இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, August 21, 2013

PP/SA clarification- cour:teachertn

சாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அதாவது 01.01.2011க்கு முன்னர் தேர்வு/சிறப்பு நிலை முடித்தோர்க்கு PP எனப்படும் தனி ஊதியம் ரூ.750/- வழங்கியது தவறு என்றும் மேலும் 31.12.2005க்கு பின்னர் தேர்வு / சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு SA எனும் சிறப்புப்படி ரூ.500  அதாவது 01.01.2006 முதல் 31.12.2010 வரை தேர்வு / சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு வழங்கியதும் தவறு என்றும் இவ்விரு பணத்தையும் அரசு கணக்கில் திரும்ப செலுத்த தணிக்கை குழு அறிக்கை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து நம் இணையதளக்குழு உரிய ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, தலைமையாசிரியர்கள் ஓய்வு பெறும் பள்ளிகளில் தணிக்கை செய்வது வாடிக்கை அவ்வாறு தணிக்கை செய்யும் போது இதை தவறு என சுட்டிக்காட்டி, இவ்வாறு பெறப்பட்ட முழு பணத்தையும் திருப்பி செலுத்த வேண்டு என உத்தரவிட்டுள்ளனர். இதனை மேல்நிலை அலுவலர்களும் உறுதி செய்துள்ளனர். இதனால் பல ஆசிரியர்கள் பணத்தை திருப்பி செலுத்தி வருகின்றனர். சிலர் தங்கள் மாநில அமைப்பிற்கு இது குறித்து அரசிடம் விளக்கம் பெற தகவல் தந்து அவகாசம் கேட்டுள்ளனர்.

 இம்முறை உறுதியானல் இடைநிலை ஆசிரியர் மட்டத்தில் பெரும் குழப்பமும் ஊதிய முரண்பாடும் ஏற்படும் என்பதால், மதிப்புமிகு ஆசிரிய சங்கங்கள் இது குறித்து உரிய விளக்கத்தை அரசிடம் பெற்று இவ்வூதிய முறையால் ஏற்படும் பாதிப்புகளை களைய அனைத்து ஆசிரியர்கள் சார்பாக ்பணிவோடு வேண்டுகோள் வைக்கிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு: விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய டெல்லியில் இருந்து நிபுணர் குழு

ஆசிரியர் தகுதி தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த 17–ந்தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள் –1 நடைபெற்றது. 18–ந்தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள்–2 நடைபெற்றது. இந்த தேர்வுகளை மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிந்ததும் வினாத்தாள்கள் பண்டல் பண்டலாக சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கொண்டு வரப்பட்டன. இப்போது அந்த விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடைபெறுகிறது.

– ஒரு வாரத்தில் கீ–ஆன்சர்

ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள்கள் மலை போல உள்ளன. அந்த விடைத்தாள்களை மிகக்கவனமாக அப்படியே ஸ்கேன் செய்யும் பணியை தனியாக ஒரு குழுவினர் செய்து வருகிறார்கள். இந்த வேலை முடிய எப்படியும் 3 வாரங்கள் நீடிக்கும். அதற்குள்ளாக இன்னும் ஒரு வாரத்தில் ஆசிரியர் தகுதிதேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையை( கீ–ஆன்சர்) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். அந்த விடைகளில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் தெரிவிக்கலாம். அல்லது தபால் மூலம் தெரிவிக்கலாம். தகுந்த விடை இதுதான் என்னும் கருத்தை அனுப்பலாம்.

இவை எல்லாம் சரி செய்யப்பட்டு இறுதி விடை இணையதளத்தில் வெளியிடப்படும். விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய டெல்லிக்குழு பின்னர் அந்த விடையைக்கொண்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும். இதற்காக டெல்லியில் இருந்து நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவினர் சென்னை வர உள்ளனர். விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கு 30 நிமிடம் போதுமானது. எப்படியும் ஒரு மாதத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியிடப்படும்.

B.Ed கட் ஆப் மதிப்பெண் நாளை வெளியீடு

12 ஆயிரத்திற்கும் மேல் விண்ணப்பங்கள் விற்பனையானது. இருப்பினும், 11,950 விண்ணப்பங்களே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டன. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் செயல்படும் தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை பிரிவு விண்ணப்பங்களை பரிசீலித்தது. இந்த நிலையில், பி.எட். படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் நாளை (வியாழக்கிழமை) மாலை வெளியிடப்படுகிறது.

பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியான கட் ஆப் மதிப்பெண் மற்றும் கலந்தாய்வு விவரங்களை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் இணையதளத்தில் (www.ladywillingdoniase.com) மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். கலந்தாய்வு எப்போது? கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்படுவதை தொடர்ந்து, மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு 30–ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 5–ந்தேதி வரை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெறும்.

கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதம் மாணவ–மாணவிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்படும். கடிதம் கிடைக்கவில்லை என்றாலும் உரிய கட் ஆப் மதிப்பெண் இருந்தால் குறிப்பிட்ட தேதியில் கலந்தாய்வில் மாணவர்கள் நேரில் கலந்துகொள்ளலாம் என்று தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளரும், லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வருமான பேராசிரியை பரமேஸ்வரி தெரிவித்தார்.

பள்ளிகளில் இலவச திட்டங்கள் தலைமை ஆசிரியர்களுக்கு கண்டிப்பு

   அரசு வழங்கும் இலவச திட்டங்களை, பள்ளி மாணவர்களுக்கு, முறையாக வழங்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களை, கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், லேப்-டாப், நோட்டுப் புத்தகம், சீருடை, காலணி, கணித உபகரணம், புத்தக பை உட்பட, 14 நலத்திட்டப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு, வகுப்பு துவங்கும் முன், நலத்திட்டப் பொருட்கள், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. அவற்றை, மாணவர்களுக்கு முறையாக வழங்கவில்லை என, பள்ளி நிர்வாகங்கள் மீது, புகார்கள் வந்தன. இதையடுத்து, உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்ட, ஆலோசனை கூட்டத்தை, கல்வித்துறை, அனைத்து கல்வி மாவட்டங்களிலும் நடத்தியது. கூட்டத்தில், பள்ளிகளில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் பற்றி விவாதிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர்கள், எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும், இலவச திட்டங்கள் அனைத்தும், மாணவர்களுக்கும் சென்றடையும் வகையில், பணியாற்றவேண்டும் என, கல்வி அதிகாரிகள் வலியுறுத்தினர். இலவச பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.

எஸ்.எம்.எஸ்., மூலம் அரசு பொதுத்தேர்வு முடிவுகள்

  பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை, மாணவர்கள் மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மூலம் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்கள் செப்., 1 முதல் 30 க்குள் ஆன்- லைனில் பதிவு செய்ய வேண்டும், என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆன்- லைனில் பதிவு செய்யப் படும் மாணவர்களின் விபரங்களான, பெயர், ஜாதி, பிறந்த தேதி, போட்டோ ஆகியவை தவறு இல்லாமல் பதிவு செய்ய தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளிகள் பொதுத்தேர்வுஎழுதும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் மாணவர்களின் விபரங்களை தவறுகள் இல்லாமல் பெற்று, ஆன்- லைனில் செப்., 30 க்குள் பதிவு செய்ய வேண்டும்.

இந்த விபரங்கள் பெறும் போது மாணவர்களின் தொடர்புக்காக மொபைல் போன் எண்கள் பெறப்பட்டு ஆன்- லைனில் பதிவு செய்யப்படுகிறது. அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரத்தில், தொடர்புக்காக வழங்கப்பட்டுள்ள மொபைல் எண்களில் மாணவர்கள் தேர்ச்சி, மதிப்பெண் விபரங்கள், எஸ்.எம்.எஸ்., மூலமாக அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது.மாணவர்கள் தேர்வு முடிவுகளை எளிதில் தெரிந்து கொள்ள இந்த ஏற்பாடுகளை தேர்வுத்துறை செய்து வருகிறது.

எஸ்.எம்.எஸ்., மூலம் அரசு பொதுத்தேர்வு முடிவுகள்

  பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை, மாணவர்கள் மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மூலம் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்கள் செப்., 1 முதல் 30 க்குள் ஆன்- லைனில் பதிவு செய்ய வேண்டும், என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆன்- லைனில் பதிவு செய்யப் படும் மாணவர்களின் விபரங்களான, பெயர், ஜாதி, பிறந்த தேதி, போட்டோ ஆகியவை தவறு இல்லாமல் பதிவு செய்ய தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளிகள் பொதுத்தேர்வுஎழுதும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் மாணவர்களின் விபரங்களை தவறுகள் இல்லாமல் பெற்று, ஆன்- லைனில் செப்., 30 க்குள் பதிவு செய்ய வேண்டும்.

இந்த விபரங்கள் பெறும் போது மாணவர்களின் தொடர்புக்காக மொபைல் போன் எண்கள் பெறப்பட்டு ஆன்- லைனில் பதிவு செய்யப்படுகிறது. அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரத்தில், தொடர்புக்காக வழங்கப்பட்டுள்ள மொபைல் எண்களில் மாணவர்கள் தேர்ச்சி, மதிப்பெண் விபரங்கள், எஸ்.எம்.எஸ்., மூலமாக அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது.மாணவர்கள் தேர்வு முடிவுகளை எளிதில் தெரிந்து கொள்ள இந்த ஏற்பாடுகளை தேர்வுத்துறை செய்து வருகிறது.

சம்பள உயர்வுக்கு காத்திருக்கும் "சூப்பர் கிரேடு' ஆசிரியர்கள்

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 30 ஆண்டுகள் புகாரின்றி பணிபுரியும் 10 ஆயிரம் ஆசிரியர்கள், சம்பள உயர்வுக்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் குழப்பத்தில் உள்ளனர். ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளித்த "மூன்று நபர் கமிஷன்' பரிந்துரைப்படி, பத்து ஆண்டுகள் புகாரின்றி பணியாற்றிய தேர்வுநிலை ஆசிரியர்களுக்கும், 20 ஆண்டுகள் பணியாற்றிய சிறப்பு நிலை ஆசிரியர்களுக்கும், 3 சதவீதமாக இருந்த ஊக்க சம்பளம் 6 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசு முதுநிலை ஆசிரியர்கள் புகாரின்றி 30 ஆண்டுகளை கடந்து பணியாற்றும் "சூப்பர் கிரேடு' ஆசிரியர்களுக்கான ஊக்க சம்பளம் தொடர்பாக எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. மாநிலத்தில் 10 ஆயிரம் "சூப்பர் கிரேடு' (30 ஆண்டுகள் பணியாற்றிய) ஆசிரியர்கள் மனஅழுத்தத்தில் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஓய்வு வயதை எட்டியுள்ளனர். மேல்நிலை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது:

ஆசிரியர்கள் சம்பள முரண்பாடுகளை களைய தமிழக அரசு இதுவரை 89 அரசாணைகள் வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித் துறை சார்பில் மூன்று அரசாணைகள் வெளியிடப்பட்டன. இதில் அரசாணை 23ன் படி, தேர்வு நிலை, சிறப்பு நிலை ஆசிரியர்களுக்கு ஊக்க சம்பளம் அளிக்கப்பட்டது. ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 30 ஆண்டுகள் புகாரின்றி பணியாற்றி, பதவி உயர்வு இல்லாத "சூப்பர் கிரேடு' ஆசிரியர்களுக்கு, "மூன்று நபர் கமிஷன்' பரிந்துரையின்படி ஊக்க சம்பளம் குறித்து அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்நிலை அரசு மேல்நிலை பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கும் நீடிக்கிறது. கமிஷன் பரிந்துரை 30 ஆண்டு பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் பொருந்துமா? என அரசு விளக்கமளித்து குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்றார்.

குடியரசு தின விழா சதுரங்க போட்டி க்கான அட்டவணை

Individual Photo identy form for Chess competition

Zonal Entry form for Chess Competition

இடைநிலை ஆசிரியர்கள் சாதாரண நிலையில் உள்ளவர் தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750/- வழங்கியமைக்கு தணிக்கைக் குழு தடை விதிப்பு, ரூ.2800/- தர ஊதியம் பெறும் தேர்வுநிலை இ.நி.ஆசிரியர் ரூ.500/- சிறப்புப்படியாக பெற இயலாது, கூடுதலாக பெறப்பட்ட ஊதியத்தை அரசு கணக்கில் செலுத்த உத்தரவு- cour:tnkalvi

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். முக்கிய விடைகள் தொடர்பாக மொத்தம் 1,500 பேர் ஆட்சேபங்களை அனுப்பியிருந்தனர். பெரும்பாலும் தமிழ் பாடத்தில்தான் அதிகளவிலான ஆட்சேபங்களைத் தேர்வர்கள் அனுப்பியிருந்தனர்.இதில் "பி' வரிசை வினாத்தாள்களில் மட்டும் அதிக அச்சுப்பிழைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.தவறான கேள்விகள், அச்சுப்பிழைகள் தொடர்பாக அந்தந்த பாட நிபுணர்கள் ஆய்வு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த அறிக்கைகள் மீது ஆசிரியர் தேர்வு வாரியும் விரைவில் முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது. இது தொடர்பாக,முடிவு செய்யப்பட்டவுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

Tuesday, August 20, 2013

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தை அதிரிப்பதற்காக மாநிலம் முழுவதும் உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 26 முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை பயிற்சி

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்கள் ஆகியோர் இணைந்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கும் இடத்தை முடிவு செய்வார்கள். அரசுப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட சில பாடங்களில் அதிகளவில் தொடர்ந்து தோல்வியடைகின்றனர். இதையடுத்து, மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் முடிவு எடுத்தது.

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியின் போது ஒவ்வொரு பாடத்திலும் உள்ள கடினமான பகுதிகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு விளக்கம் தரப்படும். மாணவர்களுக்கு அந்தப் பகுதிகளை எப்படி எளிமையாகப் புரியவைப்பது, அந்தப் பகுதி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதன் நோக்கம், தேர்வில் அந்தப் பகுதியின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கப்படும். இதற்காக, ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து 2 கல்லூரி பேராசிரியர்கள், 2 மூத்த முதுநிலை ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன விரிவுரையாளர் என 5 பேர் தேர்ந்தெடுத்து பயிற்சி வழங்கப்பட்டது.

இவர்களின் மூலம் இப்போது அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பயிற்சியின் மூலம் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதோடு, கற்பித்தலில் புதிய உத்திகளையும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அறிந்துகொள்வார்கள் என அவர்கள் மேலும் தெரிவித்தனர். பின்தங்கிய மாவட்டங்களில் தொடர் கண்காணிப்பு: கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களான வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதோடு, அந்தப் பயிற்சி வகுப்பறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா என தொடர்ந்து கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தெரியாத பள்ளி மாணவர்கள்: சிறப்பு பயிற்சி அளிக்க அரசு திட்டம்

   தமிழக பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில், தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. மேல்நிலைக் கல்வி கற்க வரும் மாணவ, மாணவியரில் பலருக்கு, தமிழில் எழுத, படிக்கத் தெரியாத நிலை உள்ளது.

தமிழில் எழுத, படிக்க சிரமப்படுவது குறித்து, பள்ளிக்கல்வித் துறை ஆய்வு செய்தது. இதையடுத்து, அந்த வகை மாணவ, மாணவியருக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டு, அதற்காக, செயல்முறை புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தில், ஒவ்வொரு மாவட்ட கல்வித் துறையில் இருந்தும், தமிழாசிரியர்கள் மூன்று பேருக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. பயிற்சி பெற்ற தமிழாசிரியர்கள், அந்தந்த மாவட்டங்களில், மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர்.

பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு, செயல்முறை புத்தக பாட அடிப்படையில், பயிற்சியளிக்க உள்ளனர். இந்த சிறப்பு திட்டம், விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக, கல்வித் துறை தெரிவித்து உள்ளது.

51 தலைமை ஆசிரியர்கள் அதிகாரிகளாக பதவி உயர்வு

தொடக்க கல்வித் துறையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வந்த, 51 பேர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடக்கக்கல்வித் துறையில் காலியாக இருந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, நேற்று சென்னையில் நடந்தது. இதற்கு பணி மூப்பு அடிப்படையில், 100 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில், 51 பேருக்கு, பதவி உயர்வு உத்தரவுகளை, தொடக்கக்கல்வி இயக்குனர் இளங்கோவன் வழங்கினார்.

51 தலைமை ஆசிரியர்கள் அதிகாரிகளாக பதவி உயர்வு

தொடக்க கல்வித் துறையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வந்த, 51 பேர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடக்கக்கல்வித் துறையில் காலியாக இருந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, நேற்று சென்னையில் நடந்தது. இதற்கு பணி மூப்பு அடிப்படையில், 100 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில், 51 பேருக்கு, பதவி உயர்வு உத்தரவுகளை, தொடக்கக்கல்வி இயக்குனர் இளங்கோவன் வழங்கினார்.

இரண்டாவது கட்டமாக "ஹால் டிக்கெட்' வெளியீடு

குரூப்-4 தேர்வுக்கு, "ஹால் டிக்கெட்' பெறாதவர்களுக்கு, அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், நேற்று, "ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டது. வரும், 25ம் தேதி, குரூப்-4 தேர்வு நடக்கிறது. இதை, 14 லட்சம் பேர் எழுதுகின்றனர். இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்'கள், கடந்த, 14ம் தேதி, www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

தேர்வுக்கு, முறையாக விண்ணப்பித்து, தேர்வுக் கட்டணம் செலுத்தியும், "ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான படிவத்தை, 19ம் தேதிக்குள், தேர்வாணைய, "இ-மெயிலுக்கு' அனுப்பும்படி, தேர்வாணையம் கேட்டுக் கொண்டிருந்தது. அதன்படி, 19ம் தேதி வரை விண்ணப்பித்த தேர்வர்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தில், நேற்று, "ஹால் டிக்கெட்'கள் வெளியிடப்பட்டன. "இ-மெயில்' அனுப்பியும், "ஹால் டிக்கெட்' கிடைக்காத தேர்வர்கள் இருந்தால், அவர்கள், உரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும், தேர்வாணைய அலுவலரை, 23, 24 தேதிகளில் அணுகலாம் என, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, தெரிவித்து உள்ளார்.

ஆன்-லைனில் பதிவு செய்யாத 9 மாவட்ட பள்ளிகளுக்கு கெடு

ஆன்-லைனில் விவரங்களை பதிவு செய்யாத, ஒன்பது மாவட்ட பள்ளிகளுக்கு, கல்வித் துறை, "கெடு' விதித்துள்ளது. தமிழகத்தில், 36,505 அரசு பள்ளிகள், 8,266 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. புள்ளி விவர கணக்கீட்டிற்காக, இப்பள்ளிகளின் விவரங்களை, ஆன்-லைன் மூலம், கல்வி தகவல் மேலாண்மை தொகுப்பில் பதிவு செய்ய, அரசு உத்தரவிட்டிருந்தது. கடந்த கல்வியாண்டில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை, ஆசிரியர்கள், மாணவர்கள், வகுப்பு, பாலினம், இனம் உள்ளிட்ட, 30 விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. ஏப்ரல் வரை, 4,000 பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை.

நடப்பு கல்வியாண்டில், புதிதாக சேர்ந்த முதல் வகுப்பு மாணவர்களையும் சேர்த்து, ஜூலை 31க்குள் பதிவு செய்ய, கல்வித் துறை, "கெடு' விதித்திருந்தது. இதுவரை, 23 மாவட்டங்கள் மட்டும், முழுமையாக பதிவு செய்துள்ளன. தர்மபுரி, சேலம், சிவகங்கை, தேனி, திருவள்ளூர், வேலூர், பெரம்பலூர், தஞ்சை, திருச்சி மாவட்ட பள்ளி விவரங்கள், முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. விடுப்பட்ட மாவட்ட பள்ளிகளின் விவரங்களை, ஆக., 23ம் தேதிக்குள், ஆன்-லைனில் பதிய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை, "கெடு' விதித்துள்ளது.

அரசு ஊழியர் இறந்தால் அவரது குடும்பத்தினர் கருணை அடிப்படையில் வேலை கோர முடியாது

  அரசு ஊழியர் ஒருவர் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், கருணை அடிப்படையில் குடும்பத்தினருக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.அதேநேரத்தில் பணி நியமனம் கோரும் அந்தக் குடும்பத்தின் நபர், அந்தப் பணிக்குரிய கல்வித் தகுதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் பி.எஸ்.சௌகான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு மேலும் கூறியதாவது: பணியில் இருக்கும்போது உயிரிழந்த ஊழியரின் குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதார நிலையை, சம்பந்தப்பட்ட துறையின் தகுதிவாய்ந்த அதிகாரி ஆராய வேண்டும்.வேலை வழங்கவில்லை எனில், அந்த குடும்பத்தால் நெருக்கடியை சமாளிக்க முடியாது என்பதை உறுதிசெய்து கொண்ட பின்னால்தான், அந்தக் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். ஆனால் அந்த வேலைக்கு நியமிக்கப்படுபவர், அதற்கான கல்வித் தகுதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராஜஸ்தான் மாநில உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, எம்ஜிபி கிராம வங்கி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையின் போதுதான் நீதிபதிகள் மேற்கண்டவாறு தீர்ப்பு அளித்தனர்.இந்த வங்கியில் மூன்றாம் நிலை ஊழியராக பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் கடந்த 2006, ஏப்ரல் 19-ஆம் தேதி மரணமடைந்து விட்டார்.இதையடுத்து அவரது மகன் சக்ரவர்த்தி சிங், தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று, அந்த வங்கிக்கு 2006, மே மாதம் 12-ஆம் தேதி விண்ணப்பம் அனுப்பினார். அதை அந்த வங்கி நிராகரித்து விட்டது.இதையடுத்து, ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். சக்ரவர்த்தி சிங்குக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குமாறு வங்கி நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வங்கி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்தது. கருணை அடிப்படையில் பணி வழங்க, உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி மற்றும் டிவிஷன் பெஞ்ச் கூறிய காரணங்கள், சட்டத்தின் பார்வையில் வலுவூட்டுவதாக இல்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறி, அந்த தீர்ப்பை நிராகரித்தனர்.