இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, April 09, 2017

இன்றைய பட்டம் இதழில் வந்துள்ள எம் பள்ளி மாணவன் ரகுராம் அவர்களின் அறிவியல் கேள்வி

அரசு ஊழியர் சங்க தலைவர் அறிவிப்பு ஏப்.25ல் வேலைநிறுத்தம் 3 லட்சம் பேர் பங்கேற்பு


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஏப். 25 முதல் நடக்கும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக சங்கத்தின் மாநில தலைவர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வேலைநிறுத்த ஆயத்த மாநாடு சிவகங்கையில் நடந்தது. இதில் பங்கேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:

2003க்கு பின் அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் என பிடித்தம் செய்த ரூ.15 ஆயிரம் கோடி எங்கே போனதென தெரியவில்லை. இதுகுறித்து சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணை குழு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் தெரிவித்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் 2003க்கு பின் பணியில் சேர்ந்து இறந்துள்ள ஊழியர்களின் குடும்பங்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் பாதிப்படைந்து வருகின்றன.

தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான அரசுத்துறை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர், கிராம உதவியாளர், சத்துணவு ஊழியர் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்த உள்ளோம். இதில் சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எண்ணிக்கை 24ல் இருந்து 20 ஆக குறைப்பு : பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு சலுகை


ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணியில் காலை 12 விடைத்தாள், மதியம் 12 விடைத்தாள் என நாள் ஒன்றுக்கு 24 விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்த வேண்டும். 200 மதிப்பெண்களுக்கு பிளஸ் 2 விடைத்தாள் திருத்துவதால், குறிப்பிட்ட நேரத்தில் 12 விடைத்தாள்களை சரியாக திருத்த முடியாமல் ஆசிரியர்கள் திணறுவதாக கூறப்படுகிறது. அவசர கதியில் திருத்துவதால், கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகவும், உரிய முறையில் விடை மதிப்பீடு செய்ய முடிவதில்லை எனவும் ஆசிரியர்கள் புலம்பிவந்தனர்.

குறிப்பாக மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும்போது, விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செய்யும் தவறுகள் தெரிய வருகிறது. இந்நிலையில் நாள்தோறும் திருத்தப்படும் 24 விடைத்தாளில் இருந்து, 4 விடைத்தாள் குறைக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தேர்வு மற்றும் கல்வித்துறையிடம் சில வருடங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். நடப்பாண்டும் அதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, காலை 10 பேப்பர், மதியம் 10 பேப்பர் என நாள்தோறும் 20 விடைத்தாள் திருத்தினால் போதும் எனவும், 4 விடைத்தாள்களுக்கு விலக்கு அளிப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார். மேலும் முதல் முறையாக கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், அதே கல்வி மாவட்டத்தில் நடக்கும் விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணியாற்றவும் அனுமதி அளித்துள்ளார்.

கடந்த 5ம் தேதி துவங்கிய பிளஸ் 2 விைடத்தாள் திருத்தும் பணியில் நாள்தோறும் 20 விைடத்தாள்களை ஆசிரியர்கள் திருத்துகின்றனர். உயிரியல் விடைத்தாள்களை காலையில் 8ம், மாலையில் 8ம் என திருத்துகின்றனர். கல்வித்துறையின் இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீட்' பாடத்திட்டம் தெரியாமல் திணறல்: மவுனம் கலைக்குமா கல்வித்துறை!


மாநில பாடத்திட்ட புத்தகங்களை மட்டும் நம்பி, 'நீட்' தேர்வுக்கு தயாராகும், தமிழ்வழி அரசுப் பள்ளி மாணவர்கள், தேர்ச்சி அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்தனர். 'நீட்' எனும், மருத்துவ படிப்பு களுக்கான தேசிய நுழைவுத் தேர்வு, சென்னை, கோவை, திருச்சி, மதுரை உட்பட, ஏழு மாவட்டங்களில், மே 7ல் நடக்கிறது.

இதில் பங்கேற்க, 11.35 லட்சத்துக் கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இத்தேர்வு நடப்பாண்டில், ஆங்கிலம், இந்தி தவிர, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட, எட்டு மாநில மொழிகளில் எழுதலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி., என்ற தேசிய கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பாடத்திட்ட அடிப்படையில், நீட் தேர்வில், வினாக்கள் இடம் பெறும். இப்புத்தகங்கள், ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே கிடைக்கின்றன. இணையதளத்திலும், இப்புத்தகங்களின் மொழி பெயர்ப்பு பிரதி கிடைக்கவில்லை. இதனால், தமிழ் வழியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள், பெரிதும் சிரமப்படுகின்றனர்.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்சங்க மாநில தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: தமிழகத்தில், மேல்நிலை வகுப்புகளுக்கு, 15 ஆண்டுகளுக்கும் முன், பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. 2005ல், சில முக்கிய பகுதிகள் சேர்க்கப்பட்டு, கடின பகுதிகள் எடுக்கப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்துடன், மாநில பாடத்திட்டத்தை ஒப்பிட்டால், 60 சதவீத அளவுக்கு மட்டுமே, இணையாக இருக்கும். எனவே, பள்ளி கல்வித் துறை சார்பில், நீட் தேர்வுக்கு, பிரத்யேக சிறப்பு கையேடு, இணையதளத்தில் வெளியிட்டால், தமிழ் வழி மாணவர்கள் பலனடைவர். இவ்வாறு அவர் கூறினார்.

Friday, April 07, 2017

நீட் தேர்வு குறித்து கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செய்தி -TNPTF


ஊதிய குழுவிற்கு கோரிக்கைகளை அளிக்க TNPTF அமைப்பிற்கு அழைப்பு.

தேர்வு எழுத 8.47 லட்சம் பேர் விண்ணப்பம் டிஇடி ஹால்டிக்கெட் தயார்


டிஇடி தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள 8 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் தயாரிக்கும் பணியில் டிஆர்பி ஈடுபட்டு வருகிறது. இதை, அடுத்த வாரம் தபாலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டிஇடி தேர்வை ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஏப்ரல் 29, 30 தேதிகளில் டிஇடி தேர்வு நடக்க உள்ளது.

இதற்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கி மார்ச் 23ம் தேதியுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தம் 8 லட்சத்து 47 ஆயிரம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. தவறாக பூர்த்தி செய்தது, தகுதி இல்லாத பாடங்களுக்கு விண்ணப்பித்தவை என சுமார் 2,000 பேரின் விண்ணப்பம் கண்டறியப்பட்டுள்ளது.

மற்ற விண்ணப்பங்களுக்கு ஹால்டிக்ெகட் தயாரிக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 29ம் தேதி 598 மையங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுக்கு 1,263 தேர்வு மையங்களும் அமைக்க டிஆர்டி ஏற்பாடு செய்துள்ளது. தேர்வு எழுத தகுதியானவர்கள் பட்டியலை அடுத்த வாரம் இணைய தளத்தில் டிஆர்பி வெளியிட உள்ளது. அப்போது, ஹால் டிக்கெட் குறித்த விவரங்களும் வெளியிட்டு இணை தளம் மூலமாகவே ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதுதவிர, தபால் மூலம் ஹால்டிக்கெட் அனுப்பவும் டிஆர்பி முடிவு செய்துள்ளது.

வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் டிஇடி தேர்வில் வெற்றி பெறுவோர் ஆசிரியர் பணி நியமனம் பெறுவதற்கு முன்பு கடை பிடித்த வெயிட்டேஜ் முறையின் கீழ் மதிப்பீடு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் (டிஇடி) பெற்ற மதிப்பெண்ணை 60 ஆல் பெருக்கி 150 ஆல் வகுக்க கிடைக்கும் மதிப்பெண், இடைநிலை ஆசிரியர் தேர்வில் (டிடிஎட்) பெற்ற மெதிப்பெண்ணை 25 ஆல் பெருக்கி மொத்த மதிப்பெண்ணால் வகுக்க கிடைக்கும் மதிப்பு (25%), மேனிலைத் தேர்வில் (பிளஸ் 2) பெற்ற மதிப்பெண்ணுக்கு 15% நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்கு, மொத்த மதிப்பெண்ணை 15 ஆல் பெருக்கி, 1200ல் வகுக்க கிடைக்க மதிப்பு எடுக்கப்படும். மேற்கண்ட முறையின் கீழ் 60%, 25%, 15% என கணக்கிட்டு அவற்றை கூட்டினால் வரும் மதிப்பெண்படி பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் போடுவார்கள்.

ஆதார் உடன் பான் இணைக்க வேண்டும் தவறினால் ரூ.10,000 அபராதம்


ஆதார் எண்ணுடன் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை ("பான்') ஜூலை 1ஆம் தேதி முதல் இணைக்க வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு முறை பணப்பரிமாற்றத்தின் போதும் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று வரி தொடர்பான நிபுணர் சுரேஷ் தெரிவித்தார். எனவே, ஆதார் எண்ணுடன் நிரந்தர கணக்கு எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்.
இது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த இணைப்பு 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆதாருடன் நிரந்தர கணக்கு எண்ணை இணைக்கவில்லை எனில், ஒவ்வொரு பணப் பரிமாற்றத்தின்போது, நிரந்தர கணக்கு எண் இல்லை என்று பதிவாகும். நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்கள் அதற்கு விண்ணப்பிக்கும்போது, ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

இதுதவிர, ரூ.2 லட்சத்துக்கு மேல் பணபரிமாற்றம் செய்வது இணையம் மூலமாகவும், கணக்கு மூலமாகவும் செலுத்தலாம். இல்லைஎனில், 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

50 ஆண்டு அரசுப்பள்ளி : கவுரவிக்கிறது கல்வித்துறை


50 ஆண்டுகளாக இயங்கும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கவுரவிக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. சில பள்ளிகள், அப்பகுதியினரின் ஒத்துழைப்போடு சிறப்பாக செயல்படுகின்றன.
இதில், 5௦ ஆண்டுகள் பழமையான பள்ளிகளும் உண்டு; இப்பள்ளிகளை கவுரவிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இப்பள்ளிகளை தேர்வு செய்வதற்காக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மேற்பார்வையாளராகவும், தொடக்கக் கல்வி அலு வலரின் நேர்முக உதவியாளர் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்; உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் என, 12 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஒரே மதிப்பீட்டு முறை : வரும் கல்வி ஆண்டில் அறிமுகம்


சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், வரும் கல்வியாண்டிலிருந்து, ஒன்பதாம் வகுப்பு வரை, நாடு முழுவதும் ஒரே மதிப்பீட்டு முறை அறிமுகமாகிறது. நாடு முழுவதும், 19 ஆயிரம் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் இயங்குகின்றன. இந்தப் பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டு வரை, 10ம் வகுப்புக்கு, சில மாணவர்களுக்கு பொது தேர்வும், சில மாணவர்களுக்கு பள்ளி அளவிலான தேர்வும் நடத்தப்பட்டது.

வரும் கல்வி ஆண்டிலிருந்து, 10ம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளி அளவில், சிறப்பு மதிப்பீட்டு முறை மேற்கொள்ளப்பட்டு, 'கிரேட்' என்ற தர வரி சை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு, வரும் கல்வியாண்டு முதல், நாடு முழுவதும் ஒரே வகையான மதிப்பீட்டு முறையை பின்பற்ற, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தி உள்ளது. இரண்டு பருவத்துக்கும், தனித்தனியே மதிப்பீடு செய்யப்பட உள்ளது. 20 மதிப்பெண்களுக்கு மாத வாரியாகவும், 80 மதிப்பெண்களுக்கு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வு அடிப்படையிலும், மதிப்பீடு செய்யப்படுகிறது.

இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., சேர்மன், ஆர்.கே.சதுர்வேதி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிகளில் ஒவ்வொரு விதமான மதிப்பீட்டு முறையை கையாள்வதால், நாடு முழுவதும், ஒரு பள்ளியிலிருந்து, மற்றொரு பள்ளிக்கு மாறும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. தேசிய அளவில் ஒரே மதிப்பீட்டு முறை இருந்தால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும், அதை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீட்' தேர்வுக்கு பயிற்சி பெறுவது எங்கே? : அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு


'நீட்' தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், எங்கே பயிற்சி பெறுவது என தெரியாமல், அரசு பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர். வரும் கல்வி ஆண்டில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, தேசிய அளவிலான, 'நீட்' தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த தேர்வு, அனைத்து மாநிலங்களிலும், மே, 7ல் நடக்கிறது. இதற்கு, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நேற்று முன்தினம் முடிந்தது.

இந்நிலையில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு தனியார் மையங்களில், 'நீட்' தேர்வுக்கான பயிற்சியை துவக்கி உள்ளனர். ஒரு மாத பயிற்சிக்கு, 20 ஆயிரம் முதல், 35 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப் படுகிறது. தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும், நகர, கிராமப்புற மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுமா என, தவித்து வருகின்றனர். இது குறித்து பெற்றோர் கூறியதாவது: 'நீட்' தேர்வு தமிழகத்துக்கு வராது என, ஆளும் கட்சி அமைச்சர்கள் கூறி வந்தனர்.

ஆனால், இதுவரை அதற்கான சட்ட அனுமதியை பெறவில்லை. அதை நம்பி, 'நீட்' தேர்வுக்கு பயிற்சி எடுக்கவில்லை. எனவே, அரசு பள்ளி மாணவர்கள் அதிக சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். பள்ளிக்கல்வித் துறையோ, 'நீட்' தேர்வுக்கு பொறுப்பான சுகாதாரத் துறையோ, அரசு பள்ளி மாணவர்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. 'நீட்' தேர்வுக்கு தயாராக, தமிழக அரசு பயிற்சி தராததால், ஏழை மாணவர்களின், டாக்டராகும் கனவு நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

'நீட்' விண்ணப்பத்தில் பிழையா? : ஏப்., 12 முதல் திருத்தலாம் - 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தோர், சுய விபரங்களை, ஏப்., 12 முதல் திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, இந்த ஆண்டு முதல், தேசிய அளவிலான, 'நீட்' தேர்வு கட்டாயமாகி உள்ளது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஏப்., 5ல் முடிந்தது. இந்நிலையில், விண்ணப்பித்தோரின் சுய விபரங்கள் மற்றும் கூடுதலாக சேர்க்க வேண்டிய விபரங்களை சரி செய்ய, சி.பி.எஸ்.இ., அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, ஏப்., 12ல் வெளியாகும் என, அதிகாரிகள் கூறினர்.

வங்கிகளில் 'பான்' தெரிவிக்க அவகாசம்


வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களின் பான் எண்ணை தெரிவிப்பதற்கான கால அவகாசம், ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், மத்திய நேரடி வரி வாரியம், பிறப்பித்த உத்தரவில், 'வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களின் பான் எண்ணை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். 'பான் எண் இல்லாதவர்கள், விண்ணப்ப படிவம், 60ஐ பூர்த்தி செய்து தர வேண்டும்' என கூறப் பட்டிருந்தது. இதற்கு, கடந்த, பிப்., 28ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இப்போது, இதை, ஜூன், 30ம் தேதி வரை நீட்டித்து, மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

புதிய ரூ.200 நோட்டுகளை வங்கிகளில் வழங்க முடிவு


ஏ.டி.எம்.,களில் பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க, புதிய, 200 ரூபாய் நோட்டுகளை, வங்கி கிளைகள் மூலம் நேரடியாக வழங்க, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.பிரதமர் மோடி, கடந்த ஆண்டு, நவ., 8ல், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தார். இதையடுத்து, புதிதாக 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி வெளியிட்டது. ஆனால்,இந்த புதிய நோட்டுகளுக்கு ஏற்ப, ஏ.டி.எம்.,கள், மாற்றியமைக்க வேண்டி இருந்தது. இதனால், பல நாட்கள், ஏ.டி.எம்.,கள்முழுமையாக முடங்கின.

நிலைமை இப்போது சீராகி, ஏ.டி.எம்.,களில், 2,000 - 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கின்றன. எனினும், சில பகுதிகளில், ஏ.டி.எம்.,கள் செயல்படாமல், மக்கள், பாதிக்கப்பட்டு உள்ளனர். ரூ. 200 நோட்டு மேலும், சில்லரை தட்டுப்பாட்டை போக்க, புதிதாக, 200 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

அதேபோல், 10, 20, 50 நோட்டுகளையும், புதிதாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நோட்டுகளுக்கு ஏற்ப, ஏ.டி.எம்.,களை மாற்றுவதற்கு, குறைந்தது ஒரு மாத காலம் ஆகும்.அதனால், இந்த நோட்டுகளை, வங்கி கிளைகள் மூலம், மக்களிடம் நேரிடையாக வழங்க, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

Thursday, April 06, 2017

உயர்நிலை மேல்நிலை பள்ளிகளுக்கு 21ம் தேதி முதல் விடுமுறை


அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வருகிற 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேர்வுகள்

தமிழகத்தில் 3 ஆயிரத்து 40 அரசு உயர்நிலைப்பள்ளிகளும், 2 ஆயிரத்து 839 அரசு மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு கடந்த மாதம்(மார்ச்) 8-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி முடிவடைந்தது.

பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த மாதம் 2-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிந்தது.

பிளஸ்-1 மாணவர்களுக்கு தேர்வு முடிந்து விட்டது. 6-வது முதல் 9-வது வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது.

கோடை விடுமுறை

உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் வருகிற 20-ந்தேதி இந்த கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளாகக் கொண்டுள்ளது. 21-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை கால விடுமுறை விடப்படுகிறது. தொடக்க கல்வித்துறையில் அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள் மொத்தம் 33 ஆயிரம் உள்ளன. இந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு தேர்வு முடிந்து வருகிற 28-ந்தேதி கடைசி வேலைநாளாக உள்ளது. இந்த பள்ளிகளுக்கு 29-ந்தேதி முதல் கோடை விடுமுறையாகும்.

கோடை விடுமுறைக்கு பின்னர் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும். அன்றைய தினம் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் மறு நாள் திறக்கப்படும். எனவே வருகிற கல்வி ஆண்டில் அனைத்து அரசு பள்ளிகளும் ஜூன் 1-ந்தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திறக்கும் தேதி தள்ளிப்போகுமா?

இந்தநிலையில் வெயிலின் தாக்கம் கடினமாக இருப்பதால் பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி தள்ளிப்போகுமா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். பிளஸ்-1 வகுப்புகள் அனைத்தும் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் ஜூன் 15-ந்தேதிக்கு பிறகு திறக்கப்படும். கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதியும், பிளஸ்-1 வகுப்பு தொடங்கும் தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு ஏப்.10ல் தொடக்கம்


அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் தொடர்ந்து 30 வேலை நாட்களில் எவ்வித முன்னறிவிப்பின்றி ஒரு குழந்தை பள்ளிக்கு வராமல் இருந்தால் அக்குழந்தையை இடைநின்ற குழந்தையாக கருத வேண்டும்.

பள்ளியே செல்லா குழந்தைகள், எட்டாம் வகுப்பு முடிக்காமல் இடை நிற்பவர்கள் கண்டறியப்பட வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும் எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல் வீடு வாரியாக கணக்கெடுப்பு பணி நடைபெற வேண்டும். 18 வயதுக்குட்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளி மாணவர்களையும் கண்டறிய வேண்டும். வகுப்பு மாணவர்களிடம் கருத்துகேட்பு நடத்தி இடைநின்ற குழந்தைகள் உள்ளனரா என்று கேட்டறிதல் வேண்டும்.

கடந்த ஜூன் முதல் இந்நாள் வரை 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் வருகைப் பதிவேட்டை மாதவாரியாக சம்மந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர் பயிற்றுநர் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1,861 மையங்களில் 'டெட்' தேர்வு : கண்காணிப்பாளர் நியமனம் தீவிரம்


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, 1,861 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏப்., 29ம் தேதியும், 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஏப்., 30லும் தேர்வு நடத்தப்படுகிறது.

இதற்கான விண்ணப்ப பதிவு, மார்ச், 23ல், முடிந்தது. இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து, 8.47 லட்சம் விண்ணப்பங்கள் விற்றன. அவற்றில், இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு, இரண்டு லட்சத்து, 37 ஆயிரத்து, 293 பேர்; பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, ஐந்து லட்சத்து, இரண்டாயிரத்து, 964 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை, பள்ளிக் கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா மேற்கொண்டு வருகிறார்.

தேர்வுக்கு, 1,861 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 598 மையங்கள், ஏப்., 29 தேர்வுக்கானவை. தற்போது, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தலைமையில், கண்காணிப்பாளர், பறக்கும் படையினருக்கான நியமனம் நடந்து வருகிறது.