இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, November 05, 2012

தொல்லை தரும் குறுந்தகவல் "டிராய்' புதிய கட்டுப்பாடு

மொபைல்போனுக்கு அனுப்பப்படும், தொல்லை தரும் எஸ்.எம்.எஸ்.,களுக்கு (குறுந்தகவல்) கட்டுப்பாடு விதித்து, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, "டிராய்' உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் மொபைல்போன்களில், மொபைல்போன் நிறுவனங்கள், சில சலுகைகளுடன் வழங்கும் எஸ்.எம்.எஸ்., மூலம், சில நிறுவனங்கள், தங்களது வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றன.

இதையொட்டி, வாடிக்கையாளர்களுக்கு கணக்கிலடங்கா எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பி, தொல்லை கொடுத்து வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளன.இந்நிலையில், 100 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்பும் ஒவ்வொரு தகவலலுக்கும் இனி, 50 பைசா கட்டணம் செலுத்த வேண்டும் என, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான "டிராய்', நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, டெலிமார்க்கெட்டிங்கில் ஈடுபடும், பதிவு செய்யப்படாத நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மொபைல்போன் வாடிக்கையாளர்களை இந்த உத்தரவு கட்டுப்படுத்தாது என்றும், "டிராய்' தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, "டிராய்' முதன்மை ஆலோசகர் பரமேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:இந்த புதிய உத்தரவு, இரண்டு வாரத்திற்குள் நடைமுறைபடுத்தப்படும். இது, ஆரம்பகட்ட நடவடிக்கை தான். இதுபோல், இன்னும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இந்த பிரச்னைகளை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து, மூன்று மாதத்திற்குள் தெரிவிக்கும்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.அதாவது, வர்த்தக ரீதியில், ஒரே மாதிரியான எஸ்.எம்.எஸ்.,கள் அனுப்பப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

.இருப்பினும், தங்கள் நிறுவனத்தை முறையாக பதிவு செய்து, வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொல்லை தரும் விளம்பரங்கள் குறித்து, மொபைல்போன் வாடிக்கையாளர்கள், யுசிசி என, டைப் செய்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் போன் எண் மற்றும் தேதி போன்ற விவரங்களை டைப் செய்து, 1909 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் மூலம் புகார் அளிக்கலாம்.

சிறுபான்மை பள்ளிகளில் அடிப்படை வசதிக்கு ரூ.50 லட்சம

்  சிறுபான்மை பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்த, அடிப்படை கட்டடமைப்பு வளர்ச்சி திட்டத்தில் (ஐ.டி.எம்.ஐ.,), மத்திய அரசு, 50 லட்சம் நிதி வழங்குகிறது.

இப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, புதிய திட்டத்தை, அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக, முதன்மைக் கல்வி அலுவலர், பிற்பட்ட, சிறுபான்மை நல அலுவலர், சிறுபான்மை உறுப்பினர்கள் இருவர், தொடக்கக்கல்வி அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி குறித்து ஆய்வு செய்து, நிதி வழங்க பரிந்துரைக்கும். அதிகாரி ஒருவர் கூறுகையில்,

""இந்நிதியை பெற, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம். மானியக்குழுவின் பரிந்துரைகள், தொடக்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். பின், நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Sunday, November 04, 2012

குரூப் 2 தேர்வு: ஒன்றரை மாதத்தில் முடிவு

குரூப் 2 தேர்வு முடிவுகள் ஒன்றரை மாதத்தில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ஆர்.நடராஜ் தெரிவித்தார்.

குரூப் 2 பிரிவில் நகராட்சி ஆணையாளர், சார்-பதிவாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் என 3 ஆயிரத்து 687  பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் முன்பே வெளியானதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்தப் பிரச்னை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், குரூப் 2 மறு தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேர்வு எழுத 6.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 60 சதவீதம் பேர் ஞாயிற்றுக்கிழமை தேர்வு எழுதினர்.

தமிழகம் முழுவதும் 114 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் மொத்தம் 73,000 பேர் தேர்வு எழுதினர். தேர்வு நடக்கும் மையங்கள் அனைத்தும் விடியோ கேமராக்கள் மற்றும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டன. தேர்வுப் பணி மற்றும் பறக்கும் படைப் பணியில் 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர். தேர்வாணையத்தின் தலைவர் ஆர்.நடராஜ் கூறியது:

குரூப் 2 தேர்வு முடிவுகள் ஒன்றரை மாதத்தில் வெளியிடப்படும். அதற்கு முன்னதாக 2 நாள்களில் டிஎன்பிஎஸ்சி  இணையதள முகவரியில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய் வினாவுக்கான விடைகள் கொடுக்கப்படும். அதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் உடனே தெரிவிக்கலாம். ஒரு வாரத்தில் இறுதி செய்யப்பட்ட விடைகள் அளிக்கப்படும் என்றார்.

ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க சிறப்பு முகாம்

ஆசிரியர்களின் ஊதியம், தேர்வு நிலை, பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகள் மற்றும் சலுகைகளை பெறுவதில் உள்ள சிரமங்களை போக்க, சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித்துறையின் கீழ், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், தங்களுக்கு சேர வேண்டிய ஊதிய உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை, பதவி உயர்வு மற்றும் இதர உரிமைகள், சலுகைகள் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே, ஆசிரியர்களின் பண, பணி மற்றும் இதர பலன்கள் உடனுக்குடன் கிடைக்கும் வகையிலும், அனைத்து கல்வி அலுவலகங்களிலும், சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று, பள்ளிக் கல்வி இயக்குனர், அரசிற்கு கடிதம் எழுதினார்.இதை, தமிழக அரசு, சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்து, இதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. இதற்கான, நடைமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு மாதமும், முதல் சனிக்கிழமையில், தொடக்க கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அலுவலகத்திலும்; அனைத்து உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடக்கும். இதில் பெறப்படும் மனுக்களை, பரிசீலித்து உடன் நடவடிக்கை எடுத்து உரிய உத்தரவு வழங்கப்பட வேண்டும்.இரண்டாம் சனிக்கிழமைகளில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடக்கும் சிறப்பு முகாமில், தொடக்க கல்வி, மாவட்ட கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் மனுக்களை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுத்து உத்தரவு வழங்கப்பட வேண்டும்.

மூன்றாம் சனிக்கிழமைகளில், தொடக்க பள்ளி கல்வி இயக்ககங்களில் நடக்கும் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில், மாவட்ட தொடக்க கல்வி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.முகாமில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் வரமுடியாவிட்டால், அவரின் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்கலாம்.

எஸ்.சி., - எஸ்.டி., ஜாதி சான்றுகள் வழங்க புதிய நடைமுறை:பொய்ச் சான்றிதழ் பெற்றால் தண்டனை நிச்சயம்

பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும், ஜாதி சான்றிதழ்களை சரிபார்க்க, மண்டல அலுவலகங்களை, தமிழக அரசு அமைக்கிறது.வருவாய் துறையினரிடமிருந்த, எஸ்.சி., - எஸ்.டி., சான்றிதழ்கள் வழங்கும் பணி, இதன் மூலம் காவல் துறைக்கு மாற்றப்படுகிறது. "போலி சான்றிதழ்களைத் தடுப்பதற்காக, இந்நடவடிக்கை' என்று, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.மண்டலங்கள்:எஸ்.சி., - எஸ்.டி., ஜாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள புதிய வழிகாட்டுதல்களின் படி, சென்னை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களை தலைமைஇடங்களாக கொண்டு, மண்டல அலுவலகங்கள் திறக்கப்படுகின்றன.

ஒவ்வொரு மண்டல அலுவலகத்திலும், ஒரு முதுநிலை, டி.எஸ்.பி., தலைமையில், ஒரு இன்ஸ்பெக்டர் அல்லது சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் நியமிக்கப்படுகின்றனர்.மாநிலம் மற்றும் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்கப்படும், எஸ்.சி., - எஸ்.டி., ஜாதி சான்றிதழ் கோரும் விண்ணப்பங்கள், மண்டல அலுவலகத்துக்கு பரிந்துரைக்கப்படும்.மண்டல அலுவலகத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் அல்லது சப்-இன்ஸ்பெக்டர், விண்ணப்பதாரரின் முகவரிக்கு சென்று, விவரங்களை சேகரித்து, விண்ணப்பத்தின் உண்மைத் தன்மையை, மாநிலம் மற்றும் மாவட்ட வருவாய் துறை அதிகாரி களுக்கு அனுப்பி வைப்பார். பயிற்சி:இந்த பரிந்துரையின் அடிப்படையில், எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பணிகளுக்கு நியமிக்கப்படும் போலீசார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனரின் கீழ் பணிபுரிவர்.இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் குறித்து, ஊட்டியில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:எஸ்.சி., - எஸ்.டி., சான்றிதழ் கோரும் விண்ணப்பங்களின் உண்மைத் தன்மையை அறிய, மாநில அளவில் உள்ள கண்காணிப்புக் குழு ஆய்வு செய்கிறது. இதற்கு, நீண்ட காலமாவதோடு, விண்ணப்பதாரரின் விவரங்களை முழுமையாகவும் கண்டறிய முடிவதில்லை.

இதற்காக, சுப்ரீம் கோர்ட் அளித்து உள்ள வழிகாட்டுதல்கள் படி, மண்டல அளவில் மையங்கள் அமைக்கப்படுகின்றன.இம்மையங்களில் நியமிக்கப்படுவோருக்கு, எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினர் பற்றிய முழுவிரங்களை அறிந்து கொள்ள, முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனால், உரிய சான்றிதழ் வழங்குவது எளிதாகும்.தாற்காலிக சான்று இப்புதிய நடைமுறை மூலம், எஸ்.சி., - எஸ்.டி., ஜாதி சான்றிதழ்கள் வழங்க ஏற்கனவே இருக்கும் நடைமுறை கைவிடப்படும். புதிய முறையில், சான்றிதழ்கள் பெற, குறைந்தது ஒரு மாதமாகும். இதனால், ஏற்படும் பாதிப்பைத் தடுக்க, தற்காலிக சான்றிதழ் முதலில் வழங்கப்படும். மண்டல அலுவலகம்;பரிந்துரையில் அளிக்கப்படும் சான்றிதழ்களே இறுதியானது.

தண்டனை:சான்றிதழ் கோருபவர் பொய்யான தகவல்களை அளித்தால், அவர் இந்திய தண்டனை சட்டத்தில் தண்டிக்கப்படவும், மண்டல அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.பொய்யான தகவல்கள் கொடுத்தது உறுதி செய்யப்பட்டால், அவர் உள்ளாட்சி, சட்டசபை, பார்லிமென்ட் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கப்படும். மண்டல அலுவலகங்கள் ஏற்படுத்தவும், போலீசாரை நியமிக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.-

மூவர்ண தேசிய கொடிகளை பிளாஸ்டிக்கில் தயாரிக்க தடை

  சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின கொண்டாட்டங்களின் போது, பயன்படுத்தப்படும் மூவர்ண கொடிகளை, பிளாஸ்டிக்கில் தயாரிப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. "பேப்பரினால் தயாரிக்கப்பட்ட மூவர்ண கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின கொண்டாட்டங்களின் போது, பொதுமக்கள், மார்பில் அணிந்து கொள்வதற்காக, பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட சிறிய மூவர்ண கொடிகள் விற்பனை செய்யப்பட்டன.

மேலும், சிறு சிறு கொடிகள், மற்றும் தோரணம் கட்டுவதற்கும், பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட மூவர்ண கொடிகள் பயன்படுத்தப்பட்டன. பிளாஸ்டிக்கினால் தயாரிக்கபட்ட பொருட்களை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும்படி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து, உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து பகுதிகளில், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க உத்தரவிடப்பட்டது.இதற்கு,பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, பிளாஸ்டிக்கினால் மூவர்ண கொடிகளை தயாரிப்பதற்கு தடை விதித்துள்ளது. சுதந்திர தினவிழா மற்றும் குடியரசு தினவிழா கொண்டாட்டங்களின் போது, பேப்பரினால் தயாரிக்கப்பட்ட மூவர்ண கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அந்த உத்தரவில், "விழா முடிந்ததும், சிறிய கொடிகளை, கீழே எறியவோ, கிழிக்கவோ கூடாது. இது தேசிய கொடியை அவமதித்ததாகும்' என குறிப்பிட்டுள்ளது.

Saturday, November 03, 2012

பள்ளி கல்வி அலுவலர்,செயலர் சந்திப்பு

டி.இ.டி., தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு கிடையாது:ஏப்ரல் அல்லது ஜூனில் மீண்டும் தேர்வ

டி.இ.டி நேற்றிரவு வெளியிடப்பட்ட நிலையில், தகுதி மதிப்பெண் குறைப்பிற்கு வாய்ப்பு கிடையாது' என, துறை வட்டாரங்கள், உறுதியாக தெரிவித்தன. அடுத்த டி.இ.டி., தேர்வு, ஏப்ரல் அல்லது ஜூனில் நடக்கும் எனவும், துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டும் எனில், டி.இ.டி., எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வில், குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும்.

150 மதிப்பெண்களுக்கு நடக்கும் தேர்வில், 90 மதிப்பெண்கள் எடுத்தால், பணி நியமனத்திற்கு தகுதி பெறுகின்றனர். ஆனால், தேவையை விட, அதிகமானோர் தேர்ச்சி பெற்றால், மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படுவர். ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெறுவதே, குதிரைக் கொம்பாக இருந்தது. 6.67 லட்சம் பேர் எழுதியதில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால், தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களை பெற்றாலே, வேலை உறுதி என்பது தான், தற்போதைய நிலை.

இந்நிலையில், தேர்ச்சி சதவீதம் குறைந்தால், ஆசிரியர்களை தேர்வு செய்வதில், பெரும் சிக்கல் எழும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக, சட்டசபையில் பேசிய, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, ""தேர்ச்சி சதவீதத்தின் நிலையைப் பொறுத்து, முதல்வர், உரிய நடவடிக்கை எடுப்பார்,'' என, தெரிவித்தார். இதனால், தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படுமோ என்ற, எதிர்பார்ப்பு எழுந்தது.ஆனால், நேற்று வெளியான தேர்வு முடிவில், 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். "முதல் தாள் தேர்வில், தேவையை விட, 3,000 பேர் கூடுதலாகவும், இரண்டாம் தாள் தேர்வில், பற்றாக்குறை நிலை இருந்தாலும், தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு கிடையாது' என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து, துறை வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:

இடைநிலை ஆசிரியர், 7,000 பேர் தேவை. ஆனால், 10 ஆயிரத்து, 397 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர், 20 ஆயிரம் பேர் தேவை. இதில், 8,849 பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றுள்ளனர்; இதில், பற்றாக்குறை உள்ளது. எனினும், ஏப்ரல் அல்லது ஜூனில் நடக்கும், அடுத்த டி.இ.டி., தேர்வு மூலம், பற்றாக்குறை சரியாகிவிடும். எனவே, தகுதி மதிப்பெண்களை குறைக்கும் எண்ணம் இல்லை.இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.-

டி.இ.டி., மறு தேர்வு முடிவு:அறிய முடியாமல் தேர்வர்கள் ஏமாற்றம்

டி.இ.டி., மறுதேர்வு முடிவை, இணையதளத்தில் அறிய முடியாமல், தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான, டி.இ.டி., தேர்வு, ஜூலையில் நடந்தது. அத்தேர்வில் பங்கேற்ற, 6.67 லட்சம் பேரில், வெறும், 0.33 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால், அக்டோபர், 14ம் தேதி, டி.இ.டி., மறுதேர்வு நடத்தப்பட்டது.

இத்தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் இரவு, டி.ஆர்.பி., இணையதளத்தில் (தீதீதீ.tணூஞ.tண.ணடிஞி.டிண) வெளியிடப்பட்டதாக, அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று, இத்தேர்வு முடிவை அறிய முடியாமல், லட்சக்கணக்கான தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இதுகுறித்து, புதுச்சேரியைச் சேர்ந்த தேர்வர் ஒருவர் கூறுகையில், ""தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தகவலை, நேற்று காலை, நாளிதழ் மூலம் அறிந்தேன். உடனே, என் தேர்வு முடிவை அறிய, டி.ஆர்.பி., இணையதளத்தை தொடர்பு கொண்டேன். பலமுறை முயன்றும், தேர்வு முடிவை அறிய முடியாததால், ஏமாற்றம் அடைந்தேன்,'' என்றார்.டி.ஆர்.பி., நிர்வாகிகள் கூறுகையில், ""நேற்று, ஒரே நேரத்தில், லட்சக்கணக்கானோர், வாரியத்தின் இணையதளத்தை தொடர்பு கொண்டதால், இந்த சிக்கல் ஏற்பட்டது. இந்த தொழில்நுட்ப சிக்கலை சரிசெய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

இன்று, தேர்வர்கள், தங்கள் தேர்வு முடிவை, இணையதளத்தில் காணலாம். இவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி, வரும், 6ம் தேதி துவங்கும்,'' என்றனர்.

Half yearly Examination Time Table +2&SSLC

அரையாண்டு தேர்வு டிசம்பர் 19ம் தேதி துவக்கம்

் தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புக்கான அரையாண்டு பொதுத் தேர்வுகள் டிசம்பர் 19ம் தேதி துவங்குகின்றது. பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 19ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 19ம் தேதி முதல் ஜனவரி 07ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகிறது.

மாணவர்கள் தேர்வு அறைக்கு 10 நிமிடம் முன்னதாகவே வர வேண்டும். காலை 10 மணிக்கு தேர்வுக்கான வினாத்தாள் வழங்கப்படும். 10 நிமிடம் வினாத்தாளை வாசிப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் விடைத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பதிவு செய்வதற்கும் நேரம் வழங்கப்படும். 10.15 முதல் 1.15 வரை மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணையை பார்க்க  

Thursday, November 01, 2012

இளங்கலை, முதுகலை பட்ட படிப்புகளில் அதிக சீர்திருத்தம்: அறிமுகமாகிறது செய்முறை, எழுத்து தேர்வ

ுஇளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முறையில், அடுத்த கல்வி ஆண்டில், பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. செய்முறைத் தேர்வுக்கு, 40 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வுக்கு, 60 மதிப்பெண்கள் என, பிரித்து வழங்கவும், மொழிப் பாடங்களில், அறிவை மேம்படுத்துவதற்கு, பல புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட உள்ளன .

அதிகாரிகள் கூட்டம் : தமிழக அரசு பல்கலைகளின், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் கூட்டம், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தலைமையில், நேற்று முன்தினம், சென்னையில் நடந்தது. தமிழ்நாடு உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் மற்றும் சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை உள்ளிட்ட, பல்வேறு பல்கலைகளின், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள், கூட்டத்தில் பங்கேற்றனர். இளங்கலை, முதுகலை தேர்வுகளில், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருவது குறித்து, கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. பாட வாரியாக வழங்கப்படும், 100 மதிப்பெண்களை, செய்முறைத் தேர்வுக்கு, 40, எழுத்து தேர்வுக்கு, 60 என, பிரித்து வழங்குவது என, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. வருகைப் பதிவேடு, செய்முறைப் பதிவேடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், 40 மதிப்பெண்களையும், எழுத்துத் தேர்வுக்கு, 60 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. இதில், தேர்ச்சிக்குரிய, 40 மதிப்பெண்களைப் பெற, செய்முறைத் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட, 40ல், குறைந்தபட்சம், 16 மதிப்பெண்களும், எழுத்து தேர்வுக்கான, 60 மதிப்பெண்களில், குறைந்தபட்சம், 24 மதிப்பெண்களும் பெற வேண்டும் என, முடிவு எடுக்கப்பட்டது. முதுகலையிலும், இதே நடைமுறை அமல்படுத்தப்படும் எனவும், அதில் தேர்ச்சி பெற, செய்முறைத் தேர்வில் குறைந்தபட்சம், 20 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வில், குறைந்தபட்சம், 30 மதிப்பெண்களும் பெற வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது.

ஆங்கிலத்தில் கவனம் : ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடத்தில், அறிவை மேம்படுத்துவதற்கு, வாசித்தல், குழு விவாதம் உள்ளிட்ட, பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக, பட்டப் படிப்புகளுக்குப் பின், வேலை வாய்ப்புகளைப் பெற, ஆங்கிலத்தில், தகவல் தொடர்புத் திறன் அவசியமாக இருப்பதால், இதில் அதிக கவனம் செலுத்த, உயர்கல்வி துறை திட்டமிட்டுள்ளது. பல்கலைகளின் பாடத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக, ஒரு கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. பாடத் திட்டங்களை, எந்தெந்த வகையில் மேம்படுத்துவது என்பது குறித்து, விரிவாக விவாதித்து, ஆய்வு செய்து, உரிய பரிந்துரைகளை செய்ய, தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும், கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பான அரசின் முடிவு, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், உயர்கல்வி துறை மானியக் கோரிக்கையின் போது, அறிவிப்பாக வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது..

என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்

் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: 2011-12ம் கல்வியாண்டில் 7ம் வகுப்பு பயின்று முழு ஆண்டுத் தேர்வில், பொதுப்பிரிவு மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களும்,  எஸ்சி. எஸ்டி மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இன்று முதல் செப்.,9ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் மாணவர்களிடமிருந்து பெற்று அப்பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் சேர்ந்து தேர்வுக் கட்டணம் ஒரே செலுத்துச் சீட்டில் செப்.,12ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும் விரிவான தகவல்கள் அறிய www.dge.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Forms avail www.tnptfmani.blogspot.com

மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை உயர்வு

14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லாத காஸ் சிலண்டர் விலை ரூ. 26.50 உயர்த்தப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள விலையேற்றத்தின்படி டில்லியில் ரூ.895.50 ஆக இருக்கும் ஒரு சிலிண்டரின் விலை இனி ரூ.922 ஆக உயர்த்தப்பட உள்ளது. இது மானிய விலை சிலிண்டரின் விலையான ரூ.410.42 ஐ விட இருமடங்காகும்.

NMMS -Exams application form

DGE: Application for National Means cum Merit Scholarship Exam 2013