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. தமிழ்ப் பாடத்துக்கான வினாத்தாளில் எழுத்துப் பிழைகள் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

Private Schools Fee Determination Committee - Fee Fixed for the year 2013-2016 (phase IV) | Tamil Nadu Government Portal

Private Schools Fee Determination Committee: Fee Fixed for the year 2013-2016 (Revised Fee) | Tamil Nadu Government Portal

Wednesday, January 08, 2014

மதிப்பெண் சான்று இல்லையா?

''கடந்த, 2006, மார்ச் தேர்வு முதல், 2011, செம்டம்பர் தேர்வு வரையிலான, ஆறு ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வை எழுதி, பெறப்படாமல் உள்ள மதிப்பெண் சான்றிதழ்கள், விரைவில் அழிக்கப்பட உள்ளன. சம்பந்தபட்ட தேர்வர், உடனடியாக, மதிப்பெண் சான்றிழை பெற வேண்டும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், எச்சரித்து உள்ளார். அவரது அறிவிப்பு:

மேற்கண்ட ஆண்டுகளில், பிளஸ் 2 தனிதேர்வை எழுதியவர்களின் மதிப்பெண் சான்றிதழ், விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பிய பழைய மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை பெற, இதுவரை, சம்பந்தபட்ட தேர்வர் முன் வரவில்லை. இதனால், அந்த சான்றிதழ்களை அழித்திட, திட்டமிடப்பட்டு உள்ளது. எனினும், தனி தேர்வர் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள், மதிப்பெண் சான்றிதழை பெற வசதியாக, இந்த தேதியில் இருந்து, மூன்று மாதம், கால அவகாசம் தரப்படும். அதன்பின், சம்பந்தபட்ட மதிப்பெண் சான்றிதழ் அழிக்கப்படும். மதிப்பெண் சான்றிதழ் பெற விரும்பும் தேர்வர்,

'அரசு தேர்வு இயக்குனரின் கூடுதல் செயலர் (மேல்நிலை), எச் - 9 பிரிவு, அரசு தேர்வு இயக்குனரகம், சென்னை - 6' என்ற முகவரிக்கு, தேர்வெழுதிய ஆண்டு, மாதம், பதிவு எண், மையம் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். அத்துடன், 40 ரூபாய், 'ஸ்டாம்ப்' ஒட்டி, சுய முகவரியிட்ட கவரையும், விண்ணப்பத்தில் இணைத்து, மதிப்பெண் சான்றிதழை பெறலாம். வரும் ஆண்டுகளில், மதிப்பெண் சான்றிதழ்களை, இரு ஆண்டு வரை மட்டும், தேர்வுத்துறை பாதுகாக்கும். அதன்பின், சான்றிதழ்களை அழித்து விடும். இவ்வாறு, தேவராஜன் கூறி உள்ளார்.

இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

லோக்சபா தேர்தலுக்கான, இறுதி வாக்காளர் பட்டியல், தமிழகத்தில், நாளை (10ம் தேதி) வெளியிடப்படுகிறது. தமிழகத்தில், அக்டோபரில் வாக்காளர் பட்டியல், திருத்தப் பணி நடந்தது. ஒரு மாதத்தில், 30 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இவற்றை பரிசீலித்து, ஆய்வு செய்யும் பணி முடிந்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்தது.

'இப்பணியை முடித்து, 6ம் தேதி, அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்தது. ஆனால், பணி தாமதமானதால், அன்று வெளியாகவில்லை. தற்போது பணி நிறைவு பெற்றுள்ளதால், நாளை, அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

Tuesday, January 07, 2014

CCE - I TO VIII STD SYLLABUS

இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை முடிந்தது.

இன்று (7.1.2014) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு தன் விசாரணை அனைத்தையும் நிறைவு செய்தது. தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் தீர்ப்பு வெளியாகும்.

Monday, January 06, 2014

தேர்வு அட்டவணையை வெளியிட டி.என்.பி.எஸ்.சி., தயங்குவது ஏன்? dinamalar

  ஆண்டு முழுவதும் நடத்த உள்ள போட்டி தேர்வுகளுக்கான, உத்தேச அட்டவணையை தயாரித்து வெளியிட, அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முன் வராதது ஏன்?' என, தேர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர். டி.என்.பி.எஸ்.சி., தலைவராக, நடராஜ் பதவி ஏற்றதும், தேர்வாணையத்தில், பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்ததுடன், ஆண்டு முழுவதற்குமான அட்டவணையையும் வெளியிட்டார். அரசு துறைகளில் இருந்து, முன்கூட்டியே, காலி பணியிடங்களை பெற்று, அதை நிரப்பிட, எந்தெந்த மாதங்களில், எந்தெந்த தேர்வு நடக்கும்; அதன் முடிவு எப்போது வெளிவரும்; பணி நியமனத்திற்கான கலந்தாய்வு உட்பட, அனைத்து தகவல்களையும் தொகுத்து வெளியிட்டார்.

அட்டவணைப்படி, தேர்வுகளை நடத்தவும், நடவடிக்கை எடுத்தார். ஆனால், தற்போது, அனைத்தும் ஓரங்கட்டி வைக்கப்பட்டு விட்டது. இதற்கு, அங்குள்ள ஒரு சிலரிடையே நடக்கும் பனிப்போர் தான் காரணம் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலைவர், ஒரு பணியை செய்ய ஆர்வமாக இருந்தாலும், அதற்கு, அங்கே இருப்பவர்கள், முட்டுக்கட்டை போடுகின்றனர் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்வு அட்டவணையை, முன்கூட்டியே வெளியிட்டால், அதற்கேற்ப, தேர்வர்கள், தேர்வுக்கு தயாராக முடியும். நடராஜ் அறிமுகப்படுத்திய நல்ல திட்டத்தை, தொடர்ந்து செயல்படுத்த, தற்போதைய தலைவர் முன்வர வேண்டும் என, போட்டி தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆன் - லைனிலேயே இனி மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்க்கலாம்

   பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் களின் உண்மைத் தன்மையை (Genuinity) ஆன்-லைனிலேயே உடனுக்குடன் சரிபார்க்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது அரசுத் தேர்வுத் துறை. படித்த இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும்போதோ அல்லது மேல் படிப்புக்காக கல்லூரிகளில் சேரும்போதோ அவர்களின் அடிப் படை கல்வித் தகுதியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை பரிசோதிக்கப்படும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது துறைகள் மூலமாக பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அவை அரசுத் தேர்வுத் துறைக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது துறைகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படும். சான்றிதழ்களை சரிபார்க்கலாம் கம்ப்யூட்டர் வாயிலாக இல்லாமல் ஆட்கள் மூலமாகவே இதுவரை சான்றிதழ்கள் சரிபார்க் கப்பட்டு வருகின்றன.

இதனால், தேவையற்ற கால விரயம் ஏற் படுவதுடன் பணிச் சுமையும் கூடு கிறது. இதனால், சான்றிதழ் சரி பார்க்கக் கேட்டு அனுப்பப்படும் கடிதங்கள் மாதக் கணக்கில் கூட தேங்கிவிடுகிறது. இத்தகைய தேக்க நிலையை மாற்றுவதற்காக, ஆன்-லைன் மூலமாக சம்பந்தப் பட்டவர்களே சான்றிதழ்களை உட னுக்குடன் சரிபார்த்துக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துகிறது அரசுத் தேர்வுத் துறை இயக்கு நரகம். முழுவீச்சில் பதிவேற்றப் பணிகள் இதுகுறித்து அரசுத் தேர்வுத் துறையினர் ‘

’’1980-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை வழங்கப்பட்ட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்கள் அனைத்தையும் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் இப்போது முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. அரசுத் தேர்வுத் துறை வளாகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதற்கான பணிகளை செய்து வருகிறார்கள். இதுவரை 5 கோடி சான்றிதழ்கள் பதிவேற்றம் இதுவரை சுமார் 5 கோடி சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டன. எஞ்சியவையும் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு விரைவில் இந்தத் திட்டத்தை முதல்வர் துவக்கி வைப்பார். அனைத்து சான்றிதழ்களும் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு, அதை திறந்து பார்ப்பதற்கான பாஸ்வேர்டை அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் அரசுத் துறைகளுக்கும் நாங்களே அனுப்பி விடுவோம். அவர்கள், வேறு யாருடைய மதிப்பெண் சான்றி தழையாவது சரிபார்க்க நினைத்தால் பாஸ்வேர்டை பயன் படுத்தி உடனுக்குடன் சான்றி தழின் உண்மைத் தன்மையை சோதித்து விடலாம்’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

Sunday, January 05, 2014

தீர்வு காண பெற்றோர் வேண்டுகோள் அடையாள எண் வழங்காததால் மாணவர்களுக்கு சிக்கல் -paper news

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஆண்டு இஎம்ஐஎஸ் (எஜுகேஷன் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) எனப்படும் அடையாள எண் வழங்கப்பட்டது. இதில் மாணவர் பெயர், பள்ளி, முகவரி, அங்க அடையாளம் உள்ளிட்ட விபரங்கள் இருக்கும். இந்த எண் சில பள்ளிகளில் ஒரு சில மாணவர்களுக்கு வழங்கப்படாமல் விடுபட்டுள்ளது. இந்த நிலையில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளியில் சேர்க்கும் போது, ஏற்கனவே படித்த பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள எண் தருமாறு கேட்கின்றனர். இது குறித்து, மீண்டும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று கேட்டால் மாணவர் பெயரில் அடையாள எண் பதியாமல் விடுபட்டு இருப்பது தெரியவருகிறது.

புதிதாக படிக்கும் பள்ளியில் விவரங்களை பதிந்து பெற்றுக் கொள்ளுமாறு, அவர்கள் பதில் அளிக்கின்றனர். ஆனால், பழைய எண் இருந்தால் தான் புதிய எண் பதிய முடியும் என புதிதாக சேர்க்கப்படும் பள்ளி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இந்த குழப்பங்களால், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளியில் சேரும் மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். பெற்றோரும் அவர்களது சொந்த அலுவலகப் பணிகளை விட்டுவிட்டு அலைந்தும் தீர்வு கிடைக்காமல் விரக்தி அடைகின்றனர். எனவே, கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் பயிற்றுனர் எண்ணிக்கை குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை திட்டம்

   அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்களை குறைக்க, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், அனைவருக்கும் (எஸ்.எஸ்.ஏ.,) கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றிய, வட்டார மேற்பார்வையாளர்கள், அரசு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, முதுநிலையில் உள்ள ஆசிரியர் பயிற்றுனர்கள் 115 பேரும், அரசுப் பள்ளி ஆசிரியராக மாறுதல் செய்யப்பட்டனர். இதில், எஞ்சிய ஆசிரியர் பயிற்றுனர்கள் 500 பேரை விரைவில், அரசு பள்ளி ஆசிரியராக மாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தற்போதுள்ள ஆசிரியர் பயிற்றுனர்களை கொண்டே, இத்திட்டத்தை செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: 10 ஆண்டுகளை கடந்த, இத்திட்டம், இடைநிலைக் கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்துடன் இணைக்கப்பட உள்ளது; இதற்கான, நிதி ஒதுக்கீடும் குறைந்துவிட்டது. மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நான்காயிரம் பயிற்றுனர்களை, 10 பள்ளிகளுக்கு ஒரு பயிற்றுனர், மேற்பார்வையாளர் என, நியமித்து, திட்டம் நிறைவு செய்யப்படும். இவ்வாறு கூறினார்.

NMMS Examination Online Application

Saturday, January 04, 2014

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் போனஸ் அறிவிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சி, டி பிரிவி ஊழியர்களுக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 3 ஆயிரத்திற்கு உட்பட்டு ஒரு மாத ஊதியம் போனஸாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். ஏ, பி ஊழியர்களுக்கு ரூபாய் 1000 போனஸ் வழங்கப்படும் எனவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், முன்னாள் விஏஒ-க்களுக்கு ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

10 ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க ஜன.7ல், மண்டல ஆய்வுக்கூட்டம்

10 ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி விகிதம் அதிகரிப்பது குறித்து, மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், மதுரையில், ஜன.,7 ல் நடக்கிறது. பள்ளி கல்வித் துறை சார்பில், மதுரையில் ஜன.,7ல், மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம், அமைச்சர் வீரமணி தலைமையில் நடக்கிறது. துறை செயலாளர் சபீதா உள்ளிட்ட இயக்குநர்கள் பங்கேற்கின்றனர். மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்ட முதன்மை, மாவட்ட, தொடக்க, கல்வி அலுவலர்கள். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் 70 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 .தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விவரம், அடுத்த கல்வி ஆண்டில் துவக்கப்பட உள்ள ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள், முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பபட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதே போல், ஜன.,6 ல் திருநெல்வேலியிலும், 8 ல் திருச்சியிலும், 10 ல் ஈரோட்டிலும், 11 ல் வேலூரிலும், ஜன., 27 ல் சென்னையிலும் ஆய்வு கூட்டம் நடக்கிறது.