இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, October 21, 2013

தீபாவளி போனஸ் கேட்டு பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை

   தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாநில ஆலோசனைக் கூட்டம், காஞ்சிபுரத்தில் நடந்தது.மாநிலப் பொதுச் செயலர் கோவிந்தராஜு தலைமை வகித்தார். மாநில கெüரவத் தலைவர் சுந்தரகணேஷ், மாநிலத் தலைவர் ராமர், துணைத் தலைவர்கள் பாபு, இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநிலத் துணைத் தலைவர் முருகதாஸ் வரவேற்றார். பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை மாதத்தின் முதல் தேதியன்றே அவரவர் வங்கிக் கணக்கில் கிடைக்க தமிழக  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் மரணமடைந்த 7 பகுதி நேர ஆசிரியர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல, தீபாவளி போனஸ், மருத்துவக் காப்பீடு, விபத்துக் காப்பீடு, ஆசிரியைகளுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு ஆகிய சலுகைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் சீனிவாசன் உள்பட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

25, 26, 27 தேதிகளில் நடைபெறும் குரூப்–1 தேர்வை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

– வருகிற 25, 26, 27 தேதிகளில் சென்னையில் குரூப்–1 மெயின் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து பொது அறிவுத்தாள் 1, 2, 3 ஆகியவற்றில் விடைகளை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் விடையளிக்கலாம். ஒரு பகுதி தமிழிலும் மறு பகுதி ஆங்கிலத்திலும் கூட விடையளிக்கலாம்.

ஆனால் பொது அறிவுத்தாள் 2–ல் உள்ள பகுதி–2 தமிழ் மொழி, அல்லது ஆங்கில மொழி பகுதியை பொறுத்தமட்டில் இவ்விரண்டில் ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்து விடை அளிக்க வேண்டும். இது குறித்து சந்தேகம் இருப்பின் contacttnpsc@gmail,com என்ற மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மைய தொலைபேசி எண் 1800 425 1002 மூலம் பேசி தீர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிவை வெளியிடுவதற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.

மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–நான் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த 21.7.2013 அன்று நடந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை நான் எழுதினேன். இதற்கான முடிவு 7.10.2013 அன்று வெளியிடப்பட்டது. அதில் 111 மதிப்பெண் பெற்றிருந்தேன். அடுத்தகட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி 22–ந் தேதி (இன்று) நடக்க உள்ளது. அழைப்பு இல்லை  என்னைப் போன்று 111 மதிப்பெண் பெற்ற மற்றொருவருக்கு சான்றிதழ் சரிப்பார்ப்பில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.

எனக்கு அழைப்பு இல்லை.இதுகுறித்து 15.10.2013 அன்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்–செயலாளர் ஆகியோரிடம் முறையிட்டேன். ஆனால் எந்த தகவலும் இல்லை. கடந்த காலங்களில் பணியிடங்களுக்கான தேர்வு 1:2 என்ற விகிதப்படி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆனால் தற்போது 1:1 என்ற விகிதப்படி தேர்வு செய்வது நடைமுறையில் உள்ளது. பி.எட் படிப்பை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. எனவே அதற்காகவும் மதிப்பெண் கிடைக்கும். எனவே சான்றிதழ் சரிபார்ப்பில் நான் கலந்து கொண்டால் கண்டிப்பாக தகுதி பெறுவேன். ஆகவே சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் எனது பெயரை சேர்க்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. வக்கீல் தாளைமுத்தரசு ஆஜரானார். முடிவை வெளியிட தடை இந்த மனுவை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்து, ‘‘முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதி தேர்வானவர்கள் அனைவரின் பட்டியலையும் தயார் செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதுவரை சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான முடிவை வெளியிட தடை விதிக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டார்.மேலும் இந்த வழக்கை வருகிற 28–ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

All india radio news, Reading site

பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுரை பழுதடைந்த கட்டிடங்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது

மழை சீசன் தொடங்கி உள்ளதால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு எந்தவித இடையூறுமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பழுதடைந்த கட்டிடங்களில் வகுப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவுரைகளை மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் பள்ளிகளுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, பழைய பழுதான கட்டிடங்களில் வகுப்பறைகள் நடந்தால், அதில் வகுப்புகளை நடத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எம்பி, எம்எல்ஏ நிதியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு, அவை திறக்கப்படாமல் இருந்தால் அந்த வகுப்பறைகளை மழை காலங்களில் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடங்களில் பழுதுகள் இருந்தால் நீக்கி கவனமாக பராமரிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மாலை நேரங்களில் மழை வர வாய்ப்பு இருந்தால், மாணவர்களை முன்னதாகவே வீடுகளுக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழை சீசன் முடியும் வரை மழையால் தேவையற்ற இடையூறுகள் மற்றும் விபத்துகளை தவிர்க்க போதிய முன் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறு பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

20% தீபாவளி போனஸ் : ஜெ., அறிவிப்பு

 பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித் துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப்போக்குவரத்துக் கழக ஊழியருக்கு போனஸ், நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கழக ஊழியருக்கும் 20% போனஸ், வனத்தோட்டக்கழகம், தேயிலைத்தோட்டக் கழக ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் என்று அறிவித்துள்ளார்.

பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கும் 20% போனஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணைய ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் என்றும்,  லாபம் ஈட்டிய கூட்டுறவு சங்க ஊழியருக்கும் 20 % போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தொடக்கக் கல்வி - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவசரம் மற்றும் அவசியம் கருதி ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் பெற்று தர உடனடி நடவடிக்கை எடுக்க இயக்குநர் உத்தரவு

Sunday, October 20, 2013

விடுமுறை அறிவிப்பு

  விடுமுறை அறிவிப்பு: விடிய விடிய மழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

தொடக்கக்கல்வித் துறையில் சிறந்த பள்ளிக்களுக்கு கேடயம்

   தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தனியார், அரசு பள்ளிகளிடம் போட்டியை ஊக்குவிப்பதற்காக சிறந்த பள்ளிகளுக்கு சுழற்கேடயம் வழங்கப்பட உள்ளன. இதற்காக மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்புத்திறன், செயல்வழி கற்றல், கணிதம் அடிப்படை திறன், குடிநீர், கழிப்பறை வசதி, கம்யூட்டர் பயன்பாடு, விளையாட்டு, பதிவேடு பராமரிப்பு உள்ளிட்ட 14 வகைப்பாடுகளின் அடிப்படையில் மாவட்ட அளவில் தலா மூன்று பள்ளிகளை தேர்வு செய்து அனுப்ப தொடக்கக் கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநரை கொண்ட தேர்வுக்குழு சிறந்த பள்ளிகளுக்கான பட்டியலை தயாரித்து வருகிறது.

Saturday, October 19, 2013

தமிழ்நாடு அனைத்துச் சட்டங்களும்- ஆண்டு வாரியாக

"நெட்" தேர்வு:விண்ணப்பிக்க அக்டோபர் 30 கடைசி நாள்

நெட் தேர்வு குறித்த அறிவிப்பு மற்றும் முக்கிய நாட்கள்

*தேர்வு நாள்-29-12-13

*ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 30-10-13

*வங்கி சலான் மூலம் தேர்வு கட்டணம் கட்ட கடைசி தேதி நவம்பர் 2

*பூர்த்தி செய்த விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய நவ5

மேலும் விபரங்களுக்கு www.ugcnetonline.com

பண்டிகை கால முன்பணம் கிடைப்பதில் சிக்கல்

   உரிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், பண்டிகைக் கால முன்பணம் பெற முடியாமல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில், பண்டிகைக் கால முன்பணமாக, 5,000 ரூபாய் வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. இந்த முன் பணம் வாங்க விரும்பும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்கள் தலைமை அதிகாரியிடம் விண்ணப்பம் கொடுத்தால், அவர்களுக்கு, கருவூலகம் மூலம், முன்பணம் வழங்கப்படும்.

இந்த தொகை, மாத சம்பளத்தில், தவணை முறையில் பிடித்தம் செய்யப்படும். இந்தாண்டு தீபாவளிக்கு, அரசு ஊழியர்களுக்கு முன் பணம் வழங்க, ஒவ்வொரு துறைக்கும், குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், பலர், பண்டிகைக் கால முன் பணத்தைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில், 60 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம், 3,600 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், 500 பேருக்கு மட்டும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், பண்டிகை கால முன்பணம் பெற விண்ணப்பித்தவர்களில், பலருக்கு, போதிய நிதியில்லை என, மறுக்கப்பட்டுள்ளது. இதே நிலையே மற்ற மாவட்டங்களிலும் நிலவுகிறது. வட்டியில்லாக் கடனாக கிடைக்கக் கூடிய, இந்த முன் பணத்தைப் பெற்று, தீபாவளியை கொண்டாடலாம் என, இருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.41 கோடி

ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம், குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டு வந்தது. இதன் மூலம், பள்ளிகளுக்கு தேவையான தளவாட பொருட்கள், அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வந்தன. அனைவருக்கும் இலவச கல்வி அளிக்க வேண்டும், என்ற நோக்கத்தில், மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த சிறப்பு கட்டணம் (ஸ்பெஷல் பீஸ்) கடந்த 2008-09 ம் கல்வி ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. இதற்கான, இழப்பீட்டு தொகையை அரசே ஈடு செய்யும் என கூறியது

. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து வந்தது. கடந்த 2011-12ம் ஆண்டு, ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2012-13ம் ஆண்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், பள்ளிகளில் சாதாரண அடிப்படை வசதிகள் கூட மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பல பள்ளிகளில், நிதி கையிருப்பு என்பதே இல்லை. தலைமை ஆசிரியர்கள் தங்கள் கையிலுள்ள பணத்தை செலவழித்து வந்தனர். இந்த நிதியை ஒதுக்கித்தருமாறு, அவர்கள் அரசுக்கு பல்வேறு கட்டங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இதற்காக அரசு 2012-13, 2013-14ம் ஆண்டுக்கு ஆண்டுக்கு தலா ரூ.20 கோடியே 50 லட்சம் வீதம், 41 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி நிறுவன பள்ளிகளுக்கு இந்த இழப்பீட்டு தொகை வழங்கப்படாது, என அரசு முதன்மை செயலர் சபீதா, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளார்

. தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: சிறப்பு கட்டணம், இரண்டு ஆண்டாக ஒதுக்கப்படாததால், அடிப்படை பணிகளை, நிறைவேற்ற தலைமை ஆசிரியர்கள் தன்னுடைய சொந்த பணத்தை செலவழித்து வந்தனர். ஒரு சில பள்ளிகளில், பணமின்மையால், அடிப்படை பணிகளில், முட்டுக்கட்டை ஏற்பட்டது. இவற்றை மொத்தமாக ஒதுக்கீடு செய்யாமல், அந்தந்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில், வரும் காலங்களில் ஒதுக்கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

டிட்டோ - ஜாக் பொறுப்பாளர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Check out this file on Box: https://www.box.com/shared/4uugwvnr1gz0pkpuwkm6

Friday, October 18, 2013

சமூக பாதுகாப்பு மற்றும் பல்லூடகப் பாதுகாப்பு -தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சிக்கட்டகம் | Social Awareness and Cyber Safety Primary Training Module

SSA - PRIMARY CRC - SOCIAL AWARENESS & CYBER SAFETY MODULE CLICK below

https://app.box.com/s/rtbwqqqh07ggcnr1vk72

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறைதீர்க்கும் கட்டணமில்லாத தொலைபேசி எண் 18004251002 .

 குரூப் 1 பிரதானத் தேர்வு, அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னை தேர்வு மையத்தில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் ஹால் டிக்கெட்டுகளை தேர்வாணைய  இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு  மூன்று நாள்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.www.tnpsc.gov.in தேர்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் contacttnpscgmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறைதீர்க்கும் கட்டணமில்லாத தொலைபேசி எண்ணான 18004251002-இன் மூலமாகவோ கேட்டுத் தெளிவு பெறலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்து சம்பளத்தை முழுமையாக பிரதி மாதம் 5ம் தேதிக்குள் வழங்கவும், மேலும் சில விதிமுறைகளை வழங்கி திட்ட இயக்குநர் உத்தரவு

தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியர்களிடமிருந்து புல்பிரைட் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமெரிக்க ஜக்கிய நாடுகள் மற்றும் இந்திய கல்வி பவுண்டேஷன் என்ற அமைப்பு இந்த விருதினை வழங்குகின்றது. தகுதியுள்ளவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். ஆசிரியர்கள் மட்டுமின்றி, தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் நூலக சிறப்பாளர்கள், வழிகாட்டு கவுன்சிலர்கள், பாடத்திட்ட சிறப்பாளர்கள், சிறப்பு கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்சியாளர்கள் ஆகியோரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

நவம்பர் 20 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்கு http://www.usief.org.in/Fellowships/Distinguished-Fulbright-Awards-Teaching-Program.aspx என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

வாக்காளர்களுக்கு அடையாள அட்டை

இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் ஜன., 6 முதல், வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. தொடர் வாக்காளர் பட்டியல் தயாரிப்பின்போது புதிய வாக்காளர்கள், அடையாள அட்டையை தொலைத்தவர்களுக்கு, 30 நாட்களுக்குள் புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டன. தற்போது, நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப்பணியில், புதிய வாக்காளர்கள், விடுப்பட்ட வாக்காளர்கள் என, ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால், ஜன.,6 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும், 18, 19 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்களுக்கு, தேசிய வாக்காளர் தினத்தில் வழங்கவும் தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

பி.ஏ., ஆங்கிலபடிப்பு அரசாணை வெளியீடு

மதுரை காமராஜ் பல்கலையில், பி.ஏ., ஆங்கிலம் (தொழில் சார்ந்த படிப்பு) மற்றும் பி.ஏ., ஆங்கிலம்(இலக்கியம்) என, 2 பட்டப்படிப்புகள் உள்ளன. பி.ஏ., ஆங்கிலம் தொழில் சார்ந்த படிப்பு, வேலைவாய்ப்பிற்கு பரிசீலிக்கப்படும்போது, பி.ஏ., ஆங்கிலம் இலக்கியத்திற்கு இணையாகவே கருதப்படும் என, அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் : அதிகாரிகள் கூட்டத்தில் அமைச்சர் ஆய்வு

அடுத்த கல்வி ஆண்டில், ஆறாம் வகுப்பில், ஆங்கிலவழி கல்வி வகுப்புகள் அறிமுகம் செய்ய வேண்டிய அரசு பள்ளிகள் எண்ணிக்கை குறித்த விவரங்களை, பள்ளி கல்வித்துறை அமைச்சர், பழனியப்பன், நேற்று ஆய்வு செய்தார். தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் வகையிலும், தனியார் பள்ளிகளுக்கு, மாணவர்களை செல்வதை தடுத்து நிறுத்தும் வகையிலும், அரசு பள்ளிகளில், படிப்படியாக ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவங்கப்படும் என, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில், மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், 320 பள்ளிகளில், ஆறாம் வகுப்புகளில், ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டன. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், எத்தனை அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பில், ஆங்கிலவழி கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்துவது என்பது குறித்து, பள்ளி கல்வித் துறைக்கு கூடுதல் பொறுப்பேற்றுள்ள அமைச்சர், பழனியப்பன், நேற்று, சென்னையில் ஆய்வு செய்தார்.

சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா, எஸ்.எஸ்.ஏ., இயக்குனர், பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோருடன், அமைச்சர், ஆலோசனை நடத்தியபோது, ஆங்கில வழி வகுப்புகள் துவங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அதிகாரிகள் முன்கூட்டியே, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், அமைச்சர் வலியுறுத்தினார்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் St

20 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் 20 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில், பொறியியல், விவசாயம், மருத்துவம், கால்நடை மருத்துவம், உடற்கல்வி, கல்வியியல், மீன்வளம் ஆகிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களும் அடங்கும். சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் கலை- அறிவியல் படிப்புகள் சம்பந்தப்பட்டவை . அவை தங்கள் அதிகார வரம்புக்குட்பட்ட கலை -அறிவியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம், பாடத்திட்டத்தை உருவாக்குவது, தேர்வுகள் நடத்தி பட்டச் சான்றிதழ்கள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்கின்றன.

தற்போது ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு பாடத்திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. உதாரணத்துக்கு, ஒரு பல்கலைக்கழகத்தின் பி.ஏ. வரலாறு படிப்புக்கான பாடத்திட்டம் மற்றொரு பல்கலைக்கழகத்தின் இதே பட்டப் படிப்பைப் போல் இருப்பதில்லை. இதனால், ஒரே பட்டப் படிப்பு அல்லது முதுகலை பட்டப் படிப்பு என்றாலும் ஒவ்வொன்றும் மற்ற பல்கலைக்கழக படிப்புக்கு இணையானதா என்ற சிக்கல் அடிக்கடி எழுகிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பதற்காகவே டி.என்.பி.எஸ்.சி.யில் இணைகல்வி தகுதிக் குழு (ஈகுவேலன்ட் கமிட்டி) என்ற சிறப்பு குழு உள்ளது. இனி ஒரே பாடத்திட்டம் இதுபோன்று பிரச்சினை எழும் நேரங்களில் அந்த குழு கூடி சர்ச்சைக்குரிய பட்டப் படிப்புக்கான பாடத்திட்டத்தை ஆராய்ந்து அது இணையானதா? இல்லையா? என்பதை முடிவு செய்யும்.

ஒரே பட்டப் படிப்பு என்ற போதிலும் பாடத்திட்டம் பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழகம் வேறு வேறாக இருப்பதால் மாணவர்களும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரேமாதிரியான பொதுப்பாடத்திட்டத்தைக் கொண்டுவர மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது. மாணவர்களுக்கு வரப்பிரசாதம் பாடத்திட்டம் எல்லா பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்பட்சத்தில் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மாநிலத்துக்குள் எளிதாக வேறு கல்லூரிக்கு மாறி படிப்பை தொடரலாம். அனைத்துப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டமும் இணையானதாக ஏற்றுக்கொள்ளப்படும். பாடத்திட்டம் ஒன்றுபோல் இருப்பதால் கல்வித்தரமும் மாநிலம் முழுவதும் சமமாக இருக்கும். பொதுப் பாடத்திட்ட கல்விக்குழு அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டுவரும் வகையில் ஒருங்கிணைந்த பொதுப் பாடத்திட்ட கல்விக்குழு விரைவில் அமைக்கப்பட இருப்பதாகவும், அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த பேராசிரியர்கள் இக் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் மாநில உயர்கல்வி கவுன்சில் உறுப்பினர்-செயலர் பேராசிரியர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.

10000 BTs & 3000 SGT ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 10 ஆயிரம் உள்ளன. மீதம் உள்ள 3 ஆயிரம் பணியிடங்கள், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்.  இவற்றை நிரப்ப, பாடவாரியான காலியிடங்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் இப்பணி முடிந்து, தகுதித் தேர்வின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நவம்பர், 10ம் தேதிக்குள், 2,200 புதிய ஆசிரியர்கள் பணி நியமனம

தமிழ் அல்லாதஇதர பாடங்களுக்கு, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவு எண்கள் விவரமும், சில தினங்களுக்கு முன், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து. ஒரு இடத்திற்கு, ஒருவர்என்ற வீதத்தில். தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கான முகாம், வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14 இடங்களில் நடக்கிறது. 32 மாவட்டங்களும், இந்த, 14 இடங்களில் அடங்கும் வகையில், பட்டியல் தயாரிக்கப்பட்டு, , www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி.,இணையதளத்தில், வெளியிடப்பட்டது.

மேலும்,சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க இருப்பவர்களுக்கான அழைப்பு கடிதங்களும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட தேர்வர்கள், 'ரோல் எண்'களை பதிவு செய்து, தங்களுக்கானmஅழைப்பு கடிதங்களை, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. வழக்கமாக, சான்றிதழ் சரிபார்ப்பு, பல கட்டங்களாக நடக்கும். சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு,மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில், பல கட்டங்களாக மீண்டும், மீண்டும் நடத்தப்படும். ஆனால், இம்முறை அதுபோன்ற வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்றும், சான்றிதழ்சரிபார்ப்பின்போது, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்காததேர்வர்களின் தேர்வு, ரத்தாகிவிடும் என்றும், டி.ஆர்.பி.,அறிவித்துள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பின்போது,என்னென்ன ஆவணங்கள் கொண்டுவர வேண்டும் என்ற முழுமையான விவரங்களையும், இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள், இறுதி தேர்வுப் பட்டியலை தயாரித்து, பள்ளி கல்வித்துறைக்கு வழங்கிவிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. எனவே, நவம்பர், 10ம் தேதிக்குள், தமிழ் பாடம் தவிர்த்து, இதர பாடங்களுக்கு, 2,200 புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.