இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, August 08, 2013

குரூப் - 4 தேர்வு விவரங்களை சரிபார்க்க தேர்வர்களுக்கு வேண்டுகோள்

"குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை, தேர்வாணைய இணைய தளத்தில் பார்த்து, உறுதி செய்துகொள்ளலாம்' என, தேர்வாணையம் அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு: வரும், 25ம் தேதி, குரூப் - 4 தேர்வு நடக்கிறது. 5,566 பணியிடங்களை நிரப்ப நடக்கும் இத்தேர்வை எழுத, 17 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து, உரிய விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கட்டணத்தை செலுத்திய விண்ணப்பத்தாரர்களின் விவரங்கள், www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது பதிவு எண்களை பதிவு செய்து, இணையதளத்தில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். அனைத்தையும் சரியாக செய்தும், உரிய விவரங்கள், இணைய தளத்தில் இல்லா விட்டால், contacttnpsc@gmail.com என்ற "இ-மெயில்' முகவரிக்கு, தகவல் தெரிவிக்கலாம்.

மெயிலில், பெயர், பதிவு எண், விண்ணப்ப, தேர்வுக்கட்டணம் விவரம், கட்டணம் செலுத்திய இடம் (அஞ்சலகம்/இந்தியன் வங்கி), அதன் முகவரி போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பத்தாரர்கள், "ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்வது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

SSLC Special supplementary Exam results

Wednesday, August 07, 2013

அரசு பள்ளி ஆசிரியர்கள் நேரடி வகுப்புகளில் சேர்ந்து படிக்க தடை

  அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நேரடியாக, பட்டம், முதுகலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில் பணிபுரியும், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள், தொலைதூரக் கல்வி இயக்கங்கள் மூலம் உயர்கல்வி பயிலவும், பகுதி நேரமாக சேர்ந்து படிக்கவும், அரசு அனுமதித்துள்ளது.

இதில், எம்.பில்., - பிஎச்.டி., போன்ற பகுதி நேர ஆய்வு கல்விக்கு, இயக்குனர் அனுமதியும், பி.எட்., - எம்.எட்., போன்றவை படிக்க, மாவட்டக் கல்வி அலுவலர் அனுமதியும் பெற வேண்டும். இதை பின்பற்றி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பலர், முழு நேர வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். அதற்கு அனுமதி வேண்டி, ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து, "அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நேரடி படிப்பில் சேர அனுமதி வழங்குவதை, தவிர்க்க வேண்டும்' என, அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு, ஆணையில் கூறியிருப்பதாவது: தமிழக பல்கலைக் கழகங்களில், தொலைதூரக் கல்வி மூலம், பி.எட்., பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் சேர்ந்து படிக்க, ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் தடை இல்லை. நேரடி சேர்க்கை மூலம், உயர்கல்வி படிப்பை அனுமதிக்க, அரசு ஆணை எதுவும் இல்லை. அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், படிப்புக்காக, விடுப்பில் சென்றால், மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும். எனவே, நேரடி சேர்க்கையில், பி.எட்., பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பில் சேர, அரசாணை ஏதும் இல்லாத நிலையில், அதற்கான அனுமதி வழங்குவதை, அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அகவிலைப்படி கணக்கீடு எப்படி

ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் அரசு அறிவிக்கும் அகவிலைப்படி கணிசமான தொகையாக கிடைக்கிறது. இதை நிர்ணயிப்பதற்கென ஒரு பார்முலா உள்ளது. அதனடிப்படையில் கணக்கிட்டு 6 மாதங்களுக்கு ஒருமுறை அடிப்படை சம்பளம் வழங்குகின்றனர். கடந்த 12 மாதத்தில், தேசிய அளவிலான நுகர்வோர் விலைப்புள்ளியின் சராசரியை கணக்கிட்டு, அதில் 115.76 என்ற நிர்ணயிக்கப்பட்ட ஒரு எண்ணை கழிக்கின்றனர். அதில் கிடைக்கும் எண்ணை 100 ஆல் பெருக்குவர்.

அத்தொகையை மீண்டும் 115.76ஆல் வகுப்பர். இதையே, அகவிலை படியாக கணக்கிடுகின்றனர். உதாரணமாக கடந்த 12 மாதங்களின் சராசரி வருமாறு: நுகர்வோர் விலைப்புள்ளி 2012, ஜூலையில்-212, ஆக.,214, செப்., 215, அக்.,217, நவ., 218, டிச.,219, பின் 2013 ஜன., 221, பிப்., 223, மார்ச் 224, ஏப்., 226, மே 228, ஜூன் 231. இவற்றின் கூட்டுத்தொகை 2648. இதன் 12 மாத சராசரி 220.75. இதில் இருந்து 115.76ஐ கழித்தால், கிடைப்பது 104.99. இதை 100ல் பெருக்க கிடைப்பது 10,0499. இத்தொகையை மீண்டும் 115.76ஆல் கழித்தால் கிடைப்பது 90.69.

இந்நிலையில் ஏற்கனவே 80 சதவீத அடிப்படை சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக வழங்கி, மேற்கண்ட 90 சதவீதத்தை எட்டும்படி செய்வர். இதுவே அகவிலைப்படி கணக்கிடும் முறை.

GO 680 Govt list new hospital dist wise hospital list list under NHIS scheme

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் பெறுவதற்கான கூட்டுப் போராட்டத்திற்கு, அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் தமிழ்நாடு ஆரமப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அழைப்பு

மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அண்மையில் தமிழக அரசு 88 அரசாணைகள் வெளியிட்டது. இதில் அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லாததையொட்டி தொடக்கக் கல்வித்துறையில் உள்ள பெரும்பாலான சங்கங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை  அறிவித்தன. எனினும் அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இணைந்து போராட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டது.

ஏற்கெனவே ஒரு சில சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தது. தற்பொழுது தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியும் வரும் 18ம் தேதி அனைத்து சங்கங்களை அழைத்து கூட்டு போராட்டத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

எம்.பில் / பி.எச்.டி., ஊக்க ஊதியம் தொடர்பாக அரசு பிறபித்த தெளிவுரை ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால் தடை விதித்து உத்தரவு

. தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் உள்ள நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில்., / பி.எச்.டி படித்தவர்களுக்கு இரண்டாம் ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெற்று வந்தனர். பிறகு தமிழக அரசு 17.07.2013 அன்று இவ்வரசாணை தொடர்பான தெளிவுரையில் அரசாணை எண்.18 வழங்கிய நாள் முதல் ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் என்று தெளிவுரை வழங்கியது.

இதையடுத்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் அதன் தலைவர் மற்றும் 8 ஆசிரியர்கள் தொடர்ந்து வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 11ம் எண் நீதிமன்றத்தில் நீதியரசர் ஹரிபரந்தாமன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெளிவிரை கடிதத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அரசாணை  எண் .18ன் படி ஊக்க ஊதியம் பெற்று கொள்வதற்கான வாய்ப்பு ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஏற்கெனவே  ஆசிரியர்கள் பெற்ற எம்.பில்., ஊக்க ஊதியத்தை திரும்ப அரசு கணக்கில் செலுத்துவதற்கான வாய்ப்பு இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வந்தபின்பே தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, August 06, 2013

தொலைதூரக்கல்வி பட்டப்படிப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி திட்ட பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் கடந்த மே மாதம் நடந்து முடிந்தன. இந்த தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படுகின்றன. பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவன இணையதளத்தில் (www.ideunom.ac.in) இரவு 8 மணி முதல் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். ஏ–10, ஏ–11, ஏ–12, சி–11, சி–12 என்ற எண்களில் தொடங்கும் பதிவு எண் உடையவர்கள் மட்டும் மறுமதிப்பீடு செய்யலாம்.

இதற்கு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.750. மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்ப படிவங்களை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். மேலும் தொலைதூரக்கல்வி தகவல் மையத்திலும் விண்ணப்பங்கள் கிடைக்கும். மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லாதவர்களும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.200. மறுகூட்டலுக்கும், மறுமதிப்பீட்டிற்கும் 16–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த தகவலை, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஜி.கோட்டீஸ்வர பிரசாத் தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு முடிவு இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியாகிறது

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு கடந்த ஜூன், ஜூலை மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவு அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு எழுதிய மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை 19, 20–ந்தேதிகளில், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே  நேரில் பெற்றுக்கொள்ளலாம். மறுகூட்டல் மற்றும் செப்டம்பர், அக்டோபர் சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.மேற்கண்ட தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் கே.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

TET Hall ticket Paper I &II

30.08.2013 TNPTF சாலை மறியல் போராட்ட செய்தி அறிக்கை

ஆசிரியர்த் தகுதித் தேர்வு நுழைவுச் சீட்டு (HALL TICKET) இன்னும் வெளியிடப்படவில்லை

நேற்றைய தினம் வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்ட ஆசிரியர்த் தகுதித் தேர்வு நுழைவுச் சீட்டு (HALL TICKET) இன்னும் வெளியிடப்படவில்லை. எந்த ஒரு தேர்விற்கும் ஆன்லைனில் நுழைவுச்சீட்டுகள் தேர்வு நாளுக்கு ஒரு வாரம் முன்னதாக மட்டுமே வெளியிடப்படும் என்பதால் TET தேர்விற்கான நுழைவு சீட்டுகளும் TRB இணைய தளத்தில் 8ஆம் தேதிக்கு மேல் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.

இரட்டைப்பட்ட வழக்கு ஆகஸ்ட் 22க்கு ஒத்தி வைப்பு, அனைத்து தரப்பும் அன்று ஆஜர், அன்றே இறுதி தீர்ப்பு வரவும் வாய்ப்பு

இன்று (06.08.13) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் 4வது வழக்காக வந்த இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 22ந்தேதி வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  வழக்கை தொடுத்த பெரும்பாலோனோர் இன்று கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். இன்று ஆஜராகாமல் உள்ளோர் அனைவரையும் வரும் 22.08.2013 விசாரணையை முடிக்க ஏதுவாக ஆஜராக கேட்டுக்கொள்ளப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதபதி விசாரணையை 22.8.2013 ஒத்தி வைத்து உத்தரவு. 5 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த வழக்கு வருகிற 22.8.2013 அன்று விரிவாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அன்றே இறுதி தீர்ப்பு வர வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Monday, August 05, 2013

1,690 பள்ளிகளுக்கு விரைவில் புதிய கட்டணம் நிர்ணயம்

""விரைவில், 1,690 தனியார் பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும்,'' என, தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்காரவேலு கூறினார். அவர் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஜூன் மாதம் முதல், 10,550 பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயித்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். புதிய கட்டண விவரங்களை, பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என, நிர்வாகிகளிடம் கூறியிருந்தோம். ஆனால், பல பள்ளிகள், புதிய கட்டண விவரங்களை வெளியிடவில்லை என, புகார் வந்துள்ளது.

அதேபோல், சில பள்ளிகள், நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலித்தாகவும் புகார்கள் வந்தன. புகார் வரும் பள்ளிகள் மீது, விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இன்னும், 1,690 பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்க வேண்டியுள்ளது. இந்த பள்ளிகளுக்கு, இருமுறை அழைப்பு விடுத்தபோதும், அவர்கள் வரவில்லை. தற்போது, மீண்டும், "நோட்டீஸ்' அனுப்பியுள்ளோம். இன்று (நேற்று) முதல், தொடர்ந்து விசாரணை நடக்க உள்ளது.

செப்டம்பர் இறுதியிலோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ, இந்த பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும். இவ்வாறு, சிங்காரவேலு கூறினார். புதிய கட்டணம் : இதற்கிடையே, மூன்றாவது கட்ட புதிய கட்டண விவரங்களை, கட்டண நிர்ணய குழு, நேற்று, தமிழக அரசு இணைய தளத்தில் வெளியிட்டது. இதில், ஒவ்வொரு மாவட்ட வாரியாக, புதிய பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வி ஆண்டு முதல், மூன்று கல்வி ஆண்டுகளுக்கு சேர்த்து, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தபால் ஓட்டுகள் போடும் பணியாளர் கணக்கெடுப்பு

தபால் ஓட்டு நூறு சதவீதம் பதிவு ஆவதை உறுதி செய்ய தபால் ஓட்டு போடக்கூடிய பணியாளர்களை கணக்கெடுக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தபால் ஓட்டுகள் 100 சதவீதம் பதிவு ஆவதை உறுதி செய்ய தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கோடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே ஓட்டு போட்டுள்ளனர்.

எனவே 2014 நாடாளுமன்ற தேர்தலில், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களையும் 100 சதவீதம் வாக்களிக்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், போலீசார், ராணுவத்தினர் ஆகியோரின் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதற்காக 15 கேள்விகள் அடங்கிய படிவத்தை தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது.  இந்த படிவத்தில் பணிபுரியும் நிறுவனம், பணியாளரின் விவரம், அடையாள அட்டை ஆகிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பணியாளர் வசிக்கும் தொகுதிக்குள் தேர்தல் பணி வழங்கப்பட்டால் படிவம் 12ஏ,ல் விண்ணப்பிக்க வேண்டும். வேறு தொகுதியில் பணி வழங்கப்பட்டால் படிவம் 12ல் விண்ணப்பிக்க வேண்டும். படிவம் 12ஏ,ல் விண்ணப்பித்தவர்கள் அவர்கள் பணிபுரியும் வாக்குச்சாவடியிலே வாக்களிக்கலாம். இதற்காக அவர்களுக்கு எலெக்ஷன் டியூட்டி சர்ட்டிபிகேட் வழங்கப்படும். படிவம்12ல் விண்ணப்பித்தவர்கள் தபால் ஓட்டில் வாக்களித்து சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வழங்க வேண்டும். பணியாளர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Sunday, August 04, 2013

அடுத்த மாதம் அகவிலை படி

மத்திய அரசு ஊழியர்களுக்கு, அடுத்த மாதம், 10 சதவீத அகவிலை படி உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி, 80 சதவீதமாக இருக்கும் அகவிலை படி, 90 சதவீதமாக உயரும். இதனால், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவர்.

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப முடிவு

  அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும், 5,065 அரசு நிதியுதவி பெறும் ஆரம்பப் பள்ளிகள்; 1,549 நடுநிலைப் பள்ளிகள்; 640 உயர்நிலைப் பள்ளிகள்; 1,141 மேல்நிலைப் பள்ளிகள் என, 8,395 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளில், 5,000த்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு, இந்த இடங்கள் காலியாக உள்ளன. அரசு பள்ளிகளில், இலவச சீருடை, சைக்கிள், லேப்-டாப் உள்ளிட்ட, 14 வகையான இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதே திட்டங்கள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும், செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களை செயல்படுத்தவும், வினியோகம் மற்றும் இருப்பு தொடர்பான விவரங்கள் அடங்கிய பதிவேடுகளை பராமரிக்கவும், நிதியுதவி பெறும் பள்ளிகளில், பணியாளர்கள் இல்லாத நிலை உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப, அரசு அனுமதிக்க வேண்டும் என, பள்ளி நிர்வாகிகள், வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது, காலி பணியிடங்களை நிரப்ப, அரசு முடிவெடுத்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""குழு ஒன்றை நியமித்து, பள்ளி வாரியாக உள்ள காலி பணியிடங்கள் குறித்து, ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதனடிப்படையில், காலி பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதிக்குள், அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்

1. வி.குருநாதன் - தலைமை ஆசிரியர், முத்தியால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, தம்புச் செட்டித் தெரு, சென்னை.

2. டபிள்யூ. ஜெக செல்வி - ஆசிரியர், அரசு உயர் நிலைப் பள்ளி, பேயன்குழி, கன்னியாகுமரி.
3. ஆர்.ஜெயகுமார் - தலைமை ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நந்திவரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
4. தங்கம் மூர்த்தி - முதல்வர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாரியம்மன் கோயில் தெரு, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை
. 5. எச். கல்யாணசுந்தரம் - தலைமை ஆசிரியர், டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி, லட்சுமிபுரம், மதுரை.
6. ஆர்.குழந்தைவேலு - தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தொண்டாமுத்தூர், கோவை.
7. எல். லட்சுமணன் - தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, நஞ்சநாடு, நீலகிரி மாவட்டம்.

தமிழகத்திலிருந்து 2012- ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெறும் 22 ஆசிரியர்களின் பட்டியல் வெளியாகியுள்ளத

ு. அதன்படி இந்த ஆண்டு 8 பெண் ஆசிரியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி இந்த ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை நேரில் வழங்குகிறார். விருதுடன் ரூ.25 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

இதுதொடர்பாக விருது பெறும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனியே மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. விருதுக்கான பட்டியல் மாவட்டவாரியாக தயாரிக்கப்பட்டு, மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அந்தப் பட்டியலில் இருந்து 2012- ஆம் ஆண்டு விருதுக்கான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் விருது பெறும் ஆசிரியர்கள் விவரம்: தொடக்கக் கல்வி ஆசிரியர்கள்
1. ஆர்.ராஜராஜேஸ்வரி - தலைமை ஆசிரியர், சென்னை நடுநிலைப் பள்ளி, அண்ணாசாலை, சென்னை. 2. எஸ்.ரங்கநாதன் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மலைப்பாளையம், மதுராந்தகம் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம். 3. சி.சேகர் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, முப்பதுவெட்டி, வேலூர் மாவட்டம். 4. ஜி.வி. மனோகரன் - தலைமை ஆசிரியர், சேந்தங்குடி நகராட்சி தொடக்கப் பள்ளி, மயிலாடுதுறை. 5. ஆர்.மாணிக்கம் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நெடுவாக்கோட்டை, மன்னார்குடி. 6. டி.விஜயராணி - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, முல்லைக்குடி, பூதலூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
7. வி.துரைராஜன் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஸ்ரீபுரந்தன், அரியலூர் மாவட்டம்.
8. கே. உஷாதேவி - தென் அரங்கநாதர் நடுநிலைப் பள்ளி, ஸ்ரீரங்கம், திருச்சி.
9. எஸ்.லலிதா - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மருதூர் சமயபுரம், லால்குடி வட்டம், திருச்சி.
10. டி.தாரகேஸ்வரி - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சிவயம் (மேற்கு), குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம்.
11. ஆர். செல்வ சரோஜா - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வேம்பார்பட்டி, திண்டுக்கல
். 12. பி. கீதா சரஸ்வதி - தலைமை ஆசிரியர், மங்கையர்கரசி நடுநிலைப் பள்ளி, மதுரை மாவட்டம்.
13. ஆர்.தங்கவேலு - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காளிப்பட்டி, திருச்செங்கோடு.
14. எஸ்.ராஜேந்திரன் - பி.ரங்கநாதன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஆதனி, பவானி வட்டம்.
15. பி.ரெங்கநாதன் - தலைமை ஆசிரியர், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொடக்கப் பள்ளி, திசையன்விளை, ராதாபுரம் வட்டம், திருநெல்வேலி.

ஆசிரியர் தகுதி தேர்வு இணையதளத்தில் இன்று ஹால்டிக்கெட் வெளியீடு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. டிஆர்பியின் இணையதளத்தில் ஹால்டிக்கெட்களை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் காலியாக உள்ள சுமார் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை கல்வித்துறை நிரப்ப உள்ளது.

இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வை அறிவித்துள்ளது. இத் தேர்வு வருகிற 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெற உள்ளது. வரும் 17ம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கு முதல் தாள் தேர்வு நடக்கவுள்ளது. இந்த தேர்வை 2 லட்சத்து 68 ஆயிரத்து 160 பேர் எழுத உள்ளனர். 18ம் தேதி நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2ம் தாள் தேர்வை 4 லட்சத்து 11 ஆயிரத்து 634 பேர் எழுதுகின்றனர். தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வினாத்தாள்கள் தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகி றது. டிஆர்பியின் இணையதளமான www.trn.tn.nic.in என்ற முகவரியில் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பள்ளிகளில் எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தால் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

  பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேசுவர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:– பள்ளிகளில் நடைபெறும் எதிர்பாராத நிகழ்வுகளை உடனடியாக மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிகளில் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனருக்கும், இணை இயக்குனர்களுக்கும் தொலைபேசி மூலம் தெரிவிக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

மேலும், எதிர்பாராத நிகழ்வுகள் குறித்த விரிவான அறிக்கையை உடனடியாக பேக்ஸ் மூலமாகவும், இ–மெயில் (மின்னஞ்சல்) மூலமாகவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு ராமேசுவர முருகன் கூறியுள்ளார். இந்த சுற்றறிக்கையில், பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் பணியாளர் பிரிவு, மேல்நிலை கல்வி, இடைநிலை கல்வி, நாட்டு நலப்பணி திட்டம், தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனர்களின் தொலைபேசி எண்ணும், செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.