இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, September 29, 2014

தமிழக அமைச்சரவை

தமிழக அமைச்சரவை : அமைச்சர்களும் அவர்களின் துறைகளும்!
ஓ.பன்னீர் செல்வம் - முதல்வர், நிதியமைச்சர், பொதுப்பணித்துறை 

நத்தம் ஆர்.விஸ்வநாதன்-மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை. 

ஆர்.வைத்திலிங்கம்--வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம், 

நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம். 

எடப்பாடி கே.பழனிசாமி-நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை. 

பி.மோகன்-ஊரக தொழில்கள் துறை, தொழிலாளர் நலத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை.

பா.வளர்மதி-சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, 

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை.

பி.பழனியப்பன்-உயர்கல்வித் துறை. 

செல்லூர் கே.ராஜூ-கூட்டுறவு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத் துறை. 

ஆர்.காமராஜ்-உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை. 

பி.தங்கமணி-தொழில் துறை. வி.செந்தில்பாலாஜி-போக்குவரத்துத் துறை. 

எம்.சி.சம்பத்-வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை. 

அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி-வேளாண்மைத் துறை. 

எஸ்.பி.வேலுமணி-நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, ஊழல் தடுப்பு. 

டி.கே.எம்.சின்னையா-கால்நடைத் துறை. 

எஸ்.கோகுல இந்திரா-கைத்தறி மற்றும் துணிநூல் துறை. 

எஸ்.சுந்தரராஜ்-இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை. 

பி.செந்தூர் பாண்டியன்-இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை. 

எஸ்.பி.சண்முகநாதன்-சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம். 

என்.சுப்ரமணியன்-ஆதிதிராவிடர் நலத் துறை. 

கே.ஏ.ஜெயபால்-மீன்வளத் துறை. 

முக்கூர் என்.சுப்பிரமணியன்-தகவல் தொழில்நுட்பத் துறை. 

ஆர்.பி.உதயகுமார்-வருவாய்த் துறை. 

கே.டி.ராஜேந்திர பாலாஜி-செய்தி மற்றும் விளம்பரத் துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை. 

பி.வி.ரமணா - பால்வளத் துறை. 

கே.சி.வீரமணி-பள்ளிக் கல்வித் துறை. 

எம்.எஸ்.எம்.ஆனந்தன்-வனத் துறை. 

தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்-சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை. 

டி.பி.பூனாட்சி-காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியம்.

எஸ்.அப்துல் ரஹீம்-பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை.

Sunday, September 28, 2014

புதிதாக நியமிக்கப்பட்ட 2,174 முதுகலை ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி இன்று தொடக்கம

் தமிழகத்தில் 2011&12 மற்றும் 2012&13ம் ஆண்டிற்கு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் நடந்த கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அவ்வாறு பணியில் சேர்ந்துள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு இன்று (29ம் தேதி) முதல் அக்டோபர் 1ம் தேதி வரை மூன்று நாட்கள் பாடவாரியாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வேதியியல் பாட ஆசிரியர்கள் 219 பேருக்கு சேலம், சின்ன திருப்பதி ஜெய்ராம் கலை அறிவியல் கல்லூரியிலும், 317 ஆங்கில ஆசிரியர்களுக்கு திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியிலும், 191 தாவரவியல் ஆசிரியர்களுக்கு ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியிலும் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
283 கணித ஆசிரியர்களுக்கு சின்ன சேலம் சிறுமலர் மேல்நிலை பள்ளியிலும், 178 விலங்கியல் ஆசிரியர்களுக்கு ஈரோடு, நஞ்சுண்டபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளியிலும், 313 வணிகவியல் ஆசிரியர்களுக்கு கோபி, தாசம்பாளையும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலை பள்ளியிலும், 225 இயற்பியல் ஆசிரியர்களுக்கு திண்டுக்கல் பறைபட்டி ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரியிலும், 270 பொருளியல் ஆசிரியர்களுக்கு தஞ்சாவூர் கே.நெடுஞ் செழியன் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திலும், 178 வரலாறு ஆசிரியர்களுக்கு மதுரை அழகர்கோயில் மகாத்மா மாண்டிச்சேரி மெட்ரிக் மேல்நிலை பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. மொத்தம் 2174 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது

Saturday, September 27, 2014

பட்டதாரிஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்,' என, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில், மேல்நிலை, தொடக்க கல்வி துறையில் 12,700 ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி வழங்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து, நடந்த பணிநியமன கலந்தாய்வில் பங்கேற்ற, முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் பணி நியமன உத்தரவை பெற்று, பணியில் சேர்ந்தனர். இதில், உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கென நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, செப்.,30 மற்றும் அக்.,1 அன்று சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும், என சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், '' பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, 2 நாட்கள் அந்தந்த மாவட்டத்திலேயே கருத்தாளர்களை கொண்டு தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும், என்றார்.

Friday, September 26, 2014

பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர், தொடக்க கல்வி அலுவலர், கூடுதல் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம்:

அனைத்து வகுப்பறைகளுக்கும் சென்று மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன், வாசிப்பு, எழுதும் திறன் ஆகியவற்றை மாணவர்களிடம் கலந்துரையாடி அறிய வேண்டும். மாணவர்களின் வருகை பதிவேட்டில், நீண்ட நாள் பள்ளிக்கு வராதவர்களின் பட்டியலை எடுத்து, அதற்கான காரணத்தை மாணவர்களிடமே கேட்டறிந்து, அவர்களை பள்ளிக்கு வரவழைக்க ஆசிரியர் உதவியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகளின் கட்டமைப்பு, கழிப்பறை, குடிநீர் வசதி போன்றவை சார்ந்த பள்ளியின் தளவாட பொருட்கள், 'டிவி'மற்றும் நுாலக பயன்பாடு சார்ந்தும் ஆய்வு செய்ய வேண்டும். என்பது உட்பட பல்வேறு வழிகாட்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துவகையான தனியார் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்: அரசு புதிய உத்தரவு


சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., சர்வதேச பள்ளிகள் என தமிழகத்திலுள்ள அனைத்துவகையான தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப்  பாடமாக கற்பிக்க வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவிட்டுள்ளது.

 வரும் கல்வியாண்டிலிருந்து (2015-16) இதை படிப்படியாக பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு அரசின் தமிழ் கற்றல் சட்டம், 2006-ன் படி, நர்சரி, பிரைமரி, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

 இதன் மூலம் 2006-07-ஆம் ஆண்டிலிருந்து முதல் வகுப்பிலிருந்து படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தின் படி, அடுத்தக் கல்வியாண்டில் (2015-16) தனியார் பள்ளிகளின் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கட்டாயமாக தமிழ்ப் பாடத் தேர்வை எழுத வேண்டும்.

 இந்த நிலையில், பல தனியார் பள்ளிகள் இந்தச் சட்டத்தை அமல்படுத்தப்படவில்லை எனவும், இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் தனியார் பள்ளிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

 இந்தச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழைப் படித்து வருவதாகவும், வெறும் 5 ஆயிம் மாணவர்கள் மட்டுமே தமிழைப் படிக்கவில்லை எனவும் சட்டப் பேரவையில் தமிழக அரசு தெரிவித்தது.

 இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

 சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக அமல்படுத்துவது தொடர்பாக தமிழ் கற்றல் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடவில்லை எனக் கூறப்படுகிறது.

 இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்துவகை தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக கற்பிக்கும் வகையில் தெளிவான உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது.

 அரசாணை விவரம்:

 தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள், ராணுவப் பள்ளிகள் ஆகியவற்றை தவிர்த்து அனைத்துவகையான பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பாடமாக வரும் கல்வியாண்டில் முதல் வகுப்பிலிருந்து படிப்படியாக அமல்படுத்த வேண்டும்.

 கல்வியாண்டு    அமல்படுத்த வேண்டிய வகுப்புகள்

 2015-16 ----- 1

 2016-17 ----- 1, 2

 2017-18 ----- 1,2,3

 2018-19 ----- 1,2,3,4

 2019-20------ 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை

 2020-21------ 1 முதல் 6-ஆம் வகுப்பு வரை

 2021-22------ 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை

 2022-23------ 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை

 2023-24 ----- 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை

 2024-25 ----- 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை

Thursday, September 25, 2014

100 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்வு 1000 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - அரசு முதன்மை செயலாளர் சபிதா  


    கடந்த 3 ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 5 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையை மாற்றி கூடுதலாக தமிழ், வரலாறு, பொருளாதரம், வணிகவியல் பாடங்களை சேர்த்து 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இதனால் ஒவ்வொரு பள்ளிக்கும¢ ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமையாசிரியர்கள், 9 முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் பணியிடங்கள¢ வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என ஆயிரம் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
இதற்காக ஆண்டுக்கு ீ31.82 கோடி கூடுதல் செலவாகும். தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் எண்ணிக்கையில் 1:40 விகிதம் பின்பற்றப்பட வேண்டும். பள்ளிகளின் கூடுதல் கட்டமைப்பு வசதிகளுக்கு எம்.பி., எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் உதவி பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

12 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று பணியில் சேருகின்றனர்


பள்ளிக் கல்வித் துறைக்குத் தேர்வு பெற்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கக் கல்வித் துறைக்குத் தேர்வு பெற்ற 1,649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை (செப்.26) பணியில் சேருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரம் பேரிலிருந்து தகுதிகாண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) மதிப்பெண் முறையின் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் 10,698 பேரும், இடைநிலை ஆசிரியர்கள் 1,649 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு செப்டம்பர் 1 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தக் கலந்தாய்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்திருந்தது. எனினும், அவர்களுக்கான பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய தடையில்லை என அறிவித்தது. இந்த நிலையில், தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்தத் தடையை புதன்கிழமை நீக்கியது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பணி நியமனக் கலந்தாய்வு நடைபெற்ற இடங்களில் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களுக்கான பணி நியமன உத்தரவைப் பெற்றுச் சென்றனர்.

இந்த ஆசிரியர்கள் அனைவரும் தங்களது பணியிடங்களில் வெள்ளிக்கிழமையன்றே சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓய்வு ஆசிரியர்களை சோதிக்கும் 'தணிக்கை தடை'

:அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை தடையால், பணப்பலன் பெறாமல் தவிக்கின்றனர். பணிக் காலத்தில் பெற்ற சிறப்பு சம்பளத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்ற உத்தரவால் கலக்கத்தில் உள்ளனர். தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஆறாவது சம்பள கமிஷனில், பள்ளிக் கல்வியின் ஒரே நிலையிலான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பதவிகளுக்கு இடையே சம்பள முரண்பாடு ஏற்பட்டது.

இதை களைய முந்தைய தி.மு.க., ஆட்சியில் 'ஒரு நபர் கமிஷன்' அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. இக்கமிஷன் பரிந்துரைப்படி 1.8.10 முதல் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கிரேடு சம்பளத்துடன், சிறப்பு சம்பளமாக (தனி ஊதியம்) மாதம் ரூ.750 வழங்க அரசு உத்தரவிட்டது. உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 400 பேர் வரை, எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களாக 'அயற்பணியாக' மாற்றப்பட்டனர். இவ்வாறு மாறிய பலர் அடுத்தடுத்து தற்போது ஓய்வு பெற்று பணப் பயன் பெற முயற்சித்து வருகின்றனர். ஆனால், இவர்கள் வீட்டுக்கு சில நாட்களுக்கு முன் சென்னை ஏ.ஜி., ஆடிட் அலுவலகத்தில் இருந்து 'தணிக்கை தடை' குறிப்பாணை அனுப்பப்பட்டன. அதில், 'அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராக இருந்து, எஸ்.எஸ்.ஏ., திட்டப் பணிக்கு மாறிய பின் பெற்ற சிறப்பு சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் எனவும், 'சிறப்பு சம்பளம்' அரசு உத்தரவு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்குத் தான் பொருந்தும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி சிறப்பு சம்பளத்தை திரும்ப செலுத்தினால் தான் ஓய்வு பெற்றவர்களுக்கான முழு பணப்பயன் கிடைக்கும் நிலையுள்ளது. இதனால் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஆசிரியர் பயிற்றுனர் சங்க மாநில தணிக்கையாளர் முத்துக்குமரன் கூறியதாவது: அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்கள் ஒரே நிலைபணி. சம்பள சலுகை எந்த ஒரு அயற்பணிக்கு சென்றாலும் பொருந்தும். திட்டப் பணிக்கு மாறி சென்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்ற முந்தை சலுகை செல்லாது என்பது கேலிக்குறி. தணிக்கை தடையால் அயற்பணிக்கு ஆசிரியர்கள் செல்ல மாட்டார்கள். ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட தணிக்கை தடையை அரசு திரும்ப பெற வேண்டும், என்றார்.

புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை இன்றே பணியில் சேர கல்வித்துறை உத்தரவு

புதிய ஆசிரியர்கள் பணியில் சேர, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால உத்தரவு, நேற்று முன்தினம் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், புதிய ஆசிரியர்களுக்கு, நேற்று, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 12,700 புதிய ஆசிரியரைநியமனம் செய்வதற்கானகலந்தாய்வு, ஆகஸ்ட் இறுதி யில் துவங்கி, செப்., முதல் வாரம் வரை நடந்தது. '

வெயிட்டேஜ்' மதிப்பெண் தொடர்பான வழக்கில், புதிய ஆசிரியர்கள் பணியில் சேர, உயர் நீதிமன்ற மதுரை கிளை, இடைக்கால தடை விதித்தது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்கள் அனைத்தும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடிசெய்யப்பட்டன.இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய இடைக்கால தடை உத்தரவும், நேற்று முன்தினம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, பள்ளி கல்வித் துறைக்கு தேர்வான ஆசிரியர் களுக்கு, நேற்று பிற்பகல்,திடீரென, பணி நியமனஉத்தரவுகள் வழங்கப்பட்டன.இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட

அறிவிப்பு:செப்., 1ம் தேதி முதல், 5ம் தேதி வரை நடந்த கலந்தாய்வில் பங்கேற்று, பணியிடத்தை தேர்வு செய்தவர்களுக்கு, இன்று (நேற்று), பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும், உடனடியாக, சம்பந்தபட்ட பள்ளியில் பணியில் சேர வேண்டும்.இவ்வாறு, கல்வித்துறை அறிவித்துள்ளது.இதேபோல், தொடக்கக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில், 'இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு, உரிய சான்றிதழ்களுடன் சென்று, பணி நியமன உத்தரவை பெற்று, உடனடியாக, பணியில் சேர வேண்டும்' என,தெரிவிக்கப்பட்டுள்ளது.'புதிய ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர வேண்டும்' என, பணி நியமன உத்தரவை வழங்கிய அதிகாரி கள், அறிவுறுத்தி உள்ளன

ஆசிரியர் தகுதி தேர்வு : சலுகை மதிப்பெண் வழங்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து

ஆசிரியர் தகுதி தேர்வில் 5 மதிப்பெண் சலுகை வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. மதிப்பெண் சலுகை வழங்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக மனுதாரர் தரப்பு வாதிட்டது. மேலும் நடைமுறைக்கு மாறாக 5 மதிப்பெண் சலுகை வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 2012ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசாணையை ரத்து செய்ய கோரி இவ்வழக்கு தொடரப்பட்டது

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 80 இடங்களை காலியாக வைக்க கோர்ட் உத்தரவு

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்குச் சேர ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் மார்க் எடுத்தால் வெற்றி என்ற நிலைமை இருந்தது. இதற்குப் பதிலாக வெயிட்டேஜ் என்ற முறையை பயன்படுத்தி ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனமும் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழரசன் உள்பட 73 பேர் வெயிட்டேஜ் முறையை 73 பேர் ஆசிரியர் நியமத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் 80 பணியிடங்களை காலியாக வைத்து விட்டு மற்ற பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு. மேலும் வழக்கு வரும் அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு. இதனால் பணிநியமத்திற்கு இருந்த அனைத்து தடைகளும் விலகியது.

ePayroll Online ECS User Manual

அனைத்து வகுப்பறையிலும் சுவர் வரைபடம் கட்டாயம் ’


வரலாறு, புவியியல் பாடங்களை, பள்ளிக் குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு வகுப்பறையிலும், சுவர் வரைபடங்கள் (வால் மேப்) கட்டாயம் தொங்கவிடப்பட வேண்டும்’ என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிப் பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு வரை, சமூக அறிவியல் பாடம் முக்கிய இடத்தை வகிக்கிறது. மேல்நிலை கல்வியிலும், பிளஸ் -1, பிளஸ்- 2 வகுப்பில், குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டும் வரலாறு, புவியியல் பாடங்கள் உண்டு. இதில், மன்னர்களின் ஆட்சி எல்லைப் பகுதி, முக்கிய அமைவிடங்கள், அரசியல், நிலப்பரப்பு, கடல்கள், ஆறுகள், தட்பவெப்ப நிலை, விவசாயம், பயிர்கள் போன்றவை குறித்து, எளிதாக அறிந்துகொள்ள வரைபடங்கள் பெரிதும் உதவும்.

அதுமட்டுமல்லாமல், வரைபடங்கள் தொடர்பான வினாக்களும், தேர்வில் கேட்கப்படுகின்றன. குறிப்பாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், வரைபடம் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே, நூறு மதிப்பெண்கள் எடுக்க முடியும். தேர்வுக்கு மட்டுமின்றி, பொது அறிவை வளர்ப்பதிலும், வரைபடங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இதற்காக, ’இந்தியா’, ’தமிழ்நாடு’, ’மாவட்டம்’ என, மூன்று வகையான வரைபடங்கள், வகுப்பறை சுவர்களில் தொங்கவிட வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி கூறுகையில், “பள்ளி வகுப்பறைகளில், தேர்வு நாட்களை தவிர, எல்லா நாட்களிலும், புவியியல் சுவர் வரைப்படங்கள், கட்டாயம் இடம் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் எளிதில் உள்வாங்கிக் கொள்ள, சிறு குழுக்களாக பிரித்து, வாரந்தோறும் போட்டிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும் போது, வரைபட நிகழ்வுகளுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படும்,” என்றார்.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில், பணியிடம் தேர்வு செய்த பணிநாடுநர்களுக்கு சம்பந்தப்பட்ட கலந்தாய்வு மையங்களில் நியமன ஆணை வழங்கப்படும் :

பள்ளிக்கல்வித்துறை தகவல் - நாளை பணியில் சேர உத்தரவு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில், பணியிடம் தேர்வு செய்த பணிநாடுநர்களுக்கு இன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட கலந்தாய்வு மையங்களில் நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையால், கடந்த ஒன்றாம் தேதி முதல் 5-ம் தேதி வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்திற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இக்கலந்தாய்வில் பங்கேற்று உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியிடம் தேர்வு செய்த பணிநாடுநர்கள் அனைவருக்கும் இன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட கலந்தாய்வு மையங்களில் பணிநியமன ஆணை வழங்கப்படவுள்ளது. அனைத்து பணிநாடுநர்களும் சம்பந்தப்பட்ட மையத்திற்குச் சென்று பணிநியமன ஆணையை பெற்று, உடனடியாக பள்ளிகளில் பணியேற்குமாறு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியிடம் தேர்வு செய்த பணிநாடுநர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு, அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் சென்று ஒதுக்கீட்டு மற்றும் நியமன ஆணைகளை பெற்றுக்கொள்ளலாம் என தொடக்க கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.