இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, August 20, 2012

பணிப்பதிவேட்டில் பிறந்த தேதி மாற்றப்பட்டு இருந்தாலும், அரசு ஊழியருக்கு உண்மையான பிறந்த தேதியின் அடிப்படையில் பணி ஓய்வு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் டி டு

பணிப்பதிவேட்டில் பிறந்த தேதி மாற்றப்பட்டு இருந்தாலும், அரசு ஊழியருக்கு உண்மையான பிறந்த தேதியின் அடிப்படையில் பணி ஓய்வு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.   நாகை மாவட்டம் மயிலாடுதுறை செம்பரன்கோவில் பஞ்சாயத்து யூனியன் அலுவலராக பணியாற்றியவர் டி.வி.அன்பழகன். 31.12.1946 அன்று பிறந்த அவர், 19.9.75 அன்று அரசு பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் கடந்த 31.7.2000 அன்று அவருக்கு பணி ஓய்வு வழங்கப்பட்டது. 31.12.46 அன்று பிறந்திருந்ததால், அன்பழகனுக்கு 31.12.04 அன்று பணிஓய்வு கொடுத்திருக்க வேண்டும்.   எனவே இதுகுறித்து அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். வங்கி கடன் பெறுவது தொடர்பாக தனது சம்பள சான்றிதழை வாங்கியதாகவும், அதைப் பார்த்தபோதுதான் தனது பிறந்தநாள் தவறாக 4.7.1942 என்று பணிப்பதிவேட்டில் மாற்றப்பட்டு இருந்தது தெரியவந்ததாகவும் கூறியிருந்தார். இந்த வழக்கு ஏற்கப்படாமல் கீழ்க்கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.   அந்த உத்தரவை எதிர்த்து அன்பழகன் மயிலாடுதுறை கூடுதல் சப்-கோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்வதற்கு அன்பழகனுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அன்பழகனின் வழக்கை தள்ளுபடி செய்து கீழ்க்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவும் தள்ளுபடி செய்யப்பட்டது.   இந்த உத்தரவை எதிர்த்து நாகை மாவட்ட கலெக்டர், செம்பரன்கோவில் பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் ஆகியோர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி எஸ்.விமலா விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-   அன்பழகன் 16.4.01 அன்று சிவில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனது பிறந்த தேதியை பணிப்பதிவேட்டில் மாற்றியிருப்பது சட்ட விரோதம் என்றும், உண்மையான பிறந்த தேதியை ஏற்றுக்கொண்டு தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.   ஆனால் இதற்கு கலெக்டர் மற்றும் பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆரம்பத்தில் அன்பழகன் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் பணிப்பதிவேட்டில் அவரது பிறந்தநாளை 4.7.42 என்று பதிவு செய்தோம். ஓய்வு பெறும்போது, இப்படி வழக்கு தாக்கல் செய்வது தற்போது அரசு ஊழியர்களிடையே வழக்கமாக உள்ளது. பிறந்தநாள் மாற்றம் குறித்த கோரிக்கைகளை, பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்குள் கொடுத்திருக்க வேண்டும்.   தனது பிறந்த தேதியை யாரோ திருத்திவிட்டார்கள் என்று அன்பழகன் கூறுவது தவறு. எனவே அன்பழகனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.   இந்த கலெக்டர் மற்றும் கமிஷனர் தாக்கல் செய்துள்ள இந்த 2-வது அப்பீல் வழக்கைப் பொறுத்தவரை, அன்பழகன் கூறிய தேதியைத்தான் பணி ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனது வயதை உயர்த்தி பதிவு செய்வதற்கு அவருக்கு எந்த நிர்ப்பந்தமும் இருந்ததாக தெரியவில்லை.   வயதை அதிகரித்து பதிவு செய்தால், சீக்கிரமாக ஓய்வு பெற வேண்டியது இருக்கும். இதைத் தெரிந்த அறிவுள்ள எவராவது அப்படி வயதை கூட்டி பதிவு செய்வார்களா? எனவே கலெக்டர், கமிஷனர் கூறும் இந்த கருத்தை ஏற்க முடியாது.   பிறந்த தேதியை திருத்த வேண்டும் என்று அன்பழகன் கோரவில்லை. அதுபோன்ற கோரிக்கையைத்தான் தமிழ்நாடு பணிகள் விதிகளின்படி, பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்குள் வைக்க வேண்டும். அன்பழகனின் கோரிக்கை அதுவல்ல. இடையில் செய்யப்பட்ட தவறை மாற்றி, ஏற்கனவே பதிவு செய்த சரியான பிறந்த தேதியை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் அன்பழகனின் கோரிக்கை.   அன்பழகன் தாக்கல் செய்திருந்த பிறந்தநாள் சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ், தமிழ்நாடு அரசு மற்றும் பஞ்சாயத்து யூனியன் கொடுத்த உறுப்பினர் சான்றிதழ் ஆகியவற்றின் படி அவரது பிறந்த தேதி 31.12.46 தான். இதுதான் பின்னர் பணிப்பதிவேட்டில் 4.7.42 என்று மாற்றப்பட்டது அப்பட்டமாக தெரிகிறது. எனவே தேதி மாற்றம் குறித்து நிபுணர் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டிய தேவையில்லை.   அனைத்து ஆவணங்களும் கலெக்டர், கமிஷனரின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது அவர்களுக்கு தெரியாமல் பிறந்த தேதியை யார், எதற்கு மாற்றினார்கள் என்பதை அவர்கள்தான் கண்டறிய வேண்டும். இதற்கு அன்பழகன் பொறுப்பல்ல. ஆனால் அன்பழகனின் பிறந்த தேதி மாற்றப்படவில்லை என்று கலெக்டர், கமிஷனர் நிரூபிக்கவில்லை.   எனவே அவர்களின் அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது. 2003-ம் ஆண்டு கூடுதல் சப்-கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் சிறிது மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, பணி பதிவேட்டில் 4.7.42 என்று மாற்றப்பட்ட பிறந்த தேதியை நீக்கிவிட்டு 31.12.46 என்று பதிய வேண்டும். உண்மையான பிறந்த தேதியின்படி வரும் ஓய்வுநாள் வரையிலான பணபலன்களை அன்பழகனுக்கு கலெக்டர், கமிஷனர் வழங்க வேண்டும்.   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பி.எட்., படிப்பில் சேர மாணவியரிடம் ஆர்வமில்லை  


நடப்பு கல்வியாண்டு அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில், பி.எட்., படிப்புக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பி.எட்., பட்டதாரிகள், டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே, அரசு பணியில் சேர முடியும் என்ற, மத்திய அரசின் அறிவிப்பு, இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என, கருதப்படுகிறது. கடந்த காலங்களில், மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு இணையாக, பி.எட்., படிப்புக்கும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. குறிப்பாக, பெண்கள் மத்தியில், அதிக ஆர்வம் இருந்தது. பி.எட்., படித்து, அரசு பள்ளியில், ஆசிரியர் பணிக்கு சேர்ந்துவிட்டால், ஓய்வு பெறும் வரை, எவ்வித பிரச்னையும் இல்லை என்ற சூழ்நிலை, முன்பு இருந்தது. திறமையான ஆசிரியர்கள் மட்டும் பணியாற்ற, வழிவகுக்கும் வகையில், பி.எட்., முடித்தவர்களும், படிப்பவர்களும், ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) வெற்றி பெற்றால் மட்டுமே, அரசு பணியில் சேர முடியும் என, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது; தற்போது பணியில் இருப்பவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என, தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பணியில் உள்ள ஆசிரியர்களும், டி.இ.டி., தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில், டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள, அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில், பி.எட்., பிரிவில் 125, எம்.எட்., பிரிவில் 35 என, மொத்தம் 160 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டு, பி.எட்., படிப்பு மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், கடந்த 11ல் துவங்கியது; 18ல் நிறைவடைந்தது. 700க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்; கடந்த கல்வியாண்டில் 900க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.எதிர்காலத்தில், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில், ஆசிரியர் பணிக்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கல்வியியல் படிப்பில் சேர, மாணவியரிடம் ஆர்வம் குறைந்து வருவது, ஆசிரியர் சமுதாயத்தினரிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊதியத்தை நிர்ணயிக்கும்அரசு கல்வியியல் கல்லூரி முதல்வர் இந்திராணி கூறியதாவது: பெரும்பாலான பி.எட்., மாணவ, மாணவியர், அரசு வேலை பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக, கல்வி கற்கின்றனர். தகுதி மற்றும் திறமைவாய்ந்த ஆசிரியர்களை நியமிக்கும் நோக்கில், பி.எட்., பட்டம் பெற்றோர், ஆசிரியர் தகுதி தேர்விலும் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அரசு பணியில் சேர முடியும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது; தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. நடப்பு கல்வியாண்டில், அரசு கல்வியியல் கல்லூரி பி.எட்., மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பம் குறைந்துள்ளதற்கு, இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல், தகுதி மற்றும் திறமைவாய்ந்த ஆசிரியர்களுக்கு, தனியார் பள்ளிகளில், அதிக ஊதியம் வழங்கப்படுவது குறித்தும், சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். எதிர்காலத்தில், தகுதி மற்றும் திறமை கொண்டிருந்தால், அரசு பள்ளிகளைப் போன்றே, தனியார் பள்ளிகளிலும், அதிக ஊதியம் பெற வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

CCE FAQ&CLarifications

கால் பாத அளவு எடுக்க ஆசிரியருக்கு பயிற்சி


தமிழக அரசு அறிவித்துள்ள இலவச காலணி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த, பள்ளி மாணவ, மாணவியரின் கால் பாத அளவீடு எடுப்பது குறித்து, மாநில அளவில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் படி, 81 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியரின் சரியான கால் பாத அளவு மூலம், புதிய காலணிகள் தயாரிக்கப்படும். ஒன்று முதல், ஐந்தாம் வகுப்புக்கு முதல் பிரிவு எனவும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை இரண்டாம் பிரிவு எனவும், ஒன்பது முதல் 10ம் வகுப்பு வரை, "அடல்ட்&' என்ற மூன்றாம் பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. பள்ளி வகுப்பு ஆசிரியர்கள் மூலம், மாணவர்களின் கால் பாதத்தின் அளவு அளவீடு செய்ய கல்வி மாவட்டத்துக்கு இரண்டு ஆசிரியர்களுக்கு, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய காலணி பயிற்சி மையத்தில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இத்தகவல் பெறப்பட்டு, தேவையான காலணிகள் எண்ணிக்கை பட்டியலிடப்ப

பி.எட்., படித்தவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க கோரிக்கை


‘நூலகத்துறையில் பி.எட்., முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணியிடம் வழங்கவேண்டும்,” என நூலகத்துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநிலத்தில் 4,128 நூலகங்களில், 2,532 பேர் பணிபுரிகின்றனர். இது தவிர மாவட்டத்துக்கு 20 பேர் வீதம் தினக்கூலியாக பணியாற்றுகின்றனர். மாவட்ட அளவில் சீனியர் நூலகர்களே மாவட்ட அலுவலராக பணியாற்றுகின்றனர். இத்துறையில், காலியாக உள்ள இயக்குனர், இணை இயக்குனர் பணியிடங்களுக்கு நூலகத்துறையில் உள்ளவர்களை பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்காமல், கல்வித்துறையில் உள்ளவர்களை நியமிக்கின்றனர். கல்வித்துறையினர் போன்று சலுகைகள் கிடைக்காமல், நூலகத்துறை புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில், 1,762 கிளை நூலகங்களில் தலா ஒருவர் மட்டுமே பணிபுரியும் நிலை உள்ளது. ஊர்புற நூலக ஊழியர்களுக்கும், கிளை நூலகர் பணிகள் தரப்படுகின்றன. ஆனால் ஊதிய விகிதத்தில் வேறுபாடு உள்ளது. கவுன்சிலிங் மூலம் அருகில் உள்ள நூலகங்களுக்கு செல்ல அனுமதிக்கவேண்டும். அரசு நூலக துறை அலுவலர் சங்க மாநில அமைப்பு செயலாளர் செல்வம் கூறுகையில், கல்வி துறையின் கீழ் செயல்படுகிறோம். ஆனால் அரசு பள்ளிகளில் நூலகர் பணியிடம் நிரப்பும்போது, எங்களுக்கு முன்னுரிமை தரப்படுவதில்லை. இத்துறையில் பி.எட்., முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கவேண்டும், என்றார். ்

  பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிவிப்பு


தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் கூறியுள்ளதாவது: திங்கள் கிழமை மட்டும் பள்ளிகளில் காலை மைதானத்தில் கூடி நின்று இறைவணக்கம் செய்யவேண்டும். அதில், தமிழ்தாய் வாழ்த்து, கொடியேற்றம், கொடிப்பாடல், உறுதிமொழி, சர்வசமய வழிபாடு, திருக்குறள் விளக்கம், செய்திவாசித்தல், இன்றைய சிந்தனை, பிறந்தநாள் வாழ்த்து, ஆசிரியர் உரை ஆகியவை 20 நிமிடத்திற்குள் இருக்கவேண்டும்.  மதிய உணவு இடைவேளைக்கு முன், எளிய யோகா பயிற்சி, ஒழுக்ககல்வி, உடல்நலக்கல்வி, கலைக்கல்வி, சுற்றுச்சூழல், முதல் உதவி, தற்காப்பு விதிகள் கற்றுத்தர வேண்டும். மதிய உணவுக்கு பின், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை தமிழ், ஆங்கிலத்தில், இரண்டு சொற்கள் எழுத சொல்லவேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலத்தில் இரண்டு சொற்கள் வாக்கியமாக அமைக்கவேண்டும்.வெள்ளிக்கிழமை, மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு, பொன்மொழிகள், பழமொழிகள் கூறுதலை செய்யவேண்டும், என கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Sunday, August 19, 2012

கட்-ஆஃப் மதிப்பெண் உயர்வு: பிரதமர் கவலை


தொழில் நுட்ப படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் உயர்வு கவலை அளிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மும்பை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ஆண்டு தோறும் பல மாணவர்கள் ஐஐடியில் சேர விண்ணப்பிக்கும் நிலையில், மிகக் குறைந்தளவு மாணவர்களுக்கே வாய்ப்பு அளிப்பது மன வேதனையாக இருப்பதாக குறிப்பிட்டார். ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் இளைஞர்களுக்கு அதிக வாய்பை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும், உயர்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வியில் வாய்ப்புகளை அதிகரிக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக அஞ்சல் துறை அலுவலகங்களில் உள்ள 6 பிரிவுகளிலான போஸ்டல் அஸிஸ்டெண்ட் காலி இடங்கள

தமிழக அஞ்சல் துறை அலுவலகங்களில் உள்ள 6 பிரிவுகளிலான போஸ்டல் அஸிஸ்டெண்ட் காலி இடங்கள் 618ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள்: தமிழக அஞ்சல் துறையில் போஸ்டல் அஸிஸ்டெண்ட், சார்டிங் அஸிஸ்டெண்ட், போஸ்டல் அஸிஸ்டெண்ட் - பாரின் போஸ்ட், மெயில் மோட்டார் சர்வீஸ், ரிடர்ண்டு லெட்டர் ஆபிஸ் ஆகிய பல்வேறு பிரிவுகளில் மேற்கண்ட காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவை அனைத்தும் தமிழத்தின் பல்வேறு ஊர்களிலும் உள்ள காலி இடங்களாகும். தேவைகள்: தமிழ் நாடு போஸ்டல் சர்வீசின் போஸ்டல் அஸிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.10.2012 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 அளவிலான படிப்பை குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கட்டாயம் படித்திருக்க வேண்டும். மெட்ரிக் அளவிலான படிப்பில் இந்தியைப் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தமிழ் மொழியை நன்றாகப் பேசும், எழுதும் மற்றும் வாசிக்கும் திறமையும் தேவைப்படும். விபரங்கள்: தமிழக அஞ்சல் துறையின் அஞ்சலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.200/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். முதலில் ரூ.50/- கொடுத்து விண்ணப்பங்களை தலைமைத் தபால் நிலையங்கள் மற்றும் தெரிவு செய்த சில தபால் நிலையங்களிலிருந்து பெற வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 'இந்தியா போஸ்ட்' வாயிலாக பதிவுத் தபால் அல்லது விரைவுத் தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும். முகவரி: Direct Recruitment Cell, New Delhi HO, New Delhi 110 001. விண்ணப்பம் வாங்க இறுதி நாள் : 25.09.2012 விண்ணப்பிக்க இறுதி நாள் : 01.10.2012 இணையதள முகவரி: http://tamilnadupost.nic.in/rec/DoP_TN_DR2012.jpg

80க்கும் மேற்பட்ட வலைப் பக்கங்களுக்கு அரசு தடை


வட கிழக்கு மாநிலத்தவர் மீதான தாக்குதல் குறித்து வதந்தி பரப்பிய 80க்கும் மேற்பட்ட வலைப்பக்கங்களை அரசு தடை செய்துள்ளது. கூகுள், பேஸ்புக், டிவிட்டர் என சமூக வலைத்தளங்கள் மூல மேற்கொள்ளப்பட்ட இத்தகைய அபாயகரமான தாக்குதலால் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 5 எஸ்.எம்.எஸ்.க்கு மேல் அனுப்ப தடை:

செல்போன் நிறுவனங்கள் அறிவிப்பு
அசாம் இனக்கலவரங்களை தொடர்ந்து, தென் மாநிலங்களில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாக்கப்பட கூடும் என்று செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் ஒரே நேரத்தில் பல பேருக்கு மொத்தமாக அனுப்பப்பட்டன. இதனால் தென்மாநிலங்களில் வசித்து வந்த வடகிழக்கு மாநிலத்தவர் அச்சமடைந்து, கூட்டம் கூட்டமாக வெளியேறினார்கள். இதனால் மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று தொலை தொடர்பு துறையை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு கொண்டது. இதனையடுத்து ஒரு நாளைக்கு 5 எஸ்.எம்.எஸ்.களுக்கு மேல் அனுப்ப தடை விதித்து செல்போன் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அர்ஜூனா மற்றும் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பெறுவோர் பட்டியல்


சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜூனா மற்றும் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. 2012ம் ஆண்டிற்கான அர்ஜூனா விருது பெறுபவர்கள்: சர்தார் சிங் (ஹாக்கி), யுவராஜ் சிங் (கிரிக்கெட்), அனுப் குமார் (கபடி), தீபிகா குமாரி (வில்வித்தை), லைஷ்ராம் பம்பைலா தேவி (வில்வித்தை), கவிதா ராமதாஸ் ராட் (தடகளம்), சுதா சிங் (தடகளம்), ஆஷ்வினி பொன்னப்பா (பேட்மிண்டன்), பருபள்ளி காஷ்யப் (பேட்மிண்டன்), ஆதித்யா மேத்தா (ஸ்நூக்கர்), விகாஸ் கிரிஷன் (குத்துச் சண்டை), யாஷ்பல் சோலங்கி (ஜூடோ), சமீர் சுஹக் (போலோ), அன்னுராஜ் சிங் (துப்பாக்கிச் சுடுதல்), ஓம்கார் சிங் (துப்பாக்கிச் சுடுதல்), ஜோய்தீப் கர்மாக்கர் (துப்பாக்கிச்சுடுதல்) தீபிகா பல்லிகல் (ஸ்குவாஷ்), சந்திப் செஜ்வால் (நீச்சல்), சோனியா சானு (பளு தூக்குதல்), நர்சிங் யாதவ் (மல்யுத்தம்), ரஜிந்தர் குமார் (மல்யுத்தம்), கீதா போகத் (மல்யுத்தம்), விமல்ஜித் சிங் (உஷூ), தீபிகா மாலிக் (தடகளம்-மாற்றுத்திறனாளி), ராம்கரண் சிங் (தடகளம்-மாற்றுத்திறனாளி) 2012ம் ஆண்டிற்கான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது பெறுபவர்கள்: விஜய் குமார் (துப்பாக்கிச் சுடுதல்), யோகேஷ்வர் தத் (மல்யுத்தம்)  

  21ம் தேதி நேரடி எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு


நேரடி எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, 21ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும், என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்தார். அவரது அறிவிப்பு: ஏப்ரலில், நேரடி எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. தேர்வருக்கான மதிப்பெண் சான்றிதழ், அவர்களின் முகவரிக்கு, மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும். அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர், தங்களது இருப்பிட முகவரிக்கு உட்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். அறிவியல் செய்முறை வகுப்புகளில் கலந்துகொள்ள, 27ம் தேதிக்குள், பெயரை பதிவு செய்ய வேண்டும். அறிவியல் செய்முறை வகுப்புகளில் கலந்துகொள்ளாத தேர்வர், பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது. செய்முறைத் தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப படிவத்தை, தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு இயக்குனர் தெரிவித்தார்.

ரமலான் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து


ரமலான் பண்டிகை இந்தியாவில் நாளை கொண்டாடப்படுவதையடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ரோசய்யா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ரமலான் நன்னாளில் குரானில் கூறிய நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அன்பு, ஒற்றுமை, இரக்கம், பாசம் முதலியவை தழைக்கவும் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், அண்டை அயலாரிடம் அன்பாக இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் எடுத்துரைத்த போதனைகளை அனைவரும் பின்பற்றி வாழ வேண்டும் என்றும் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நபிகள் நாயகம் போதித்த மணிவாசகங்களை மனதில் பதித்தும், எளியோர்க்கு ஈந்தும், நோன்புக் கடமைகளை நிறைவேற்றியும்,  ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறியுள்ளார். பிறருக்கு கொடுத்து உதவும் பெரும் பண்பை போற்றும் இஸ்லாம் மார்க்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதேபோல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரயிலில் பயணிக்க அடையாள அட்டை கட்டாயம்: விரைவில் அறிவிப்பு


ரயில்களில் முன் பதிவு செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் அடையாள அட்டை கொண்டு செல்வது கட்டாயமாக்கப்பட உள்ளது. இதற்கான அறிவி்ப்பு விரைவில் வெளியாகும் என ரயி்ல்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்பதிவு செய்யப்பட்ட நபர் தான் ரயிலில் பயணம் செய்கிறார் என்பதை உறுதி செய்யவும், புரோக்கர்கள் முறைகேடாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விற்பனை செய்வதை தடுக்கவும் இந்த நடவடிக்கையை ரயில்வே மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்தால், பயணச்சீட்டு இன்றி பயணம் செய்ததாக கருதி அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான்கார்டு, டிரைவிங் லைசென்ஸ், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழங்கும் அடையாள அட்டை, ஆதார் அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அளிக்கும் வங்கிக் கணக்கு புத்தகம் உள்பட 9 அடையாள ஆவணங்களை பயணிகள் எடுத்துச் செல்லலாம். ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட ஏ.சி. பெட்டியில் பயணம் செய்பவர்கள், தட்கல் மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட் பெற்று பயணம் செய்பவர்கள் அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Saturday, August 18, 2012

குழந்தைகளின் விருப்பம்போல் அனுமதியுங்கள்: முதன்மை கல்வி அலுவலர


"குழந்தைகளின் விருப்பம்போல், படிக்கும் துறையை தேர்வு செய்ய அனுமதியுங்கள்&'&' என, முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பேசினார். கோவை, ஜி.ஆர்.ஜி., மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் பூங்கோதை வரவேற்றார். தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பேசியதாவது: குழந்தைகளின் விருப்பம் அறிந்து, அவர்களுக்கு ஆர்வம் உள்ள துறையில், பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். 10ம் வகுப்பு முடித்ததும், பிளஸ் 2 வுக்கு செல்வோர், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும் என்ற போட்டியை, பெற்றோர்களே உருவாக்குகின்றனர். திறமை இருந்தால், எந்த துறையாக இருந்தாலும், சாதிக்க முடியும். அனைவரது உள்ளத்தில் பதிந்துள்ள சிந்தனையில், இது போன்ற கல்வி தான் உயர்ந்தது என்ற எண்ணம் உள்ளது. எந்தக் கல்வியை கற்றாலும், அதை சிறப்புறச் செய்தால், அதற்கான வாய்ப்புகள், சாதனைகள் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இலக்கியம், ஓவியம், விளையாட்டு போன்ற துறைகளில், குழந்தைகளை ஊக்கப்படுத்தும்போது, அவர்களது கற்பனை திறன் மேலும்,மேலும் உயர்கிறது. பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே விளையாட அனுமதிக்கின்றனர். கல்வியை விட, விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் பள்ளியிலும், வீட்டிலும் கொடுக்கும்போதுதான், கல்வியை மிக துல்லியமாக கற்க முடியும். விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்காததால், ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களை, இந்தியாவால் பெற முடியவில்லை. குழந்தைகளிடம் உள்ள திறமையை அறிந்து, அதை ஊக்கப்படுத்தினால், திறமை தானாக வளரும். அடிப்படை அறிவியலை கற்றுக்கொண்டால் மட்டுமே, அறிவு வளரும். மேலை நாடுகளான சீனா, ஜப்பான் போன்ற நாடுகள், அடிப்படை தொழில்நுட்பங்களை அறிந்து செயல்படுகின்றன. இந்தியாவின் பெரும் வெற்றியாளர்கள், அடிப்படை அறிவியலை அறிந்ததால் சாதித்துள்ளனர். எனவே, புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக இருக்கும், அடிப்படை அறிவியலை அனைவரும் கற்பது அவசியம். இவ்வாறு, அவர் பேசினார்.