இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, May 26, 2016

பள்ளிகளில் ரவா கேசரி உப்புமா சாத்தியமா?

தமிழகத்தில் தற்போது சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்கு டிபன் வழங்கப்படும் என்று அறிவித்து முதல்வர் ஜெயலலிதா பதவியேற்ற முதல் நாளிலேயே அந்த திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

ஏற்கனவே அரசு தொடக்கப்பள்ளிகள் முதல் உயர்நிலைப்பள்ளிகள் வரை,அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சத்துணவு பணியாளர்கள் சம்பளம் போதாது என்று பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளில் காலை டிபன் என்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே அரசு பள்ளிகளில் மத்திய உணவாக ஒரு நாள் புளியோதரை, மறுநாள் வெஜ்டபிள் பிரியாணி, அடுத்த நாள் சாம்பார் சாதம், கறிவேப்பிலை சாதம், லெமன் சாதம் என்று 13  வகையான சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் தினமும் ஒவ்வொரு மாணவனுக்கு முட்டையும், முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழமும் வழங்கப்படுகிறது. சத்துணவு திட்டத்தில் மதிய உணவுக்காக ஒவ்வொரு மாணவனுக்கும் ரூ.6.88 பைசா என்று நிர்ணயம் செய்து  உணவுப்பொருள்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இந்த மதிய உணவு திட்டத்தில் 55 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். சத்துணவு திட்டத்தில் மதிய உணவு தயாரிப்பில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், உதவியாளர்கள் என்று 78 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். சத்துணவு பணியாளர்கள் சம்பளம், உணவுப்பொருள்கள் என்று ஒவ்வொரு ஆண்டும் அரசு  ரூ,747 கோடியே 28 லட்சம் செலவிடப்படுகிறது.

தற்போது அரசு பள்ளிகளில் காலை டிபன் என்ற அறிவிப்பு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பபை பெற்றுள்ளது. ஆனால், சத்துணவு பணியாளர்கள் தரப்பிலோ கூடுதல் பணிச்சுமை, சம்பளம் பற்றாக்குறை என்று புலம்புகின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கே.பழனிச்சாமியை தொடர்பு கொண்டு பேசினோம். ''தமிழகத்தில் ஆரம்பத்தில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேர் பணியாற்றினோம். ஆனால், பணி நிரந்தரம் இல்லாதது, சம்பளம் பற்றாக்குறை போன்ற காரணங்களினால் பல ஆயிரம் பேர் வேறு பணிகளுக்கு சென்று விட்டனர். தற்போது 40 ஆயிரம் காலியிடங்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட இப்போது 80 ஆயிரம் பேர்தான் பணியாற்றுகின்றனர். சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகராட்சி பகுதிகளில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளமும், சமையலருக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயும், உதவியாளருக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகிறது.

மதிய உணவு தயாரிப்பதற்காக காலை 9 மணிக்கு பள்ளிக்கு சென்று மதியம் இரண்டரை மணிக்கு பணியை முடித்து விடுவோம். இப்போது காலை டிபன் திட்டத்திற்காக காலை 6 மணிக்கு சென்றால்தான் 8 மணிக்குள் டிபன் தயாரித்து மாணவர்களுக்கு வழங்க முடியும்,. பிறகு மதிய உணவு தயாரிக்க வேண்டும். இதனால் பணி நேரம் அதிகரித்து கூடுதல் பணிச்சுமையால் சிமரப்படுவோம். எங்களுக்கு சம்பளமும் போதவில்லை. பணி நிரந்தரம் செய்வதும் இல்லை. இதை விட முக்கியமான பிரச்னை விலைவாசி உயர்வு காரணமாக மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த விலையில் தரமான உணவை கொடுக்க முடிவதில்லை. எனவே, அரசு மாணவர்களுக்கு நிர்ணயித்த விலையை உயர்த்தி வழங்க வேண்டும். காலை டிபனால் பணிச்சுமை கூடுவதால் சம்பளத்தை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

இதுதொடர்பாக சத்துணவு திட்டத்தின் இணை இயக்குனர் இளங்கோவனை தொடர்பு கொண்டோம். ''முதல்வர் அறிவித்தபடி முதல் கட்டமாக ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள 26 ஆயிரத்து 709 அரசு தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் தொடக்கப்பள்ளியில் படிக்கும் 266 லட்சத்து 85 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். ஒரு மாணவனுக்கு காலை டிபனுக்காக ரூ.3 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சத்துணவு பணியாளர்கள் காலை 6 மணிக்கு பள்ளிக்கு வந்து 8 மணிக்கு மாணவர்களுக்கு டிபன் வழங்குவார்கள். ஒவ்வொரு மாணவனுக்கும் 100 கிராம் எடையளவு கொண்ட டிபன் வழங்கப்படும்.

வாரத்தில் 5 நாட்களுக்கு முதல் நாள் கோதுமை உப்புமா, கேழ்வரகு புட்டு, ரவா கேசரி, சேமியா கேசரி, சவ்வரிசி கஞ்சி என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை டிபன் வழங்கப்படும். இதன் மூலம் மளிகை சாமான்கள், போக்குவரத்து செலவு என்று ஒரு ஆண்டுக்கு ரூ.354 கோடி ரூபாய் 86 லட்சம் ரூபாய் செலவாகும். பிறகு அடுத்தகட்டமாக மற்ற பள்ளிகளுக்கும் இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும்.

காலை டிபன் தொடர்பாக சத்துணவு துறை மூலம் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அந்த நாள் முதல் பள்ளிகளில் காலை டிபன் வழங்கப்படுமா இல்லை தள்ளிப்போகுமா என்று தெரியவில்லை. அரசிடம் இருந்து இந்த திட்டம் தொடர்பாக முறையான அறிவிப்புகள் இன்னும் வரவில்லை. விரைவில் வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கோம்'' என்றார்.

இருதரப்பிலும் பேசியதிலிருந்து முதல்வர் அறிவித்த காலை உணவு திட்டம் சாத்தியம்தான் என்று தோன்றினாலும், ஆள் பற்றாக்குறையால் காலை டிபன் தயாரிக்கும் பணி தாமதமாகலாம் எனவும், விலை ஏற்றத்தால், தரமான பொருட்களை உபயோகித்து இதன் மூலம் சுவையான உணவு கொடுக்கப்படாமல் போகலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஒரு துறை வெற்றிகரமாக இயங்கவேண்டுமானால், அந்த உள்ள அனைத்து குறைகளையும் அரசு முதலில் களைய வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

-எம்.கார்த்தி

Tuesday, May 24, 2016

பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம்

தமிழகம் மற்றும் புதுச்சேரி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஈரோடு மாவட்டம் 98.48 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 86.49 சதவீத தேர்ச்சியுடன் வேலூர் கடைசி இடத்தை பெற்றுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம்:

கன்யாகுமரி - 98.17

திருநெல்வேலி - 95.3

தூத்துக்குடி - 96.93

ராமநாதபுரம் - 97.1

சிவகங்கை - 96.66

விருதுநகர் - 97.81

தேனி - 96.57

மதுரை - 95.68

திண்டுக்கல் - 92.57

ஊட்டி - 93.25

திருப்பூர் - 95.62

கோவை - 96.22

ஈரோடு - 98.48

சேலம் - 94.21

நாமக்கல் - 96

கிருஷ்ணகிரி - 95.05

தர்மபுரி - 94.77

புதுக்கோட்டை - 94.46

கரூர் - 96.67

அரியலூர் - 92.52

பெரம்பலூர் - 96.52

திருச்சி - 95.92

நாகப்பட்டினம் - 89.43

திருவாரூர் - 89.33

தஞ்சாவூர் - 95.39

புதுச்சேரி - 92.42

விழுப்புரம் - 88.07

கடலூர் - 89.13

திருவண்ணாமலை - 89.03

வேலூர் - 86.49

காஞ்சிபுரம் - 92.77

திருவள்ளூர் - 90.84

சென்னை - 94.25

துபாய் - 100

பத்தாம் வகுப்பு: விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய புதன்கிழமை முதல் சனிக்கிழமை (மே 28) வரை விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் புதன்கிழமை காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, தேர்வர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய சனிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம். தனிதேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய பள்ளி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத்துக்கு ரூ. 305-ம், பிற பாடங்களுக்கு ரூ. 205-ம் மறுகூட்டலுக்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

மறுகூட்டலுக்குக் கட்டணம் செலுத்தும் முறை:

மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே மறுகூட்டல் முடிவுகளை தேர்வர்கள் அறிந்து கொள்ள முடியும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் முடிவுகள் புதன்கிழமை காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன. இந்தப் பொதுத்தேர்வு மார்ச் 15 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது.

தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகளை தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறியலாம். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய, கிளை நூலகங்கள் ஆகியவற்றில் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: தேர்வர்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன், மாணவர்கள் பள்ளிகளிலும்,தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றலாம்.

சிறப்பு துணைத் தேர்வு: தேர்வெழுத பதிவுசெய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது என்று அரசுத் தேர்வுகள் இயக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விலையில்லா,சீருடை மற்றும் புத்தகங்கள்-1முதல் 8 வகுப்பு வரை 25/5/16 முதல் 31/5/16 வரை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு 1/6/16 அன்று அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த இயக்குனர் உத்திரவு

Monday, May 23, 2016

வங்கி சேமிப்பு கணக்கு தொகைக்கு 24 மணி நேரத்துக்கு ஒரு முறை வட்டி


வங்கி சேமிப்பு கணக்குக்கு தினமும் வட்டி கணக்கிட்டு, 90 நாட்களுக்கு, ஒரு முறை அளிக்கும் நடைமுறை வாடிக்கையாளருக்கு கூடுதல் பயன் அளிக்கும்; வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்' என, வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில், வங்கிகளில் உள்ள சேமிப்பு கணக்குக்கு, 3.5 சதவீத வட்டி அளிக்கப்பட்டது. சேமிப்புக் கணக்கில், மாதத்தின், 10ம் தேதி முதல், 30ம் தேதி வரை உள்ள குறைந்த பட்ச சேமிப்பு தொகைக்கு வட்டி கணக்கிடப்பட்டது. இந்த வட்டித்தொகையை, ஆறு மாதங்களுக்கு, ஒரு முறை வங்கிகள் அளித்தன. தற்போது சேமிப்பு கணக்கில் உள்ள தொகைக்கான வட்டி, 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரத்துக்கு, ஒரு முறை வட்டி கணக்கிடப்படுகிறது.

இந்த வட்டித் தொகை, மூன்று மாதத்துக்கு, ஒரு முறை அளிக்கப்படும். இதுகுறித்து, இந்தியன் வங்கி மூத்த அதிகாரி சீனிவாசன் கூறியதாவது:வாடிக்கையாளர்கள், 'டெர்ம் டிபாசிட்' எனப்படும், பருவ கால வைப்புத் தொகையை செலுத்தி வட்டி பெற, பருவ காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். பருவ காலம் முடிவதற்கு முன், வைப்புத் தொகையை திரும்ப எடுக்கும் போது முழு வட்டி கிடைக்காது. சில வங்கிகள், வைப்புத் தொகை காலம் முடிவதற்கு முன் எடுக்கப்படும் பணத்துக்கு அபராதமும் விதிக்கின்றன.

இந்த நிலையில் சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது; 24 மணி நேரத்துக்கு ஒரு முறை, வட்டி கணக்கிட்டு, மூன்று மாதங்களுக்கு, ஒரு முறை வழங்குவது வாடிக்கையாளர்களுக்கு பலன் தரும். வங்கியும், சேமிப்பு கணக்கில் உள்ள தொகையை தேவையான வகையில் பயன்படுத்த முடியும்.வாடிக்கையாளர்களை ஈர்க்க, சில தனியார் வங்கிகள், சேமிப்பு கணக்குக்கு, 6 சதவீதம் வரை வட்டி அளிக்கின்றன. சேமிப்புக் கணக்கில் இருக்கும் முதல், 10 ஆயிரம் ரூபாய்க்கும், அதற்கான வட்டிக்கும் வருமான வரி விலக்கும் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்

பத்தாம் வகுப்பு தற்காலிகச் சான்றிதழ்

தமிழகத்தில் கடந்த 15.03.2016 முதல் 13.04.2016 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 25.05.2016 அன்று காலை 09.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.

01.06.2016 முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து என்ற http://www.dge.tn.nic.in/ இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், அன்றே பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

Sunday, May 22, 2016

கல்வித் தகவல் மேலாண்மை முறையில் 9,40,000 மாணவர்களின் விவரங்கள் பதிவு


கல்வித் தகவல் மேலாண்மை முறையில் இதுவரை 9,40,000 மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, பதிவு செய்வதற்கான கால அவகாசம் மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்கள் ஆண்டுதோறும் கல்வி தகவல் மேலாண்மை முறையில்(இ.எம்.ஐ.எஸ்.) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, 2015-16-ஆம் கல்வியாண்டிற்காக விவரங்களை மேம்படுத்தும் பணியை மே 10-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்தப் பணியை நிறைவு செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கோரியிருந்தனர். அதன்படி, மே 28-ஆம் தேதிக்குள் இந்தப் பணியை நிறைவு செய்ய கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளதாவது:- 15 நாள்களில் அனைத்து மாவட்டங்களிலும் 9,40,000 மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. இந்தப் பணியில் சர்வரின் பயன்பாட்டை விரைவுபடுத்தவும், சர்வரின் செயல்பாட்டில் தொய்வு ஏற்படாத வகையிலும் கூடுதல் சர்வர்கள் இணைக்கப்பட்டுள்ளது என்றார்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தேர்வுத்துறை எச்சரிக்கை


தமிழகத்தில் மே 25ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்போது, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் சீலிடப்பட்ட கவர்களில் உள்ள மதிப்பெண்ணை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.மே 17ல் காலை 10:31 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

ஆனால், காலை 9:00 மணிக்கே பல மாவட்டங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விவரம் புகைப்படங்களுடன் 'வாட்ஸ் ஆப்'ல் வெளியாகின. இதனால் தேர்வுத்துறை அதிர்ச்சி அடைந்தது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது. இந்நிலையில், 'மே 25ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9:31 மணிக்கு வெளியாகவுள்ளன. ஆனால், அதற்கு முன் மதிப்பெண் பட்டியல் விவரங்களை அறியும் முயற்சியில் ஈடுபடும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. அதிகாரி ஒருவர் கூறியதாவது

:பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான முதல்நாள் மாவட்ட வாரியான மாணவர் தேர்ச்சி விவரத்தை 'சிடி'யாக ஒவ்வொரு முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டன. மேலும் 'நோடல்' அலுவலகங்கள் மூலம் பள்ளிகள் வாரியான மாணவர் மதிப்பெண் பட்டியலும் 'சீல்' வைக்கப்பட்ட கவர்களில் அனுப்பப்பட்டன. இந்த கவர்கள் காலை 10.31 மணிக்கு பிரித்து அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். ஆனால், கிருஷ்ணகிரி உட்பட சில மாவட்டங்களில் காலை 9.00 மணிக்கு சில பள்ளிகளில் சீலிடப்பட்ட கவர்கள் பிரிக்கப்பட்டன.

இதுகுறித்து விசாரணை நடக்கிறது. மே 25ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் நிலையில் 9.31 மணிக்கு தான் சீலிடப்பட்ட கவர்களை பள்ளிகளில் பிரிக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் கவர்கள் பிரித்து விதிமீறலில் பள்ளிகள் ஈடுபட்டால் அப்பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்

ஜூன் 21ல் யோகா தினம் :பள்ளிகளுக்கு உத்தரவு


'அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும், ஜூன், 21ல், யோகா தினம் கொண்டாட வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பாரம்பரிய உடற்பயிற்சி கலையான யோகாவை, உலகம் முழுவதும் பிரபலப்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது.

இதன் பலனாக, ஜூன், 21ம் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என, ஐ.நா., சபை அறிவித்தது. இதன்படி, இரண்டு ஆண்டு களாக, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் அனைத்து பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், ஜூன், 21ம் தேதி, யோகா பயிற்சி வகுப்புகள் மற்றும் யோகா கண்காட்சி போன்ற பல நிகழ்ச்சிகள் நடத்த, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., ஆகியவை சுற்றறிக்கை அனுப்பியுள்ளன

Friday, May 20, 2016

மெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கைவிண்ணப்ப தேதி நீட்டிப்பு


தனியார் மெட்ரிக் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கைக்கு, மே, 30 வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் (பொறுப்பு) ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார். இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் - 2009ன் படி, அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு, எல்.கே.ஜி., வகுப்பில், 25 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது;

இந்த பிரிவில், மாணவர் சேர்க்கைக்கு நன்கொடையோ, கல்விக் கட்டணமோ கிடையாது; கல்விக் கட்டணத்தை, தமிழக அரசே அந்த பள்ளிகளுக்கு வழங்கும். இந்நிலையில், 2016 - 17ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, மே, 18 வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. ஆனால், இது குறித்து, பெரும்பாலான பெற்றோருக்கு தெரியவில்லை. இதையடுத்து, விண்ணப்பங்கள் வழங்கும் தேதியை நீட்டித்து, தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் (பொறுப்பு) ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மே, 30 வரை பள்ளிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும்; மே, 31 மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் பள்ளிகளில் இன்று பெறலாம்


பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முதல் பள்ளிகளில் பெறலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 17ம் தேதி வெளியிடப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மே 19ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாணவர்கள் தாங்களாகவே பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள், இன்று முதல் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளிலும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

Wednesday, May 18, 2016

பிளஸ் 1 சேர்க்கையில்இட ஒதுக்கீடு கட்டாயம்


'பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை, அரசு நிர்ணயித்துள்ள இட ஒதுக்கீட்டின்படி நடத்த வேண்டும்' என, பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுகுறித்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ள உத்தரவு:

பிளஸ் 1 வகுப்பில், பிற்படுத்தப்பட்டோருக்கு, 30 சதவீதம்; மிக பிற்படுத்தப்பட்டோருக்கு, 20; எஸ்.சி., பிரிவினருக்கு, 18; எஸ்.டி., பிரிவினருக்கு, 1; இதர பிரிவினருக்கு, 31 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த விதிகளை மீறும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அப்பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மாணவர்களிடம் விண்ணப்பம் பெறும்போதே, தனியாக பதிவேடு வைத்து, இன வாரியாக விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

மாணவர் சேர்க்கைக்கு முன், தலைமை ஆசிரியர் தலைமையிலான குழு, விண்ணப்பங்களை ஆய்வு செய்து, இடஒதுக்கீட்டின் படி பட்டியல் தயாரிக்க வேண்டும். ஆக., 31க்குள் இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கை குறித்த விவரத்தை, அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் ஓட்டுப்பதிவு பல மடங்கு உயர்வு


கடந்த இரண்டு தேர்தலை விட, இம்முறை அதிகளவில், தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.தமிழகத்தில், 2011 சட்டசபை தேர்தலில், ஒரு லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகின. அடுத்து, 2014 லோக்சபா தேர்தலில், 85 ஆயிரம் தபால் ஓட்டுகள் பதிவாகின. இம்முறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், வேன் டிரைவர்கள் என, மொத்தம், 6.26 லட்சம் பேர், தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.இவர்களில், 14ம் தேதி வரை, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர், தபால் ஓட்டை பதிவு செய்தனர். அதன் பின்னும் ஏராளமானோர், தபால் ஓட்டு போட்டுள்ளனர். எனவே, இம்முறை, 4 லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகியிருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது

ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ விண்ணப்பம் வினியோகம்


ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்புக்கு, வரும் 20ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படும்' என, கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தொடக்க கல்வி டிப்ளமோ படிப்பில், ஒற்றை சாளர முறையில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், மே 20ம் தேதி முதல், ஜூன் 10ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன் 10ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில், விண்ணப்பங்களை பெறலாம். பட்டியலினத்தவர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர், 250 ரூபாய் செலுத்தியும், இதர பிரிவினர், 500 ரூபாய் செலுத்தியும் விண்ணப்பங்களை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது