இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, September 18, 2012

மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக பணி வழங்க உத்தரவு

   டி.என்.பி.எஸ்.சி., மூலம் கடந்தாண்டு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, உடனே பணி வழங்க, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) மூலம், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குரூப்-4 தேர்வு, கடந்தாண்டு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்களை, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட துறைகளில் பணியமர்த்தாமல், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மறுத்தனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள், தமிழக அரசு மற்றும் டி.என்.பி.எஸ்.சி.,யிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, தமிழக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலர் குற்றாலிங்கம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடந்த, 12ம் தேதி, கடிதம் அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் விதி 22ன் படி, பணியாளர் தேர்வாணையம் மூலம், தேர்வு செய்யப்பட்ட பார்வையற்றவர்களை பணியமர்த்த மறுப்பது, அரசு விதிகளுக்கு எதிரானது.

எனவே, உடனடியாக அவர்களை பணியமர்த்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Monday, September 17, 2012

40% Physically Challenged? No profession tax from 01.10.2012

From October 1, persons living with 40 per cent disability in Tamil Nadu would be exempted from paying profession tax.

“The Tamil Nadu Municipal Laws (Third Amendment) Act, 2012, which provides for the exemption will come into force from October

1. We have also suitably amended the respective Municipal Corporation Acts of Chennai, Madurai and Coimbatore to give effect to this privilege for disabled employees and traders,” a Municipal Administration and Water Supply Department official said.

“At present, differently-abled persons with total disability in one or both hands or legs, spastics, totally speech-impaired or hearing-impaired persons or totally visually-impaired persons alone are exempted from the payment of profession tax, as per the provisions of the Urban Local Bodies Acts.

In the absence of specific definition of disability in the said Acts, all the differently-abled persons are not in a position to avail the said benefit,” an official quoting the TN Municipal Laws (Third Amendment) Bill said.

According to the official, the Act had to be amended as the present law was ambiguous on exempting differently abled from paying the half-yearly profession tax. Now, “persons with disability, suffering from not less than 40 per cent of such disability, as certified by a Medical Practitioner in service of the Government not below the rank of Civil Surgeon, shall be exempt from profession tax,” he added.

ஜாதி வாரி கணக்கெடுப்பு: அக்., 2ல் பட்டியல் வெளியீடு  

தமிழகத்தில் நடந்த ஜாதி வாரி கணக்கெடுப்பு, முடிவுக்கு வந்துள்ளது. அக்., 2ம் தேதி, கிராம சபை ஒப்புதலுக்கு வைக்கப்படவுள்ளது.

ஜாதி வாரி கணக்கெடுப்பு பணி, மே 24ம் தேதி துவங்கியது. அரசு ஊழியர்களுடன், பெல் நிறுவனத்தின் பணியாளர்களும் இணைந்து, "டேப் லெட்' கம்ப்யூட்டர் உதவியுடன் இப்பணியை நடத்தினர்; சில இடங்களில், கம்ப்யூட்டர்களை இயக்க, மாணவர்கள் பயன்படுத்தப்பட்டனர். இப்பணி, மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை ஆதாரமாகக் கொண்டு நடந்தது.

எடுக்கப்பட்ட தகவல்கள், தினமும், "ஆன்-லைன்' மூலம் பதிவு செய்யப்பட்டன. இவ்விவரங்கள் முழுமையாக இல்லாததால், பட்டியலை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. ஆய்வு குறித்த விவரங்கள் சரிதானா என, மேற்பார்வையாளர்களால், வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்யப்பட்டது. இதனால், திட்டமிட்டபடி 40 நாட்களில் முடிக்க வேண்டிய பணி, தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

கணக்கெடுப்பு குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க பொது மக்களுக்கு, இம்மாத இறுதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அதன் பின், தயாரிக்கப்படும் இறுதி பட்டியல், அக்., 2ம் தேதி, கிராம சபை கூட்டத்தில், மக்களின் அங்கீகாரத்திற்காக வைக்கப்பட உள்ளது.

டி.இ.ஓ.,க்கள் 29 பேருக்கு பதவி உயர்வு: 8 பேர் அதிரடி மாற்றம்  

  பள்ளிக் கல்வித் துறையில், 29 மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டனர். எட்டு முதன்மைக் கல்வி அலுவலர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இவர்கள் இல்லாமல், காஞ்சிபுரம், நாமக்கல், நாகை, தேனி உள்ளிட்ட எட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தேனி சி.இ.ஓ., ரவிச்சந்திரன், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட துணை இயக்குனர் பணியிடத்தில் நியமிக்கப்பட்டார்.

மேலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 29 பேரை, மாவட்டக் கல்வி அலுவலர்களாக (பொறுப்பு) நியமித்தும், பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டார்.

அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் தயக்கம்: மாணவர் எண்ணிக்கை சரிகிறது  

     தமிழகத்தில் உள்ள துவக்கப் பள்ளிகளில், வசதி வாய்ப்புகளும், ஆசிரியர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தாலும், மாணவர் எண்ணிக்கை, ஆண்டுக்காண்டு சரிந்து கொண்டே வருகிறது. இதே நிலை நீடித்தால், பாதிக்கும் மேற்பட்ட அரசு துவக்கப் பள்ளிகளுக்கு, மூடுவிழா நடத்த வேண்டிய சூழல் உருவாகும்.

தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அரசு மற்றும் உதவி பெறும் துவக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. துவக்கக் கல்வியை தரமானதாக்க, உலக வங்கி உதவியுடன், பத்து ஆண்டுகளுக்கு முன், அனைவருக்கும் கல்வி இயக்கம் துவங்கப் பட்டது.இத்திட்டம் துவக்கப்படும் முன், அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், வகுப்பறை, கழிவறை, குடி நீர் வசதிகள் குறைவாகவும் இருந்தது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் செயல்பாடுகளால், அனைத்து பள்ளிகளிலும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.கல்வி முறையும் மாற்றி அமைக்கப்பட்டு, மாணவர்கள் தாமாகவே கற்றுக் கொள்ளும், செயல்வழிக் கற்றல் முறையும் அறிமுகப் படுத்தப்பட்டது.

ஏராளமான துவக்கப் பள்ளிகள் துவங்கியதுடன், புதிய ஆசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டன. நாற்பது மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலையை மாறி, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலை உருவானது.

கடந்த பத்து ஆண்டுகளில், துவக்கப் பள்ளிகளின் நிலை, எதிர்பார்த்த அளவிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால், மாணவர் சேர்க்கையோ, தலைகீழாக உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சியில், ஆண்டுக்கு, 11.72 சதவீத வளர்ச்சி இருக்கும் நிலையில், துவக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த, 2004 - 05ல், 62 லட்சமாக இருந்த மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, தற்போது, 58 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அப்போது, 41:1 என்றிருந்த ஆசிரியர் மாணவர் விகிதம், தற்போது, 27:1 என்ற நிலைமைக்கு மாறியுள்ளது. துவக்கப் பள்ளிகளில், ஓய்வுபெறும் பணியிடங்களையும், பணி நிரவல் செய்வதன் மூலமே நிரப்பிவிடும் நிலை உள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள, அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை கடும் சரிவை சந்தித்துள்ளது.

20ம் தேதி நடைபெறும் காலாண்டு தேர்வுகள் ரத்து

    வரும், 20ம் தேதி, "பந்த்' நடைபெறவுள்ளதால், மாநிலம் முழுவதும், பள்ளிகளில் நடக்கும் காலாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரும், 20ம் தேதி, தேசிய அளவில், "பந்த்' நடத்த, எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. பள்ளிகளில், காலாண்டுத் தேர்வுகள் தற்போது நடந்து வருவதால், "பந்த்' அன்று மாணவ,மாணவியர், பள்ளிகளுக்கு செல்வதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அன்று நடைபெறும் தேர்வினை, வேறு தேதியில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு, தமிழக அரசு அறிவித்துள்ளதால், 20ம் தேதி நடைபெறவிருந்த காலாண்டுத் தேர்வுகள், ரத்து செய்யப்பட்டுள்ளன.

கல்வி துறை அதிகாரிகள் மாற்றம்  

    பள்ளிக் கல்வித் துறையில், இணை இயக்குனர்கள் இருவர், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக இருந்த கண்ணப்பன், பணியாளர் தொகுதி இணை இயக்குனராக மாற்றப்பட்டார்.

பணியாளர் தொகுதி இணை இயக்குனராக இருந்த ராஜ ராஜேஸ்வரி, இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டார். இருவரும், புதிய பொறுப்புகளை ஏற்றனர்.

Education Secretary Procedings for Declare Holiday

Sunday, September 16, 2012

டி.இ.டி., தேர்வு தள்ளி போகுமா?  

      டி.இ.டி., மறுதேர்வு, அக்., 3ம் தேதி நடக்குமா அல்லது தள்ளிப் போகுமா என, தெரியாததால், தேர்வர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஜூலை, 12ம் தேதி நடந்த, ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.,) எழுதிய, 5.5 லட்சம் பேரில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்வில் தோல்வி அடைந்தவருக்கு, அக்., 3ல், மறுதேர்வு நடத்தப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

"அக்டோபரில் நடக்கும் தேர்வில், புதிய தேர்வர் பங்கேற்க முடியாது' என, டி.ஆர்.பி., ஏற்கனவே அறிவித்தது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இம்மனுவிற்கு விரிவாக பதிலளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 17ம் தேதிக்கு கோர்ட் தள்ளி வைத்தது. தேர்வு தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென புதிய தேர்வர்களை அனுமதித்தால், புதிதாக விண்ணப்பம் வழங்குவது, கூடுதலாக கேள்வித்தாள் அச்சடிப்பது என, பல்வேறு பணிகளை, டி.ஆர்.பி., செய்ய வேண்டியிருக்கும்.

இப்பிரச்னை குறித்து, தமிழக அரசுடன், டி.ஆர்.பி., அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த குழப்பங்களால், அக்., 3ல், திட்டமிட்டபடி டி.இ.டி., தேர்வு நடக்குமா என்ற குழப்பத்தில், தேர்வர்கள் தவித்து வருகின்றனர்.

Student Smart Card Form -EMIS Scheme 2012-13 for 1-8th Std

மாணவர்களுக்கு திறனறிதல் தேர்வு  

       தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, செப்., 21 ல் திறனறிதல் தேர்வு நடத்த பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் பள்ளிகளில், தற்@பாது அர”ப் பள்ளி களைப் @பால், 9, 10 வகுப்பு மாணவர்களுக்கும் திறனறிதல் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த தேர்வு கொள்குறி வகையில்(அப்ஜெக்டிவ் டைப்) இருக்கும். தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில், ஆசிரியர்கள் நடத்திய பாடத்தில் இருந்து, மிகவும் அடிப்படையான கேள்விகள் இருக்கும்.

இம் மாதம் 21ல் தேர்வு நடக்கிறது. இதன் அடிப்படையில், கற்பித்தில் திறனை மேம்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படு

மேலும் 3 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: சிவபதி  

திருச்சியில் நடந்த முதுகலை ஆசிரியர் நியமனத்திற்கான நியமன கலந்தாய்வு நடந்தது. இதில் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் பதிவு மூப்பு அடிப்படையில் மாநில அளவில் 1080 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிஇடங்களுக்கான நியமனத்திற்கான கலந்தாய்வு நடந்தது.

இதில்‌ நேற்று 397 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இன்று திருச்சியில் முன்முறையாக ஆன்லைன் வாயிலாக அந்தந்த மாவட்டங்களுக்கான இடங்களுக்கு 683 பேர் உத்தரவு பெற்றனர். இதற்கான பணிநியமன ஆணையினை அமைச்சர் சிவபதி , வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிகல்வித்துறை இயக்குனர் தேவராஜன், துணை இயக்கனர் உமா உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் சிவபதி பேசுகையில், ‌உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் 100 சதவீதி தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும். மேலும் 3 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டுகளில் 59 ஆயிரம் பணியிடங்களில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்பட்டனர். இதற்காக ரூ. 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்றார்.

Saturday, September 15, 2012

அரசாணை எண் 229, பள்ளிக்கல்வி உயர்/மேல் நிலை பள்ளி மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப 6872 பட்டதாரி பணியிடங்கள் அனுமதித்து ஆணை

30.9.2011 அன்றுள்ள மாணவர் விகிதப்படி பட்டதாரி பணியிட விபரம் :

தமிழ்- 450

ஆங்கிலம் -3000

கணிதம்-50

அறிவியல் -500

சமூக அறிவியல்-2872

மொத்தம்-6872

பணி ஒப்புதல் அளித்து ஆணையிடப்படுகிறது
*18000 ஆசிரியர் பணியிடங்கள்  டி.ஆர்.பி மூலம் நிரப்பப்படும் போது இந்த 6872 பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படும்

NMMS Exam Nov 2011 Tirupur Schools selected List

6,000 கூடுதல் ஆசிரியர் இடங்களுக்கு அனுமதி  

காலிப் பணியிடங்கள் மற்றும் மாணவ, மாணவியரின் அதிக எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், கூடுதலாக, 6,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான அரசாணை, நேற்று முன்தினம் வெளியாகி உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது. கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில், இந்தக் கூடுதல் ஆசிரியர் நியமிக்கப்படுவர். ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில், 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியரைத் தேர்வு செய்ய உள்ளது. அப்போது, இந்தக் கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படும் எனத் தெரிகிறது.

ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் உடனடியாக அமலாகிறது  

மானிய விலையில், ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, உடனடியாக அமலுக்கு வரும் என, தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததை அடுத்து, பெட்ரோலிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. டீசல், சமையல் காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் ஆகியவற்றை, மானிய விலையில் விற்பதால், நடப்பு நிதியாண்டில் மட்டும், எண்ணெய் நிறுவனங்களுக்கு, 32 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, எண்ணெய் நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன. இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன், டீசல் விலை, லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டது.

சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படா விட்டாலும், மானிய விலையில் சிலிண்டர் வினியோகம் செய்வதற்கு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. இதன்படி, ஒரு குடும்பத்துக்கு, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் கொடுக்கப்படும் என்றும், மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

தற்போது, சிலிண்டர் ஒன்றுக்கு, 347 ரூபாய் வரை, எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதால், இதைத் தவிர்க்கும் வகையில், இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. ஆனாலும், இந்த கட்டுப்பாடு, எப்போதிருந்து அமலுக்கு வரும் என்பது பற்றிய, அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், "சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்துக்கான கட்டுப்பாடு, உடனடியாக அமலுக்கு வரும்.

மானிய விலையில் அல்லாமல், சந்தை விலையில் வழங்கப்படும் காஸ் சிலிண்டர்களின் விலை குறித்து, சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப, மாதம் தோறும் அறிவிப்பு வெளியிடப்படும்,' என்றன.

டெபிட்கார்டு-கிரெடிட்கார்டு தேவையில்லை: செல்போன் மூலம் ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம

     ரெயில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கு பல்வேறு வசதிகள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இன்டர்நெட் மூலமாக டெபிட்கார்டு அல்லது கிரெடிட் கார்டு வழியாக பணத்தை செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

தற்போது புதிதாக ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இல்லாமல் செல்போன் மூலம் ரெயில் முன்பதிவு செய்யலாம். இண்டர் பேங்க் மொபைல் பெய்மெண்ட் (ஐ.எம்.பி.எஸ்) மூலம் இந்த வசதி அளிக்கப்படுகிறது.   இந்த திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி. கொண்டு வந்துள்ளது.

செல்போன் மூலம் வங்கிகளுக்கு இடையே பணம் செலுத்தும் வசதியை ஐ.எம்.பி.எஸ் அனுமதித்துள்ளது. ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு கம்ப்யூட்டர் தேவையில்லை. செல்போன் எஸ்.எம்.எஸ். மூலமாக வாடிக்கையாளர் கணக்கில் உள்ள பணம் டிக்கெட் கட்டணத்திற்காக பிடித்தம் செய்து கொள்ளப்படும். இந்த திட்டத்தில் ரூ.5000 வரை பணம் பரிமாற்றம் செய்ய ரூ. 5 கட்டணமும் அதற்கு மேலான நடவடிக்கைக்கு ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  

இந்த வசதியை பயன்படுத்த விரும்புவர்கள் செல்போன் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை ஐ.எம்.பி.எஸ்-ல் பதிவு செய்ய வேண்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக என்னென்ன வசதிகளை பெற முடியுமோ அத்தனை வசதிகளையும் செல்போன் மூலம் பெற முடியும்.  
இன்டர்நெட் வசதி, மற்றும் கம்ப்யூட்டர் இல்லாமல் மிக எளிதாக செல்போன் மூலம் பயணத்திற்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

அக்டோபரில் நடைபெறும் அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செப்.18 கடைசி நாள்

     மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஒ.எஸ்.எல்.சி. (பழைய பாடத் திட்டம்) ஆகியவற்றுக்கு வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செப்.18-ம் தேதி கடைசி நாளாகும்.  

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் சு. லட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி. ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் முறை கடைபிடிக்கப்படவில்லை.  மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள்ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.  

மெட்ரிக் தேர்வர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திருச்சி, காஜா நகர், அரபிக் கல்லூரி தெருவில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.  ஆங்கிலோ இந்தியன் தேர்வர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மண்டல துணை இயக்குநர், அரசுத் தேர்வுகள், டி.பி.ஐ. வளாகம், கல்லூரிச் சாலை, சென்னை -6 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.  ஒ.எஸ்.எல்.சி. தேர்வர்கள் விண்ணப்பிக்க இடைநிலைக் கல்விப் பொதுத் தேர்வுக்குப் இதுவரைப் பயன்படுத்தப்பட்டு வந்த வெற்று விண்ணப்பங்களை திருச்சி அரசுத்தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து பெற்று, பூர்த்தி செய்து உரிய உள்ளடக்கங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.  

அனைத்துத் தேர்வர்களுக்கும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க செப்.18-ம் தேதி கடைசி நாளாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Friday, September 14, 2012

ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு நடத்த முடியாது என்று சென்னை ஐ கோர்ட்டு கூறியுள்ளதால், அக்டோபர் 3-ந்தேதி ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  

  தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமும், இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு அடிப்படையிலும் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.   கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வை நடத்தி நியமனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து தமிழக அரசும், ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வை நடத்த அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அதன்பின் நடக்கும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டோ, பதிவு மூப்பு அடிப்படையிலோ நியமனம் பெறமுடியும் என்ற நிலை ஏற்பட்டது.   இதற்கு ஆசிரிய பட்டதாரிகள் (பி.எட். பட்டம் பெற்றவர்கள்) எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களுக்கு நியமனமே போட்டித் தேர்வின் மூலம் நடக்கும் போது, மற்றொரு தேர்வு எதற்கு என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.   இதையடுத்து ஆசிரிய பட்டதாரிகள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலே பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது. இதன்படி கடந்த ஜூலை மாதம் 12-ந்தேதி தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் தேர்வெழுதினர். இதில் பாடத்திட்ட குளறுபடி, தேர்வு எழுத கொடுக்கப்பட்ட கால அவகாசம் போன்ற காரணங்களால் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதில் 1,735 பேர் இடைநிலை ஆசிரியர்கள், 713 பேர் பட்டதாரிகள் ஆவார்கள். தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மட்டும் வருகிற அக்டோபர் மாதம் 3-ந்தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

தோல்வியடைந்தவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த கூடாது, புதிதாக தேர்வு எழுத விரும்புபவர்களையும் அனுமதிக்க கோரி சென்னையை சேர்ந்த யாமினி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.   இந்த வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட் நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு என்று மட்டும் தனியாக தேர்வு நடத்த முடியாது.

எனவே இதுகுறித்த விரிவான பதிலை வரும் 17-ந்தேதிக்குள் அரசு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.   தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும் தனியாக தேர்வை நடத்த முடியாது என்று ஐகோர்ட் கூறியிருப்பதால், புதிதாக தேர்வு எழுதுபவர்களை அனுமதித்து அக்டோபர் 3-ந் தேதிக்குள் தேர்வை நடத்துவதற்கு கால அவகாசம் போதாது. எனவே அக்டோபர் 3-ந்தேதி ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அடுத்த கட்டத்திற்கு முன்னேறியது தேர்வாணையம்: தேர்வுக்கு டெண்டர் வெளியீடு  

     "ஆன்-லைன்' வழி தேர்வு முறையை நடைமுறைப்படுத்துவதற்காக, டி.என்.பி.எஸ்.சி., நேற்று, "டெண்டர்' வெளியிட்டது.

"ஆன்-லைன்' தேர்வு முறையில், வெளிப்படைத்தன்மை, உயர்ந்த தரத்திலான தேர்வு நடைமுறைகள் மற்றும் தற்போதுள்ள காகித பயன்பாடு குறைப்பு, மிக விரைவாக தேர்வு முடிவு வெளியீடு உட்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என, தேர்வாணையம் தெரிவித்துள்ளது. கேள்வித்தாள், "லீக்' உள்ளிட்ட எந்தப் பிரச்னைகளும் ஏற்படாமல், தரமான முறையிலும், வெளிப்படைத்தன்மையை பிரதிபலிக்கும் வகையிலும், "ஆன்-லைன்' தேர்வு முறையை அமல்படுத்தப்போவதாக, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறியிருந்தார். இதற்காக, விரைவில், "டெண்டர்' வெளியிடப்படும் எனவும், அவர் தெரிவித்திருந்தார்.

"டெண்டர்' வெளியீடு:

இதைத் தொடர்ந்து, "ஆன்-லைன்' வழி தேர்வு முறையை அமல்படுத்துவதற்கான, "டெண்டர்' நேற்று, தேர்வாணைய இணையதளத்தில் (தீதீதீ.tணணீண்ஞி.ஞ்ணிதி.டிண) வெளியிடப்பட்டது. "டெண்டர்' விண்ணப்பத்தில், தேர்வாணையம் குறிப்பிட்டிருப்பதாவது:

சி.பி.டி., (கம்ப்யூட்டர் பேஸ்டு டெஸ்ட்) முறையில், "ஆன்-லைன்' வழியாக தேர்வை நடத்தும் அடுத்த கட்டத்திற்கு, தேர்வாணையம் செல்கிறது. தேர்வாணையத்தில் தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப பயன்பாடு என்பது மிகவும் குறைவு. பல முக்கியமான பணிகள், ஒவ்வொரு கட்டத்திலும், மனித சக்தியை கொண்டே நிறைவேற்றப்படுகிறது. அனைத்துப் பணிகளும், கணினிமயமாக்கப்படவில்லை.

இதனால், தேர்வு முடிவு வெளியிடுவதில், தேவையில்லாமல் அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

வெளிப்படைத்தன்மை: "ஆன்-லைன்' வழியிலான தேர்வு முறையில், உயர்ந்த தரத்தில் தேர்வை நடத்துவதுடன், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும். "ஆன்-லைன்' வழியிலான தேர்வு, தேர்வர் எண்ணிக்கையைப் பொறுத்து, ஒரு கட்டமாகவோ, பல கட்டங்களாகவோ நடக்கும்.

சி.பி.டி., முறையில் தேர்வை நடத்துவதற்கான வழிமுறை களில் கூறப்பட்ட அம்சங்கள்:

திட்டத்தை உருவாக்குதல், அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளை அளிப்பது, மென்பொருள் (சாப்ட்வேர்), வன்பொருள் (ஹார்டுவேர்) தொழில்நுட்பங்களை அளிப்பது, தேர்வு நடைமுறைகளை மேலாண்மை செய்வது. தகுதி வாய்ந்த நிறுவனம், "டெண்டர்' படிவத்தை பூர்த்தி செய்து, 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.