இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, December 21, 2013

மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: விருப்பம் தெரிவித்தால் மாற்ற இயலாது: கல்வித்துறை உத்தரவு

  2014ம் ஆண்டுக்கான,மாவட்ட கல்வி அலுவலர், அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கான, முன்னுரிமை உள்ள தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை,அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்,அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில்,உயர்நிலை, மேல்நிலை ஆகிய இரண்டில்,எதிலிருந்து, மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பெற விரும்புகிறார்? என்பதை தெரிவிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்களால் அளிக்கப்படும், விருப்ப உரிமை இறுதியானது, எதிர்காலத்தில் எந்தவித காரணத்தினாலும் மாற்ற இயலாது. மாவட்ட கல்வி அலுவலராக, பதவி உயர்வு, பணி மாறுதலில் செல்ல விருப்பம் தெரிவித்து விட்டு, பதவி உயர்வு அளிக்கும்போது, தனது விருப்பமின்மையை தெரிவிப்பதால், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள்,காலியாக உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது

. இதனால்,நிர்வாக பணிகளில் காலதாமதம் ஏற்படுவதோடு, மீண்டும் ஒரு துணை தேர்வாளர்கள் பட்டியல் தயார் செய்யப்படும் நிலை உள்ளது. எனவே, விருப்ப உரிமை அளிப்பதில் கவனமாக செயல்பட வேண்டும். மேலும், மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பெறவிருக்கும், தலைமை ஆசிரியர்கள், 2009 ஜன.1ம் தேதி முதல், 2013 டிசம்பர் 31 வரை உள்ள காலங்களுக்கு, பணிக்காலத்தில் அவரின் தலைமையில் பள்ளியின் சிறப்பு, வரவு, செலவு திட்ட அறிக்கை தவறாமல் பெற்றனுப்பட வேண்டும். தலைமை ஆசிரியர்கள் சார்பில் விருப்ப கடிதம் மற்றும் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு கடந்த ஆண்டு அளித்திருந்தாலும், இந்த ஆண்டும், புதிய விருப்ப கடிதம், படிவம் இணைத்தனுப்ப வேண்டும், என பள்ளி கல்வி இயக்குனரகம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Friday, December 20, 2013

அண்ணாமலை பல்கலை கழக நுழைவுச்சீட்டு டிசம்பர் 2013

ரேஷன் கார்டு செல்லத்தக்க காலம் நீட்டிப்பு

"புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து, முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்,'' என, உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். சென்னை எழிலக வளாகத்தில், உணவு துறை ஆய்வு கூட்டம், நேற்று, நடந்தது. இதில், அமைச்சர் காமராஜ் பேசியதாவது: நடப்பாண்டிற்கு புதுப்பிக்கப்பட்ட, ரேஷன் கார்டுகளின் பயன்பாட்டு காலம், வரும், 31ம் தேதியுடன் முடிவடைகிறது. உடற்கூறு முறையிலான, தேசிய மக்கள் தொகை பதிவாளர் கணக்கெடுப்பு பதிவுகளின் அடிப்படையில், "ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனினும், மத்திய அரசின், மக்கள் தொகை பதிவாளரின் கணக்கெடுப்பு பணி முழுமையாக முடிந்து, தகவல் தொகுப்பை பெற, காலதாமதமாகும் என்பதால்,2014 15ல் தான், "ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்க முடியும் என, தெரிகிறது. எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, 31.12.14 வரை என, மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தற்போது, புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில், 2014ம் ஆண்டிற்கும் உள்தாள் ஒட்டப்பட்டு இருப்பதால், இதையே பயன்படுத்தி, உணவு பொருட்களை பெறலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

அனைவருக்கும் கல்வித்திட்டத்துக்கு முழுக்கா? பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் பேட்டி

கடந்த, 2000ம் ஆண்டில், அனைவருக்கும் கல்வித்திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மாற்றுத்திறனாளி மாணவர்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துதல், இடைநிற்பதை தவிர்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்ட காலம், 2010ல், முடிந்தது; தொடர்ந்து, மூன்றாண்டுகள் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய மனித வளமேம்பாட்டு துறை இத்திட்டத்தை, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் இணைக்க, ஆலோசித்து வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க முக்கிய பணியான, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடங்கள் கலைக்கப்பட்டு, அதில் பணிபுரிந்தவர்கள், கலந்தாய்வின் மூலம் மீண்டும் பள்ளிகளுக்கே அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, சம்பளம் வழங்குவதற்கான நிதியை, மத்திய அரசு நிறுத்தியதே காரணம் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் பணியிடங்கள் கலைப்பு,, இத்திட்டத்தை நிறுத்துவதற்கான, மறைமுக நடவடிக்கை என்று கூறப்பட்டது.

திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்துடன் இணைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கிளம்பியுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதாவிடம் கேட்டபோது, ""அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கத்துடன் இணைப்பது தொடர்பாக எவ்வித ஆலோசனைகளும், மேற்கொள்ளப்படவில்லை. தற்போதைக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் கலைக்கப்படாது,'' என்றார்.

பெட்ரோல் விலை உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 காசுகள் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

Thursday, December 19, 2013

Tamil Nadu Public Service Commision- Departmental Exam Hall Ticket dec 2013

1947–க்கு பின் இப்போது 2014 67 ஆண்டுகளுக்கு பின் ஒரே மாதிரி காலண்டர்

சில சமயங்களில் எப்போதாவது சில அதிசயங்கள் நிகழும். அப்படிப்பட்ட ஓர் அதிசயம் வருகிற 2014–ம் ஆண்டில் நிகழ்கிறது. அதாவது 1947–ம் ஆண்டு காலண்டர் போலவே, 2014–ம் ஆண்டின் காலண்டரும் அமைகிறது. 1947–ம் ஆண்டு புதன்கிழமை பிறந்தது. அதேபோல் இந்த ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது. மேலும் 1947–ம் ஆண்டைப் போலவே 2014–ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும், கிழமைகளையும் கொண்டு உள்ளது.

இதனால் 2014–ம் ஆண்டின் காலண்டரை பார்த்தால், அப்படியே 1947–ம் ஆண்டின் காலண்டரை பிரதி எடுத்தது போல் உள்ளது. எனவே, யாரிடமாவது 1947–ம் ஆண்டின் காலண்டர் இருந்தால் அதை இப்போது பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய ஆண்டு பிறக்கப்போகிறது என்றாலே, புத்தாண்டு எப்படி இருக்கும்? என்பது பற்றி பல கணிப்புகள் வெளியாகும். அதேபோல் இந்த ஆண்டும் கணிப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. 1947–ம் ஆண்டுதான் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அதேபோல் இந்த ஆண்டும் இந்திய அரசியலில் பெரும் மாற்றம் நிகழக்கூடும் என்று சிலர் கூறுகிறார்கள்.

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசாணை வெளியீடு

. இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதும் பார்வையற்றவர்களுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சென்னையில் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்த நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெற்றது. அதன்பிறகு, மாற்றுத்திறனாளிக்காக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.

பி.எட். படித்து வேலையில்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைப்பதற்காக தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உத்தரவிடப்படுகிறது. இந்தத் தேர்வில் தகுதி பெறும் பி.எட். பட்டதாரிகள் இப்போதுள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப்பணியிடங்களிலும் பணியமர்த்த அனுமதி வழங்கப்படுகிறது. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்கப்படும். பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கும் (Scribes) சிறப்புப் பயிற்சி வழங்கப்படும்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறும் 200 பார்வையற்றோர், இப்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக்கூடிய காலிப் பணியிடங்களில் விதிகளுக்குட்பட்டு பணியமர்த்தப்படுவர். நெட் மற்றும் ùஸட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, முதுநிலைப் பட்டம் பெற்ற 100 பார்வையற்றோரை உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கும், அவர்களின் உதவியாளர்களுக்கும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் 32 மாவட்டங்களில் 50 மையங்களில் பயிற்சி அளிக்க மையம் ஒன்றுக்கு ரூ.4 லட்சம் வீதம் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு

தமிழகத்தில் உள்ள சுமார் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு சில நாள்களில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து அவர்களுக்கான பதவி உயர்வு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பதவி உயர்வுக்குத் தகுதியானவர்களின் பட்டியல், காலிப்பணியிடங்கள் விவரம் போன்றவை தயாராக உள்ளன. அரசிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் பதவி உயர்வு மற்றும் பணியிடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாகவோ, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாகவோ பதவி உயர்வு பெறலாம். பதவி உயர்வு பெற்றவர்கள் தலைமையாசிரியராகவோ, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராகவோ இடமாறுதல் பெறலாம் என்ற நடைமுறை இருந்து வந்தது. ஆனால், இந்த நடைமுறையை பள்ளிக் கல்வித் துறை மாற்றியது. பதவி உயர்வுக்குப் பிறகு அவர்கள் இடமாறுதல் பெறமுடியாது எனவும், அவர்கள் தேர்ந்தெடுத்த பொறுப்புகளில் இருந்தே அடுத்தடுத்த பதவி உயர்வு இருக்கும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

இதை எதிர்த்து பட்டதாரி ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். பல மாதங்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் ஏற்கெனவே இருந்த நடைமுறையே பின்பற்றப்படும் என பள்ளிக் கல்வித் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து, பிரச்னை முடிவுக்கு வந்தது. அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்களாக இருந்த 60-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இந்த இடமாற்றத்துடன் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் நடத்தப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு : ஏப்ரல் 2ம் வாரத்துக்குள் முடிக்க நடவடிக்கை

  லோக்சபா தேர்தலை, ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறு உள்ளதால், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை, ஏப்ரல் இரண்டாவது வாரத்துக்குள் முடித்து விட, தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள், மார்ச்சில் துவங்கி, ஏப்ரல், 12 வரை, நடத்தப்படுகிறது. பார்கோடு எண் கடந்த ஆண்டுகளில், தேர்வு முடிந்து, ஒரு மாதத்துக்குள் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். தற்போது, தேர்தல் வரவுள்ளதால், முன்கூட்டியே விடைத்தாள் மதிப்பீடு செய்து முடிக்கும் வகையில், தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

பார்கோடு எண் மற்றும் மாணவரின் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படுவதால், டம்மி எண் போடுவதற்கான முகாம்கள், முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிந்ததும், விடைத்தாள்கள், மதிப்பீடு செய்ய அனுப்ப முடியும்; அதிகபட்சம், 15 நாட்களுக்குள் அனைத்து விடைத்தாள்களையும் மதிப்பீடு செய்துவிட முடியும், என்ற நிலை உருவாகியுள்ளது. 15 நாட்களுக்குள் : இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டு, பொதுத்தேர்வில், பலவித அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர், அக்டோபர் தேர்வில், 15 நாட்களுக்குள் தேர்வு முடிவு தயாராகி விட்டது. தற்போது, அதிக மாணவர்கள் தேர்வெழுதினாலும், அதற்கேற்ப ஆசிரியர்களை பயன்படுத்தும் போது, 15 நாட்களுக்குள் தேர்வு முடிவுகள் தயாராகி விட வாய்ப்பு உள்ளது. தேர்வுப்பணிகள், தேர்தலால் பாதிக்காத வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

முறைகேடுகளை தடுக்கும் வகையில், தேர்வு அறைக்கு செல்லும் ஆசிரியர் முதல், மதிப்பீடு செய்யும் ஆசிரியர் வரை, அனைவரையும், அரசு தேர்வுகள் இயக்குனரகமே தேர்வு செய்ய உள்ளது. நிர்வாக ரீதியாகவும், புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தேர்வு, புதிய அத்தியாயத்தை உருவாக்கும் முயற்சியாக இருக்கும். இவ்வாறு, அந்த அலுவலர் கூறினார்.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (NMMS) வட்டார அளவினால தேர்விகளில் அதிக மாணவர்கள் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ள விழிகாட்டி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

Wednesday, December 18, 2013

2,695 ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி

அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பணியிடங்கள் விவரம் வருமாறு:

பள்ளிக்கல்வித்துறையில்

PG. -981
BT TAMIL. -115
BT OTHERS -417
PET -99
ஓவிய ஆசிரியர் -57
இசை ஆசிரியர் -31
தையல் ஆசிரியர் -37

தொடக்கக் கல்வித்துறையில்

இடைநிலை ஆசிரியர் -887
உடற்கல்வி ஆசிரியர் -37

மேற்கண்ட காலிப்பணியிடங்களின் பட்டியல் பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இப்பணியிடங்கள் அண்மையில் நடந்து முடிந்துள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படுமா? அல்லது புதிய தேர்வுகள் வைத்து நிரப்பப்படுமா? என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம்தான் முடிவு செய்யும் என பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.இராமேஸ்வரமுருகன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, December 17, 2013

கல்வி வளர்ச்சியில் தென் மாநிலங்கள் "சூப்பர்'

   கல்வி வளர்ச்சியில் வட மாநிலங்களை விட, தென் மாநிலங்கள் சிறப்பான இடத்தில் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. தர வரிசையில், லட்சத்தீவுகள், புதுச்சேரி, தமிழ்நாடு முறையே, முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. மத்திய அரசின் கீழ் டில்லியில் இயங்கும், திட்டமிடுதல் மற்றும் நிர்வாக தேசிய பல்கலைக்கழகம் சார்பில் மாவட்டவாரியாக இ.டி.ஐ., (எஜூகேஷன் டெவலப்மென்ட் இண்டக்ஸ்) விபரம் சேகரிக்கப்பட்டது. கல்வியின் வளர்ச்சி பற்றிய இக்கணக்கீட்டின்படி, பல மாநிலங்கள் முன்னேற்றம் இன்றி, முந்தைய ஆண்டுகளின் நிலையையே தொடர்ந்துள்ளன. குறிப்பாக இந்தி மொழி பேசும் மாநிலங்களில், கல்வி வளர்ச்சி அதிகம் சரிந்துள்ளது.

அதேவேளையில் கல்வி உரிமை சட்டம் வந்த பிறகு, தென் மாநிலங்கள் விரைவான வளர்ச்சியை கண்டுள்ளன. இதன்படி அணுகுமுறை, உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் மற்றும் திறமை வெளிப்பாடு ஆகியவை மேம்பட்டுள்ளன. இருப்பினும், பீகார், உ.பி., மற்றும் சில மாநிலங்கள் முயற்சி செய்தும், அதில் வெற்றி பெற முடியவில்லை. மாவட்ட பள்ளிக் கல்வி தகவல்களின் அடிப்படையில், அடிப்படை மற்றும் மேல்கல்வி முறைகளில், லட்சத்தீவுகள் முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் புதுச்சேரியும், அதற்கடுத்தடுத்த இடங்களில் தமிழ்நாடு, சிக்கிம், கர்நாடகாவும் வருகின்றன.தமிழ்நாட்டில், பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத் திட்டத்தினால், கல்வித்தரம் குறையாமல்

பொதுத்தேர்வுக்கு 19 லட்சம் கேள்வித்தாள் அச்சடிப்பு

பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 3ல் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வுகள், மார்ச், 26ல் இருந்தும் துவங்குகின்றன. இதற்காக, 19 லட்சம் கேள்வித்தாள் அச்சடிப்பு பணி, வெளிமாநிலத்தில், மும்முரமாக நடந்து வருகிறது. பிப்ரவரி மத்தியில், அச்சகத்தில் இருந்து, நேரடியாக, கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு, அவை வந்து சேரும். ஒவ்வொரு தேர்வு மையம் வாரியாக, ஒரு மையத்தில், எத்தனை தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன என, கணக்கீடு செய்யப்பட்டு, அதன்படி, அச்சகத்தில் இருந்து, நேரடியாக, தேர்வு அறை எண்ணிக்கை வாரியாக, தலா, 20 கேள்வித்தாள்கள் அடங்கிய கட்டுகள் தயாரித்து, சீலிடப்பட்டு அனுப்பப்படும

். இந்த கேள்வித்தாள் கட்டுகள், மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ள, கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு வந்து சேரும். பின், அந்த மையத்தில் இருந்து, தேர்வு நாள் காலை, பள்ளிக்கு சென்றடையும். 2011 வரை, கேள்வித்தாள் கட்டுகள், தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு வந்து, பின், மாவட்டங்களுக்கு சென்றன. கடந்த ஆண்டில் இருந்து, நேரடியாக, அச்சகத்தில் இருந்து, மாவட்டங்களுக்கு செல்லும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே நடைமுறை, இந்த ஆண்டும் இருக்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாணவர் எண்ணிக்கை வாரியாக, கேள்வித்தாள் அச்சிடப்பட்டு வருவதால், ஒரு கேள்வித்தாள் கூட, கூடுதலாக வராது என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இம்மாத இறுதியில், தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள், அச்சகங்களுக்கு சென்றதும், குறிப்பிட்ட எண்ணிக்கையுடன், அச்சடிப்பு பணி நிறுத்தப்படும். பிப்ரவரி, 15 தேதிக்கு பின், கேள்வித்தாள்கள் வர ஆரம்பிக்கும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பிளஸ் 2 தேர்வுக்கு, 8.5 லட்சம்; 10ம் வகுப்பு தேர்வுக்கு, 10.5 லட்சம் என, மொத்தம், 19 லட்சம் கேள்வித்தாள்கள், எதிர்பார்க்கப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான வழக்கு இரண்டு வாரம் ஒத்திவைப்பு-Teachertn news

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான TATA பொதுச்செயலாளர் திரு.கிப்சன் அவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 11ஆம் எண் நீதிமன்றத்தில் நீதியரசர் சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாராணைக்கு வந்த போது அரசு தரப்பு  வழக்கறிஞ்சர்   இரண்டு வார கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு 2 வாரம் ஒத்திவைத்து நீதிபதி  உத்தரவிட்டார்.

Chess game video

NMMS exam instructions 2014

Monday, December 16, 2013

ஒன்பதாம் வகுப்பு, மூன்றாம் பருவ பாட புத்தகங்களுக்கு, கல்வி வாரியத்தின் ஒப்புதலை பெற, 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தனியார் பதிப்பகங்களுக்கு, அழைப்பு

  மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தின் உறுப்பினர் - செயலர், பழனிசாமி அறிவிப்பு: ஒன்பதாம் வகுப்பிற்கு, இறுதி செய்யப்பட்ட மூன்றாம் பருவ பாட திட்டம், பொதுமக்கள் பார்வைக்காக, www.dse.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ் பாடம் தவிர்த்து, இதர பாட புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற, புத்தகங்களின், இரு நகல்களுடன், உறுப்பினர் - செயலர், மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக்கல்வி), கல்லூரி சாலை, சென்னை-6 என்ற முகவரிக்கு, 27ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள், நேரிலோ, அஞ்சல் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.

உத்தேச விலை அவசியம் : ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையில், தமிழ் பாடம் தவிர்த்து, இதர பாடங்களுக்கு, ஒப்புதல் பெறவும் விண்ணப்பிக்கலாம். பாட புத்தகத்தின், உத்தேச விலையை, குறிப்பிட வேண்டும். பாட புத்தகங்களுக்கு, ஒப்புதல் அளிப்பது, மாநில கல்வி வாரியத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டது. இவ்வாறு, பழனிசாமி அறிவித்து உள்ளார். தனியாரை கண்டுகொள்வதில்லை

: மாநில கல்வி வாரியத்தின் ஒப்புதலை பெறும் பதிப்பகங்கள், தாங்கள் அச்சிட்ட பாட புத்தகங்களை, பள்ளிகளுக்கு, விற்பனை செய்யலாம். பெரும்பாலான பள்ளிகள், அரசு பாட புத்தகங்களையே வாங்கி விடுவதால், தனியார் பதிப்பகங்களிடம் இருந்து, அதிகளவில், தனியார் பள்ளிகள், புத்தகங்களை கொள்முதல் செய்வதில்லை. இதனால், விண்ணப்பிக்கும் பதிப்பகங்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தை தாண்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கி ஊழியர்கள் நாளை ஸ்டிரைக்

   சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள், நாளை ஸ்டிரைக்கில் குதிக்கின்றனர். இதனால், நாடு முழுவதும், பொதுத்துறை வங்கிகளின் பணிகள், பாதிப்புக்கு உள்ளாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் ஊழியர்களின் தொழிற்சங்கங்களுக்கு இடையே, முதன்மை தொழிலாளர் கமிஷனர் முன் நடந்த பேச்சுவார்த்தையில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ஸ்டிரைக் குறித்து, வாடிக்கையாளர்களுக்கு, வங்கிகள் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும், 27 பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில், 8 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இ.பி.எப்., முதலீடு 8.5 சதவீத வட்டி?

   தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட, சந்தாதாரர்களின் கணக்கில் உள்ள டிபாசிட்டுக்கு, 8.5 சதவீத வட்டி வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சேர்ந்து கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகைக்கு, ஆண்டுதோறும், வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி, எவ்வளவு சதவீதம் என்பதை, இ.பி.எப்.ஓ., என்ற, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் கீழ் செயல்படும், டிரஸ்டிகளின் மத்திய போர்டு கூடி முடிவு செய்யப்படும

்.இந்த வகையில், 2013 14ம் ஆண்டுக்கான, வட்டியை முடிவு செய்வதற்காக, நேற்று, டிரஸ்டிகளின் மத்திய போர்டு கூடுவதாக இருந்தது. போர்டின் தலைவரும், மத்திய தொழிலாளர் நல அமைச்சராக இருந்த சிஸ்ராம் ஓலா மறைவையடுத்து, நேற்றைய கூட்டம் ரத்து செய்யப்பட்டது.தற்போது, தொழிலாளர் துறை அமைச்சராக, ஆஸ்கர் பெர்னாண்டசுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில், இவர் தலைமையில் வாரிய கூட்டம் நடைபெறும். கடந்தாண்டு, இ.பி.எப்., டிபாசிட்டுக்கு, 8.5 சதவீத வட்டி அளிக்கப்பட்டது. இதுவே, 2013 14ம் ஆண்டிற்கு வழங்கப்படும் என தெரிகிறது.