இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, May 14, 2013

பாடநூல் கழகம் பெயர் மாற்றம

் பாடநூல் கழகம் கல்வியியல் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இலவச பொருட்களை வழங்கும் பணியினையும் செய்யும்

2013-14 ஆம் ஆண்டில் 54 புதிய தொடக்கப்பள்ளிகள், 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த முதல்வர் உத்தரவு

தமிழக முதலைமைச்சர் இன்று சட்டசபையில் வெளிட்ட அறிக்கையில் 2013-14 ஆம் கல்வி ஆண்டில் 54 புதிய தொடக்கப்பள்ளிகள், 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள் ஆகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து வரும் பொது மாறுதல் கலந்தாய்வில் இந்த புதிய பள்ளிகளில் உள்ள பணியிடங்களும் காலிப் பணியிடங்களாக காட்டப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

Direct Recruitment of Special Teacher for the year 2012 - 2013 - NOTIFICATION 

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013 - NOTIFICATION 

"ஆன் லைன்' இணைப்பு கிடைக்காததால் இடமாறுதல் கோரும் ஆசிரியர்கள் அலைக்கழிப்பு

  இடமாறுதல் கேட்டு, "ஆன் லைனில்' பதிவு செய்ய வந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், இணைப்பு கிடைக்காததால், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 3ம் தேதி அரசு பள்ளிகள் துவங்கப்பட உள்ளன. இதையொட்டி, ஆசிரியர்களுக்கான, இடமாறுதலை, கோடை விடுமுறையிலேயே நடத்தி முடித்திட அரசு திட்டமிட்டுள்ளது. அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், வரும், 20ம் தேதி துவங்குகிறது.இடமாறுதல் பெற விரும்புவோர், 18ம் தேதிக்குள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று, அங்கு, ஆன் லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து, அதற்கான ஒப்புகை ரசீது பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

  அதன்படி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு பிரிவு ஆசிரியர்கள் இடமாறுதல் கோரி விண்ணப்பிக்க, நேற்று காலையிலேயே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் குவிந்தனர். ஆனால், பெரும்பான்மையான மாவட்டங்களில், நேற்று மாலை, 3:00 மணி வரை ஆன்லைன் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால்,தொலைவிலிருந்து வந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெகு நேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். கடந்தாண்டைப் போல் ,இடமாறுதல் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொண்டிருக்கலாம் அல்லது ஆன் லைனில் பதிவு செய்ய இணையதள முகவரியை வெளியிட்டிருந்தால், இடமாறுதல் கோரும் ஆசிரியர்கள் அவரவர் பகுதிகளில் இருந்து விண்ணப்பங்களை பதிவு செய்திருப்பர்.

இதை விடுத்து, அனைவரையும் ஒரு இடத்தில் கூட்டி, அலைக்கழிப்பது வேதனையாக உள்ளதாக, ஆசிரியர்கள் புலம்பினர்.

  மார்க் ஷீட்டுக்காக காத்திருக்க வேண்டாம்: மாணவர்களுக்கு முதல்பட்டதாரி சான்று

  ப்ளஸ் 2 முடித்த மாணவர்களில், முதல் பட்டதாரி சான்றுக்காக, வரும், 27ம் தேதி வழங்கப்படும் மதிப்பெண் சான்றுக்காக காத்திருக்க வேண்டியதில்லை, என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மத்திய அரசின் சார்பில், வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மாணவர்கள், உயர்கல்வி படிப்பதில் பின்னடைவு ஏற்படக்கூடாது என்பதற்காக, ப்ளஸ் 2 படிப்பு முடித்து, குடும்பத்தின் முதல்பட்டதாரி மாணவனுக்கு கல்வி உதவித்தொகையாக, 20 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. மாணவர்கள் உயர்கல்வி நிறுவனத்தில் படிக்கும்போது, அவர்களின் கல்விக் கட்டணத்தில் இருந்து அரசின் உதவித்தொகை குறைத்துக் கொள்ளப்படும். கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இத்திட்டத்தினால், ஏராளமான ஏழை, எளிய முதல்பட்டதாரி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

கல்வி உதவித் தொகையைப் பெற, ஜாதிச் சான்றிதழ், ரேஷன் கார்டு ஜெராக்ஸ், முதல் பட்டதாரி விண்ணப்பத்தில், தந்தை வழி பெற்றோர்கள், தாய்வழி பெற்றோர்கள், உடன் பிறந்தோர் தொழில் மற்றும் படிப்பு, நோட்டரி பப்ளிக்கிடம் இருந்து அபிடவிட் எனப்படும் உறுதிமொழி சான்று, ப்ளஸ் 2 மார்க் ஷீட் நகல் ஆகியவை இணைக்க வேண்டும். வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார் ஆகியோரின் விசாரணைக்கு பின்னர், முதல்பட்டதாரி சான்று வழங்கப்படும். கடந்த கல்வியாண்டில், தேர்வு எழுதிய ப்ளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த, 9ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. மார்க் ஷீட் வரும், 27ம் தேதி, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மார்க் ஷீட்டுடன் முதல் பட்டதாரி சலுகை பெற விண்ணப்பிக்க வேண்டும் என்ற முறை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

  அதற்கு பதில், மாணவர்கள், ஆன்-லைன் மூலமாக பெறப்பட்ட மதிப்பெண் சான்றை, முதல்பட்டதாரி விண்ணப்பத்துடன் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், மாணவர்கள் வரும், 27ம் தேதி வரை காத்திருக்க வேண்டியதில்லை. இதுபற்றி வருவாய் துறை அதிகாரி கூறியதாவது: தகுதியுடைய முதல் பட்டதாரி மாணவர்கள், ஆன்லைனில் பெறப்பட்ட மதிப்பெண் சான்றை இணைத்து விண்ணப்பிக்கலாம். வரும், 27ம் தேதி வரை காத்திருக்காமல், சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.க்கள் மூலமாக சான்றுகளை பெறலாம். விண்ணப்பித்த ஒரு வாரத்தில், சான்றுகள் வழங்கப்படும், என்றார்.

Monday, May 13, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது?

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு முடிந்த பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது. பெரும்பாலும் ஆகஸ்ட் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் இந்தத் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், விவசாயத் துறை ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கான விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

546 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் வரும் ஆண்டுகளில் உயர்த்தப்படும்

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை policy note பக்கம் 137,138 ல் 546 நடுநிலைப் பள்ளிகள் வரும் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்படும் என்று கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் திருக்குறளுக்கு முக்கியத்துவம்

அரசுப்பணியாளர் தேர்வு வினாத்தாளில், திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், தமிழ் மொழியில் இருந்து, 100 மதிப்பெண்ணுக்கு, வினாக்கள் கேட்கப்பட்டது. பின், பாட திட்டத்தை மாற்றி, புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டபோது, எதிர்ப்பு ஏற்பட்டு, அந்த பாடத்திட்டம் கைவிடப்பட்டது. தற்போது, வெளியிடப்பட்டுள்ள, புதிய பாடத்திட்டத்தில், தமிழ் மொழி தொடர்பாக, மூன்று பகுதிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதில், "தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்' என்ற தலைப்பில், திருக்குறளில், 11 அதிகாரங்கள், இடம் பெற்று உள்ளது. திருக்குறளில் இருந்து, அடியை கொடுத்து, "மேற்கோள் காட்டுதல்' என்ற ரீதியில் கேள்வி கேட்கப்படும். திருக்குறளில், ஆறு சீர்கள் கொடுத்து, விடுபட்ட சீர், கேள்வியாக கேட்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம் அடுத்த வாரம் முதல் வழங்கல்

  ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், அடுத்த வாரத்தில் இருந்து வழங்கப்பட உள்ளன. கடந்த கல்வி ஆண்டு நிலவரப்படி, 625 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில், 40 ஆயிரம் இடங்கள் உள்ளன. அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ளன. எனினும், மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு, கலந்தாய்வு மூலம், வெறும், 9,000 இடங்களே நிரம்பின. நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர் எண்ணிக்கையும், மோசமாக உள்ளது. இதனால், பல தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், பி.எட்., கல்லூரிகளாக மாற்றப்படுகின்றன.

பி.எட்., முடித்து, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றால், வேலைக்கு உத்தரவாத நிலை இருப்பது தான், இதற்கு காரணம். பட்டதாரி ஆசிரியர், முழுக்க முழுக்க, "மெரிட்' அடிப்படையில், நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், ஆசிரியர் பயிற்சி படிப்பு படிக்கும் இடைநிலை ஆசிரியர், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் நடக்கும் என்ற நிலை உள்ளது. சுப்ரீம் கோர்ட்டி வழக்கு முடியும் வரை, பதிவு மூப்பு முறையே, நடைமுறையில் இருக்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், ஆசிரியர் பயிற்சியை பெற, மாணவர் தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையில், 2013-14ம் ஆண்டு சேர்க்கைக்காக, அடுத்த வாரத்தில் இருந்து, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி மையங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் முன், ஒன்றுக்கு பலமுறை, மாணவர்கள் ஆலோசித்து, முடிவு எடுப்பது சிறந்தது.

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு இன்றும் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்

  பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு செவ்வாய்க்கிழமை (மே 14) பிற்பகல் 1 மணி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார். விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு  www.dge.tn.nic.in  இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க திங்கள்கிழமை (மே 13) கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது மாணவர்களின் நலன் கருதி ஒருநாள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். ஆனால், வங்கியில் கட்டணம் செலுத்துவதற்கு செவ்வாய்க்கிழமை கடைசி நாள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

விண்ணப்ப எண்: ஏற்கெனவே ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து, சம்பந்தப்பட்ட பாடத்துக்கான பத்து இலக்க எண் தெரியாதவர்கள் மீண்டும் www.dge.tn.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் அந்த எண்ணைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணை வைத்துத்தான் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.

தொடக்கக் கல்வி - 2013-2014ஆம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - நெறிமுறை கள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை, கடுமையாக சரிந்துள்ளத

ு. பள்ளி கல்வித் துறை மானிய கோரிக்கை, கொள்கை விளக்க குறிப்பு புத்தகம், சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அதில், மாணவர் சேர்க்கை குறித்த, விவரங்கள் தரப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில், மாணவர் சேருவது, படிப்படியாக குறைந்து வரும் தகவல், வெளியாகி உள்ளது. கடந்த, 2008-09ம் ஆண்டு, அரசு பள்ளிகளில், 43.678 லட்சம் மாணவர்கள் படித்தனர்; கடந்த கல்வி ஆண்டில், 36.58 லட்சம் என்ற அளவில், இந்த எண்ணிக்கை சரிந்துள்ளது.

Transfer Application for Elementary Education dept 2013-14

School Education department Policy Note 2013-14

நாளை முதல் ப்ளஸ் 2 பாடபுத்தகம்?

ப்ளஸ் 2 பாட புத்தகம் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தாவரவியல், விலங்கியல் புத்தகங்கள் மட்டும் பின்னர் விநியோகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Saturday, May 11, 2013

தொடக்கக்கல்வித் துறை பொது மாறுதல் கலந்தாய்வு 2013-14 விண்ணப்பங்கள் நாளை (13.05.2013) முதல் சமர்பிக்கலாம

் *விண்ணப்பம் சமர்பித்தல் தொடங்கு தேதி: 13.05.2013 *கடைசி நாள் : 17.05.2013 *சென்ற ஆண்டு வழி காட்டு நெறிமுறைகளே இந்த ஆண்டும் பின்பற்றப்படுகிறது.
*சென்ற ஆண்டு பயன்படுத்திய விண்ணப்ப படிவமே இந்த ஆண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். *2009க்கு பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு வழக்கம் போல் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் பெற முடியாத நிலை நீடிக்கிறது என்று அறியப்படுகிறது. 

ஆங்கில வழிக் கற்பித்தலும் அட்டை வழிக் கற்றலும் - நாளிதழ் செய்தி

தமிழக அரசு வரும் ஆண்டு முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து படிப்படியாக ஆங்கில வழிக் கல்வி முறையை மாநிலம் முழுவதும் நடைமுறைப் படுத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கான பணிகள் துரிதமாக முடுக்கி விடப் பட்டுள்ளன. ஆறாம் வகுப்பிற்குக் கடந்த வருடத்திலேயே பள்ளிக் கல்வித் துறையில் ஒரு பிரிவு ஆங்கிலக் கல்வி முறை அறிமுகப் படுத்தப்பட்டது. ஏற்கனவே செயல்வழிக் கற்றல் என்னும் அட்டைவழிக் கற்றல் முறைக்கு ஆசிரிய அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துப் போராடியதால் கடந்த சில வருடங்களாக அட்டைமுறை எளிமைப் படுத்தப்பட்டது.

  தொடக்கப் பள்ளிகளில் செயல்வழிக் கற்றலுக்கான பதிவேடுகளையும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறைக்கான பதிவேடுகளையும் ஒருசேரப் பராமரிக்க வேண்டியதாக இருந்தது. அண்மைக் காலமாக குறுவளமையக் கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டதாலும், வளமையப் பயிற்றுநர்கள் பள்ளிக்கல்வித் துறைக்கு முற்றிலுமாக ஈர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் SCERT யே இனிமேல் பணியிடைப் பயிற்சிகளை நடத்தும் என்றும் தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது அமல்படுத்தப் படவிருக்கும் ஆங்கிலக் கல்விமுறைக்கேற்ப செயல்வழிக் கற்றல் அட்டைகள் அச்சிடப்பட்டு, கல்வியாண்டின் தொடக்கத்திலேயே பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படுமா என்பது குறித்த குழப்பங்கள் தொடக்கநிலை ஆசிரியர்களிடையே எழுந்த வண்ணம் உள்ளன.

பிளஸ் 2 மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற இ,மெயில் அனுப்பலாம்

   அரசுத் தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்ட அறிக்கை: பிளஸ் 2 தேர்வுகள் எழுதிய மாணவர்கள் தேர்வு எழுதிய எந்த பாடத்திற்கும் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்,லைனில் விண்ணப்பித்தல் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே இணையதளத்திலும் மாணவர்களுக்கான அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன், லைனில் விண்ணப்பிக்கும்போது, தங்களது விவரங்களை பூர்த்தி செய்தபின்னர் பத்து இலக்கம் கொண்ட விண்ணப்ப எண்ணுடன் கூடிய ஒப்புகைச் சீட்டை தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.

  ஒப்புகைச் சீட்டில் உள்ள 10 இலக்க எண்ணை குறித்து கொள்ள தவறியதாலோ வேறு ஏதேனும் காரணங்களினாலோ வங்கியில் கட்டணம் செலுத்துவதற்குரிய சலானை பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள், பதிவு எண், பிறந்த தேதி, பாடம், விண்ணப்பிக்கும் விடைத்தாள், மாணவர் பெயர், முகவரி, செல்போன் எண், இமெயில் முகவரி உள்ளிட்ட தகவல்களை dgehelpline@gmail.com எனும் இமெயிலில் அனுப்பி தாங்கள் ஆன்,லைனில் பூர்த்தி செய்த பாடத்திற்கான 10 இலக்க விண்ணப்ப எண்ணை பெற்றுக் கொள்ளலாம்.  மேலும், 044,28203089, 044,28221734 என்ற எண்களுக்கு பேக்ஸ் அனுப்பியும் பெறலாம். 044,28278286, 044,28264513 என்ற தொலைபேசி எண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Friday, May 10, 2013

அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்விமே

  "அனைத்து அரசுப் பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டில், ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவங்கப்படும்" என பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார். கடந்த கல்வி ஆண்டில், 320 பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்ட நிலையில், மீதம் உள்ள அனைத்து அரசு துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டில், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்படும் என, பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன், நேற்று, சட்டசபையில் அறிவித்தார்.

கடந்த கல்வி ஆண்டு, 320 அரசு பள்ளிகளில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பில், தலா, இரண்டு ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டன. 640 பிரிவுகள் துவங்கப்பட்டு, அதில், 22 ஆயிரத்து, 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். வரும் கல்வி ஆண்டு முதல், தேவைப்படும் அனைத்து அரசு துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகள் துவங்கப்படும். இதனால், ஆண்டுக்கு, 1.5 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார். அமைச்சர் அறிவிப்பின்படி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், 1 மற்றும் 6ம் வகுப்புகளில், தலா இரு பிரிவுகள், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்படும். ஆங்கில வழி வகுப்புகள் கூடுதலாக துவங்கப்படும் போது, அதற்கென, ஆசிரியர்களும், கூடுதலாக நியமனம் செய்ய வேண்டும். ஆனால், கூடுதல் ஆசிரியர் நியமனம் குறித்து, அமைச்சர் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. வழக்கமாக, பள்ளிகளில் ஏற்படும் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மட்டுமே, அமைச்சர் வெளியிட்டார்.

அரசுப் பள்ளிகளில் 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும் - இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விவரம்:

"அரசுப் பள்ளிகளில், 3,711 ஆசிரியர்களும், 1,146 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும், நடப்பு கல்வி ஆண்டில் நிரப்பப்படும்" என பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார். சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்பு: கடந்த, 2011-12, 12-13 ஆகிய ஆண்டுகளில், 63 ஆயிரத்து, 125 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வி ஆண்டில், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 313; துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 380; முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், 880; பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 1,094; இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 887; சிறப்பாசிரியர் பணியிடங்கள், 156 என, 3,711 பணியிடங்கள் நிரப்பப்படும்.

மேலும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், 16 பேர், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள், இரண்டு பேர், விரிவுரையாளர்கள், 99 பேர், உடற்கல்வி இயக்குனர்கள், எட்டு பேர் என, 125 பேரும் நியமனம் செய்யப்படுவர். ஆசிரியர் அல்லாத பணியிடங்கள்:உதவியாளர்கள் (நேரடி நியமனம்), 850 பேர்; சுருக்கெழுத்து தட்டச்சர்கள், 18 பேர்; இளநிலை உதவியாளர்கள், 188 பேர் மற்றும் தட்டச்சர்கள், 90 பேர் என, 1,146 பேரும், நடப்பு கல்வி ஆண்டில் நியமனம் செய்யப்படுவர்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

முன்னேற்றத்தின் முதுகெலும்பு -இன்று தேசிய தொழில்நுட்ப தினம்-

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் நாட்டின் சாதனைகளை அங்கீகரிப்பது; புதிய தொழில்நுட்பங்களை உரு வாக்கு வது; வருங்கால இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி, மே 11ம் தேதி தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது. அறிவியல் - தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இத்தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எப்படி வந்தது:பொக்ரானில் 1998 மே 11 மற்றும் 13ம் தேதி, இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனைகள் வெற்றி பெற்றன. இதன் மூலம் உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து கொண்டது.

இச்சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இந்த நாள்,தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது.பொக்ரான் அணுகுண்டு சோதனை, உள்நாட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்ட திரிசூல் ஏவுகணை மற்றும் ஹன்சா-3 விமானம் ஆகிய கண்டு பிடிப்புகள், நாட்டின் சாதனைகளில் ஒரு மைல்கல். இது தவிர, கண்டம் விட்டு கண்டம் பாயும் (5000 கி.மீ.,) அக்னி - 5 ஏவுகணை ஏவியது, இஸ்ரோ 100 செயற்கைக் கோள் களை விண்ணில் ஏவியது ஆகியவை இந்திய அறிவியல், தொழில்நுட்ப துறையின் சமீபத்திய சாதனைகள்.

முன்னேற்றம் தேவை: விண்வெளி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில், இந்தியா சிறப்பாக முன்னேறி வருகிறது. உள்நாட்டு தயாரிப்பிலேயே "கிரையோஜெனிக்' இயந்திரத்தை உருவாக்கு வதில், நாம் இன்னும் வெற்றி பெறவில்லை. மேலும் பசுமை தொழில்நுட்பம், கல்வி, õடு வளர்ப்பு, தண்ணீர் சேமிப்பு, மரபுசாரா எரிதி உற்பத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் விவசாயத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்துவது போன்றவற்றில் நாம் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது.