இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 16, 2013

பெரியார் பல்கலையில் சேர்க்கை அறிவிப்பு

் சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் முதுகலை, எம்.பில் மற்றும் சான்றிதழ் படிப்பில் சேர சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதுகலையில் எம்.ஏ (தமிழ், பொருளாதாரம், ஆங்கிலம், இதழியல், சமூகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரி வேதியியல், பயோ டெக்னாலஜி, கணினி அறிவியல்) உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. எம்.பில் படிப்பில் (அப்ளைடு ஜியாலஜி, வணிகம், கணிதம், இயற்பியல், வேதியியல், மேலாண்மை படிப்பு, உணவு கட்டுப்பாடு மற்றும் அறிவியல், மைக்ரோ பயாலஜி, உடற்கல்வி) ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. சான்றிதழில் கம்யூனிகேஷன் எக்ஸெலன்ஸ், கவுன்சிலிங் சைக்காலஜி, என்.ஜி.ஓ மேனஜ்மென்ட் பார் சோசியல் டெவலப்மென்ட், நானோசயின்ஸ் அன்ட் நானோ டெக்னாலஜி ஆகிய படிப்புகளும் வழங்கப்படுகின்றன. விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை ஏப்ரல் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு www.periyaruniversity.ac.in/files/AN.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

பெரியார் பல்கலையில் சேர்க்கை அறிவிப்பு

் சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் முதுகலை, எம்.பில் மற்றும் சான்றிதழ் படிப்பில் சேர சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதுகலையில் எம்.ஏ (தமிழ், பொருளாதாரம், ஆங்கிலம், இதழியல், சமூகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரி வேதியியல், பயோ டெக்னாலஜி, கணினி அறிவியல்) உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. எம்.பில் படிப்பில் (அப்ளைடு ஜியாலஜி, வணிகம், கணிதம், இயற்பியல், வேதியியல், மேலாண்மை படிப்பு, உணவு கட்டுப்பாடு மற்றும் அறிவியல், மைக்ரோ பயாலஜி, உடற்கல்வி) ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. சான்றிதழில் கம்யூனிகேஷன் எக்ஸெலன்ஸ், கவுன்சிலிங் சைக்காலஜி, என்.ஜி.ஓ மேனஜ்மென்ட் பார் சோசியல் டெவலப்மென்ட், நானோசயின்ஸ் அன்ட் நானோ டெக்னாலஜி ஆகிய படிப்புகளும் வழங்கப்படுகின்றன. விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை ஏப்ரல் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு www.periyaruniversity.ac.in/files/AN.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Monday, April 15, 2013

கணிதத்தில் கடினமான வினாக்கள்: எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் போனஸ்

  பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாக பரவலாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் போனஸாக வழங்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.  தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு கணிதத் தேர்வு ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெற்றது. மாதிரிக் கட்டமைப்புக்கு (புளூ பிரிண்ட்) மாறாக வினாத்தாள் அமைந்திருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் 5 மதிப்பெண்களுக்கான அணிகள் பகுதியில் (மேட்ரிக்ஸ்) வழக்கமாகக் கேட்கும் ஒரு வினாவுக்குப் பதிலாக 2 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இயற்கணிதப் பகுதியில் (அல்ஜிப்ரா) வழக்கமாக 3 வினாக்களுக்குப் பதிலாக 2 வினாக்கள் மட்டுமே கேட்கப்பட்டிருந்தன.

இது தவிர, ஒரு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கு விடை எழுத 5 நிமிஷங்கள் செலவழிக்க வேண்டியிருந்தது. மேலும் 5 மதிப்பெண் வினாக்களில் 2 வினாக்களுக்கு விடை எழுத அதிக நேரம் செலவழிக்கும் வகையில் கடினமாக இருந்தது. இதனால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.  இது குறித்த செய்தி தினமணியில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி வெளியானது. எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 10 மதிப்பெண்களை போனஸாக வழங்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.  

அதன்படி, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விடைக் குறிப்பாணையில் அணிகள், முக்கோணவியல் பாடப் பிரிவுகளில் ப்ளூ பிரிண்டுக்கு மாறாக கூடுதல் வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதால் கீழ்க்கண்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். பிரிவு 3-ல் உள்ள அனைத்து விடைகளையும் மதிóப்பீடு செய்து அதில் மிகக் குறைவான மதிப்பெண் பெற்ற இரண்டு விடைகளைத் தேர்வு செய்து அவற்றுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும்.  அதாவது ஒரு மாணவன் 0, 1, 2, 3, 4 என மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவருக்கு 5 மதிப்பெண் வழங்க வேண்டும் என  குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் 10 மதிப்பெண்கள் போனஸாகக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அனைத்து விடைகளையும் மதிப்பீடு செய்து என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதால், அந்தப் பிரிவில் உள்ள அனைத்து (9) விடைகளையும் எழுதிய மாணவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட வேண்டுமா அல்லது ஓரிரு வினாக்களை எழுதியுள்ளவர்களுக்கும் வழங்கலாமா என்ற குழப்பம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.  இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் சாமி சத்தியமூர்த்தி கூறியது:  

கணிதத் தேர்வுக்கான வினாத்தாளில் மறைமுகமான வகையில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதுடன், ப்ளூ பிரிண்ட் படி கேள்விகள் கேட்கப்படாததால் கிராமப்புற மாணவர்கள் திணறும் நிலை குறித்த பரவலான கருத்து வெளிப்பட்டது. இந்நிலையில், தேர்வுகள் இயக்ககம் தவறைச் சரி செய்யும் வகையில் 10 மதிப்பெண்கள் கிடைக்க வழிவகை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் கணிதத்தில் நூறு மதிப்பெண் பெறுவது அதிகரிப்பதுடன், கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் கணிசமாக உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

பெட்ரோல் விலை ஒரு ரூபாய் குறைப்பு

  பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. விலை குறைப்புக்கு பின் பெட்ரோல் விலை லிட்டருக்கு சென்னையில் ரூ. 69.08 ஆகவும், டில்லியில் ரூ.66.09 ஆகவும், கோல்கட்டாவில் ரூ.73.48 ஆகவும், மும்பையில் ரூ.72.88 ஆகவும் விற்பனை செய்யப்படும்.

Sunday, April 14, 2013

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்: துணைவேந்தர்

""ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில், விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான கருத்தாய்வுக் கூட்டம் ஏப்.,17ல் துவங்குகிறது,'' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் கூறினார்.மதுரையில் நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில், ஆசிரியர் கல்வி பாடத்திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு பின் மாற்றியமைக்க படவுள்ளது.

புதிய பாடத்திட்டங்கள், தற்கால கல்வி முறைக்கு ஏற்ப மாற்றப்படும். இதற்காக கல்வியாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் சென்னையில் ஏப்.,17 முதல் 19 வரை நடக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லாத பி.எட்., கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதில், சில கல்லூரிகள் மட்டுமே பதில் அளித்துள்ளன. அனைத்து கல்லூரிகளும் பதில் அளித்தவுடன், என்ன வகையானநடவடிக்கை எடுப்பது குறித்து "சிண்டிகேட்' கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும், என்றார்.

அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் தொழிற்கல்வி "குரூப்' கட்டாயம

அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டு முதல் தொழிற்கல்வி "குரூப்' கட்டயாமாக துவக்க வேண்டும், என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கணக்கு, அறிவியல், கணக்கு பதிவியல் உள்ளிட்ட குரூப் கட்டாயம் இருக்கும். ஆனால், மாவட்டத்தில் ஒரு சில பள்ளிகளில் தான், தொழிற்கல்வி எனப்படும்"ஒக்கேஷனல் குரூப்' இருக்கும். பிளஸ் 2 முடித்தவுடன், நேரடியாக வேலைக்கு செல்லும் வகையில், சுய தொழில் துவங்க தொழிற்கல்வி குரூப்பை அனைத்து பள்ளிகளிலும், கட்டாயம் துவக்க வேண்டும், என மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் இந்த குரூப்பில் படித்து,வேலை வாய்ப்பு பெறும் வகையில், நடைமுறை பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாடத்திட்டம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளிக்கும், புதிய கட்டடம் கட்டுவதற்கும் , தளவாட பொருட்கள் வாங்குவதற்காக, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக மின்னணு பொருட்கள் சரி பார்த்தல், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட 16 வகை பாடப்பிரிவுகள், ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பிரிவு துவக்கப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர்களுக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Saturday, April 13, 2013

துறைத்தேர்வுகள் மே 2013 விண்ணப்பத்தேதி நீட்டிப்பு

மே மாதம் நடைபெறும் துறைத்தேர்வு எழுதுவதற்கான தேதி 22-4-2013 மாலை 5-45 வரையில் நீட்டிக்கப்படுகிறது.
விளம்பர எண்.355

Friday, April 12, 2013

TANFETO Circular

ஆன்-லைனில் ஆர்.டி.ஐ.,க்கு மனு செய்யலாம்

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள், இனி, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அரசு தொடர்பான அனைத்து தகவல்களையும், பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில், மத்திய அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தை, 2005ல் அறிமுகப்படுத்தியது.இதன்படி, 10 ரூபாய் செலுத்தி, விண்ணப்பித்தால், அரசு தொடர்பாக வேண்டும் தகவலை பெற முடியும்.இதுவரை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற மத்திய அரசு பணியாளர் நலத்துறைக்கு விண்ணப்பித்து வந்தனர்.

தற்போது, ஆன் லைனின் விண்ணப்பிக்கவும், இன்டர்நெட் பாங்கிங் வசதியை பயன்படுத்தி, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம், ஸ்டேட் பாங்க் மற்றும் அதன் துணை வங்கிகளில், 10 ரூபாய் கட்டணமாக செலுத்தலாம்.இதற்காக, "www.rtionline.gov.in' என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் டி.என்.பி.எஸ்.சி. புதிய பாடத்திட்டத்தில் மாற்றம்

  டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. முன்பு போல தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்கான முடிவு  நடந்த ஆணையத்தின் அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்டது. பாடத்திட்டத்தில் மாற்றம் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அதிகாரிகளும் டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக டி.என்.பி.எஸ்.சி. அவ்வப்போது போட்டித்தேர்வுகளை நடத்துகிறது.

இந்த நிலையில், நீண்ட காலமாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படாததாலும், இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப ஊழியர்களை தேர்வுசெய்வதற்காகவும் கடந்த மாதம் பாடத்திட்டம் அடியோடு மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, குரூப்–4, வி.ஏ.ஓ. தேர்வுகளில் தமிழ்மொழி தொடர்பான கேள்விகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டு அதற்குப் பதிலாக ‘பகுத்து ஆராயும் திறன்’ (ஆப்டிடியூட்) புதிதாக சேர்க்கப்பட்டது. தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக புகார் குரூப்–2 தேர்வில் தமிழ்மொழி தொடர்பான 100 கேள்விகள் முற்றிலும் நீக்கப்பட்டன. அதற்குப் பதிலாக பொது அறிவு கேள்விகளின் எண்ணிக்கை 100–லிருந்து 150 ஆக அதிகரிக்கப்பட்டு, ஆப்டிடியூட் தொடர்பாக 50 வினாக்கள் புதிதாக சேர்க்கப்பட்டன. அதோடு அறிவியல் மற்றும் பொது அறிவு பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. புதிய பாடத்திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்தன. பாடத்திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மாணவ–மாணவிகளும் டி.என்.பி.எஸ்.சி.யிடம் முறையிட்டனர்.

இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களின் அவசர கூட்டம்  நடந்தது. டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தலைமையில், செயலாளர் மா.விஜயகுமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். காலை 11.30 மணியளவில் தொடங்கிய இந்த கூட்டம், மாலை 6 மணிக்கு மேல் நீடித்தது. 17–ந் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்றும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 17–ந் தேதி (புதன்கிழமை) வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.

மாணவர்களின் புத்திக்கூர்மையை சோதிக்க புதிய தேர்வு முறை: வருகிற கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. அறிமுகம்

  மாணவர்களின் புத்திக்கூர்மையை சோதிக்க புதிய தேர்வு முறையை வருகிற கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. அறிமுகப்படுத்துகிறது. மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மாணவர்களின் அறிவை வளர்க்கவும் அறிவை ஆய்வு செய்து பரிசோதிக்கவும் முடிவு செய்து தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவருகிறது. அதாவது ஒவ்வொரு பாடத்திலும் 20 சதவீத மார்க்குக்கு இந்த புதிய தேர்வு முறை அமல்படுத்தப்படுகிறது.

அதாவது வருடாந்திர தேர்வில் எந்த பகுதியில் இருந்து கேள்வி கேட்கப்படும் என்பதை தேர்வுக்கு 4 மாதங்களுக்கு முன்பாக அந்த பகுதி மாணவர்களிடம் வழங்கப்படும். அதில் இருந்து 20 சதவீத மார்க்குகளுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதனால் மாணவர்கள் எவ்வாறு புரிந்து படிக்கிறார்கள் என்பதை பரிசோதிக்கவும் அவர்களின் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இந்த முறை வித்திடும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய தேர்வு முறை வருகிற கல்வி ஆண்டில் (2013–2014) 9–வது வகுப்பு, 10–வது வகுப்பு, 11–வது வகுப்பு ஆகியவற்றுக்கு கொண்டுவரப்படுகிறது. 12–வது வகுப்புக்கு 2014–2015ம் ஆண்டு அறிமுகப்படுத்துகிறது. இந்த தகவலை சி.பி.எஸ்.இ. தலைவர் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Wednesday, April 10, 2013

Annamalai University Exam Results

NTSE Examination 2012 Selected List

ஊரக திறனாய்வு தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு

தமிழகத்தில் கிராம மாணவர்களுக்கு, நடத்தப்பட்ட ஊரக திறனாய்வு தேர்வு முடிவுகளை, இணையதளத்தில் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. கிராமப்புறங்களில் எட்டாம் வகுப்பு தேர்வில், 50 சதவீத மதிப்பெண் பெற்ற, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு, 2012 நவ., 18 ல் நடத்தப்பட்டது. தேர்வுத்துறையில் பழைய பேப்பர் விற்பனையின் போது, ஒரு சில மாணவர்களின் விடைத்தாள்களும் விற்பனை செய்யப்பட்டன. விடைத்தாள்கள் இல்லாத மாணவர்களுக்கு, மறு தேர்வு நடத்தப்பட்டது. தற்போது, இதற்கான தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், முதல் மதிப்பெண் பெற்ற 50 மாணவர்கள், 50 மாணவிகளுக்கு 12 ம் வகுப்பு படிக்கும் வரை, ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக, அரசு வழங்குகிறது. தேர்வு முடிவுகளை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

மூவர் குழு அறிக்கையை வெளியிட மே 4 ல் அடுத்த கட்ட போராட்டம்: அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு

ஊதிய முரண்பாடு தொடர்பான, மூவர் குழு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தும், அதை வெளியிட தாமதம் செய்வதை கண்டித்து,மே 4 ல் அடுத்த கட்ட போராட்டத்தை தீவிரப்படுத்த, அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. சட்டசபை தேர்தலின் போது, அரசு ஊழியர்களின் முரண்பாடுகள் களையப்படும் என, முதல்வர் ஜெ., வாக்குறுதி வழங்கினார். அதன்படி, சம்பள முரண்பாடு களைய, கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது.

குழுவானது, அரசு ஊழியர்கள் சங்கங்கள், அமைப்புகளிடம் கருத்துக்கள் கேட்டு, அதன் அறிக்கையை 2012 டிச., 31 ல் அரசுக்கு வழங்கியது. இதை எதிர்பார்த்து, எட்டு லட்சம் அரசு ஊழியர்கள், 4 லட்சம் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அரசு, அறிக்கையை வெளியிடாமல் தாமதம் செய்கிறது. இதை கண்டித்து, தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று, அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, ஏப்., 17 ல் மாலை நேர தர்ணா போராட்டம் நடக்க உள்ளது. அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ,"" சம்பள முரண்பாடு குறித்த, குழு அறிக்கையை, வெளியிடாமல் அரசு தாமதம் செய்கிறது. இதை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டும், அரசு மெத்தனமாக உள்ளது. திருவாரூரில் மே 4 ல் நடக்க உள்ள மாநில பேரவையில், அடுத்த கட்ட போராட்டத்தை தீவிரப்படுத்த, முடிவு எடுக்கப்படும்,''என்றார்.

பி.எட். கல்லூரிகளுக்கு கட்டணம் எவ்வளவு?

  தனியார் நடத்தும் பி.எட். கல்லூரிகளுக்கு கட்டணம் எவ்வளவு என்பது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் விளக்கம் அளித்தார். சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, அரூர் தொகுதி எம்.எல்.ஏ. தில்லிபாபு எழுப்பிய துணைக் கேள்விக்கு அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்: கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக, பி.எட். கல்லூரிகளுக்கென கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.

இதற்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வுபெற்ற நீதிபதி என்.பாலசுப்பிரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும், தரச்சான்று பெற்ற கல்லூரிகள் ரூ.46 ஆயிரத்து 500-ம், தரச்சான்று இல்லாத கல்லூரிகள் ரூ.41 ஆயிரத்து 500-ம் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவைக்கேற்ப பி.எட். கல்லூரிகள் தொடங்கப்படும். மாநிலத்தில் மொத்தம் 706 பி.எட். கல்லூரிகள் உள்ளன. அதில், அரசுக் கல்லூரிகள் ஏழும், உதவிபெறும் கல்லூரிகள் 14-ம், தனியார் கல்லூரிகள் 685-ம் அடங்கும் என்றார் அமைச்சர் பழனியப்பன்.

› மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ... திரு.முருகசெல்வராசன் உரை

கல்வித்துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதிவியுயர்வு கிடையாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

கல்வித்துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதிவியுயர்வு கிடையாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்ற பதவியுயர்வு கலந்தாய்வின் போது ஏற்கனவே பயின்ற பட்டத்தின் அடிப்படையில் ஒரு வருட காலத்தில் மற்றொரு பட்டபடிப்பை பயின்று அதற்கு பதவியுயர்வு வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.  இதன் அடிப்படையில் "இரட்டை பட்டங்களுக்கு பதிவியுயர்வு கிடையாது" உயர்நீதிமன்ற நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் தீர்பளித்தார். இத்தீர்ப்பை  எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் வழக்கறிஞ்சர் திரு.சங்கரன் அவர்கள் வாதாடினார், இன்று (10.04.2013) இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரு.எலிட் தர்மா ராவ்  மற்றும் திரு. விஜயராகவன் அவர்கள், மேற்கண்ட 

"இரட்டை பட்டங்களுக்கு பதிவியுயர்வு கிடையாது" என்ற தீர்ப்பிற்கு தடை விதித்து தீர்பளித்தனர். இதனால் வரும் பதவியுயர்வு கலந்தாய்வில் இரட்டை பட்டங்கள் பயின்றோருக்கு பதிவியுயர்வு வாய்ப்பு ஏற்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே மாதம் பள்ளிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு: மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி

"அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துவதற்காக, தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில், மே மாதம் பள்ளிக்கு வரவேண்டும்" என, நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில், மே மாதம் முதல் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில் பள்ளிக்கு வர வேண்டும். பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று, அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்த வேண்டும். பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு பள்ளிகளில் பயிலுவதன் மூலம் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்த எடுத்துக் கூற வேண்டும் என, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மூலம் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிக்கப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட உள்ள இத்திட்டம், பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதே வேளையில் மே மாதம் பி.எட்., உள்ளிட்ட உயர் கல்வி தேர்வுகள் வருவதால், அவற்றை படிக்கும் ஆசிரியர்களின் கல்வி பாதிக்கும் எனவும், ஆசிரியர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: மே மாதம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில் பள்ளிக்கு வரவேண்டும் என, அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலரும் உத்தரவிட்டுள்ளனர்.  அதன்படி பள்ளிக்கு செல்லும் ஆசிரியர், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கும் சலுகை விவரம் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில், மே மாதம் உயர்கல்வி தேர்வு உள்ளிட்டவை இருக்கும். உயர்கல்வி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு மே மாதம் பணி இருந்தால், அவர்களது கல்வி பாதிக்கும். எனவே, உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களுக்கு இதில் விதி விலக்கு அளிக்க வேண்டும். அல்லது மே மாத இறுதியில் இத்திட்டத்தை செயல்படுத்தினால், எவ்வித பிரச்னையும் இருக்காது, என்றனர்.