இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, September 19, 2013

முதுகலை ஆசிரியர் பட்டியல் எப்போது?

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள் வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலையில், போட்டி தேர்வை நடத்தியது. 1.5 லட்சம் பேர், தேர்வை எழுதினர். தேர்வின், தற்காலிக விடைகளை வெளியிட்ட சிறிது நாட்களில், அனைத்து பாடங்களுக்கும், தேர்வு பட்டியலையும், டி.ஆர்.பி., தயாரித்தது.

இதற்கிடையே, தமிழ் பாட கேள்வித்தாளில், 40 கேள்விகளில் பிழை இருந்ததாக கூறி, மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி, சென்னை உயர் நீதிமன்ற, மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க, அவர் கோரியுள்ளார். இந்த பிரச்னையால், இதர பாடங்களுக்கான முடிவை வெளியிடுவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், "தமிழ் பாட பிரச்னையில், விரைவில், ஒரு முடிவை எடுத்து, கோர்ட்டில் தெரிவிக்க உள்ளோம்.

எனவே, 30ம் தேதிக்குள், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். டி.இ.டி., தேர்வு முடிவுகள், இம்மாத இறுதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ வெளியாகும்' என, தெரிவித்தது.

அழகப்பா கல்லூரியில் எம்ஃபில், பிஎச்டி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள்

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் 2013-2014 ஆம் கல்வியாண்டில் தமிழ் மற்றும் வரலாறு பாடங்களில் எம்ஃபில், பி.எச்டி ஆய்வுப்பாடப் பிரிவுகள் தொடங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்த பாடங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வர் ஆர். ஜெயகோபால் தெரிவித்தார்.  இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

எம்ஃபில்., பி.எச்டி தமிழ் மற்றும் வரலாறு பாடப்பிரிகளில் விண்ணப்பிக்கும் தகுதியுடைய ஆய்வு மாணவ, மாணவியர் 10.10.2013 அன்று காலை 9 மணிக்கு நடை பெறவிருக்கும் நுழைவுத்தேர்வில் கலந்துகொள்ளவேண்டும்.   நுழைவுத்தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு 11.10.2013 அன்று சேர்க்கை நடைபெறும். அழகப்பா பல்கலைக்கழக இணைவுடன் தொடங்கவிருக்கும் இப்பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் கல்லூரியில் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்லூரிக்கு வந்துசேர வேண்டிய கடைசி நாள் 30.9.2013 ஆகும் என்றார்.  

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு தேதிகள் மாற்றம்

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதன்மைத் தேர்வுகள் வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேதிகளில் வேறு தேர்வு நடைபெற உள்ளதால், அக்டோபர் 25, 26 மற்றும் 27ம் தேதிக்கு முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோல், இந்து சமய அறநிலையத்துறையின் 4-ம் நிலை செயல் அலுவலர் பதவிக்கான தேர்வு அக்டோபர் 26-ல் இருந்து நவம்பர் 16-ம் தேதிக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இரட்டைப்பட்டம் வழக்கு இன்று விசாரணைக்கு வரவில்லை

நீதியரசர்கள் ராஜேஷ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு இன்று மாலைக்குள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய மதியம் 3மணிவரை வழக்கு பட்டியல் வரிசை எண்.26 உடன் முடித்து சில அலுவல் காரணமாக தலைமை நீதிபதி சென்றுவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு தரப்பும் தயாராக இருந்த நிலையில் எதிர்ப்பாரா நிகழ்வாக தள்ளி போனது ஏமாற்றமே, எனினும் இவ்வழக்கு நாளை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான ஊழியர்கள், தமிழ்நாடு குடிமைப் பொருள் கழக ஊழியர்கள், தமிழ்நாடு கூட்டுறவு துறை, பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு ஊழியர்கள், பூம்புகார் கப்பல் கழகம், தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளர்கள், அரசு ரப்பர் கழகம், வனத்துறை ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். பொதுத் துறை நிறுவன தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களின் ரூ.4300 அடிப்படை ஊதியத்தில் ரூ.9300–ரூ.34,800 வரை ஊதியமாக பெறுபவர்கள் மற்றும் அதற்கு கீழ் ஊதியம் பெறுபவர்களுக்கு குறைந்தபட்ச போனஸ் 8.33 சதவீதம் மற்றும் கருணைத் தொகை 1.67 சதவீதம் கிடைக்கும்.

இது 1961–ம் ஆண்டு வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் செலவீன தகுதி உள்ளதாகும். ரூ.3500 ஊதிய உச்சவரம்பு தகுதி உள்ளவர்களுக்கு 2012–13–ம் ஆண்டுக்கு போனஸ் நிர்ணயிக்கும் ஊதிய உச்சவரம்பு ரூ.10 ஆயிரம் ஆகவும், 1965–ம் ஆண்டு போனஸ் ஊதிய சட்டத்தின்படி தளர்த்தப்படுகிறது. 1965–ம் ஆண்டு போனஸ் ஊதிய சட்டத்தின்படி தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு சட்டரீதியான குறைந்தபட்ச போனஸ் அளவைக் காட்டிலும் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை போனஸ் வருகிற 30–ந்தேதிக்குள் வழங்கப்படும். கடந்த 1965–ம் ஆண்டு போனஸ் ஊதிய சட்டத்தின்படி இது கொடுக்கப்படுகிறது.

நிர்ணயிக்கப்பட்ட அதிக போனஸ் ஊதியத்தொகை 10 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் கருணைத் தொகையும், போனசும் 10 சதவீதத்துக்கு மிகாமல் கொடுக்கப்படும். 2012–13–ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் பணிபுரிந்த மேற்கண்ட ஊதிய விகிதத்தில் குறைவான ஊழியர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்கள் மூலம் இது பற்றிய ஆணைகள் வெளியிடப்படும். ‘ஏ’ மற்றம் ‘பி’ பிரிவு அரசு ஊழியர்களை பொறுத்தவரை தனித்தனியாக ஊதிய உத்தரவு அதற்கென்று அமைக்கப்பட்ட போனஸ், கருணைத் தொகை உத்தரவின் அடிப்படையில் வழங்கப்படும். வேறு ஏதாவது இருந்தால் பொங்கல் பண்டிகையின் போது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

POLLING PERSONAL LIST 1


ELECTION -POLLING FORMS personal detail


Wednesday, September 18, 2013

ஆன் லைனில் சாதி/வருமான சான்றிதழ் பெற

அரசு பாடத்திட்ட அடிப்டையில் தயாரித்த 2 புத்தகங்களை அனுப்பி வைக்கவேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குனரகம் வேண்டுகோள்

   பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– 9–ம் வகுப்புக்கு 2–ம் பருவ பாடத்திட்டம் (தமிழ் பாடம் நீங்கலாக) மக்கள் பார்வைக்காக www.dse.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்ட அடிப்படையில் புத்தகம் தயாரித்தவர்கள் ஒப்புதலுக்காக ஒவ்வொரு பாடத்திலும் தலா 2 புத்தகங்களை உறுப்பினர் செயலாளர், மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர், கல்லூரி சாலை, சென்னை–6 என்ற முகவரிக்கு 30–ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்

. 1–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை பாடபுத்தகம் தயாரித்தவர்களும் அனுப்பலாம். இந்த தகவலை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

23ம் தேதி பிளஸ் 2 தனி தேர்வு : இன்று முதல் "ஹால் டிக்கெட்'

பிளஸ் 2 தனி தேர்வு, வரும், 23ம் தேதி துவங்குகிறது. மாநிலம் முழுவதும், 130 மையங்களில் நடக்கும் தேர்வை, 40 ஆயிரம் மாணவர் எழுதுகின்றனர். தொடர்ந்து, அக்., 5ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வு நடக்கிறது. 10ம் வகுப்பு தனி தேர்வும், 23ம் தேதி துவங்குகிறது. ஆனால், 30ம் தேதியுடன் முடிகிறது. 170 மையங்களில் நடக்கும் இத்தேர்வை, 46 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வர், இன்று முதல், 23ம் தேதி வரை, www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்'களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை, நேற்று அறிவித்தது.

இதேபோல், 10ம் வகுப்பு தனி தேர்வர்களும், தங்களது, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்யலாம். "தத்கால்' திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்கள், 21, 22ம் தேதிகளில், ஹால் டிக்கெட்டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜூலை 1ந் தேதி தேதியிட்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இதற்கான அறிவிப்பை வரும் வெள்ளி அன்று வெளியிடும் எனத் தெரிகிறது.  நடப்பு நிதியாண்டில் 2வது முறையாக அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்துகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 80%ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தற்போது 90%ஆக உயர்கிறது. கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரட்டை இலக்கத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பிறகு தற்போதும் 10% உயர்த்தப்படுகிறது. 

இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்கள் 30 லட்சம் ஒய்வு ஊதியத்தாரர்கள் பலன் பெறுவார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் அகவிலைப்படியிலிருந்து குறிபிட்ட தொகை அடிப்படை ஊதியத்தில் இணைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதுநிலை பட்டதாரிகள் தேர்வு: தமிழுக்கு மறு தேர்வு நடத்தமுடியுமா?: உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

தமிழ்நாடு முதுலை பட்டதாரிகள் தேர்வில் தமிழ் தாளில் குளறுபடிகள் நடந்த குற்றச்சாட்டை அடுத்து தேர்வு வாரிய தலைவரை நேரடியாக ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.இதனையடுத்து முதுநிலை பட்டதாரிகள் தேர்வு வாரிய தலைவர் இன்று நேரில் ஆஜரானார்.அவரிடம் தமிழ் மறு தேர்வு நடத்தமுடியுமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வாரிய தலைவர் அரசிடம் ஆலோசனை பெற்றே முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

DSE-Common Syllabus II term IX std

G.O Ms.No. 377 Dt: September 18, 2013 State Public Sector Undertakings-sanction of Bonus and Ex-gratia to the employees of State Public Sector Undertakings for the year 2012-13 payable during 2013-14-orders issued.

Tuesday, September 17, 2013

தொழில் வரியை உயர்த்த நகராட்சிகளுக்கு அனுமதி

    நகராட்சிகளில் தொழில்வரியை உயர்த்திக் கொள்ள, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நகராட்சிகளில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வரிசீராய்வு மேற்கொள்ளப் படும். கடந்த, 2008 ஏப்., 1 க்கு பிறகு, 2013 ஏப்., 1ல் வரி மறு சீராய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, தமிழக அரசு வரி மறு சீராய்வை அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், நகராட்சிகளின் நிதி நிலை மோசமாக உள்ளதால், வரியை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம், அரசுக்கு ஏற்பட்டுள்ளது. சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை உயர்த்தினால், அது பொதுமக்களை நேரடியாக பாதிக்கும். எனவே, வர்த்தகர்களை மட்டுமே பாதிக்கும், தொழில் வரியை 5 சதவீதம் உயர்த்திக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து வரியினங்களையும் உயர்த்தினால் தான், நகராட்சிகளில் நிதி நிலை ஆரோக்கியமாக இருக்கும். இல்லையென்றால், அரசை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்,என நகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

"எஸ்.எஸ்.ஏ.,' நிதி, 1,500 கோடி ரூபாயாக குறைப்பு: நிதி நெருக்கடியால், மத்திய அரசு நடவடிக்கை

நாடு முழுவதும், 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் அனைவரும், கட்டாயம், எட்டாம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு, அனைவருக்கும் கல்வி திட்டத்தை கொண்டு வந்தது. பின், இத்திட்டத்தின் கீழ், எட்டாம் வகுப்பு வரை படிப்பவர்கள், தொடர்ந்து, 10ம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்பதற்காக, மத்திய இடைநிலைக் கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) கொண்டு வரப்பட்டது. இரு திட்டங்களுக்கும், தனித்தனியே, மத்திய அரசு, நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதில், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியில், 70 சதவீதம், தொடக்க கல்வித்துறை கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, சம்பளமாக வழங்கப்படுகிறது

. 30 சதவீத நிதி, ஆரம்ப கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், திட்ட அறிக்கைகளை தயாரித்து, அதற்கு தேவைப்படும் நிதியை அளிக்கக் கோரி, தமிழக அரசு, மத்திய அரசுக்கு, அறிக்கை அளிக்கும். அதை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு செய்து, நிதியை ஒதுக்கீடு செய்யும். ஒவ்வொரு ஆண்டும், 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, நிதி ஒதுக்கீடு செய்துவந்த மத்திய அரசு, நடப்பு ஆண்டிற்கு அதை, 1,500 கோடி ரூபாயாக குறைத்து விட்டது என, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: கடந்த ஆண்டு (2012 - 13), 2,000 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த ஆண்டு (2013 - 14), 3,000 கோடி ரூபாய்க்கு, திட்ட அறிக்கையை சமர்ப்பித்தோம். ஆனால், இதில், 50 சதவீத நிதி மட்டுமே கிடைத்துள்ளது. தமிழகத்திற்கு மட்டுமில்லாமல், அனைத்து மாநிலங்களுக்கும், அவர்கள் கேட்ட நிதியில், 50 சதவீத நிதியைத் தான், மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கடும் நிதி நெருக்கடி காரணமாக, நிதி குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார். ஆனால், ஆர்.எம்.எஸ்.ஏ., நிதி, சிறிது கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, 460 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், இந்த ஆண்டு, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என, தெரிகிறது. மத்திய அரசு நிதியில், புதிய பள்ளி கட்டடங்கள், ஏற்கனவே இயங்கி வரும் பள்ளிகளில், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. தற்போது, இந்த நிதியை குறைத்திருப்பதால், பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில், தேக்க நிலை ஏற்படும். -

அரசு துறை தேர்வுகள் அறிவிப்பு

டிசம்பர் மாதம் நடக்க உள்ள, அரசு துறைத் தேர்வுகளுக்கான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. அரசு பணிகளில் உள்ளவர்களும், அரசு பணிகளை எதிர்நோக்கி காத்திருப்பவர்களும், துறை தேர்வுகளை எழுதலாம். ஆண்டுதோறும், ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில், துறை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, டிசம்பரில் நடக்கும் துறை தேர்வுகளுக்கான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. அக்., 15ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளம் வழியாக, துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். "டிசம்பர், 23ம் தேதி முதல், 31ம் தேதி வரை - 25ம் தேதி தவிர, தேர்வுகள் நடக்கும்' என, தேர்வாணையம் அறிவித்து உள்ளது.

Monday, September 16, 2013

Noon Meal Particular Forms

விடைத்தாள்களில் 'டம்மி' நம்பருக்கு பதிலாக ரகசிய குறியீடு: அரசு தேர்வுத்துறை விரைவில் அறிமுகம்

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்போது எந்தவித முறைகேடும் நடக்காமல் தடுக்க அந்த விடைத்தாள்களுக்கு டம்மி நம்பர் கொடுக்கப்படுவதற்கு பதிலாக யாரும் அறியாத வகையில் ரகசிய குறியீடு வழங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அரசு பொதுத்தேர்வுகளாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 2014-2015-ம் ஆண்டு ரத்து செய்யப்படும் என்று வதந்தி பரவுகிறது.

ஆனால் எந்த தேர்வும் ரத்து செய்யப்படமாட்டாது. இப்போது போல அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா, அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் ஆகியோர் ஏற்கனவே உறுதி அளித்திருந்தனர். பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களில் தமிழ், ஆங்கிலம் தவிர கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட 10 பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் எந்த தவறும் நடக்கக்கூடாது என்பதற்காக மாணவர்கள் எழுதிய தேர்வு பதிவு எண்ணை அகற்றிவிட்டு டம்மி நம்பர் கொடுக்கப்படும்.

இதனால் எந்த விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்காக எங்கு செல்கிறது என்பதை கண்டறிவது சிரமம். இருப்பினும் அந்த தாளை பின்பற்ற முடியும் என்ற நிலை உள்ளது. எனவே டம்மி நம்பருக்கு பதிலாக தேர்வர்களின் விடைத்தாளிலேயே ரகசிய கோடு முதலிலேயே பிரிண்ட் செய்யப்படும். இந்த குறியீட்டை சாதாரணமாக யாரும் காணமுடியாது. அதை கம்ப்யூட்டர் மூலம்தான் அறியமுடியும். இதனால் எந்த விடைத்தாள் எங்கு மதிப்பீடு செய்யப்படுகிறது என்ற விவரம் தெரியாது. எனவே ரகசிய குறியீடு கொண்டு வரும் முறையை அமல்படுத்த அரசு தேர்வுகள் துறை முடிவு செய்துள்ளது. இது விரைவில் உயர் அதிகாரியின் அனுமதி கிடைத்ததும் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்த ரகசிய குறியீடு முறையை வருகிற அக்டோபர் மாத தேர்வில் அமல்படுத்தலாமா என்றும் அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இனி விடை தாள்கள் திருத்தி முடித்த 5 நாட்களில் வெளியிடப்படும்

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு Evaluation மையத்தில் ஆசிரியர்கள் MARKS SHEET (மதிப்பெண் -பட்டியல் )எழுத தேவையில்லை அரகு , சீல் கிடையாது , அதற்கு பதிலாக GUM மற்றும் Sellotape மட்டுமே பயன்படுத்துபடும்.COVER ரில் HALL -Supervisor மற்றும் CHIEF -Superintendent கைய்யொப்பம் இடுவார்கள் POSTAL வழியாக EXAM PAPERS அனுப்பப்பட மாட்டாது.

EXAM மையத்தில் மற்றும் EXAM பேப்பரில் BAR-CODE பயன்படுத்தப்படும். பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இனி விடை தாள்கள் திருத்தி முடித்த 5 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும். OCTOBER மாத தேர்வில் இம்முறை கடைபிடிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

பி.எட். இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்

பி.எட். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 17, 18 தேதிகளில் நடத்தப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில் 342 பி.எட். இடங்கள் காலியாக இருந்தன. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் 13 பாடப் பிரிவுகளின் கீழ் உள்ள 2,118 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நடத்தி வருகிறது.

முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 30-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதன் முடிவில் 342 இடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடத்தப்படுகிறது.

பள்ளி தலைமை ஆசிரியர் தேசிய திறன் தேர்வு

  "பள்ளி தலைமை ஆசிரியர்களின் தேசிய திறன் தேர்வுக்கான விண்ணப்பங்களை, இன்று முதல் பெறலாம்' என, அரசு துறைகளுக்கான தேர்வு இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, தேசிய திறன் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, 17ம் தேதி (இன்று) முதல், 24ம் தேதி வரை, தீதீதீ.tணஞீஞ்ஞு.டிண என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதள "பாஸ்வேர்டு'களை, அந்தந்த பள்ளி மண்டல கல்வி அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம், இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Sunday, September 15, 2013

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு விரைவில் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு

8 லட்சத்து 50 ஆயிரம் பேர்    தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது.   தமிழ்நாடு முழுவதும் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பவும், பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பவும் அரசு முடிவு செய்து அதற்கான ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியது. இந்த தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள்.  

10 நாட்களுக்குள் வெளியீடு   

இந்த தேர்வு விடைத்தாள்கள் அனைத்தும், ஸ்கேன் செய்யப்படும் பணி முடிவடைந்தது. மேலும், கம்ப்யூட்டர்களில் நிபுணத்துவம் வாய்ந்த குழு வரவழைக்கப்பட்டு இந்த விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளது. இந்த மதிப்பீடு 3 மணி நேரத்திற்குள் முடிந்து விடும்.   அதன் பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் யார்? யார்? என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரிக்க உள்ளது. இந்த தேர்வு முடிவு அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபு நய்யார், உறுப்பினர் செயலாளர் வசுந்தரா தேவி, உறுப்பினர் க.அறிவொளி ஆகியோர் மும்முரமாக பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில்பெயர் சேர்க்க வாய்ப்பு

   திருப்பூர்:வரும் அக்., 1 முதல் 31ம் தேதி வரை, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணி துவங்குகிறது.வரும் 2014 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்த பணியை அக்., 1ல் துவக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், வரும் 1ம் தேதி வெளியிடப்படும்.

ஓட்டுச்சாவடிகளில், பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8, முகவரி மாற்றம் செய்ய 8 ஏ ஆகிய படிவங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளபடி, 1995ம் ஆண்டு டிச., 31க்கு முன் பிறந்த ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் வாக்காளராக பதிவு செய்துகொள்ளலாம். வரும் அக்., 1 முதல் 31 வரை, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்ய விண்ணப்பம் பெறப்படும்.

தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் பயனடையும் வகையில், அக்., 6, 20 மற்றும் 27ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும், என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திறந்தநிலை பல்கலை பி.எட். படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்படும் பி.எட். சிறப்புக் கல்வி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.  இந்தப் படிப்பில் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். அக்டோபர் 27-இல் இந்த பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் சென்னையிலுள்ள பல்கலைக் கழக வளாகத்திலும், கல்வி மையங்களிலும் அக்டோபர் 3-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும்.

இது குறித்த மேலும் விவரங்களை 044 - 24306617 தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டும், www.tnou.ac.in இணைய தளத்திலும் தெரிந்துகொள்ளலாம். இந்த படிப்பு பி.எட். பொதுக் கல்விக்கு இணையானது என, பல்கலைக்கழக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது