இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, November 29, 2016

புதிய கல்விக்கொள்கையில் பள்ளி கல்வி

1.எட்டாம் வகுப்பு வரைக்கான, 'வகுப்பு நிறுத்தம்' கொள்கை, இனி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பின்பற்றப்படும்.

2.இளம் வயதிலேயே மாணவர்களின் ஆர்வத்தையும், இயல்திறனையும் கண்டறிய, 'கல்வி விருப்பத் தேர்வுகள்' நடத்தப்படும். கற்றலுக்கு சிறப்புத் தேவை வேண்டியவர்கள், மெதுவாகக் கற்பவர்கள் மற்றும் குறை சாதனையாளர்களை கண்டறிந்து பயிற்சிகள் கொடுத்து, எதிர்காலத்தில் அவர்களை, தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்றவர்களாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

3.அறிவியல், கணிதம், ஆங்கிலம் என, மூன்று பாடங்களுக்கு, தேசிய அளவில் பொதுவான பாடத் திட்டமும்; சமூக அறிவியல் போன்ற இதர பாடங்களுக்கு, தேசிய மற்றும் மாநில அளவிலான, இரு பகுதிகள் இருக்கும் வகையில் பாடத் திட்டங்கள் பின்பற்றப்படும்.

4.பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வுத் தோல்விகளை குறைக்க, இந்தப் பாடங்களில் உயர் தகுதி நிலை மற்றும் குறைந்த தகுதி நிலை என, இரு தேர்வுகள் நடத்தப்படும்.

5.பாடநுாலில் உள்ளதை மட்டுமின்றி விரிந்த விழிப்புணர்வு, புரிதல், கற்றதன் முழுமைத் தெளிவு மற்றும் உயர்வகை சிக்கல்களுக்கு விடைதேடும் திறன் போன்றவற்றை கணிப்பிடும் வகையில் தேர்வுமுறைகள் மாற்றப்படும்.

6.அனைத்து விதமான பள்ளிகளிலும், குறைந்தபட்சம் இருக்க வேண்டிய வசதிகளும், மாணவர்கள் பெற வேண்டிய கற்றறி அளவுகளும் உறுதி செய்யப்படும்.

7.போதிய மாணவர்களும், உட்கட்டமைப்பு வசதியும் இல்லாத பள்ளிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, 'தொகுப்பு பள்ளிகளாக' மாற்றும் பணி மேற்கொள்ளப்படும்.

8. பள்ளிகளின் தரம், தலைமை, நிர்வாகம், ஆசிரியர்- திறன், தன்மதிப்பீடு போன்றவற்றின் அடிப்படையில், நாடு தழுவிய தரவரிசை தயாரிக்கப்படும்.

9.ஆங்காங்கு இருக்கும் சூழ்நிலைகள் மற்றும் முறைகளுக்கு ஏற்ப, இப்போதைய கல்வி உரிமைச் சட்ட அணுகுமுறையில் சில மாற்றங்கள் பரிந்துரைக்கப்படும். தேவையெனில், மிகவும் ஒதுக்கப்பட்ட மற்றும் புலம்பெயர்ந்த மற்றும் கடினமான சூழ்நிலைகளில் இருக்கும் குழந்தைகளுக்கென, 'மாற்றுப் பள்ளிகளை' உருவாக்க பரிந்துரைக்கப்படும்.

மேற்குறித்த கல்வி முறை மாற்றங்களை, 'தகுதி, சமவாய்ப்பு' என்ற அறிவுப் பார்வையில் ஏலாதவை என, ஒதுக்கிவிட முடியாது.

ஒவ்வொரு வகுப்பிலும், புரிதலில் உயர், சராசரி, கீழ் என்ற நிலைகளில் மாணவர்கள் இருப்பது தெரிந்த உண்மை. வகுப்பில் உள்ள அனைவரும் தேர்வு பெற வேண்டும் என்பதும், உயர் மதிப்பெண்களுடன் பலர், தங்களின் முழுத்திறமையை வெளிப்படுத்தி, வெற்றி பெற வேண்டும் என்பதும் இயல்பான எதிர்பார்ப்புகளே.

பின்தங்கிய மாணவர்களை, தேர்வில் வெற்றி நிலைக்குக் கொண்டு வர, ஆசிரியர்கள் கடினமாக செயல்பட வேண்டும். அதேபோல, உயர்நிலை மாணவர்களின் திறமையை மிளிரச் செய்து, அவர்களை உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டியதும் அவர்களின் கடமையாகும்.

இந்த இரு முயற்சிகளிலும், ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் ஈடுபடும் போது, பல நடைமுறை சிக்கல்கள் தோன்றுகின்றன. இந்த சிக்கல்களை தீர்க்க, இதுவரை நாம் எடுத்த எந்த முயற்சியும் வெற்றி தரவில்லை.

மாணவர்களின் கற்றறி நிலைக்கு கணிப்பீடு இல்லையெனில், பல தீமைகள் விளையும். ஆனால், கற்றறி தகுதியில், பல காரணங்களால் பின்தங்கியிருக்கும் குழந்தைகளை கணிப்பீடு என்ற பார்வையில், 10ம் வகுப்பை முடிப்பதற்குள், இரண்டு மூன்று ஆண்டு காலத்தை, பயனறச் செய்யும் செயல் எப்படி ஏற்புடைத்ததாகும்?

பெற்றோரிடம் உதவி பெற முடியாத, பெரும்பாலான இத்தகைய குழந்தைகளின் நிலை கருதி, எட்டா-ம் வகுப்பு வரை, 'வகுப்பு நிறுத்தம் இல்லை' என்ற கொள்கை, சில ஆண்டுகளாக செயலில் இருப்பதன் பயனாக, எந்த குறிப்பிடத்தக்க நன்மையையும் அவர்கள் பெற்றுவிடவில்லை.

ஒவ்வொரு ஆண்டிறுதி தேர்விலும், தோல்வி பெற்றவர்களுக்கு என, எடுக்க வேண்டிய தனி முயற்சிகள் சடங்காகி, அவர்களை தேர்வுக் கோட்டுக்கு ஒவ்வொரு முறையும் துாக்கி விட்டு விடும், உண்மைக்கு சான்றுகள் தேவையில்லை.

இப்போது, கல்வியறிவு இருந்தாலும் இல்லையென்றாலும், குழந்தைகளைப் பள்ளி நேரத்துக்கு முன்னும் பின்னும், தனிப்பயிற்சிக்கு அனுப்புவதே சிறந்த வழி என, பெற்றோர் நம்பத் தொடங்கி விட்டனர்.

பள்ளியில் ஒருவகை பயிற்சி, வீட்டுவேலை, தேர்வுகள், தனிப்பயிற்சியில் வேறொருவகை பயிற்சி, வீட்டுப்பாடம், தொடர் தேர்வுகள் - என, குழந்தைகள் தவிக்கின்றனர்.

வகுப்பு நிறுத்தம் எந்த வகுப்பில் இருந்தாலும் முடிவு ஒன்றே. இளமையில், இரண்டு மூன்று ஆண்டுகளை விரக்தியில் வீணடிப்பர். 10ம் வகுப்புத் தேர்வை எழுதப்போகும் எந்த மாணவனும், தன் படிப்பு காலத்தில் இந்த இழப்பைச் சந்திக்கக் கூடாது. இந்த நோக்கில், வகுப்பு நிறுத்தம் இல்லாமல் கற்பிக்கும் முறையை, நாம் செம்மைப்படுத்தியாக வேண்டும்.

தேர்வு மதிப்பீட்டின் நோக்கமும், தொடர்ந்து பின்தங்கும் மாணவர்களுக்கான
சிறப்புப் பயிற்சிகளை, எப்படிக் கொடுப்பது என்பதை நோக்கியே இருக்க வேண்டும்.

'கல்வி விருப் பத் தேர்வுகள்' இளம் வயதில், தீமையையே விளைவிக்கும். மாணவர்களுக்கு ஒரு பாடத்தில் விருப்பமில்லாமல் போவதற்கு, அதுவரை அந்தப் பாடத்தைக் கற்பித்த ஆசிரியரே பெரும் காரணம்; அடுத்து வரும் வகுப்புகளில் அவர்கள் விருப்பம் மாறும்.

மேலும், இளம்வயதில் மாணவர்கள் ஒரே பாடத்தில் சிறந்து விளங்குவதை விட, ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களின் அறிவை, -குறிப்பிட்ட அளவுக்கு பெற்றிருப்பதே அவர்களின் எதிர்காலத்துக்கு உதவியாயிருக்கும்.

பத்தாம் வகுப்பில் குறிப்பிட்ட பாடங்களுக்கு, இரண்டு தகுதிநிலைத் தேர்வுகள் வைக்கும் முறை தோல்வியையே காணும். தொழிற்கல்விக்கு என, மாணவர்களை நாம் துரத்தக் கூடாது.

இந்த முயற்சியில் நாம் முன்னமே தோற்றுள்ளோம். எம்.பில்., வகுப்பில் இப்படித் தான், 'முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே, பிஎச்.டி., ஆய்வில் சேரலாம்' என்ற முறை தோல்வியைச் தழுவியிருக்கிறது.

அறிவியல், கணிதம், ஆங்கிலம் மூன்றுக்கும், நாடு தழுவிய பாடத்திட்டம் என்ற கொள்கையும், தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரும் கொள்கையும் நன்மை தரும்.

நாடு தழுவிய அளவில், பள்ளிகளின் தரவரிசை காண்பதும், ஒவ்வொரு நிலையிலும் வெளிவரும் மாணவர்களின் கற்றறி நிலைகளை ஒப்பீட்டில் அறிவதும் வரவேற்கத்தக்க முயற்சிகளே.

'எழுபது, 80 சதவீத பள்ளிகள் தரம் தாழ்ந்தவை' என, முத்திரை குத்திவிட்டால் மட்டும் போதாது. அவற்றை உயர்த்துவதற்கு என்ன உதவியைச் செய்யப் போகிறோம்? அப்படி ஏதாவது செய்திருந்தால், 80 ஆயிரத்துக்கும் மேலான அரசு பள்ளிகளை, சமீப நாட்களில் மூடும் நிலை வந்திருக்காது.

ஐந்து ஆண்டுகளை (2010 - -15) கடந்திருக்கும், கல்வி உரிமைச் சட்டம், குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை.

நாட்டில், 8.3 சதவீத பள்ளிகள் மட்டுமே இச்சட்டம் முன்வைத்த, 10 எதிர்பார்ப்புகளுக்குள் இருப்பதும், 80 ஆயிரத்து, 647 மத்திய, -மாநில அரசு பள்ளிகள் மூடப்பட்டதும், 21 ஆயிரத்து, 351 தனியார் பள்ளிகள் அங்கீகாரமில்லாமல் இயங்குவதும் தெரிய வந்துள்ளது.

உண்மையில், கல்வி உரிமைச் சட்டத்தின் தோல்வியை மூடி மறைக்கும் முயற்சியையும், அதன் மீது அக்கறை கொள்ளாத போக்கையுமே புதிய கல்விக்கொள்கை வடிவம் நமக்குக் காட்டுகிறது. கருத்துக்கேட்கும் நிலையிலேயே எதிர்ப்புகளாலும், இப்போது எல்லா நிலைகளிலும் புதிய கொள்கை நீர்த்துக் கொண்டிருப்பதில் வியப்பேதுமில்லை.

தமிழகத்தில் வரும் கல்வியாண்டிலிருந்து, பிளஸ் 1, பிளஸ் 2க்குப் புதிய பாடத்திட்டம் தாயார் நிலையில் இருப்பதாகச் செய்தி வந்துள்ளது; 'மாற்றங்கள் இருக்கும், ஆனால் பெரிய அளவில் இருக்காது' என்ற செய்தியும் வருகிறது. அது உண்மையானால், நம் மாணவர்கள், தேசிய அளவில் மீண்டும் தோல்வியை சந்திக்க நேரிடும்.

அதைத் தவிர்க்க, தேசிய மற்றும் உலக அளவிலான போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு, தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லுனர்கள் தயாரிக்கும் பாடத்திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அதற்கும் மேலான பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

திடீரென அதைச் செய்ய முடியாதெனில், எப்போதைக்கு தயாராகும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் போட்டிகளில் பின்னுக்கு ஓடுபவர்களாக, நம் குழந்தைகள் இருப்பதை தவிக்க முடியும்.

அரசு பள்ளிகளுக்கு சைல்ட் பிரண்ட்லி டாய்லெட்


அரசு பள்ளிகளுக்கு சைல்ட் பிரண்ட்லி டாய்லெட்

தமிழகம் முழுவதும் 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்' திட்டத்தில் அரசு பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கழிப்பறைகள் பராமரிக்க துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆயினும் பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளன. இதனால் மாணவர்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர்.

இதனை தடுக்கவும், சிறப்பாக பயன்படுத்துவோரை ஊக்கப்படுத்தவும் மாநில புதுமை நிதி மூலம் 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்' திட்டத்தை செயல்படுத்த தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

முன்னோடி திட்டமாக மாவட்டந்தோறும் சிறப்பாக கழிப்பறைகளை பராமரிக்கும் ஆறு பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ஒன்பது பள்ளிகள் தேர்வு செய்யப்படுகின்றன.

தேர்வு செய்யப்படும் பள்ளி கழிப்பறைகள் நவீனப்படுத்தப்படும்.

ஆண், பெண் கழிப்பறைகளுக்கு தனித்தனியாக 2 ஜன்னல்கள், கதவு, கை கழுவுமிடம், கண்ணாடி, சோப்பு, டவல், கழிப்பறை சுவர்களில் வண்ணமயமான சித்திரங்கள், தண்ணீர் வசதி போன்றவை ஏற்படுத்தப்படும். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு பள்ளிகளை தேர்வு செய்து, மதிப்பீடு தயாரிக்கும் பணியில் ஈடு பட்டுள்ளது.

*CCE-மூன்றாம் வாரம் ஆங்கில வழி கணக்கு*

Click below

https://app.box.com/s/cpfyqckwx3g0wlja9qy2z0bfnfgjwfbx

Monday, November 28, 2016

TET genuiness form


posted from Bloggeroid

Corrected English worksheet

Click below

https://drive.google.com/file/d/0B_YeNwgt8TH5RFhTbEx6aG1TRG8/view?usp=drivesdk

வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் தளர்வு

வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் தளர்வு

வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் தற்போது வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வரை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கட்டுப்பாடு காரணமாக வங்கியில் பணத்தை ‘டெபாசிட்’ செய்ய வாடிக்கையாளர்கள் தயங்கியதாக தெரியவந்தது.
எனவே பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டை தளர்த்தி ரிசர்வ் வங்கி நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதன்படி, தற்போது வரையறுக்கப்பட்டுள்ள தொகையை (ரூ.24 ஆயிரம்) விட கூடுதல் தொகையை எடுத்துக்கொள்ள அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அப்படி எடுக்கும் போது அந்த தொகை 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

விடுப்பு எடுக்கும் அரசு ஊழியருக்கு சம்பளம் பாதியாக குறைப்பு


சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு (அரைச்சம்பள விடுப்பு) எடுக்கும், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வீட்டுவாடகை, மருத்துவ, அகவிலைப்படி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அரைச்சம்பள விடுப்பாக 90 நாட்கள் எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

பத்து ஆண்டுகள் பணிபுரிந்தோருக்கு 180 நாட்கள் அனுமதிக்கப்படுகிறது. இந்த விடுப்பு எடுப்போருக்கு அடிப்படை ஊதியத்தில் அரைச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும். ஆனால் வீட்டுவாடகை, மருத்துவ, அகவிலைப்படி முழுமையாக தரப்படும். தற்போது அடிப்படை சம்பளம் போன்றே படிகளையும் பாதியாக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பலர் தொலை துார கல்வி மூலம் பல்கலைகளில் பி.எட்., படிக்கின்றனர். பி.எட்., ல் 90 நாட்கள் ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும். இந்த பயிற்சிக்காக ஆசிரியர்கள் அரைச்சம்பள விடுப்பு எடுத்து வந்தனர். தற்போது படி பாதியாக குறைக்கப்பட்டதால் மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் வரை பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Sunday, November 27, 2016

உலக தரத்துக்கு உயர்த்த பள்ளிகளில் தர மதிப்பீட்டுத்திட்டம்


உலக தரத்துக்கு இந்திய பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு, அதுகுறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட செயல் திட்டங்கள் மூலம் அறிவார்ந்த குழந்தைகளை உருவாக்குவது அனைத்துப் பள்ளிகளின் முக்கியக் கடமையாகும். செயல் திட்டங்கள் சிறப்பாக அமல்படுத்தப்பட வேண்டுமானால் பள்ளிகளில் கட்டமைப்பு வசதி, மனிதவளம், கற்றல், கற்பித்தல் முறை, சமூகத்துடன் இணைந்து செயல்படும் நடைமுறை போன்றவை நன்முறையில் பேணுதல் அவசியம்.
பள்ளிக்கு அரசு வழங்கும் சலுகைகள், திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் அனைத்துப் பள்ளிகளும் தாமாகவே பள்ளிச் சூழலுக்கு ஏற்ப செயல்களை திட்டமிட்டு தகுந்த மனித வளத்துடன் நடைமுறைப்படுத்துவது மிகுந்த பலனைத் தரும். அந்த வகையில் ஒவ்வொரு பள்ளியும் தமது முன்னேற்றத்தை அவ்வப்போது சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.
அதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்பேரில், தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம், இந்தியாவில் உள்ள பள்ளிகளின் தரத்தை உலக தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகத்தால் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு, இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளின் தரமானது பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் சுய மதிப்பீடும், ஆய்வு அலுவலர்கள், வல்லுநர்கள் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் அடங்கிய குழு மூலம் புற மதிப்பீடும் செய்யப்படுகிறது.
இதற்காக பள்ளித் தரங்களம் மற்றும் மதிப்பீடு திட்ட இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு பள்ளிக்கும் உள்ளீடு முகவரி மற்றும் கடவுச் சொல் உருவாக்கி அதன்மூலம் சுய மதிப்பீடு அறிக்கைகளை பதிவேற்றம் செய்யலாம். மேலும் மதிப்பீடு சார்ந்த கருத்துருக்களை பதிவிறக்கம் செய்யலாம்.
அதேபோல புற மதிப்பீட்டாளர்
களும் ஒவ்வொரு பள்ளிக்கும் உள்ளீடு முகவரி மற்றும் கடவுச் சொல் உருவாக்கி அதன் மூலம் புற மதிப்பீட்டு விவரங்கள் செலுத்தி, புற மதிப்பீட்டு அறிக்கையினை உருவாக்கலாம்.
அவ்வாறு மதிப்பீடு அடிப்படையில் முதல், இரண்டு மற்றும் மூன்று என பள்ளிகள் தர அந்தஸ்து (கிரேடு) வழங்கப்
படுகிறது.
முதல் தரம் அந்தஸ்து என்றால் சுமார், 2-வது சாதாரணம், 3-வது தர அந்தஸ்து பெற்ற பள்ளி சிறந்த பள்ளி ஆகும்.
2016-2017 ஆண்டிலேயே இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது 2016 நவம்பர் மாதத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு இத்திட்டம் குறித்த அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளிகள் அனைத்தும் உலகத் தரத்துக்கு இணையாக கல்வி வழங்கும் பள்ளிகளாக தரம் உயர்வதையும், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே சீரான தரத்துடன் கல்வி வழங்குவதையும் இத்திட்டம் உறுதிப்படுத்தும்.

தரங்கள் மதிப்பீடு செய்ய ஏழு முக்கியக் காரணிகள்

1. பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம், கணினி, வகுப்பறைகள், மின் சாதனங்கள், நூலகம், குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட வளங்களை கையாளுதல்.

2. ஆசிரியர்கள் கற்போரை புரிந்து கொள்ளுதல், ஆசிரியர்களின் பாடம் மற்றும் கற்பித்தல் அறிவு, கற்பித்தலுக்கான திட்டமிடல் உள்ளிட்ட கற்றல், கற்பித்தல் மற்றும் மதிப்பிடுதல் ஆகும்.

3. கற்போரின் வருகை, கற்போரின் பங்கேற்பு மற்றும் ஈடுபாடு, கற்போரின் வளர்ச்சி ஆகியவை உள்ளடங்கிய கற்போரின் முன்னேற்றம், அடைவு மற்றும் வளர்ச்சியாகும்.

4. புதிய ஆசிரியர்களுக்கான ஆயத்தப் பயிற்சி, ஆசிரியர்களின் வருகை, செயல் இலக்குகளை வரையறுத்து பொறுப்புகளை ஒப்படைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆசிரியர்களின் செயல்பாடு மற்றும் பணி சார்ந்த வளர்ச்சியினை நிர்வகித்தல் ஆகும்.

5. தொலைநோக்குச் சிந்தனைகளை உருவாக்குதல், மாற்றம் மற்றும் முன்னேற்றத்துக்கான செயல்பாடுகளை உள்ளடக்கிய பள்ளித் தலைமை மற்றும் மேலாண்மையாகும்.

6. உள்ளடங்கிய கற்றல் சூழல், சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி, உடல் பாதுகாப்பு, உளவியல் ரீதியான பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய உள்ளடங்குதல், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு.

7. பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு ஒருங்கிணைப்பு, பள்ளி முன்னேற்றத்தில் பங்கு, பள்ளிக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ளத் தொடர்பு, சமுதாயம கற்றல் வளம், சமுதாய மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஆக்கப்பூர்வமான சமுதாய பங்கேற்பு.

அறிவியல் கண்காட்சி: தேர்வாகாத அரசு பள்ளிகள்


தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து, எந்த ஒரு அரசு பள்ளியும் தேர்வாகவில்லை. மத்திய அரசின், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியை, ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான கண்காட்சி, மாவட்ட மற்றும் மாநிலங்கள் அளவில் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் இறுதிப் போட்டி, டிச., 13 முதல், 19 வரை, பெங்களூரில் நடக்கிறது. இதில், பல மாநிலங்களின், 209 படைப்புகள் இடம் பெற உள்ளன. தென் மாநிலங்களில், கர்நாடகாவில் ஒன்பது; கேரளாவில் ஒன்று; ஆந்திராவின் நான்கு அரசு பள்ளிகள், தேசிய போட்டியில் பங்கேற்கின்றன. புதுச்சேரி சார்பில், மாகியில் உள்ள, ஜவஹர்லால் நேரு அரசு பள்ளி பங்கேற்கிறது.

தமிழகத்தில், இரு தனியார் பள்ளிகள் மட்டுமே தேர்வாகியுள்ளன; அரசு பள்ளி எதுவும் தேர்வாகவில்லை. இது, அரசு பள்ளி மாணவர்களையும், கல்வியாளர்களையும் கவலை அடையச் செய்துள்ளது.

நூலகத்தை தூசி தட்டி வையுங்க..பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு


'அரசு பள்ளிகளில் ஆய்வகம் மற்றும் நுாலகத்தை துாசி தட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து வகுப்புகள் நடத்த வேண்டும்' என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

● மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த, வழிபாட்டு கூட்டத்தில் அவர்களை பேச வைக்க வேண்டும். பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்த வேண்டும்

● திறந்தவெளியில் மலம் கழிப்பதால் நோய் பரவும் என்பதை, கிராமப்புற மாணவர்கள் மூலம் அவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அத்துடன், கழிப்பறைக்கு செல்லும் போது காலணி அணியும் படியும், சோப்பு பயன்படுத்தி கை கழுவும்படியும் அறிவுறுத்த வேண்டும்

● பள்ளி வளாகத்தில் குப்பை, தேவையற்ற பொருட்கள் குவியாமல் பார்த்து கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்து, மாணவர்களுக்கு துாய குடிநீரை வழங்க வேண்டும்

● நுாலகம், ஆய்வகம், வகுப்பறை, கணினிகள், ஆவணங்கள், மாணவர்கள் அமரும் பெஞ்ச் போன்றவற்றில் துாசி படியாமல், சுத்தமாக பராமரிப்பது அவசியம்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

CCE-worksheet question wise excel sheet

Click below

https://app.box.com/s/obpxjzfvcx9j1wk7e9imniuq0veh6rgs

13-10-2016 -க்கு பிறகு அரைச்சம்பள விடுப்பில் செல்பவர்கள் இனி DA,HRA,MA போன்ற படிகளை முழுமையாக பெற முடியாது.



posted from Bloggeroid

Saturday, November 26, 2016

CCE WORKSHEET TEST ABSTRACT- FORM

Click below

https://drive.google.com/file/d/0ByAQcFNqemV0ck5HN0NlZUpSN2M/view?usp=sharing

கருவூலங்களில் ஸ்கேன் செய்து கணினியில் பதிவு அரசு ஊழியர்கள் பணி பதிவேடு டிஜிட்டல் மயமாகிறது


அரசு ஊழியர்களின் பணி பதிவேடு டிஜிட்டல் மயமாகிறது. கருவூலங்களில் இது கணினியில் பதிவு செய்யப்படும்.அனைத்து சார்நிலை கருவூலங்களிலும், மாவட்ட கருவூலங்களிலும் அரசு ஊழியர்களின் பணி பதிவேட்டை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடைபெற உள்ளது.

இந்த முறையில் பணி பதிவேட்டின் பக்கங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் பதிவு செய்யப்படும். இவ்வாறு ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் ஒரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும். அதனை அரசு ஊழியர்கள் கவனமாக சரிபார்த்து திருத்தங்கள் இருப்பின் உடன் சரி செய்யவேண்டும். இப்பணி முடிந்த பின்னர் பணி பதிவேடு ‘டிஜிட்டல் சர்வீஸ் ரெஜிஸ்டர்’ என்று அழைக்கப்படும்.இந்த டிஜிட்டல் மயத்திற்காக பணி பதிவேட்டில் உள்ள முதல் பக்க சுய விபரம் மற்றும் புகைப்படம், பணி நியமன ஆணை பதிவு செய்யப்பட்ட விபரம், பணி வரன்முறை தகுதிகாண் பருவ பதிவுகள், அனைத்து கல்வி தகுதிகள் சார்ந்த பதிவுகள், கல்வி தகுதிகளின் உண்மை தன்மை சார்ந்த பதிவுகள், ஜிபிஎப், சிபிஎஸ் திட்டங்களில் சேர்ந்தமை சார்ந்த பதிவுகள், பணிக்காலம் சரிபார்ப்பு, உயர் கல்வி பயில முன்பு அனுமதி பெறப்பட்ட பதிவுகள், பணியிட மாறுதல், பதவி உயர்வு சார்ந்த பதிவுகள், ஊதிய நிர்ணயம், தேர்வு நிலை, சிறப்பு நிலை, ஊக்க ஊதியம் சார்ந்த பதிவுகள், பல்வேறு வகையான விடுப்பு பதிவுகள், குடும்ப உறுப்பினர்கள், வாரிசு நியமன படிவங்கள் போன்றவை இவற்றில் சரிபார்க்கப்படும்.

இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ‘பள்ளி கல்வித்துறையில் பணி பதிவேட்டை டிஜிட்டல் மயமாக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். பதிவுகளை ஒருமுறை தனி கவனம் செலுத்தி ஆய்வு செய்த பின்னர் பணி பதிவேடுகளை பாதுகாப்பான முறையில் அந்தந்த கருவூலங்களில் சென்று டிஜிட்டல் மயமாக்கும் பணியை நிறைவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கிட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். முதன்மை கல்வி அலுவலகத்தில் இதற்கென ஒரு பதிவேடு தொடங்கி ஒவ்வொரு நாளும் இப்பணியை நிறைவு செய்த பள்ளிகள் சார்ந்த விபரங்களை பதிவு செய்து கண்காணித்திட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழிப்பறை பராமரிப்பிற்கு தனியார் ஒப்பந்த ஊழியர்கள் அரசு பள்ளிகளில் ஒரு மாதத்திற்குள் நியமிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில், கழிப்பறையை சுத்தப்படுத்த, தனியார் ஒப்பந்தம் மூலம் ஒரு மாதத்திற்குள் பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி செய்து தரவும், கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்கவும், மதுரை ஐகோர்ட் கிளை, தமிழக அரசுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. இதன் எதிரொலியாக, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் பனீந்திர ரெட்டி, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:

● அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை பராமரிக்க, 160.77 கோடி ரூபாய் செலவிலான திட்டத்தை, 2014 ஜூலையில், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், கழிப்பறைகளை சுத்தப்படுத்த, தனியாக ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்

● மாநகராட்சி, நகராட்சிகளில் இந்த ஊழியர்களுக்கு சொத்து வரி வசூலில், கல்வி நிதிக்கு ஒதுக்கப்படும் தொகை மூலம் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, திடக்கழிவு மேலாண்மை நிதியில் இருந்து சம்பளம் வழங்க வேண்டும்

● அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை பராமரிக்கும் பொறுப்பை அந்தந்த உள்ளாட்சிகள் ஏற்க வேண்டும். இந்த பணிக்கு உள்ளாட்சிகள் தான் ஆட்களை நியமிக்க வேண்டும். பராமரிப்பு பணிகள் முறையாக நடக்கிறதா என, உள்ளாட்சி அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்

● பள்ளி நிர்வாகங்களுடன் பேசி, காலையில் பள்ளி துவங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன், ஊழியர்கள் சென்று கழிப்பறைகளை சுத்தப்படுத்தவும், பள்ளி முடியும் நேரம் வரை அவர்கள் பணியில் இருக்கவும், மதிய உணவு இடைவேளைக்கு பிறகும் கழிப்பறையை சுத்தம் செய்யவும் அறிவுறுத்த வேண்டும்

● வகுப்பறை பராமரிப்பு, பள்ளி வளாகம் பராமரிப்பு பணிகளுக்கும் இந்த ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்

● அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், தினக்கூலி பணியாளர்களுக்கு நிர்ணயிக்கும் சம்பளத்தையே, இந்த ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்

● அரசு ஒப்பந்த விதிகளின் படி இந்த பணிக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும். ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டு இருந்தால், மகளிர் சுய உதவிக்குழு, சமுதாய அமைப்புகளையும் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்க அனுமதிக்கலாம்

● பள்ளி தலைமை ஆசிரியர்கள், பராமரிப்பு பணி குறித்து பதிவேடு பராமரிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்திற்கு திருப்தியில்லாத பராமரிப்பு பணி ஒப்பந்ததாரரை, உடனடியாக நீக்க வேண்டும்

● பெண்கள் பள்ளியில் கட்டாயம் இரண்டு பெண் துப்புரவு பணியாளர்களும், ஆண்கள் பள்ளியில் இரண்டு ஆண் அல்லது பெண் துப்புரவு பணியாளர்களும், இருபாலரும் படிக்கும் பள்ளியில் ஒரு பெண், ஒரு ஆண் துப்புரவு பணியாளர்களும் பணியமர்த்தப்பட வேண்டும்

● பெண்கள் பள்ளியில், 'நாப்கின்'களை பாதுகாப்பாக அகற்றுவது இந்த பராமரிப்பு பணி நிறுவனத்தின் வேலையாகும்

● அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை பராமரிப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட ஊழியர் விபரங்களை, ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள், அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கரும்பலகையில் திறனாய்வு தேர்வு பின்நோக்கி செல்லும் கல்வித்துறை


மாணவர்களின் கற்றல் தினறாய்வு தேர்வு வினாக்களை, கரும்பலகையில் எழுதி நடத்துமாறு, வெளியிட்ட அறிவிப்பு, கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பாண்டியராஜன் உத்தரவுப்படி, ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, கடந்த 15ம் தேதி முதல், தினசரி தேர்வு நடக்கிறது.

வகுப்பு நேரத்தில், பாடவாரியாக தேர்வு நடத்தி, மாணவர்களின் கற்றல் திறன் அறிந்து, பாடம் நடத்த உத்தரவிடப்பட்டது. வினாத்தாள் தயாரிக்கும் பணிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டது.மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி மையம் வாயிலாக, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களின், 'இ-மெயில்' முகவரிக்கு, வினாத்தாள் அனுப்பப்பட்டது. ஆன்லைனில், வினாத்தாள் பள்ளிக்கு வந்ததால், அச்சிட்டு மாணவர்களுக்கு விநியோகிக்க, போதிய நிதியில்லை என, ஆசிரியர்கள் புகார் அளித்தனர்.

வினாத்தாள் அச்சடிப்பு குறித்து, தகவல் இல்லாததால், கல்வித்துறை அதிகாரிகளும் மவுனம் சாதித்தனர். இந்நிலையில், கடந்த, 21 ம் தேதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து, உயர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 10 கேள்விகள் இதில், 'சி.சி.இ., எனும் தினசரி கற்றல் திறனாய்வு தேர்வு வினாத்தாளை, ஜெராக்ஸ் எடுத்து மாணவர்களுக்கு அளிக்க வேண்டாம். வினாக்களை கரும்பலகையில் எழுதி போட்டு, மாணவர்களின் நோட்டில் விடை எழுதுமாறு அறிவுறுத்தி, மதிப்பிட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளது.

இந்த வினாத்தாளில், பாடவாரி யாக, 10 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். ஒரே வரியில் சிந்தித்து விடையளிக்கும் படியாக, கேள்விகள் இருப்பதால், பெரும் ஆதரவை பெற்றது. இதற்கு, மாணவர்களுக்கு பிரத்யேக வினாத் தாள் வழங்காமல், கரும்பலகை யில் எழுதி போட்டு தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கற்றல் தினறாய்வு தேர்வு வினாக்களை, கரும்பலகையில் எழுதி நடத்துவதில் நிறைய சிக்கல் உள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்களின் புரிதலுக்காக, வண்ணங்கள் அறிதலுக்கான கேள்விகள் உள்ளன. இதை, கரும்பலகையில் எழுதி அறிவது சிரமம். மேலும், பொருத்துதல், இணையற்ற படங்களை கண்டறிய, ஓவியம் வரைய வேண்டியுள்ளது. இதை மாணவர்களும், நோட்டில் வரைந்து விடையளிக்க வேண்டும். ஓய்வு நேரம் இல்லை தேர்வு நடத்த, 10 நிமிடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. தினசரி விடைகளை திருத்தி, மதிப்பாய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, செயல்வழி கற்றல் அட்டைகளை நிரப்புவதால், அதிக எழுத்துப்பணியால் திண்டாடுகிறோம். இதில், திறனாய்வு தேர்வை நடத்தி, மதிப்பாய்வு செய்தால், ஓய்வு நேரம் கிடைக்க வழியில்லை. இதற்கு பதிலாக, வினாத்தாளிலே விடையளிக்கும் படியாக தேர்வுத்தாள் வடிவமைத்து, பள்ளிகளுக்கு வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி


posted from Bloggeroid