இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, May 05, 2015

பிளஸ் 2வில் 100% பெற புதிய தந்திரம்

பிளஸ்–2 தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற மாணவர்கள் மேற்கொண்ட புதிய தந்திரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 200–க்கு 200 மதிப்பெண் தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 5–ந்தேதி பிளஸ்–2 தேர்வு தொடங்கி மார்ச் 31–ந்தேதி முடிவடைந்தது. மாணவர்கள் மருத்துவம் அல்லது முன்னணி கல்லூரிகளில் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு கட் ஆப் மதிப்பெண் 200–க்கு 200 பெறவேண்டும் என்று நினைப்பது வழக்கம். சில மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் தேர்வுகளில் 150–க்கு 140 மதிப்பெண் எடுக்கும் சூழ்நிலையில் தேர்வு எழுதினார்கள். 150–க்கு 150 மதிப்பெண் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டால் சரியாக எழுதிய விடைத்தாள் அனைத்தையும் அடித்துவிடுங்கள்.

அவ்வாறு செய்தால் விடைத்தாளை திருத்துபவர்கள் நீங்கள் அடித்த பகுதியை மதிப்பீடு செய்யாமல் 0 மதிப்பெண் போட்டு விடுவார்கள் என்று சில பள்ளி ஆசிரியர்கள் ஆலோசனை கூறியிருக்கிறார்கள். அதற்கு காரணம், பெயிலான மாணவர்களுக்கு உடனடியாக தேர்வு நடத்தப்படும். அப்போது கேள்விகள் எளிதாக இருக்கும். 150–க்கு 150 மதிப்பெண் எடுத்துவிடலாம். அப்படி எடுத்தால் மருத்துவத்துப்படிப்பில் அல்லது என்ஜினீயரிங் கல்லூரிகளில் முன்னணி கல்லூரிகளில் சேர முடியும் என்று அந்த மாணவர்களின் ஆசிரியர்கள் சொன்னதாக கூறப்படுகிறது. விடைத்தாளில் கோடு போட்டனர் ஆசிரியர்கள் சொன்னது போலவே, குறைவான மதிப்பெண் கிடைக்கும் என்று நினைத்து மாணவர்கள் விடைத்தாள்களில் சரியாக எழுதியதை கோடு போட்டு அடித்துவிட்டு அந்த தாளை தேர்வு கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ளனர்.

அவ்வாறு கோடு போட்டால் அதை திருத்தாமல் விடுவது வழக்கம். இவ்வாறு கோடு போட்ட விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் இந்த தகவலை அரசு தேர்வுத்துறைக்கு தெரிவித்துள்ளார். எனவே அந்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவேண்டாம் என்று முதன்மை கல்வி அதிகாரி வழியாக அரசு தேர்வுத்துறை அதிகாரி வாய்மொழியாக கூறியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

பெற்றோர்கள் கேட்டுக்கொண்டதால் சில பிளஸ்–2 மாணவர்கள் விடைத்தாள்களில் எழுதியது அனைத்தையும் அடித்து உள்ளனர். இது பெரிய பிரச்சினை ஆகும் என்று கருதி அந்த மாணவர்களின் பெற்றோர்கள் நேரில் வந்து எங்கள் பிள்ளைகள் தெரியாமல் விடைத்தாளில் கோடு போட்டுவிட்டனர். அந்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்யுங்கள் என்று வேண்டி கேட்டுக்கொண்டனர். இதையொட்டி அந்த விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டன. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். தேர்வுத்துறை விடைத்தாள்களை திருத்திவிட்டதால் பெயிலாகி மீண்டும் தேர்வு எழுதி 100 சதவீத மதிப்பெண் எடுக்கலாம் என்று கனவு கண்டவர்களின் கனவு தவிடு பொடியாகிவிட்டது இந்த தந்திரம் தான் தற்போது கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பி.இ நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை மே 13முதல் விண்ணப்பம்

பொறியியல் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 13-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரியில் ஜூன் மாதம் கடைசி வாரத்தில் நடத்தப்பட உள்ளது. மூன்றாண்டு பாலிடெக்னிக் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப விநியோகம் வரும் 13-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. சென்னையில் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம், புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் என மொத்தம் 34 மையங்களில் விண்ணப்பங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்பட உள்ளன.

விண்ணப்பக் கட்டணம் ரூ. 300. "கட்டணத்தை -செயலர், பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை, அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி, காரைக்குடி - 630 004' என்ற பெயரில் காரைக்குடியில் செலுத்தத்தக்க வரைவோலையாக எடுத்து சமர்ப்பித்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 9-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு தேதி உள்ளிட்ட விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ஹஸ்ரீஸ்ரீங்ற்.ங்க்ன்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுகூட்டலுக்கு மே 8முதல் விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பு: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு, மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள், தேர்வு மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

*வரும் 8ம் தேதி முதல், மே 14 வரை (ஞாயிற்றுக் கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம்.

*விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே, விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும்.

*விடைத்தாள் நகல் கேட்போர், அதே பாடத்துக்கு, மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது; விடைத்தாள் நகல் பெற்ற பின், அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்படும்.

*விடைத்தாள் நகல் பெற, மொழிப்பாடங்களுக்கு தலா, 550 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு தலா, 275 ரூபாய் கட்டணம்.

*மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியலுக்கு தலா, 305 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு, தலா, 205 ரூபாய் கட்டணம். இந்த கட்டணத்தை, விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே ரொக்கமாக செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை, தேர்வர்கள் பத்திரமாக வைத்து இருக்க வேண்டும்; அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் முடியும்.

விடைத்தாள் நகலை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் தேதி மற்றும் இணையதள முகவரி பின் வெளியிடப்படும். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கான, சிறப்புத் துணைத் தேர்வு, ஜூன் இறுதியில் நடக்கும். இதற்கு, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்களிலும், மே 15 முதல் 20ம் தேதி வரை, தங்கள் பெயரை பதிவு செய்யலாம். தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு, உரிய தேர்வுக் கட்டணத்தை செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்; இதற்கு தனி விண்ணப்பம் கிடையாது.

பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு பாடத்துக்கும், 50 ரூபாய் தேர்வுக் கட்டணம்; 35 ரூபாய் இதரக் கட்டணத்தை, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ரொக்கமாக செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் தவிர, பதிவுக் கட்ட ணமாக, 50 ரூபாய் செலுத்த வேண்டும்.இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது.

நாளை ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்

தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, வரும் 14ம் தேதி முதல், மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ம் தேதி துவங்கியது; மார்ச், 31ம் தேதி முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.43 லட்சம் பேர் எழுதினர்.

தேர்வு முடிவுகள், நாளை காலை 10:00 மணிக்கு வெளியாகிறது. இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தேர்வர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு விவரத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை பாட வாரியாக மதிப்பெண்களுடன், குறிப்பிட்ட இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும், தேசிய தகவல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணம் இன்றி, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளிகள் மூலமும் மதிப்பெண்களுடன் முடிவுகளை அறியலாம்.இந்த ஆண்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் முதன்முறையாக அறிமுகமாகிறது. தலைமை ஆசிரியரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, தங்கள் பள்ளிகளில், வரும் 14ம் தேதி முதல், மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின், தலைமை ஆசிரியர் மூலம் பதிவிறக்கம் செய்து பெறலாம். மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் தேவைப்பட்டால், வரும் 18ம் தேதி முதல், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தங்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து, தாங்களே பதிவிறக்கம் செய்யலாம்.

இவ்வாறு, தேர்வுத் துறை இயக்குனர் அறிவித்து உள்ளார். இணையதள முகவரி www.tnresults.nic. in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge3.tn.nic.in

PLUS two important dates

ப்ளஸ் 2 தேர்வு

*மே 8 முதல் 14வரை மறுகூட்டல் விண்ணப்பிக்கலாம்.அப்போது வழங்கும் ஒப்புகை சீட்டு பத்திரமாய் வைத்திருக்கவும்

*தற்காலிக மதிப்பெண் சான்று மே 14.மே 18முதல் தேர்வு துறை இணையத்தில் பெறலாம்

*ஜுன் இறுதியில் தனித்தேர்வு.மே 15முதல் 20வரை விண்ணப்பிக்கலாம்

Monday, May 04, 2015

ப்ளஸ் டூ தேர்வு முடிவு குறித்த ஆலோசனைக்கு 104 சேவையை அழைக்கலாம்

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் குறித்த பயத்துக்கு ஆலோசனை பெறுவதற்கு தமிழக அரசின் 104 தொலைபேசி சேவையை அழைக்கலாம்.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி(வியாழக்கிழமை) வெளியாக உள்ளன.
தேர்வு முடிவுகள் குறித்த குழப்பம், பயம் மன அழுத்தம் உள்ளிட்டவற்றுக்கு தமிழக அரசின் தொலைபேசி சேவையை அழைக்கலாம். தேர்வு முடிவுகள் குறித்த உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கு 25 பேர் கொண்ட குழுவினர் நியமக்கப்பட்டுள்ளனர்.
24 மணி நேரமும் மூன்று பிரிவுகளாக இந்த மையம் செயல்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு உளவியல் மருத்துவர், இரண்டு உளவியல் நிபுணர்கள், மருத்துவர், மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.
இது குறித்து 104 சேவை மைய அதிகாரிகள் கூறியது:
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாவதைத் தொடர்ந்து சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள், அதனைத் தொடர்ந்து மே 21-ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. எனவே மே மாதம் இறுதி வரை இந்த சிறப்பு ஆலோசனை குழு செயல்படும்.
தேர்வுக்கு முன்பு, தேர்வு சமயம் சுமார் 8 ஆயிரம் பேர் ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர். மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களுக்குத் தேவையான உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

BE application sale center

பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்: தமிழகம் முழுவதும் 60 மையங்களில் கிடைக்கும்

Ariyalur
University College
of Engineering,
Ariyalur – 621 704.

Centre for Entrance
Examinations & Admissions,
Anna University, Chennai – 600 025.

Madras Institute of
Technology,
Chennai
Chrompet, Chennai – 600
044.

Government
Polytechnic College,
Purasawalkam, Chennai – 600012.

Bharathi Govt. Women’s
College (Autonomous),
Broadway, Chennai – 600 108.

Regional Office –
Anna University, Coimbatore
Region, Jothipuram,
Coimbatore – 641 047.

Government College
of Technology,
Coimbatore
Thadagam Road, Coimbatore –641 013.

Government
Polytechnic College for Women,Gandhipuram, Coimbatore – 641044.

Government Polytechnic College for Men, Aerodrome Post, Coimbatore – 641014.

Padalesuwarar Polytechnic
College Cuddalore – 607 001.

Cuddalore
Muthiah Polytechnic
College, Annamalai Nagar,
Chidambaram – 608 002.

University College
of Engineering,
Panruti – 607 106.

Dharmapuri
Government Arts
College,Dharmapuri –
636 705.

University College
of Engineering,
Dindigul – 624 622.

Arulmigu Palani Andavar Polytechnic College for
Men, Palani– 624 601.

Institute of Road
and Transport Technology, Erode– 638 316.

Chikkaiah Naicker College, Erode – 638 004.

University College
of Engineering,
Kancheepuram – 631 552.

Rajeswari Vedachalam Govt. Arts College,
Chengalpet – 603 001.


University College
of Engineering,
Kanyakumari
Konam – 629 004.

Pioneer Kumarasamy College,Nagercoil – 629 003.

Karur
Government Arts
College (Autonomous),
Karur – 639 005.

Government Arts
College for Men,
Krishnagiri – 635 001.

Government College of Engineering,Bargur –
635 104.

Thiagarajar College of
Engineering, Madurai –
625 015.

Madurai Tamil Nadu
Polytechnic College,
Madurai – 625 011.

Sri Meenakshi Govt. College for Women (Autonomous), Madurai – 625 002.

Nagapattinam
ADJ Dharmambal Polytechnic College,
Nagapattinam – 611 001.

Namakkal N.K.R. Government
Arts College for Women,
Namakkal – 637 001.

Perambalur Sri Saradha College for Women,
Perambalur – 621 113.

Govt. Arts College
for Women (Autonomous),
Pudukkottai – 622 001.

Government Polytechnic College, Aranthangi – 614 616.

Ramanathapuram
Government Arts
College for Women,
Ramanathapuram – 623 501.

Government College
of Engineering, Salem –
636 011.

Salem Government Arts
College for Women,
Salem – 636 008.

Arignar Anna Government
Arts College,  Athur  636 121.
 
Government Arts
College for Women,
Sivagangai – 630 561.

A.C. College of
Engineering & Technology,
Karaikudi – 630 004.
 
Kunthavai Naacchiyaar Govt. Arts College for
Women (Autonomous),
Thanjavur – 613 007.

Government Arts
College (Autonomous)
Kumbakonam – 612 001.

The Nilgiris
Government
Polytechnic College,
The Nilgiris– 643 006.

Thangam Muthu Polytechnic College, Theni
Periyakulam – 625 604.

Cardamom Planters
Association College,
Bodinayakanur – 625 513.

Tiruvallur
Murugappa Polytechnic
College, Avadi, Chennai – 600
062.

Tiruvannamalai
Government Arts College,
Tiruvannamalai – 606 603.

Tiruvarur Thiru-vi-ka Government Arts College,
Tiruvarur – 610 003.

University VOC
College of Engineering,
Thoothukudi – 628 008.

B.C.M. Government
Polytechnic College for
Women, Ettayapuram
– 628 902.

Regional Office –
Anna University, Tirunelveli
Tirunelveli Region, Tirunelveli – 627 007.

Rani Anna
Government College for Women Tirunelveli – 627 008.

Tiruppur LRG Government Arts College for Women,
Tiruppur – 641 604.

Jamal Mohammed
College, Tiruchirappalli –
620 020.

Tiruchirappalli
Government
Polytechnic College,
Tiruchirappalli – 620 022.

Regional Office
Anna University,
Tiruchirappalli Region,

மாதிரி பள்ளிகள் திட்டத்தை கைவிடுகிறது மத்திய அரசு

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பள்ளிகள் உள்பட நாடு முழுவதும் 3,453 மாதிரிப் பள்ளிகள் அமைக்கும் திட்டத்தைக் கைவிட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. நாடு முழுவதும் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான தரத்தில் நவீன கட்டடங்கள், வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படுகின்றன.

இந்தப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வியோடு இசை, ஓவியம், யோகா, உடற்பயிற்சி உள்ளிட்டவையும் கற்றுத் தரப்படுகின்றன. தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய 44 வட்டாரங்களில் 44 மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பள்ளியும் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இவற்றில் 14 மாதிரிப் பள்ளிகளுக்கான கட்டுமானம் நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள 30 பள்ளிகளில் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. பணிகள் நிறைவடையாத இடங்களில் வாடகைக் கட்டடங்களில் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த மாதிரிப் பள்ளிகளைக் கட்டுவதற்கான நிதி, பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்டவற்றை அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் மத்திய அரசு வழங்கி வந்தது. இந்த நிலையில், மாதிரிப் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தப் போவதாக மத்திய அரசு திடீரென்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. எனினும், தமிழகத்தில் மாதிரிப் பள்ளிகளைக் கட்டுவதற்கான நிதி ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதால், அந்த நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. மத்திய அரசின் இந்த முடிவையடுத்து, தமிழகத்தில் இந்தப் பள்ளிகளில் படித்து வரும் சுமார் 10 ஆயிரம் ஏழை மாணவர்கள், 700-க்கும் அதிகமான ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தப் பள்ளிகளில் படித்து வரும் ஏழை மாணவர்கள், ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு உரிய முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3,453 பின்தங்கிய வட்டாரங்கள்: நாடு முழுவதும் பெண் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்கள் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்கள் என அழைக்கப்படுகின்றன. அதனடிப்படையில், நாடு முழுவதும் 3,453 வட்டாரங்களும், தமிழகத்தில் 44 வட்டாரங்களும் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களாக கண்டறியப்பட்டன. தமிழகத்தில், அரியலூர், கடலூர், தருமபுரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல், கரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இந்த 44 வட்டாரங்கள் உள்ளன.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் 44 வட்டாரங்களில் இந்த மாதிரிப் பள்ளிகளை அமைக்கும் பணி 2010-11-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பணிகள் நிறைவடையாத இடங்களில், வாடகைக் கட்டடங்களில் மாதிரிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மாதிரிப் பள்ளிகளுக்கான கட்டடங்கள் ஏறத்தாழ கட்டப்பட்டு விட்டன.

ஆனால், பிகார், உத்தரப்பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் 500-க்கும் மேற்பட்ட மாதிரிப் பள்ளிகளை அமைக்க வேண்டும். இந்த மாநிலங்களில் மாதிரிப் பள்ளிகளை அமைக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. இந்த நிலையில், இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சட்டப்படிப்புக்கான விண்ணப்பம் மே 8முதல்

tnptfmani.blogspot.com
தமிழகத்தில் சட்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரும் மே 8-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என, அம்பேத்கார் சட்டப்பல்கலைகழக துணைவேந்தர் வணங்காமுடி அறிவித்துள்ளார்.
மேலும் வரும் கல்வியாண்டு முதல், பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரைக்கேற்ப பி.எல்.பட்டத்திற்கு பதிலாக எல்.எல்.பி. பட்டம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
பி.சி.ஏ.எல்.எல்.பி. மற்றும் பி.பி.ஏ.எல்.எல்.பி ஆகிய இரண்டு புதிய பாடப்பிரிவுகளை அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகம் தற்போது அறிமுகப் படுத்தியுள்ளது. அதன்படி மாணவர்கள் சேர்க்கைக்கான எண்ணிக்கையும் 660 வரை உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Sunday, May 03, 2015

இந்த ஆண்டும் ஸ்மார்ட் கார்ட் வழங்குவது சந்தேகமே

பல்வேறு "சர்வர்'களை இணைக்க வேண்டியுள்ளதால் "ஸ்மார்ட் கார்டு' வரும் ஆண்டிலும் சாத்தியமில்லை
"கல்வி மேலாண்மை தகவல் முறை இணையதளமும், மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு' திட்டமும், வரும் கல்வியாண்டிலும் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை' என, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

மாணவர்கள் குறித்த முழு விவரங்கள், தேவையான பாடத்திட்டங்கள், அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை, கல்வித்துறை செயல்பாடு, அதிகாரிகள் விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், "ஆன்-லைன்' மூலம் அறிந்து கொள்ள ஏதுவாக, கல்வி மேலாண்மை தகவல் முறை (இ.எம்.ஐ.எஸ்.,) என்ற இணையதளம் செயல்படுத்த, மாநில அரசு திட்டமிட்டது. 2012ல், இதற்கான பணிகள் துவங்கின.கடந்த, 2013ல், அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்ட போதும், அதிகாரப்பூர்வமாக இயங்காமல், முன்னோட்டமாக மட்டுமே, இந்த இணையதளம் செயல்பட்டது. இதுதவிர, மாணவர்களின் பெயர், போட்டோ, பெற்றோர் பெயர், பள்ளியின் பெயர் உள்ளிட்டவற்றையும் "ஆன்-லைனில்' பதிவு செய்து, மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு" வழங்கும் பணிகளும் துவங்கின. நடப்பாண்டில் இப்பணி முடிவடைய வாய்ப்பில்லை என்று கூறும் கல்வித்துறை அதிகாரிகள், வரும் கல்வியாண்டிலும் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை என்கின்றனர்.

அதிகாரிகளிடம் கேட்டபோது, "கல்வி மேலாண்மை தகவல் முறை இணையதள திட்டம் என்பது, மிகப்பெரிய திட்டம். ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறை, மாணவர் குறித்த முழு விவரம் உள்ளிட்ட பல தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன."பல்வேறு "சர்வர்'களை இணைக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பான பல்வேறு பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. எனவே, வரும் கல்வியாண்டிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வருவது சந்தேகமே. மாணவர்களுக்கான "ஸ்மார்ட் கார்டு' திட்டமும், தாமதமாகும்,' என்றனர்.

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இரண்டு வாரங்களுக்குள் வழங்க உத்தரவு

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, தேர்வு முடிவு வெளியான, இரண்டு வாரங்களுக்குள் பதிவிறக்கம் செய்து, மாணவர்களிடம் வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5ல் துவங்கி, மார்ச் 31ம் தேதி முடிவடைந்தது. வரும், 7ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 9ம் தேதி வெளியானது. இந்த ஆண்டு, மதிப்பெண் பட்டியலை தாமதமாக வழங்கும் பிரச்னையை தவிர்க்க, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகமாகிறது.இதுதொடர்பாக, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்து, பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு:

* தற்காலிக மதிப்பெண் சான்றிதழை கொண்டு, உயர்கல்வி படிப்புகளில் மாணவர்களை சேர்க்கலாம்.

* சான்றிதழை, பள்ளிகளில் பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

* இதற்காக பள்ளிகளில், கணினி, பிரின்டர் மற்றும் இணையதள இணைப்பு வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

* பள்ளி அலுவலக ஊழியர்கள் மற்றும் விடுமுறையில் உள்ள ஆசிரியர்களைக் கொண்டு, மதிப்பெண் சான்றிதழை நகல் எடுத்து, தலைமை ஆசிரியர் கையொப்பமுடன், மாணவர்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும்.

* தேர்வு முடிவு வெளியானதும், இரண்டு வாரங்களுக்குள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும். * இந்த சான்றிதழ், 90 நாட்களுக்கு மட்டுமே செல்லத்தக்கது.இவ்வாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1250 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் ஆய்வக வசதி இல்லை

கடந்த ஆறு ஆண்டுகளாக, தரம் உயர்த்தப்பட்ட, 1,250 உயர்நிலைப் பள்ளிகளில், வகுப்பறைகள், ஆய்வகம் மற்றும் கழிப்பறைகள் கட்ட நிதியின்றி, மாணவ, மாணவியர் திறந்தவெளியில் பாடம் படித்து வருகின்றனர்.

தமிழகத்தில், ஆண்டுதோறும், பட்ஜெட்டின் போது பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இப்படி, கடந்த ஆறு ஆண்டுகளில், தரம் உயர்த்தப்பட்ட, 1,250 பள்ளிகள், பெயரளவில் உயர்நிலைப் பள்ளிகளாக செயல்படுவதால், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும், போதுமான வகுப்பறைகள் உள்ளன. ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு புதிய கட்டடங்கள், வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதி இல்லை. கடந்த 2009 - 10ல், தரம் உயர்த்தப்பட்ட, 710 உயர்நிலைப் பள்ளிகளுக்கு, புதிய கட்டடம் கட்ட, மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் மூலம், தலா, 49 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

நேரடி அதிகாரம் : இந்த நிதியில், 11 வகுப்பறைகள் மற்றும் ஆய்வகம் கட்டும்படி, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நேரடி அதிகாரம் வழங்கப்பட்டது.ஆனால், இந்த நிதி போதாது என, தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு துறைகள் மூலம் கட்டுமான பணிகளை நடத்த கோரிக்கை விடுத்தனர். அதனால், புதிய கட்டடம் கட்டும் பணியை, பொதுப்பணித் துறைக்கு வழங்க முடிவானது.அ.தி.மு.க., ஆட்சி வந்தபின், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், மத்திய அரசிடம் இருந்து போதிய நிதி கிடைக்கவில்லை எனக் கூறி, புதிய கட்டட பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

ஒதுக்கப்பட்ட நிதியும் இலவச திட்டங்களுக்கு சென்றதால், புதிய கட்டடம் என்பது, உயர்நிலைப் பள்ளிகளுக்கு கனவாகவே மாறி விட்டது. இதனால், ஆறு முதல், 10 வரையிலான வகுப்புகளுக்கு, 1,250 பள்ளிகளில் திறந்தவெளி, மரத்தடி மற்றும் கூடாரங்கள் மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன; ஆய்வக வசதியும் இல்லை. ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு, பாதுகாப்பான தண்ணீர் வசதியுடன் கூடிய, கழிப்பறைகள் கட்டாயம் தேவை என்ற நிலையில், இந்த பள்ளிகளில் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் இன்றி, மாணவியர் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க, மாநில பொதுச் செயலர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், வகுப்பறைக்கான புதிய கட்டடங்கள், ஆய்வகம் மற்றும் கழிப்பறை வசதி செய்து தரக்கோரி, ஆறு ஆண்டுகளாக, கல்வித் துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். கிணற்றில் போட்ட கல்: ஆனால், இக்கோரிக்கை கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது. மாணவர்களின் நலன் கருதி, விரைவில் புதிய கட்டடம் கட்ட, கல்வித் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.